Thursday, 24 August 2017

Vivegam - விவேகம்

வணக்கம் தல தளபதி ரசிகர்களே , சினிகிறுக்கனாகிய நான் தளபதி ரசிகனோ அல்ல, தல ரசிகனோ அல்ல , நான் ஒரு சினிமா ரசிகன் ( இது எதுக்குன்னா வெளியே நான் அடிவாங்காம இருக்க தான் ), 

தல ரசிகர்கள் சொல்லுவது போல படம் செம்ம , ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு , அப்படி எல்லாம்   சொல்ல முடியாது , இந்த படம் முழுக்க வெளிநாட்டில் ஷூட் பண்ணி இருக்காங்க , வெள்ளைகாரங்க நிறைய பேரு நடிச்சி இருக்காங்க , அப்புறம் கிராபிக்ஸ் , அந்த ஆபீஸ் லொகேஷன் எல்லாம் வேற மாதிரி காட்டினதால , பசங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு சொல்லிட்டாங்க போல , பில்லா கூட முழுக்க வெளிநாட்டில் எடுத்தாலும் costume ,way of  மேக்கிங் எல்லாம் பார்க்கும் போது செம்ம ஸ்டைலிஷ் ஆகா இருந்துச்சி , அது மாதிரி எல்லாம் இந்த படத்தில்  எதிர்பார்க்காதீங்க , அதே போல  அஜித்தை பிடிக்காதவங்க சொல்லுறா மாதிரி படம் செம்ம மொக்கையா இருக்கு  அப்படி எல்லாம் சொல்ல முடியாது . படம் எங்கேயும் bore அடிக்கவில்லை , அதே நேரத்தில் படத்தில் எதாவுது புதுசா சொல்லி இருக்காங்களான்னு பார்த்தா , அது இல்லவே இல்லை .

எனக்கு படத்தில் பிடித்தது அஜித் , அவர் அழகு , சண்டை காட்சிகள், சில மாஸ் சீன்கள்  , அதுக்கு அனிருத் கொடுத்து இருக்கும் மாஸ் மியூசிக்,  படத்தில் plusகளை விட minusகள் அதிகம் தான் எனக்கு ஞாபகம் வருது 

முதலில் அஜித் மற்றும் அவர் friends எந்த நாட்டை சேர்ந்தவங்க ? எந்த நாட்டுக்காக வேலை செய்யறாங்க , அப்புறம் அந்த bomb , இந்த bomb , இவனை பிடிக்கணும் , அவனை பிடிக்கணும் , gps , tracker , timeline tracker , இவன் lover  , அவன் lover , இந்த இடம் , அந்த இடம்,  பல Europe நாடுகளின் பேர்களை சொல்லுறாங்க ,  இங்க இருக்கான் அங்க இருக்கான் வேகம் வேகமாக சொல்லுராங்க ஒன்னும் புரியல,ஒன்னு சொல்லி அது புரிவதற்குள்ள அடுத்து போகுது , பக்கத்துல இருக்கவன் கிட்ட என்னப்பா அவர்  சொன்னார்ன்னு கேட்க வேண்டியதாச்சி , முதலிலே புரிஞ்சது என்னான்னா அஜித் நல்லவர் , விவேக் ஓபராய் கெட்டவர் , அபப்டியே முதல் பாதியில் அக்ஷ்ராவை தேடுறாங்க , ரெண்டாவது பாதியில் விவேக் ஓபராய் , தல சண்டை போடுறாங்க அவ்ளோதான் எனக்கு புரிஞ்சது .

