வெள்ளி, 28 ஏப்ரல், 2017

Baahubali 2 - பாகுபலி 2

தெரிந்த கதை , தெரியாத உண்மைகள் தான் இந்த பாகுபலி2, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் ? சொல்லமாட்டேன்  படம் பாருங்க , ஏன் அனுஷ்கா அடிமையாக இருக்காங்க ? சொல்லமாட்டேன் படம் பாருங்க , அட இந்த watsapp  ல ஒரு கற்பனையாக இந்த படத்தோட கதை வந்துச்சி , அதுல பல விஷயங்கள் உண்மை இல்ல ஆனா சில விஷயங்கள் அடிச்சிவிட்டதுல உண்மைதான் .

இந்த படத்தை பற்றி எழுத நமக்கு தகுதி இல்ல , இருந்தாலும் நாம் எழுதுவோம், முதல் விஷயம் இந்த படத்தை முதல் பகுதியோடா compare பண்ணாதீங்க , முதல் பகுதி அளவுக்கு சுவாரசியமா இருக்கும் என்று நினைச்சி போகாதீங்க , 

சரி படத்தோட எனக்கு பிடிச்ச highlight காட்சிகள் என்னனா ,  படத்தில சண்டை காட்சிகள் எடுத்தவிதம்  அருமை , குறிப்பா அனுஷ்காவின் முதல் சண்டை காட்சியில் , சத்யராஜும் , பிரபாஸும் சேர்ந்து போடும் சண்டை செம்ம , அதே போல அரண்மனையில் அனுஷ்காவும் பிரபாஸும் ஒரு அம்பு சண்டை ultimate , அதுல அனுஷ்கா ரொம்ப அழகா தெரிஞ்சாங்க , அதில் குறிப்பா அனுஷ்கா ஒரு expression தரும் ஷாட் சூப்பர் , இன்டெர்வல் பகுதியில் பதவி பிரமாணம் எடுக்கும் காட்சி செம்ம , சட்டசபையில் பிரபாஸ் ஒருத்தனோட கழுத்தை வெட்டும் காட்சி அவருக்கு அது மாஸ்  , ஓ அது சட்டசபை இல்ல அரண்மனை சபை , ஆனா இந்த படத்தோட கதை பார்க்கும் போது எனக்கு என்னமோ இப்போ இருக்கும் நம்ம தமிழ் நாடோட அரசியல் நிலவரமும் இந்த படமும் கொஞ்சம் மேட்ச் ஆகுறா போல இருக்கு .

படத்தில சுவாரசியம் இல்லாத விஷயங்கள் பிரபாஸ் அனுஷ்கா காதல் , மேலும்  அரண்மனையில் பிரபாஸும் சத்யராஜும் நடிப்பது , மேலும் ஒரு கப்பல் டூயட் செம்ம கற்பனை ஆனால் அது பார்க்க பக்கா தெலுங்கு மசாலாவாக தோணுச்சு , அப்புறம் முதல் partல சில சின்ன சின்ன கேரக்டர் தான் தெலுங்குல பேசி, அது தமிழ்ல டப்பிங்கு ஆச்சி , ஆனா முக்கியமா கேரக்டர் எல்லாம் தமிழ்ல தான் பேசினாங்க , ஆனா பாகுபலி2ல்  பல இடங்களில்  எல்லா முக்கியமான கேரக்டர் கூட தெலுங்கு வாய் அசைப்பு தான் இருக்கு , ஏன் நம்ம சத்யராஜ் கூட தெலுங்கு வாய் அசைப்பு தான் இருக்கு அதனால ரொம்ப அந்நியமாக ஒரு உணர்வு வருது ,முதல் part ல் காலகேயனுடன் போர் காட்சிகள் வரும் சில போர் நுணுக்கங்கள் அட போட வச்சது , இது செம்ம ஐடியாவா இருக்கே தோணுச்சி , அது போல இந்த படத்தில் குறைவு தான் ,trailerல எந்த அளவுக்கு தமன்னாவை பார்த்தோமோ அந்த அளவுக்கு தான் படத்தில வராங்க , இதில் தமன்னாவுக்கு ஸ்கோப் கம்மி .

