வெள்ளி, 30 டிசம்பர், 2016

Dhuruvangal - 16 துருவங்கள் பதினாறு


இந்த வருஷத்தில்  மெட்ரோ , உறியடி போன்ற வித்தியாசமான  படங்கள் வரிசையில் இந்த துருவங்கள் பதினாறு படமும் ஒன்று  , என் நண்பன் இந்த படத்தை நேற்று பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொன்னான் ,  உறியடி  வந்தது தெரியாமல், படம் நல்லா இருக்குன்னு கேள்விபட்ட பிறகு படம் போயிட்டு பார்க்கலாம் நினைச்சா படம் தியேட்டர் விட்டு போயிடுச்சி , அதனால இந்த படத்தை மிஸ் பண்ணாம பார்க்கணும் ஒரு வழியா பார்த்தாச்சி .
ஒரு படம் இப்படி எல்லாம் இருந்தாதான் ஓடும் என்று நினைச்சி எடுக்கிற காலகட்டத்துல, இப்படியும் எடுக்கலாம்ன்னு எடுத்து எல்லா முன்னணி மசாலா டைரக்டர் மற்றும்  producer முகத்தில்  நல்லா சாயத்தை பூசிட்டார் இந்த 22 வயசு டைரக்டர் கார்த்திக் நரேன் , 

படம் வெறும் 105 நிமிஷம் தான் , படத்துக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து இருக்காங்க , படத்தோட 105ஆம் நிமிஷத்தில் கூட படத்தோட மர்ம முடிச்சை அவிழ்ப்பது சூப்பர் , படத்தோட கதாபாத்திரங்களும் , திரைக்கதையும்  ஒன்றோடு  ஒன்னு   link பண்ணி இருப்பது செம்ம 

த்ரில்லர் படம் என்பதால் படம்  ஒரே பரபரப்பா , அடிதடியா போகுமான்னு பார்த்தா அப்படி இல்ல , படம் நிறுத்தி நிதானமா அதே நேரத்தில ஆனி  தரமா எடுத்து இருக்காரு டைரக்டர் ,

படத்தில் நடிகர்கள்ன்னு பார்த்தா ரகுமான் மற்றும்  டெல்லி கணேஷ்  தவிர எல்லாமே புது முகம் தான் , பல கதாபாத்திரங்கள் மனசுல  பதியுது , அந்த பணக்கார மூன்று பசங்க , புது constable கௌதம் , பேப்பர் போடும் பையன் , அந்த கதாபாத்திரத்தோட வடிவமைப்பும் , அவங்க நடிப்பும் செம்ம .குறிப்பா அந்த கௌதம் கதாபாத்திரம் investigate பண்ணும் காட்சிகள் .சூப்பர் .,ரகுமான் நிதானமா , maturedஆக  அந்த கதாபாத்திரத்துக்கு அருமையா பொருந்தி இருக்காரு ,

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நல்லா யோசிச்சி பண்ணிருக்காரு , அதாவது investigate பண்ணுகிற வீட்டுல இருக்கும் பொண்ணுகிட்ட ரகுமான் , நீங்க refresh பண்ணிக்க பக்கத்துக்கு வீடு யூஸ் பண்ணிகோங்க சொல்லுவது , mobileல் கேஸ் complaint எடுக்காமல் இருந்த,  புது constableக்கு ரகுமான் அட்வைஸ் பண்ணும் காட்சி , ரகுமான் வீடு address சொல்லுவதுக்கு முன்பு mobile cut செய்த constableகிட்ட ரகுமான் மீண்டும் பேசும் காட்சி சூப்பர் .

 கேமராமேன் சுஜித் கோவை , ஊட்டி , இரவு மழை , அழகா நம்மை உணரவச்சி இருக்காரு .அதுக்கு பக்கபலமா ஜேக்ஸ் பிஜாய் இசையமைச்சிருக்காரு , ஆனால் மியூசிக் டைரக்டர் பாவம் , படத்தில் வெறும் BGM மாட்டும் தான் இருக்கு பாட்டு எதுவும் இல்லா, படத்துக்கு அது ஒரு பெரிய ப்ளஸ் .

இந்த வருஷத்தோட கடைசி சினிகிறுக்கன் பதிவு  இப்படி ஒரு நல்ல படத்தை பற்றி எழுதினது ரொம்ப சந்தோஷம். இந்த படத்துக்கு ஒரு நெகடிவ் என்றால் அது இந்த  படம் குறைந்த தியேட்டரில் குறைந்த காட்சி ஓடுவது தான் 

மொத்தத்தில் துருவங்கள் பதினாறு இந்த இரண்டாயிரத்து பதினாறில் கோலிவுட்டில் வந்த நல்ல பதிவு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 23 டிசம்பர், 2016

Dangal - தங்கல்

நீரஜா ,Rustom , தோனி என்று உண்மை சம்பவங்களை கொண்டு இந்த வருஷம் வந்த பாலிவுட் படம் வரிசையில் இந்த தங்கல் ,  நமக்கு தெரிஞ்சது என்னமோ கொஞ்சம் அரைகுறை ஹிந்தி தான் , நல்லவேளை subtitle போட்டு காப்பாத்திட்டாரு நம்ம அமீர்கான் ,

மஹாவீர் மல்லுயுத  வீரர் , பதக்கம் வாங்கி நம்மோட தேசிய கொடி பறக்கவிடனும் நினைச்ச ஒருவர் குடும்ப சூழ்நிலையால் முடியாமல் போக , ஆண்கள் மட்டுமே விளையாட முடியும் நினைச்ச சமூகத்தில் , தன்னோட பெண்களை விளையாட்டில்  வெற்றிபெற செய்து நம் தேசிய கொடியை பறக்க விட செய்த  உண்மை கதை தான் இந்த படம் ,

எப்பொழுதும் ஒரு  புது முயற்சி பண்ணும் அமீர் , இந்த படத்திலும் அதை செய்து  இருக்கார், ஒரு படத்தில் எத்தனை மாற்றங்கள் , சின்ன வயசு , நடுத்தர வயசு , முதியவர் வயசுன்னு அத்தனை மாற்றங்கள் முகத்திலும் , உடம்பிலும் , தன் அனுபவத்திலும் நடிப்பிலும் பின்னிப்பெடல் எடுத்துட்டாரு மனுஷன் , அதிலும் முதல் காட்சி ஆஃபீஸ்ல் சண்டை போடுவது சூப்பர் .

சின்ன வயசு கீதாவாக  வரும் அந்த குட்டி பொண்ணு செம்ம , நிஜமாகவே அந்த பொண்ணு சண்டை கத்துக்கிட்டு வந்துச்சா தெரியல , பசங்களோட சண்டை போடும் காட்சிகள் எல்லாம் செம்ம , அந்த சண்டைகளை படமாக்கிய கேமராமேன் , அந்த சண்டைகளை உருவாக்கிய  ஸ்டண்ட்மேன் எல்லாருக்கும் ஒரு சபாஷ்

சின்ன வயசுல அந்த விளையாட்டு பிடிக்காமல் கஷ்டப்பட்டு பயிற்சிக்கு போகும் காட்சிகள் நல்ல காமெடி அதுவும் அந்த சொந்தகார பையன் இவங்க கிட்ட மாட்டிகிட்டு படும்பாடு நல்ல காமெடி , அப்பாவியாக மாட்டிக்கிட்டு சின்னாபின்னம் ஆகிட்டான் .

ஒரு முரட்டுத்தனமான , எதை பற்றியும் கவலைப்படாத உறுதியான ஒரு புருஷனுக்கு மனைவியாக வரும் சாக்ஷி  தன்னோட பெண் குழந்தைகளுக்கு முடி வெட்டும் போதும் , வீட்டுல கறி சமைக்கும் போதும் வரும் காட்சிகளில் அவங்க நடிப்பு சூப்பர் .

 என்னதான் உண்மையான கதையாக இருந்தாலும் படத்தோட ப்ளஸ்அ தை திரைக்கதையாய் சரியாக எந்த ஒரு தேவையில்லாத மசாலாக்கள் இல்லாமல், அந்த சண்டைகளை வெறும் 2 நிமிஷத்தில் விறுவிறுப்பாக , சுவாரசியமாக , சீட் நுணிக்கு கொண்டு வந்துவிட்டார் டைரக்டர் , குறிப்பாங்க  காமென் வெல்த் விளையாட்டு அரையிறுதி போட்டி செம்ம , கேமராமேன் சேது ஸ்ரீராம்  , எடிட்டர் பாலு சலுஜா ,  டைரக்டர் நிதிஷ்  , இந்த மூன்று பேருக்கும் ஒரு பெரிய கைத்தட்டு அந்த ஒரு காட்சிக்கே கொடுத்துவிடலாம்  அந்த அளவுக்கு அந்த காட்சியை படம் பண்ணி இருக்காங்க

இசையமைப்பாளர் பிரிட்டம் தங்கல்  டைட்டில் பாட்டு படத்தில் சண்டை போடும் போது எல்லாம் வரும் போது நமக்கு அந்த உணர்வு நமக்கும் கொண்டுவந்துவிட்டார் .

மொத்தத்தில் தங்கல் படத்தில் மட்டும் பல பதக்கங்களை வாங்குவதோடு நிற்காது , இந்த படமும் பல பதக்கங்களை வெல்லும் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 9 டிசம்பர், 2016

chennai28-II - சென்னை 28 -II

சரோஜா சாமானிக்காலோன்னு சொல்லி ஆட்டம் பாட்டம் போட்டு என்ஜாய் பண்ண ஒரு படம் , ஒரு ட்ரெண்ட் செட்டிங் படமாக வந்த ஒரு படம் , இப்போதான் வந்தா மாதிரி இருந்த படம் சுமார் 10 வருஷம் ஆகி மீண்டும் இரண்டவாது பகுதியா வந்து இருக்கு படம் , நாம் எப்பொழுதும் ஒரு இயக்குனரோட படத்தை அவரோட முந்தைய படத்தை கம்பேர் பண்ணுவோம் , அதுவும் இரண்டாவது பகுதி என்றால்  நிச்சயமா எதிர்பார்ப்பு அதிகம் ஆகிடும் , ஆனா நான் இந்த படத்தை எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போனேன் .

வெங்கட்பிரபு ஒரு ஒரு படத்துல ஒரு tag  லைன் இருக்கும் A diet  பிரியாணி , , A game மங்காத்தா , இந்த படத்துக்கு reunion , ஆமாங்க வெங்கட்பிரபோட செட் அதே சேர்ந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி நண்பர்கள் சேர்ந்தா என்ன பண்ணுவாங்க ? படம் full ஆக  ஜாலியாக அரட்டை , ஒருத்தரை ஒருத்தர் கலாய்ப்பு , நிறைய சரக்கு அடிக்கிறாங்க , படம் ஆரம்பிக்கும் போதே நிறைய கிரிக்கெட்ன்னு சொன்னாங்க ஆனா கொஞ்சொடு தான் கிரிக்கெட் விளையாடுறாங்க , 

முதல் சில நிமிஷங்கள் பழைய ஆட்கள் இப்போ என்ன செய்கிறாங்க சொல்லும் வரை ஓகே தான், அப்பறம் வரும்  30 நிமிஷம் அப்படியே எங்க போகுது எதுக்கு போகுது தெரியல , வெங்கட் பிரபுவோட அந்த குதூகலமான நகைச்சுவைகள் இல்ல , ஜெய்யோட காதல் , கல்யாணபாடல் எல்லாம் படத்தில் ஓட்டும்படி  இல்லை ,  படத்தில் குறிப்பிடும் படி சில காட்சிகளே ரசிக்கும்படி இருக்குது , மற்றவை தேவையில்லாத இலவச இணைப்பு போல தான் இருக்கு ,  அந்த குறிப்பிடும்படி காட்சிகள் எதுன்னா , படத்தில் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் தான் நல்லா இருக்கு , படத்தில் மொத்தமே 3 கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் தான் , முதலில் வரும் காட்சியில் ஸ்மைல் சேட்டை விக்னேஷ் மேட்ச் கம்மெண்ட்ரி சொல்லுவது சூப்பர் , நம்ம youtube review பிரஷாந்த் சும்மா அவர்கூட உட்கார்ந்து இருக்காரு ,பிரஷாந்த் சார் இந்த படத்துக்கு என்னன்னு review பண்ணுவீங்க ?சென்னை 28 ஆஸ்தான commentator படவா கோபி கடைசி semi final வந்து கமெண்ட் பண்ணுவது செம்ம.

