Friday, 22 July 2016

Kabali - கபாலி - உண்மையான பாமரனின் விமர்சனம்

இன்று காலை வரை  டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் காட்சி அதிகமாக  செலவு பண்ணாமல் டிக்கெட் கிடைச்சது மிக்க மகிழ்ச்சி , டிக்கெட் கொடுத்த என்னோட ஒரு நண்பன் .. நீ நண்பேன்டா....நன்றி சொல்லிக்கிறேன் .

இந்த படத்தை பற்றி என்ன எழுவதுன்னு தெரியல , நல்லா இருக்குன்னு சொன்னா, என்னை கலாய்ப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு, அதே நேரத்தில் நல்ல இல்லை என்று சொன்னால் நிறைய பேர் என்னை திட்டுவதற்கு நிறைய வாய்ப்புண்டு இருந்தாலும் என் மனதில் பட்டவை இருபார்வைகளில் சொல்லுகிறேன்.
இது ரஜினியின் கபாலி என்று சொல்வதை தாண்டி ரஞ்சித்தின் கபாலி என்று தான் சொல்லணும், ஏன்னா ரஜினியின் படம்ன்னு எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் , ஏன்னா ரஜினியின் வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி இருக்கும் படம், அதிகமான பஞ்ச் வசனங்கள் , அதிரடி சண்டைகள் , டூயட்கள் , வேகமான காட்சி அமைப்புகள் ,ரஜினியின்  காமெடிகள் எதுவும் இதில் கிடையாது , இதனால் இந்த படம் பலபேருக்கு பிடிக்கவில்லை, ஆனால் என்னை பொறுத்தவரை தலைவர் இப்போது தான் , தன் வயதுக்கு ஏற்ப்ப சரியான கதை மற்றும் கதாபாத்திரத்தை எடுத்து உள்ளார் அதனால் தலைவர்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். அளவான பஞ்ச் வசனங்கள் , அளவான ஹீரோயிசம்ன்னு பண்ணியிருக்காரு , வயசானாலும் உங்க ஸ்டைல் குறையவே இல்ல சார் .

படத்தின் கதை என்னனா வழக்கமான பழி வாங்கும் கேங்ஸ்டர் படம் தான், ஒரே ஒரு வித்தியாசம் நடக்கும் இடம் மலேசியா அவளோதான், படத்தில் பெரிய திருப்பங்கள் என்று எதுவும் இல்லை அனைத்தும் ஒரு சராசரி ரசிகன் யூகிக்க கூடிய காட்சிகள் தான் அமைச்சிருக்காங்க,அது பல பேருக்கு ஏமாற்றம் தான் 

எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் என்னன்னா , ரஞ்சித் ஒரு கேங்ஸ்டர் படத்தோட usual rule உடைச்சிருக்கார் தான் சொல்லனும் ,குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்க ஒரு character ரொம்ப பறந்து பறந்து சண்டை போட்டு காப்பாற்ற முடியாது அதனால realisticah சண்டைகள் வச்சிஇருக்கார் இருந்தாலும் சில இடங்களில் ரஜினியின்  ரசிகர்களை திருப்திபடுத்த ஹீரோயிசம் அங்கே அங்கே காட்டி இருக்காரு , மேலும் பொதுவா ரஜினியின்  படத்தில் ரஜினியை தவிர எந்த கேரக்ட்டரும் மனசில் நிற்காது ரஜினியே பிரதானமாக தெரிவார் , ஆனால் இந்த படத்தில் தனிஷ்கா , அட்டகத்தி தினேஷ் ஆகியோர் மனசில் நிற்கிறாங்க ,அதுவும் அட்டகத்தி தினேஷ் கபாலியின் ஒரு ஒரு கண் அசைவிற்கும் செய்யும் செயல்கள் செம்மயா இருக்கு ,அவர் தலையை தலையை ஆட்டும் காட்சி சூப்பர், தனிஷ்கா போல்ட் கேரக்ட்டர் ரொம்ப நல்லா இருந்துச்சி ,மேலும் ரித்விகா , ஜானி பாய் எல்லாம் இருக்காங்க

சந்தோஷ் நாராயணன் நிறைய இடத்தில் இரைச்சல் இல்லாமல் அமையதிய bgm போட்டு இருக்காரு , நெருப்புடா பாட்டு ஏற்கனவே ஹிட் , அது சரியான இடத்தில் நான் நினைத்தது மாதிரியே மாஸ்   சீன்களில் பயன்படுத்தி இருக்காரு

மொத்தத்தில் கபாலி விளம்பரத்தினால் வசூலில் காலத்தை வென்றாலும் அனைவரின்   மனதிலும் வெல்வது கடினம்.

