Friday, 10 June 2016

The Conjuring2 - கான்ஜுரிங் 2

The Conjuring ஆ ?? டேய் இங்கிலீஷ் படத்தை கூட தமிழில் தானா எழுதுவன்னு ? நீங்க கேட்கிறது தெரியுது,நம்ம இங்கிலீஷ்ல பார்த்தாலும் தமிழ்ல தானே எழுதுவோம் , ஏன்னா நமக்கு தமிழ் ஆடியன்ஸ் தானே அதிகம்.

இந்த படத்தை பற்றி எழுத நமக்கு கொஞ்சம் பயம் தான் , ஏன்னா கோலிவுட் படத்தை பற்றி எழுதுனாலே நம்மை கோழி உறிக்கிறா  மாதிரி உறிப்பாங்க இதுல ஹாலிவு ட் படம் வேறையா  ? அப்படின்னு நமக்கு நாமே கேட்க தோணுது,இருந்தாலும் நாம் நம்ம கடமையை செய்வோம்.

நான் பொதுவா படத்தோட கதையை சொல்ல மாட்டேன் , ஆனா நான் ரசிச்ச நல்ல காட்சிகள் மேலும் அதோட பிளஸ் பாயிண்ட் தான் சொல்லுவேன் , ஆனா இந்த படத்தில்  ரசிச்ச காட்சிகளை நான் சொல்லமாட்டேன் ,சொன்னால் பார்க்கும் விறுவிறுப்பு போய்டும்,படத்தோட ஒரு வரி கதை மட்டும் சொல்லுறேன் , இங்கிலாந்தில் ஒரு குடும்பம் இருக்கும் வீட்டில் பேய் இருக்கிறது , அந்த குடும்பத்தை அந்த பேய் வீட்டை விட்டு துரத்த ட்ரை பண்ணுது ,எப்படி அந்த பேயயை ஒழிச்சாங்கன்னு தான் இந்த படம்.

திக் திக் திக்ன்னு படம் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு வினாடியும் நம்மை அந்த படத்தோட ஒன்ற வச்சி இருக்கு, ஒவ்வொருகாட்சியும் ஒவ்வொரு ஷாட்டும் அடுத்து அடுத்து என்ன ? எங்க இருந்து எப்போ வரும்ன்னு ஒரு உணர்வு நமக்குள்ள கொண்டு வந்து இருக்காங்க ,அதுக்கு காரணம் படத்தோட கேமராமேனும் எடிட்டரும்  தான், ஏன்னா படம் பூரா படத்தக்கு உள்ளேயே கொண்டு போக வச்சி இருக்காங்க,கேமரா மெதுவா நகரும் போது நாமே அங்கே இருப்பது போல இருக்கு படத்தோட மாபெரும் பிளஸ் இசை , அடிச்சி பிச்சிட்டாங்க சரியான இடத்தில சவுண்ட் effect  அதுவும் டால்பி அட்மாசில் செம்ம,
Janetஆக நடித்த  madison wolfe யெப்பா .. அந்த குட்டி பொண்ணு செம்மைய நடிச்சி இருக்குயா அந்த படத்தோட மிக பெரிய பிளஸ் அந்த பொண்ணோட நடிப்பு தான்  , அப்புறம் அந்த NUN கேரக்டர் வரைப்படம் செம்ம திகில் லுக்,

படத்தில் நிறைய நல்ல காட்சிகள் சொல்லணும் தோணுது ,ஆனா படத்தை பார்த்து ரசிச்சிகோங்க, பேய் பட ரசிகர்களுக்கு இது நல்ல தீனி போடும், ,நிச்சயமா 2 மணி நேரம் ஒரு நல்ல திகில் அனுபவம் இருக்கும் ,  The Conjuring முதல் part க்கு எந்தளவுக்கும் சளைத்தது இல்லை இந்த The Conjuring2.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

#TheConjuring2 

Sunday, 5 June 2016

Velainu Vandhutta Vellaikaaran - வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்

ஜாலிலோ ஜிம்காலா,, கதை எல்லாம் கேட்காதீங்க , லாஜிக் எல்லாம் பார்காதீங்கன்னு , நம்பி வாங்க சிரிச்சிட்டு போங்கன்னு , அவங்களே படத்தோட promotionல சொல்லிட்டங்கா, அதனாலா  கதைய பற்றி ஆராயிச்சி பண்ணறது , லாஜிக் பற்றி ஆப்பேரஷன் பண்ணறது எல்லாம் தேவை இல்லாதது ,