சிவா வழக்கம் போல தன்னோட மொக்கை காமெடி வைத்து படத்தை ஓட்டுகிறார் , ஒரு சில இடங்களில் timing counter கொடுக்கும் இடம் தவிர மற்றவை மொக்கை தான் , குறிப்பா சிவா sharks டீமுக்கு ஏன் பெயர் வந்தது சொல்லும் காட்சி மனசுல பதிகிறது ,ஜெய் நல்லா முகத்தில சதை ஏற்றிவிட்டார் , ஜெய் ஸ்டேஷனில் இருந்து வரும் காட்சி வேதாளம் தல போல் பண்ணுவது சிரிப்பு , போன படத்தில ஷிவா காதலுக்கு ஜெய் உதவினார் , இதில் ஷிவா ஜெய்க்கு உதவுகிறார் , நமக்கு எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம் வெங்கட் பிரபு டீம் தலையோட ரசிகர் அதனால என்னவோ பிரேம்ஜிக்கு இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொடுத்துட்டாரு , பிரேம்ஜிக்கு சொல்லிக்கும்படி காமெடியா காட்சிகளோ இல்லை , வைபவ் அந்த கெட்டப் செட் ஆகல , சுப்பு பஞ்சு அருணாச்சலம் கெட்டப் மீசை எல்லாம் பார்க்க செயற்கையா காமெடியா இருக்கு , இன்னும் பலபேரை  பற்றி சொல்லணும்ன்னா இந்த போஸ்ட் போதாது , ஏன்னா சென்னை 28 கிரிக்கெட் டீம்ல நிறையபேரு இருக்காங்க 

.யுவன் சில இடங்களில் ஆரம்பம் படத்தோட bgm  எட்டி பார்க்கிறது ,வெங்கட்பிரபு  & யுவன் இந்த படத்தில் out of syllabusல் இருப்பது போல ஒரு உணர்வு , முதல் பாதியில் வைபவ் டீம் semi finalஸ் தோற்ற பிறகு , finals மீண்டும் ஷிவா டீமுடன் ஆடுவது எப்படி ? என்ன லாஜிக் சார் ? நீங்க கில்லி கபடி டீம் போல ஆடுறீங்க !!..நீங்க இந்த படத்தோட முதல் part பார்த்தல் தான் இந்த படத்தில் அவிழும் சில முடிச்சுகள் மற்றும் சில கதாபாத்திரங்கள் புரியும் .

மொத்தத்தில் சென்னை 28 -II இரண்டாவுது இன்னிங்ஸ் follow-on ஆகிடும் போல 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

Pazhaya Vannarapettai - பழைய வண்ணாரப்பேட்டை

உன்னதான் நினைக்கையில ராத்திரி தூக்கம் இல்ல அப்படின்னு ஒரு பாட்டு வேல்முருகன் பாட ,  ஜானி டான்ஸ் மாஸ்டர் ஆட , நடுவுல ரோபோ ஷங்கர் அந்த பாட்டில் காமெடி பண்ண பல மாதங்கள் முன்பு  பல மியூசிக்  சேனல் மற்றும் fmல்  போட்ட பாடல் , என்ன படம் இதுன்னு கேட்க தோணுச்சி , அந்த படம் தான் பழைய வண்ணாரப்பேட்டை , ஒரு வருஷத்துக்கு முன்னாடி போன தீபாவளிக்கு வரவேண்டிய படம் ஏன் இந்த அளவுக்கு லேட்டாக வந்துச்சி தெரியல ,

பழைய வண்ணாரப்பேட்டைன்னு படம் பேரு வச்சி இருக்காங்களே ட்ரைலர் பார்க்கும் போது வடசென்னை பேஸ் பண்ணி இருக்கே அதனால இது கொஞ்சம் ரஞ்சித் எடுத்த மெட்ராஸ் படம் போல இருக்குமோ நினைச்சேன் , ஆனால் அது மாதிரி படம் அல்ல , நிச்சயமாக படத்தில் பல புதிய முயற்சிகள் பண்ணி இருக்காங்க தான் சொல்லணும் ,  நம் தமிழ் சினிமாவுல அண்ணா நகர் , அடையாறு , அருவா , கத்தி எடுத்த படங்கள் என்றால் ராயபுரம் , அதை விட்டா  மதுரைக்கு போய்டுவாங்க , முதலில் கதை நடக்கும் இடம் ,இது வரை யாரும் இந்த வண்ணாரப்பேட்டை மையமாக வைத்து படம் செய்தது இல்லை , மேலும் அந்த சந்து புந்துகளை உயிரோட்டமாக காட்டி இருக்காங்க ,அதுக்கு ஒரு பெரிய பாராட்டு , குறிப்பாக அந்த opening பாடல் , நிஷாந்த் காதலி பஜ்ஜி சூடும் இடம் ,  நிஷாந்த்  மற்றும் ப்ரஜின் நைட் ஒரு தெருவில் சண்டை போடும் காட்சிகள், பர்மா பஜார் , பர்மா உணவு அத்தோ , கையேந்தி பவன் எல்லாம்   பக்கா வடசென்னையை காட்டி இருக்காங்க  , படத்தின் பெரிய பிளஸ் கேமரா, ஒரே மாதிரி  அந்த நைட் effect feel   கொடுத்தது , ப்ரஜின் , கருணாஸை சந்திப்பது , ரிச்சர்ட் ஒரு பிரிட்ஜ் மேலே சண்டை போடுவது இந்த காட்சிகளில் எல்லாம் அந்த நைட் effectக்கு ஒரு உதாரணம்.
படத்தின் கதை ? தவறாக ஒரு பிரச்சனையில் மாட்டி கொண்ட நண்பனுக்காக ஒரு கொலைகாரனை கண்டுபிடிக்கிறாங்க இது தான் இந்த படத்தின் ஒரு வரி கதை , ஆனால் அந்த கொலைகாரன் யார் ? எப்படி இருப்பான் , படத்தின் இறுதி காட்சி வரை ஒரு சஸ்பென்சாக வைத்து இருப்பது சூப்பர் , படத்தின் ட்ரைலர் பார்க்கும் போதே யார் அந்த பட்டறை குமார்ன்னு  கேட்டு படத்தின் பார்க்கும் ஆர்வத்தை கூட்டி இருந்தாங்க , அது யார் என்ன எப்படின்னு சொல்லமாட்டேன் ஏன்னா படத்தோட முக்கியமே அது தான்
 ,
படத்தின் முக்கிய மூன்று பேர் நிஷாந்த் , ப்ரஜின் , ரிச்சர்ட் நல்லா பண்ணி இருக்காங்க , ரிச்சர்ட் சில இடங்களில் ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கொடுத்த காசுக்கு மேல கொஞ்சம் நடிச்ச பீல் எனக்கு , மேலும் ரோபோ ஷங்கர் குறைந்த காட்சியே வந்தாலும் , நிறைந்த காமெடி பண்ணியிருக்கார் , கருணாஸ் கருணையான முகத்தோட கொஞ்சமா வந்தாலும் முழுமையான கதாபாத்திரமாக வந்து இருக்கிறார் .

படத்தில் சில பல மைனஸ்களும் இருக்கிறது , குறிப்பாக ஸ்டேஷனில் ஒருத்தர் ஒருதராக கதை சொல்லுவது படத்தின் நீளத்தை கூட்டுவதர்காக வைத்த காட்சிகளே தவிர , படத்தின் கதைக்கு உதவவில்லை , மேலும் பிரஜினின் காதல் கதை இலவச இணைப்பாக இணைக்கப்பட்டதாக உணர்கிறேன் , மேலும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைப்பதாக இருக்கிறது , உன்னதான் நினைக்கையில பாடல் ஏற்கனவே ஹிட் ஆனதால் அது ஒரு தடையாக இல்லை இசையமைப்பாளர் ஜூபின்க்கு ஒரு சபாஷ்  ,ஹீரோயின்க்கு காட்சிகள் , வசனங்கள் எல்லமே குறைவு , அந்த பட்டறை குமாரை பற்றி அப்படி இப்படின்னு மற்றவர்கள் சொன்னாலும் , அந்த கதாபாத்திரத்தின் power காட்டுவதர்காக சில காட்சிகள் வைத்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும் , ஒரு வேளை அவரை பற்றி  part2ல் வருமோ ? படம் வண்ணாரப்பேட்டை சுற்றி நடக்குது ஆனால் ஒரு ஷாட்டில் வடபழனி சூர்யா ஹாஸ்பிடல் கிட்ட இருக்கும் சிக்னல் கண்ணில்பட்டது .

வழக்கமான படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று சொல்ல முடியாது அதே நேரத்தில் அரைச்ச மாவே அரைத்து இருக்காங்க சொல்ல முடியாது , கதை களமும் , அதை கொடுத்த விதமும் ஒரு புதிய இயக்குனருக்கு ஒரு புதிய முயற்சி,  அதற்க்காவே அவரை பாராட்டலாம் , இப்படி புதிய முயற்சி ஒரு வருடம் காலதாமதமாகவும் குறைந்த தியேட்டர்கள் மட்டும் ரிலீஸ் ஆனது ஏன் தெரியல .

மொத்தத்தில் பழைய வண்ணாரப்பேட்டை பழைய முயற்சி அல்ல , இது ஒரு புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 1 டிசம்பர், 2016

Saithan - சைத்தான்

உச்சநீதிமன்றம் தீர்ப்புபடி படத்திற்கு முன்பு தேசியகீதம் போட்டு அதன் பின்பு பார்த்த முதல் படம் இந்த சைத்தான் ,என்னோட சின்ன  வயசில் இருந்து  உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரும் முன்பு வரை,  சென்னையில் படத்திற்கு முன்பு தேசியகீதம் போடும் ஒரே தியேட்டர் எ.வி.ம்.ராஜேஸ்வரி மட்டும் தான் , இதை நான் இங்கு பதிவு செய்கிறேன் .

சைத்தான் இது எந்த மாதிரி ஒரு படம் ? படத்தோட சில நிமிஷங்கள் யூடியூபில் ஏற்கனேவே போட்டு கொஞ்சம் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தாங்க ,முதல் பாதி ஒரு அமானுஷ்யமானா  படமா ? சைக்கலாஜிக் படமா ? எந்த மாதிரி ஒரு படம்ன்னு யூகிக்க முடியாமல் ,ஒரு நிமிஷம் கூட கண் இமைக்காமல் பார்க்க வைத்து இருக்கிறார் டைரக்டர் , அதுக்கு ரொம்ப பக்கபலமாக இருந்தது விஜய் ஆண்டனியின்  bgm , ஏன்னா அந்த இசை தான் அப்படியே நம் மனசில் படத்தோட feel பதியவைக்கிறது , குறிப்பாக அந்த குரல் கேட்கும்  இடங்கள் நல்லா பண்ணி இருக்காருன்னு தான் சொல்லணும் 

படத்தோட மாபெரும் ப்ளஸ் விஜய் ஆண்டனி நடிப்பு , அவரோட இசை , ஹீரோயின் அருந்ததியின்   கண்கள் , மற்றும் விறுவிறுப்பான முதல் பாதி தான் , முதல் பாதியில்  பல இடங்கள் நல்லா மிரளவைத்து இருக்கிறார் டைரக்டர் ,  அப்போ இரண்டாவது பாதி ? , பல இடங்கள் எது நிஜம்? எது கனவு ?எங்கே நாம் இருக்கிறோம் என்று ஒரு சில தடுமாற்றம் இருக்க தான் செய்கிறது , கொஞ்சம் தட்டு தடுமாறி போர் அடிக்காமல் கொஞ்சம் குழப்பி படத்தை கொண்டு போய்ட்டாரு டைரக்டர் , இறுதியாக வரும் கதையின் உண்மையான காரணங்கள் சில பல இங்கிலிஷ் படங்களில் இருந்து எடுக்கப்பட்டதாகவே இருக்கிறது , எனக்கு தெரிந்த சில காட்சிகள் உங்கள் முன்னே , அவைகளை நீங்கள் கீழே கொடுத்து உள்ள link click செய்து பார்க்கலாம் .

ஒரு சண்டை காட்சி Equalizer படத்திலிருந்து கொஞ்சம் எடுக்க பட்டது  , இது போல தான் வேதாளம் படத்திலும் இருக்கும் 
https://www.youtube.com/watch?v=y28SoWEnPHY

Lucy  படத்திலிருந்து இதே போல் காட்சி இந்த படத்தில் இருக்கு 
https://www.youtube.com/watch?v=bNw9G8u8qXg 

இந்த படத்தில் முன்ஜென்பம் வரும் காட்சிகள் அப்படியே 2.20 நிமிஷத்தில் இருந்து 2.35 வரை அப்படியே lucy படத்தில் இருக்கிறது , அவை  கீழே உள்ள லிங்கில் காணலாம் .
https://www.youtube.com/watch?v=jCwVtbYiOqc

மேலும் வில்லன் கதாபாத்திரம் மிகவும் கொடூரமாக ஆரம்பித்து , இறுதியில் காமெடியனாக முடித்தது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது,இரண்டாவுது பாதியில் ஒரு கேள்வி எனக்கு இருந்து கொண்டே தான் இருந்தது , அது படம் முடிந்து டைட்டில் போடும் போது தெளிவு ஆயிடுச்சி, ஆகவே டைட்டில் போட்டுட்டாங்கன்னு எழுந்து போகாதீங்க , கடைசி வரை இருந்து பார்த்துட்டு போங்க .

