ஞாயிறு, 27 மார்ச், 2016

Zero - ஜீரோ

மிதக்கும் மரம் , தலைகீழ் நடக்கும் ஹீரோயின் , வெள்ளை கருவிழி கொண்ட பெண்கள் . அட இது எப்போதும் போல வரும் நம்ம பேய் படம் trend தான் நினைச்சேன் , ஆனா இந்த படம் ஒரு புது மாதிரி கதைகளம் கொண்டு எடுத்து இருக்காங்க , ஜீரோவின் அர்த்தம் என்ன ? படம் பார்த்து முடிக்கும் போது அது தெரியும் .

முதல் பாதி வரை, இது எந்த மாதிரி படம்? பேய் படமா ? சைக்கலாஜிக் thriller ah ?இல்ல split personality   concept ah ? அப்படின்னு ஒரு யோசனை நம்மக்கு interval வரைக்கும் அது இருக்கு , அந்த interval பிளாக்ல பல அஷ்வின் கேரக்டர் வந்து ஹீரோயின் குழம்பும்போது, நமக்கும் எது நிஜம் எது  பொய்ன்னு   தெரியாம டைரக்டர் நம்மை குழம்பவச்சி இருக்காரு, இப்படி படத்தோட ஒன்ற வச்ச டைரக்டர்க்கு ஒரு பெரிய வாழ்த்துகள் 

இரண்டாவுது  பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்துல ஹீரோயின்க்கு என்ன பிரச்சன்னைன்னு சொல்லிட்டு, அதோட காரணத்தை பிற்பாதியில் இது வரை  யாரும் முயற்சிக்கதவண்ணம் கொடுத்து இருப்பது அருமை , உண்மையில் இது ஒரு புது விதமான கதை கரு யோசிச்சி இருக்காரு 

படத்தோட பிளஸ்  நிவாஸின் இசை , ஹீரோயினை சரியான இடத்துல மிரளவைப்பது அதே போல நம்மையும் இசையின் மூலமாகவும் , எடிட்டிங் மூலமாகவும் மிரளவைப்பது சூப்பர்  ,  மேலும்  கதையோட knot சரியான  இடத்துல திறந்தது தான்,  மேலும் ஹீரோயின் ஷிவதா நடிப்பு மாபெரும் பிளஸ் , ஹீரோ அஷ்வின் என்றாலும் அவர் ஷிவதாவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு தான் சொல்லணும் , சக்ரவர்த்தி கேரக்டர் அவருக்கு சரியா  இருக்கு ஆனா கிளைமாக்ஸ்ல் வரும்  காட்சிகள் எப்படி முடிப்பதுன்னு தெரியாம எப்படியோ முடிச்சிட்டாறு ஏன்னா எடுத்த கதைகளம் ரொம்ப பெரிய விஷயம் , மேலும் கடைசியா வரும் சில சீரியஸ் காட்சிகள் நம்ம மக்கள் புரிஞ்சிக்காம சிரிக்கிறாங்க ஆனா அதுவே இங்கிலீஷ் படத்தில  வந்தால் ரசிப்பாங்க .

புது டைரக்டர் புது முயற்ச்சி நிச்சயமா போயிட்டு பார்த்துட்டு வரலாம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments