Friday, 22 December 2017

Velaikkaran - வேலைக்காரன்

இங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ  , இந்த போஸ்டர்   falling down என்ற  இங்கிலிஷ் படத்தோட காபின்னு  சொன்னாங்க ,  நான் அந்த இங்கிலிஷ் படத்தை பார்க்கல, அதோட கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா என்று  கூட தெரியாது  , ஆனால் இந்த போஸ்டர் இந்த படத்துக்கு ரொம்ப சரியாக பொருந்தி இருக்கு , ஒரு கையில் பை , மறுகையில் அருவா , ஆமாங்க நாம் செய்யும் தொழிலும் , ஒரு ரவுடி செய்யும் தொழிலும் பெரிய மாற்றம் இல்ல என்பதை  நமக்கு புரியவைக்கும் , ஆனால் அது தான் படத்தோட முழு கதை என்று நினைச்சுடாதீங்க .

படம் ஆரம்பித்து கருத்தவன் எல்லாம் கலீஜா பாட்டு முடிச்சு , அப்படி இப்படி படம் போகும் போது , ஹீரோ இந்த குப்பத்தில் இருப்பவர்களை  மாற்றி, நல்ல பேரு வாங்கும் பழய formula படம் போல நினைக்கும் போது,  இந்த கத்தி படம் போல கார்ப்ரேட் பற்றி சொல்லும் படம் என்று நினைக்கும் போது , அப்படியே படம் கொஞ்சம் change ஆகி intervelலில் அட ச்ச்சே,  இதை தான் நாமும் பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்று நம்மை நாமே கேள்வி கேட்கவைத்து நம்மை   நிமிர வைக்குது .அதில் fahadh ஒரு பக்கம் , சிவா மறுபக்கம் பேசும் காட்சி, சிவாவின் வீட்டில் வரும் ஒரு salesman கிட்ட பேசும் காட்சியும் , பிரகாஷ் ராஜ் இண்டெர்வெல்க்கு முன்னாடி சொல்லும் காட்சி,  நிச்சயமா நம்மை கை தட்ட வைக்குது 

முதல் பாதி விறுவிறுப்பாக முடிய , அதே வேகத்தில் இரண்டாவது பாதி ஆரம்பிக்க , படம் போக போக வளவளன்னு இழுத்துக்கிட்டு போகுது , அதுவும் கடைசி 30 நிமிடங்கள் எப்போ முடிப்பீங்கன்னு கேட்க தோணுது , கடைசியில் ரொம்ப நேரம் சிவா பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார் .சொல்ல வந்த விஷயம் நல்லது என்றாலும், ரொம்ப நேரம் திகட்ட திகட்ட சொல்லிகிட்டே போறாங்க .ஐயா நீங்க சொல்லவந்தது புரிஞ்சிது ஐயா ,போதும்யா முடிச்சிகோங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகுதுன்னு ஒரு feel வருது .

படத்தின் ப்ளஸ் வசனம் எல்லாமே நம்மை யோசிக்கவைக்குது , அட நாம்  எப்படி எல்லாம் இந்த சமூகத்தில் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் தோன்றும் , மேலும் வர்த்தகம் எப்படி எல்லாம் நடக்குது , இந்த சூப்பர் மார்க்கெட்டில் எப்படி எல்லாம் யுக்தி பயன்படுத்துறாங்க, இந்த முதலாளி உலகம் எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பதை காட்டுது .முக்கியமாக அந்த குப்பத்து செட் ரொம்ப தத்துரூபமாக இருக்கு , அதுக்கு நிறைய செலவு பண்ணிருக்காங்க .

படத்தின் மைனஸ் இரண்டாவது பாதியின் length, அதை குறைத்து இருக்கலாம், சிவாவும் , fahadhம் மோதிக்கொள்ளும் காட்சி இன்னும் strong ஆகா பதிவு பண்ணிருக்கலாம்,சிவா & நயன்தாரா மாற்றி மாற்றி help செய்து காதலில் உடனே விழுந்து டூயட் போடுவது bore தான் .இந்த குப்பத்து செட்க்கு நிறைய செலவு  பண்ணதால என்னவோ , சில இடங்களில் படம் ரொம்ப சுமாரா தெரிகிறது , அந்த மீட்டிங் போடும் இடம் , இறுதி தீப்பற்றி கொள்ளும் காட்சிகள் எல்லாம் பார்க்க சும்மா எடுக்கணும்ன்னு  எடுத்தா மாதிரி இருக்கு .

