Friday, 29 January 2016

Irudhi Suttru - இறுதிச்சுற்று

நம்ம கோலிவுடில் பேய் காலம் , சிரிப்பு காலம்  போல இப்போ ஸ்போர்ட்ஸ் காலம் வருது, ஈட்டி(விளையாட்டுன்னு சொல்லிட்டு படம் எங்கயோ போச்சி),பூலோகம் (விளையாட்டு மட்டும் இல்ல விளையாட்டு வச்சி இந்த மீடியா எப்படி விளையாடுதுன்னு சொன்னாங்க), ஆனா இது விளையாட்டை மட்டும் மையம் படுத்தி, அதுக்குள்ள இருக்கிற உள்ளுக்குள்ள நடக்கும் தனி நபர் காழ்புணர்ச்சி  மற்றும் அந்த பாக்சிங்ன்னு சொல்லிட்டு சும்மா பறந்து பறந்து சண்டை போடாம ஒழுங்கா அந்த விளையாட்டை எப்படி இருக்குமோ அப்படியே காட்டி இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று.

ஒரு விளையாட்டு படத்தில் எப்படி கதை இருக்கும்? முற்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கெட்ட பெயர் எடுத்த ஒரு கோச்  ஒரு ஹீரோவை வச்சி அவர் நல்ல பெயர் எடுக்கும் படமா தான் பொதுவா இருக்கும், அதே போல தான் இதுலயும் இருக்கு ஆனா இங்க ஹீரோவிற்கு பதிலா ஹீரோயின், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் இது.
எப்படியும் ஹீரோயின் தான் ஜெயிபாங்க தெரிஞ்சாலும், கடைசி வரைக்கும் பரபரப்பா கொடுத்து இருக்காங்க டைரக்டர் 

படத்தில் நல்ல விஷயங்கள் என்ன என்னனா ?
1. படம் எங்கேயும் கதையை விட்டு விலகி போகல சும்மா டூயட் தேவை இல்லாத காமெடின்னு 
2. படம் தேவைக்கு ஏற்ப சின்னதா ரெண்டு மணி நேரத்தில் கொடுத்து இருக்காங்க 
3.முக்கியமா அந்த சண்டை காட்சிகள் சும்மா சினிமா தனமா மற்ற படங்கள் மாதிரி சும்மா யெக்கி யெக்கி அடிக்காம ஒழுங்கா குத்து சண்டை எப்படி இருக்குமோ அப்படி கொடுத்து இருக்காங்க, அதுக்கு முக்கிய காரணம் அந்த ஹீரோயின் ஒரு நிஜமான குத்துசண்டை வீராங்கனை 
மேல சொன்ன விஷயங்களுக்காகவே இந்த படம் பார்க்கலாம்.

ரொம்ப நாளா சின்ன திரையில் ஓரகடம் விளம்பிரத்தில் தான் மாதவனை 
பார்த்து வந்தோம், இப்போ ரொம்ப நாள் கழிச்சி பெரிய திரையில் மாதவனை இந்த இறுதிச்சுற்றில் பார்க்கிறோம்.ரம்யா கிருஷ்ணன் சொல்லுறா மாதிரி சொல்லனும்னா வயசானாலும் அழகும் ஸ்டைலும் அவரை விட்டு போகாத மாதிரியே வறாரு, அவர் வரும் போது இன்னைக்கும் நிறைய பொண்ணுங்க தியேட்டரில் கத்துறாங்க 

ஹீரோயின் ரிதிக்கா அவங்க அக்காவா வர மும்தாஜ் நிஜ குத்து சண்டை வீராங்கனை  சரியாய் இருக்காங்க, சென்னையில் இருக்கும் போது ரிதிக்கா மாதவன் கிட்ட பண்ணுகிற ரௌடி தனம், நக்கல்  எல்லாம் செம்ம கெத்தா இருக்கு.நாசர், ராதாரவி அளவா வந்துட்டு அளவா பண்ணிட்டு போறாங்க, ராதாரவி இந்த படத்தில அவ்வளவ்வு ஸ்கோப் இல்லயே தோணுது, ஆனா climaxல்  நாசர் கிட்ட சொல்லுற ஒரு வசனம், அவர் இந்த கதைக்கு யார்ன்னு தெரியும் போது செம்ம காமெடி.

