வியாழன், 26 ஜனவரி, 2017

Athey Kangal - அதே கண்கள்


C.V.குமார் தயாரிப்பு படம்ன்னா ஒரு அளவு நம்பி போகலாம் , அந்த நம்பிக்கையில் தான் இந்த படத்துக்கு போனேன், அந்த நம்பிக்கை வீண் போகலை

அதே கண்கள் இந்த படம் வெறும் 120 நிமிஷங்கள் தான் , அழகா அளவா எடுத்த படம் , அதனால விமர்சனமும் அளவா கொடுக்கலாம் நினைக்கிறேன் ,

படத்தின் கதைக்கு  ஏற்ற படத்தின் பெயர் , படத்தில்  தேவை இல்லாத காட்சிகள்  எதுவும் இல்லை , பெருசா லாஜிக் ஓட்டைகள் இல்லை , படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரத்தில் படத்தின் கதைக்குள் திரைக்கதை போகுது , படத்தின் ப்ளஸ் பாயிண்ட் சொல்லணும்ன்னா , கலையரசன் நல்லா நடிச்சி இருக்கார் , முட்டை கண்ணு  ஜனனி படத்தின் தேவையான அளவுக்கு இருக்காங்க , ஷிவதா அருமையாக கடைசி காட்சிகளில் பண்ணி இருக்காங்க , முக்கியமா பாலசரவணன் படத்தை நகர்த்துவதற்கு உதவுகிறார் , அதுவும் அவர் ஒரு சேசிங் சீன்ல்  படிக்கட்டில் ஓடும் காட்சி செம்ம சிரிப்பு , அங்க அங்கே timingல் வசனங்கள் நல்லா எடுத்து கொடுக்கிறார் , போலீஸ் கெட்டப்பில் பார்த்த உடனே திருடன் போலீஸ் படம் தான் ஞாபகத்துக்கு வருது ,   ஜிப்ரான் இசை நல்லா இருக்கு , location எல்லாம் நல்லா இருக்கு , படம் எங்கேயும் bore  அடிக்கல , ஆனால் சில இடங்கள் short film போல ஒரு feel .

படத்தின் பெரிய மைனஸ் கதை ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்திலே இது இப்படி தான் போகும்ன்னு தெளிவா தெரியுது , அதனாலா பின்னாடி வரும் சில விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு அது ஒரு பெரிய impact ஆகல, ட்விஸ்ட் என்று நினைத்த இடங்கள் ட்விஸ்ட் ஆகா தெரியல .

மொத்தத்தில் அதே கண்கள் இன்னும் கொஞ்சம் தெளிவான பார்வை கொண்டதாக இருந்து இருக்கலாம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 14 ஜனவரி, 2017

Koditta Idangalai Nirappuga - கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபன் படம்ன்னா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ,அதுவும்  அவரோடைய முந்தைய படம்  கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது , அந்த படத்தை போல எதிர்பார்த்து போக வேண்டாம் , அதே நேரத்தில் வழக்கமாக வரும் மசாலா படத்திலிருந்து மாறுபட்டது தான் இந்த படம் ,

படத்தின் ஆரம்பத்திலிருந்து அவர் கோடிட்ட கதையை நாமே நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று நினைச்சிட்டாரு போல,  சாந்தனு வந்ததிலிருந்து என்ன கதை? இது பேய் படமா ? காமெடி படமா ? திரில்லர் படமா ? இல்லை பெண்ணியம் பற்றிய படமா ? அல்ல சமூகத்தின் ஆண்கள் மனநிலை பற்றிய படமா ? என்று நம்மை  கொஞ்சம் நேரம் யோசிக்க வச்சாரு , பார்த்திபன் அவருக்கு என்று இருக்கும் குசும்பு வசனங்கள் இதுலயும் இருக்கு , ஆனால் சில  இடங்களில் இரட்டை அர்த்தம் வசனங்களும்  இருக்கு , ரஜினியை  பற்றிய வசனமும் , ஒரு குடை  கம்பி பற்றிய வரும் வசனமும் சூப்பர்,  மனுஷன் படம் ரொம்ப ட்விஸ்ட்ன்னு நினைச்சு கடைசியா ஒன்னு வைச்சார் , எனக்கு என்னமோ அது ஒரு பெரிய ட்விஸ்ட் போல தெரியல ஏன்னா படம் ஆரம்பிச்சு கொஞ்சம் நேரம் குழப்பமாக இருக்குன்னு சொன்னேன்ல , அதுக்கு அப்புறம் அங்கேயே தெரிஞ்சிடுச்சி இந்த படம் என்ன கதை என்று , அதை வேற பாவம் படம் முடியும் போது அவரே நேரில்  தியேட்டர்க்கு வந்து படத்தோட கிளைமாக்ஸ் வெளியே சொல்லிடாதீங்க என்று சொல்லிட்டு போகிறார், சார் இப்போ இருக்க ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க .சார் ஏன் பார்வதி நாயருக்கு தாலியை வெளியேவே தொங்க விட்டு சுத்தவிட்டீங்க ?