எனக்கு இந்த படத்தில பிரம்மாண்ட காட்சியமைப்பு  , தவிர கதை திரைக்கதை ரொம்ப சுவாரசியமாக ரசிக்கும்படி வைக்கல, ஏன்னா படத்தோட கதை என்னன்னு தெரிஞ்சி போச்சி , திரைக்கதை இப்படி தான் போகும் என்று சுலபமாக guess பண்ணமுடிச்சது அதனால எனக்கு அந்த அளவுக்கு படத்தோட ஒரு ஈடுபாடு வரல ,அதுவும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் தெரிஞ்ச அப்புறம் அந்த சுவாரசியம் முடிச்சி போகுது .எப்படியும் ராணாவை சின்ன பாகுபலி கொன்றுவார் தெரியும் , முக்கியமா கடைசி சண்டை கொஞ்சம் ஓவர் பறந்து பறந்து அரண்மனைகுள்ள போவது கொஞ்சம் ஜீரணிக்க முடியல , ஆனா இதே இங்கிலிஷ் படம்ன்னா ரசிப்போம் , ஆனா இது பார்க்கும் போது ராஜமௌலி சார் ஏன் அப்படி வச்சீங்க கேட்க தோணுது .

அம்மா ராஜமாதா ரம்யாகிருஷ்ணவே நீங்க இந்த சன் டிவி சீரியல நடிக்கறதைவிட்டு இந்த மாதிரி படத்தில் மட்டுமே நடிங்க , இன்னும் பல பாகுபலி வந்தாலும் நீயே ராஜமாதாவாக வரணும் ,அப்புறம் நாசர் , ராணா சரியான வில்லன்கள் செம்ம .

ராஜமௌலி கற்பனைகளின் ராஜான்னு சொல்லலாம் , எதுவுமே சின்னதா சொல்லமாட்டார் போல வீட்டுல தோசை சுட  சொன்னாலும் நல்லா 10 அடிக்கு சுட்டு கொடுக்க சொல்லுவார் போல, படத்தில அப்படி ஒரு பிரம்மாண்டம்  மற்றும் கற்பனை ,  அப்படி அந்த பிரம்மாண்டத்தையும் கற்பனையும் அனுபவிப்பதற்கு மட்டுமே இந்த பாகுபலி2.

மொத்தத்தில் ராஜமௌலி என்றால் பிரம்மாண்டம் , பிரம்மாண்டமே என் சாசனம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

சனி, 15 ஏப்ரல், 2017

Kadamban - கடம்பன்


ஆர்யா(+ + +) :   கடம்பன் உடம்பு உடும்பனாக  

கேத்ரீன்(- - - - ):  காட்டுவாசிக்கு செட் ஆகல 

வில்லன்(-) அந்த அளவுக்கு ஸ்டராங் இல்ல 

இசை( - ) : யுவன்  ஒரு பாட்டு பருத்திவீரன் படம் பாட்டு ஞாபகம்  படுத்துது , ஒரு பாட்டு சரோஜா படம் பாட்டு ஞாபகம் படுத்துது  

சண்டை( +++)

கேமரா ( + +) : காட்டுக்குள்ள போன மாதிரி இருந்திச்சி 

கதை(+ ) : காட்டை காப்பாத்தணும்  என்ற கதைகருவை எடுத்துக்கிட்ட காரணம் ஓகே 

திரைக்கதை(- - ) : சுவாரசியம் இல்ல , ரொம்ப எதிர்பார்த்த காட்சிகள் 

Cgi(+ +  - -) : மிருகங்கள் வரும் காட்சி + + , ஆனால் முதல் காட்சி மற்றும் ஆர்யா மிருகத்தோடு சண்டை போடும் காட்சி சுமார் - - 

லாஜிக்(- - ) : எங்கே இருக்குன்னு கேக்கணும் , தமிழ்நாட்டுல தானே நடக்குது , illegalன்னாலும்  அதுக்குன்னு கொஞ்சம் ஓவர் போலி போலீஸ் , துப்பாக்கி etc 


மொத்தத்தில் கடம்பன் கண்களுக்கு மட்டும் குளிர்ச்சியாக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

Power Pandi - பவர் பாண்டி

ஏம்பா இன்னிக்கு review பண்ணலாமா ? வேண்டாமா ? என்னமோ படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் கழிச்சி தான் review பண்ணனும்ன்னு சொல்லுறாங்க ,ஏண்டா மூணு நாள் கழிச்சி பண்ணுறதுக்கு இது என்ன சடங்கா ? துருவங்கள் 16 படம் எல்லாம் முதல் நாள் சத்யம் தியேட்டர்ல வெறும் 1 காட்சி தான் இருந்துச்சி , reviewக்கு அப்புறம் அடுத்த வாரமே 9 காட்சி போட்டாங்க , பல சின்ன படங்கள் ஹிட் ஆனதுக்கு காரணமே இந்த மாதிரி reviews தான் , first copy அடிக்கமா நல்ல படம் எடுங்க . யார் என்ன சொன்னா நமக்கு என்ன? நாம் பண்ணறது பண்ணுவோம் .

