சனி, 12 மே, 2018

Irumburumbuththirai - இரும்புத்திரை

இந்த படத்தின் விமர்சினத்தை அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் அதன் காரணம் அப்பறம் சொல்லுறேன் 

முதலில் படத்தின் ப்ளஸ் பார்ப்போம் 

விஷால் படம்ன்னு  கொஞ்சம் பயந்து தான் போனேன் , ஆனால் முன்னாடி மாதிரி கத்தி தேவையில்லாமல் பஞ்ச் வசனம் பேசாம ஒரு நல்ல படம் பண்ணிருக்கார் 

படம் முதல் காட்சி இது எதை பற்றி சொல்ல போறாங்கன்னு தெரிந்துவிட்டது 

இது நிச்சயமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு கொடுக்கும் படம் , இப்போ நாம் use பண்ணற டிஜிட்டல் உலகத்தை பற்றியது 

படம் பார்த்து வரும் பொழுது நம் மொபைல் பயன்படுத்த கொஞ்சம் யோசிக்க வைக்குது .

யுவன்  bgm  நல்லா இருக்கு .

படம் அர்ஜுன் வந்த பிறகு சூடு பிடிக்குது , அதுவும் அர்ஜுன் vs விஷால் வரும் ஒரு lift சீன சூப்பர் 

நிறைய விஷயங்கள் பார்க்கும் பொழுது ஆச்சரியப்படவைக்குது , அதாவுது நம் மொபைல் நம்பர் பயன்படுத்துறாங்க , அதுக்கு எந்தளவுக்கு காசு கிடைக்கும் , அட flight boarding passல் இருந்து எப்படி information எடுக்கப்படும்ன்னு சொல்லும் பொழுது ரொம்ப ஆச்சர்யப்படவைக்குது 

ரோபோ ஷங்கர் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார் 

பாய்ஸ் படத்தில் நம்ம செந்தில் சொல்லுவாரே information is wealth அது தான் இந்த படத்தின் முக்கியமான அம்சம் .

படத்தின் மைனஸ் பார்ப்போம் 

படம் கதைக்குள்ள போக ரொம்ப நேரம் எடுக்குது 

அது போலவே விஷால் வில்லனை தேடி போவது , ரிச்சி தெருவில தேடுவது எல்லாம் ரொம்ப length ஆகா தெரிஞ்சது 

விஷால் , சமந்தா காதல் bore அடிக்குது 

விஷால் establish ஆகி , பிரச்சனைகளை எல்லாம் சேர்த்துக்கிட்டு படம் கதைக்குள்ள போக இன்டெர்வல் வருது அதுவே 1.30 மணி நேரம் ஆகிடுச்சு 

விஷால்  மிலிட்டரி uniformல் வரும் முதல் காட்சி  செட் ஆகவில்லை , அது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவருக்கு uniform உடம்பில ஒட்டவில்லை 

அர்ஜுன் படம் ஆரம்பிச்சி 2 மணி நேரம் கழிச்சி தான் படத்தில் வருகிறார் , 

அர்ஜுன் பார்க்கும் பொழுது நிச்சயமா தனிஒருவன் அரவிந்த் சாமி தான் ஞாபத்துக்கு வருது 

ஒரு நாலு மிலிட்டரி ஆளுங்க காட்டும் பொழுதும் அதே தனி ஒருவனில் வரும் நாலு பேரு தான் ஞாபத்துக்கு வருது , ஆனால் படத்தில் ரொம்ப use பண்ணலையோ தோணுது , அவர்களுக்கும் விஷாலுக்கும் உருவாகும் உறவு strong ஆகா இல்லை 

அர்ஜுன் விஷால் மோதும் காட்சி ரொம்ப கம்மி , 

நல்ல கதை உள்ள படம் ஆனால் விறுவிறுப்பான திரைக்கதை இல்ல 

படத்தோட பெரிய மைனஸ் படத்தின் நீளம் அதனால தான்  விமர்சனம் அளந்து அளந்து அளவாக தான் சொல்ல போறேன் மேலே சொன்னேன், படம் தான் பெருசா இருந்திச்சி at least விமர்சனம் ஆவது சின்ன தாக இருக்கட்டும் தான் .

