Saturday, 25 February 2017

Kanavu Variyam - கனவு வாரியம்

கனவு வாரியம் இந்த  படம் வெளிவருவதற்கு முன்னாடியே இந்த படத்தோட போஸ்டர்ஸ் , சின்ன சின்ன கட் அவுட்ல பல விருதுகள் வாங்கின படம்ன்னு போட்டு இருந்துச்சி அதுவே இந்த படம் பார்ப்பதற்கு எனக்கு தூண்டியது , சரி இந்த படம் என்ன என்ன விருது எல்லாம் வாங்கி இருக்கு ?
1.‘Platinum Remi’ award’ for best Theatrical Feature Film at 49th WorldFest-Houston, USA 
2. ‘Silver Remi Award’ for a song (‘STONE OR SAND’) featuring in the film at
49th WorldFest-Houston, USA
3. ‘Audience Favorite movie’ at 49th WorldFest.-Houston, USA
4. ‘Special Jury Award’ from the National Science Film Festival, organized by the Govt. of India
5. Winner at 17th Bare Bones International Film & Music Festival, USA
6. Winner at Los Angeles Film & Script Festival, USA

அட இத்தனை award எல்லாம் வாங்கி இருக்கே அதுவும் படம் நம்ம ஊர் மின்சாரத்தை பற்றியது நிச்சயமா போயிட்டு பார்க்கணும் தோணுச்சு ,

நாம் பொதுவா இந்த மாதிரி அவார்டு படம் பார்க்க போகும் போது சில விஷயங்கள் எதிர்பார்க்கலாம் 
ஒன்னு படம் ரொம்ப சீரியஸ் மெசேஜ் சொல்லி கொஞ்சம் கூட commercial கலக்காமல் போக வாய்ப்பு உண்டு , அப்படி இல்லைன்னா படம் முழுக்க documentary போல போக வாய்ப்பு உண்டு , அதுவும் இல்லைனா காக்கா முட்டை போல messageம் கொஞ்சம் commercial கலந்தும் அனைத்து  தரப்பு மக்களையும் திருப்தி படுத்துறா மாதிரி இருக்கும்  ,அதுவும் இல்லையா படம் யாருக்கும் புரியாது ஆனா ஜூரிக்கு மட்டும் புரிஞ்சி award குடுப்பாங்க ,இந்த படம் பார்க்கும் போது இது எந்த மாதிரி வகையில் சேர்பதுன்னு தெரியல 

படத்தில் எடுத்த கதைக்களம் ஒரு நல்ல விஷயம் என்றாலும் அதை கொண்டு போயிட்டு மக்களுக்கு சேர்க்கும் விதத்தில் டைரக்டர் கொஞ்சம் தவறவிட்டுட்டார் , படம் ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் பண்ணி இருக்கார் , தமிழ்த்தாய் வாழ்த்துடன் படம் ஆரம்பிக்குது அப்படியே ஒரு திருக்குறள் கூட, அருமையான வித்தியாசமான ஆரம்பம் .வேற என்ன நல்ல விஷயம் என்னனா நம் நாட்டில் நடக்கும் பல உண்மையான பல விஷயங்கள் காட்டி இருக்காங்க , அதாவது எப்படி ஒரு அரசாங்க அதிகாரி அலட்சியமா இருக்காங்க , ஊர் மக்கள் எப்படி ஒரு வளரும் மனிதனை தூற்றுவாங்க ,மிக முக்கியமான ஒன்னு இயற்கை விவசாயத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் காட்டி இருக்காங்க ,  மேலும் சில இடங்களில் வசனங்கள் நல்லா இருக்கு ," வாத்தியார் comma வாக இருக்கணும் full ஸ்டாப் ஆகா இருக்க கூடாது ,அப்புறம் புத்தகம் படிக்கணும் புத்தகத்தோடு பங்களிப்பு பற்றி சொல்லி இருக்காங்க 

நான் மேலே சொன்ன நல்ல விஷயங்கள் படத்தில் இருந்தாலும் படத்தில் இவை அனைத்தும் சொல்ல வந்த விதம் அந்த அளவுக்கு ஆழமாக இல்லை முழுமையாகவும்  இல்லை ,ஏன்னா படம் அங்க அங்க தடம் மாறி தடம் மாறி போகுது, மேலும் நடிகர்கள் நடிப்பு அந்த உணர்வை மக்களுக்கு போய் சேர்க்க கஷ்டப்படுது , படம் எடுத்த விதமும் ரொம்ப நாடகத்தனமா இருக்கு , அதனால ஒரு குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல படம் பார்க்க ஒரு சலிப்பு ஏற்படுது .ஞானசம்பந்தம் , இளவரசு அவங்க பெரியவங்க என்று காட்ட அவங்க தலை முடியில் போட்டு இருக்கும் நிரை எல்லாம் ரொம்ப செயற்கையாக இருக்கு , அதை ஆரம்ப நிலையில் ஷார்ட் பிலிம் எடுக்குறவங்க  கூட நல்லா எடுத்து இருப்பாங்க .