 ராஜ்கிரண் தாத்தாவாக , பையன் கவனிக்காத அப்பாவாக வரும் போது அட இது மஞ்சப்பை போல இருக்குமோ என்று படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரத்தில் கொஞ்சம் பயந்துட்டேன்,, அட அப்பாவை கவனிக்காத பையன் அதனால படம் full ah செண்டிமெண்ட் போட்டு , message சொல்லி மொக்கயா போய்டுமோ தோணுச்சி , நல்ல வேளை அப்படி போகம , அப்புறம் போக போக இது வேற மாதிரி இருந்திச்சி , இறுதியில் முடியும் போது மனசு ரொம்ப இளகி போயிடுச்சி , அப்படி  ஒரு அருமையான மாறுபட்ட காதல் கதை ,வெளிப்படையா சொல்லனும்னா முதல் பாதி கொஞ்சம் டிராமா மாதிரி போச்சி , பிறகு இரண்டாவது பாதியில் கதை ஹைதராபாத்துக்கு போன பிறகு , அட போங்கடா என்ன யூத் பசங்க லவ்,  இது தான்டா லவ் சொல்லுகிறா மாதிரி சீன வச்சி ரசிக்க வச்சிட்டாரு டைரக்டர் தனுஷ்,  அதுக்கு ரொம்ப ஒருதுணையாக ராஜ்கிரணும் ரேவதியும் நடிச்சாங்க , கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு , இந்த வயசுல ராஜ்கிரணும் ரேவதியும் இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்தது சூப்பர் , எனக்கு கொஞ்சம் ஹிந்தி படம் சீனிகம் படத்தோட ஒரு பகுதி சாயலோ தோணுச்சு வயசான காலத்தில் வரும் ஒரு காதல் ஆனால் இது பழைய காதலை புதுப்பிக்கும் ஒரு கதை 

இந்த படத்தில  ஒருவரை மட்டும் பற்றியே சொல்லனும்னா அது ராஜ்கிரண் மட்டும் தான் , படம் முழுக்க நிறைவா நடிச்சி மனசுல நிறைவா நின்னுட்டார் ,முதல் பாதியில் நடிச்சது எல்லாம் அவர் இது வரைக்கும் பண்ண காட்சிகள் தான் நடிப்பு தான், அப்பாவாக , வீட்டில் வரும் பிரச்சனைகள் , வீட்டில் புரிஞ்சிக்காத நிலமையில் நடிப்பது எல்லாம் அவர் usual ஆகா பண்ணுவது தான் , ஆனா அவர் அந்த bulletல் எடுத்து கிளம்பின அப்புறம் நமக்கு அச்சம் என்பது மடமையடா சிம்பு தான் ஞாபகம் வருது , ராஜ்கிரண்  பண்ணும் குறும்புத்தனம் , ரேவதியை பார்ப்பது , FBல்  சாட் பண்ணுவது , வீட்டுக்கு நைட் போயிட்டு பேசுவது எல்லாம் செம்ம , முதல் பாதியில் பிரசன்னாவிடம்  பேசாம ஒரு புரிதலுடன் உணர்வோடு இருப்பதும் , இரண்டாவது பாதியில் காதல் cute பண்ணுவது எல்லாம் செம்ம .


பிரசன்னா & சாயாசிங் தேவையான அளவுக்கு சரியா நடிச்சி இருக்காங்க , அந்த பக்கத்துக்கு வீட்டு பையன் ராஜ்கிரணோட friendly பேசுவது , கலாய்ப்பது நல்லா இருக்கு , DD ரொம்ப கம்மியான காட்சிகள் வந்து அம்மாவை புரிஞ்சி பேசும் வசனங்கள் சூப்பர் ,மேலும் விஜய் டிவி ஆளுங்க படத்தில் நிறைய பேரு வந்து இருக்காங்க DD , ரோபோ ஷங்கர் , கலக்கப்போவது தீனா , ஜோடில வரும் ரின்சன் அந்த பக்கத்துக்கு வீட்டு பையனாக வரார் , ஒரு வேளை விஜய் டிவில  இந்த படம் வரும் போல .
seyan ரோல்டன் சூரக்காற்று பாட்டு மற்றும் ராஜ்கிரண் மாஸ் சண்டை காட்சியில் bgm எல்லாம் நல்லா பண்ணி இருக்கார் .