மொத்தத்தில் சைத்தான் படம் நாடா புயல் போல் வலுவாக ஆரம்பித்து இறுதியில் வலுவிழந்தாலும்,  விஜய் ஆண்டனியின் வித்யாசமான முயற்சிகளுக்காக பார்க்கலாம்

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 18 நவம்பர், 2016

Kadavul Irukaan Kumaru - கடவுள் இருக்கான் குமாரு

கடவுள்  இருக்கான் குமாரு படத்தில கதை இருக்கா ,  எப்போ டா  ராஜேஷ் படத்தில் கதை இருந்து இருக்கு ? சரக்கு தான் டா இருக்கும் , இந்த படத்திலும் அப்படி தான் ,
காமெடி எப்படி டா இருக்கு ? இருக்கு ஆனா இல்ல ,அதாவது sms , ஓகே ஓகே போல சூப்பரா இல்ல ஆனா ஓரளவுக்கு சிரிக்க காமெடி இருக்கு , அப்போ ஆல் இன் ஆல் அழகுராஜா  பார்ட் -2 வான்னு கேட்காதீங்க, அங்க அங்க அப்படி தான் ஆரம்பத்தில்  படம் போகுது,

ஓகே ஓகே படத்தில் இருக்கும் சில காட்சிகளை திருப்பி போட்டா இந்த கடவுள் இருக்கான் குமாரு , ஓகே ஓகே படத்தில் ஹீரோ கல்யாணத்தை நிறுத்த சென்னை to பாண்டிச்சேரி போவாரு , இதில் ஹீரோ கல்யாணத்தை நடத்த பாண்டிச்சேரி to சென்னை போகிறார் , வழக்கமாக சந்தானம் வருவாரு ஆனா அவர்  இல்ல , அதுக்கு சபஸ்ட்டியூட் , R.J .பாலாஜி வராரு, ராஜேஷ்க்கு பாண்டிச்சேரி ராசியான இடம் போல , ஷங்கர் அவரோட படத்தில் எப்படி சுவருக்கு , trainக்கு பெயிண்ட் அடிச்சி வைப்பாரோ , அதுபோல இவரோட எல்லாப்படத்திலும் கல்யாணாச்சத்திரம் வந்துரும் அது smsல் ஆரம்பிச்சி இப்போ கடவுள் இருக்கான் குமாரு வரைக்கும்

ராஜேஷுக்கு கலாய்க்கிறது  கை வந்த கலை , அதை இந்த படத்தில  செம்மையா பண்ணி இருக்கார் , but  அவரோட முந்தைய  படங்களில் இருக்கும் கதாபாத்திரத்தை கலாய்ப்பாரு , ஆனா இதில் நம்மை  சுற்றி நடக்கிற விஷயத்தை கலாய்ச்சியிருக்கார், உண்மையா சொல்லணும்ன்னா லொள்ளு சபா போல இருக்கு , குறிப்பா அந்த சொல்லுவது எல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்து பண்ணும் சீன் செம்ம , அதில் பாலாஜி பண்ணும் அட்டகாசம் அல்டிமேட் , சரவணா ஸ்டோர் ad , BSNL ad , ப்ரேமம் சாய்பல்லவி vs சுருதிஹாசன் பற்றி சொல்லுவது  சினிமா fieldல  இருக்கும் ஆட்களையே நீங்க கலாய்ப்பது செம்ம தில் தான் பாஸ் உங்களுக்கு, எம்.எஸ். பாஸ்கர் , ஜி வி பிரகாஷ் மீட் பண்ணும் காட்சி சூப்பர் , அந்த காட்சிகளில் மதம் மாறுவது பற்றி பேசுவது சமூகத்தில் உண்மை என்றாலும் , அந்த மதத்தை சார்ந்தவங்க எந்த எதிர்ப்பு தெரிவிக்காமல் படம் வந்தது , உங்களுக்கு கடவுள் இருக்கான் ராஜேஷ்ன்னு தான் சொல்லணும் .எல்லோரும்  பேய் படம் எடுக்குறாங்க அதனால ராஜேஷுக்கும் பேய் படம் ஆசை வந்துடுச்சி போல , ஒரு பேய் காட்சி வச்சி , அதுக்கு ஒரு பாட்டு வேற வெச்சி இருக்காரு, அது  மரணமொக்கையாக இருந்துச்சி .அது கொஞ்சம் கூட தேவை இல்லாத காட்சி , படத்தை இரண்டு மணி நேரம் வரணும்ன்னு அதுக்காக நடுவுல சொருகிட்டாரு போல.

சரி படத்தை பற்றி நிறைய சொல்லியாச்சி  , படத்தின் கேரக்டர் பற்றி பார்க்கலாம் ,  ஜி.வி.பிரகாஷ் படத்தில எப்படி இருக்காருன்னு பார்த்தா , ரொம்ப குட்டியா இருக்காருன்னு சொல்லணும் , பாட்டில் குரூப் டான்ஸ் ஆடும் போது , இருக்கற எல்லா டான்ஸர்ஸ் விட ரொம்ப குள்ளமாக தெரிகிறார் , பாவம் அவரை ரோபோ ஷங்கர் அந்த height  வச்சி கலாய்ச்சி இருக்கார் .நடிப்பு கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங் போல இருக்கு

பிரகாஷ்ராஜ் , ரோபோ ஷங்கர் , சிங்கம்புலி காம்போ செம்ம , ஆனந்தி , நிகிகல்ராணி   compare பண்ணா  கல்ராணிக்கு ஸ்கோப் கம்மி தான் , ஆனந்திக்கு ஏன் நிறைய மேக்கப் போட்டு இருக்காங்க ? இல்ல அவங்க நிஜமான நிறமே அது தான ? கொஞ்சம் செயற்க்கையாக தெரிஞ்சாக. மொட்டை ராஜேந்திரன் படத்தில் வச்சா நல்லா காமெடி ரீச் ஆகும் நினைச்சி வச்சி இருப்பாரு போல , ஆனா அவர் காமெடி பெருசா எடுபடவில்லை

key பிளேயர் of the movieன்னு சொல்லனும்னா அது பாலாஜி தான் , மனுஷன் பட்டைய கிளப்பிட்டாரு , படம் ஆரம்பத்தில் அவரோட காமெடி கொஞ்சம் மொக்கயா இருக்கு போல தெரிஞ்சிது, ஆனா அந்த சொல்வது எல்லாம் உண்மை நிகழ்ச்சியில் , ஐயோ அம்மான்னு கத்துவது எல்லாம் சூப்பர் , பல இடங்களில் timing counter செம்மயா கொடுத்தாரு , ஆனால் இந்த காமெடி இப்போ இருக்கும் trendக்கு கொஞ்சம் நாளைக்கு  செட் ஆகும் ஆனால் கொஞ்ச நாள் கழிச்சி பார்த்தா பெருசா சிரிப்பு வராது, பாலாஜி ஒரு t-shirt ல laugh on trouble போட்டு இருக்காரு , அந்த வார்த்தைகள் தனியா பிரிண்ட் எடுத்து cello tape  போட்டு ஒட்டி இருப்பார் போல , cello tape தெரியுது , assistant directors கவனிக்கவில்லையா ? ஏன் சார் budget problem மா ? printed  t-shirt கடையில் print பண்ணி போட்டு இருக்கலாமே .


மொத்தத்தில் கடவுள் இருக்கான் குமாரு  - கடவுள் தான் காப்பாத்தணும் குமாரு

இப்படிக்கு
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 நவம்பர், 2016

Acham Yenbadhu Madamaiyada - அச்சம் என்பது மடமையடா

 கௌதம்மேனன் + ரஹமான் + சிம்பு  ஒரு ஹிட் காம்போ கொடுத்து பல வருஷம் கழிச்சி மீண்டும் அதே காம்போ ஹிட் கொடுக்குமா ? சிம்புவிற்கு ஒரு பிரேக் பாயிண்ட் கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்த ஒரு படம் , நிச்சயமா அந்த எதிர்ப்பார்புக்கு கொஞ்சம் கூட ஏமாற்றம் கொடுக்கல இந்த படம் .

கௌதம்மேனன் ஒரு classy டைரக்டர், அவரோட படங்களில்   அது crime படம்னாலும் சரி , காதல் படம்னாலும் சரி , காதல் அப்படியே fresh காற்று சுவாசிப்பது போல இருக்கும் , அதுவும் இந்த படத்தில் இருவரும் மாற்றி மாற்றி காதல் propose பண்ணும் situation செம்ம , அதிலும் தள்ளி போகாதே பாடல் வரும் இடம் , இதுவரைக்கும் யாரும் இப்படி வச்சது இல்ல , ரொம்ப ஹிட்ஆனா அந்த பாட்டு அப்படி ஒரு இடத்தில வைப்பாருன்னு சத்தியமா நினைக்கவில்லை, மனசுல அப்படியே நிக்குது,  choreographer பேருல ஏன் கௌதம்மேனன் பேரு போட்டாங்கன்னு அந்த பாட்டு பார்க்கும் போது தான் எனக்கு புரிஞ்சிது , இது வரைக்கும் எந்த படத்திலும் choreographer name போடும் போது directors பேரு போட்டது கிடையாது 

படம் ரெண்டு different extremeல பயணிக்குது , முதல் பாதி வேற ஒரு கதைக்களம் போல இருக்கு , இரண்டாவுது பாதி அப்படியே முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் போல இருக்கு , முதல் பாதி அட வெறும் காதல் படமாக தான் போகபோது நினைச்சேன் , ஆனா தள்ளி போகாதே பாட்டு வந்த பிறகு படத்தோட கதைக்கு வேற ஒரு நிறம் மாறுது , இரண்டாவுது பாதி த்ரில்லிங்காக மாறிடுச்சு , ஆனா base line காதல் மட்டும் தான் , படம் ரொம்ப நிதானமாக ஆரம்பிக்குது , ஆனா போக போக அப்படியே அந்த audience pulse அப்படியே ஏற்றிவிட்டார் , முதல் பாதியில் ரெண்டு வசனத்துக்கு ஒரு பாட்டுன்னு வருது , அப்படியே அவங்க இரண்டு பேரும் travel பண்ண ஆரம்பிக்கும் போது , அடேங்கப்பா எத்தனை பாட்டுபா  வரும் ? கொஞ்சம் bore அடிக்குதேன்னு கேட்கத்தோணுது , ஏன்னா எல்லா பட்டும் முதல் பாதியிலே வந்துடுச்சி , இரண்டாவுது பாதியில் பாட்டே கிடையாது , இது மிகவும் புதிய முயற்சி  யாரும் அப்படி பண்ணது கிடையாது , ஏன்னா நம்ம தமிழ் டைரக்டர்ஸ் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி நிச்சயமா ஒரு பாட்டு வைப்பாங்க அதுவே படத்தோட கதைக்கு வேகத்தடையா இருக்கும்  , ஆனா அதை கௌதம் மேனன் செய்யவில்லை , இரண்டாவுது பாதி ஏன் எதுக்கு இது எல்லாம் நடக்குதுன்னு கடைசி காட்சி வரை சொல்லாமல் கொண்டு போயிருக்கார் அது அருமை , அப்பறம் படம் fullஆக சிம்பு பேரு என்னன்னு சொல்லாமல் கொண்டு போயிருப்பது செம்ம , அதுவே ஒரு curiosity படம் பார்க்கும் போது கிளப்பிவிடுது , படம் பார்த்தவங்க ப்ளீஸ் அந்த பேரு என்னன்னு வெளியே சொல்லாதீங்க , அப்புறம் அந்த சுவாரிஸ்யம் போய்டும் , 

படத்தின் negativeன்னு சொல்லனும்னா , சிம்பு ஒரே படத்தில் வேற வேற கெட்டப்பில் வருகிறார் , ஓ தசாவதாரமான்னு கேட்க்காதீங்க , படம் லேட் ஆனதால் , ஒரு ஷாட்ல ஒல்லியாக இருக்கார் , ஒரு ஷாட்ல கொஞ்சம் குண்டாக தெரிகிறார் படத்தில் , சிம்புவிற்கு ஒரு request ப்ளீஸ் உடம்பை கொஞ்சம் maintain பண்ணி பழய சிம்புபோல வாங்க ,சில பல இடங்களில் லாஜிக் மிஸ்ஸிங் இருக்கு , இருந்தாலும் அவை ஒரு பெரிய தப்பு போல தெரியவில்லை , ஏன்னா படத்தில் இருக்கும் மற்ற விஷயங்கள் அதை மறக்க செய்துவிட்டது 

ஹீரோயின்க்கு நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் ,மஞ்சிமா மோகன் நல்லா  பண்ணி இருக்காங்க , கௌதமின் favorite dancer சதிஷ் இந்த படத்தில் ஒரு நல்ல கேரக்டர் பண்ணி இருக்கார்.

முக்கியமான விஷயம் என்னோட favorite மியூசிக் டைரக்டர்  ரஹமான், மனுஷன் பிண்ணி  பெடல் எடுத்துட்டார் , முதலில் வரும் பாடல்கள் எல்லாம் ஒரு கவிதைநயமாக இருக்கு , அந்த பாடல்கள் எல்லாம் கொஞ்சம் lateஆகா தான் மனசில் பதியும் , தள்ளி போகாதே பாட்டை பற்றி நான் சொல்லவே  தேவையில்லை , ஏன்னா எந்த அளவுக்கு அந்த பாட்டு ஹிட்ன்னு தெரியும் , repeat modeல் ஓடிக்கிட்டு இருக்கும் பாட்டு அது , bgm செம்ம இரண்டாவுது பாதியில் நிறைய இடங்களில் தள்ளி போகாதே அப்படியே mild ஆகா வந்து போவது செம்ம , ரஹமான் ரஹமான் தான், தலைவா ur great .

படம் பேருக்குயெட்டாற்போல சிம்பு தன் தோல்விக்கு பின் அச்சம் என்பது மடமையடா என்று அச்சத்தை உடைச்சிகிட்டு  இந்த படத்தின்  மூலமாக வந்து இருக்கார் என்று சொல்லணும்.

மொத்தத்தில் அச்சம் என்பது மடமையடா அச்சம் இல்லாமல் பார்க்க வேண்டிய படம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 29 அக்டோபர், 2016

Kashmora - காஷ்மோரா


காஷ்மோரா கொடுத்த காசுக்கு moreah  lessah பார்ப்போம்ன்னு  படம் பார்த்தேன் , பொழுதுபோக்கு, சிரிப்புன்னு பார்த்தா more தான் ஆனா கதை அதோட பலம்ன்னு பார்த்தா கொஞ்சம் less தான் , அண்ணன் சூர்யா பேய் படம் செய்துட்டார்  , கார்த்திக்கு நாமளும்  பண்ணனும் தோணுச்சு போல, அதனால இந்த படம் எடுத்து இருப்பார் போல.