சாந்தனு ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார் , அவர் இந்த படமாவது நல்லா பேரு வாங்கி ஹிட் ஆகும் நினைச்சி இருப்பர் , ஆனால் பேரு வேணும்ன்னா வாங்கி தரும் ஆனால் ஹிட் ஆகுறது கஷ்டம், நல்லா டான்ஸ் ஆடிஇருக்கீங்க , ஆனா அந்த பாட்டு படத்துக்கு தேவையில்லை அதையும் நீங்களே Fb ல சொன்னீங்க.

பார்வதி நாயர் , நீங்க மலையாளி என்பதால் மலையாள கேரக்டர் சரியாக இருக்கு , ஆனா நீங்க சிரிக்கும் போது ரொம்ப வயசான மாதிரி இருக்கு , சாந்தனுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க ,

தம்பி ராமையா அங்க அங்க வராரு அவளோதான் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு காட்டினார் ஆனால் சிரிப்பு வரலை 

மொத்ததில்  கோடிட்ட இடங்களை நிரப்புக,  படத்தை   பற்றி --------------------------- நீங்களே நிரப்புக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 12 ஜனவரி, 2017

Bairavaa - பைரவா - 100th

வணக்கம் சினி கிறுக்கனின் பொங்கல் நல் வாழ்த்துகள் , போன வருஷம் சில படங்கள் பார்த்தும் எழுத முடியல , அதனால் இந்த  வருஷத்தின் முதல் பதிவே நூறாவது பதிவாக இந்த பைரவா அமைந்துவிட்டது என்பதை மகிழ்ச்சியாக சொல்லிக்கொள்கிறேன் , ஐயோ !!.. மகிழ்ச்சி கபாலி சொல்லுவாருங்க  , பைரவா சிறப்புன்னு தான் சொல்லுவாரு , மறந்துட்டேன் பைரவான சிறப்புன்னு சொல்லவேண்டும் . சரியா ? அதனால எல்லா விஜய் ரசிகர்கள் இன்று முதல் சிறப்பு என்று சொல்லுங்கப்பா .

குறிப்பு : நான் விஜய் ரசிகனும் இல்லை , அஜித் ரசிகனும் இல்லை, நான்  ஒரு சினிமா ரசிகன் , இதை சொல்லலைன்னா நமக்கு ஆபத்து , அட இதை சொன்னாலும் சில பேரு திட்டுறானுக(குறிப்பு : திட்டுவது என் நண்பன் தான் ) .

இந்த படத்தை நான் எப்படி எதிர்பார்த்து போனேனோ அப்படியே தான் இருந்தது , அட ஆமாங்க அழகிய தமிழ் மகன் எப்படி இருந்திச்சின்னு நமக்கு  தெரியும் , அதனால நான் அந்த அளவுக்கு தான் எதிர்பார்த்து போனேன், அது அப்படியே இருந்திச்சி , பைரவா படத்தில் விஜயயை தவிர எல்லாமே ஏற்கனவே வறுத்த ரவா தான் இந்த பைரவா   

படத்தில் பாஸிட்டிவ் சொல்லுவதற்கு முன்னாடி , நெகடிவ் சொல்லியே ஆகணும், விஜய்யும் , கீர்த்தியும் bikeல்  போற சீன பார்த்தா அந்த காலத்துல எம் ஜி ஆர்  ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாட்டுல பின்னாடி screenல் ஓடவிடுவாங்க அதுபோல எடுத்து இருக்கார் , சார் இப்போ ஷார்ட் பிலிம் எடுப்பவன் கூட அந்த சீன்களை நல்லா எடுக்குறாங்க, opening கிரிக்கெட் சண்டை சின்ன பசங்களுக்கு மட்டும் தான் பிடிக்கும் , கிருஷ்ணஜெயந்தி காண்பித்து வீட்டுல கொழுக்கட்டை செஞ்சி வைக்கிறீங்க, சார் அந்த basic லாஜிக் கூட தெரியாதா ? கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு தான் பண்ணுவாங்க ,  அந்த laughing gas சீன் வச்சீங்க , ஊரே பார்த்து சிரிக்குது அந்த காட்சிக்கு ,  கிளைமாக்ஸ்க்கு முன்னாடி கண்டிப்பா ஒரு பாட்டு வைக்கணும் யார் சார் சொன்னது ? திருநெல்வேலி என்பதால் சில கேரக்டர் அப்போ அப்போ நெல்லை தமிழ் பேசுறாங்க அப்புறம் சாதாரண தமிழ் பேசுறாங்க, சார் இந்த continuity பார்க்க மாட்டிங்களா ? பெட்ரோல் அடிச்சி விஜய் ஓடும் காட்சி பார்த்த அட முதல்வன் போல ஓடி திருப்பி அடிப்பாரு பார்த்தா அவரை மொக்கை ஆக்கிட்டாங்க ,வாட்ஸ் ஆப்ல் முதல் பாதி சூப்பர் சொன்னாங்க , ஆனா முதல் 45 நிமிஷம் அறுந்த பழைய காதல் காட்சிகள் , சண்டை காட்சிகள் , அதுவும் காமெடி மரண மொக்கை , அந்த பிளாஷ் பேக் ஆரம்பிச்சி அந்த இன்டெர்வல் ப்ளாக் சண்டை நல்லா மாஸாக செய்து இருக்காங்க . அடப்போங்கப்பா இதுக்கு மேல என்னால நெகடிவ் சொல்ல முடியாது .
பரதன் சார் உங்களைவிட சின்ன வயசு பசங்க டைரக்ட் பண்ணறவங்க நல்லா matured ஆகா திரைக்கதை பண்ணறாங்க , ஆனா நீங்க நல்ல மெசேஜ் வச்சிக்கிட்டு இப்படி ஒரு முதிர்வு இல்லாமல் எடுத்து இருக்கீங்க அதுவும் மாஸ் ஹீரோவை வச்சி நாசம் பண்ணிடீங்க , பெரிய கதை இல்லாமல் அட்லீ தெறி படத்தை நல்ல சுவாரசியமா , மாஸாக பண்ணார் , ஆனா நீங்க விஜயயை வச்சி எங்களுக்கு நல்லா செஞ்சிட்டிங்க .