என்னை  பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிச்சதில் உருப்படியான கதையுள்ள படம் இது தான் , அதுவும் நடிப்பிலும் நல்லாவே பண்ணி இருக்கார் , இது வரை நடிச்சதில் சும்மா குழந்தைகளை கவர் பண்ணுவது போல, சில நேரங்களில் ரொம்ப சின்ன புள்ளதனமா  பண்ணுவார் , இதில் சரியாக matured ஆகா செய்து இருக்கார்,சில இடங்க்ளில் கொஞ்சம் குண்டாக சில இடங்களில் ஒல்லியாக தெரிகிறார் , அவோரட கலர் tone கூட  சாதாரண  ஆளு என்பதால் அதை கொஞ்சம் மாற்றி இருக்காங்க , ஆனால் சில இடங்களில் அது மிஸ்ஸிங் ,இவர் director's actor நிரூபித்து இருக்கார் , அதனால வரும் படங்களில் டைரக்டர் சரியாக யூஸ் பண்ணிக்கணும் , சும்மா சிவாவின் fans திருப்தி படத்தணும்ன்னு அவரை அப்படியே நடிக்க விடாதீங்க , அதே போல சிவாவும் இது போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை நடிக்கலாம் . அப்பறம்  சிவாவிற்கு ஒரு சின்ன suggestion ஏதோ weekend என்றால் அது businessகாக special ஷோ போடுவது  ஓகே தான், ஆனால்   முதல் நாள்  முதல் காட்சி ரஜினி  விஜய் , அஜித் போல காலை 5 மணி , 8 மணி ஷோ போடுவது, வெளியே பெரிய பெரிய கட் அவுட் வைச்சி பெரிய ஸ்டார் போல build up பண்ணுவது கொஞ்சம்  ஓவர், இன்னும் நீங்க வளரனும் , உங்களை விட விஜய் சேதுபதி எங்கோ  இருக்கார் , அதனாலே கொஞ்சம் அடங்கி இருப்பது நலம் .(இப்படி சொல்லுவதால் நான் குறிப்பிட்ட எந்த நடிகனின் ரசிகனோ அல்லது சிவாவின் எதிர்ப்பாளனோ அல்ல )

தீபாவெங்கட் ரொம்ப நல்லா படத்தில் பேசியிருக்காங்க , i am sorry நயன்தாரா நடிச்சிருக்காங்க , என்னமா ஆச்சி உங்களுக்கு? நல்ல ஸ்கோப் இருக்குற படம்தானே பண்ணுவீங்க ? டைரக்டர் ராஜா sentiment ஆகா உங்களை கூப்பிட்டாரா ? படத்தில் காட்சிகளே ரொம்ப கம்மி , அவரோட கேரக்டர் சிவாவுக்கு help பண்ணுவது போல இருந்தாலும் , படத்திற்கு பெரிசா அவங்க கேரக்டர் உதவவில்லை .சில இடங்களில் over make up , சில இடங்களில் சிவாவிற்கு அக்காவாக தெரிகிறார், நயன்தாரா சிவாவிற்கு சரியான ஜோடி அல்ல .

பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் , சினேகா , ரோகினி , சார்லி மன்சூர் அலிகான் , ராமதாஸ் , வினோதினி, தம்பிராமையா இப்படி k.s.ரவிக்குமார் படம் போல நட்சத்திர பட்டாளம் பெருசு , எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தான் வராங்க , இதுக்கு மேல அவங்க எல்லோருக்கும் படத்தில் ஸ்கோப் தர முடியாது , , இவர்கள் எல்லாம் சேர்ந்து மீட்டிங் போடும் காட்சி எனக்கு சிவாஜி படத்தை ஞாபகம் படுத்தியது , எனக்கு பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் கேரக்டர் புடிச்சி இருந்துச்சி , இது போக  சதிஷ் , r.j,பாலாஜி, ரோபோ ஷங்கர்ன்னு ஒரு காமெடி பட்டாளம் வேற இருக்கு , ஆனால் பெரியளவில் அவங்களுக்கு படத்தில் இடம் இல்லை , அதிலும் r.j,பாலாஜிக்கு சுத்தமாக ஒன்னும் இல்லை .

fahadh முதல் தடவை தமிழில் , பல இடங்களில் சின்ன சின்ன வில்லத்தன reaction கொடுத்து ஸ்கோர் பண்ணுகிறார் , அதிலும் ஒரு கார் காட்சி வரும் அதில் அவர் பண்ணும் reactions மற்றும் இறுதியில் சிவாவிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் 

படத்தின் பெயர் வேலைக்காரன்னு பெயர் வைச்சாங்களும் வைச்சாங்க  , படத்தில் நிறைய தடவை வேலைக்காரன் வேலைக்காரன் வார்த்தை வருது , பேசாமல் இந்த படத்தில் வேலைக்காரன் எதன்னை தடவை சொல்லிருக்காங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம் .