பாவம் அருண் சிதம்பரம் இப்படி ஒரு கதையை எழுதிட்டு நடிக்க , தயாரிக்க யாரும் வரமாட்டாங்கன்னு அவரே எல்லாத்தையும் பண்ணிட்டாரு போல , ஒரு வேலை வேற யாராவுது நடிச்சி இருந்தா இந்த படம் இன்னும் கொஞ்சம் மெருகு ஏறி இருக்குமோ தோணுது , ஹீரோ , ஹீரோயின் காதல் படத்தில் ஒரு மிக பெரிய தடை , படத்தில் பாடலும் அவரே எழுதி இருக்கார் , எனக்கு அதில் பசங்கள் விளையாடும் விளையாட்டை பற்றி ஒரு பாட்டு வரும் அது நல்லா இருக்கு பாட்டை உருவாகின விதம் நல்லா இருந்திச்சி , ஆனால் எனக்கு பூ படத்தில்" ச்சு ச்சு மாரி " பாட்டு ஞாகபம் தான் வந்துச்சி .

மொத்தத்தில் கனவு வாரியம் பல அவார்டு வாங்கினாலும் கொஞ்சம் low voltage தான் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 24 February 2017

Yaman - எமன்

எப்போதும் ஒரு வித்தியாசமான படப்பெயரோடவும், வித்தியாசமான கதையோடும்  வரும் நம்ம விஜய் ஆண்டனி , இந்த படத்தில் எடுத்து இருக்கு கதைக்களம் அரசியல் , அதுவும் இப்போ இருக்கும் அரசியல் சூழ்நிலையில் இந்த படம் வெளிவந்து இருக்கு , அட அந்த அளவுக்கு நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ பெருசா பாதிக்கிறா மாதிரி இல்லங்க  ,  இருந்தாலும் அங்க அங்க lightaah  வசனங்கள் கை தட்ட வைக்குது .

படத்தில் ரொம்ப பெரிய surprise element , thrilling அது மாதிரி எதுவும் இல்ல , ஆனால் படம் ஒரு straight forward திரைக்கதை , இது ஒரு ஆடு புலி ஆட்டம் போல இருக்கும் பல ஆடுகளை வீழ்த்தி , ஒரு பெரிய புலியையும் , சிங்கத்தை விழ்த்துகிறார் நம்ம ஹீரோ ,

படத்தில் முதல் பாதி , ஒரு ஒரு கேரக்டர்களை கதைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக லிங்க் பண்ணி, தந்திரமாக கண்ணாமூச்சி ஆடி ஒரு ஒருத்தரையும் காலி பண்ணி முக்கியமான கேரக்டர்க்கு செக்மேட் வச்சி விறுவிறுப்பாங்க விஜய்ஆண்டனிக்கு மாஸ் வைத்து சுபமாக பல பாடி(body)  முடியுது , சாரி முதல் பாதி முடியுது . மீண்டும் இரண்டாவது பாதியில் ஹீரோயின்க்கு ஒரு கேரக்டர் லிங்க் வச்சி விஜய் ஆண்டனி அரசியல் ஆட்டம் ஆட படம் கொஞ்சம் தோஞ்சி தான் போகுது 

விஜய் ஆண்டனிக்கு மாஸ் ரொம்ப நல்லாவே வருது, குறிப்பா ஒரு கார் காட்சியில் துப்பாக்கி எப்படி ரிலீஸ் பண்ணுவது என்று  கேட்டுவிட்டு கார் கண்ணாடியை இப்போ மூடிக்கோங்க  சொல்லும் காட்சி செம்ம , அதே போல பார் fight மாஸ் அவருக்கு செட் ஆகுது ,பல காட்சிகளில் அப்படி கெத்தாக வருகிறார் ஆனால் எந்த அளவுக்கு ஆடியன்ஸ் மாஸ் ஹீரோவாக ஏற்றுப்பாங்கன்னு தெரியல , அவரே மியூசிக் டைரக்டர் அதனால அவர் வரும் மாஸ் சீனுக்கு மாஸ் மியூசிக் சில இடங்களில் நல்லா கொடுத்து இருக்கார் , ஆனால் பாட்டில் கோட்டையை விட்டுட்டார் , பாட்டு ஒன்னும் ரசிக்கிறா மாதிரி இல்ல.அவர் ஒரு பார் பாட்டில் ஆடும் ஆட்டம் ஜிமில் work out பண்ணுவது போலவே இருக்கு சார் டான்ஸ் ஆட கத்துக்கோங்க .அப்புறம் அந்த opening  பாட்டு சைத்தான் படம் போல இருக்கு , என் மேல கைவச்சா பாட்டு  கேக்குறது , வேட்டைக்காரன் படத்தில் ஏன் உச்சி மண்டையில ஸுரர்ன்ன்னது  பாட்டு போல இருக்கு , but stunt நல்லா இருக்கு , அது குறிப்பா ஜெயிக்குள்ள நடக்கும் சண்டை நல்லா இருந்துச்சி .