சந்தோஷ் நாராயணன் இசையில்  - வா மச்சானே பாட்டும் , கட்டிக்க போறேன் பாட்டும் சூப்பர், ஆனா அந்த பாடல்கள் இதுக்கு முன்னாடி வந்த அவர் பாட்டின் சாயல்கள் தெரியுது, முக்கியமா கட்டிக்க போறேன் பாட்டில் வரும் வயலின் இசை pizza படத்தில் climaxல்   வரும் bgm போல இருக்கு.
pizza இசை கேட்டு பாருங்க 2.34 minutes ல இருந்து 3.20 வரைக்கும் (please click below link - pizza climax)
Pizza climax - 2.34 minute to 3.20


இறுதிச்சுற்று ஹே சண்டைகாரா பாட்டு கேட்டு பாருங்க 
(please click below link - iruthisuttru song)
hey sandakara song from Iruthisuttru

இது ரெண்டும் கேட்டு பாருங்க எனக்கு என்னமோ அது ஒரே மாதிரி தெரியுது , முக்கியமா அந்த வயலின் இசை  கரெக்ட்டுன்னா கமெண்ட் பண்ணுங்க 

மொத்தத்தில் இறுதிச்சுற்று ரசிகர்களுக்கு குருதிச்சுற்று போல இல்லாமல் உறுதி சுற்றாக இருக்கு 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Sunday, 17 January 2016

Kathakali - கதகளி

கதகளி, கதகளி கதகளின்னு விஷால் ஆடும் கதகளி, விஷாலுக்கு இந்த மாதிரி ஒரு gangester/பழி வாங்கும்   கதைகள் ஒன்றும் புதுசு இல்ல, ஆனா இயக்குனர் பாண்டிராஜ்க்கு  இது  புதுசு ..பாண்டிராஜோட  பசங்க, பசங்க-2 , தவிர மற்ற படங்கள் எனக்கு அந்த அளவுக்கு உடன்பாடில்லை, ஆனா இந்த கதகளி பண்டிராஜ் நல்லாவே கதகளி ஆடி இருக்காரு.

படம் வழக்கம் போலவே ஆரம்பம் ஆகுது, பிறகு ஒரு opening  பாட்டு,கொஞ்சம் காமெடி, காதல்ன்னு சாதாரனமா போகுது, பிறகு கதைக்குள்ள படம் போன பிறகு, படம் எங்கேயும் track மாறாம பயணிக்கிறது, அந்த கதையோட mood மாறாம, ஒரு speed breaker போல தேவை இல்லாத பாடலோ , காமெடியோ , காட்சிகளோ சேர்க்கமா போவது ரொம்ப பிளஸ் பாயிண்ட் . பொதுவா தமிழ் படங்களில் மதுரை, நெல்லை, சென்னைன்னு  கதை நடக்கும், ஆனா கொஞ்சம் வித்தியாசமா கடலுர்ன்னு கதை நடக்கிறது நல்ல இருக்கு,

விஷால் தேவை இல்லாத பஞ்ச், சத்தமா சும்மான்னா கத்தி, கத்தி, பேசாம அடக்கமா நடிச்சி இருக்காரு,அதுக்காகவே ஒரு salute, கேத்ரின் தெரேசா அழகா மட்டும் இருக்காங்க ஆனா நடிப்புக்கோ ,நடிக்கிறதுக்கு வாய்ப்போ ரொம்ப கம்மி, கருணாஸ், விஷாலோட  friendsah  வரவங்க அளவா கதைக்கு  ஏற்ப  நடிச்சிருக்காங்க, தம்பா கேரக்டர்ல  வருபவர், அந்த போலீஸ்காரர் அப்படின்னு எல்லோரும்  perfect, நீங்க யோசிக்கிலாம் என்னடா இவன் எந்த படத்தலையும் இந்த அளவுக்கு ஒரு ஒரு கேரக்டர்க்கும் detailலா  சொன்னதில்லையேன்னு, ஆமா இந்த படத்தில் பண்டிராஜ் ஒரு ஒரு கேரக்டர் தெளிவா அளவா கொடுத்து இருக்காரு.

இசை:  ஹிப் ஹாப் தமிழா
படத்தில் ரெண்டே ரெண்டு பாட்டு தான் , ரெண்டு பாட்டும் ஏற்கனவே கேட்டா மாதிரி இருக்கு, ஆனா bgm நல்லா பண்ணி இருக்காரு, படம் கதகளின்னு பேரு வைத்தாலோ என்னமோ, சண்ட மேளம் படம் fullah கொடுத்து இருக்காரு,ஆனா நிச்சயமா  ஹிப் ஹாப் தமிழா rocking,குறிப்பா ஒரு விசில் கொடுத்தா மாதிரி வருகிற Bgm அருமை.