டைரக்டர் மோகன் ராஜாவை பாராட்டி ஆகா வேண்டும் , பல வருஷங்களாக தெலுங்கு டப்பிங் படங்களை இயக்கியவர் , தனி ஒருவனில் இருந்து வேலைக்காரன் வரை , தனி ஒருவனாக கதை , திரைக்கதை, வசனம் என்று தனித்து நிற்கிறார், தனி ஒருவன் அளவிற்கு தனித்து நிற்கவில்லை என்றாலும் , படம் சொல்லிக்கும்படி நன்றாகவே இருக்கு .

மொத்தத்தில் வேலைக்காரன் முதல் பாதி smart  work , இரண்டாவது பாதி ரசிகர்களுக்கு hard work .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

Saturday, 16 December 2017

Mayavan - மாயவன்

c.v.குமார் தயாரிப்பு என்றால் நிச்சயமா நம்பி அந்த படத்துக்கு போகலாம் , பிசா , சூது கவ்வும் , தெகிடி இப்படி நல்ல படங்கள் லிஸ்ட் இருக்கு , இப்படிப்பட்ட c.v.குமார் முதல் முறையாக directionல இறங்கிட்டாரு , இது அவரோட கதை மற்றும் direction மட்டும் தான் , திரைக்கதை & வசனம் நலன் குமாரசாமி செய்து இருக்கிறார் .
அநேகமா இந்த படத்துக்கு இப்படி ஒரு ஐடியா c.v.குமார் இன்று , நேற்று நாளை படம் தயாரிக்கும் பொழுது வந்து இருக்கும் போல , ஏன்னா அப்படி கொஞ்சம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம் இது , ஒன்னு சொல்லணும் என்றால் இன்று , நேற்று நாளை படத்துல  வர ஒரு செட் , இதில் ஆராய்ச்சி செய்யும் இடம் செட் அது போலவே இருக்கு .

படத்தை பற்றி சுருக்கமா சொல்லிடுறேன் 

படம் முதல் பாதி நல்ல interesting ஆகா போகுது , யார் என்ன பண்ணறாங்க , எதுக்காக பண்ணுறாங்க என்று ஒரு கேள்வி இன்டெர்வல் வரைக்கும் வச்சி இருக்காங்க 
யார் எப்படி பண்ணறாங்க என்று தெரிஞ்ச பிறகு கொஞ்சம் தோய்வு இருக்கு , அதே போல ஜாக்கி ஷெராப் வந்த பிறகு படம் கொஞ்சம் ஸ்பீட் எடுத்தாலும் , ரொம்ப  நீளமாக போய்கிட்டு இருக்க பீல் வருது . அட இப்போ முடிச்சிடும் போல அப்படி நினைக்கும் போது, படம் தொடர்ந்துக்கிட்டே இருக்கு .

படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் , மாநகரம் , நெஞ்சில் துணிவுஇருந்தால் என்று இரெண்டு ஹீரோ படங்கள் செய்தார் , இப்போ இந்த படத்தில தனி ஆளாக நல்லாவே நடித்து இருக்கிறார் , அவர் படம் ஆரம்பத்தில் மனநோய் பாதிக்கபட்டு நடிக்கும் பொழுது நன்றாகவே பண்ணி இருக்கிறார் , அவருக்கு பெரிய மைனஸ் அந்த ஒட்டு மீசை தான் ரொம்ப செயற்கையாக , கொஞ்சம் கூட செட் ஆகல .

படத்தின் ஹீரோயின் லாவண்யா கொஞ்சம் ப்ளஸ் , கொஞ்சம் மைனஸ் 

டேனியல் பாலாஜி, மைம் கோபி  படத்தின் ப்ளஸ் 

படத்தின் கதையின் உள்நோக்கத்தை சொல்லும் பொழுது கொஞ்சம் புரியல , நல்ல detail ஆகா சொல்லி இருக்காங்க ஆனால் அது தான் அந்த வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் குழம்பி விட்டது ,ஐயோ என்னடா ஏதோ சொன்னாங்களே நாம் தான் கவனிக்காமல் மிஸ் பண்ணிட்டோம என்று ஒரு சந்தேகம் வந்து விடுகிறது .அது மட்டும் இல்லமால் ஜெயப்ரகாஷ் அந்த science விளக்கம்  தரும் பொழுது டப்பிங் லிப் sync சுத்தமா ஆகவில்லை  

