ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Padmavat - பத்மாவதி

பத்மாவதி இந்த படம் ரிலீஸ் ஆனதே லேட் , நான் படம் பார்த்தது கொஞ்சம் லேட் , இதுக்கு ரொம்ப லேட்டாக  review போடலாமா வேண்டமா எனக்கு ஒரு கேள்வி ? ஏன்டா இந்த படத்துக்கு எல்லாம் review போடுவியான்னு கேட்டகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது , இருந்தாலும் போடுவோம் படிக்கறவங்க படிங்க.பொதுவா சர்ச்சைகள் உள்ள படம் ,  இல்லனா நல்ல மற்ற மொழி படங்கள் மிஸ்பண்ணாம பார்த்துடுவோம் , அப்படி பார்த்தது தான் இந்த படம் , தமிழில் பார்க்கல ஹிந்தில தான் பார்த்தேன் , நமக்கு தெரிஞ்சது கொஞ்ச ஹிந்தி தான் நல்லவேளை subtitle இருந்துச்சி 

கதை :
பொதுவா கதை என்னோட reviewல் இருக்காது, ஆனால் இந்த படம் சொல்லியே ஆகணும் , வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணும் வெறித்தனமான Aladdin(ரன்வீர்), சித்தூர் ராணி அழகை கேள்விப்பட்டு அவளை அடைய ஆசைபடுறான், அவனுக்கு சற்றும் சளைக்காத  நேர்மையாக போர் புரியும் ராஜபுத்திரர்கள் ராஜா ரத்தன் சிங் (ஷாஹித் கப்பூர் )கடைசியில் இறந்து போக,  ராணி பத்மாவதி(தீபிகா) உட்பட பல பெண்கள் தங்களை தாங்கள் நெருப்புக்கு தியாகம் செய்யறாங்க , கடைசி வரைக்கும் சுல்தான்(ரன்வீர்) ராணி பத்மாவதியை(தீபிகா) பார்க்க முடியவில்லை, இது பலருக்கும் தெரிஞ்ச கதை இதில் கற்பனை கலந்து வந்து இருக்கு இந்த படம் 

திரைக்கதை:
மூன்று மணி நேரம் படம் நிச்சயமா கொஞ்சம் பொறுமையாக தான் இந்த படத்தை  பார்க்கனும், படம் ரொம்ப வேக வேகமா போகவில்லை, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நிமிர வைக்கிறது, படத்தின் கதை என்னவென்று தெரிஞ்சு பார்ப்பதால், பார்க்கும் பொழுது நமக்கு  பெருசாக சுவாரசியம் இல்லாத மாதிரி தான் ஒரு உணர்வு, மேலும் ஷாஹித் கப்பூர் & தீபிகா காதல் காட்சிகள் காதல் ரொம்ப சொட்ட சொட்ட கொடுத்து இருக்காங்க ஆனால் அந்த காதல் கூட ரொம்ப நிதானமா slow ஆகா சொட்டுகிறது, பேசுறது கூட இவ்வளவு  பொறுமையாகவா  பேசுவீங்கன்னு கேட்க தோணுது , ரெண்டாவது பாதியில் வரும் காதல் காட்சிகள் பார்க்கும் போது எப்பா டேய் காதல் பண்ணது போதும்டா வெளியே போயிட்டு சண்டை போடுங்கடா ன்னு கேட்க தோணுது, காதல் காட்சிகளை குறைத்து போர் காட்சிகளை கொஞ்சம் அதிகம் படுத்தியிருக்கலாம் 

ரன்வீர் சிங் :
படத்தின் ஹீரோன்னு சொல்லணும்ன்னா இவரைத்தான் சொல்லணும் , மனுஷனா இல்ல மிருகமா இவன்?  என்று சொல்லவைக்குது அந்த கேரக்டர்க்கு அப்படி ஒரு justification கொடுத்து இருக்கார்,எங்கேயும் ரன்வீர் ஆகா தெரியல , அந்த கண்பார்வை கூட அப்படி ஒரு வில்லத்தனம் படம் full ஆகா வருது, அந்த நடை body language எல்லாம் தாறுமாறு, அவங்க டென்டில் தீ விழும் பொழுது பார்த்துட்டு அசால்ட்டாக அப்படியே இருந்து ஒரு expression தருவார் செம்ம, கலி பலின்னு ஒரு பாட்டு வரும் அந்த வெறித்தனம் அந்த பாட்டுல அவர் ஆடும் பொழுதும் கூட தெரியும், , இந்த படம் தூக்கி நிறுத்துவது ரன்வீர் தான் , ஒரு சில படங்ளில் தான் வில்லன் கேரக்டர் strong ஆகா இருக்கும் , அதை ரொம்ப சூப்பராக செய்து இருக்கார் , மேலும் நமக்கு ச்சே என்ன வில்லன்யா இவன் , ஒரு வில்லன் ஜெயிக்கணும்  ஒரு சில  படங்களில் தான் தோணும் , அப்படி இந்த படத்தில் தோணுவச்சிருக்காங்க, நிச்சயமா சிறந்த வில்லனக்குரிய விருதுகள் வாங்குவார் 

