Sunday, 27 March 2016

Zero - ஜீரோ

மிதக்கும் மரம் , தலைகீழ் நடக்கும் ஹீரோயின் , வெள்ளை கருவிழி கொண்ட பெண்கள் . அட இது எப்போதும் போல வரும் நம்ம பேய் படம் trend தான் நினைச்சேன் , ஆனா இந்த படம் ஒரு புது மாதிரி கதைகளம் கொண்டு எடுத்து இருக்காங்க , ஜீரோவின் அர்த்தம் என்ன ? படம் பார்த்து முடிக்கும் போது அது தெரியும் .

முதல் பாதி வரை, இது எந்த மாதிரி படம்? பேய் படமா ? சைக்கலாஜிக் thriller ah ?இல்ல split personality   concept ah ? அப்படின்னு ஒரு யோசனை நம்மக்கு interval வரைக்கும் அது இருக்கு , அந்த interval பிளாக்ல பல அஷ்வின் கேரக்டர் வந்து ஹீரோயின் குழம்பும்போது, நமக்கும் எது நிஜம் எது  பொய்ன்னு   தெரியாம டைரக்டர் நம்மை குழம்பவச்சி இருக்காரு, இப்படி படத்தோட ஒன்ற வச்ச டைரக்டர்க்கு ஒரு பெரிய வாழ்த்துகள் 

இரண்டாவுது  பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்துல ஹீரோயின்க்கு என்ன பிரச்சன்னைன்னு சொல்லிட்டு, அதோட காரணத்தை பிற்பாதியில் இது வரை  யாரும் முயற்சிக்கதவண்ணம் கொடுத்து இருப்பது அருமை , உண்மையில் இது ஒரு புது விதமான கதை கரு யோசிச்சி இருக்காரு 

படத்தோட பிளஸ்  நிவாஸின் இசை , ஹீரோயினை சரியான இடத்துல மிரளவைப்பது அதே போல நம்மையும் இசையின் மூலமாகவும் , எடிட்டிங் மூலமாகவும் மிரளவைப்பது சூப்பர்  ,  மேலும்  கதையோட knot சரியான  இடத்துல திறந்தது தான்,  மேலும் ஹீரோயின் ஷிவதா நடிப்பு மாபெரும் பிளஸ் , ஹீரோ அஷ்வின் என்றாலும் அவர் ஷிவதாவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு தான் சொல்லணும் , சக்ரவர்த்தி கேரக்டர் அவருக்கு சரியா  இருக்கு ஆனா கிளைமாக்ஸ்ல் வரும்  காட்சிகள் எப்படி முடிப்பதுன்னு தெரியாம எப்படியோ முடிச்சிட்டாறு ஏன்னா எடுத்த கதைகளம் ரொம்ப பெரிய விஷயம் , மேலும் கடைசியா வரும் சில சீரியஸ் காட்சிகள் நம்ம மக்கள் புரிஞ்சிக்காம சிரிக்கிறாங்க ஆனா அதுவே இங்கிலீஷ் படத்தில  வந்தால் ரசிப்பாங்க .

புது டைரக்டர் புது முயற்ச்சி நிச்சயமா போயிட்டு பார்த்துட்டு வரலாம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 18 March 2016

Savari - சவாரி

சினி கிறுக்கனின் வணக்கம் , இன்னிக்கு வெள்ளி கிழமை ..நம்ம வெள்ளிகிழமைனாலே எதாவது ஒரு படத்துக்கு சவாரி போய்டுவோம் , இது எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை , ஆனா இந்த வாரம் சாவரின்னு ஒரு படம் வந்து இருக்கு அதுக்கு நான் போகாமலா இருப்பேன் ? yes உண்மை தான் இந்த படத்துக்கு போயிட்டு வந்தாச்சு 