படம்  பார்த்தா கார்த்தி கதாபாத்திரம் மாஸ்ல இருந்து கொஞ்சம் எடுத்துக்கணும் , அப்புறம் கார்த்தி கெட்டப்பில் கொஞ்சம் பாகுபலி கட்டப்பாவில் கொஞ்சம் எடுத்துக்கணும் ,கதை அமைப்புன்னு பார்த்தா மஹதீராவில் இருந்து கொஞ்சம் எடுத்துக்கணும் ,  பிறகு  மானே தேனேன்னு கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே திராட்சை , முந்திரி போல காமெடி , பாட்டு தூவிவிட்டு அடுப்புல இருந்து சுட சுட இறக்கி , இந்த தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது தான் காஷ்மோரா பலகாரம் .

கார்த்திக்கு அசால்ட்டாக காமெடி வரும்  அதை இதிலும் நிரூபித்து இருக்கார் , குறிப்பா இன்டெர்வல் பகுதி , கார்த்தி அந்த அரண்மனைக்கு உள்ளே புகுந்து இடைவேளை வரை  கலாட்டா பண்ணும் அந்த 15 நிமிஷங்கள் செம்ம , விவேக்கும் தன் பங்குக்கு அந்த நேரத்தில மரத்து மேல கார்ல தொங்கிகிட்டு பேசும் வசனங்கள் செம்ம. விவேக் இனிமேல் அவர் வயசுக்கு இதுபோல் அப்பா கதாபாத்திரம் , குணச்சித்திர கதாபாத்திரம்ன்னு வந்தா நல்லா இருக்கும்.

முதல் பாதியில் கார்த்தியும் அவர் குடும்பமும் எப்படி எல்லாம் ஏமாத்தறாங்கன்னு வெறும் சாதாரண காட்சியாக தான் படம் போகுது  அந்த விவேக் மற்றும் பலர் கோயில் வைத்து ஏமாற்றும்  காட்சி கொஞ்சம் கடி , படம் இரண்டாவுது பாதியில் தான் சூடு பிடிக்குது , அதுக்கு சந்தோஷ் நாராயணன் bgm சரியாய் கை கொடுக்குதுன்னு சொல்லணும் , அந்த பிளாஷ் பேக் காட்சி bgm அருமை.  எல்லாம் சாகப்போறாங்க நிலைமையில் கூட கார்த்தி பேய்யவே கலாய்க்கும் காட்சி செம்ம .

இரண்டு ஹீரோயின் ஸ்ரீதிவ்யா , நயன்தாரா , இதில் ஸ்ரீதிவ்யாவிற்கு நிறைய காட்சி , ஆனால் கம்மி ஸ்கோப், நயனுக்கு  நிறைய ஸ்கோப் ஆனால் காட்சிகள் கம்மி .

டைரக்டர் கோகுல் இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா மாதிரி ஒரு படம் பண்ணிட்டு , காஷ்மோரா மாதிரி முற்றிலும் வேற கதை களம் உள்ளம் படம் பண்ணது பெரிய விஷயம் ஆனால் காமெடி என்பது அவருக்கு கை வந்த கலை போல , அவர் அடுத்து முழுசா வெறும் காமெடி படம் பண்ணா செம்ம ஹிட் ஆகும்.

மொத்தத்தில் காஷ்மோரா இன்னும் காஷுஜோரா இருந்து இருக்கலாம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 









வெள்ளி, 28 அக்டோபர், 2016

Kodi - கொடி பறக்குதா



தனுஷின் கொடி வெற்றி கம்பத்தில் ஏறுமா ? இல்ல இறங்குமா ? வாங்க பார்ப்போம் , கொடி நிச்சயமா இது கொஞ்சம் மற்ற அரசியல் படத்தில் இருந்து மாறுபட்டது தான் , ஆனால் வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லை,  கொஞ்சம் குழப்புவது போல இருக்கா ? என்னடா சொல்ல வரேன்னு கேட்கறீங்களா ? இதை தான் நான் படம் பார்க்கும் போது கேட்டேன் ,
 பொதுவா இந்த மாதிரி அரசியல் படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் எலியும் பூனையுமாக மோதுவது போல தான் இருக்கும், ஆனால் இதுல இரு வேறு கட்சிகளில்  உள்ளே நடக்கும் உட்கட்சிப்பூசல்களை காட்டி , மேலும் ஹீரோவும் ஹீரோயினும் எதிர் எதிரே மோதுகிறாங்க , அப்போ  இதுல சாதாரண ஹீரோயின் இல்ல, இவங்க ஆன்டி ஹீரோயின் ,  ஹெலோ ஒரு நிமிஷம் இருங்க திரிஷா வயசானதால ஆன்டி ஹீரோயின் சொல்லவில்லைங்க , நிஜமாகவே இந்த படத்தில் ஆன்டி ஹீரோயின் தான் அவங்க  .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் திரிஷா கதாபாத்திரம் தான் , தனுஷைவிட மேலோங்கி படத்தில் நிக்குறாங்க , அதுவும் அவங்க அரசியல் விளையாட்டு விளையாடும் காட்சிகள் எல்லாம் சூப்பர் , குறிப்பா போலீஸ்கார் ஒருத்தரை கூட்டிகிட்டு போகும் காட்சி அங்க விளையாடும் விளையாட்டு நிச்சயமா டைரக்டர்க்கு ஒரு சபாஷ் போடலாம் .தனுஷுக்கு இரு கேரக்டர் என்றாலும் , ஒரே கேரக்டர்ல் திரிஷா நல்ல பண்ணி இருக்காங்க 

இன்னொரு ஹீரோயின் அனுப்பம்மா அதாங்க ப்ரேமம் படத்தில் ஸ்கூல் பொண்ணா வரும் ஹீரோயின் , அவங்களே டப்பிங் கொடுத்து இருக்காங்க போல அப்படியே மலையாள வாசம் அடிக்குது , ஆனாலும் ரசிக்க வைக்குது , அதே நேரத்தில் காமெடி படத்தில் ரசித்து சிரிக்க முடியல 

வழக்கமான தமிழ் படங்களின் பாணியில் இருந்து எங்கேயும் மாறுபடவில்லைன்னு மேல சொன்னேன்ல அது என்னனா , ஹீரோக்கு opening பாட்டு , இரண்டு ஹீரோயின் இருந்ததால் ஆளாளுக்கு ஒரு பாட்டு சரி சம்மாக பிரிச்சி கொடுத்துட்டாங்க ,அப்புறம் படம் முதல் பாதி வரை கதைக்குள்ளவே போகவே மாட்டேன் அடம்பிடிக்குது , இப்படி பல லாஜிக் தப்புகளோட படம் இருக்கு.

பாட்டு எப்படி இருக்கு ? இரு உயிராய் ஒரு உயிர் அவதரிக்க பாட்டு அப்படியே காபலி படத்தில வீர துரந்தரா பாட்டு போலவே இருக்கு,அப்புறம் ஹேய் சுழலி முட்டைன்னு ஒரு பாட்டு, இறைவி  படத்தில கண்ணை காட்டி முறைச்சான்னு எஸ்.ஜே .சூர்யா பாடுவரே அந்த பாட்டு மாதிரியே இருக்கு .சந்தோஷ் நாராயணன் சார் வித்தியாச வித்யாசமா பாட்டு தருபவர் நீங்களே உங்க பாட்டை நெல்லை பழரசம்  மாதிரி கலந்ததையே கலந்து கொடுத்தா நல்லாவா இருக்கு ?

மொத்தத்தில் கொடி கம்பத்தின் உச்சிக்கு ஏறவும் இல்லை, கீழ இறங்கவும் இல்லை , அரை கம்பத்தில் பறக்கவும் இல்லை, அரை கம்பத்தில் தொங்குது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

Rekka - றெக்க

சார் உங்களுக்கு நல்ல ஹிட் கொடுக்கும் படம் , ஒரு குடும்ப எமோஷனல் , ஆக்ஷன் , செம்ம மாஸ் எல்லாம் இருக்கும் ,விஜய்க்கு கில்லி போல உங்களுக்கு இந்த றெக்க, பாவம் இப்படியெல்லாம் டைரக்டர்  விஜய் சேதுபதியை கிட்ட சொல்லி இந்த படத்தை எடுக்க வச்சி இருப்பாரு போல , out of  ground six அடிச்சா போல ஆண்டவன் கட்டளை ஹிட் படம் கொடுத்து விட்டு அடுத்த ballல் அவுட் ஆனா போல இந்த படத்தை கொடுத்து இருக்காரு சேதுபதி , கொஞ்சம் கில்லி , கொஞ்சம் ஷாஜகான் , கலந்த ரீமிக்ஸ் , ரீமேக் தான் இந்த படம் , நிச்சயமா ஒரு படம் நல்லா இருக்கும் , இன்னொரு படம் நல்லா இருக்காது தான் , இருந்தாலும் சேதுபதி போன்றவர் இந்த படத்தை எடுக்கணும் அவசியம் இல்ல , அவரோட ஸ்கோப் இல்லாத படம் தான் இது .

அடுத்து டைரக்டர் லட்சுமிமேனன் கிட்ட , மேடம் உங்களுக்கு இந்த படம் , பிதாமகன் லைலா , சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா போல ஹிட் கொடுக்கும் சொல்லி இருப்பாரு போல , முடியல இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் இந்த லூசு மாதிரி இருக்கும்  ஹீரோயின் காட்டுவீங்க ? பார்க்கிற  நாங்க தான் லூசு ஆகுறோம் யா ..ஏற்கனவே இந்த படம் ட்ரைலர் வந்த அப்போவே லக்ஷ்மிமேனன் மேக்கப்பை   கலாய்த்து நிறைய மீம்ஸ் வந்துடுச்சி , ஏம்மா  ஷூட்டிங்க்கு வரும் போது வீட்டுல இட்லி மாவு குண்டாவுல  முகத்தை முக்கிட்டு வந்தீங்களா ? அம்புட்டு மேக்கப் போட்டு வந்து இருக்கீங்க ...

பார்த்த உடனே காதல் என்பது நம்ம தமிழ் சினிமாவில் எழுதப்படாத விதி , இதுல பாருங்க கை பிடிச்ச உடனே மேடையில் பேசவே முடியாத ஹீரோயின்க்கு காதல் வருது , பாட்டு வருது ,ஹீரோயின்  வீட்டை விட்டு ஓடி வருது , 

படம் கும்பகோணத்தில் ஆரம்பிச்சி மதுரை வழியா கோயம்பத்தூர் போயிட்டு திரும்பவும் கும்பகோணத்தில் வந்து முடியுது , ஆனா சொல்லிக்கிறா மாதிரி கதை மட்டும் ஒரு bypaas ல கூட வரல, ஆனா இம்மான் பாட்டு மாட்டும் ஹைவே ல வர டீ கடை போல அப்போ அப்போ வருது .அந்த opening பாட்டு கேட்க்கும் போது பாண்டிய நாடு படத்தில் வரும் ஒரு பாட்டு போல இருக்கு .

அப்புறம் அந்த மாலா அக்கா பிளாஷ்பேக் ரசிக்கும் படி இருக்கு , அவங்க நல்லா பண்ணி இருந்தாங்க , ஆனா சேதுபதி சின்ன வயசுல இருக்கும் போதும் அவங்க சின்னவங்களா இருக்காங்க , சேதுபதி பெரியவன் ஆகின பிறகும் அந்த மாலா அக்கா சின்னவங்களாகவே இருக்காங்க? ஆனா கிஷோர் மட்டும்  வயசானவர் போல காட்டி இருக்காங்க .

 மொத்தத்தில் றெக்க பறக்கல .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 8 அக்டோபர், 2016

Remo - ரெமோ

திருமணம்  நிச்சயமான பொண்ணை சிவா தன்னை காதல் பண்ணவைக்க ஆள் மாறாட்டம் பண்ணுவது  தான் இந்த படத்தோட கதை, இதுக்கு முன்னாடி எங்கேயோ இந்த கதை  பார்த்தா மாதிரி இருக்கா ? ஆமாங்க  தல நடித்த காதல் மன்னன் படம் கதை மாதிரி தான் , இதை பார்க்கும் போதே எனக்கு தோணுச்சி , அதே நேரத்தில கிளைமாக்ஸ்ல கூட வில்லன் சொல்லுவாரு , நிச்சயமான பொண்ணை கல்யாணம் பண்ண நீ என்ன காதல் மன்னன்னா ? என்று கேட்பார் ,

எனக்கு தெரிஞ்சு சிவா நடித்த எதிர் நீச்சல் படத்திற்கு அப்புறம் இந்த படம் தான் ஓரளவு நல்லா  இருந்துச்சி , ஹிட்ன்னு சொல்லிக்கிட்ட மான் கராத்தே , ரஜினி முருகன் , காக்கி சட்டை ,எல்லாம் ஐயோ சாமி அது எல்லாம் ஒரு படமான்னு தோணுச்சு , எப்பா அந்த  படங்களை ஒப்பிடும் போது, இந்த படம் better தான் , இந்த படத்தில்நடிப்பில் நல்ல முன்னேற்றம்  , இது பெண் வேஷம் போட்டதால சொல்லவில்லைங்க , அவர் சாதாரண கெட்டப்பில் வரும் போது நல்லா பண்ணி இருக்கார் , சார் நீங்க நிறைய தடவை சொல்லி இருக்கீங்க நீங்க சூப்பர் ஸ்டார் ரசிகர்ன்னு , அதுக்காக சில இடங்களில் அவரை மாதிரி பண்ணுவது சரியா ? சிவா  சேலையில் வரும் போதும் சரி , nightyல் வரும் போதும் சரி கீர்த்தியை விட சிவா நல்லா இருக்காரு .