சரி படத்தில அவங்க சொன்னா மாதிரி ஜாலியா இருக்கான்னு ? பார்த்தோம்ன்னா என்னை பொருத்தவரைக்கும் அது இல்லை தான் சொல்லுவேன், ஏன்னா குழந்தை மனசு(குழந்தைகள் தான் சொல்லுவன் ) இருக்கறவங்க , சும்மா சிரின்னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பவர்களுக்கு வேண்டும்ன்னா இந்த படம் ஜாலியா இருக்கும், ஆனா சூரி, விஷ்ணு , மொட்டை ராஜேந்திரன் ,ரோபோ ஷங்கர்ன்னு பல பேரு  என்ன ? பத்து பேரு சேர்ந்து வந்து இந்த படத்துல வந்து கிச்சு கிச்சு மூட்டினாலும் எனக்கு சிரிப்பு வரல .

படத்தோட பிளஸ் ரோபோ ஷங்கர் தான் ,  நல்லா  நடிச்சு இருக்கார் , அதுவும் அவர் அன்றைக்கு நடந்தது காலையில் இருந்து கதையை திரும்ப திரும்ப சொல்லும் காட்சி தான் சூப்பர் , உண்மையில படத்தில நான் நல்லா சிரிச்ச சீன் அது மட்டும் தான் .
வேற என்ன சொல்லலாம் இந்த படத்தை பற்றி ? ம்ம் பாடல்கள் பற்றி சொல்லனும்னா ஒரு மசாலா படத்துக்கு எப்படி தேவையோ அது மாதிரி மசாலா பாடல்கள் இருக்கு

விஷ்ணு படத்துக்கு படம் வித்தியாசம்  காட்ட வேண்டும்ன்னு முதல் முறையா  இப்படி ஒரு கமெர்சியல் படம் ட்ரை பண்ணி இருக்கார் ,நிக்கி கல்ராணி அழகா இருக்காங்க ஆனா அவங்க அப்பா ஹோட்டல் owner , அந்த ஹோட்டல் பார்த்தா பைபாஸ்ல இருக்குற கையேந்தி போல இருக்கு, ஆனா ஹோட்டல் கல்லாபெட்டில உட்கார்ந்து இருக்காங்க அதுவும் full மேக்கப்ல , செம்ம grandஆ , 5 ஸ்டார் ஹோட்டல் முதலாளி போல இருக்காங்க ,கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு  முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்

அப்புறம் ரோபோ ஷங்கர் காணாமல் போன பிறகு , அதை கண்டு பிடிக்க நிக்கி கல்ராணி கூட உட்கார்ந்து ஐடியா கொடுக்கிறேன் பேருல அவர் ஒவ்வொருத்தருக்கும் phone பண்ணும் காட்சி , டைரக்டர் சார் அந்த காட்சி ருத்ரா படத்தில பாக்கியராஜ் சார் ஏற்கனவே பண்ணிட்டார் .சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு  முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்.

படத்தோட கடைசில மொட்டை ராஜேந்திரன் வருவாராம் , பேய் வருமாம், குத்து பாட்டுக்கு எல்லாம் டான்ஸ் ஆடுவாங்களாம் , எப்பா முடியல , சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு  முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன் .

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,இந்த படத்துக்குன்னு வந்துட்டா கொஞ்சம் கூட யோசிக்க இயலாதவன்,

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

#Velainu #Vandhutta #Vellaikaaran
#VVV

Friday, 3 June 2016

Iraivi - இறைவி

நீங்க ஒரு பொழுதுபோக்கு விரும்பியா?,2 மணி நேரம் நல்லா என்ஜாய் பண்ணனும் என்று think பண்ணுவீங்களா? கார்த்திக் சுப்புராஜ் படம் அதனால  பிட்சா , ஜிகர்தண்டா மாதிரி இருக்கும் நினைப்பவரா ? அப்போ உங்களுக்குரிய படம் இது இல்ல ,அந்த மாதிரி எண்ணம் இருந்துச்சினா அதை அப்படியே மூட்டை கட்டி தூக்கிபோட்டுட்டு போங்க