அண்ணா 100 ஹரி படம் பார்த்தா மாதிரி இருந்துச்சின்னு,  எனக்கு தெரிஞ்ச தம்பி ஒருத்தன் காலையில நாலு மணி காட்சி பார்த்துட்டு சொன்னா , ஆமாங்க படம் அப்படி தான் இருக்கு அந்தளவுக்கு வேகமாக  எடிட்டிங்  பண்ணிருக்காங்க  அதே நேரத்தில படம் வேகமா தெரிய வேண்டும்னு சும்மா கேமெராவை ஆட்டி ஆட்டி எடுத்து இருக்காங்க 

சிவா சார் டேம்ல குத்திக்கற சீன் யோசிச்ச அளவுக்கு, கதையில குதிக்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்கிறீங்க ,வீரம் , வேதாளம் இப்போ விவேகம் எதுலையும் சொல்லிக்கிறா மாதிரி கதையே இல்லையே , பழைய அரைச்ச மாவை அரைக்கிறீங்க , அதுவும் 90களில் வரும் படம் போல இருக்கு உங்க கதையும் , வசனமும் , கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரென்ட்க்கு வாங்க , technology , graphics அது இதுன்னு லேட்டஸ்டாக கொடுத்தா போதாது , கதையும் வசனமும் கொடுக்கணும் .

வீரத்திலும், வேதாளத்திலும் கதை இல்லாட்டியும் , நாலு மாஸ் சீன் நச்ன்னு இருந்துச்சி , அந்த நாளும் மனசுல  பதிவது மாதிரி இருந்துச்சி , இதில் பல மாஸ் சீன் இருந்தாலும் , மனசில் நிற்க மறுக்கிறது, அது ஏன் தெரியல . முதல் பாலம் காட்சி செம்ம மாஸ் ஆனால் அவர் விழுந்த பின்பு எனக்கு சிரிப்பு வந்துடுச்சி , அப்புறம் அஜித்  ஓப்ராயின்  காரை ஷூட் பண்ணும் சீன் செம்ம , அதுக்கு அப்புறம் காஜல் அகர்வாலை வீட்டில் இருந்து காப்பாற்றும் காட்சி செம்ம மாஸ் ஆனால் அதுவும் கொஞ்சம் ஓவர் டோஸ் ,போதும்ன்னு சொல்ல தோணுச்சு 

அக்ஷ்ரா படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணி இருக்காங்கன்னு சொல்லலாம் , ஆனா அவங்க வந்த சீன் நல்லா இருந்துச்சி , அதே போல அவங்க hacker , எதை வேண்டுமானாலும் பண்ணுவாங்க காட்டுவது ஓவர் , குறிப்பா பைக் சேசிங்ல என்ன என்னமோ பண்ணறாங்க , டைரக்டர் சிவா சார் கொஞ்சம் லாஜிக் யோசிச்சி சீன் வைங்க . அக்ஷ்ரா காதில் ஒரு கம்மல் போட்டு இருப்பாங்க அதை பார்த்தா கம்பளி பூச்சி ஏதோ உக்கார்ந்து இருக்கா போலவே இருந்துச்சி .

காஜல் அகர்வால் எல்லா மாஸ் படத்தில் வரும் ஹீரோயின் போல அவ்ளோதான் , சர்வைவா பாட்டு முடிச்ச உடனே அவங்களுக்கு டூயட் வருவது கொஞ்சம் ஓவர் , அதுவும் படத்தின் கடைசியில் காஜல் அகர்வால் தமிழ் பாட்டு பாட அஜித் ஓபராய்யை அடிக்கிறார் , அது ஓவரிலும் ஓவர் , தூள் படத்தில் சிங்கம் போல பரவை முனியம்மா பாடுவாங்களே அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சி . 

விவேக் ஓபராய் பற்றி என்ன சொல்லணும் ? படம் full ah வெறும் build மட்டும் தருகிறார் , அவருக்கு இல்ல , அஜித்துக்கு விவேக் ஓபராய் தருகிறார் அவ்ளோதான் .