படத்தின் ஒரு ப்ளஸ் பாயிண்ட் என்னான்னா எல்லா கேரக்டர்க்கும் சரியா important கொடுத்து இருக்காங்க , சார்லி , தியாகராஜன் , மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் , இரண்டு லோக்கல் அரசியல் கைகள் , கவுன்சிலர் , இப்படி நிறைய கேரக்டர் இருக்கு , விஜய் ஆன்டனி கூட வரும் அடி ஆளுங்க ஒருத்தர் நல்லா இருக்காரு, தியாகராஜனும் , விஜய் ஆண்டனியும் மேடையில் பேசும் காட்சி அருமை , மொத்தத்தில் எமன் முதல் பாதி எமனாக இரண்டாவது பாதி சித்திரகுப்தனாக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Saturday, 18 February 2017

RUM - ரம்

ரம் இந்த வருஷத்தோட முதல் பேய் படம் , படம் ஆரம்பபம் ஒரு பெரிய திருடு நடக்குது அது நடத்தியவிதம் நிச்சயமா எதாவுது இங்கிலிஷ் படம் பார்த்து அது போல எடுத்து இருப்பாங்க நினைக்கிறேன் 

அப்புறம் ஒரு வீட்டுக்கு போறாங்க , அங்க இருக்க பேய் ஆட்டம் போடுது , பழிவாங்குது , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் இருக்கு , அப்புறம் அந்த பேய் சபதம் நிறைவேறுது அவளோதான் தான் படம் , அய்யயோ இது மெரினாவில் போட்ட சபதம் இல்லங்க , அதை பற்றி நான் சொல்லவில்லை 

படத்தில புதுசா சொல்லறதுக்குன்னா எதுவும் இல்ல வழக்கமானா பழிவாங்கும் பேய் படம் கதை , நரேன் கேரக்டர் அவரோட பிளாஷ் பேக் அந்த அளவுக்கு strong ah இல்லாததால படம் மனசுல பதியவில்லை , வடிவேலு சொல்லறா மாதிரி டமால் டமால் கட்டில் ஆடுது , ball வருது ஜன்னல் தீ பிடிக்குது , கார்ல பேய் வருது அவளோதான் 

படத்தின் ஹீரோ ரிஷிகேஷ் அவர் நடிப்பு பற்றி படத்திலே விவேக்கே காலாச்சிட்டாரு அதனால அவரை பற்றி சொல்ல தேவை இல்லை , சஞ்சிதா ஷெட்டி நிறைய படத்தில அவங்களுக்கு அந்த குட்டி ஷார்ட்ஸ் தான் தாரங்க அதுவே இந்தப்படத்திலும் போட்டுக்கிட்டு வாரங்க 

விவேக் அங்க அங்க நல்ல timing காமெடி , ஹீரோ , பேய் எல்லாத்தையும் கலாய்க்கிறாரு , அதே நேரத்தில பல இடங்களில் அவரே தண்ணி அடிப்பது தம் அடிப்பது அதுக்கு ஆதரிப்பது போல வசனங்களும் பேசுறார் மேலும் டபுள் meaning  பல உண்டு , படத்தில் பார்க்கும் போது இது விவேக்கா இல்ல சந்தானமா தோணுது , ஆனால் அந்த காமெடி எல்லாம் படம் முடிச்ச பிறகு மேகம் மாதிரி கலையுது மனசுல நிக்கல 

படத்தில பாட்டே தேவை இல்லை ஆனா டைரக்டர் சாய் பரத்  பாட்டு வச்சி இருக்கார் ,அதுவும் அனிருத் மியூசிக்கல் என்று publicity வேற, அதுக்கு ஏற்றார் போல எதுவும் இல்ல , சில இடங்களில் bgm கத்தி படம் வில்லன் bgm எட்டி பார்ப்பது போல ஒரு உணர்வு 

எப்போதும் போல கடைசியா பேய் இன்னும் போகல அங்க தான் இருக்குன்னு வைப்பாங்க அதே போலத்தான் இதுலயும் வச்சி இருக்காங்க , 

கொஞ்சம் டிமான்டி காலனி போல ஒரு வீடு எடுத்து , கொஞ்சம் ஐசக்சன் துரைல வரும் கேரக்டர் போல மேக் up போட்டு , மேலும் பல பேய் படங்களில் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் ஒரு ஒரு ஸ்பூன் போட்டு கலக்கி ஒரு கிளாஸ்ல ஊத்தி வச்சா இந்த ரம் , எனக்கு ஒரு டவுட்  இந்த படத்திற்கு ஏன் ரம்ன்னு பெயர் வச்சாங்க ?