இசை ஜிப்ரான் படத்தின் இன்னொரு ப்ளஸ் , bgm முதல் பாதியில் நமக்கு நல்ல feel  வரவச்சியிருக்கார் 

டேய் இது எல்லாம் நம்புறா மாதிரியா இருக்குன்னு கேள்வி கேட்காதீங்க , இதுவே இங்கிலிஷ் படத்தில வந்தா , ரசித்து அட சூப்பர் டா சொல்லுவோம் , மேலும் இது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு, அப்படி என்பதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் சொன்னதை படம் முடியும் பொழுது போடுறாங்க அதை மறக்காம பார்த்துட்டு எழுந்து வாங்க.

மொத்தத்தில் மாயவன் முதல் முயற்சி , புதிய முயற்சி .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 15 December 2017

Aruvi - அருவி

அருவி செம்ம செம்ம செம்ம செம்ம  ,  நான் அடிக்கடி செம்ம செம்ம சொல்லுறேன்னு சிலர் என்கிட்ட சொல்லிருக்காங்க , ஆனா இந்த படத்தை செம்ம , மற்றும் என்னவெல்லாம் ஒரு படத்தை பாராட்டவேண்டுமோ அப்படி தமிழில் இருக்கின்ற எல்லா வார்த்தையும் போடணும் இந்த படத்துக்கு, அப்படி ஒரு படம் தான் இந்த அருவி 

படத்துக்கு பெயர் அருவின்னு வைச்சாங்களும் வைச்சாங்க, படம் அருவி போல ஓடுது ,அருவி எப்படி ஓடும் ? சில இடங்களில் சல சலப்பாக சத்தமாக ஓடுது , சில இடங்களில் அமைதியாக ஓடுது , சில நேரங்களில் காட்டாறாக எல்லாத்தையும் அடிச்சிட்டு ஓடும் , அப்படி தான் இந்த படத்தின் திரைக்கதை கூட , 

இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில் மாநகரம் , 8தோட்டாக்கள் , குரங்கு பொம்மை , லென்ஸ் , ஒரு கிடாயின் கருணை மனு வரிசையில் ஒரு அருமையான படம் , மேலே சொன்ன எல்லா படத்தையும் தூக்கி சாப்பிடுகிற அளவுக்கு வருஷ கடைசியில் வந்து இருக்கும் ஒரு சூப்பர் ஹிட் தரமான படம், படம் அபப்டி பட்டைய கிளப்பது .அதுவும் ஒரு பெண்ணை மையமாக வைத்து  ஒரு மாஸ் படம் தந்து இருக்காங்க.

படம் ஆரம்பிக்கும் போது என்னமோ கொஞ்சம் டாக்குமெண்ட்ரி , இல்லனா  அப்பா மகள் உறவு சொல்லிய தங்கமீன்கள் போல வருமோ ? ஒரு சந்தேகம் வருது , ஆனால் போக போக அது அப்படியே மாறிவிடுகிறது , அருவியோட வளர்ச்சி காட்டும் இடங்கள் அருமை , கொஞ்சம் கொஞ்சமா மாற்றம் காட்டுவது சூப்பர் , குறிப்பா 90's  குழந்தை வளர்ச்சியாக காட்டுவது first class , cassette சுத்துவது , டிவி antenna திருப்புவது, அப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் அந்த காட்சியில் வருவது அருமை, அப்படியே பள்ளிவருவதில் அருவி வளரும் காட்சி காட்டுவது ultimate, அதில்  நிறைய சின்ன சின்ன விஷயங்கள், பருவ வயதில் பெண்ணுக்கு வரும் உடல் மாற்றங்கள் , மனமாற்றங்கள் , adolescent வயதில் வரும் உணர்வுகள் எல்லாத்தையும் ஒட்டு மொத்தமாக காட்டி இருக்காங்க, சின்ன வயதில் காட்டும் இரண்டு குழந்தைகளின் கண்கள் அப்படியே பெரிய அருவி பெண்ணை போலவே காட்டி ஒரே மாதிரி கேரக்டர் appearance maintain பண்ணிருக்காங்க .