இந்த படத்தை பார்கிறதுக்கு தூண்டின சில காரணங்கள், முதல் காரணம் இந்த படத்தோட இயக்குனர் குகன் சென்னியப்பன் நாளைய இயக்குனர்ல runner upah வந்தவரு, அதனால  பார்கிறா மாதிரி ஒரு படம் தருவாருன்னு நம்பிக்கை இருந்துச்சி , ரெண்டாவுது காரணம் படத்தோட trailer கொஞ்சம் நம்பிக்கை தந்துச்சு , ஆனா நிறைய படங்கள் trailer பார்த்துட்டு போயிட்டு மொக்க வாங்கிட்டு வந்து இருக்கோம், ஆனா இந்த படம் அப்படி மொக்க வாங்கல,  வாங்க இந்த சவாரி பற்றி  சினி கிருக்கனோட ஒரு சவாரி போவோம்.

படத்தோட கதை என்னபா ?மர்மமான முறையில் கொலை செய்பவனை கண்டுபிடிப்பது தான் கதை , ஆனா அது யாரு? அது ஏன் நடக்குதுன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க .

படம் ஆரம்பிக்கும் போது அட செம்ம openingah  இருக்கு, முதல் பாதியில் அந்த கொலைகாரன் யார்ன்னு காட்டுவது வரைக்கும் அந்த interest ரொம்ப நல்லா இருக்கு, ஆனா இரண்டாவுது  பாதியில்   கொஞ்சம் தட்டு தடுமாறி போயிட்டு ஒரு வழியா டைரக்டர் சாவரியை கரை சேர்த்துட்டாறு

படத்தோட பிளஸ் பாயிண்ட் என்ன ?
 படத்துக்கு இவர் தான் ஹீரோன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது, என்னை பொருத்தவரைக்கும் screenplay தான் ஹீரோ, நல்ல சுவாரசியமா கொடுத்து இருக்காங்க 

 தேவையில்லாம பாட்டு வச்சி போர் அடிக்கல, படம் கதையோட போகுது எங்கேயும் படத்தை விட்டு வெளிய போகல , குத்து பாட்டு , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு அப்படி போடாமல் சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்காங்க, முக்கியமான அந்த டிரைவராக வரும் நடிகர் கார்த்தி    பயந்து நடிக்கும் போதும் நல்லா இருந்துச்சி, , போலீஸ்காரராக வரும் நடிகர் பெனிட்டோ டென்ஷன் ஆகும் போதும் அந்த கொலைகாரனை எப்படியாவது பிடிக்கனும்ன்னு நினைக்கிற எண்ணம் நம்மளையும் அப்படி தோன்ற வச்சி இருக்காரு , இவங்க ரெண்டு பேரை விட ஒரு முக்கியமான ஒரு கேரக்டர் ரெண்டாவுது பாதியில் வரும் ஒரு எம்.ல் ஏ கேரக்டர் ல வரும் நடிகர் அருண் என்பவர் , படத்தில செம்ம கேரக்டர், செம்ம மாஸ் சீன அவருக்கு அதுவும் சட்டை button எல்லாம் கழட்டி விட்டு liftல வருவது, அதுக்கு bgm எல்லாம் சரியாய் இருக்கு, கிளைமாக்ஸ்ல அப்பாவி தனமா முகத்தை வச்சிக்கிட்டு வசனம் பேசுவது எல்லாம் செம்ம கலாய் ,   யாருயா நீ ? இவ்வளவு நாளா  எங்கேயா இருந்த ?அப்படின்னு கேட்க தோணுது,  நிச்சயமா இனிமே நிறைய  படத்துல வருவாருன்னு தோணுது.
அந்த குறிப்பிட்ட கொலைகாரன் கேரக்டர் யார்ன்னு நான் சொல்ல மாட்டேன் , ஆனா அவர்க்கு கொடுக்கிற மாஸ் சீன் அதுவும் எம்.ல் ஏ ஆட்களை கொலை செய்யும் போது பண்ணுற bgm & மாஸ் சீன் பார்க்கும் போது, ஹேய் உனக்கெல்லாம் build up சீன்aah கேட்காம இருக்க முடியல, அதே நேரத்துல அந்த சீன் ரசிக்காம இருக்க முடியல , நல்ல perfectah கொடுத்து இருக்காரு டைரக்டர் .