நிச்சயமா இந்த படம் எல்லோருக்கும் ஒரு கண் திறப்பு அதனால இந்த மைனஸ் எல்லாம் தாண்டி இந்த படத்தை பார்க்கலாம் 

படம் பார்த்தபின்பு நிச்சயமா நம் மொபைலுக்கு தேவை ஒரு இரும்புத்திரைன்னு தோணும் 

மொத்தத்தில் இரும்புத்திரை  ரொம்ப lengthy திரை 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 11 மே, 2018

Iravukku Aayiram Kangal - இரவுக்கு ஆயிரம் கண்கள்

உதயநிதி படத்தை பார்ப்பதை விட அருள்நிதி படத்தை நிச்சயமா நம்பி போலாம் என்ற ஒரு எண்ணம் எப்பவும் உண்டு , அதை கொஞ்சம் கூட ஏமாற்றாமல்   இந்த படத்தையும் கொடுத்து இருக்கார் அவர்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை கண் அசராமல் நம்மை பார்க்க வச்சி இருக்காங்க , முதல் காட்சியே ரொம்ப அழகா,  அதை ஒரு கோர்வையாக கொடுத்து, அப்படியே பிளாஷ் பேக் போவது சூப்பர், அட முதல் ஸ்டேஷன் காட்சியிலே ஒரு நம்பிக்கை கொடுத்துட்டார் டைரக்டர் , அப்பறம் வழக்கம் போல ஹீரோ , ஹீரோயின் establishment காட்சி வச்சி வழக்கமான படம் போல கொஞ்சம் போனாலும் , ஒரு ஒரு  காட்சியும் , ஒரு ஒரு ஷாட்களும் படத்தோட கதையை தொடர்ப்பு படுத்தியே படம் நகர்கிறது , எந்த காட்சியும் தேவை இல்லாத காட்சி என்று கொஞ்சம் கூட தள்ளி வைக்க முடியாது, அந்த அளவுக்கு எல்லாமே கதையை ஒட்டியே படம் போகுது .

படத்தின் பெரிய ப்ளஸ் காட்சியமைப்பு தான், படத்தின் ஓட்டத்தை ஒரு ஒரு கேரக்டர்களுடன் லிங்க் பண்ணி லிங்க் பண்ணி படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லுகிறார் டைரக்டர், ஒரு படம் வெற்றி பெறுவது படம் ஆரம்பித்தவுடன் படத்தின் கதைக்குள் போவது மேலும் கதை ஒரே இடத்தில் நிற்காமல் அடுத்து அடுத்து வரும் காட்சிகள் படத்தை அடுத்த கட்டத்துக்கு சென்று போவது, இதை இந்த படத்தில் சரியாக செஞ்சியிருக்காங்க , மேலும் ஒரே காட்சியை வேறு வேறு கேரக்டர்களின் பார்வைலயிருந்து அதை அழகாக கொண்டு போறாங்க , சில சமயம் ஒரு காட்சி வேற வேற point of viewல் இருந்து கொண்டு போகும் போது பார்ப்பவர்களுக்கு ஒரு சலிப்பு ஏற்படுத்தும் , அது போல சலிப்பு ஏற்படுத்தாமல் ரொம்ப  கவனமா கையாண்டு இருக்காங்க, படத்தில் ஏகபட்ட முடுச்சிகள்  இருக்கு அதை டைரக்டரும்   குழம்பாமல் , பார்ப்பவர்களையும் குழப்பாமல் ரொம்ப தெளிவா அந்த முடிச்சிகளை அவிழ்த்து படத்தை முடிச்சிவைக்கிறர் டைரக்டர்.

படத்தின் இன்னொரு ப்ளஸ், படம் பார்ப்பவர்களை கொஞ்சம் அங்கே இங்கே கூட சிந்திக்கவிடாமல், படத்திலே நம் முழு கவனத்தையும் முழுக வச்சிட்டார்,  ஏன்னா முதலில் யார் அங்க கொலையானாகன்னு ஒரு எதிர்பார்ப்பு ஏற்படுத்தவச்சிட்டார் , பிறகு யார் அந்த கொலையை  பண்ணாக என்று கடைசி வரை யோசிக்க வைச்சிட்டார், எல்லாம் முடிச்சிடுச்சி முடிச்சிடுச்சின்னு நினைக்கும் போது இன்னொரு ட்விஸ்ட் வச்சி , அது முடிச்சது என்று நினைக்கும் பொழுது கடைசியில கூட இன்னொரு ட்விஸ்ட் வச்சி படத்தை முடிக்கிறார் டைரக்டர் , நம்மையும் wow சொல்லவச்சிட்டார் , படம் முழுவதும் நம்மை guess பண்ண வச்சிக்கிட்டே இருக்காங்க , நான் ஒரு ஒரு தடவையும் ஓ படம் இபப்டி போகுமோ , அட அபப்டி போகுமோ நினைக்கும் போது எல்லாம் வேற வேற மாதிரி படம் போய்கிட்டு இருக்கு .