இப்படிக்கு
சினி கிறுக்கன்


Wednesday, 20 July 2016

Kabali (T) Review - கபாலி - டி - விமர்சனம்நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடியே விமர்சனத்தோட வந்துட்டேன் சொல்லு ,  யப்பா யப்பா என்ன பில்டப் என்ன பில்டப் இந்த படத்துக்கு, தலைவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறதுக்கு அப்படியே இருக்க்காரு அதுவும் கோச்சடையான் , லிங்கான்னு கொஞ்சம் சறுக்கலுக்கு பிறகு  ஒரு பயங்கர கெத்தோட வந்து இருக்காரு,  ஸ்க்ரீன்ல நெருப்பா இருக்காரு , அதுவும் அந்த நெருப்புடா பாட்டுக்கு தியேட்டர்ல  செம்ம  விசில் கிழிது , பொதுவா தலைவருக்கு மாஸ் சீன்ஸ் அல்வா சாப்பிடறா மாதிரி, அதுவும் அதை டைரக்டர் ரஞ்சித் பக்காவா பொருத்தி இருக்காரு , அதுக்கு பக்க பலமா சந்தோஷ் நாராயணன்  bgm   படம் fullaha பிண்ணி எடுத்துட்டாரு ,  தலைவர்க்கு வழக்கமான  பிளாஷ் பேக் தான் அதே நேரத்தில் அவர் அந்த பரட்டை ரஜினி போலவே வருவது புல்லரிச்சிடுச்சி 

ரஞ்சித்தோட ஆஸ்தான நடிகர்கள் கலையரசன், ரித்விகா நல்லா பண்ணி இருக்காங்க, தைவான் நடிகர் வின்ஸ்டன் சாஹூ வில்லனாக ஒரு நல்ல வரவு , அடுத்த சில தமிழ் படங்களுக்கு அவரை நாம் வில்லனாக பார்க்கலாம் ,அநேகமாக ஷங்கர் படத்தில் அதிக வாய்ப்பு உண்டு நினைக்கிறேன்.

ராதிகாஅப்டே கதைக்கு சரியான அளவுக்கு  பயன்படுத்தி இருக்காங்க , தன்ஷிகா செம்ம போல்ட் character , அதுவும் ரஜினியும் அவரும் சந்தித்து கொள்ளும் காட்சி ultimate. 

ரஞ்சித்துக்கு இந்த படம்  குருவி தலையில் மலை போல அதை சரியாக சமாளித்து இருக்காரு டைரக்டர் ரஞ்சித்,

இப்படி விமர்சனம் எழுத ஆசை தான் , இப்போதைக்கு இது ஒரு கற்பனை விமர்சனம் தான் ,இது போல மேலும் உங்களுக்கு என்னிடம் இருந்து முழுமையான விமர்சனம் தேவையா ? அப்படி என்றால் உங்களிடம்  first day ஒரு டிக்கெட் இருந்தால் எனக்கு கொடுக்கவும் , ஏன்னா எனக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை , onlineல புக் பண்ணலாம் பார்த்தா தியேட்டர்காரர்களே  ப்ளாக் பண்ணி தான் webisteல்  ரிலீஸ் பண்ணுறாங்க  , இருக்குற டிக்கெட்டும்  300-600&1000 வரைக்கும் விற்கிறாங்க . டிக்கெட் கிடைச்சா பார்த்துட்டு வந்து உண்மையான விமர்சனத்தோட வருவேன்.
அப்போ கபாலி - டி - விமர்சனம்ன்னா  என்ன ?
அது கபாலி - (டி)க்கெட் விமர்சனம் 

இப்படிக்கு 
இப்போதைக்கு டிக்கெட் இல்லாதவன்டா 
சினி கிறுக்கன் டா 

(20/7/2016) 