இறைவின்  பொருள்   - பெண் தெய்வம் , பெண்களை பற்றிய படம் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ரொம்ப வித்தியாசமான ஒரு முறையை பின்பற்றி ஒரு trend செட்டிங் படம் போல தந்து இருக்காரு டைரக்டர்.
தன்னால் ஒரே மாதிரி படங்கள் தான் கொடுக்க முடியும் என்று இல்லமால் , மூணு படங்களும் மூன்று வித்தியாசமான கதை களம் எடுத்து இருக்கார் .அதுக்கு ஒரு செம்ம கைதட்டு

பொதுவா தமிழ் சினிமாவில் பெண்களை பற்றிய படம் என்றால்,அடிமை தனம் படுத்தும் ஆண்கள், இல்லாட்டி ரொம்ப கஷ்டப்படும் பெண்கள் வாழ்கையில் பல தடைகளை தாண்டி முன்னேறி சாதிப்பது போல தான் காட்டுவாங்க, ஆனால் இதில் ஒவ்வொரு ஆண்கள் faceபண்ணும் பிரச்சனைகள் அதனால எப்படி அவர்களை சார்ந்த பெண்கள் பாதிக்க படுறாங்கன்னு காட்டி இருக்கார்

எனக்கு உண்மையில் சொல்லனும்னா முதல் பாதியை விட இரண்டாவுது பாதி தான் இறைவி மனசுக்குள்ள இறங்குகிறாள், ஏன்னா முதல் பாதியில் ஒவ்வொருவரின் பிரச்சனைகளை நிலை நிறுத்த காட்சிகள் கொஞ்சம் நிறைய வச்சி இருக்கார் போல தோணுது,சரி அப்போ இரண்டாவுது பாதியில் கம்மியான்னு கேக்குறிங்களா ? இல்ல.. படத்தில் நிறைய இடங்கள் வெட்டி இருக்கலாம்ன்னு தான் எனக்கு தோணுது, இரண்டாவுது பாதியில் பல காட்சி அமைப்பு  ரொம்ப அழகா ரசிக்கும்படி வச்சி இருக்கார்
விஜய்சேதுபதி ஜெயில்ல இருந்து வெளிய வரும் போது , குழந்தையோட தொட்டில்லை முகர்ந்தது பார்ப்பது,அஞ்சலியை அவர் ஊருல சமாதானம் படுத்துவது , அப்போ வெளியே பாட்டி அதை ரசிப்பது,அஞ்சலிகிட்ட விஜய்சேதுபதி பாபிசிம்ஹா பற்றி பேசுவது,பாபிசிம்ஹா அவரோட அம்மாகிட்ட மூழு படத்தோட கதைய வசனமா பேசுவது,கடைசியா நிச்சயதார்த்தம்போது காமிலினிமூக்கர்ஜி எஸ்.ஜே.சூர்யா கிட்ட பேசுவது ,எஸ்.ஜே.சூர்யா வைபவ் கிட்ட உங்க exஉட்பி ,என்னோட present wifeன்னு சொல்லுவது,,கிளைமாக்ஸ்ல் எஸ்.ஜே.சூர்யா பேசுவது,அஞ்சலி அசால்டா திரும்பி பார்க்காம trainல் ஏறுவது, இதுவெல்லாம் இரண்டாவுது பாதியில் ரசிக்கும்படி வைத்த  காட்சிகள்.

படத்தின் பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா, அட்டகாசமா நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்காருன்னு தான்  சொல்லணும்,குறிப்பா தயாரிப்பாளர் கிட்ட அடி வாங்கிற காட்சியில் பேசும் வசனம், பிறகு கிளைமாக்ஸ்ல் phoneல்   பேசும் காட்சி ,பிறகு பூஜா தேவரியா கேரக்டர் செம்ம bold,அவங்ககிட்ட விஜய்சேதுபதி சித்தப்பாவோட போயிட்டு பொண்ணு கேட்கும் காட்சி செம்ம.

மொத்தத்தில் இறைவி பல காட்சிகளால் இறைந்து இருக்கிறது, இறைந்ததை இறுக்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதே நேரத்தில் புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் .

இப்படிக்கு
சினிகிறுக்கன் 

#cinekirukkan #iraivi