சனி, 2 ஏப்ரல், 2016

Darling-2 - டார்லிங்

இரண்டு வாரமா  பேய் வராம் , அதுவும் இந்த வாரம் இரண்டு பேய் படம் வந்து இருக்கு, எப்போ தான் இந்த பேய் trend நம்ம தமிழ் சினிமாவுல முடியுமோ ?


ஜி . வி பிரகாஷ் நடித்த டார்லிங்  படத்துக்கும் இந்த டார்லிங்-2 க்கும்  சம்பந்தம் இல்ல, அப்போ என்ன தான் இந்த படத்துல இருக்கு?

அட போங்கப்பா எல்லா பேய் படத்துல இருக்கறது தான் இதுலயும் இருக்கு , நிச்சயமா ஒரு பிளாஷ் back அதுக்கு பழிவாங்குற கதை தான், அது ஒரு ஸ்ட்ராங்கான கதையாவும் , சுவாரசியமான திரைக்கதையும் இருந்தா நிச்சயமா அது நல்லா இருக்கும் , ஆனா அது இரண்டும் இதுல மிஸ்ஸிங் , ரொம்ப எதிர்பார்த்த மாதிரி தான் திரைகதை அமைப்பு இருக்கு எதை நோக்கி எப்படி அடுத்த காட்சி வரும்ன்னு தெரியற மாதிரி தான்  இருக்கு, குறிப்பா இண்டர்வல் காட்சி , அந்த அனிஷா கேரக்டர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்தா மாதிரி தான் இருக்கு , மேலும் இப்போ வர பேய் படம் காமெடியும் இருக்கணும் நினைக்கிறாங்க அதுவும் இதுல இருக்கு, ஆனா காமெடி படத்துல அங்க அங்க வந்து படத்தை தூக்கி நிறுத்தி  இருக்குன்னு சொல்லலாம் , குறிப்பா காளிவெங்கட் , சிப்ஸ் கேட்டு சாப்பிடும் ஹரி , முனிஷ்காந்த் நல்லா பண்ணி இருக்காங்க 

படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் கேமரா தான் செம்ம fresh feeling அதுவும் அந்த வால்பாறை சீன்ஸ் , இரவு காட்சி எடுக்க பட்ட outdoor scenes அந்த வீட்டுக்குள்ள காட்டும் காட்சி, நாமே அங்க இருக்க மாதிரி ஒரு உணர்வு கொடுத்து இருக்காரு, அப்புறம் நம்ம வடிவேலு சொல்லுறா மாதிரி பேய் வந்தா டமால் டம்மால் பாத்திரம் விழுதாம் ,லைட் ஆப் ஆகுதாம் , இப்படிபட்ட காட்சிகள் கேமராமேன் நல்லா பண்ணி இருக்காரு 

ராதன் இசையில  பாடல்களில் ரொம்ப  சுமார் தான், ஆனால் அந்த டூயட் சாங் மெலடி நல்லா இருக்கு, அது என்னவோ ஹீரோயின் முஸ்லிம் என்பதால் ஹார்மனி மெல்லிசா ஓட வச்சி ஒரு பாட்டு போட்டு இருக்காரு அது என்னவோ எனக்கு பம்பாய் படத்துல வரும் கண்ணாலனே பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு, ஒரு வேலை அந்த மாதிரி பாட்டு வேண்டும்ன்னு டைரக்டர் சொல்லி இருப்பாரு போல 

படம் இன்னும் பக்கா சீரியஸ் த்ரில்ராக இருந்து இருக்கலாம் இல்லைன்னா full காமெடி பேய் படமாக இருந்து இருக்கலாம் 

மொத்தத்தில் டார்லிங்-2 ஓகே ரகம் டார்லிங் தான் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்

#cinekirukkan #darling2





1 கருத்து:

Comments