தீபிகா :
அழகான ராணி , அவளால் , அந்த அழகால் தான் கதை என்பதால் தீபிகாவை எந்தளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு அழகா காட்டிருக்காங்க, முகத்தில் நிறைய பட்டி டிங்கரிங் பார்த்து இருக்காங்க , எந்த அளவுக்கு பார்த்து இருக்காங்க என்றால் , டிஜிட்டல் கலரிங் வேற நிறைய செய்து இருக்காங்க போல  தெரியுது , பல இடங்களில் கிராபிக்ஸ் கார்ட்டூன் படத்தில பார்த்தது போல இருக்கு அவங்க முகம் , மாசு மருவற்ற முகம் என்பது இது தானோ கேட்கத்தோணுது 

ஷாஹித் கப்பூர் :
படத்திற்கு இவர் முக்கியமான கேரக்டர் ஆகா இருந்தாலும் படத்தின் முக்கியம் தீபிகாவும் ரன்வீரும் தான் , அதனால் இவர் கேரக்டர் பெருசா எடுபடவில்லை, மேலும் எனக்கு படத்தில் பார்க்கும் பொழுது ராஜாக்குரிய ஒரு கம்பீரம் வரவில்லை , ரன்வீரை பெருசா காட்ட வேண்டும் என்பதால் இவரை டம்மி ஆக்கிட்டாங்க போல, ரன்வீருக்கு முன்னாடி வீர வசனம் பேசினாலும் ஒரு ராஜபுத்திரர்கள் என்று கம்பீரமாக சொல்லும் அளவுக்கு இல்ல , ரன்வீர் முன்னாடி இவர் சின்ன பையன் போல தான் இருக்கார் .


சஞ்சய் லீலா பன்சாலின்ன இன்னொரு பெயர் பிரம்மாண்டம், அந்த 
பிரம்மாண்டம் படம் முழுக்க இருக்கு , எனக்கு மீண்டும் பாஜிரோ  மஸ்தானி பார்த்த உணர்வு , அந்த செட்டிங் பிரம்மாண்டம் அரண்மனை எல்லாம் செம்ம , எது செட்டிங் எது ஒரிஜினல் எது கிராபிக் என்று கொஞ்சம் கூட பிரிச்சி பார்க்க முடியல அப்படி ஒரு அருமையான மேக்கிங் .படத்திற்கு இசையும் இவரே, ஆனால் சஞ்சித் தான் படத்தின் Bgm,  படத்தின் ப்ளஸ் இவரோட Bgm தான்,  .ஆனால் படத்தின் நீளம் மைனஸ் , மேலும் போர் காட்சிகள் இல்லாதது படத்தின் ராஜபுத்திரர்கள் வீரம் இல்லாதது போல ஒரு உணர்வு.

இந்த படம் எதுக்கு இந்தளவுக்கு சர்ச்சை பண்ணாங்க தெரியல 

மொத்தத்தில் பத்மாவதி பல சர்ச்சைகளை பதம்பார்த்து மிதித்தவள்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 27 ஜனவரி, 2018

Nimir - நிமிர்

உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்தா ரெண்டு நாளைக்கு நிமிர முடியாது , ஏன்னா அவரோட முந்தைய படங்கள் அப்படி , இருந்தாலும் ப்ரியதர்ஷன் படம் என்பதால் ஒரு அளவுக்கு நிமிர்ந்து பார்க்கலாம் என்ற ஒரு நம்பிக்கையில் போனேன் , அதுவும்   Maheshinte Prathikaaram  என்ற மலையாளப்படத்தின் ரீமேக் என்பதால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சி , அந்த ஒரிஜினல் படத்தை நான் பார்க்கவில்லை

படம் ஆரம்பமே இந்த படம் visual ஆகா நல்லா இருக்கும் என்ற ஒரு எண்ணம் வந்தது, அதே போல படம் full ஆகா ரொம்ப அழகா காட்டிருக்காங்க, மலை , மழை , இயற்க்கை , உதயநிதி ஸ்டாலின் வீடு , அதுவும் இரவில்  காட்டும் lighting மனசில் பதியவச்சது,

படம் போக போக என்னமோ ஏதோ சம்மந்தம் இல்லமே , எங்க எங்கயோ போகுது , ஒரு ஒரு கேரக்டர் புரியவச்சி படம் கதைக்குள்ள போகுது , ஆனால் அது  எல்லாம் தேவையா என்று  தோணுது, படம் முக்கியமா கதைக்குள்ள போக  ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மான் அண்ணாச்சியில் ஆரம்பித்து கஞ்சா கருப்பு வழியாக எம்.ஸ் .பாஸ்கர் வழியாக உதயநிதி ஸ்டாலின் கிட்ட போயிட்டு சேரும் chain link ஒரு நல்ல ஐடியா , ஆனால் அப்படி பட்ட லிங்க் தேவையா என்ற எண்ணம் தோணுது , அதுவும் அதை செயல் படுத்திய விதம் ரொம்ப சாதாரணமா  இருக்கு  , காமெடி என்ற இடத்தில வைத்த காட்சிகள் எதுவும் காமெடியாக  இல்லை.