படத்தின் ப்ளஸ் கேமராமேன் அரவிந்த் மற்றும் எடிட்டர் சான் லோகேஷ் , ஏன்னா மேல சொன்னேன் படம் பார்ப்பவர்களை குழப்பமால்  போகுதுன்னு அதுக்கு முக்கிய காரணம் எடிட்டர் தான் சொல்லணும் , ஏன்னா படத்தின் காட்சி முன்னாடி பின்னாடி மாறி மாறி போய்கிட்டே இருக்கு அதை ரசிகர்களுக்கு தெளிவா புரியவைத்தது எடிட்டர் தான் . மேலும் சாம்.சி இசைய கூடுதல் பலம் சொல்லணும் .

அருள்நிதி படத்தில் இருளாதநிதியாய் இருக்கார் , அவர் படத்திற்கு நம்பி போனவர்களுக்கு கைவிடமாட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிச்சிட்டார் , அஜ்மல் கோ படத்தில் எப்படி இருந்தாரோ அபப்டியே இருக்கிறார் , ஹீரோயின் மஹிமா நம்பியார் தேவையான அளவுக்கு படத்தில் use பண்ணியிருக்காங்க , மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் , ஆடுகளம் நரேன் , ஜான் விஜய் , சாய சிங், இப்படி ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும் எல்லோரையும் சரியாக கதைக்கு பயன்படுத்தி இருக்காங்க , இதில் ஆனந்தராஜ் சீரியஸ் ஆனா நேரத்திலும் கொஞ்சம்  காமெடி பண்ணுகிறார் 


இந்த படத்தில் வரும் மழை , கொலை , இரவு , அந்த வீடு இப்படி பார்க்கும் பொழுது எனக்கு கொஞ்சம் துருவங்கள்16 படத்தை ஞாபகம் படுத்தியது .நிச்சயமா டைரக்டர் மு.மாறன் ஒரு நல்ல தரமான படத்தை தந்து இருக்கிறார் .முக்கியமான விஷயம் படம் ஆரம்பம் முதல் பாருங்க , இன்டெர்வல் அப்பறம் லேட்டாக வாராதீங்க , ஒரு ஒரு காட்சியும் மிஸ் பண்ணாம பாருங்க அப்போ தான் படம் புரியும் , ஏன்னா ஏற்கனவே சொன்ன மாதிரி படத்தில் எல்லா காட்சியும் லிங்க் ஆகி இருக்கு .

மொத்தத்தில் இரவுக்கு ஆயிரம் கண்கள், வைத்த கண்களை எடுக்காமல் பார்க்க வைக்கிறது.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 





வெள்ளி, 4 மே, 2018

Iruttu Araiyil Murattu Kuththu - இருட்டு அறையில் முரட்டு குத்து


இந்த படம் மற்ற பெரிய படங்களை விட ரொம்ப எதிர்பார்ப்பு ஏற்படுத்திய படம் , ஏன்னா, இந்த படத்தோட போஸ்டர் , டீஸர் , ட்ரைலர் எல்லாம்  அப்படி ஏற்படுத்தியது,  மேலும்  டைரக்டர் அப்படி பட்டவர் , ஹர ஹர மஹாதேவி என்ற ஒரு காவிய படத்தை தந்தவர் இவரே .


சரி இந்த படம் எப்படி இருக்கு ? இந்த படத்தை கொஞ்சம்  கூட பார்க்கறதுக்கு கொஞ்சம் கூட அருகதை இல்லாத படம் இது , என்ன தான் இரட்டை அர்த்தம் வசனங்கள் , ச்சே ச்செ டபிள் மீனிங் இல்ல , எல்லாம் ஸ்ட்ராயிட் மீனிங் உள்ள படம்னாலும் , படத்தில் கதை அதை ஒட்டிய காமெடிகளும்  கொஞ்சம் கூட இந்த படத்தில் கிடையாது , என்னதான் "ஹர ஹர மஹாதேவி " படத்தில் adults only காமெடி இருந்தாலும், அந்த காமெடி படத்தின் கதையை ஒட்டியே இருந்துச்சி  மேலும் அந்த கதைக்கு பொருத்தமாக timing , situation காமெடி கடைசி வரை இருந்தது , ஆனால் இந்த படம் கொஞ்சம் கூட கதை என்பது கிடையவே கிடையாது .