மொத்தத்தில் ரம் போதை கம்மி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 17 February 2017

Ghazi - காஸி

பிரமாண்டமா செட் போட்டு அதுல கிராபிக்ஸ் கலந்து தேவை இல்லாத பாட்டை எல்லாம் போட்டு ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்து இருக்கேன் சொல்லுறவங்க  தயவு செய்து இந்த படத்தை பாருங்க

பரபரப்பா படம் எடுக்கிறேன், சீட் நுணிக்கு audience  வர வைக்கிறேன்  சொல்லி காமெராவை சும்மா ஆட்டி ஆட்டி எடுக்கறவங்க இந்த படத்தை பாருங்க

எப்படி ஒரு உண்மை சம்பவத்தை எந்த ஒரு தேவையில்லாத சினிமாத்தனத்தை புகுத்தாமல் , அதே நேரத்தில் audienceகளை படத்தோடு மூழ்க வைத்து , சீட் நுணிக்கு வரவைத்து ,ஆடியன்ஸை அந்த போரிலே இருப்பது போல ஒரு உணர்வை வர வைத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு ஒரு பெரிய சலூட் .

படத்தின் கதை என்ன ? 1971 மேற்கு பாகிஸ்தான் , கிழக்கு பாகிஸ்தான்( தற்போது பங்களாதேஷ்) சண்டை போது இந்தியா வழியே ஆயுதங்கள் அனுப்ப , இந்தியாவை திசை திருப்ப பாகிஸ்தான் காஸி என்ற நீர் மூழ்கி கப்பலை அனுப்பி விஷாக்கப்பட்டினத்தை அழிக்க வரும் போது , நம் இந்திய கப்பல் படை எப்படி நம்மை காப்பாற்றியது என்பது தான் கதை , பொதுவா என்னோட விமர்சங்களில் கதையை சொல்ல மாட்டேன் ஆனால் இந்த படம் அப்படி இல்ல .

படத்தின் ப்ளஸ் என்ன என்ன ?
முதலில் இது ஒரு தெலுங்கு படம் , ஆனால் தமிழில் டப்பிங்கில் வந்து இருக்கு, என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னா நம்ம ஊரில் டப்பிங் படங்களில் டப்பிங் நல்லா இருக்காது , ஆனால் இது அபப்டி இல்லை , மேலும் படம் பார்க்கும் போது அது டப்பிங் படம் போல இல்லை
இன்னொரு ஆச்சரிய விஷயம் என்னா தெலுங்கில் இப்படி எல்லாம் படம் எடுப்பங்களான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சி ஆனால் படம் சரியா எடுத்து இருக்கார் டைரக்டர் .
மேலும் முக்கியமான ஓன்று விஷுவல் effects நம்ம ஊரு பட்ஜெட்க்கு அந்த அளவுக்கு பண்ண முடியுமா ?  ரொம்ப சின்ன புள்ளை தனமா இருக்குமோ தோணுச்சு, ஆனா அதுவும் நல்லா பண்ணி இருந்தாங்க நிஜமாகவே நாமும் அந்த நீர் மூழ்கி கப்பலில் கடலுக்குலே போன ஒரு உணர்வு .

படத்தின் கேரக்டர் பற்றி சொல்லனும்னா படத்தில் கேப்டனாக வரும் கே.கே.மேனன் ரொம்ப உறுதியான கேரக்டர் முதல் பாதியில் அவர் படத்தை தூக்கி நிறுத்துகிறார் என்றால் இரண்டாவது பாதியில் ராணா படத்தை தூக்கி நிறுத்திகிறார்  , இவர்களுக்கு நடுவே அதுல் குல்கர்னியும் படும் பாடு நல்லா பண்ணி இருக்கார் .

நீர் மூழ்கி எப்படி இருக்கும்ன்னு நமக்கு தெரியாது ஆனா படத்தில் வரும் அந்த நீர் மூழ்கி செட் சூப்பர் , அது செட்டு தானா ? இல்ல அதுவும் vfx or graphicsaah தெரியல , but அதை யார் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாழ்த்துகள் .