தனுஷ் நடிகர் , பாடகர் , பாடலாசிரியர் எல்லாம் செய்து இப்போ டைரக்டர் அவதாரம் நல்லாவே எடுத்து இருக்கார் , ஆனால் எனக்கு என்னமோ கௌதம் மேனன்  இவர் கூட directionல்  ஒர்க் பண்ணி இருப்பர் போல தோணுது , ஏன்னா ரேவதி ராஜ்கிரண் காதல் காட்சிகள் அவரோட தாக்கம் எனக்கு தெரிஞ்சிது. எனை நோக்கி பாயும் தோட்ட படம் ஷூட்டிங்ல தனுஷ் அவர்கிட்ட ஒரு வரி கதை சொல்லி இருப்பர் போல , அவரும் அதுக்கு help பண்ணி இருப்பாரோ ? இல்லாட்டி கௌதம் மேனன் ஒரு காட்சியில் guest ரோல் வந்ததால அப்படி எனக்கு தோணுச்சோ? தனுஷுக்கு முதல் படம் என்பதால் சில தவறுகள் வந்து இருக்கு போல, அது நம்ம கண்ணுலபட்டது , பிளாஷ் பேக்ல்  வரும் மடோனா கிராமத்து கேரக்டர்க்கு செட் ஆகல கொஞ்சம் செயற்கையாக இருந்துச்சி , ஹைதராபாத்தில் இருக்கும் மால் சொல்லுராங்க , ஆனால் ஷூட் பண்ண இடம் நாவலூர் OMR food street  , அட அது செட்டிங் போட்டு கொஞ்சம் மறைச்சிடீங்க ஆனால்  மண்டை மேல இருக்க கொண்டை மறந்தா போல , பின்னாடி frameல் Olympia opaline building தெரிஞ்சுடுச்சி , அதை கவனிச்சி இருக்கலாமே , மழை காட்சியில் கொஞ்சம் தள்ளி தரையை பார்த்தா ரொம்ப காஞ்சி இருக்கே அதை மிஸ் பண்ணிடீங்களே , ஹைதராபாத்தில் roof top restaurant காட்டும் போது மீண்டும்   மண்டை மேல இருக்க கொண்டை மறந்தா போல பின்னாடி ஸ்பென்சர் building போல தெரிஞ்சிடுச்சே, இப்படி சின்ன சின்ன தவறு இருந்தாலும் எல்லா தரப்பு மக்களுக்கு பிடிக்கிறா மாதிரி ஒரு படம் பண்ணி இருக்கார்  அதுக்கு ஒரு சல்யூட் .

நடிகர்கள் : ராஜ்கிரண் , ரேவதி , தனுஷ் , மடோனா பிரசன்ன , சாயாசிங் 
கேமரா : வேல்ராஜ் 
இசை: சியேன் ரோல்டன் 
எழுத்து & இயக்கம் : தனுஷ் 

மொத்தத்தில் பவர் பாண்டி பவர் full ரொமான்டிக் பாண்டி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 8 ஏப்ரல், 2017

8 Thottakkal - 8 தோட்டாக்கள்

எதிர்பார்த்த சில படங்கள் நல்லா இல்லாமல் இருப்பதும் , எதிர்பாராத சில படங்கள் நல்லா அமைவதும் வழக்கமாக போச்சி , அந்த வரிசையில் இந்த 8தோட்டாக்கள் .
.
படத்தின் ஹீரோ எம்,ஸ்.பாஸ்கர் அட ஆமாங்க ஹீரோ வெற்றி தான் ஆனால் படத்தின் கதைக்கு ரொம்ப முக்கியமான கேரக்டர்ல படத்தை வழி நடத்தி செல்வது அவர் தான் , அவர் இதுவரைக்கும் பல குணச்சித்திர கேரக்டர் பண்ணாலும் , இதில் ரொம்ப அதீத முக்கியமான  கேரக்டர் மனசுல பதியவச்சி படத்தில்  வருகிறார் .

இந்த படம் பார்க்கும் போது , சில இடங்கள் கொஞ்சம் என்னடா மிஸ்கின் படம் போல இருக்கே , அந்த ஹீரோ கேரக்டர் நடை பாவனை எல்லாம் அஞ்சாதே நரேன் நடந்துகிறா மாதிரி இருக்கே தோணுச்சு , அட படம் முடியும் போது  டைட்டிலில் எந்த படங்கள் இருந்து inspiration இதுன்னு போட்டு இருக்கார். படத்தை அப்படியே காப்பி அடிக்கமா , அதற்கு credits கொடுத்தது சூப்பர் .