கேமரா :  பாலசுப்ரமணியம் & எடிட்டிங் : பிரதீப்
மழை, கடலூர் நோக்கி  இரவு பயணம் அப்படின்னு நல்லா feel பண்ண வச்சி இருக்காரு, எடிட்டிங் படத்தோட வேகத்துக்கு நல்லாவே ஈடு கொடுத்து இருக்காரு, அட என்னடா கேமரா & எடிட்டிங் எல்லாம் சொல்லுறியே அவ்வளவு பெரிய ஆளான்னு கேக்காதிங்க, நமக்கு அந்த அளவுக்கு technicalah , தெரியாது ஏதோ சொல்லணும் தோனுச்சி சொல்லிட்டேன்.

மொத்தத்தில் : கதகளி நம்பி போங்க பாண்டிராஜோட கதகளி  ஆடிட்டு வாங்க
இந்த பொங்கலுக்கு கொஞ்சம் நல்லா பொங்கியது இந்த கதகளி தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Saturday, 16 January 2016

Rajini Murugan - ரஜினி முருகன்


சிவகர்த்திகேயன் & பொன்ராம் கூட்டணியில் இது  இரண்டாவுது படம், நிச்சயமா இந்த படம் எப்படி இருக்கும்ன்னு நான் நினைச்சி போனேனோ அப்படியே தான் இருந்திச்சி,அபப்டி என்ன தான் இருந்துச்சி ? இருங்க சொல்லுறேன்.

கதை ? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில என்ன கதை இருந்திச்சி ? ஒன்றும் இல்லை, அதே  போல தான் இதுலயும் ஒன்றும் இல்லை, மெகா சீரியல் போல அப்படியே போயிட்டு இருக்கு, சும்மா குமுதம் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் சேர்த்து தந்து இருக்காங்க.அங்க அங்க அது இது எது சிரிச்சா போச்சு காமெடி பார்கிறா மாதிரி இருக்கு, அங்க அங்க situation ஏற்றார் போல எதாவுது சினிமா பாட்டா போட்டு காமெடி என்கிற  பேருல பண்ணி இருக்காங்க, ஒரு சில இடங்கள் தவிர வேற எதுவும் சொல்லிக்கிறா  போல இல்ல ,  அதுவும் இரண்டாவுது பாதி போகுது போகுது போய்கிட்டே இருக்கு, எப்போடா முடியும்ன்னு ஒரு எண்ணம் தோணுது 

சிவகர்த்திகேயன்  & சூரி அவங்க நடிப்பையும், எடுக்கும் காதபாதிரங்களும் நிச்சயமா மாற்றி ஆகவே வேண்டும், சும்மா ஒரே மாதரியான நடிப்பை தான் இரண்டு பேரும் தாரங்க, சிவா இன்னும் நிறைய mature கதாபாத்திரம் எடுத்தா நல்லா இருக்கும், சும்மான்னா குழந்தைகளுக்கு பிடிச்ச ஹீரோன்னு அதே மாதிரியே பண்ணா அவருக்கு audience limited ah தான் இருப்பாங்க.அவர் VJவா இருக்கும் போது என்ன மாதிரி கவுன்ட்டர் கொடுப்பாரோ அதே மாதிரி எல்லா படத்தலையும் காமெடி என்கிற பேருல ஒரே மாதிரி கொடுப்பது ரொம்ப திகட்டுது.

சூரி சார் ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க இங்கிலீஷ் பேசினா அது நல்ல காமெடியா இருக்கும் அது மக்கள் ரசிப்பாங்கனு நினைச்சி அதே பண்ணி வெறுப்பு ஏற்றாதிங்க, தயவு செய்து நீங்க படத்தில் இங்கிலீஷ் பேசுறதை நிறுத்துங்க.

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ரொம்ப அழகா இருக்காங்க, இது என்ன மாயம் படத்தில் கொஞ்சம் மாடர்னா வரும் போதும் சரி, இதுல ஹோம்லியா  வரும் போதும் சரி இரண்டுமே செட் ஆகுது, ஹீரோயின் அப்பாவா வரவர் யார்ன்னு தெரியல ஆனால் ஒரு ரஜினி ரசிகரா அவர் அப்போ அப்போ முடிய தள்ளிவிட்டு வருவது நல்லா இருக்கு.