கீர்த்தி சுரேஷ் screenla வந்தாலே ரொம்ப அழகா இருக்காங்க , ஆனா நிறைய இடங்களில் அஞ்சு ரூபா கொடுத்தா பத்து ரூபாய்க்கு நடிக்கிறாங்க .ப்ளீஸ் கொஞ்சம் அடக்கி நடிங்க நல்லா இருக்கும் .

சதிஷ் , ராஜேந்திரன் , யோகி பாபு , வந்து காமெடியில் கலக்குறாங்க , யோகி பாபு செம்ம கலாய் , அவர் ரெமோ கேரக்டர் லவ் பண்ணுவது, அதுவும் டானு டானு பாட்டுக்கு feel பண்ணுவது ultimate ,  பஸ்ல propose பண்ணுவது , கடைசியா  பி.கே படம் அமீர் கான் போல ரெமோ கேரக்டர் தேடுவது செம்ம .அவர் இன்னும் வந்து இருந்தா படம் கலைகட்டிருக்கும் .வழக்கம் போல அம்மாவாக சரண்யா சூப்பர் .

மாசல படம்ன்னு அதனால என்னவோ அனிருத் கொஞ்சம் எதிர்நீச்சல் , கொஞ்சம் நானும் ரவுடி தான் , கொஞ்சம் மான்கராத்தே மசாலா கலந்து பாட்டு போட்டு இருக்காரு , வாடி தமிழ் செல்வி பாட்டில் நடுவே கொஞ்சம் வேதாளம் bgm எட்டி பார்க்குது , ஆனா அவனா இவனா  ரெமோ bgm நல்லா இருந்திச்சி .


படத்தில் லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா இது commercial மாசாலா படம் , படம் full ahaa எல்லா நேரத்திலும் full make upல்  நர்ஸ் சிவா வராரு , பார்த்த உடனே காதல் வருவது இன்னும் எத்தனை படத்தில தான் வைப்பீய்ங்க ? அத விட கொடுமை கீர்த்தி சுரேஷ்க்கு காதல் வருவது , ஏம்மா பிறந்தநாளைக்கு பட்டாசு விட்டு நிறைய ஹார்ட் விட்டா  காதல் வருமா ?, டைரக்டர் சார் என்ன தான் மசாலா படம்ன்னாலும் கொஞ்சம் practical லா எடுங்க , என்னடா நம்ம சென்னை மெட்ரோ திறந்து இன்னும் எந்த படமும் ஷூட் பண்ணவில்லையே நினைச்சேன் , இந்த படத்தில் ஒரு பாட்டில் எடுத்துட்டாங்க .,   கடைசியா வரும் காதல் தோல்வி பாட்டு தேவை இல்ல , இரண்டாவுது பாதியில் கடைசி ஒரு 30 நிமிஷம் ஏன்டா இவ்வளவு நேரம் எடுக்குறாங்கன்னு தோணுது, ஜவ்வு மிட்டாய் போல இழுத்துட்டாங்க , ஆனா ஒரு வழியா கடைசியா கொஞ்சம் காமெடிஎல்லாம் கலந்து ஒரு வழியா சந்தோஷமா சுபம் போடுறாங்க .

மொத்தத்தில் ரெமோ சிவாவிற்காக ஒருதடவை demo

நன்றி : நண்பர் சுதீர்(பன்ச் லைன் )

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 7 அக்டோபர், 2016

Devi - தேவி

அட ராமா இந்த வருஷத்துல இன்னொரு பேய் படமா , இருந்தாலும்  ,பிரபு தேவா ரொம்ப நாள் கழிச்சி screenல வராரு அதனால போய் பார்க்க வேண்டியதாச்சி , அதை  opening   ஒரு பாட்டு சல்மார் பாட்டிலே   அந்த மனுஷன் திருப்தி படுத்திட்டாரு , என்ன டான்ஸ் ஒரு ஒரு step  வச்ச கண்ணை எடுக்காமலே பார்க்க வேண்டி இருக்கு ,  நடிப்பு சரியாய் பண்ணி இருக்காரு எனக்கு அவரோட 90s ல வந்த படங்கள் பார்த்த ஞாபகம் வந்துச்சி .

படத்தோட கதை ?
மற்ற பேய் படங்களை விட கொஞ்சம் வித்தியாசம் அவளோ தான் , நடிகை ஆகணும் நினைச்சி இறந்து போன ஒருத்தி , தமன்னா மேல வந்து அவளோட ஆசையா நிறைவேற்றி போகுது அவளோதான் சிம்பிள் .

ஆனா படம் எப்படி போகுது ? ரொம்ப சுமாரா போகுது , ஏதோ படம் ஆரம்பத்தில் r ,j .பாலாஜி கொஞ்சம் கொஞ்சம் மொக்க காமெடி பண்ணி சிரிக்க வைக்கிறார் .தமன்னா ரெண்டு கேரக்டர் நல்லா பண்ணி இருக்காங்க .

படத்தில் நிறைய மைனஸ் இது 3 மொழி படம் என்பதால் ,, நிறைய இடங்கள் அந்நியமா தெரியுது , அந்த கிராமம் , பிரபுதேவா அப்பா , அந்த பாட்டி , இப்படி நிறைய இருக்கு , அதுவும் சோனு வரும் பாடல் ஹிந்தி பாட்டு வரிகள் போலவே இருக்கு , அவரோட டப்பிங் செட் ஆகல , படம் பேய் படம் போலவும் இல்ல , காமெடியாகவும் இல்ல , உணர்ச்சி வசமாகவும் இல்ல .படம் முதல் பாதி கதைக்குள்ளவே போகவே இல்ல , நாசர் , சதிஷ் எல்லாம் வந்து போறாங்க ஆனா படத்துக்கு எதுவும் பெருசா பயன்படுவது  மாதிரி இல்ல .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் நம்ம பிரபு தேவா , நடிப்பு , டான்ஸ் , மற்றும் தமன்னா நடிகையாக நடிக்கும் கேரக்டர் attitude , ஸ்டைல் தான் 


இந்த பஞ்ச சொல்ல  கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு இருந்தாலும் கொடுக்கிறேன் 

மொத்தத்தில் தேவி கொஞ்சம் slow ஆனா மூதேவி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்  

ஞாயிறு, 2 அக்டோபர், 2016

M.S.Dhoni - தோனி

இதுக்கு முன்னாடி சில ஹிந்தி படங்கள் பார்த்து இருந்தாலும் அதை பற்றி எழுதினது இல்ல , இந்த படம் எல்லோரும்  எதிர்பார்த்த படம் அதனால எழுதுறேன், சத்தியமா ஹிந்தில தாங்க பார்த்தேன் , தமிழ் டப்பிங் பார்க்கல, ஒரளவு நல்லாவே ஹிந்தி எனக்கு புரியும், எதுக்குடா இந்த தேவை இல்லாத முன்னுரைன்னு  கேட்பது தெரியுது , இருந்தாலும் சொல்லுவது என்னோட கடமை ..... !.

இந்த படத்தை பார்காதவங்க கூட இதோட கதை என்னன்னு தெரியும் , அட ஆமாப்பா  ராஞ்சில் பிறந்தவர் , புட்பால் கோல் கீப்பர் , அப்புறம் கிரிக்கெட் விக்கெட் கீப்பர் ,  ரயில்வேயில் வேலை செய்தவர் , அப்புறம் அவரோட கிரிக்கெட் வரலாறு என்னன்னு எல்லாருக்கும் தெரியும் ,

அவரோட வரலாற்றை 190 நிமிஷம் சொல்லி இருக்கும் படம் தான் இது , படம் என்னடா ரொம்ப பெருசா இருக்கே பயந்து தான் போனேன் ஆனா எங்கேயும் படம் bore அடிக்கல .

சரி படத்தில பேச வேண்டிய விஷயங்கள் என்ன இருக்கு ? கதாபாத்திரங்கள் தேர்வு , யுவராஜ் சிங் போலவே ஒருத்தர் , ஜக்மோகன் டால்மியா போலவே ஒருத்தர் , கொஞ்சம் எ.கே.கங்குலி போலவே ஒருத்தர் , அப்புறம் ஹீரோ அப்படியே தோனியோட body language எல்லாம் நல்லா follow பண்ணி இருக்காரு , பிறகு சின்ன பையன் தோனி  அந்த சின்ன பையன்  போலவே அந்த சின்ன வயசு தோனியோட அக்கா, குறிப்பா அந்த மூக்கு அமைப்பு ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி இருப்பது அருமை , பிறகு அவரோட நண்பர் கதாபாத்திரங்கள் , ஹெலிகாப்டர் ஷாட் சொல்லி தரும் நண்பர்கள் எல்லாரும் சூப்பர் .

படத்தில் technical வேலை ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க , அந்த மேட்ச் நடக்கும் இடங்கள் , original மேட்ச் வீடியோ footage வச்சி இந்த ஹீரோவின் முகத்தை அந்த இடங்களில் சரியாய் பொருத்தி இருக்காங்க , ஆஸ்திரேலிய மேட்ச் , 2007 T20 world கப் ,  2011 world cup finals  அது மாதிரி எல்லா இன்டர்நேஷனல் மேட்ச்களின்  footageல , மேட்ச் முடிஞ்சி players கட்டிப்பிடிக்கும் காட்சிகள் கூட ரொம்ப நல்லா வேலை செய்து இருக்காங்க எங்கேயும் அந்த அளவுக்கு பிசுறு தட்டவில்லை 

எனக்கு படத்தில் மிகவும் பிடிச்ச பகுதி , தோனி  வீட்டுக்காக ரயில்வே வேலை , தனக்காக கிரிக்கெட் , ஒரு பக்கம் profession மறுபக்கம் passion அப்படின்னு மாற்றி மாற்றி கஷ்டப்படுவது காட்சிகள் ரொம்ப அழகா ஹீரோ சுஷாந்த் சிங் நல்ல பண்ணி இருக்காரு  

படத்தில ஒரே வருத்தம் என்னன்னா நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ல ஆடின மேட்ச் போட்டு இருந்தா செம்மயா இருந்து இருக்கும், வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கையெழுத்து போடுவது போல ஒரே ஒரு காட்சி தான் வச்சி இருந்தாங்க , அதுக்கே நம்ம சென்னை பசங்க விசில் காது கிழியுது .

நாமெல்லாம்  டிவில தான் மேட்ச் பார்க்கிற  ஆளுங்க ,  நிச்சயமா இந்த படத்தை தியேட்டர்ல போயிட்டு பார்த்தா  கிரிக்கெட் மேட்ச் ஸ்டேடியத்தில் போயிட்டு பார்த்தது  போல feel தரும் ..

மொத்தத்தில் தோனி பக்கா ஹெலிகாப்டர் வின்னிங் ஷாட் தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 24 செப்டம்பர், 2016

Thodari - தொடரி

தனுஷின் தொடரின்னு  சொல்வதை விட  கீர்த்தி சுரேஷின் தொடரின்னு தான் சொல்லணும் , ஏன்னா தனுஷை விட கீர்த்திக்கு அதிகம் பங்கு இருக்கு , மேலும் நடிப்பிலும் தனுஷை விட நல்லா பண்ணி இருக்காங்கன்னு சொல்லுண்ணும் , தனுஷுக்கு இதுல ஸ்கோப் கம்மி தான் சொல்லணும் , அதே நேரத்தில தனுஷையும் பாராட்டியே ஆகணும் , ஏன்னா அவருக்குன்னு ஒரு இமேஜ்  மாஸ் ஹீரோயிசம் இருக்கு  , ஆனா அது போல இமேஜ் எல்லாம் பார்க்காம இந்த படத்தை எடுத்ததிற்கு .

படத்தின் மிக பெரிய பிளஸ் கீர்த்தி, எப்பா என்னமா பண்ணி இருக்காங்க , அவங்க அந்த இன்டெர்வல் ப்ளாக்கில் தனுஷ் பொய் சொன்னது தெரிஞ்ச பிறகு அழுவும் காட்சியில் பின்னிட்டாங்க , அவங்க அப்பாவியா நடிப்பதும் செம்ம , அதுவும் வாக்கி டாகியில்  போலீஸ்காரங்க கிட்ட வெள்ளந்தியா நான் பாடகி ஆகணும்ன்னு சொல்லும் போது அவங்க நடிப்பை ராசிக்காம இருக்க முடியல , கீர்த்தி இது வரைக்கும் நடிச்சதில், அவங்க நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படமா எடுத்தது இது தான் ,  மற்றும் இரண்டாவுது பாதியில் இந்த மீடியாகாரங்க பண்ணும் அட்டூழியத்தை காமெடியாக சுட்டி காட்டுவது , முதல் பாதியை விட இரண்டாவுது பாதியின் விறுவிறுப்பு, மற்றும் எந்த ஒரு ஆபாசத்தனமான காட்சியோ , இரட்டை அர்த்த வசனங்களோ , அல்லது குடிச்சி கூத்தடிக்கும் பாடலோ இல்லாமல் , ஒரு குடும்பமாக சென்று பார்க்கும்படி எடுத்தவை,  இவைகள்  தான் படத்தின் பிளஸ் என்று சொல்ல  முடியும்.