படத்தின் பிளஸ் பாய்ண்ட் திரைக்கதை சொன்ன விதம் , குறிப்பா சில இடங்கள் எம்,ஸ்.பாஸ்கர் மற்றும் அவர் கூட இருக்கும் ரெண்டு பேரு பற்றி ,  ஒரு  பக்கம் விசாரிக்கா , அவங்க எப்படிபட்டவங்கன்னு  காட்டுவது , அப்புறம் இன்டெர்வல் ப்ளாக் அங்க ஒரு பக்கம் பணத்தை பற்றி வெற்றி  விசாரிக்க அதே நேரத்தில் இன்னொருபக்கம் அந்த ஜெய் கேரக்டர் பண்ணும் செயல் காட்டுவதும் , நல்லா இருந்திச்சி , அதே போல் எம்,ஸ்.பாஸ்கர் கேரக்டர் முதலில் ஒரு பகுதி சொல்லிவிட்டு , அவரின் மறுபகுதி பொறுமையாக இறுதியாக போலீஸ் ஸ்டேஷனில் reveal ஆவது அருமை , அப்போ கொஞ்சம் ஆச்சரியம் பட வச்சது , அட இவருக்கு இப்படி ஒரு கேரக்டர்aah ? படத்தின் முழுமையாக ஒரு நேர்மையான திருடனாக மனசில் நின்னுட்டார் , நிச்சயமா ஒரு அவார்ட் உண்டு , ஆனா அது குணச்சித்திர கேரக்டர்க்கு வாங்குவாரா இல்ல வில்லனா தெரியல பார்ப்போம் .

ஹீரோ வெற்றி ரொம்ப வெற்றிடமாக வரும் கேரக்டர், எதிலும் ஒரு interest இல்லாத கேர்டேராக வரார் , மைம் கோபி இன்ஸ்பெக்ட்டராக கொஞ்சம் வந்தாலும் அவர் மேல ஒரு வெறுப்பு வரும் அளவுக்கு நல்ல கேரக்டர், நாசர் அவர் கேரக்டரும் சூப்பர் , படத்தின் பிளஸ் பாய்ண்ட்  ஒரு ஒரு கேரக்டர் நல்ல detail ஆகா work பண்ணி இருக்கார் டைரக்டர் ஸ்ரீ கணேஷ் , அட ஹீரோயின் பற்றி சொல்லவே இல்ல , கொஞ்சமா வந்துட்டு கொஞ்சமா போயிட்டாங்க அவளோதான் .

படத்தில் முதல் பாதி ஒன்னு ஒன்னாக connect ஆகி connect cஆகி போவது சுவாரசியமாக இருந்திச்சி ஆனா இரண்டாவது பாதி அப்படியே ரொம்ப இழுத்துட்டாங்க அதுவும் எம்,ஸ்.பாஸ்கரும் , ஹீரோ வெற்றியும் ஒரு  ஹோட்டலில் பேசும் காட்சி ஆரம்பத்தில் நல்லா இருந்தாலும் ரொம்ப வளவளவென இருக்கு , குறிப்பா பாடல் தேவையில்லை , அதுவும் முதல் பாதியில் 24 மணி நேரத்தில் துப்பாக்கி கண்டுபிடிக்கணும் ஒரு கட்டாயத்தில் இருக்கும் போது ஹீரோயின் கூட பாட்டு தேவையில்லை , அதுவும் இரண்டாவது பாதியில் வரும் பாட்டு காட்டாயமாக வைக்கணும் வச்சா போல இருக்கு .அப்புறம் இப்படி போகும்ன்னு கொஞ்சம் easy ஆகா கணிக்கும் அளவுக்கு இருந்துச்சி சில இடங்கள் , ஒரு  டீ கடையில் மூணு பெரும் டீ குடிக்கும் காட்சி , மற்றும் சில இடங்கள் , அட நம்ம கண்ணுல சில குறைகள் தெரியதான்  செய்யுது , நாசர் முதலில் வரும் காட்சியில் பார்த்தா  அந்த tableல் இருக்கும்  phone, wire இல்லமால் இருக்கும்  , அட phone wire பிஞ்சி ரெண்டு நாள் ஆச்சிபா அப்படின்னு சொல்லணும் தோணுச்சு .