விஜய் பற்றி சொல்லணும்ன்னா மனுஷன் 40 வயசுக்கு மேலே  , ஆனா மனுஷன் பக்காவா smart ஆகா இருக்கார் , சார் படத்தில பல இடங்களில் ஒரு ராகம் போட்டு பேசுறீங்க அது நல்ல இல்லை சார் இனிமேல் அதுபோல பண்ணாதீங்க ,அப்புறம் அந்த காசு கையில் சுற்றுவது, gunல் bullet  வச்சி பாலாஜி கிட்ட விளையாடுவது 80s , 90s ல் பண்ணிட்டாங்க  , குறிப்பா இனிமேல் இந்த டைரக்டர் கூட சேரவே சேராதிங்க , இவர் ஒரு modern பேரரசு போல மனுஷன் உங்களை வச்சி செஞ்சிட்டாரு ,  முடிச்சா மீண்டும் முருகதாஸ் , அட்லீ கூட பண்ணுங்க , உங்களை இந்த படத்தில் காப்பாற்றியது அந்த பைரவா Bgm தான், வரலாம் வரலாவா பைரவா, மற்ற பாட்டெல்லாம் உங்களுக்கு கை கொடுக்கவில்லை .

கீர்த்தி சேச்சி  நமக்கு சாதாரண தமிழே மலையாளம் கலந்து தான் வரும் இதில் எதுக்கு நெல்லை தமிழ் ட்ரை பண்ணீய்ங்க ? நீங்க இன்னும் தொடரி படத்தில் இருந்து வெளியே வரவில்லையா ? அங்க அங்க கொஞ்சம் லூசு மாதிரி ,அந்த படத்தில் வருவது  போலவே இந்த படத்திலும் பண்ணா எப்படி ?
 றெக்க படம் மாலா அக்கா இந்த படத்திலும் கீர்த்திக்கு அக்காவாக வராங்க ,i think இனிமேல் இவங்க நிறைய அக்கா ரோல் பண்ணுவாங்க போல .

மொட்டை ராஜேந்திரன் காமெடில நம்மை மொட்டை அடிச்சி விட்டார் , இந்த படத்தில் அவர் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை . தம்பி ராமையா கெஸ்ட் ரோல் பண்ணி இருக்கார் போல , 

சந்தோஷ் நாராயணன் வரலாம் வரலாம் பைரவா Bgm தவிர மற்றவை எல்லாம் டப்பாங்குத்து கடுப்பு நாராயணா .

வில்லனை பற்றி சொல்லவேண்டுமா ? கஜபதி பாபு கேரக்டர் strong பண்ணவில்லை ,டம்மி ஆகிட்டாரு டைரக்டர், அதனால அவர் கேரக்டர் பெருசா எடுபடலை, அட போங்கபா எனக்கு என்ன சொல்லறதுன்னு தெரியல 

இந்த படத்தில்  நல்ல கருத்தை வச்சி கொண்டு புரட்சிகரமாகவோ அல்லது நல்ல commercial ஆகவோ கொடுக்காமல்  குழப்பிவிட்டாரு ,  இந்த படத்தில்  விஜயயை சீரழித்தது டைரக்டர் பரதன் தான் , 

மொத்தத்தில் பைரவா ஒரு சாதாரண ரசிகனின் கையிலும் வாயிலும் வெறும் ரவா தான் .

குறிப்பு : நிச்சியமாக நான் எழுதின இந்த நூறாவுது review நிறைய விஜய் ரசிகர்கள் திட்டி கமெண்ட் பண்ணுவாங்க என்று எதிர்பார்க்கிறேன் .மேலும் நூறு போஸ்ட்க்கும் என்னை ஆதரித்த என் நண்பர்களுக்கும்  , ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்