அஜித் , அனிருத்  இல்லைனா இந்த படம்  ஒன்னும் இல்லை , அஜித் மரம் எல்லாம் தூக்கி படத்தை தூக்கிவைக்கிறார்ன்னா , அஜித்தின் மாஸை அனிருத் தூக்கி நிறுத்துகிறார் , நிச்சயமா வேற ஹீரோ இந்த படத்தை செய்து இருந்தால் முதல் ஷோ முடிஞ்ச உடனே இது அட்டு flop சொல்லி இருப்பாங்க , அஜித்தினால் இந்த படம் கொஞ்சம் தப்பியது , 

தலைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் , தல தயவு செய்து இந்த டைரக்டர் கூட சேராதீங்க , நல்ல கதை உள்ள படமா எடுத்து பண்ணுங்க .

மொத்தத்தில்  விவேகம்  காட்சியில் மட்டும்  வேகம் , கதையில் இல்லை விவேகம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Sunday, 13 August 2017

Podhuvaga En Manasu Thangam - பொதுவாக என் மனசு தங்கம்


பொதுவாக என் மனசு தங்கம் உதயநிதி ஸ்டாலின் படம்ன்னு வந்துட்டா பங்கம் , என்று பட்சாதாபம் பார்க்காம நம்ம ஆள் தொடர்ந்து நம்மளை மொக்க பண்ணறதே வேலையா வச்சி இருப்பார்  போல.

ஆனா ஒன்னுங்க இதுக்கு முன்னாடி வந்த சரவணன் இருக்க பயமேன் படத்தை பார்த்த பின்பும் மனசாட்சியை  எடுத்து வச்சிட்டு , ஒரு மன தைரியத்தோடு இந்த படத்துக்கு போனேன் , அதுக்கு என்னை நானே பாராட்டிக்கணும் , போன படத்துக்கு இந்த படம் பரவாயில்லை தான். இருந்தாலும் இந்த படம் ஒன்னும் பெருசா சொல்லிக்கிறா மாதிரி புதுசா ஒன்னும் கிடையாது .

ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை , குடும்பத்து கதை , குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம்ன்னு எல்லோரும் சொல்லவைக்கணும் நினைச்சி எடுத்து இருக்கும் படம் , ஆனால் அறுந்த பழய காத்தாடி போல இருக்கு இந்த படத்தின் கதை 

ஆனா சில காட்சிகள் எதுக்கு ஏன் வச்சாங்களே தெரியல ? ஒட்டு போடுவது எந்த ஊருலயா நடக்குது இப்படி ? அதுவும் இன்டெர்வல்க்கு  ஊரை விட்டு போன ஹீரோ , இன்டெர்வல் முடிச்சி படம் ஆரம்பிச்ச உடனே திரும்ப வந்துட்டாரு 

ஹீரோயின் வழக்கம் போல மக்கு கேரக்டர் , ஆனா இது செம்ம மக்கு கேரக்டர் அதாவது +2 முடிக்காத ஹீரோயின் , அதுவும் fail ஆகியவங்களாம் முடியல ,,சூரி எப்போ இப்படி மொக்கை காமெடி நிறுத்தப்போறாரு தெரியல , பாட்டு ஏதோ வந்து வச்சி இருக்காங்க  

படத்தில ஒரு ஆறுதல் பார்த்திபன் தான் , மனுஷன் அவருக்கு அந்த நக்கல் கேரக்டர் சரியாக பொருந்தி இருக்கு, அவருக்கும் உதயநிதிக்கு உள்ள புரிதல் நல்லா பண்ணிருக்காங்க , அவர் போடும் திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் லாஜிக் ஏற்றுக்கொள்ள முடியல , அதுவும் அவர் பொண்ணை மொட்டை அடிச்சி காது குத்தவிடலயாம் , அதனால அந்த ஊரை அழிக்கணும் நினைக்கிறாரு , இப்படி ஒரு கதை அடித்தளமே எப்படி இப்படி யோசிக்க முடிஞ்சது ? ஆனா ஒன்னு உதயநிதி ஒரு முடிவு பண்ணிதான் இந்த படம் தேர்ந்து எடுத்து இருப்பார் போல , படத்தின் டைட்டில்  பொதுவாக என் மனசு தங்கம் , ஊருக்கு நல்லது செய்யும் கேரக்டர் , படத்தில் வரும் election ல் chair சின்னம் வேற , ஏதோ ஒன்றுக்கு அடித்தளம் தான் இந்த படம் போல .