மொத்தத்தில் 8 தோட்டாக்கள் சில தோட்டாக்கள் நல்லா வெடிச்சி இருக்கு சில தோட்டாக்கள் டம்மியாக போயிருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

Kaatru Veliyidai - காற்று வெளியிடை

காற்று வெளியிடை கண்ணம்மா 
இந்த படத்தை பற்றி என்ன சொல்லுவதம்மா ? 
கொஞ்சம் குழப்பம்மா இருக்குதும்மா , அது யாரால் வந்த காரணம்மா தெரியலம்மா ,

அழகான இடங்களம்மா , கண்களுக்கு குளிர்ச்சியம்மா அதை காட்டியவன் காணொளி மாயவன் , இவன் கைகளால் தூரிகைகள் கொண்டு வரைந்தவன் அல்ல , கண்களை துரிகையாய் கொண்டு வரைந்த ரவி வர்மனம்மா(கேமராமேன்) 

வழக்கமான  மணியின் மணி மணியான காட்சிகளம்மா , அதற்கு  இதயத்துடிப்பு சேர்த்தவன் ரகுமானம்மா  , ஒரு ஒரு காட்சிக்கும் காதல் கரைபுரண்டு ஓடினாலும் அதில் நனைவதற்கு  மனசில்லையம்மா , காரணம் ஏனோ ?

அட படத்தில கார்த்தி இப்படி தான் பாரதியார் கவிதைகள் எல்லாம்  சொல்லுவார் , அதுபோலவே  நாமளும் நம்ம விமர்சனம் பண்ணலாம் பார்த்தேன் ,அடபோங்கப்பா இதுக்குமேல நம்மால இப்படி தான் எழுத முடியும்.

மணிரத்தினம் காதல் படங்களில் காதலுக்கு தனியா ஒரு வில்லனோ , வேற ஏதோ இருக்காது , காதலர்களே அவர்களுக்கு அவர்களே பிரச்சனையாக இருப்பாங்க , மௌனராகம் , அலைபாயுதே , ஓகே கண்மணி படத்தில் எல்லாம் இப்படி தான் இருக்கும் , இதிலும் இப்படி தான் இருக்கு , ஆனால் அந்த படங்களில் செய்த அந்த ஒரு மேஜிக் இதில் மிஸ்ஸிங் ,அந்த படங்கள் பார்க்கும் போது நாமும் அந்த காதலுக்குள் ஒரு அங்கமா இருப்போம் , அது இந்த படத்தில் மிஸ்ஸிங் , ரொம்ப அந்நியமா தெரிகிறது இந்த காதல் , காரணம் ஹீரோயினா ? ஹீரோவா ?
அதுமட்டுமல்ல படத்தில் கார்த்தி மற்றும் அதிதியின் அப்பா அம்மாவாக வருபவர்கள் ரொம்ப அந்நியமா இருக்காங்க , தமிழர்கள் தானே ஏன் தமிழ் முகங்கள் போடலை ? சாரட்டு வண்டியில பாட்டு காட்சியமைப்பு பார்த்தா ரொம்ப அந்நியமா வடநாட்டு காட்சியாக வச்சியிருக்கார் , சமீபத்தில் மணிரத்தினத்தின் பேட்டியில் நிருபர்,  ஏன் ராவணன் படத்தில் கல்யாணம் காட்சிகள் எல்லாம் ரொம்ப அந்நியமாக இருந்ததுன்னு கேட்டார் , அதுக்கு மணிரத்தினம் அந்த படம் ஹிந்தி , தமிழ் ரெண்டிலும் எடுத்தது ,ஒன்னு ஒண்ணுத்துக்கும் தனி தனியா செட் போட முடியாது , பட்ஜெட் பார்க்கணும் அதான் , அது எல்லாம் தவறு தான் அவரே சொன்னாரு , ஆனா இந்த படம் வெறும் தமிழ், தெலுங்கில் மட்டும் தான் வருது , மேலும் என்னதான் அந்த கல்யாணம் டெல்லியில் நடந்தாலும் ,  அந்த பாட்டுக்கு முன்னாடி , கார்த்தி சொல்லுவார் இவங்க தான் எங்க அம்மா பாரதியும் , மீன் குழம்பும் சேர்த்து கொடுத்தாங்கன்னு சொல்லுவார் , அப்படி  சொல்லிட்டு அந்த வீடு , பாட்டு அங்க இருக்கும் ஆட்கள் எல்லாம் தமிழாக தெரியல.