ஒரு மாதிரி புரியாத tragedy வச்சி , படம் அடுத்தகட்டமாக ஒரு சேனல்குள்ள போகுது, படம் முக்கால்வாசி நடக்கும் இடம் அந்த சேனல் தான் , அந்த சேனல் உள்ளே போன பிறகு படம் செம்ம fast எடுத்துக்கிட்டு பிச்சிகிட்டு போகுது , அங்க நடக்கிற ஒரு ஒரு சின்ன விஷயங்களும் detail ஆகா காட்டிருக்காங்க , இன்டெர்வல் வரும் போது ஒரு ட்விஸ்ட் வச்சி  , அப்பறம் ஒரு பெரிய வசனங்கள் அதுவும் இந்த உலகத்தோட சரியான உண்மையை முகத்தை கிழித்தெறியும் வசனங்கள் வந்து , படமே முடிகிறளவுக்கு ஒரு உணர்வு  கொடுத்து, ஒரு பெரிய ஹீரோக்களுக்கு கொடுக்கும் மாஸ் போல ஒரு ஷாட் வச்சி ,  நம்மை ஒரு பெருமூச்சி விட வச்சிட்டாரு டைரக்டர் .

இன்டெர்வல்க்கு பிறகு படம் வேற levelஇல் travel பண்ணுகிறது , அங்க இருந்து ஒரு 30 நிமிஷம் செம்மையா  சிரிக்கலாம் , எஎப்படி  அப்படி ஒரு சீரியஸ் படத்தில ஒரு பகுதி அப்படி  ஒரு நகைச்சுவையாக எல்லோரையும் ரசிக்கும்படி காமெடி வச்சி மாஸ் பண்ணியிருக்கார்  டைரக்டர்? , அது முடிச்ச பிறகு திரும்பவும் படம் வேற ஒரு மூடில் படம் பயணித்து , அப்பாடா ஒரு நல்ல படம் பார்தோம்ன்னு ஒரு பெரிய திருப்தியுடன் வெளியே வர முடியும் .

படத்தில் எல்லோர் கேரக்டர்களும் சூப்பர் , எல்லோரும் மனசில் நிப்பாங்க , டிவி anchor, டைரக்டர் , செக்யூரிட்டி இப்படி ஒரு பெரிய லிஸ்ட் போகும் , ஆனால் எத்தனை பேர் இருந்தாலும் ஒருத்தன் மட்டும் மனசில் அப்படியே நிப்பான் அவன் யாருன்னா ? rooolling sir சொல்லும் ஒருவர் , நிச்சயமா அது ஒரு trend செட்டிங் வார்த்தையாக, மீம் போடுபவர்களுக்கு ஒரு நல்ல தீனியாக அமையும் அந்த வார்த்தை . சத்தியமா எனக்கு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த வாரத்தை என்னோட காதுகளில் ஒலிச்சிக்கிட்டே இருக்குது (" Rooolling Sir "), படம் முடிச்ச பிறகு எல்லோருடைய பெயர் போட்டாங்க இருந்தாலும் அந்த Rooolling Sir சொன்ன நடிகர் பெயர் பார்க்க முடியல .யாருயா நீ பின்னிப்பெடல் எடுத்துடீங்க , 

அருவியக நடித்த அதிதி பாலன் நடிக்கல வாழ்ந்துட்டாங்கன்னு சொல்லணும்  , படத்தின் முதல் பாதியோ அல்லது இரண்டாவது பாதியில் சேனலுக்குள்ள ஒரு நடக்கும் விஷயங்கள் நடித்தது கூட பெரியது இல்ல , கடைசி 20 நிமிஷம் நடிப்பு தான் அவங்க எங்கேயோ போய்ட்டாங்க , மக்கள் மனசில் அழமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் நடிப்பு,  .அவங்க கூட வரும் அந்த திருநங்கையும் நல்ல பண்ணிருக்காங்க.

இந்த படத்தை பாராட்டணும்ன்னா பாராட்டிக்கிட்டே போகலாம்.கைதட்டி கைகள் வலிக்குது , சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது ,இறுதியில் எமோஷன் ஆகி கண்கள் வேர்க்கிறது 

இயக்குனர் : அருண் பிரபு 
இசை : பிந்து மாலினி & வேதந்த் பரத்வாஜ் 
கேமரா : ஷெல்லி காலிஸ்ட் .
மொத்தத்தில் அருவிக்கு தியேட்டர்களில் மக்களின் கைதட்டுகள் அருவியாக கொட்டுகிறது , அடுத்த வருடம் விருதுகள் அருவியாக கொட்டும் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Saturday, 9 December 2017

Riche - ரிச்சி


சம்பந்தமே  இல்லாம கேரக்டர்களை நாமே சம்பந்தம்படுத்தி பார்த்து , நமே ஒரு கதையை ஒரு குத்துமதிப்பா பார்த்து புரிஞ்சிக்கவேண்டிய படம் இந்த ரிச்சி , இந்தவாரம் இரண்டு படம் வந்துஇருக்கு இரண்டுமே ரீமேக் தான் , சத்யா படம்  ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , ரிச்சி படம் உள்ளீடவாறு கண்டந்தி என்கிற கன்னட படத்தோட ரீமேக் , இது ஒரு cult movie ஆகணும் நினைச்சி எடுத்து இருப்பாங்க போல, நமக்கு கமல் படமே இரண்டாவது முறை பார்த்தா தான் புரியும் , இது அதுக்கும் மேல.

