வியாழன், 14 ஏப்ரல், 2016

Theri - தெறி

தெறிக்க விடலாமா ??  அட அது தல வசனம் ... ஐயோ நம்ம அந்த சண்டைக்கு எல்லாம் போகல..தளபதி படம் தெறி, தெறிக்குமா தெறிகாதா அட அது மட்டும் பார்ப்போம்.

படம், படத்தோட கதை பார்க்கிறதுக்கு முன்னாடி, நிச்சயமா தளபதியை  பாராட்டியே தீரனும், அப்படி ஒரு கெத்து ஸ்க்ரீன்ல தெறிக்க விடுறாரு, 40 வயசுல உடம்பை செம்மைய maintain பண்ணுறாரு, மாஸ் பக்காவா அளவா கொடுத்து இருக்காரு, ரொம்ப build up பண்ணாம , தேவையில்லாம பஞ்ச் வசனம் பேசி போர் அடிக்காம, அவரோட ரசிகர்களை மட்டும் மேலும் குழந்தைகளை மட்டும்  திருப்தி படுத்தனும் நினைக்காம, ஒரு general audience கூட பிடிக்கிறா மாதிரி படம் கொடுத்து இருக்காரு, அவர் இது மாதிரி இனி வரும் படங்களையும் செய்தால்   நிச்சயமா அவருக்கு தோல்வி படம் அமையாது,  நிறைய இடங்களில் ரொம்ப ஆசால்ட்டா, casual expression பண்ணி ஸ்கோர் பண்ணிட்டு போறாரு, அந்த பாலத்து மேல மொட்டை ராஜேந்திரன் கிட்ட பேசும் போதும் சரி, இண்டர்வல் பிளாக்ல்  சரி, கிளைமாக்ஸ்ல சிரிக்கும் போதும் சரி, குழந்தை கிட்ட பேபி பேபின்னு  பேசும் போதும் சரி செம்ம,அதுவும் ஒத்த சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் போல அதே போல  ஒரு expression பண்ணிட்டு ஆட்டம் போடுவது செம்ம,  முருகதாஸ் போல நிச்சயமா அட்லி அவரை அழக handle பண்ணி இருக்காரு தான் சொல்லணும், இன்னும் நிறைய மாஸ் சீன்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு அதை படத்தில் பாருங்க.

ஹீரோயின் சமந்தா & எமி , எமி பெருசா ரொம்ப பயன்படுத்தவில்லை, சமந்தா ஒரு மசாலா படத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ சரியான அளவுக்கு கதைக்கு தேவையான அளவுக்கு பயன்படுத்தி இருக்காரு,கொஞ்ச நாள் முன்னாடி வரை சரண்யா தான் அம்மாவா வந்து காமெடி எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ அதே போல ராதிகா பண்ணி இருக்காங்க தளபதியும், ராதிகாவும் combination நல்லா இருக்கு,  மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல ஸ்க்ரீன்ல வந்தவுடன் செம்ம கை தட்டு மற்றும் செம்ம வரவேற்ப்பு , அதுவும் அவர் iam waiting சொல்லும் போது தியேட்டர் விசில் கிழிது.
அப்புறம் முக்கியமான கேரக்டர் அந்த குழந்தை நைனிக்கா, அந்த கேரளாவுல நடக்கிற சீன்ஸ் எல்லாம் நல்லா அழகா பண்ணி இருக்கு, தாத்தா சாரி கேளுங்க அப்படின்னு சொல்லும் போது சூப்பர்.

இசை ஜி.வி  பாடல்கள் ரொம்ப சுமார்,ஜித்து ஜில்லாடி பாட்டை தவிர அதுவும் மொதலில் கேட்க்கும் போது ரொம்ப சுமார் தான், ஆனால் படத்தில் விஜய்க்காக பார்க்கும் போது நல்லா இருந்துச்சி.அந்த பாட்டில்  அட்லி டைரக்டர் ஷங்கர் மாணவன்னு நிருபிச்சிட்டாரு ஏன்னா அந்த பாட்டில சுத்தி இருக்க பில்டிங்க்கு எல்லாம் பெயிண்ட் அடிச்சிட்டாரு , எல்லாருக்கும் கண்ணாடி மாட்டிடாரு , BGM பக்கா தெறி மாஸ் சீன்ஸ்க்கு சரியா பொருந்தி இருக்கு.