கார்த்திக்கும் , அதிதிக்கும்  காதல் , மோதல் , அவளின் விட்டுக்கொடுத்தல் , கார்த்தியின் மூர்க்கத்தனம் இரண்டுபேருக்கும் உள்ள  இருக்கும் நெருக்கம் இருந்தாலும் , அந்த காதலுக்கும் பார்வையாளருக்கு நெருக்கம் வரல அதுவே இந்த படத்தின் மிக பெரிய மைனஸ், நம்ம பாஷையில்  சொல்லணும்ன்னா கெமிஸ்ட்ரி செட் ஆகல போல .பேசாம வேற யாரையாவது போட்டு இருக்கலாமோ தோணுது .

அதிதி கார்த்தியயை தேடி பேஸ் கேம்ப்க்கு போவது , அலைபாயுதே படத்தில் மாதவன் ஷாலினியை தேடி போவது ஞாபகம் படுத்தியது  .அதிதி ரொம்ப நல்லா நடிச்சியிருக்காங்க டப்பிங் உதடு அசைவுகள் எல்லாம் செம்மையா இருக்கு , ஆனா படத்தில் ஏதோ ஒரு மிஸ்ஸிங் feel , ஒரு வேளை ரகுமானின் பின்னணி இசை இன்னும் காதல் சேர்த்து இருக்கலாமோ  தோணுது .

படம் நிறுத்தி நிதானமா பொறுமையாக போகுது , இரண்டாவது பாதி ரொம்ப நிதானமா போகுது , பொதுவா அவரின் படங்கள் சிட்டி மக்களை திருப்தி படுத்தும் இல்லைன்னா ,அவரின் ரசிகர்களுக்கு திருப்திபடுத்தும் , இது இந்த இருவர்களையும் திருப்திபடுத்துவது கடினம் .

மொத்தத்தில் காற்று வெளியிடை காற்றோடு காற்றாக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 1 ஏப்ரல், 2017

Kavan - கவண்

ஹலோ பிரபா வைன் ஷாப் ஓனரா? எப்போ சார் கடையை திறப்பீய்ங்கன்னு கேட்கிறாமாதிரி , கவண் review எப்போ போடுவீங்க? கவண் பார்க்கலையான்னு சில நண்பர்கள் நேத்துல இருந்து கேட்டுட்டாங்க ,எப்பா நண்பர்களே  இந்தாங்க review போடுறேன் படிச்சிகோங்க 

கடந்த டிசம்பர் மாசத்துல இருந்து ஏன் போன வருஷ தேர்தல் நேரத்தில இருந்தே இந்த டிவி காரங்க பண்ணுற அட்டகாசம் கொஞ்ச நெஞ்சம் இல்ல , அவங்க என்னவெல்லாம் தகுடுதனம் பண்ணுவாங்கன்னு தோலுரித்து காட்டினது தான் இந்த கவண் ,இந்த மீடியாவின் உண்மை முகத்தை காட்டி வந்த சில படங்களில் போலோகம் ஒரு விளையாட்டை வச்சி எப்படி இந்த மீடியா விளையாடுதுன்னு காட்டியது , ஆனால் இந்த படம் முழுக்க முழுக்க மீடியாவின் முழு முகத்தையும் காட்டி இருக்கு .

படத்தின் பிடிச்ச விஷயங்கள் , எப்படி இந்த டிவி சேனல் இயங்குதுன்னு , அதன் technical விஷயங்கள் மக்களுக்கு புரிகிறா மாதிரி முதல் காட்சியிலே காட்டியிருப்பது  நாமும் அந்த சேனல்க்கு போனா மாதிரி ஒரு உணர்வு , மேலும்  அதுக்கு அப்புறம் இந்த ரியாலிட்டி ஷோக்களில் அவங்க பண்ணும் அட்டகாசம் , ஒரு அரசியல்வாதி பற்றி எப்படி எல்லாம் காசுக்காக நல்லவனாகவும் , கெட்டவனாகவும் காட்டி இருப்பது செம்ம ,பிறகு நாம் நினைக்கும் பல விஷயங்கள் படத்தில் கேள்விகளாக வெளிப்படுவது நம்மை கைதட்ட வைக்குது .  குறிப்பாக மார்க்கெட்டிங் விஷயங்கள் , ஒரு சில காட்சிகள் வைத்து அதை அவர்களுக்கு ஏற்ப மாற்றுவதுன்னு , இது எல்லாம் பார்க்கும் போது அடப்பாவிங்களா  இப்படியெல்லாம் நடக்குதான்னு கேட்க தோணுது ,படத்தின் கதை டிவில் நடக்கும் அவலங்கள் அவ்ளோதான் 
 இரண்டாவது பாதி கடைசி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு நம்மால் யூகிக்க முடிவதால் அது பெரிய impact மனசுல வரல , ஆனால் அது bore அடிக்கல .முக்கியமா இண்டெர்வெல் பிளாக் அல்டிமேட் சூப்பர் , எப்படியோ எதிர்பார்த்து எப்படியோ இன்டெர்வல் வச்சிட்டாரு , அதை படம் பார்த்து தெரிஞ்சிகோங்க.