கடற்படை, நீர் மூழ்கி பற்றி ஒரு உண்மை சம்பவம் படம் என்பதால் டைரக்டர் நிறைய  field work  பண்ணி இருப்பது படத்தில் தெரியுது , ஏன் என்றால் நீர் மூழ்கி கப்பலை பற்றி பல  விஷயங்கள்  technical ஆகா பல வார்த்தைகள் சொல்லுவது குறிப்பா அந்த terms  நமக்கு ஆரம்பத்தில் புரியல , பிறகு படத்தோட கதையோட்டத்தோட சில வார்த்தைகளை நமக்கும் புரியவச்சிட்டாரு அதனால நாமும் அந்த கப்பலை இயக்கனும் அந்த எதிரி கப்பலை தகர்க்கணும் தோணவச்சிட்டாரு டைரக்டர்

பொதுவா நாட்டு பற்று உள்ள படம்ன்னா ராணுவம் , குண்டு வெடித்தல் , தீவிரவாதம் அப்படின்னு கற்பனை படம் எடுப்பாங்க , அப்படி இல்லாட்டி யாருடையவாது சுயசரிதை படம் எடுப்பாங்க , ஆனால் முதல் முறையாக கடற்படை சார்ந்த ஒரு உண்மை சம்பவத்தை ஒரு புது முயற்சியாய் இந்த இந்தியா சினிமாவுக்கு புதுமையாய்  கொடுத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு  ஒரு பெரிய hatsoff .

நிச்சயமா இந்த படத்துக்கு எதாவுது ஒரு categoryல் award கொடுப்பாங்க.

மொத்தத்தில் இந்த படத்தில் மூழ்கி மேலே எழுவது  கப்பல் மட்டும் இல்லை நம் மனசும் தான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

Thursday, 9 February 2017

Singam3 - சிங்கம் 3

ஹரி : டேய் assistants எங்க இருக்கீங்க? சிங்கம் 3  discussion க்கு வாங்க 

Assistants : சார் S3ல  என்ன புதுசா பண்ணலாம் சார் ?

ஹரி: டேய் என்னைக்கு டா நாம புதுசா பண்ணி இருக்கோம் ? பரபரப்பா சீன வைப்போம் , நாலு பாட்டு வைப்போம் , பறக்கிற fight வைப்போம் , வில்லனை பிடிக்கிற sketch போடுற சீன வைப்போம் , ஹீரோயின் டம்மி ஆக்கிடுவோம் , ஹீரோவுக்கு punch  வசனம் வைப்போம் , கிளைமாக்ஸ்ல் ஓபன் ஏரியாவில் சண்டை வைப்போம் படத்தை முடிப்போம் , அவளோதான் , என்னன்னா லொகேஷன் மட்டும் படத்துக்கு படம் ஒரு ஒரு ஊர் வைப்போம் அவளோதான் .

Assistants1 : சார் அப்போ இந்த படத்துக்கு எந்த ஊர் fix பண்றோம் ?

ஹரி : டேய் அதுவும் நானே சொல்லனுமா ? அதுக்கு தான் நீங்க இருக்கீங்க சொல்லுங்கடா 

Assistants2: சார் திருநெல்வேலி போலாமா 

ஹரி: அது சாமி படத்துல வைச்சாச்சி 

Assistants3:  திருச்சி ,  தூத்துகுடி சென்னை ?

ஹரி: வேங்கை படம் திருச்சி, தூத்துக்குடி  சிங்கம்2 , சென்னை ஆறு , சிங்கம்1 எடுத்தாச்சி 
Assistants1: சார் சிங்கம்-1 சென்னைல ஆரம்பிச்சி ஆந்திரா நெல்லூர் ல முடிஞ்சிடுச்சி , அதனால நெல்லூர்ல இருந்து அப்படியே விசாகப்பட்டினம் போய்டலாம் சார் 
ஹரி : சூப்பர்,, சிங்கம்3 விசாகப்பட்டினம் வச்சிகோ , அப்படியே flight பிடிச்சி ஆஸ்திரேலியாவுக்கு போயிடலாம் வாணி ராணி சீரியல் போல ஓகே வா , முடிஞ்சா அங்க இருந்து திரும்பவும் தூத்துகுடி போகலாம் 

Unknown character : சார் சார் .. ஒரு நிமிஷம் பேசணும் சார் 
ஹரி: யோவ் யாரு யா நீ ? போயா ... கேமராமேன் கூப்பிடுங்க 

கேமராமேன்  : சார் நான் என்ன பண்ணணும் ?

ஹரி : நீங்க கேமராவை எடுத்துக்கிட்டு வானத்துல போயிட்டு நில்லுங்க ..

கேமராமேன் : சார் என்ன சொல்லுறீங்க ?

ஹரி: மிஸ்கின் படம்ன்னா கேமரா தரையில் இருக்கணும் , என் படம்னா கேமரா மேல இருக்கணும் , ஒரு helicam வச்சிகோங்க இல்லாட்டி முடிச்சா producer கிட்ட கேட்டு helicopter ல கேமரா fix பண்ணிக்கிட்டு ஊரு fullaah சுத்துவோம் சரியா? அப்புறம் காமெராவை ஆட்டி கிட்டே இருக்கணும் அப்போ தான் படம்  விறுவிறுப்பா போகிறா மாதிரி இருக்கும் 

கேமராமென்: ஓகே சார் 

தேவி ஸ்ரீ பிரசாத் : சார் நான் என்ன பண்ணும் ?

