ஞாயிறு, 28 ஜனவரி, 2018

Padmavat - பத்மாவதி

பத்மாவதி இந்த படம் ரிலீஸ் ஆனதே லேட் , நான் படம் பார்த்தது கொஞ்சம் லேட் , இதுக்கு ரொம்ப லேட்டாக  review போடலாமா வேண்டமா எனக்கு ஒரு கேள்வி ? ஏன்டா இந்த படத்துக்கு எல்லாம் review போடுவியான்னு கேட்டகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது , இருந்தாலும் போடுவோம் படிக்கறவங்க படிங்க.பொதுவா சர்ச்சைகள் உள்ள படம் ,  இல்லனா நல்ல மற்ற மொழி படங்கள் மிஸ்பண்ணாம பார்த்துடுவோம் , அப்படி பார்த்தது தான் இந்த படம் , தமிழில் பார்க்கல ஹிந்தில தான் பார்த்தேன் , நமக்கு தெரிஞ்சது கொஞ்ச ஹிந்தி தான் நல்லவேளை subtitle இருந்துச்சி 

கதை :
பொதுவா கதை என்னோட reviewல் இருக்காது, ஆனால் இந்த படம் சொல்லியே ஆகணும் , வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ணும் வெறித்தனமான Aladdin(ரன்வீர்), சித்தூர் ராணி அழகை கேள்விப்பட்டு அவளை அடைய ஆசைபடுறான், அவனுக்கு சற்றும் சளைக்காத  நேர்மையாக போர் புரியும் ராஜபுத்திரர்கள் ராஜா ரத்தன் சிங் (ஷாஹித் கப்பூர் )கடைசியில் இறந்து போக,  ராணி பத்மாவதி(தீபிகா) உட்பட பல பெண்கள் தங்களை தாங்கள் நெருப்புக்கு தியாகம் செய்யறாங்க , கடைசி வரைக்கும் சுல்தான்(ரன்வீர்) ராணி பத்மாவதியை(தீபிகா) பார்க்க முடியவில்லை, இது பலருக்கும் தெரிஞ்ச கதை இதில் கற்பனை கலந்து வந்து இருக்கு இந்த படம் 

திரைக்கதை:
மூன்று மணி நேரம் படம் நிச்சயமா கொஞ்சம் பொறுமையாக தான் இந்த படத்தை  பார்க்கனும், படம் ரொம்ப வேக வேகமா போகவில்லை, படத்தின் கடைசி 20 நிமிடங்கள் நிமிர வைக்கிறது, படத்தின் கதை என்னவென்று தெரிஞ்சு பார்ப்பதால், பார்க்கும் பொழுது நமக்கு  பெருசாக சுவாரசியம் இல்லாத மாதிரி தான் ஒரு உணர்வு, மேலும் ஷாஹித் கப்பூர் & தீபிகா காதல் காட்சிகள் காதல் ரொம்ப சொட்ட சொட்ட கொடுத்து இருக்காங்க ஆனால் அந்த காதல் கூட ரொம்ப நிதானமா slow ஆகா சொட்டுகிறது, பேசுறது கூட இவ்வளவு  பொறுமையாகவா  பேசுவீங்கன்னு கேட்க தோணுது , ரெண்டாவது பாதியில் வரும் காதல் காட்சிகள் பார்க்கும் போது எப்பா டேய் காதல் பண்ணது போதும்டா வெளியே போயிட்டு சண்டை போடுங்கடா ன்னு கேட்க தோணுது, காதல் காட்சிகளை குறைத்து போர் காட்சிகளை கொஞ்சம் அதிகம் படுத்தியிருக்கலாம் 

ரன்வீர் சிங் :
படத்தின் ஹீரோன்னு சொல்லணும்ன்னா இவரைத்தான் சொல்லணும் , மனுஷனா இல்ல மிருகமா இவன்?  என்று சொல்லவைக்குது அந்த கேரக்டர்க்கு அப்படி ஒரு justification கொடுத்து இருக்கார்,எங்கேயும் ரன்வீர் ஆகா தெரியல , அந்த கண்பார்வை கூட அப்படி ஒரு வில்லத்தனம் படம் full ஆகா வருது, அந்த நடை body language எல்லாம் தாறுமாறு, அவங்க டென்டில் தீ விழும் பொழுது பார்த்துட்டு அசால்ட்டாக அப்படியே இருந்து ஒரு expression தருவார் செம்ம, கலி பலின்னு ஒரு பாட்டு வரும் அந்த வெறித்தனம் அந்த பாட்டுல அவர் ஆடும் பொழுதும் கூட தெரியும், , இந்த படம் தூக்கி நிறுத்துவது ரன்வீர் தான் , ஒரு சில படங்ளில் தான் வில்லன் கேரக்டர் strong ஆகா இருக்கும் , அதை ரொம்ப சூப்பராக செய்து இருக்கார் , மேலும் நமக்கு ச்சே என்ன வில்லன்யா இவன் , ஒரு வில்லன் ஜெயிக்கணும்  ஒரு சில  படங்களில் தான் தோணும் , அப்படி இந்த படத்தில் தோணுவச்சிருக்காங்க, நிச்சயமா சிறந்த வில்லனக்குரிய விருதுகள் வாங்குவார் 