படம் ஆரம்பிச்சி 25 நிமிஷம் நிவின் பாலி படத்துல வரல , அதுவரைக்கும் அவரைப்பற்றி சுற்றி இருக்கும் கேரக்டர்கள் அவருக்கு  full build up தராங்க , ஒருவழியா 25 நிமிஷம் கழிச்சி வரார்,  நிவின் பாலிக்கு இந்தளவுக்கு build up வேண்டுமா ? அப்படின்னு கேட்க தோணுது , நிறைய இடங்களில் slow motion வச்சி build up வேற , அந்தளவுக்கு கதைக்கு அவர் கேரக்டர் strong ஆகா இல்ல , அதே நேரத்தில முதல் பாதியில் ரொம்ப குறைவான காட்சிகளே அவருக்கு இருக்கு , அதுவும் வெறும் build up  மட்டும் தான் , இரண்டாவது பாதியில் தான் அவரோட கேரக்டர் கொஞ்சம் தெரிய வருது , ஆனால் நாமே பல விஷயங்களை புரிஞ்சிக்க வேண்டும்ன்னு நினைத்து இருக்காங்க , அந்தளவுக்கு நாம புத்திசாலி இல்லையிங்கோ ..

எனக்கு நிவின் பாலி கேரக்டர் விட நட்டி நட்ராஜ் கேரக்டர் நல்ல வடிவமைச்சிருக்காங்கன்னு தோணுது, ஒரு சாதாரணமா இயற்கைய நடிச்சிருக்கார், அப்பறம் ரகு கேரக்டர் முக்கியமான கேரக்டர் ஆனால் படத்தில பார்க்கும் போது எங்கயோ ஏதோ ஒன்னு புரியாத மாதிரியே இருக்கு,

முக்கியமான கேரக்டர் ஹீரோயின் ஷ்ரதா ஆனால் screenல ரொம்ப ரொம்ப ஸ்கோப் கம்மி தான் , ஹீரோ, ஹீரோயினை விட "லட்சுமி" குறும்படம் புகழ் நடிகை லட்சுமிக்கு  தியேட்டர்ல நல்ல வரவேற்பு , அவங்க பெயர் போடும் போதும் சரி , அவங்க படத்துல முதல் காட்சியில் வரும் போதும் சரி செம்ம கைத்தட்டு மக்கள் தட்டுறாங்க .ரிச்சி படம் ரீச் ஆகுதோ இல்லையையோ நீங்க நல்லா ரீச் ஆகிருக்கீங்க .

ரிச்சி மற்றும் ரவி கேரக்டர் காட்டும் பொழுதெல்லாம் ஒரே red  கலர் tone படத்துல இருக்கு , நட்டி கேரக்டர் காட்டும்பொழுது blue  மற்றும் green கலர் வருது , அதற்க்கு என்ன அர்த்தம் தெரியல , இந்த படத்தை பற்றி வேற என்ன சொல்வது என்று தெரியல , என்னமோ ஏதோ ஒரு புதிர் , ஏதோ ஒரு aptitude test எழுதுவதற்கு போனா மாதிரியே ஒரு feel , முதல் பாதி எதற்கும் சம்பந்தம் இல்லாம , என்னடா சொல்லவாறீங்க மண்டைய சொறிஞ்சிக்கிட்டு இருக்க ஒரு feel ,படம் முடியும்போது இந்த படத்தை புரிஞ்சிக்கிற அளவுக்கு நமக்கு தான் அறிவு இல்லையோ ? இல்ல படம் மொக்க தானோ ? இப்படி பல கேள்விகளோட தன வெளியே வர முடியுது .