ஹரி : ஏம்ப்பா உன்ன யார் உள்ள விட்டது ?

தேவி ஸ்ரீ பிரசாத்: சார் நான் தான் சிங்கம் 1,2 மியூசிக் போட்டேன் 

ஹரி: யப்பா நீ சிங்கம் பாட்டை தூக்கி வீரம் படத்துல போடுவ , வீரம் பாட்டை தூக்கி சிங்கம்2 ல போடுவ அதுவும் இல்லாட்டி தெலுங்கு படத்துல இருந்து இரண்டு டப்பாங்குத்து போடுவ  போதும் டா சாமி , உன்ன வச்சி நான் பட்ட அவஸ்தை போதும் , நான் ஹாரிஸ் ஜெயராஜ் வச்சிக்கிறேன் , அவர் கூட சாமி படம் செம்ம ஹிட் நல்ல காம்போ , நீ கிளம்பு 

ஹாரிஸ் ஜெயராஜ் : சார் கவலை படாதீங்க நான் இருக்கேன் , இருமுகன் படத்தில ஹெல்லன நல்ல ஹிட் அதுல இருந்து கொஞ்சம் அப்புறம் இருமுகன் face off தீம்  இருக்கு அதுல கொஞ்சம் , முடிஞ்சா என்னை அறிந்தால் , ஏழாம் அறிவு எல்லாம் mix பண்ணிக்கலாம் , தீம் bgm என்ன போடணும் ?

ஹரி : எனக்குன்னு வரவங்க எல்லாம் இப்படி தான் வருவீங்களா ? bgm தானே படம் full ah  சிங்கம் சிங்கம் வரணும் அதுக்கு எதையாவுது போடுங்க போங்க 

அனுஷ்கா : சார் நான் என்ன பண்ணனனும் ?எனக்கு பாகுபலி ஷூட்டிங் வேற இருக்கு,  இந்த partல கல்யாணம் புள்ளை குட்டி அது மாதிரி எதாவுது இருக்குமா ?

ஹரி: இல்ல இந்த படத்துல உனக்கு divorce கிளம்பு 

ஸ்ருதி : சார் எனக்கு ? உங்க பூஜை படத்தில நடிச்சி இருக்கேன் 

ஹரி : நீயுமா சரி வா , இது வரைக்கும் என்ன சாதித்து இருக்கீங்க ?

ஸ்ருதி: ஏழாம் அறிவு , 3 படத்தை தவிர எல்லா படத்திலும் guest ரோல் தான் பண்ணி இருக்கேன் 

ஹரி: அப்போ இதுலயும் அப்படியே வந்துடுங்க , but இந்த படத்துல உங்களுக்கு ஒரு பெரிய ட்விஸ்ட் கேரக்டர் இருக்கு சிங்கம்2 ஹன்சிகா மாதிரி 

ஸ்ருதி : சார் அப்போ நான் செத்துடுவேனா ?

ஹரி: படத்துல நீங்க சாவமாடீங்க but உங்க நடிப்பை பார்த்து வேண்டும்னா audience சாவதற்கு வாய்ப்பு இருக்கு  , கொடுத்த காசுக்கு மேல நடிக்காதீங்க போங்க 

சூரி : சார் என்னை மறந்துடீங்களே 

ஹரி : வாங்க உங்களுக்கு என்ன பண்ண தெரியும் ?

சூரி : சார் நான் நல்லா english பேசுவேன் , அதுவே நல்ல காமெடியா இருக்குன்னு  சொல்லுவாங்க, மேலும் ஜில்லா படத்தில் போலீஸ் ஆகா நடிச்சி இருக்கேன் , உங்க பூஜை படத்திலும் நடிச்சி இருக்கேன் 

ஹரி: சரி அது போலவே மொக்கையா  english  பேசி காமெடி பேருல எல்லாரையும் சாவடிச்சிடுங்க போங்க 

வில்லன் : சார் நான் ?

ஹரி : போயிட்டு நல்ல முட்டை கறி தின்னுட்டு உடம்பை ஏத்தி ஆஸ்திரேலியா போயிட்டு நில்லு , கடைசியா சூர்யா  கூட வந்து உடம்பை காட்டி சண்டை போடுங்க 

Unknown character : சார் சார் .. 
ஹரி: யோவ் யாரு யா நீ நடுவுல நடுவுல வந்து disturb பண்ணுற போயா ஹீரோ வர நேரமாச்சி  

சூர்யா : சிங்கத்தை போட்டோல பார்த்து இருப்ப , டிவில பார்த்து இருப்ப 

ஹரி : சார் இன்னும் ஷூட்டிங் ஆரம்பிக்கல கொஞ்சம் wait பண்ணுங்க , 

சூர்யா: சார் நான் என்ன பண்ணணும் ?