தீபிகா :
அழகான ராணி , அவளால் , அந்த அழகால் தான் கதை என்பதால் தீபிகாவை எந்தளவுக்கு அழகாக காட்ட முடியுமோ அந்தளவுக்கு அழகா காட்டிருக்காங்க, முகத்தில் நிறைய பட்டி டிங்கரிங் பார்த்து இருக்காங்க , எந்த அளவுக்கு பார்த்து இருக்காங்க என்றால் , டிஜிட்டல் கலரிங் வேற நிறைய செய்து இருக்காங்க போல  தெரியுது , பல இடங்களில் கிராபிக்ஸ் கார்ட்டூன் படத்தில பார்த்தது போல இருக்கு அவங்க முகம் , மாசு மருவற்ற முகம் என்பது இது தானோ கேட்கத்தோணுது 

ஷாஹித் கப்பூர் :
படத்திற்கு இவர் முக்கியமான கேரக்டர் ஆகா இருந்தாலும் படத்தின் முக்கியம் தீபிகாவும் ரன்வீரும் தான் , அதனால் இவர் கேரக்டர் பெருசா எடுபடவில்லை, மேலும் எனக்கு படத்தில் பார்க்கும் பொழுது ராஜாக்குரிய ஒரு கம்பீரம் வரவில்லை , ரன்வீரை பெருசா காட்ட வேண்டும் என்பதால் இவரை டம்மி ஆக்கிட்டாங்க போல, ரன்வீருக்கு முன்னாடி வீர வசனம் பேசினாலும் ஒரு ராஜபுத்திரர்கள் என்று கம்பீரமாக சொல்லும் அளவுக்கு இல்ல , ரன்வீர் முன்னாடி இவர் சின்ன பையன் போல தான் இருக்கார் .


சஞ்சய் லீலா பன்சாலின்ன இன்னொரு பெயர் பிரம்மாண்டம், அந்த 
பிரம்மாண்டம் படம் முழுக்க இருக்கு , எனக்கு மீண்டும் பாஜிரோ  மஸ்தானி பார்த்த உணர்வு , அந்த செட்டிங் பிரம்மாண்டம் அரண்மனை எல்லாம் செம்ம , எது செட்டிங் எது ஒரிஜினல் எது கிராபிக் என்று கொஞ்சம் கூட பிரிச்சி பார்க்க முடியல அப்படி ஒரு அருமையான மேக்கிங் .படத்திற்கு இசையும் இவரே, ஆனால் சஞ்சித் தான் படத்தின் Bgm,  படத்தின் ப்ளஸ் இவரோட Bgm தான்,  .ஆனால் படத்தின் நீளம் மைனஸ் , மேலும் போர் காட்சிகள் இல்லாதது படத்தின் ராஜபுத்திரர்கள் வீரம் இல்லாதது போல ஒரு உணர்வு.

இந்த படம் எதுக்கு இந்தளவுக்கு சர்ச்சை பண்ணாங்க தெரியல 

மொத்தத்தில் பத்மாவதி பல சர்ச்சைகளை பதம்பார்த்து மிதித்தவள்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

4 கருத்துகள்:

  1. தகவல் தொழில்நுட்ப செய்திகளை அறிய இங்கு கிளிக் செய்யவும் ->https://www.youtube.com/channel/UCKGTz6DGyMb6Ez9qpm96YXw

    பதிலளிநீக்கு
  2. ஒன்றுமே இல்லாத விடயத்துக்குத்தான் இவ்ளோ கலவரமா?

    பதிலளிநீக்கு
  3. பகுதி பகுதியாக கலைஞர்களை விமர்சனம் செய்தது அருமை. வில்லன் நல்லவேளையாக ஜெயிக்கவில்லை.😀

    பதிலளிநீக்கு

Comments