அழகான எதார்த்தமான படமாக வரவேண்டியது, சொல்லப்போனா ரொம்ப commercial பொருட்களும் படத்தில் பெருசா இல்ல , இருந்தாலும் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை , பல இடங்களில் கொட்டாவி தான் வருது , இது ஒரு நல்ல emotion feeling படமாக வரவேண்டியது அந்த எமோஷனும் வரவில்லை , அநேகமா உதயநிதி ஸ்டாலின் தவிர வேற யாராவது செய்து இருந்தால் நல்லா இருந்து இருக்கும் போல , சொல்லப்போனா உதயநிதிக்கு இது ஒரு நல்ல படம் தான், இருந்தாலும் அதை முழுமையாக  வெற்றி படம் , அருமையான படம் என்று சொல்லவைக்கவில்லை  அவர் .

ஹீரோயின் நமீதா ப்ரமோத் ரெண்டாவது பாதியில் தான் வராங்க , பார்க்க நல்லா இருக்காங்க , நல்லா நடிச்சி இருக்காங்க , ஆனால் அவங்களை எங்கேயோ பார்த்த ஒரு உணர்வு இருக்கு .

குறிப்பா ஒருத்தரை பற்றி சொல்லனும்னா அப்பாவாக நடித்த இயக்குனர் மகேந்திரன் , அவரோட கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சி, ரெண்டு இடத்தில் அந்த கேரக்டர் எப்படி பட்டது என்றது தெளிவா தெரிஞ்சது , உதயநிதி அடிவாங்கிய பிறகு பதறாம , கத்தாமல்  சாதாரணமா செருப்பு எடுத்து தருவது , பார்வதி நாயர் அப்பா அவங்க வீட்டுக்கு வந்து உதயநிதியை சந்திக்கும்  பொழுது அழகா அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ரொம்ப  இயற்கையா இருந்தது .இன்னும் கூட அவருக்கு படத்தில் காட்சிகளோ அல்லது அவர் கேரக்டர் இன்னும் பெருசாக காட்டி இருக்கலாமே என்ற எண்ணம் தோணுச்சு .

இன்னும் இந்த படத்தை பற்றி என்ன பெருசா சொல்லுவது என்று தெரியல, ஒரு சாதாரண கதை தான் ஆனால் அதை இன்னும் ரசிக்கும்படி இருந்திருந்தால்  நல்லா இருந்து இருக்கும்.


மொத்தத்தில் நிமிர் பெருசா நிமிரவில்லை .



இப்படிக்கு 

சினி கிறுக்கன் 

வெள்ளி, 26 ஜனவரி, 2018

Bhaagamathie - பாகமதி

பாகுபலி , பாகமதின்னு படம் பெயர் கேக்கறதுக்கு ஒரே மாதிரி இருக்கு, ரெண்டு படத்திலும் அனுஷ்கா தான், அதுவும் தெலுங்குகாரங்க எடுத்த படம் , தமிழ் தெலுங்குன்னு ரெண்டு மொழிலையும் வந்து இருக்கு, வழக்கமான பேய் படம் ட்ரெண்ட் தான் இதுவும் ,

பேய் படம்ன்னா என்னவெல்லாம் இருக்கும் ? ஒரு பழைய பங்களா அதுல ஒரு பேய் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் , அப்பறம் இங்க எவனையாவது பழி வாங்க வந்து இருக்கும் , இப்படி தான் எல்லாம் பேய் படஙளும் இருக்கும் , இந்த படத்தில் நான் சொன்னது போல சில விஷயங்கள் இருந்தாலும்  , ஆனால் பழி வாங்க வருவது , பூசாரி சாமியார் ன்னு யாரும் இல்ல , குறிப்பா பேய் படத்தில் வரும் பேய் காமெடி இப்படி என்று வழக்கமான காட்சிகள் இதில் இல்ல