ஹரி : உங்ககிட்ட போலீஸ் uniform இருக்கு ல அதை போட்டுக்கிட்டு வாங்க , அந்த மீசை maintain பண்ணுங்க , நல்லா வந்து விறைப்பா நில்லுங்க இந்த படத்துல நல்ல fight சீன இருக்கு , பறந்து பறந்து அடிக்க போறீங்க , அடிக்கற அடியில அடிஆளுங்க எல்லாம் football , volleyball , rubber ball மாதிரி bounce ஆகி bounce ஆகி pitch ஆகி பறக்க போறாங்க 

சூர்யா: சார் இது எல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு ? ஏதோ ரஜினி , விஜய் பண்ணா பரவாயில்லை , நான் பண்ணா audience ஏத்துக்க மாட்டாங்க சார் 

ஹரி : இப்படி பண்ணாதா producer காசு தருவேன் சொன்னாரு , வசதி எப்படி ?

சூர்யா: அப்போ சரி சார் 

ஹரி : சூர்யா சார் அந்த போலீஸ் uniform தூக்கி போட்டுறாதீங்க இன்னும் சிங்கம் -4, 5, 6 இருக்கு , அந்த ஹாரிபாட்டர் படம் போல இன்னும் பல சீரியல் போவோம் .

Unknown character : சார் சார் .. 
ஹரி: யோவ் இப்போ சொல்லுயா யாருயா நீ ?
Unknown character : நான் தான் சார் tamil rockers admin 
Producer : டேய் நீ எங்க டா இங்க வந்த ? 
Tamil rockers admin : சார் படம் fb live போட்டா மாதிரி discussion கூட fb  live போடலாமா தோணுச்சு அதான் வந்தேன் 
Producer: அடங்க  கொய்யால 

மொத்தத்தில் : மசாலா விரும்பிகளுக்கு நல்ல ஆந்திரா மசாலா கலந்து கொடுத்து இருக்கிறார் ஹரி 

குறிப்பு : படம் பார்த்து ஒரு கற்பனையாய் இந்த விமர்சனம்,  யார் மனதையும் புண்படுத்த அல்ல(அப்பாடி கொஞ்சம் அடி வாங்குவதில் இருந்து எஸ்கேப் ஆகலாம் ) ,

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Thursday, 2 February 2017

Bogan - போகன்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு  அரவிந்தசாமி ஜெயம்ரவி காம்போ எதிர்பார்த்த  படம் இந்த போகன் , ஆனா நான் அந்த எதிர்பார்ப்பு நினைச்சுகிட்டு போல , ஏன்னா அப்படி எதிர்பார்த்து போன பல படங்கள் மொக்கையாக்கி இருக்கு , அதுவும் ரோமியோ ஜூலியட் படம் எடுத்த டைரக்டர் , அதனால நான் எந்த ஒரு எதிர்பார்ப்போடு போகல , இருந்தாலும் இந்த படம் அதை ஏமாற்றவில்லை, ரொம்ப குழப்பவது போல இருக்கா ? சரி விடுங்க படத்தை பற்றி மேலும் படிங்க .

பழைய கதை  + புதிய திரைக்கதை = தான் இந்த போகன் , அப்படி என்னடா அந்த பழைய கதை கேட்க்கிறீங்களா ? அதை சொல்லமாட்டேன்  சொல்லிட்டா பார்க்கும் ஆர்வம் போயிடும் ,  ஆனால் பல விமர்சனங்களில் கதையை சொல்லி இருப்பாங்க , but  நம்ம பாலிசி கதை சொல்லுவது இல்லை , அதனால அதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க அட ஆமாங்க மாயா பஜார் காலத்து கதை தான்(அது என்னன்னு பார்த்துக்கோங்க) .

படத்தோட முதல் பாதி எங்கேயும் தட்டு தடங்கள் இல்லாமல் போகுது , சரியான அளவு காமெடி , சரியான அளவு கதை வேகத்தோட சுவாரசியமா நம்ம மனசை படத்தை விட்டு எங்கேயும் வெளியே போகாமல் கொண்டு போயிட்டு விட்டுட்டாங்க , அதே நேரத்தில் இரண்டாவுது பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் திசை மாறி அப்படி இப்படி கொஞ்சம் போனா மாதிரி இருந்தாலும் , அப்புறம் ஒரு வழியா வேகத்தை கொடுத்து நல்லபடியா முடிச்சிட்டாரு , படம் கொஞ்சம் கொஞ்சம் ஏழாம் அறிவு படத்தி ஞாபகப்படுத்தியது 