மொத்தத்தில் ரிச்சி ரொம்ப பிச்சி பிச்சி நம்மளை செஞ்சாங்க நல்லா வச்சி 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 8 December 2017

Sathya - சத்யா

இந்த படம் ஷணம் என்ற தெலுங்கு படத்தோட ரீமேக் , சிபிராஜ்க்கு நல்ல பிரேக் கொடுக்கணும்ன்னு அவரே rights வாங்கி நடிச்சு இருக்கும்   படம், அப்போ இந்த படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுக்குமான்னு கேட்டா ? பெரிய பிரேக் கொடுக்காது ஆனால் அவர் நடித்ததில் சொல்லிக்கும்படியான ஒரு நல்ல படம் .

ஒரு குழந்தையை காணவில்லை அந்த குழந்தை இருக்கா இல்லையா ? அப்படி  ஒரு குழந்தையே உண்மையிலே இருக்கா இல்லையா? அந்த குழந்தையை கண்டுபிடிச்சாங்களா இல்லையா ? யார்கிட்ட இருக்கு ? இப்படி ஒரு மர்ம கதையை , ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக ஆரம்பிச்சாலும் , போக போக  சுவாரசியமாக கடைசி ஒரு 40 நிமிடங்கள் விறுவிறுப்பாக கொடுத்து முடிச்சிட்டாங்க 

முதல் பாதி இப்படி தான் ரம்யா கேரக்டர் இருக்கும்ன்னு கொஞ்சம் சுலபமாக கணிக்கமுடிச்சது அதனால அதன் தொடர்ச்சியாக வரும் காட்சிகளும் , அதன் தொடர்புடைய characterகளும் இப்படி இருக்கும் என்று  easyஆகா guess பண்ணமுடிச்சது, ஆனால் இரண்டாவது பாதியில் ஒரு குறிப்பிட்ட கேரக்டர் பிடிப்பாங்க , அதிலிருந்து படத்தோட நல்லாவே நம்மை ஒன்றவைச்சது .

சிபிராஜ்  - ஒரு neat performance,  

ரம்யா  - நல்லா பண்ணிருக்காங்க , சில இடங்களில் நல்ல அழகாக தெரிகிறார் , சில இடங்களில் வயசான ஆளாக தெரிகிறாங்க 

ஆனந்த்ராஜ் சமீபகாலமாக ஒரு நக்கல் கேரக்டர் செய்து பட்டைய கிளப்புறாரு , அப்படியே இதுலயும் செய்துட்டு போகிறாரு 

சதிஷ் சில இடங்களில் காமெடி try பண்ணிருக்கிறாரு அவளோதான், ஆனால் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் இவர் இந்த படத்தில் காமெடியன் இல்ல .

யோகிபாபு - ரொம்ப சின்ன ரோல் , கதைக்கு காமெடி பெருசா தேவைப்படல அதனால அவர் ஸ்கோப் கம்மி தான் , அதே நேரத்தில அவர் வரும் இடங்களும் பெருசா காமெடி எடுபடவில்லை 

இன்னும் சில கேரக்டர் பற்றி சொல்லவிரும்பவில்லை ஏன்னா , அவர்கள்  கேரக்டர் பற்றி சொன்னால் படத்தில் இருக்கும் சில மர்ம முடிச்சுகள் தெரிஞ்சிடும்.

கேமராமேன்  அருண்மணி , படம் சில வெளியிடங்களில் candid ஆகா எடுத்து இருப்பாங்க போல,  அதனால சில இடங்கள் ரொம்ப சுமாராகவும் , சில இடங்களில் மோசமாக தெரிகிறது 

இசை : சைமன் , நிச்சயமாக அந்த யவன பாடல் நல்லா இருக்கு , bgm சரியாக பொருந்தி இருக்கு , ஆனால் சில இடங்களில் வசனங்களை தாண்டி கேட்கிறது .

எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போனால் அனைத்து தரப்பையும் ஒரு அளவுக்கு திருப்திப்படுத்தும் படம் .

மொத்தத்தில் சத்யா சத்தியமாக கொடுத்த 165க்கு சாத்தியமானது 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

Friday, 1 December 2017

Thiruttu Payale 2 - திருட்டுப்பயலே-2

இந்த வருஷம் social மீடியாவால் நடக்கும் பிரச்சன்னை பற்றி லென்ஸ் படம் வந்தது , ஆனால் பலர்க்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியல , அப்பறம் ஸ்பை , phone track பண்ணுவது , ஒட்டுக்கேட்பது வச்சி ஸ்பைடர் படம் வந்துச்சி , இந்த இரண்டு படத்தையும் கொஞ்சம் கலந்து வச்சா இந்த திருட்டுப்பயலே-2, ஆனால் லென்ஸ் படம் ஒரு மாஸ்டர்  படம் சொல்லணும் , அதுக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் கிடையாது.