இசை இமான்  , இவர் பத்து படம் பண்ணா ஒரு படம் இலவசம் போல பண்ணி இருக்கார் ,  சரவணன் இருக்க பயமேன் படத்தில் வரும் லாலா கடை சாந்தி  பாட்டு ஹிட் அதுபோலவே  ஒன்னு போட்டு தாங்க உதயநிதி சொல்லி இருப்பர் போல  படத்தில் வரும் முதல் பாட்டு அதன் சாயல் தெரியுது .

நல்லவேளை online booking பண்ணவில்லை  முப்பது ரூபா மிச்சம் ஆச்சின்னு சந்தோசப்பட்டேன்  , ஆனா தியேட்டர்குள்ள போனா தான் தெரியுது ,தியேட்டர்ல மொத்தமே 20 பேரு தான் இருந்தாங்க அதுவும்  palazooவில் இருக்கும் பெரிய screen-9ல், அப்பறம் தான் தோணுச்சு பத்து ரூபா டிக்கெட் வாங்கிட்டு பின்னாடி போயிட்டு உட்கர்ந்து இருக்குலமேன்னு தோணுது , தியேட்டர்ல பார்க்க கூட்டம் இல்லையே என்னோட விமர்சனம் பார்க்க ஆள் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் தான் , இருந்தாலும் எழுதி இருக்கேன் .

இந்த தியேட்டர்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்படி ஆள் இல்லனா ஷோ cancel பண்ணிடுங்க , இந்த காலியான தியேட்டர்ல் இந்த ஜோடிகள் தொல்லை தாங்களடா  , கடுப்பு ஏத்துறாங்க மை லார்ட் , இதை இங்கே இந்த சினிகிறுக்கன் வன்மையாக கண்டித்து பதிவு செய்கிறேன் .

மொத்தத்தில் பொதுவாக என் மனசு தங்கம் , பொதுவாக மக்கள் மனசில் தங்குமா ?

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Saturday, 12 August 2017

Tharamani - தரமணி

வணக்கம் இந்த விமர்சனம் என்னோட வழக்கமான  பாணியிலிருந்து சற்று விலகி இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் 
இது ராமின் படைப்பு .

என்னோட விமர்சனம் சிலர் புரியவில்லை என்று சொல்வதுண்டு, 
ஆமாம்,  சில நேரங்களில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது  மாதிரி இருக்கும்  ,
 நீங்கள் மொட்டை என்று  நினைத்தால் மொட்டை 
 முழங்கால் என்று நினைத்தால் முழங்கால் ,
 இப்படி தான் இந்த படமும் இருக்கிறது , 
 இதுவே ஒரு தலைப்பாய் ராம் சொல்லியே இந்த படம் ஆரம்பமாகிறது 

இந்த படம் பார்க்கும் முன் சில குறிப்புகள் 
இது நிச்சியமாக சென்னை மாவட்டம் தாண்டி மற்ற நகரங்களுக்கு இது அந்நியமானது , மேலும் ஒரு பொழுதுபோக்கிற்க்காங்க பார்ப்பவர்களுக்கும் இந்த படம் உகந்தது அல்ல 

இது நிச்சயமாக break the rules படம், ஆம் முற்றிலும் வித்தியாசமான தமிழ் சினிமாவில் பார்க்காத  காட்சி அமைப்புகள் முதலிலிருந்து இருக்கிறது , காட்சியமைப்பு மட்டும் அல்ல , சொல்லவந்த விஷயங்கள் , ஒரு சில விஷயங்கள் அல்ல , பல விஷயங்கள் ஒன்றுரோடு ஒன்று பின்னிப்பிணைந்து சில இடங்களில் புரிந்தும் , சில இடங்களில் பாமரனுக்கு புரியாமலும் சொல்லி இருக்கார் ராம்.