அரவிந்சாமி  , ஜெயம் ரவி , இரண்டு பேரும் நான் தான் ஹீரோ , நான்தான் வில்லன் என்று போட்டி போடாமல் , மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருக்காங்க , அரவிந்தசாமி ஜெயம் ரவியா நடிக்கும் போது அவரோட body language எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு , அதுவும் அவரை விசாரணை பண்ணும் காட்சியில் அவர் பண்ணும் அலப்பறை  செம்ம , அவங்க ரெண்டு பேரும் காருக்குள்ள பாடி ஆடும் போது ஒரே மாதிரி expression பண்ணுவது சூப்பர் , ஜெயம் ரவி அவர் பங்குக்கு அரவிந்தசாமியா நடிக்கும் போது சில இடங்களில் அரவிந்த்சாமி  மாதிரி பண்ணாலும் பல இடங்களில் அவரை போலவே பண்ணுகிறார் , அவர் ஹன்சிகாவோடு dinner  சாப்பிடும் காட்சியில் அருமை .அரவிந்தசாமி சார் நீங்க ஒரு ஒரு expression பல இடங்களில் பின்னிபெடல் எடுக்குறீங்க , முதல் பாதியில் ஒரு மாதிரி தூக்கி சாப்பிடுறீங்க என்றால் இரண்டாவது பாதியில் வேற மாதிரி இருக்கீங்க .

ஹன்சிகா ஆஹா ஒல்லியாகி அழகா இருக்காங்க , குறிப்பா ஒழுங்கா டப்பிங்ல்  உதடு அசைவு கொடுத்து தமிழ் உச்சரிப்பு ஒழுங்கா கொடுத்து நடிச்சி இருக்காங்க அது ஒரு பெரிய achievement அவங்களுக்கு , மேலும் பொண்ணு பார்க்கும் வரும் காட்சி சூப்பர், நல்ல சிரிப்பு வருது , கழுதை  மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா கவுண்டமணி கேட்பாரு அதுபோல , இந்த ஹன்சிகாவுக்கு உள்ள இம்புட்டு நடிப்பா அப்படின்னு கேட்கிற அளவுக்கு கிளைமஸ்ல நடிச்சி இருக்காங்க,ஹன்சிகா நடித்த பல படங்களில் இது கொஞ்சம் உருப்படியான  படம் என்று சொல்லணும் , நடிப்பிலும் improvement ,

அரவிந்தசாமி body language போல அந்த போலீஸ்கார் , ஜெயம்ரவியோட அப்பா , அபப்டின்னு நிறைய பேரு அவரை போல நடிச்சி இருக்காங்க அது எல்லாம் நல்ல இருந்துச்சி ,ஏன் அந்த லேடி போலீஸ் அப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க , அவங்களுக்கு uniform கிடையாதா ? கடைசியா தான் uniform போட்டு வராங்க .

படத்தோட பெரிய ப்ளஸ் இமான், இசை மனுஷன் பக்காவா பண்ணிட்டாரு , இமான் எப்பவும் ஒரே மாதிரி பாட்டு தான் போடுவாரு , ஆனா தீடிர்ன்னு  ஒரு வித்தியாசமா பண்ணிடுவாரு அப்படி பண்ணது தான் இந்த படம் .ஏற்கனேவே டமால் டாமால் டுமீல் டுமீல் குத்து பாட்டு ஹிட்டு ,   இன்னைக்கு தான் என் நண்பர் இந்த படத்தில் செந்தூரா பாட்டு கேளுங்க நல்லா இருக்குன்னு சொன்னாரு ,அதை  கேட்டேன்,  கேட்ட உடனே பிடிச்சிடுச்சி , அதுவும் பாட்டோட காட்சி அமைப்பு  நல்லா இருந்துச்சி , படம் முடிச்ச பிறகும் அந்த செந்தூரா பாட்டு மனசுல கேட்டுகிட்டே இருக்கு , bgm இது வரைக்கும் வந்த இமான் இசையில் இருந்து வித்தியாசமா இருந்திச்சி , இமான் சார் கலக்கிடீங்க 

டைரக்டர் தப்பா ? producer தப்பா தெரியல தேவி படத்தில் வரும் வீடு இதுலயும் வந்து இருக்கு , அது ஏன் ?அப்பட்டமாக அப்படி பண்ணாங்கன்னு  தெரியல, இது கொஞ்சம் fantasy படம் என்பதால் அங்க அங்க லாஜிக் ஓட்டைகள் இருக்க தான் செய்யுது , அரவிந்தசாமி பார்க்காமலே எப்படி ஜெயம்ரவியோட அப்பா, ஹன்சிகா அபப்டி மாறினாங்கன்னு தெரியல , இப்படி சில ஓட்டைகள் இருந்தாலும்  அதை மறக்கும்படி படம் bore அடிக்கமா ரெண்டுமணி நேரம் போகுது . மேலும் இந்த படம் face off என்கிற இங்கிலீஷ் படத்தோட தழுவல் , காப்பி சொல்லுறாங்க , அது எந்த அளவுக்கு உண்மை தெரியல 

மொத்தத்தில் போகன் நல்ல போகமாக நம்பி போகலாம் .

இப்படி 
சினி கிறுக்கன்