முதலில் இந்த படத்தின் தலைப்பை விளக்கிடலாம் , இந்த படத்தை திருட்டுப்பயலே-2(part 2) சொல்லுவதற்கு பதிலா , திருட்டு பசங்க 2(ரெண்டு) சொல்லணும் , ஏன்னா இந்த படத்தில பாபி சிம்ஹா , பிரசன்ன இரெண்டு பேர் characterம் சரியாக ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காத திருட்டு கதாபாத்திரங்கள் . ஒரு social மீடியாவால் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி இருக்காங்க.


படத்தில் நல்ல விஷயங்கள் என்னவென்றால் , மூணுபேரை சுற்றியே படம் நடக்குது , பாபி சிம்ஹா , அமலாபால் , பிரசன்னா , எல்லோரும் நல்லா நடிச்சிருக்காங்க , அந்த வீட்டுல மூன்று பேரும் சந்திக்கும் காட்சி நல்லா இருக்கு, டைரக்டர் சுசிகனேசன் படத்தில எப்பொழுதும் ஹீரோ வில்லன் மோதும் காட்சிகளில் புத்திசாலித்தனமான காட்சியமைய்ப்பு இருக்கும் , ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கும் , அது எல்லாம் இந்த படத்தில் இருக்கு . ஆனாலும் படம் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் போல ஒரு feel இருக்கு ,படத்தில் ப்ளஸ், வசனங்கள் கொஞ்சம் குறும்புதனமாக , ரசிக்கும்படி , சில  உண்மை நிலவரங்களை சொல்லி இருக்காங்க.


மேலும் இந்த படம் எப்படி இருக்குன்னு சொல்லணும்ன்னா அந்த படத்துல வருகிற வசனம் போல தான் சொல்லணும் 


நல்ல கொடூரமான வில்லன் கேரக்டர் ஆனால் அதை பார்க்கும் போது நமக்கு அதன் மேல கொடூரமும், கோவமும் , ஆத்திரமும் வரல 


நல்ல ஹீரோ ஹீரோயின்  கேரக்டர் வடிவமைப்பு ஆனால் அந்த உறவை பார்க்கும் போது சந்தோஷமோ , ஐயோ பாவமோ எண்ணம் வரல 


மூணு பேரும் தனித்தனியா நல்லா பண்ணிருக்காங்க ஆனால் மொத்தமாக பார்க்கும் போது அந்த relationship bonding படத்தில தெரியல 


காதல் காட்சிகள் இருக்கு  ஆனால் பார்க்கும் போது  காதல் வரல 


சுவாரசியமான வேகமான திரைக்கதை, ஆனால் பார்க்கும் போது அந்த வேகமோ சுவாரசியம் வரல ( ஒருவேளை வித்யாசாகர் bgm ஒழுங்கா செட் ஆகல போல )


 எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இருக்கு ஆனால் பெரிய பாதிப்புகள் ஏற்படல 


நிறைய டெக்னாலஜிகளும் , brillianceகளும் பயன்படுத்தி இருக்காங்க , ஆனால் எதுவும் மனசுல நிக்கல .


பாராட்டவேண்டிய ஒரு விஷயம் இந்த படத்தில என்னென்ன  அது,  எப்படி இந்த இணையதள உலகத்தில பாதுகாப்பாக இருக்க வேண்டும்ன்னு ஒரு உதாரணம் இந்த படம் .

என்னடா இவன் இன்னைக்கு ஆனால் ஆனால் பயன்படுத்தி விமர்சனம் எழுதிருக்கானே தோணுதா? ஆமாங்க இந்த படத்தில ஒரு சேட்ஜி வருகிறார்  " இந்த ______  உங்களது, ஆனா _________ " இப்படி தான் அவர் படம் முழுக்க சொல்லுவார் ,இதை படம் பார்த்தா புரியும் ,எனக்கு படத்தில் மனசில் நின்ன கேரக்டர் அந்த சேட்ஜி தான் .


மொத்தத்தில் திருட்டுப்பயலே-2, கொஞ்சம் இருட்டுப்பயலே தான் .


சிலர் இந்த படம் நல்லா இருக்கு சொல்லுறாங்க , அதனால என்னோட விமர்சனத்தை திட்ட அதிக வாய்ப்பு இருக்கு , ஆனால் என்னை பொறுத்தவரை  இந்த படம் கொஞ்சம் சுமார் தான் .நெகடிவ் கமெண்ட் கொடுத்துக்காக திட்டுபவர்கள் திட்டலாம் .


இப்படிக்கு 

சினி கிறுக்கன்