முதல் பாதி படத்தின் கதையே இல்லாமல் சும்மா பங்களாவை சுத்தி சுத்தி காண்பிச்சி எப்பொழுதும் போல பேய் படம் formula வை  வைச்சி, அங்க அங்க தீடிர் தீடிர்ன்னு பயமுறுத்தும் ஷாட்கள் வைச்சி   ,இப்படி  படத்தை ஓட்டி முதல் பாதியை முடியுது, தலைவாசல் விஜய் வரும் போதே எனக்கு இந்த படம் எப்படிபட்ட கதையுள்ள படம் , அனுஷ்காவுக்கு என்ன மாதிரி ரோல் இருக்கும்ன்னு எனக்கு யூகிக்க முடிச்சது, ஆனால் எதுக்காக, ஏன் ,  எப்படி என்பது கடைசியில் காட்டுறாங்க 

இந்த படத்தில் இன்னும் பெருசா குறிப்பிட்டு சொல்லிக்கும்படியா எந்த ஒரு புதுமையான விஷயமும் இல்ல , ஆனால் ஒரு ரெண்டு மணி நேரம் படம் எங்கேயும் bore அடிக்காமல் நம் கவனம் படத்தை விட்டு வெளியே போகாமல் படம் போகுது, படம் பார்க்கும் போதே easy ஆகா கணித்து விடலாம் என்ற அளவுக்கு தான் திரைக்கதை இருக்கு, எனக்கு இந்த படத்தின்  திரைக்கதை கதை பார்த்த கொஞ்ச நேரத்தில், 2012ல் வந்த ஒரு ட்ரெண்ட் செட்டிங் பேய் மற்றும் த்ரில்லிங்  படம் தான் ஞாபகம் வருது , அது எந்த படம்ன்னு சொல்லிட்டா இந்த படம் பார்க்கும் சுவாரசியம்  போயிடும் , ஒரு clue சொல்லணும்ன்னா அப்போ அந்த ஹீரோ அந்த படத்தின் மூலமாக தான் வெளியுலகத்துக்கு தெரிஞ்சார் , அந்த டைரக்டர்க்கு முதல் படமே பெரிய பெயர் வாங்கி தந்தது , ஒருவேளை இந்த படத்தின் டைரக்டர் அந்த படத்தை ஒரு reference ஆகா வச்சி தான் இதை எடுத்து இருப்பர் போல(அது எந்த படம்ன்னு உங்களுக்கு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் எனக்கு தனியா msg பண்ணுங்க, நான் சொல்லுறேன் ) , climax ஒரு காட்சி ஷங்கர் படத்தின் ஒரு காட்சி ஞாபகம் வந்தது 

படத்தின் ப்ளஸ் அனுஷ்கா , மிரட்டும் தமனின் bgm, அளவான vfx ,படத்தின் வேகத்தை குறைக்கும்படியான பாடல்கள் இல்லாதது . அந்த அரண்மனை செட் 

படத்தின் மைனஸ் predictable திரைக்கதை , கொஞ்சம் லாஜிக் மிஸ்ஸிங் , படத்தின் கடைசி காட்சியில் எப்பொழுதும் போல வரும் பேய் பட டச்  

மொத்தத்தில் பாகமதி ஒருஅளவுக்கு பாகவே உந்தி.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


ஞாயிறு, 14 ஜனவரி, 2018

Gulaebaghavali - குலேபகாவலி





புகழ் பெற்ற பழய படத்தோட பெயர்ல வந்து இருக்கு இந்த படம், ஆனா படம் ஆரம்பிக்கும் போது எம்.ஜி.ஆர் photo போட்டு இருக்காங்க , அதுக்கே பல கைத்தட்டு வருது ,இதை பார்க்கும் போது  இன்னும் எம்.ஜி.ஆர்க்கு ரசிகர்கள் இருக்காங்க .

 சரி இந்த படம் எப்படி பட்ட படம் ? படம் முதல் காட்சியே எப்படிபட்ட படம் இது , இதை நோக்கி போகும்ன்னு clear ஆக தெரியுது , ஒரு புதையலை தேடி இந்த படம் போகுது , ஆமாங்க இந்த மரகதநாணயம் போல கதை தான் , ஆனால் பேய் எல்லாம் இல்ல , வெறும் காமெடிதாங்க , அப்போ காமெடி செம்மயா இருக்கும் படம் full ஆகா விழுந்து விழுந்து சிரிப்பு இருக்குமான்னு பார்த்தா , அப்படி fullah பயங்கர சிரிப்பு இல்லாட்டியும் , ஒருஅளவுக்கு சில இடங்களில் நம்மை நல்லாவே சிரிக்க வச்சிருக்காங்கன்னு சொல்லலாம் .

படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் ஒரு ஒரு கேரக்டர் எப்படிபட்டவங்கன்னு பதியவச்சி கதைக்குள்ள போக கொஞ்சம் time எடுக்குது , அப்போ அங்க அங்கே கொஞ்சம் தான் காமெடி பெருசா ஒண்ணுமில்ல , அப்போ எல்லாம் யோகிபாபு நல்ல timingல கலாய்த்து கொஞ்சம் காப்பாற்றுகிறார், ஒரு கட்டத்துல ரேவதி , முனீஸ்காந்த் , பிரபுதேவா , ஹன்சிகா நால்வரும் சேர்ந்த பிறகு நல்ல வேகம் எடுக்குது கதையிலும் , காமெடியிலும் , அதுல இருந்து ஒரு 20 நிமிஷத்துக்கு சத்தியமா நல்லா வயிறு குலுங்க சிரிக்கலாம் , அப்படி சிரிச்சி முடிக்கும் போது இன்டெர்வல் வருது , அதுவும் அந்த இன்டெர்வல் காட்சி ultimate, யோகிபாபு என்னமோ செய்ய போகிறார் என்று நினைக்கும் போது, அங்கே இன்டெர்வல் வரும் போது, சாத்தியமா   வேற லெவல் இன்டெர்வல் அது .சரி அதே வேகத்தில காமெடி இருக்கும் நினைச்சா படம் எங்க எங்கயோ போகுது திரும்பவும் கடைசி 15 நிமிஷம் காமெடி நல்லா கொடுத்து படம் முடிச்சி வெளியே வரும் போது பரவாயில்லை நல்ல entertained படத்துக்கு தான் வந்தோம் என்ற ஒரு திருப்தியோட வெளியே வரலாம், ஆனால் இந்த மாதிரி படத்தில எல்லாம் நாம் லாஜிக் எல்லாம் கேட்க கூடாது. 


பிரபுதேவா 44 வயசு சத்தியமா நம்ப முடியல , என்ன fit உடம்பு , என்ன டான்ஸ் , அவர்  பழய படங்களில் பார்த்தா மாதிரியே இருக்காரு, அந்த காமெடி body language எல்லாம் பார்க்கும் போது மின்சாரக்கனவு படம் ஞாபகம் படுத்தியது ,அந்த முதல் குலேபகாவலி பாடல் அடேங்கப்பா என்ன டான்ஸ் , வச்ச கண்ணை வாங்க முடியாமல் பார்க்கவச்சிட்டாரு, அந்த பாட்டும் அருமை திரும்ப திரும்ப கேட்கவைக்குது , நம்மையும் ஆடவைக்குது , அந்த பாட்டின் விஷுவல் சூப்பர் , 

ரொம்ப முக்கியமான கேரக்டர்ல ரேவதி நடிச்சிருக்காங்க , பவர் பாண்டில எப்படி அவங்களுக்கு நல்ல பெயர் வந்துச்சோ , அதுபோல இதுலையும் அவங்களுக்கு நல்ல பெயர் வரும் , வித்யாசமான கேரக்டர் , செம்ம மாஸ் பண்ணிருக்காங்க முதல் காட்சியிலே , ஒரு ஹீரோவிற்கு சமமான மாஸ் கொடுத்து இருக்காங்க, அதுக்கு அந்த இடத்தில மாஸ் bgm நல்லா எடுத்து கொடுத்து இருக்கு 

படத்தின் ப்ளஸ் யோகிபாபு , மன்சூரலிகான் காம்பினேஷன் , யோகிபாபு மன்சூரலிகானை ultimate கலாய் கலாய்ச்சி தள்ளுறார் , கடைசியில இவங்க ரெண்டு பேரு போதா குறைக்கு , மொட்டை ராஜேந்திரன் வந்து அவர் பங்குக்கு காமெடி பண்ணிட்டு போகிறார் , அவர் வருகிற கடைசி நிமிடங்கள் எப்பா நல்ல வயிறு குலுங்க சிரிக்கவச்சிட்டு போகிறார் மனுஷன்,முனிஸ்காந்த்தும் அவர் பங்குக்கு ஸ்கோர் பண்ணுகிறார் , நடு நடுவே light ah சத்யனும் ஏதோ ஒருஅளவுக்கு சமாளிக்கிறார் சொல்லணும் 

ஹன்சிகா படம் fullah வராங்க , ஆனால் ஆரம்பத்தில் அவங்க கேரக்டர்க்கு பெருசா clue இல்லாமல் இருக்கு ,யார் எதுக்கு என்ன மாதிரி கேரக்டர்ன்னு சொல்லிக்கிறா மாதிரி இல்ல, அவங்களை வச்சி கதை நகர்கிறது சொல்லலாம் ஆனால் அது ஒன்னும் பெருசா தேவைப்பட்டா மாதிரி தெரியல , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா பாதிப்பு ஒன்னும் இருந்து இருக்காது , ஹீரோன்னு இருந்தா ஹீரோயின் இருக்கணும்ல , அதனால அவங்களை படத்தில வச்சிக்கலாம் .