 படத்துக்கு ஒரு மைனஸ் என்னனா  - - இந்த படத்துக்கு promotion , தியேட்டர் & ஷோஸ் எல்லாம் கம்மி , 


மொத்தத்தில் சவாரிக்கு  நம்பி சவாரி போகலாம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 
Friday, 11 March 2016

Kadhalum Kadanthu Pogum - காதலும் கடந்து போகும்


என்னடா படத்தோட டைட்டில்க்கும்  மேலே போட்டு இருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லேயே தோணுதா ? My Dear Desperado அப்படிங்கிற கொரியன் படத்தோட ரீமேக் தான் இந்த காதலும் கடந்து போகும் ,இப்போ தான் ஒரு தமிழ் படம் காபி அடிக்காம ஒழுங்கா ரீமேக்ன்னு சொல்லி எடுத்து இருக்காங்க.

இந்த படத்தை பார்கிறதுக்கு முன்னாடி இந்த  கொரியன் படத்தை பார்க்கணும் நினைச்சேன் ஆனா பார்க்க முடியல அதனால கொரியன் படத்தோட trailer பார்த்துட்டு தான் போனனேன் , கிட்டதட்ட பல காட்சிகள் அப்படியே எடுத்து இருக்காரு நலன்குமரசாமி 

படத்தோட கதை ?? சென்னையில வேலை தேடும் ஹீரோயின், அடி ஆளு ஹீரோ ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க ரெண்டு பேருக்கும் காதல் கடந்து போச்சா இல்லையா???அதான் படம் 

படத்தோட ப்ளஸ் பாயிண்ட் பார்த்தா அது விஜய் சேதுபதி ஒரு ஒரு சீன்ளையும் கலக்கிட்டாரு அதுவும் அந்த பார்ல பந்தாவா போயிட்டு அடி வாங்கிட்டு பந்தாவா கெத்தா வெளியே வருவது , மடோன அப்பாகிட்ட பேசுவது , interview ல போயிட்டு காலாய்ப்பது.. அடி செம்ம மாஸ் , பிறகு காமெடி படத்தோட இருப்பது சூப்பர்,  ஆனா மேல சொன்ன சில காட்சிகள் போல வேற எந்த சீனும் படம் முடிச்சிட்டு வெளியே வரும் போது மனசுல நிற்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான் 

மடோன ரொம்ப அழகா இருக்காங்க , தியேட்டர்ல அவங்க வரும் போது செம்ம வரவேற்ப்பு  அது பிரமேம் செய்த வேலை , ஆனா விஜய்சேதுபதியோட chemistry work out  ஆகி இருக்கான்னு பார்த்தா அது இல்ல தான் சொல்லணும் ஏன்னா ரெண்டு பேரும் மாற்றி மாற்றி சந்திக்கிறாங்க பேசுறாங்க ஆனா ரெண்டு பேருக்குள்ள காதல் வருதா இல்லையா ? இல்ல அது வெறும் நட்பா  ?அப்படிங்கிறது தெளிவா தெரியல , ஒரு வேலை originalல இப்படி தானா ? இல்ல இதைவிட நல்ல இருக்கும்மா தெரியல .

சந்தோஷ நாராயணன் வழக்கம் போல நல்ல பண்ணி இருக்காரு க க க க போ பாட்டு நல்லா இருக்கு ஆனா சில படங்களில்  வரும் அவரோட பாடல்கள் அவரோட முந்தைய படத்தின் பாடல்கள் ஞாபகம் வருது,  ஒரே மாதிரியான இசை கொடுக்கிறாரோ தோணுது, இந்த படத்திலும் இது போல தான் இருக்கு .

மொத்ததில்: காதலும் கடந்து போகும்  சாதாரண ரசிகனின் மனதில் averageah கடந்து போகும்  

இப்படிக்கு
சினிகிறுக்கன்