படத்தில் எனக்கு பிடித்த  காட்சிகள் பல, அதில் சில 
ஆண்ட்ரியாவும் வசந்தும்  சந்திக்கும் முதல் காட்சி 
அதை தொடர்ந்து படத்தில் வளரும் காட்சிகளும் , வளரும் அவர்களின் உறவுகளும்

அளவான ரசிக்கும்படியான வசந்த் மற்றும் ஆண்ட்ரியாவின்  பிளாஷ் பேக், குறிப்பாக ஆண்டிரியாவும் அவரோட முதல் கணவரும் ஹோட்டலில் பேசும் ஷாட்ஸ் அருமை .

இயல்பான உண்னமயான தரமணி பகுதியும் ,
அங்கே இருக்கும்  மென்பொருள்  துறையை மென்மையாக தொட்ட விதமும் அருமை .
மென்பொருளில் அல்லது BPO வில்  வேலை செய்பவன் என்றாலே tie கட்டுபவன் போலவே காட்டுபவன் நம் தமிழ் சினிமா , ஆனால் இதில் அபப்டி காட்டவில்லை என்பது ஒரு மகிழ்ச்சி , ஆனால் எப்பொழுதும் பெண்ணை குட்டை பாவாடையில் காட்டுவது கொஞ்சம் அபத்தம் 

குட்டைப்பாவாடை அணிந்தால் , குடித்தால் , புகைப்பிடித்தால் அவள் எதற்கும் தயாரானவள் என்பது பொய், அப்படி பெண்களை பார்க்க கூடாது என்பது போல்  காட்டிய ராமுக்கு பாராட்டு என்றால் , dog is dog , அது நல்ல .dog என்ன கெட்ட  dog என்ன அதுக்கு போடவேண்டியது போட்டால் போதும் என்ற வசனத்தில்  அனைத்து ஆண்களை தவறாக காட்டியதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் .

கிரிக்கெட் போல நடுநடுவே வரும் ராமின் வர்ணனை அதில் இருக்கும் அரசியலும் , சமூகத்தின் முகத்தையும் , மேலும் சில தகவல்களையும் , கிண்டலாக ஆணித்தரமாக கூறுவது பெருமை, அதே போல்  ராம் நடுவே பேசும் வசனங்கள் முடிக்கும் முன்பே மக்களின் கைதட்டும் , சில இடங்களில் யுவனின் இசையும்  வருவதால் , அவர் சொல்லவரும் முழு கருத்தும் கேட்டகாமல் அடங்கிவிடுகிறது . வெகுதினம் கழித்து யுவனின் bgm குறிப்பிட்ட மாறுதலை இந்த படத்திற்கு தந்து இருக்கு .

வசந்த் , ஆண்ட்ரியா , அஞ்சலி , அழகம் பெருமாள் , மற்றும் இரண்டாவது பாதியில் வரும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பில் அப்படியே அச்சுஅசலாக ராமின் முகமே தெரிகிறது , மேலும் மழையில் நினைந்த  நாயும் , குட்டி காக்கையும் , அந்த காக்கை சொட்டும் நீரை குடிப்பதை பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் .

பல இடங்களில் இயற்கையக காட்டினாலும் , சில இடங்களில் கொஞ்சம் அதீத இயற்கையாக காட்டிய காட்சிகள் கொஞ்சம் சலிப்பு.தான் .