இசை விவேக் - மெர்வின் நல்லா பண்ணிருக்காங்க , அந்த முதல் குலேபகாவலி பாடல் ஆட்டம் போடவைக்குது , heartகுள்ள பச்சை குத்தியே பாடல் கொஞ்சம் ஹிந்தி பாட்டு dhating naach பாடல் போல இருக்கு, மேலும் ரேவதி மாஸ் bgm , காமெடி தேவையான காமெடி  bgm நல்லா கொடுத்து இருக்கார் ,நிச்சயமா bore அடிக்காம ஒரு தடவை போயிட்டு பார்க்கலாம்

மொத்தத்தில் குலேபகாவலி குழப்பவாதியாக இருந்தாலும் சிரிப்பொலியாக இருக்கிறது .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 13 ஜனவரி, 2018

Sketch - ஸ்கெட்ச்


இந்த படத்தை நான் பெருசா எதுவும்  எதிர்பார்த்து போகலை , ஏன்னா வாலு படத்தோட டைரக்டர் தான் இந்த படத்தோட டைரக்டர் , அதனால இந்த படம் ரொம்ப சுமாராக தான் இருக்கும் நினைத்து போனேன், ஆனால் வாலு மாதிரி மொக்கையா இல்லாமல் அதை விட ஒரு படி மேலே சுமாராக தான் இருந்துச்சி இந்த படம் , அதற்க்கு ஒரு காரணம் விக்ரம் என்றாலும் , திரைக்கதை கொஞ்சம் சில இடங்களில் கை தட்ட வைத்தது .

வடசென்னை கதை என்றாலே gang war  , போட்டா போட்டி , ரவுடி , அடிதடி ,வெட்டு குத்து , ராயபுரம் என்ற வழக்கமான கதைக்களத்தில் தான் படம் போகுது , இதுல நடுவில் காதல் வேற , சத்தியமா சுத்தமா கொஞ்சம் கூட படத்தில ஒட்டவே இல்லை, அப்பறம் எப்பொழுதும் எதிர்பார்த்த மாதிரி ஹீரோவின் நண்பர்கள் செத்து போய்டுவாங்க அதுவும் இந்த படத்தில இருக்கு 

படம் ஆரம்பித்து கொஞ்சம் நேரத்தில அடேய் எத்தனை தடவை டா இந்த மாதிரி படம் பாக்கிறதுன்னு கேள்வி மனசில வருது , அதுவும் தமன்னா படத்தின் கதைக்குள்ள வந்த உடனே , எப்பா டேய் முடியலடான்னு மேலும் சொல்லவைக்குது , இதுக்கு நடுவே சம்மந்தமே இல்லாமே சூரி வேற ஒரே ஒரு காட்சி , முதல் பாதியில் ஒரு காட்சி,இரண்டாவது பாதியில் ஒரு காட்சி அவ்ளோதான், 

இதுமட்டுமா opening மாஸ் பாடல் , சுத்தமா விக்ரமுக்கு செட் ஆகல , டூயட் பாட்டு , தேவையில்லாமல் ரெண்டாவுது பாதியில் பாடல்கள் , அய்யோ ஆளைவிடுங்கடா சாமி திணற திணற இருக்குது , அதுவும் பாட்டு சுத்தமா நல்லாவே இல்ல , தம்மன் எப்பொழுதும் போல டனுக்கு டனுக்குன்னு காது கிழிய இரைச்சலாக பாட்டு போட்டு கொடுத்து இருக்கார் 

முக்கியமா படத்தில ஒன்னு சொல்லணும் அதாவது காதல் காட்சியில் நம்ம டைரக்டர் எப்படி காதல் கலைநயமாக சொல்லிருக்காருன்னா , ஒரு பாடல் காட்சியில் தமன்னா அவங்க கையில ஸ்கெட்ச்ன்னு எழுதுவாங்க , அதுவும் எப்படி எழுதுவங்கன்னு தெரியுமா ? வேற வேற கலர்ல ஸ்கெட்ச் use பண்ணி கையில எழுதுவாங்க , அதாவது symbolic ஆகா ஸ்கெட்ச் என்ற விக்ரமை அவங்க காதலிக்கறாங்களாம் , அந்த ஒரு சீன்  போதும் டைரக்டர் டச் அங்க நிக்குது ஷப்பா முடியல டா சாமி .

படத்தில இன்னும் குறைகள் சொல்லிகிட்டே போகலாம், ஒரு சண்டை காட்சியில்  backgroundக்கும் விக்ரம் சண்டை போடும் இடத்திற்கும் அப்பட்டமாக செம்ம light difference , அது blue matல எடுத்தாங்களா ? இல்ல lighting அவ்வளவு மோசமா பண்ணிட்டாங்களா ? ஒரு இடத்தில் விக்ரம் கண்ணாடியில் தர்மாகோல் தெரியுது , ஒரு நைட் சீனில் பின்னாடி லைட் வைச்சது frameல் வருது , ஏன் இவ்வளவு மோசமான மேக்கிங் ? ஏன் எடிட்டர் இதை பார்க்கவில்லையா ? 