படத்தின் நெகடிவ் நிறைய இருக்கு , ஆம் எல்லாரும் சொல்வது போல லாஜிக் மிஸிங் படத்தில் இருக்கு, இந்த மாதிரி படங்களில் நிச்சயமாக ஆங்காங்கே லாஜிக் மிஸ்ஸிங் என்பது இருக்க தான் செய்யும் , ஆனால் அப்பட்டமாக சில விஷயங்கள் விட்டு இருப்பது பிரபு சாலமன் போல டைரக்டர் செய்யலாமா ? என்று தான் கேட்க தோணுது , இதோ சில continuity மிஸ்ஸிங் காட்சிகள் , முதலில் அந்த train பெயர் ,  வசனங்களில் DC எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுறாங்க , ஆனால் , நாக்பூர் , ஜான்சி  ரயில்வே ஸ்டேஷன் announcementல்  GT எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுராங்க , கீர்த்தியும் , தனுஷும் ஒரு இடத்தில ac coach படிக்கட்டில் உட்கார்ந்து பேசுவாங்க , அதே continuity next லாங் ஷாட்டில்  அந்த coach கடைசி பெட்டிக்கு முந்தின பெட்டி போல தெரியும் , ac coach எங்க சார் கடைசி coachக்கு முன்னாடி coachஆகா வரும் ? ஒரு லாங் journey trainல் மொத்த trainக்கும் ஒரே ஒரு TTE இம்மான் அண்ணாச்சி மட்டும்  தான் இருப்பாரா ? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதேன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , ஆனா நீங்க எரிகிற தீயில் ஒரு பாட்டு வச்சிடீங்களே சார் , நல்லவேளை சார் நீங்க அந்த மலையாள நடிகை ஸ்ரீஷாவுக்கு ஒரு குத்து பாட்டு வைக்கலை. அப்புறம் பேன்ட்ரி கார்ல night தம்பி ராமைய்யாவும், தனுஷும் பேசும் ஒரு காட்சியில் மாற்றி மாற்றி நிறைய ஷாட் நிறைய cut பண்ணி cut பண்ணி போட்டது கொஞ்சம் jump இருப்பது போல இருந்துச்சி., பிறகு அந்த காமென்டோ அவருக்கு என்ன உடம்பில் எதாவுது பிரச்சன்னைய்யா ? ஏதோ சைக்கோ போல காட்டினாரு ஆனா அது ஏன் எதார்க்குன்னு சொல்லவேயில்லை , முதல் பாதியில் வரும் தம்பி ராமையா  தனுஷ் காமெடி  மொக்கையா இருக்கு, முதல் பாதி எப்போ முடியும்ன்னு தோணுச்சு ,போதும்பா இதுக்கு மேல நெகட்டீவ்ஸ் சொல்ல வேண்டாம் தோணுது

படத்தின் பிளஸ்ல நிச்சயமா ராதாரவி பற்றி சொல்லியே ஆகணும் மனுஷன் அசால்டாக பண்ணுறாரு செம்மையை கலாய்க்குறாரு , டேய் அந்த bridge வெள்ளைக்காரன் கட்டுனது டா விழாது , இதுவே நாம்ம கட்டி  இருந்தா நிச்சயமா உடைஞ்சு இருக்கும்ன்னு இன்றைய அரசியல்வாதிகளை பற்றி சொல்லுவது தியேட்டர்ல் விசில் காதை கிழிக்குது.

டி. இம்மான் சார் என்ன சொல்ல ஏது சொல்ல உங்களை பற்றி , மனம் கொத்தி பறவை படத்தில் "என்ன சொல்ல ஏது சொல்ல"என்று பாட்டு வரும் அது போலவே போட்டு இருக்கீங்க, ஏற்கனவே உங்க படத்தின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கு.

மொத்தத்தில் தொடரி ரொம்ப நாளுக்கு தொடர்வது கடினம் தான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 23 செப்டம்பர், 2016

Aandavan Kattalai - ஆண்டவன் கட்டளை

காக்க முட்டை , குற்றமே தண்டனை இப்போ ஆண்டவன் கட்டளை  போல நல்ல படங்கள் தரணும்ன்னு,  நிச்சயமா ஆண்டவன் மணிகண்டனுக்கு இட்ட கட்டளை போல,மனுஷன்  இரண்டு மணி நேரத்துக்கு கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை கொடுத்து இருக்காரு.

படம் ஆரம்பிக்கும் போதே அட ஒரு நல்ல படத்துக்கு வந்து இருக்கிறோம்  போல என்ற எண்ணம் தோணுது , குறிப்பா அந்த டைட்டில் song வரிகள் , இன்றைய சமூகத்தின் நிலையை பாடல் வரிகளில் வருவது நிச்சயமா கை தட்ட வைக்குது.

படத்தோட பிளஸ் நிறைய விஷயங்கள் இருக்கு, படத்தின் ஒரு வரி கதை , படம் எடுத்த விதம் , வழக்கமான சினிமாத்தனம் இல்லாதது , நடிச்ச நடிகர்கள் தேர்வு , சின்ன சின்ன கதாபாத்திரம் கூட மனசுல நிற்கிறா  மாதிரி நடிக்க வைச்சது, அந்த கதாபாத்திரங்களை வடிவமைச்சது , தேவை இல்லாத பாடல்கள் போடாதது , அப்படி இப்படின்னு நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு  படத்தின் ஒரு வரி கதை களம் என்னன்னு படத்தின் ஆரம்பித்தவுடனே சொல்லிட்டாரு டைரக்டர் , அதாவுது ஒரு வேலை செய்யணும்ன்னா அதை நேரடியாகவே நீங்களே பண்ணுங்க , நடுவுல வேற யாரையும் நம்பாதீங்க, இது தான் படத்தின் ஒரு வரி . அதே போல் படத்தில் காமெடி நிச்சயம் guarantee நல்லா சிரிக்கலாம்.

படத்தின் மாபெரும் பிளஸ், காட்சி நடக்கும் இடங்கள் எந்த சினிமாத்தனம் இல்லாமல், உண்மையான practical ஆக காட்டுவது , குறிப்பா விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சிகள் , அந்த வீடுகளை காட்டுவது, ஒரு சாதாரண மனிதன் வீடு தேடும் போது படும்  அவஸ்தைகளை இன்றைய சமூகத்தில் அவல நிலையை காட்டுவது, ஒரு travel ஏஜென்ட் ஆபீஸ் காட்டுவது , ரித்திகாவின் வீட்டின் நிலை அந்த வீட்டின் உள்ள பொருள்களை கொண்டு காட்டுவது என்று ஒரு நடுத்தரவர்கத்தின் கண்ணாடியாய் இந்த படத்தில் காட்டுவது செம்ம.


விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி படம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல , காந்திங்கிற கேரக்டர்ல அசால்ட்டா பண்ணிட்டு போறாரு , அதுவும் அவரு ஊமை போல கோர்ட்டில் நடிப்பது செம்ம, யோகி பாபு எப்பா !! அவர்  தலை முடியை பார்த்தாலே சிரிப்பு தான் , அவர் பாஸ்போர்ட் ஆபீஸ் போவது , விசா இன்டெர்வியூல பேசுவது அல்டிமேட் , ஹே citizen of London நான்ன்னு சொல்லுவது எல்லாம் சூப்பர், இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லைங்க, விஜய் சேதுபதியின் வீட்டு owner , அந்த ரெண்டு வக்கீல்கள் , குறிப்பா அந்த வக்கீலின் லேடி assistant வினோதினி அசால்ட்டா நடிக்கிறாங்க ,  பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து விசாரிக்க வரும் அந்த மலையாள ஆஃபீஸ்ர் , அப்பாவியா வரும் ரித்திகாவின்  அம்மா அவங்க அந்த ஜீன்ஸ்யை வச்சி பேசும் வசனம் அப்பாவித்தனம் காட்டுவது  , இலங்கை தமிழராக வரும் நேசன் கதாபாத்திரம் ,  மேலும் பல கேரக்டர்  எல்லாரும் சூப்பர் , எந்த ஒரு கதாபாத்திரமும் வில்லனாக காட்டாதது அருமை.

ரித்திகா நடிப்புல பிண்ணி எடுக்குறாங்க குறிப்பா அந்த இறுதி காட்சியில் வண்டியில் விஜய்சேதுபதியை உட்க்காரவச்சி  close up shotல் ஒரு expression கொடுத்தாங்க, தியேட்டர்ல செம்ம விசில் மற்றும் கை தட்டு 

படத்தில் பல காட்சிகள் மனசில் நிக்குது , குறிப்பா சில காட்சிகள் சொல்லியே ஆகணும், விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சி , ரெண்டு பேரும் விசா இன்டெர்வியூ போவது, அந்த கோர்ட் காட்சி எல்லாம் செம்ம, குறிப்பா ரித்திகா counsellingஇல் அவங்களை உணர்வது , அவங்களை பொண்ணு பார்க்கும் காட்சி , அந்த பாஸ்போர்ட்  ஆஃபீஸ்ர் ரிதிக்கவை விசாரிக்கும் காட்சி, எங்கே ஏதோ ஏடா கூடமா நடக்குமோ என்று நினைக்கும் போது அந்த ஆஃபீஸ்ர் gentle ஆகா அந்த சீனை handle பண்ணுவது சூப்பர்.குறிப்பா அந்த காட்சியில் ஒருத்தரை ஒருத்தர் காட்டி கொடுக்காமல் , விட்டு கொடுத்து, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் கொண்டு  அந்த காட்சியை  நகர்த்துவது சூப்பர், அப்புறம் கடைசியா யோகி பாபு ஊருக்கு போகும் போது ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் ஒரு அருமையானா காமெடி கடைசியா வைப்பது செம்ம, 

வேலைக்கு விசுவாசமா இருக்கறதா, வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா? சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட், வெள்ளைகாரன் இருந்தப்போ கூட காந்தி பாதுகாப்பாக தான் இருந்தார் ன்னு  அப்படி பல இடங்களில் வசனம் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், நம்ம படங்களில் குடி , மற்றும் புகை பிடிக்கும் காட்சி வந்தா எச்சரிக்கை டைட்டில் கீழே போடுவாங்க , அது போல இந்த படத்தில் வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போடாம போகும் போது ,"Wear Helmet to Avoid Legal Action " போடுறாங்க , இது இப்போ censor board இது போடணும் சொல்லி இருக்கா ? இல்ல டைரக்டர் அவர் சமூக நலன் கருதி போட்டறான்னு தெரியல , அப்படி டைரக்டர் போட்டு இருந்தா அவருக்கு பெரிய கை தட்டு . ஏன் என்றால் மற்ற படங்களில் இது மாதிரி போடுவது இல்லை , நான் ஒரு மலையாள சேனலில் ஓகே கண்மணி பாடல் போடும் போது அந்த தொலைக்காட்சியில் அது மாதிரி போட்டாங்க , ஏன் அது மாதிரி தமிழ்லில் போடுவது இல்லை என்று தோணுச்சி , ஆனால் இந்த படத்தில் போட்டது அருமை .

  என்ன தான் ஏஜென்ட் ஏமாற்றினாலும் விஜய்சேதுபதி  தெரிஞ்சு செய்த தப்பு
 தானே?  அவருக்கு  இந்த பிரச்சனையும் வராதா ? கடைசியா அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ்ர் வெறும் திட்டிட்டு கைஎழுத்து போட்டு தருவது , எந்த அளவுக்கு சட்டத்தில் இடம் இருக்கு ? வேற ஏதாவுது லாஜிக் மிஸ் ஆகுதான்னு எனக்கு தெரில .

மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை மணிகண்டன் மக்களுக்கு கொடுத்த அருமையான கட்டளை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


வியாழன், 8 செப்டம்பர், 2016

Irumugan - இருமுகன்

 பன்முகன் கொண்ட விக்ரம் நடிச்சி இருக்கும் இந்த இருமுகன் ஆரம்பக்காட்சியே அடடே , யாருடா  இந்த தாத்தா ஏழாம் அறிவுல கண்ணை காட்டினாலே மிருகத்தனமா அடிப்பாங்களே அதே மாதிரி இதுலையும் சண்டை பறந்து பறந்து போடுறாங்க , ஏதோ  inhaler ல டைம்  எல்லாம் ஓடுது , உடனே ஆளுங்க காலி ஆயிடுறாங்க , அப்பறம் "ரா" ஏஜென்ட்ன்னு சொல்லுறாங்க ,அப்படியே படம் மலேஷியா போகுது , மலேஷியே காட்டினாலே படம் ஸ்டைலிஷ் ஆகிடுது , அதுவும் கேமராமேன் ரொம்ப அழகா ஸ்டைலிஷ்ah காட்டுறாரு , ஏன் இது எல்லாம் நடக்குது ? எப்போ இன்னொரு விக்ரம் காட்டுவாங்க ? அந்த மருந்து என்னவெல்லாம் பண்ணும் ?அப்படின்னு ஒரு சுவாரசியம் கூட்டி,  அதுக்கு சரியா bgm கொடுத்து, நடுவுல கொஞ்சம் தம்பி ராமையா காமெடி கலந்து, படம் பரபரப்பா கொண்டு போய் இடைவேளையில் ஒரு பெரிய வாவ்ன்னு சொல்லுறா மாதிரி முடிச்சாரு , 

இந்த இடைவேளையில் நடப்பதை விமர்சனம் என்கிற பெயரில் வேறுசிலர் சொல்லிட்டாங்கன்னா அது சுவாரசியம் இருக்காது ,அதே நேரத்தில் அந்த இடைவேளை சுவாரசியம், இரண்டாவது பாதியில் பெருசா எடுப்படாம போகுது , சொல்ல வேண்டிய கதையை அதன் முடிச்சிகளை முதல் பாதியிலே சொன்னதாலே , இரண்டாவது பாதியில்  கதை நகர்வதற்கு ஒன்றும் இல்லை , இரண்டாவது பாதியில் வில்லன் விக்ரம் எப்படி தப்பிப்பாரு தான் திரைக்கதை ,மேலும் படத்தில் சில பல லாஜிக் மிஸ்ஸிங் , நயன்தாரா இரண்டாவுது பாதியில் வருவதற்கு சொல்லும் கதை ரொம்ப லாஜிக் மிஸ்ஸிங், மேலும் ஒரு பெரிய network பிடிக்க போகும் போது , யாரோ பெரிய ஆளு நெகடிவ் கேரக்டர்ல வருவாங்க நினைச்சா கருணாகரனை காட்டுறாங்க , உடனே அது பொசுக்குன்னு போயிடுச்சி மக்கள் பலர் சிரிச்சிட்டாங்க .