Sunday, 10 July 2016

Dhillukku Dhuddu - தில்லுக்கு துட்டு

என்ன மூன்று வாரமா  நிறைய படம் வந்தும் ஒரு படத்தை பற்றி கூட போடலையேன்னு என்னை கேட்ட நல்ல உள்ளங்களுக்கும் , அப்பாடா மூணு வாரமா இவன் இம்சை இல்லன்னு சந்தோஷபட்ட ரொம்ப நல்ல உள்ளங்களுக்கும் ,நான் உங்க சினிகிறுக்கன் மூன்று வாரம் கழிச்சி இந்த தில்லுக்கு துட்டு படத்தோட வந்து இருக்கேன் , மூணு வாரமா வார இறுதி நாட்களில் out of station பயணம், அதனால எந்த படமும் பார்க்கவில்லை எழுதவில்லை ,இந்த படமும் நான் எழுதுறது கொஞ்சம் தாமதம் தான் இருந்தாலும் நம்ம கடமையை செவ்ன செய்வோம்.

அட போங்கடா ஒரே பேய் படம் ட்ரெண்ட் ஆகவே இருக்கு , அதுவும் நம்ம தமிழ் சினிமாவுல காமெடி + பேய் படம்ன்னா ரொம்ப ட்ரெண்ட் ஆயிடுச்சி, இந்த படமும் அதுக்கு விதி விலக்கு இல்ல , அதுவும் சந்தானம் வேற இருக்காரு சொல்லணுமா ?

படம் ஆரம்பிப்பது என்னமோ நல்ல ஆரம்பம் தான் அந்த திபெத் சாமியார் வருவது, அந்த பங்களாவுக்கு ஒரு கதை சொல்லுவதுன்னு நல்லா இருக்கு,ஆனா போக போக எப்போதும் போல அரைச்ச மாவை தான் அரைச்சு இருக்காங்க , சாரி இது எல்லோரும் சொல்லுவது தான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லணும்ன்னா எப்போதும் பிசையற பரோட்டா மாவு போலே தான் பிசைஞ்சி இருக்காங்க.

சந்தானம் நல்லா ஆடுறாரு , நல்லா நடிக்கிறாரு , நல்லா சண்டை போடுறாரு, அவரோட intro பார்த்தா கொஞ்சம் திருப்பாச்சி விஜய் , கொஞ்சம் அண்ணாமலை ரஜினி , கொஞ்சம் வேதாளம் அஜித் வீர விநாயக பாட்டு அப்படின்னு எல்லோரையும் inspiration  ஆக எடுத்து அந்த பாட்டை கம்போஸ் பண்ணி இருக்காங்க ,  ஆனா காமெடி மட்டும் பழய மாதிரியே பண்ணுறாரு counter காமெடி , மற்றும் வசனங்கள் எல்லாம் பழய லொள்ளு சபா பார்க்கிறா மாதிரியே தான் இருக்கு  , சந்தானம் கொஞ்சம் out datedஆகுறாரோன்னு ஒரு feel வந்தது,

ஹீரோயின் சானியா சேட்டு  பொண்ணுக்கு நல்லா செட் ஆகிட்டாங்க ஆனா வசனங்கள் dubbingல நிறைய இடங்களில் lip  sync ஆகல, ஹீரோயின் அப்பாவுக்கு மாப்பிள்ளைன்னு ஒருத்தர் வராரு ஆனா ஹீரோயின்க்கு அக்காவா எங்கேயும் காட்டவில்லை, கடைசியா பயந்து ஓடும் போது அந்த மாப்பிள்ளைக்கு மனைவியா ஒருத்தர் வராரு அவ்ளோதான்.

படத்தோட மிக பெரிய ப்ளஸ் நம்ம மொட்டை ராஜேந்திரன் தான் , அது கூட ஆரம்பத்தில் ரொம்ப சுமாராக தான் இருக்கு ஆனா இறுதி 30 நிமிஷம் அவர் பண்ணும் காமெடி செம்ம , கிளைமஸ்ல் உண்மையான பேய்க்கும் , டூப்ளிகேட் பேய்க்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அவர் படும் அவஸ்தை அப்புறம் சந்தானம்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற விதம் எல்லாம் செம்ம,

ஏதோ தமன் இசையால் அங்கு அங்கே நமக்கு இது பேய் படம்ன்னு   ஞாபகம் வருது இல்லாட்டி இது வெறும் காமெடி படமாகவே இருந்து இருக்கும்.

படத்தோட கடைசி காட்சி எனக்கு என்னவோ அந்த insidiousல கொஞ்சம் சுட்டா மாதிரி ஒரு எண்ணம்

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு கொஞ்சம் நமக்கு கழுத்துல வெட்டு

இப்படிக்கு
சினி கிறுக்கன்