என்னடா விமர்சனம் முதலிருந்து ஒரே negative ஆகவே சொல்லுறியே , positive ஒன்னும் இல்லையே என்ற கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது , ஆமாங்க படத்தில ப்ளஸ்ன்னா அது விக்ரம் மட்டும் தான், அவர் ஒருத்தருக்காக தான் இந்த படம் பார்க்கணும் தோணுச்சு , அவர் மட்டும் இல்ல இந்த படம் இன்னும் ஒரு மோசமான படமாக அமைந்து இருக்கும், அவரோட ஹீரோயிசம் , மாஸ் சீன் சூப்பர் .

அப்பறம் படத்தில வேற என்ன ப்ளஸ் ? ஆமாங்க படம் ஆரம்பித்து bore ஆக போனாலும் , ஒரு இடத்தில கொஞ்சம் விறுவிறுப்பு படத்தில் எடுத்தது , அட படம் இனிமேல செம்மயா போக போகுது நினைக்கும் போது இன்டெர்வல் , அட ரெண்டாவது பாதி படம் சூப்பர் ஆக இருக்கும் நினைக்கும் போது நம்ம நினைப்புல மண்ணை அள்ளி போட்டுருவாங்க, திரும்பவும் படம் கொஞ்சம் சூடு பிடிக்கும் போது படம் முடிஞ்சுடும் . intervalக்கு முன்னாடி ஒரு 15 நிமிஷம் , படத்தின் கடைசி 15 நிமிஷம் தான் நல்லா இருக்கு, அதாவது படத்தில ஸ்கெட்ச்ன்னு பேரு வைச்சதால என்னவோ , அவங்க ஸ்கெட்ச் போட்டு தூக்கும் காட்சி ரொம்ப நல்லாவே இருக்கு, குறிப்பா கடைசியில் அந்த வில்லனை போட்டு தள்ளும் காட்சி wow சொல்லி கைதட்ட வைக்குது .அப்புறம் climax நான் எதிர்பார்த்தா மாதிரி தான் இருந்துச்சி அது ஒன்னும் பெருசா ட்விஸ்ட் போல தெரியல , ஆனால் அவங்க அதை எப்படி பண்ணாங்க என்பதை காட்டுவது ஓகே சொல்லலாம்.

மொத்தத்தில் ஸ்கெட்ச்  நமக்கு ஸ்கெட்ச் போட்டு காலி பண்ணிட்டாங்க 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 12 ஜனவரி, 2018

Thaanaa Serndha Kootam - தானா சேர்ந்த கூட்டம்


சினிகிறுக்கனின் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள் , இந்த வருஷத்தின் முதல் பதிவு இந்த தானா சேர்ந்த கூட்டம் 

 இது ஸ்பெஷல் 26 என்ற ஹிந்தி படத்தோட ரீமேக், நான் அந்த ஒரிஜினல் படம் ஸ்பெஷல் 26 படத்தை  பார்க்கவில்லை , அதனால ஒரிஜினல் எப்படி இருக்கும் என்பது எனக்கு  ஐடியா இல்ல .

கதை :
முதல இந்த படத்தோட கதையை பற்றி பார்த்தால் ஸ்பெஷல் 26 படமே தமிழ் படத்தோட படங்களில் தழுவல்ன்னு நான் சொல்லுவேன், படத்தோட கதை கொஞ்சம் உற்று  பார்த்தா கொஞ்சம் சிவாஜி , கொஞ்சம் ரமணா கலந்தது தான் இந்த படத்தோட கதைன்னு சொல்லணும், ஆனால் அதை சுவாரசியமாக எல்லா தரப்பு மக்களும் ரசிக்கும்படி கொடுத்து இருக்காங்க 

திரைக்கதை :
படத்தோட ப்ளஸ் கதை + காமெடி கலந்த திரைக்கதை , படம் சீரியஸ் ஆகா செல்லும் போது எல்லாம் யாரும் எதிர்பார்க்காத சின்ன சின்ன விஷயங்களை காமெடியாக கொடுத்து இருக்காங்க, உதாரணத்துக்கு சொல்லனும்னா ஹைதராபாத்தில் ரெய்டு நடக்கும் போது , சத்யன் முன்னாடி வந்து நிக்கும் போது, அட என்னமோ சொல்லவறாருன்னு நினைக்கும் போது , அட சும்மா தாய வந்தேன் சொல்லுவது செம்ம ,அது போல சின்ன சின்ன விஷயங்கள் படத்தில் அங்க அங்கே இருக்கு, அப்பறம் சில விஷயங்கள் நம்பும்படியாக இல்ல , எதிர்பார்த்த திருப்பங்கள் தான் , அட செம்ம ட்விஸ்ட்பா அப்படி சொல்லும்படி படத்தில சூப்பர் ட்விஸ்ட்கள் என்று எதுவும் இல்ல, அதே நேரத்தில் படம் சில பல இடங்களில் கொஞ்சம் இழுவையாக இருக்கும் feel , இன்டெர்வல் பிளாக் நல்லா இருந்துச்சி , அப்பறம் இரண்டாவது பாதி கொஞ்சம் தத்தலடிச்சி படம் கரை ஏறுகிறது , போதா குறைக்கு பாடல்கள் வேற தேவையில்லாத இடத்தில வச்சியிருக்காங்க 