நம்ம தமிழ் ரசிகர்களுக்கு படத்தில் நிறைய புதுமையான விஷயங்கள் காட்டி இருக்கார் , ஸ்பீட் மருந்து , medulla oblongataவில் சிப் , அப்புறம் பல கெமிக்கல் மருந்துகள் வச்சி ஜித்து வேலை பண்ணி இருக்காரு டைரக்டர் , அதே நேரத்தில் பழமையான விஷயங்கள் அதாங்க  தேவை இல்லாத பாடல்களும் இருக்கு , நம்ம தமிழ் சினிமா எப்போ திருந்தும் தெரியல , ஏன்னா ஒரு high tech கதை மாதிரி உள்ள படத்தை   எடுத்து அதன் வேகத்தை குறைப்பது போல தேவை இல்லாத பாடல்கள் வைக்கும் பழக்கம் எப்போ நிறுத்துவங்களோ?

ஹாரிஸ்ஜெயராஜ் இப்போ கொஞ்சம் தன்னோட பழைய வழிக்கு வந்து இருக்காரு , halena பாட்டு செம்ம , bgm ரொம்ப neatah பண்ணியிருக்காரு,  படத்தோட மிக பெரிய பிளஸ் கேமராமேன் r.d .rajasekar , படத்தை நல்ல ரிச் ஆகா காட்டி இருக்காரு ,

ஆத்தா நயன்தாராவே வயசு ஆகா ஆகா படத்தில் என்ன அழகா வாரீர் ?  இந்த படத்தில் நீங்க ஒரு லேடி ஜேம்ஸ்பாண்டுமா, படத்தோட கடைசியில் சண்டை போடுறா மாதிரி ஒரு காட்சி ஆரம்பிச்சீங்க ஆனா நம்மக்கு சண்டை காட்சி காட்டலை , அந்த சீன்ல சண்டை போட்டா மாதிரி நம்ம புரிஞ்சிக்கணும் , டைரக்டர் சார் நயனுக்கு அந்த காட்சியில் நிச்சயமா நீங்க ஒரு சண்டை வச்சி இருக்கனும், அந்த கடைசி சில நிமிடங்கள் இன்னும் தீயா இருந்து இருக்கும்.

கண் அழகி நித்யாமேனன் அவர்களே , படம் ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு விக்ரமுக்கு நிகரா ரொம்ப நல்ல கதாபாத்திரம் இருக்கும் நினைச்சேன் , ஆனால் ரொம்ப குறைவாக தான் உங்கள யூஸ் பண்ணி இருக்காங்க , நல்லவேளை உங்களுக்கும் ஒரு டிரீம் சாங் வைக்கலை.

படத்தின் அடித்தளம் , மேல்தளம் , தூண் , சுவர் என்று எல்லாமும் இருப்பவர் நம்ம விக்ரம் தாங்க , மனுஷன் ரெண்டு கேரக்டர்க்கும் என்னமா  வித்தியாசம் காட்டுறாரு, அந்த பெண் கெட்டப்புல அவர் முகத்தில் போட்டு இருக்கும் மாஸ்க்கை  கழட்டும் போது, அந்த கை விரல்கள் அந்த மாஸ்க்கில் வைக்கும் போது , அந்த கையில் பெண்மை காட்டுவார் , அவரோட கை விரல்கள் கூட நடிக்க வைக்குறாரு விக்ரம் , ஆனா  flash backல் நயன்தாரா கூட டூயட் பாடும் போது மட்டும் கொஞ்சம் வயசு ஆனவர் போல தெரிகிறார்

ஒரு சாதாரண ரசிகனுக்கு அவன் கொடுக்கும் 120க்கு வசூல் இந்த படம்.

மொத்தத்தில் இருமுகன்  விக்ரமின் தனிமுகன் 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

சனி, 3 செப்டம்பர், 2016

Kuttrame Thandanai - குற்றமே தண்டனை


அப்பாடா வழக்கமான தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து வந்து பார்த்த படம் இது , படத்தோட அருமையான விஷயம் என்னனா ? படத்துக்கு தேவையான அளவான கதாபாத்திரங்கள் , மனசுல நிற்கிறா மாதிரி அளவா பயன்படுத்தி இருக்காங்க , அதுவும் அந்த கதாபாத்திரங்கள் தங்களோட முந்தைய படங்களில் இருந்து ரொம்ப oppositeஆகா பண்ணிருக்காங்க , ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை , தர்மதுரை படங்களில் இருந்து அப்படியே எதிர்மறை கேரக்டர் , பூஜா தேவரியா இறைவி படத்தில இருந்து முற்றிலும் வித்தியாசமானா கேரக்டர் , குருசோமசுந்தரம் எப்பா சாமி நீங்க தானா ஜோக்கர் ல வந்தவரு ? ஜிகர்தண்டாவுல kill & laugh சொல்லி கொடுத்தவரு ? என்ன ஒரு வித்தியாசம் படத்துக்கு படம் ஆள் அடையாளம்  அப்படியே மாறி வாராரு , ரஹமான் மானத்துக்கு பயந்து வர பணக்கார கதாபாத்திரத்தை நல்லா பண்ணியிருக்காரு .

இந்த படத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னனா , ரொம்ப சினிமாதனம் இல்லமால் இயற்கையான விஷயங்கள் படத்தில் இருக்கு , அப்படியே யாரும் காட்டாத தொழில்களை காட்டியிருக்காரு , அதாவது ஒரு கிரெடிட் கார்டு கலெக்ஷன் சென்டர் காட்டுவது , குறிப்பா அந்த சுற்றுசூழல் , அவங்க phone  பேசுவது , சாப்பிடுற இடம் , பெண்கள் பழகி கொள்ளுவது , ஜொள்ளு வழியும் customer கிட்ட பேசுவது , குறிப்பா பூஜா தேவரிய அணியும் ஆடை , அதை பார்க்கும் போதே அவங்களோட சூழல் சொல்லாமல் சொல்லுவது செம்ம , பிறகு நாசர் செய்யும் கண்ணாடி தொழில் எனக்கு தெரிஞ்சு அந்த தொழில் செய்யவது மாதிரி நம்ம தமிழ் சினிமாவுல காட்டியது இல்ல , 

படத்தோட ஹீரோ விதார்த்தும் டைரக்டர் மணிகண்டனும் தான் , பொதுவா டைரக்டர் மனசுல இருப்பது படமா ப்ரதிபலிப்பதில்  கேமராமேனக்கு முக்கியமான பங்கு இருக்கு , அதுவே கேமராமேனே டைரக்டர்ஆக இருந்தா மனுஷன் பின்னியெடுத்துட்டாரு ,  விதார்த் ஒரு வித்தியாசமான கண் குறையுள்ளவராக வாராரு, விதார்த் அந்த குறை உள்ளவராக நடிப்பதும் , அதை நமக்கு அப்படியே உணர வச்ச கேமராமேனும் டைரக்டரும் ஆகிய மணிகண்டனுக்கு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்.குறிப்பா விதார்த் பைக் ஓட்டும் போது , ஐயோ எங்க அவருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று எண்ணம் வரா மாதிரி நடிச்சி இருக்காரு .

படத்தோட மைனஸ்ன்னு நான் நினைத்தது படம் கொஞ்சம் நிதானமாக போவது  , மேலும் அந்த குற்றவாளி யாருன்னு ஆரம்பித்திலேயே  யூகிக்க முடிஞ்சது எனக்கு  , மற்றவர்களுக்கு எப்படின்னு தெரியல .

மொத்தத்தில் குற்றமே தண்டனை , படத்தில் பெரிதாக கண்டுபிடிக்க எந்த குற்றமும் இல்லை பார்ப்பதால் நமக்கு எந்த தண்டனையும் இல்லை .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்


ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

Bayam Oru Payanam - பயம் ஒரு பயணம்

அட போங்கப்பா இது மீண்டும் ஒரு காதல் கதை, சாரி அது இந்த வாரம் ரிலீஸ் ஆனா வேற படம் , இது நம்ம தமிழ் சினிமாவுல வந்து இருக்கும் மீண்டும் ஒரு பேய் கதை ,மாசத்துக்கு ஒரு பேய் படம் வருவது ஒரு வழக்கமா போச்சி ,இதுல ஒரு சந்தோஷமான ஒரு விஷயம் என்னனா ? இது காமெடி கலந்த பேய் படம் இல்ல , நிச்சயமா திரைக்கதை பயணம் கொஞ்சம் பயம் கொடுத்து தான் பயணிக்கிறது , ஆனால் கதை வழக்கமான பழிவாங்கும் பேய் கதை தான் ,  ரெண்டு மணி நேரம் படத்துல ஒன்றரை மணி நேரம் பயம் முறுத்தும் காட்சிகளாக தான் படம் போகுது கடைசி 30 நிமிஷம் தான் அது எல்லாம் ஏன் நடக்குதுன்னு கதைக்குள்ள போகுது படம் , ஆனால் அந்த காட்சியின் காரணங்கள் கதையோட தொடர்புடையதுன்னு காட்டும் போது சரின்னு சொல்ல தோணுது .

படம் முழுவதும் பயம் கொடுக்கும் காட்சிகள் டைரக்டர் யோசிச்சி யோசிச்சி வச்சி இருக்கார் , ஒரு கட்டத்துல அட போதும்பா பயமுறுத்தியது, ஏன் பேய் பழிவாங்குதுன்னு கதையை சொல்லுங்கப்பான்னு கேட்க தோணுது , பாத்ரூம் தண்ணீர் குழாயிலே தண்ணி தானா வரும் காட்சி நம்ம தமிழ் சினிமாவுல பேய் படத்துல எழுதப்படாத ஒரு விதி , அது இதுல வச்சி இருக்கார் டைரக்டர் , இதுபோல பேய் படத்துக்கு வேண்டிய அனைத்து காட்சியமைப்பும் இருக்கு ,

படத்தில ஹீரோ பரத் ரெட்டி பயணிக்கும் காட்சிகள் நல்லா எடுத்து இருக்காரு , ஆனால் அதை தவிர ஹீரோவுக்கு பிளாஷ் பேக் காதல் கதை எல்லாம் ரொம்ப நாடகத்தனமா இருக்கு  , விகாஷாவின் பிளாஷ் பேக் கதையில் வரும் IT கம்பெனி நண்பர்களாக நடிப்பவர்கள் , அதில் வரும் சரக்கு பாட்டு எல்லாம் ரொம்ப செயற்க்கையா இருக்கு ,

படத்தின் பெரிய பிளஸ் கேமரா & Bgm  ரொம்ப பிரெஷ் feel கொடுத்து இருக்காரு அந்த டீ எஸ்டேட் , மலை இடங்கள் எல்லாம் பார்க்கும் போதும் சரி  , அதே நேரத்தில அந்த பங்களாவுல வரும் காட்சிகளும் அதற்க்கு சரியாக எடிட் பண்ண தாஸ்க்கும் ஒரு கை தட்டு தரலாம், இசை y.r.prasad அளவா இரைச்சல் இல்லாமல் சரியாக தந்து இருக்காரு.

மொத்தத்தில் பயம் ஒரு பயணம் கொஞ்சம் சுமாரான பயணம் தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

Dharmadurai - தர்மதுரை

இது நமக்கு பழக்கப்பட்ட சாதாரண கதையுள்ள படம் தான் ,ஆனால் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனசுல பதிவது போல, இயக்குனர் வடிவமைச்சிருக்காரு ,காட்சி அமைப்புகளும் எளிமையா ரசிக்கிறா மாதிரி இருக்கு,  அதே போல அந்த கதாபாத்திரங்களும் நல்லாவே நடிச்சிருக்காங்க, இது தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ், சோறு தான் பிரதானமாக நினைக்கும் மாப்பிளை அவர் முழிக்கிற முழியாகட்டும் சரி , எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவே  தனக்கு டிரஸ் இல்லைன்னு கவலைப்படுற தம்பி ,ஓ உங்க பேரு எவிடென்ஸ் இல்லையா என்று கேட்க்கும் டிரைவர் , அப்படின்னு சின்ன சின்ன கேரக்டர் கூட மனசுல பதிவது மிகப்பெரிய பிளஸ் .