மொத்தத்தில் தரமணி  மீண்டும் ஒரு முறை தர(ராம்)மான படைப்பு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .
Friday, 11 August 2017

VIP2 - வேலையில்லா பட்டதாரி 2

வணக்கம் ரொம்ப நாள் கழித்து ஒரு விமர்சனம் , சிரிங்க சீரியஸ் ஆகா எடுத்துக்காதீங்க , அட ஆமாங்க யாரோ ஒருவர் ஏதோ ஒரு படம் விமர்சனம் செய்ய அதில் ஒருவரை பற்றி சொல்ல ரசிகர்கள் சண்டை பிச்சிக்கிச்சி, ஆனால் அதை பற்றி கவலை இல்ல , எவ்வளவு கழுவி ஊத்தினாலும் நாங்கள் விமர்சனம் செய்ய தான் போகிறோம் 

தனுஷ்,  தான் இந்திய அளவில் கொஞ்சம் பாப்புலர் ஆகா  இருக்கும்  ஹீரோ அதனால நாம் இந்த படத்தை தெலுங்கு , ஹிந்தின்னு பட்டய கிளப்பண்ணும் தோணிச்சி போல ,  over nightல all over இந்தியாவில் பாப்புலர் ஆகணும் நினைச்சிட்டார் போல , அதனால கஜோல் வில்லனாக போட்டு இருக்கார், சரி  அது எந்த அளவுக்கு செட் ஆகி இருக்கு ? சுத்தமா கஜோலுக்கு அது  செட் ஆகவில்லை 

படத்தோட முதல் பகுதி ஏன் போகுது , எதுக்கு போகுது எங்க போகுது யாருக்கும் தெரியல ஏதோ எங்கேயோ போகுது , சும்மா slow motion ல கஜோல் ஒரு பக்கம் கண்ணாடி போட்டுக்கிட்டு நடக்குறாங்க , தனுஷ் அவர் கிட்ட சிகெரெட் பத்தவச்சி சவால் விட்டு நடக்கிறார் , ஆனால் அந்த சவால் அடடா செம்மயா போக போகுது நினைச்சா சுத்தமா அதுவும் இல்ல , அட ஆமாங்க பல பெரிய ஹீரோ படத்தில அப்படி தான் நடக்கும் ஏன் இதுவே வேலையில்லா பட்டதாரி1 ல கூட இப்படி தான் ஆனால் அது செம்ம மாஸாக இருக்கும் , அதுக்கு அனிருத் மியூசிக் ஒரு பக்கபலமாக இருந்துச்சி ஆனால் இதில் அப்படி இல்ல அந்த மாஸ் மிஸ்ஸிங் 

சரி இரண்டாவது பாதியில் படையப்பா ரஜினி , ரம்யாகிருஷ்ணன் போல போட்டி போட போறாங்கன்னு பார்த்தா , சும்மா போகுது என்ன சொல்லறதுன்னு தெரியல கொஞ்சம் கொட்டாவி வரவைக்கற அளவுக்கு ஆக்கிட்டாங்க , ஆனா ஒன்னுங்க வேலையில்லா பட்டதாரி 1 க்கும் வேலையில்லா பட்டதாரி 2க்கும் continuity சரியாக maintain பண்ணி இருக்காங்க , அந்த வீடு , பக்கத்துக்கு வீடு , தனுஷுக்கு ஜோடி, அவரோட அப்பா , விவேக் , விவேக்கோட அஸ்ஸிடன்ட் , அந்த ஜெயபுஷ்பம் , தனுஷோட  தம்பி , அவ்வளவ்வு ஏன் அவர் தம்பி வச்சி இருக்கும் estilo கார் , அந்த காரோட கலர் கூட சரியாக maintain பண்ணி இருக்காங்க, அப்புறம் அந்த மொட்டை மாடி டென்ட் கூட போட்டு இருக்காங்க  , ஆனா தனுஷோட  முதலாளி பெண்ணாக வரும் சுரபியை மட்டும் மாற்றி விட்டாங்க , என்ன இந்த சீரியலில் போடுறா மாதிரி இவருக்கு பதிலாக இவர்ன்னு போட்டு இருக்கலாம் .அதே போல அந்த மொட்டை மாடியில் ஒரு தப்பு பண்ணிட்டாங்க வேலையில்லா பட்டதாரி1 எடுத்தது வேற மொட்டை மாடி இதில்  வேற மாடியில் எடுத்து இருப்பாங்க போல , இந்த படத்தில் மொத்தம் 5 டாடா ஸ்கை டிஷ் இருக்கு , அதுவும் அவங்க இருக்கிறது தனி வீடு அப்பார்ட்மெண்ட்ஸ் இல்ல .