சூர்யா :
எனக்கு தெரிஞ்சு சூர்யாவிற்கு ரொம்ப நாள் கழிச்சி இது  சொல்லிக்கும்படி  ஒரு கதை உள்ள படம் , அவர் ரசிகர்கள் மட்டுமில்லாமல் எல்லோருக்கும் பிடிக்கும் படி படம் வந்து இருக்கு .சூர்யா நல்லா பண்ணியிருக்கார் , சிங்கம் படம் போல சத்தம் போட்டு கத்தி ஆர்ப்பாட்டம் போடாம அடக்கமா நடிச்சி இருக்கார்  தேவையில்லாத பன்ச் , பறந்து பறந்து சண்டை எதுவும் போடல , என்னதான் ரீமேக் படம் என்றாலும் நம்ம தமிழ் ஹீரோவிற்கு ஏற்றா மாதிரி நிறைய மாற்றங்கள் எல்லாம் பண்ணுவாங்க , அப்படி மாற்றாமல் அடக்கமா நடிச்சி இருக்கார் 

ரம்யாகிருஷ்ணன் :
சூர்யாவிற்கு அடுத்து படத்தில் வில்லன்களையும் மீறி ரம்யாகிருஷ்ணன் மனசில் நிக்குது , அவங்க ராஜமாதவாக  வந்தாலும் சரி இப்படி  கொஞ்சம் innocent ஆகா வந்தாலும் சரி அதை சரியாக செய்து இருக்காங்க 

சுரேஷ் மேனன் 
ரொம்ப நாள் கழிச்சி படத்தில வரார் அவருக்கு கௌதம் மேனன் டப்பிங் வேற கொடுத்து இருக்கார் 

கார்திக் :
அவர் கேரக்டர் நல்ல design பண்ணி இருக்காங்க , ஆனால் ரொம்ப வயசானவர் போல தெரிகிறார் , மேலும் ஓவர் மேக்கப் but  பல இடங்களில் அவர் படத்தில் ஒற்றவில்லை 

படத்தில் இன்னும் பல கேரக்டர் இருக்காங்க , தம்பி ராமையா ,செந்தில் ,கலையரசன், r j பாலாஜி  இப்படி படத்தில ஏகப்பட்டபேர் இருக்காங்க .

ஐயோ கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்ல மறந்துட்டேன் , அது ஏன்னா படம் பார்க்கும் போதே அவரை மறந்துடுவோம் , படத்தில் கொஞ்சம் தான் வருவாங்க , ஏன் எதற்கு இந்த படத்தில் நடிச்சாங்கன்னு தெரியல 

படத்தின் பெரிய மைனஸ் :
எதற்கு இந்த படத்தை 1980களில் நடப்பது போல வச்சி இருக்காங்க ? ஸ்பெஷல் 26 கதை அப்படி போல அதனால தமிழிலும் அப்படியே வச்சிட்டாங்க போல , 1980களின் கதை என்பதால் goldspot , லாட்டரி சீட் கடையில் இருப்பது , பழைய phone இப்படி இருந்தாலும் , சூர்யாவிற்கு ஆடைகள் என்னமோ 1980 போல இல்ல , பாட்டில் பின்னாடி dance ஆடுபவர்கள் ரெட்ரோ டிரஸ் போட்டாலும் , சூர்யா latest டிரஸ் போட்டு இருக்கார் ,கொஞ்சம் கூட செட் ஆகவில்லை , கீர்த்தி சுரேஷ் hair ஸ்டைல் பழய hair ஸ்டைல் போல இருந்தாலும் அவங்க டிரஸ் செட் ஆகவில்லை , யார்டா அந்த costume designer கேட்கணும் போல தோணுச்சு , படத்தில் பலர்க்கு கார்த்திக் , செந்தில் ஏன் சூர்யாவிற்கு கூட ஓவர் make up ,அப்பறம் பல இடங்களில் பின்னாடி lighting வச்சி இருப்பது தெரியுது , பல லாஜிக் மிஸிங் வேற  , கடைசியில்   r j பாலாஜிக்கு என்ன ஆச்சி ? கீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சி ? சூர்யாவிற்கு எப்படி கடைசியில் தெரிகிறது என்ற பல கேள்விகள் வேற வருது ,

மொத்தத்தில் : தானா சேர்ந்த கூட்டம் இந்த பொங்கல் லீவுக்கு மட்டும் கொஞ்சம் சேரும் கூட்டம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்