கதை வெறும் பழி வாங்கும் கதை தான்,இந்த படம் teaser வரும் போதே நிறைய பேர் இது சத்ரியன் ரீமேக்ன்னு சொன்னாங்க, கிட்ட திட்ட இது அது போல ஒரு கதை தான், ஏன்னா சதிர்யன் ஒரு trend  setting போலீஸ் படம், அதனால சொல்லி இருப்பாங்க,

முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாவுது பாதியில் இல்லை, படம் ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்தில பிளாஷ் back போனது ஒரு மிக பெரிய பிளஸ், ஆனால் அது ரெண்டாவுது பாதியிலும் கொஞ்சம் தொடர்ந்து செண்டிமெண்ட் எல்லாம் வச்சது கொஞ்சம் போர் அடிக்குது, இரண்டாவுது பாதியில் தளபதியும், வில்லனாக வரும் இயக்குனர் மகேந்திரன்னும் மோதும் காட்சி இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தால் படம் இன்னும் தீயா பத்திக்கிட்டு fastah போயிருக்கும்,  இயக்குனர் மகேந்திரனை அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லைன்னு எனக்கு தோணுது.

குறிப்பு : தளபதி ஒரு software கம்பெனில விசாரிக்கிற சீன வரும் அது எங்க officeல ஷூட் பண்ணாங்க, அதனால இந்த படத்தையோ அல்ல எங்க அலுவகதையோ நான் promote பண்ணல. இது ஒரு சும்மா குறிப்பு + விளம்பரம் தான். இன்னொரு குறிப்பு நான் தல அல்லது தளபதி ரசிகன் அல்ல ஒரு சினிமா ரசிகன் **... இல்லாட்டி நம்மல கல்லாய்ச்சிடுவாங்க எல்லாம் ஒரு safetyக்கு தான் 

மொத்ததில்  ஒரு சாதாரண ரசிகனுக்கு கொடுக்கும் 120க்கு வசூல் தரும் படம்

இப்படிக்கு
சினி கிறுக்கன்
#Theri
#cinekirukkan

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

Hello Naan Pei Pesuren - ஹலோ நான் பேய் பேசுறேன்

சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் ? பக்காவா மசாலா கலந்த காமெடியா இருக்கும், அதே போல அவர் தயாரிப்பில் வந்த இந்த படமும் அப்படி மசாலா + காமெடி + பேய்  தான் . இந்த மசாலா எப்படி செய்வது ? காமெடி காட்சிக்கு  கொஞ்சம் யாமிருக்க பயமேன் +  கொஞ்சம் டார்லிங்  , பயப்பட வைக்கும் காட்சிகளுக்கு காஞ்சுரிங்கள கொஞ்சம், கதை கருவுக்கு யாவரும் நலம் கிளைமக்ஸ்ல் இருந்து கொஞ்சம் , அட ஆமாங்க யாவரும் நலம் படத்துல கடைசி காட்சி பேய் மொபைல்ல கூட வரும்ன்னு சொல்லி முடிச்சி இருப்பாங்க , அதை referenceah  வச்சி இந்த படத்தை ஆரம்பிச்சி இருப்பாங்க போல, அப்புறம் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் காஞ்சானா எல்லாம் மிஞ்சியாச்சு.

அட படத்தில எந்த லாஜிக் எதுவும் பார்க்க கூடாது ,அதே போல கதையும் என்னன்னு கேட்க கூடாது , அடிச்சு கேப்பாங்க அப்போவும் கேட்க  கூடாது , அட பேயே வந்து அடிச்சாலும்  கதை என்னன்னு கேட்க கூடாது,  ஏன்னா கதை ரொம்ப சப்பை மேட்டர் அதோட பிளாஷ் பேக் சத்தியமா இப்படி யோசிக்க முடியாது , இந்த கதைய  அப்படியே ஏ.வி .ம் ஸ்டூடியோ   முன்னாடி இருக்கும் ஏ.வி .ம் உருண்டைல செதுக்கி வச்சா பின்னாடி வரும் சந்ததைர்கள் அதை பார்த்து  தெரிஞ்சிப்பாங்க. ஏன்னா அந்த கிளைமாக்ஸ் அப்படி இருக்கும்..யெப்பா டேய்  எப்படிபா  இப்படி கிளைமாக்ஸ் யோசிச்சீங்க ?

சரி கதை விடுங்க , காமெடி எப்படி இருக்கு நிச்சயமா நல்லா சிரிக்கலாம் , அதுவும் வைபவ் ஆரம்பத்தில் பண்ணும் காட்சிகள் சுமார் தான் என்றாலும்  , பேய் வந்த பிறகு , வைபவ் , வி டி வி கணேஷ் , சிங்கப்பூர் தீபன் பண்ணும் காமெடி தான் நல்லா இருக்கு அதுவும் அந்த வீடுக்குள போவது, ஒரு கற்பனை பேய் வீட்டுக்கு போவது அங்க பண்ணும் அலப்பரை தான் காமெடி, மற்றப்படி சாவு குத்து போட்டி எல்லாம் வைப்பது  இரண்டாவுது பாதியில் நடிகர்  சிங்கம்புலி வருவது எல்லாம் மொக்கை தான் ,யோகி பாபு (பண்ணி மூஞ்சி வாயன் ) கொஞ்சம் சீன்  வந்தாலும் செம்ம காமெடி , அதுவும் அவர் இந்தி பாட்டு பாடுவது ,கத்தி படம் போல பிளான் பண்ணுவது அல்டிமேட் காமெடி ,கருணாகரன் அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை 