ஒரு மட்டமான கேவலமான செம்ம boring ஆகா தான் இருக்கு இந்த படம் , ஆரம்பம் ஏதோ தானோ சம்மந்தமே இல்லாமே படம் போகுது , சரி போக போக நல்ல காமெடியாக போகும் நினைச்சேன், ஆனால் அதுவும் இல்ல அங்க அங்க பச்சையாக வசனங்களும் காட்சிகளும் இருந்தாலும், படத்தில் அனைத்தும் திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது , 

எல்லா கேரக்டர்களும் ரொம்ப செயற்கையாக காட்டப்படுகிறது , ஒரு கேரக்டர் கூட மனசில் நிற்கவில்லை , அது போல ஒரு காமெடி கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இல்ல அந்தளவுக்கு ரொம்ப மோசமாக தான் இருக்கு , இப்போ கூட ஹர ஹர மஹாதேவி படத்தில் வரும்  காமெடிகள் ஞாபகத்தில் இருக்கு ,  ஆனால் இது இந்த படம் ? ஒரு காட்சி , ஒரு காமெடி கூட இந்த படம் பார்த்து வந்து  கொஞ்ச நேரத்தில கொஞ்சம் கூட ஞாபகத்திற்கு வரவே இல்ல.

 ஒரு தடவை ஹர ஹர மஹாதேவி  மாதிரி படம் வரலாம் , ஆனால் அது மாதிரியே படம் வருமா என்றால் அது சந்தேகம் தான் , இது கொஞ்சம் hype create ஆனதால் இந்த படம் முதல் மூன்று நாள் போகும் , ஆனால் அநேகமா டைரக்டர் சந்தோஷ் இது மாதிரியே அடுத்த படமும் எடுத்தா நிச்சயமா அட்டு பிளாப் ஆகும் 

ஹீரோயின் யாஷிகா கேரக்டர் , மேலும் அந்த பேயாக வரும் கேரக்டர் ரொம்ப மட்டமா சித்தரிக்கபட்டது , இந்த படம் adult comedy movie not porn movie சொன்னாங்க , ஆனால் நிறைய காட்சிகள் B grade porn movie போல தான் இருக்கு , ஆடைகள் , மற்றும் பல பல பல காட்சிகள் ரொம்ப மட்டமாக இருக்கு, இது போக மதுமிதா , மொட்டை ராஜேந்திரன் , பாலசரவணன் எல்லோருடைய கேரக்டர் கொஞ்சம் கூட ரசிக்கும்படி இல்ல .கருணாகரன் கடைசியில் வந்தாலும் இவர்களை compare பண்ணும் போது இவர் ஒரு அளவுக்கு ஸ்கோர் பண்ணுகிறார் சொல்லலாம் அவ்ளோதான் , மற்றபடி சொல்லிக்கும்படி இல்ல 

பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் சுட்ட பாடல்கள் , porn anthem party song கேட்டால் நடு நடுவே kalachasma பாடல் வருது , அப்பறம் அழுக்கு ஜட்டி அமுதவல்லி பாட்டு கேட்டால் , ஹிந்தி கஜினி படத்தில் வரும் Aye Bachchu பாடல்  கொஞ்சம் கேட்க்குது 

இந்த படம் 18+, இப்படி தான் இருக்கும் மேலும் சமூகத்தின் மேல அக்கறை உள்ளவங்க இந்த படத்தை பார்க்காதீங்க இபப்டி எல்லாம் ஏற்கனவே சொல்லி தான் இருக்காங்க , அதனால் ரொம்ப உத்தமன் வேஷம் போட்டு இந்த படத்தை பார்க்க போகல , ஆனால் ஹர ஹர மஹாதேவி போல  எந்த லாஜிக் பார்க்காமல் நல்லா சிரிச்சிட்டு வரலாம் என்று நினைத்து  போனால்  அது கொஞ்சம் ஏமாற்றம் தான் .

மொத்தத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து, இருட்டு கதையில் சுருண்டு போனது 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்