ராஜ்கிரண், சத்யராஜ் இவங்களுக்கு எல்லாம் அப்பா, தாத்தா கதாபாத்திரம் பண்ணறதுன்னா அல்வா சாப்பிடுகிறா மாதிரி,அதை அளவா அழகா பண்ணிருக்காரு ராஜ்கிரண்.

மொத்தத்தில் இந்த படம் யாருக்குன்னா சிவகார்த்திகேயன் fans ஆகிய காலேஜ் கேர்ள்ஸ் , வீட்டுல இருக்கும் அம்மா , குழந்தைகளுக்கு மட்டும்.

மொத்தத்தில் எனக்கு ரஜினி முருகன்  வெறும் முருகன் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Thursday, 14 January 2016

Gethu - கெத்து

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் 

படம் ஆரம்பிக்கும் போது பாராட்ட வேண்டிய விஷயம் என்னன்னா, சத்யராஜ் பெயரை முதலில் போட்டு தான் அப்புறம் உதயநிதி பேரு வருது , அப்படியே படத்துக்குள்ள கதை போன்னா openingல  பயங்கரமான ஒரு shoot out நடக்குது , அடடே படம் செம்மடா ..அப்படியே படம் தமிழ்நாடு குமுளிக்கு வருது, குமுளின்னு சொல்லி படம் எடுத்து இருக்காங்க ஆனா உண்மையாக எங்க எடுத்தாங்க தெரில, ரொம்ப அழகா காட்டி இருக்காங்க, அடடே படம் செம்ம கெத்தா போகும் போல அப்படின்னு நினைச்சா ! ! !

அப்புறம் வழக்கமான பாதையில் படம் போகுது, ஹீரோ, ஹீரோயீன் intro, அப்படியே அவங்களுக்கு ஒரு பாட்டு, எமி ஜாக்சன் இன்னொரு ஜெனிலியா போல ட்ரை பண்ணி இருக்காங்க, படத்தின் முதல் 30-45 நிமிஷம் எமி வாரங்க பிறகு எங்க போய்ட்டாங்கன்னு தெரியாது,  காமெடி பெருசா வொர்க் அவுட் ஆகல, ஏன்னா உதயநிதிக்கு கூட நம்ம சந்தானம் இந்த படத்தில் இல்ல 

விக்ராந்த் முதல் காட்சியில் காட்டும் போது மக்கள்கிட்ட நல்ல வரவேற்ப்பு , அவரும் ஒரு இன்டர்நேஷனல் தீவிரவாதி கேரக்டர் ஆகவே மாறிட்டாரு,  விக்ராந்துக்கு இந்த படம் நிச்சயமா ஒரு பிரேக் தரும் போல நினைச்சேன், ஆனா படம் முதல் காட்சிக்கு அப்புறம் கடைசியா கொஞ்ச நேரம் guest ரோல் போல வந்துட்டு போறாரு

சத்யராஜ் வழக்கம் போல ஒரு சிறந்த அப்பாவா வந்துட்டாரு, நிச்சயமா இவருக்கு சினிமாவில் சிறந்த அப்பான்னு ஒரு விருது தரலாம், நிறைய படங்களில் அவர் அப்பாவா வந்து நல்ல ஸ்கோர் பண்ணிட்டு போகுறாரு.

படத்தில் ஒரு பார்ல சண்டை வருது அதுல நல்ல மாஸா உதயநிதிய காட்டி இருக்காங்க, stunt மாஸ்டர் அந்த சண்டைய நல்லா பண்ணி இருக்காரு.அந்த பார் சண்டைல ஒரு பாட்டு bgm போல வருது நல்லா இருக்கு,  ஆனா lightah என்னை அறிந்தால் தீம் போல எனக்கு தோணுது

தில்லு முள்ளு பண்ணல பாட்டு எதுக்கு ஏன் வருதுன்னு தெரியல ஆனா கேட்பதற்கு காமெடியா இருக்கு,  அதே நேரத்துல பழய  ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுகள் ஏதோ கேட்டா மாதிரியே  இருக்கு, இந்த படத்துக்கு மியூசிக் டைரக்டர் ஹாரிஸ்ah இல்ல தேவாவான்னு தெரியல, முட்டை பஜ்ஜின்னு ஒரு பாட்டு கேட்கவே கொஞ்சம் கொடுமையா தான் இருக்கு.