ஹீரோயின் ஐஸ்வர்யா கதைக்கு அளவான கேரக்டர் , ஓவியா வீட்டுல மைதா மாவு, கடலை மாவுன்னு முகத்தில facial போட்டுக்கிட்டு இருக்கும் போது டைரக்டர் பார்த்து இருப்பாரு போல அட வாமா என் படத்துக்கு நீ தான்  பேய்ன்னு சொல்லிட்டு அப்படியே கூட்டிகிட்டு வந்து இருப்பாரு போல, ஏன்னா ஓவியாவுக்கு போட்டு இருக்கும் பேய் மேக்கப் அப்படி தான் இருக்கு .

மொத்தத்தில் காரணம் இல்லாமல் லாஜிக் பார்க்காமல் கொஞ்சம் சிரிச்சிட்டு வரலாம் 

இப்படிக்கு சினி கிறுக்கன் 

#cinekirukkan  #hello #naan #pei #pesuren


Amazon.in

சனி, 2 ஏப்ரல், 2016

Darling-2 - டார்லிங்

இரண்டு வாரமா  பேய் வராம் , அதுவும் இந்த வாரம் இரண்டு பேய் படம் வந்து இருக்கு, எப்போ தான் இந்த பேய் trend நம்ம தமிழ் சினிமாவுல முடியுமோ ?


ஜி . வி பிரகாஷ் நடித்த டார்லிங்  படத்துக்கும் இந்த டார்லிங்-2 க்கும்  சம்பந்தம் இல்ல, அப்போ என்ன தான் இந்த படத்துல இருக்கு?

அட போங்கப்பா எல்லா பேய் படத்துல இருக்கறது தான் இதுலயும் இருக்கு , நிச்சயமா ஒரு பிளாஷ் back அதுக்கு பழிவாங்குற கதை தான், அது ஒரு ஸ்ட்ராங்கான கதையாவும் , சுவாரசியமான திரைக்கதையும் இருந்தா நிச்சயமா அது நல்லா இருக்கும் , ஆனா அது இரண்டும் இதுல மிஸ்ஸிங் , ரொம்ப எதிர்பார்த்த மாதிரி தான் திரைகதை அமைப்பு இருக்கு எதை நோக்கி எப்படி அடுத்த காட்சி வரும்ன்னு தெரியற மாதிரி தான்  இருக்கு, குறிப்பா இண்டர்வல் காட்சி , அந்த அனிஷா கேரக்டர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்தா மாதிரி தான் இருக்கு , மேலும் இப்போ வர பேய் படம் காமெடியும் இருக்கணும் நினைக்கிறாங்க அதுவும் இதுல இருக்கு, ஆனா காமெடி படத்துல அங்க அங்க வந்து படத்தை தூக்கி நிறுத்தி  இருக்குன்னு சொல்லலாம் , குறிப்பா காளிவெங்கட் , சிப்ஸ் கேட்டு சாப்பிடும் ஹரி , முனிஷ்காந்த் நல்லா பண்ணி இருக்காங்க 

படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் கேமரா தான் செம்ம fresh feeling அதுவும் அந்த வால்பாறை சீன்ஸ் , இரவு காட்சி எடுக்க பட்ட outdoor scenes அந்த வீட்டுக்குள்ள காட்டும் காட்சி, நாமே அங்க இருக்க மாதிரி ஒரு உணர்வு கொடுத்து இருக்காரு, அப்புறம் நம்ம வடிவேலு சொல்லுறா மாதிரி பேய் வந்தா டமால் டம்மால் பாத்திரம் விழுதாம் ,லைட் ஆப் ஆகுதாம் , இப்படிபட்ட காட்சிகள் கேமராமேன் நல்லா பண்ணி இருக்காரு 

ராதன் இசையில  பாடல்களில் ரொம்ப  சுமார் தான், ஆனால் அந்த டூயட் சாங் மெலடி நல்லா இருக்கு, அது என்னவோ ஹீரோயின் முஸ்லிம் என்பதால் ஹார்மனி மெல்லிசா ஓட வச்சி ஒரு பாட்டு போட்டு இருக்காரு அது என்னவோ எனக்கு பம்பாய் படத்துல வரும் கண்ணாலனே பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு, ஒரு வேலை அந்த மாதிரி பாட்டு வேண்டும்ன்னு டைரக்டர் சொல்லி இருப்பாரு போல 

படம் இன்னும் பக்கா சீரியஸ் த்ரில்ராக இருந்து இருக்கலாம் இல்லைன்னா full காமெடி பேய் படமாக இருந்து இருக்கலாம் 

மொத்தத்தில் டார்லிங்-2 ஓகே ரகம் டார்லிங் தான் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்

#cinekirukkan #darling2