கே.வி .ஆனந்த்க்கு ஒரு முத்திரை இருக்கு , அது இதுலயும் காட்டி இருக்கார் , முக்கியமா கதை , அவரோட கதை கொஞ்சம் சமூதாய பார்வையோடு இருக்கும் , அதே நேரத்தில் மசாலா தேவையான அளவுக்கு கலந்து கொடுப்பார் , அப்புறம் அவரோட படத்தின் நடிகர்கள் , ஜெகன் , விஜய் சேதுபதியின்  அம்மாவாக, அப்பாவாகவும்  வருபவர்கள் , ரியாலிட்டி ஷோவில் வரும் இரண்டு ஜட்ஜ், அதில் ஒருவர் அயன் படத்தில் நகை கடை ஓனராக வருபவர் , இதில் போலீஸாக வருபவர்   , முக்கியமா வில்லன் அயன் படத்தில் நடித்தவர் , போஸ் வெங்கட் இப்படின்னு அவரோட கோ , அயன் படத்தில் நடிச்சவரகள் நிறையபேர் இதில் இருக்காங்க, மேலும் சில காட்சிகள் ரெஸ்ட்ரூம் காட்சி ,  கிட்டதிட்ட கோ படத்தின் காட்சி ஞாபகம் படுத்தியது , ஒரு வேளை  அவருக்கு ரெஸ்ட்ரூம் காட்சி வெற்றி சென்டிமென்ட்டோ ? அதே போல கிளைமாக்ஸ் காட்சி ஒரு சஸ்பென்ஸ் வச்சி அப்புறம் பிளாஷ் பேக் காட்டுவது அவரோட ஸ்டைல் . அப்புறம் ஒரு சண்டை காட்சியில் நிச்சயமா வேகமா பறந்து அப்படியே கொஞ்சம் slow பண்ணி அதை freeze பண்ணி அதுக்கு ஒரு different soft bgm போடும் காட்சி நிச்சயமா இருக்கும், இதுலயும் இருக்கு அது.

  
விஜய்சேதுபதி மனுஷன் எந்த கேரக்டர் பண்ணாலும் பின்னுகிறார் , அந்த ஹோட்டல் காட்சி , interview காட்சி , opening காதல் காட்சி பக்காவாக பண்ணி இருக்கார் , அவருக்கு ஒரு குறைன்னு சொன்னா அது அவரோட ஹேர் ஸ்டைல் தான் , அவருக்கு இந்தபடத்தில் செட் ஆகல ,அட முக்கியமான நம்ம டி, ஆர் அவரை பற்றி சொல்லனும்னா அவரோட வழக்கமான வசனங்கள் படத்தில தேவையான அளவுக்கு யூஸ் பண்ணி இருக்கார் , அவரோடைய வழக்கமான  பன்ச் வசனங்களுக்கு  மக்கள் கை தட்டுறாங்க .

மெடோனா  செபாஸ்டின் , விக்ராந்த் ,கிருஷ்ணா , பாண்டியராஜன் , இவங்க எல்லாம் அளவா பயன்படுத்தி இருக்காங்க , அதை அவங்களும் நல்லா பண்ணி இருக்காங்க .

ஹிப் ஹாப் தமிழா பாடல் ஹிப் ஆகவும் இல்ல ,பெப் ஆகவும் இல்ல , பாப்புலர் ஆகவும் இல்லை.

ஒரு ஒரு கட்சிகளும் நடத்தும் ஒரு ஒரு டிவி சேனலுக்கு  இந்த படம் ஒரு செருப்படி , ஆனா இந்த படத்தை வாங்கியது எந்த கட்சி டிவியோ ?

மொத்தத்தில் கவண் மீடியாவை கவ்வியவன் , மக்கள் மனதை கவர்ந்தவன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்