படத்தோட கதை என்ன ?
                  விக்ராந்துக்கு ஒரு assignment அதாவுது ஒரு இந்தியன் விஞானியை கொல்லனும், அந்த விஞானி பெயர் தெரியுமா ? A .K .Abdul Kamal , அடபாவிங்களா அப்துல் கலாமை , அப்துல் கமால்ன்னு மாத்திட்டாங்க, அவர் எழுதிய  அக்னி சிறகுகள் என்கிற புத்தகத்தை, அக்னி இறகுகள்ன்னு மாத்திட்டாங்க, கதையில் இப்படி லாஜிக் இல்லா மேஜிக் பண்ணி இருக்காங்க.

படம் பார்க்கும் போதே சில பேரு msg பண்ணாங்க அதாவுது கெத்து கொஞ்சம் வெத்துன்னு, but நம்ம அப்படியே சொல்ல கூடாது  

இதோ வருது நம்ம பாணி முடிவுரை 

படத்தோட trailer பார்த்தா செம்ம கெத்து,
அழகா இருக்க ஹீரயின்க்கும்,

இடங்களை  அழகா காட்டின காமேராமேனுக்கும்  ஒரு பூங்கொத்து 
படத்தோட கதைய கேட்டா காதுல ஒரு குத்து 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Tharai Thappattai - தாரை தப்பட்டை

அனைவருக்கும் சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் .

பாலாவின் தாரை தப்பட்டை இசைஞானியின் 1000வது படம் இப்படின்னு ரொம்ப எதிர்பார்போடு வந்து இருக்கு,

டைரக்டர் பாலா, அமீர், மிஸ்கின் இவங்க படங்களில் எல்லாம் பார்த்த ஒரே மாதிரி ஹீரோக்கள் தான் இருப்பாங்க எப்படின்னா அவங்க நடை,பழக்கவழக்கங்கள், வித்தியாசமான body language, ஒரு மூர்க்க தனமான கதாபாத்திரங்களா இருக்கும், அதுவும் பாலாவின் படம்னா அது கொஞ்சம் நிறைய இருக்கும்

சேது-விக்ரம் , நந்தா-சூர்யா , பிதாமகன் - விக்ரம் , நான் கடவுள் - ஆர்யா  அவன் இவன் - ஆர்யா & விஷால், அதிலும் ஆர்யா கொஞ்சம் extraவா, பண்ணி இருப்பாரு, அதே போல் heroineகளும் ரொம்ப விசித்திர விசித்திரமா behavior பண்ணுவாங்க, கோவமான காட்சிகள், அழுகை காட்சிகள் எல்லாம் நல்லா நடிக்க வைப்பார்,முதல் தடவையா பிதாமகனில் சூர்யா, லைலா பார்க்கும் போது  நல்லா இருந்துச்சி, ஆனா ஏன் ஒரே மாதிரி அனைத்து படங்களிலும் அதே மாதிரி பண்ணுகிறாரு?இதுலயும் அதே மாதிரி ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் இருக்கு , யதார்த்தமான கதை எடுக்கிற பாலா ஏன் செயற்கைதனமா தன்னோட கதாபத்திரங்களை நடிக்க வைக்கிறாரு?

கதை என்ன இந்த படத்தில் ? சமிபத்தில் வந்த பாலாவின் படங்களில் கதைன்னு பார்த்தா பொதுவா அது ஒரு சமூகத்தின் வாழ்வாதாரங்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் இன்பதுன்பங்கள் தான் காட்டுவாரு அதே போல தான்  இதிலும் காட்டிருக்காரு, என்ன இதில் அவர் எடுத்திருக்கும் ஆயுதும் கரக ஆட்ட குழு, அதே போல் சன்னாசி கரகாட்டகுழுன்னு பெயர் பலகை காட்டி இருக்காங்க, கரகாட்டகார்கள்  போடும் ஆடைகள் கூட போட்டு இருக்காங்க ஆனா ஒரு தடவை கூட தலையில் கரகம் வச்சி ஆடவே இல்லை, நம்மக்கு தெரிஞ்சது எல்லாம் கரகாட்டம்ன்னா கரகம் வச்சி ஆடனும் இது எந்த வகைன்னு இதை பற்றி தெரிஞ்சவங்க யாராவுது சொன்னால் நல்லா இருக்கும்.ஏன்னா பாலா இந்த மாதிரி விஷயங்களில் தப்பு செய்ய மாட்டார்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, படத்தோட கதை ஓட்டம் எதிர் பார்த்தா மாதிரி தான் போகுது பெருசா புதுசா எதுவும் சொல்லவில்லை 

வில்லனா வருகிற சுரேஷ் நிஜ வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர்ன்னு சொல்லுறாங்க , பார்கிறதுக்கு கொஞ்சம் சீரியல் நடிகர் போஸ் வெங்கட் மாதிரி இருக்காரு.ஜோடிno -1 டைட்டில் வின்னர்ன்னு , அமுதவானன், ஆனந்தி ரெண்டு பேருக்கும் படத்தில் ஆடும் வாய்ப்பு கொடுத்துட்டாரு.