அமலாபால் படத்தில் வைக்கணும் வச்சி இருக்காங்க , அவங்க ரெண்டுபேருக்கும் வரும் சண்டை , காமெடி என்கிற பேரில் வச்சி இருக்கும் காட்சிகள் எதுவும் செட் ஆகவில்லை பயங்கரமான மொக்கை சண்டை ரொம்ப செயற்க்கையாக இருந்துச்சி  , சமுத்திரக்கனி நல்லவேளை அவர் வந்து மெசேஜ் சொல்லவில்லை , விவேக் சுமார்ரகம் தான் 

கஜோல் சும்மா ஹிந்தி மார்க்கெட் கவர் பண்ணவேண்டும் என்பதிற்காக போட்டது தான் மற்றபடி எந்த ஒரு பயனும் இல்ல , அவங்க கேரக்டர் அந்த அளவுக்கு strong ஆகா இல்லங்க , எப்பொழுதும் வில்லன் கேரக்டர் strong ஆகா இருந்தா தான் ஹீரோ கேரக்டர் நல்லா இருக்கும்ன்னு சொல்லுவாங்க , அது இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங் 

தனுஷ் இந்த படத்தில் செய்த தவறுகள் என்னன்னு பார்த்தா வேலையில்லா பட்டதாரி 2  பெயர் வச்சது முதல் தப்பு , மேலும் அந்த படத்தை reference வச்சி continuity ஆகா எடுத்தது பெரிய தப்பு , மேலும் அந்த படத்தில் தீம் மியூசிக் ஹிட் அதே போல அந்த மியூசிக் வச்சி ஏதாவது செய்தால்  மக்கள் ஏற்றுப்பாக நினைத்தது மிக பெரிய தவறு , வேலையில்லா பட்டதாரி1 ஒரு சாதாரணமா கதை தான் ஆனால் சுவாரசியமான திரைக்கதை , அருமையான பாடல்கள் , இயற்கையான காமெடி எல்லாம் இருந்துச்சி , அவை அனைத்தும் இதில் இல்லை , வேலையில்லா பட்டதாரி1 எதிர்பார்த்து சென்றாலும் சரி, எதுவும் எதிர்பார்க்காமல் போனாலும் சரி இந்த படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் இல்ல நிறைய ஏமாற்றம் தான் .


இந்த second part எடுத்தாலே இப்படி தான் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யும் , எல்லாமே பாகுபலி போல second part ஹிட் கொடுக்க முடியுமா ? வேலையில்லா பட்டதாரி 2 க்கு இந்த நிலைமைன்னா அப்போ AAA பார்ட் -2 வருமே அந்த நிலைமை யோசிச்சி பாருங்க .

பவர் பாண்டி போல படத்தை இயக்கிய தனுஷ் இந்த படம் எடுத்தது கொஞ்சம்  ஏமாற்றம் தான் , சரி  சௌந்தர்யா எப்படி இந்த படத்துக்குள்ள வந்தாங்க ? இதோ ஒரு சின்ன கற்பனை 

சௌந்தர்யா : என்னங்க வேலையில்லா பட்டதாரி2 கதை வச்சி இருக்கீங்க கேள்விப்பட்டேன் , நான் வேண்டும்ன்னா டைரக்ட் பண்ணட்டுமா ?

தனுஷ் : ஏன் உங்கப்பாவை வச்சி டைரக்ட் பண்ணி நாசம் பண்ணது போதாதுன்னு என்னையும் நாசம் பண்ண பாக்குறியா ?

ரஜினி : என்னமா அங்க சத்தம் ?

தனுஷ் : சும்மா பேசிகிட்டு இருக்கோம் மாமா ,

மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி 2 arrears வச்ச பட்டதாரி தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்