விஜய்சேதுபதி நடிப்புல மனுஷன் பிண்ணி எடுக்குறாரு , அவரு ஆரம்பத்தில் தண்ணிய போட்டுக்கிட்டு,அம்மாகிட்ட , அண்ணன்கிட்ட , underwearஓட, அலப்பரை  பண்ணுவது, கஞ்சா கருப்பு கூட கலாட்டா பண்ணுவது , நக்கலா இங்கிலீஷ் பேசுவது , சாவு வீட்டுல ஆட்டம் போடுவது,ஐஸ்வர்யா கூட காதல் பண்ணுவது , பின்பு சோகக்காட்சியில் அழுவதை  விட , அம்மா சொல்லுக்காக கோபத்தை  கட்டுப்படுத்துவதுன்னு சகலமும் அள்ளிட்டாரு ,

தமன்னா, ஸ்ருஷ்டி , ஐஸ்வர்யா ராஜேஷ்ன்னு மூன்று ஹீரோயின் இருந்தாலும் ,  ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணாக வந்து வாழ்ந்துட்டாங்க , கொஞ்சநேரம் வந்தாலும் , செம்மயா பண்ணிட்டாங்க , சாரி அண்ணா கூப்பிட்டதுக்கு, மாமான்னு கூப்பிடுறேன்னு சொல்லும் போது அவ்வளவ்வு அழகா இருக்காங்க , அப்படியே அம்மாவாக வரும் ராதிகாவும் தான் , அவங்களும் அமைதியான அம்மாவாக , தன்னோட பையனுக்கு எதுவும் செய்யமுடியலையே ன்னு வருத்தப்படுவதும் சூப்பர்.

படம் முதல் பாதி கொஞ்சம் பொறுமையா போகுது , இரண்டாவது பாதி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையால் தப்பியது , படத்தில் எந்த ஒரு காதாபாத்திரமும் வில்லனாக சித்தரிக்கவில்லை , சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை காட்டி இருக்காரு டைரக்டர் சீனுராமசாமி ,பாடல்களை விட bgm ல் நல்லா பண்ணியிருக்காரு யுவன்  ,

எனக்கு படம் பார்க்கும் போது , வாரணம் ஆயிரம் , ஆட்டோகிராப் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த கிராமத்து கதை போல எனக்கு தோணுச்சி .காதல் தோல்வியால் தன்னை சீரழித்து கொள்ளும் விஜய்சேதுபதி பார்க்கும் போது வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்திச்சி , ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட் , இதில் அம்மா செண்டிமெண்ட் , மூணு ஹீரோயின் வந்தாலே நம்மக்கு ஆட்டோகிராப் தான் தோணுது , ஆட்டோகிராப் சினேகா மாதிரி தமன்னா வருவாங்க நினைத்தேன் , ஆனால் அவங்க,  நான் ஹீரோயின் தான் அதனாலா ஹீரோ கூட தான் சேர்வேன்ன்னு சேர்ந்துக்கிறாங்க .நல்லவேளை படத்தை சோகமா முடிச்சிடுவாங்க பதறும் போது , அமைதியா நல்லபடியா முடிச்சிட்டாரு சீனுராமசாமி .

மொத்தத்தில் தர்மதுரை ஒரு அளவிற்கு தர்மம் தலைகாக்கும் துரையாக வந்துஇருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 




திங்கள், 15 ஆகஸ்ட், 2016

Joker - ஜோக்கர்

படம் பார்த்து கதை சொல்லு  என்பது போல , மேலே போட்டு இருக்கும் படம் பார்த்தா என்ன தோணுது ? அதை பற்றிய கதை தான் இந்த படம் ஜோக்கர் . ஒரு அரசியல் என்பது அரசியல் பண்ணுவது , ஊழல் நடப்பது எது வரைக்கும் ? என்பது மேலே போட்டு இருக்கும் படத்தை பார்த்தாலே தெரியும் .

படத்தின் மிகப்பெரிய பிளஸ் எளிமையான , உண்மையான காட்சி அமைப்பு தான் , படம் ஆரம்பிக்கும் போதே துடைப்பம் விற்க்கும் வியாபாரி ஊருக்குள்ளே நுழையும்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை காட்டும் போது , அந்த கிராமம் , இந்த படத்தின் கதை ஓட்டம் என்னவென்று சொல்லாமல் சொல்லுகிறது, ரொம்ப சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களில் கவனித்து காட்சி அமைத்து இருக்கிறார் டைரக்டர் , ஹீரோயின் படுத்தபடுக்கயில் காட்டும் போது , படுத்தப்படுக்கையால் வரும் தோல் மாற்றம், முதல் நாளுக்கும் , பின்பு காட்டும் நாட்களுக்கும் வித்தியாசம் காட்டுவதிலும் சரி , முதல் நாள் வீட்டுக்குள்ளே தூக்கி கொண்டு வரும் போது அங்கே சிறுநீர் பையை காட்டுவதும் சரி , இப்படி பல சின்ன சின்ன விஷயங்களை உன்னித்து செய்து இருக்கிறார் டைரக்டர் .

மக்களின் குடியரசு தலைவர் என்று சொல்லிக்கிட்டு ஒரு ஜோக்கராக படம் full ahaa வருகிறார் ஹீரோ குரு சோமசுந்தரம் , அவர் ஒரு ஒரு முறையும் தலை மூடியை  அம்முக்கி விட்டு வருவதும் , ஒரு கண்ணில் காந்தி , ஒரு கண்ணில் பகத் சிங் என்று தன்னோட நிலைப்பாடையும் சொல்வது, அங்கே ஹீரோ தெரியவில்லை அந்த இயக்குனர் தான் தெரிகிறார்,இன்றைய அரசியல் ,மற்றும் சமூக அவலங்களை அங்கங்கே , வசனங்களால் சொல்லுவது சூப்பர் .

ஹீரோ கூட வரும் இசை மற்றும்  பொன்னூஞ்சல் கதாபாத்திரமும் ,அவர் செய்யும் செயலுக்கு , ஒரு உண்மையான குடியரசு தலைவருக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் தருவார்களோ , அது போலவே அவருக்கு தருவது செம்ம ,

இசையமைப்பு சியான் ரோல்டன் , நடிப்பில் எப்படி ஒரு வெகுளித்தனத்தை ஹீரோ காட்டுகிறார் அது போலவே அந்த வெகுளித்தனத்தை இசையில் நம்மக்கு உணர்த்தி இருக்கிறார் அவர் , குறிப்பாக படம் ஆரம்பத்தில் அந்த கிராமம் ,ஹீரோ intro காட்டும் காட்சிகள் நிச்சயமாக அருமைன்னு சொல்லலாம் .

நிச்சயமாக இந்த படத்தை பார்ப்பதற்கு பொறுமை தேவை , முதல் பாதியில் ஜோக்கராக அவர் பண்ணும் ஆர்ப்பாட்டங்கள் ரசிக்கும்படி இருந்தாலும் , இரண்டாவுது பாதியில் கொஞ்சம் தோய்வு இருக்க தான் செய்கிறது.எவ்வளவோ மசாலா படங்களில் தோய்வு காட்சிகள் பார்த்து பொறுத்த  நமக்கு , இத்தகைய சமூக படத்தில் இருக்கும் தோய்வு ஒரு மைனஸாக தெரியாது .

மொத்தத்தில் ஜோக்கர் வசூலில் விருதுகள் வாங்காவிட்டாலும் , உண்மையான பல விருதுகள் வாங்குவது உறுதி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

Wagah-வாகா

பொதுவா நான் விமர்சனத்தில் கதை சொல்லமாட்டேன் , இருந்தாலும் இந்த படம் வெளியானது இந்த சுதந்திர தினம் சமயம் என்பதினால் சொல்லுகிறேன் , ஹீரோ பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டு கஷ்டப்பட்டு எப்படி இந்தியா வருகிறார் என்பது தான் இந்த தேசப்பற்று மிக்க திரைப்படத்தின் கதை , அவர் ஏன் ? எப்படி? பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டாரு என்பதை சொல்ல மாட்டேன் , அவர் இந்தியாவுக்கு திரும்பவும் வருவாரா மாட்டாரா ? தன் காதலியை காப்பற்றுவாரா ? என்று பரபரப்பாங்க மக்கள் மனதில் வந்தேமாத்திரம், ஜெய்ஹிந்த் என்று சொல்லிக்கொண்டே படம்  முடியும் போது தேசப்பற்று மனதில் உணர்ச்சி பொங்க வெளியே வரவேண்டும் என்றும் நினைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார் டைரக்டர் , ஆனால் அப்படி எந்த ஒரு உணர்ச்சி பொங்கலும் , புளியோதரையும் , மனசில் வரவில்லை நல்லா தயிர் சாதம் சாப்பிட்டு தூக்கம் வாரா மாதிரி தான் இருந்துச்சி இந்த படம்,  இப்படி நெகடிவ்வா படத்தை பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது , ஏன் என்றால் ஒரு படம் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று ,சமூக வலைத்தளங்களை வைத்து கொண்டு அசால்ட்டாக எழுதிவிட்டு செல்கிறோம் , நல்ல படங்களை பாராட்டி எழுதும் போது வரவேற்க்கும் படைப்பாளிகள் , இத்தகைய விமர்சனங்களையும் ஏற்று கொள்ளவேண்டும் .

முதலில் இந்த படத்தின் தலைப்பை எடுத்ததிலே தவறு , வாகா என்பது  இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் , ஆனால் இந்த படம் நடப்பதோ காஷ்மீர் எல்லையில் , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத பெயர் ? என்னதான் பாகிஸ்தான் நமக்கு பகை நாடாக இருந்தாலும் , இந்த படத்தில் பாகிஸ்தானை பற்றி மிகவும் கொடூரமாக காட்டுவதில் பயன் என்ன? இந்த மாதிரி படம் எடுக்கும் போது எந்த அளவுக்கு அங்கே நடக்கும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து எடுக்க வேண்டாமா ? அவர் காட்டி இருக்கும் பல காட்சிகள் கற்பனையா ? கற்பனை என்றால் எதற்கு பாகிஸ்தான் பெயரை அப்பட்டமாக காட்ட வேண்டும் ? சென்ஸார் போர்டு எப்படி வெளியே விட்டது ?ஒரு ஆடு பாகிஸ்தான் எல்லையில் நுழைந்தால் கூட பாகிஸ்தான் ராணுவம் கொன்று விடுவாங்க அந்த அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று காட்டுவது எந்த அளவுக்கு உண்மை ? நிஜமாகவே இது போல் அங்கு நடக்கிறதா ?அல்ல பாகிஸ்தான் ராணுவம் அந்த அளவுக்கு உண்மையான கொடூரவாதிகளா ?ஒரு தீவிரவாதியை காட்டி இருந்தால் கூட பரவாயில்லை , ஒரு நாட்டின் ராணுவத்தை இப்படி சித்திரப்பது சரியா? , அப்போ நீ பாகிஸ்தான் ஆதரவாளரா என்று கேட்காதீங்க , இந்த மாதிரி ஒரு sensitiveஆனா படங்கள் எடுக்கும் போது கற்பனையாக இருந்தாலும் கொஞ்சம் நம்பும்படியாக இருக்க வேண்டாமா ? கதையை பற்றி பார்த்தாச்சு இந்த படத்தின் நடிகர்களை பற்றியும் , கதாபாத்திரமும் பற்றி பார்ப்போம் .

விக்ரம் பிரபு BSF armyல் வேலை செய்கிறார் அவரோட உயரம் , உடல் வாகு சரியாக அமைந்து இருக்கு, ஆனால் இந்த மாதிரி கதை உள்ள படங்கள் 1990ல் விஜயகாந்த், அர்ஜுன் எல்லாம் பண்ணிட்டாங்க அப்பறம் எப்படி இந்த படத்தை தேர்ந்து எடுத்தார் என்று தான் தெரியல , ஹீரோயின் ரன்யா ராவ் காஷ்மீர் பொண்ணுக்கு சரியாய் பொருந்துறாங்க  , அவங்க நிறம் , உடை எல்லாம் காஷ்மீர் பொண்ணு மாதிரியே இருக்காங்க , ஆனால் பல இடங்களில் அவங்க தலையில் முக்காடு போட்டுக்கிட்டு , தலை மூடியை கொஞ்சம் முகத்துக்கு முன்னாடி விட்டு வரும் போது , ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வரும் ஹன்சிகாவை பார்த்தா மாதிரி இருந்துச்சி , சத்ரியன் கொஞ்சம் நேரம் வந்துட்டு போயிட்டாரு, சத்ரியன் உயரத்துக்கு அவர் ஆர்மியில் சேர முடியலன்னு சொன்ன டைரக்டர் , அப்பறம் எப்படி கருணாஸ் உயரத்துக்கு ஆர்மியில் டைரக்டர் சேர்த்தாரு ? ஒரு வேலை அவரு    MLA என்பதால் அவரை டைரக்டர் ஆர்மியில் சேர்த்துட்டாரு போல .வில்லன் நரசிம்மா படத்தில் ரகுவரன் ஒரு கோட் போட்டுக்கிட்டு வருவாரு, அது மாதிரியே வந்து இருக்காரு.

இமான் opening பாடல் ஆணியே புடுங்க வேண்டாம் டா ன்னு பாட்டில் படத்தை பற்றி மெசேஜ் சொல்லிட்டாரு , படம் இறுதி காட்சியில் வந்தே மாதரம் ,வந்தே மாதரம்ன்னு Bgm ல் இரைச்சலாக இசை போட்டுட்டாரு ,

இந்த படம் ஒரு காதல் காவியமாகவும் இல்ல , தேசப்பற்று ஓவியமாகவும் இல்ல

மொத்தத்தில் இது வாகா இல்ல  வீக்கா .

இப்படிக்கு
சினி கிறுக்கன்