படத்தோட முக்கியமான ஹீரோ இசைஞானி இளையராஜா தான்,  படத்தோட trailerல் வரும் Bgmகாகவே இந்த படம் பார்க்கணும் தோனுச்சி, அது எப்போ வரும்ன்னு காத்திருந்தேன், படத்தோட கிளைமாக்ஸ்ல் தான் அது வந்துச்சு, சத்தியமா  இசைஞானி அந்த இடத்தில் இசையில் ருத்ரதாண்டவம் பண்ணிட்டாரு, புல்லரிக்க வச்சிட்டார், படத்தில் எந்த இடத்திலும் அழுகையோ, சிரிப்போ எந்த ஒரு உணர்வும் எந்த ஒரு நடிகராலும், நடிகையாலும், ஏன் இயக்குநராலும் கொண்டு வர முடியாததை, கிளைமாக்ஸ்ல் இசைஞானி அந்த கோவம், ஆக்ரோஷம் , வெறி, என்று அனைத்தையும் அந்த இடத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர வச்சிட்டாரு.

மொத்தத்தில் தாரை தப்பட்டை வழக்கமான பாலாவின் பட்டறை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


Saturday, 2 January 2016

Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்

அனைவருக்கும் சினி கிறுக்கனின் புத்தாண்டு நல்வாழ்த்துகள், இந்த வருஷத்தோட முதல் பதிவு இந்த மாலை நேரத்து மயக்கம்,

நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் செல்வராகவனால் மட்டுமே தர முடியும், இந்த மாதிரி ஒரு கதை அந்த அளவுக்கு ஒரு தைரியாமா எடுக்க இவரை  தவிர வேற யாராலும் முடியாது

படத்தோட ஹீரோ பார்த்தா அட காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்கேன்னு தோணும், அவர் பேசும் போது அட இது 7G ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா  மாதிரி இருக்கே தோணும் ஆனா படத்தோட கதை  அது மாதிரி இருக்காது 

படத்தோட கதை?,  கல்யாணம் பண்ணி முதல் இரவுக்கு காத்திருக்கும் ஒரு பையன், ஒருத்தர் மேல நல்ல understanding வந்து தானா நடக்கணும் நினைக்கிற ஹீரோயின், இப்படி ரெண்டு துருவமா இருபவர்களின் வாழ்கை தான் இந்த படம், ஹோட்டலுக்கு கார்ல போற சீன், ஹோட்டலில் ஆர்டர் எடுக்குற சீன எல்லாம் செல்வாவின் முத்திரை தான்.அது மாதிரி ரெண்டு பேரும்  பெட் ரூமில்  சண்டை போடுற சீன, அந்த ஹீரோயின் கோவபடுறது அந்த பெண்ணோட point of viewல இருந்து அவளோட உணர்வுகள் எல்லாம் காட்டுவதில் ஹீரோயின் நல்லா பண்ணி இருக்காங்க.

படத்துல டைட்டிலில் டைரக்டர் கீதாஞ்சலி செல்வராகவன்னு போட்டு இருக்கு ஆனா படம் fullah செல்வராகவனை பார்த்தா மாதிரி இருக்கு, பல காட்சிகள் அவரோட முத்திரை தெரியுது.

நிச்சயமா இந்த படத்தை பார்க்க ஒரு பொறுமை வேண்டும், மற்ற entertainment காதல் படம் மாதிரி நினைத்து  போக வேண்டாம், அதே மாதிரி குடும்பத்தோட பார்க்க கூடிய படமும் அல்ல,ஏன்னா படத்தோட காட்சிகள் அப்படி இருக்கு, அதே மாதிரி   ஓ காதல் கண்மணி படம் பார்த்தவங்க நிறைய பேரு அந்த படத்தை இது ஒரு காதல் படமா கேட்டவங்களும்  சத்தியமா இந்த படத்தை போயிட்டு பார்க்காதீங்க 

மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் commercial படம் பார்பவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் தான்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்