Sunday, 29 November 2015

Inji Iduppu Azhaghi - இஞ்சி இடுப்பு அழகி


ஒரு குண்டான பெண்ணின் கதைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம், ஆனால் படம் எப்படி போகுது?

இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழில வந்த படம்ன்னாலும், படத்தில் நடிச்சவங்க, டைரக்டர் , மியூசிக் டைரக்டர் எல்லாரும் தெலுங்கு, அதனால ஒரு தெலுங்கு படம் பார்த்த effect இருக்கு, நிறைய இடங்கள் நடிச்சவங்க உதடு அசைவு தெலுங்குல இருக்கு, இதனால டபிங் படம் பார்த்தா மாதிரி தான் இருக்கு.

ஆர்யா மற்ற படங்களில் நடிச்சா  மாதிரி தண்ணி அடிக்கிறது , சந்தானம் கூட காமெடி பண்ணறது , bro , மச்சி , மாமான்னு வசனம் பேசாம, கொஞ்சம் வித்தியாசமா நல்லா நடிச்சி இருக்காரு, 

அனுஷ்கா நிஜமாகவே குண்டு ஆனாங்களா  இல்ல அது மாதிரி செட் பண்ணாங்களா தெரியல, சில காட்சில சில ஷாட்ல குண்டா தெரிறாங்க சில இடங்கள கொஞ்சம் நார்மலா தெரிறாங்க, டைரக்டர் ஏன் இப்படி ஒரு continuity கவனிக்கவில்லையா ? அதே மாதிரி முதல் பாதியில் அனுஷ்கா ரொம்ப கஷ்டப்பட்டு காமெடி வர ட்ரை பண்ணி நடிச்சா மாதிரி இருக்கு, சில இடங்கள அது ஓவர் ஆக்டிங் போல தான் இருக்கு, ஆனால் இரண்டவுது பாதியில் கதை seriousah போகும் போது எப்பவும் பார்க்கிற நம்ம அனுஷ்கா ஆக்டிங்கல back to  form la  வராங்க 

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல வந்து அவரோட கேரக்டர்க்கு நல்ல பண்ணிட்டாரு, இருந்தாலும் அது கொஞ்சம் செயற்கையாய் தெரியுது, அப்பறம் பல கோலிவுட் நடிகர்கள் கௌரவ தோற்றத்தில வந்துட்டு போறாங்க, 

நம்ம சமூகத்தில எப்படி இந்த size zero மற்றும் உடனடியாக எடை குறைக்கிற  நிகழ்ச்சியெல்லாம் வச்சி ஏமாற்றம் எல்லாம் பண்ணறாங்கன்னு காட்டி இருக்காங்க, save ஜோதி ன்னு படத்தோட கதை  கொஞ்சம் நகரும் போது நமக்கே அட நம்ம கூட கொஞ்சம் உடம்பு குறைச்சா நல்லா இருக்கும் அதுக்கு கொஞ்சம் work out பண்ணலாமான்னு தோனுச்சு பிறகு கடைசியா வர காதல் சீன எல்லாம் கொஞ்சம் bore அடிக்கிறா மாதிரி இருக்கு 

இன்னும் கொஞ்சம் இஞ்சியை நல்லா சுத்தபடுத்தி  உறித்து இருந்தால் இந்த இஞ்சி இடுப்பு அழகாக வந்து இருக்கும் 

இப்படிக்கு 
கிறுக்கன் 


Saturday, 28 November 2015

Uppu Karuvadu - உப்பு கருவாடு

ராதாமோகனின் உப்பு கருவாடு, இவர் ஒருவர் பெயர்காகவே இந்த படத்தை போயிட்டு பார்த்தா.............. இந்த படம் எப்படி இருக்கு? அதை இப்போவே சொல்லிட்டா கடைசி வரைக்கும் படிக்க மாட்டிங்க.

தோல்வி படம் கொடுத்த ஒரு டைரக்டர், அதாங்க நம்ம ஹீரோ  ஒரு நல்ல படம் கொடுத்து வெற்றி பெறவேண்டும்ன்னு முயற்சி பண்றார், அதுக்கு கூட இருக்கவர்களால் வரும் பிரச்சன்னை நகைச்சுவையாய் சொல்லி இருக்கார் டைரக்டர்

காமெடியனா  பார்த்த நம்ம கருணாகரன் இதுல ஹீரோவா பண்ணி இருக்கார், ஆனா directoraah செட்  ஆகினா மாதிரி எனக்கு தெரில,  நந்திதா ரெண்டு விதமா நடிச்சது நல்லா இருக்கு, அப்புறம் எல்லா ராதாமோகன் படத்தில் வரும் குமாரவேல் இதுலயும் வந்து இருக்கார், பிறகு நிறைய  டிவி நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கார், சரவணன் மீனாட்சி ரக்க்ஷிதா சில சீனல வந்துட்டு போறாங்க, ஆதித்யா புகழ் டவுட் செந்தில் செம்மைய பண்ணி இருக்கார் நிச்சயமா அவர் இந்த படத்தோட ஹீரோன்னு கூட சொல்லலாம், அவர் பேசுற இங்கிலீஷ், reaction எல்லாம் செம்ம கலக்கல்.எப்பொழுதும் போல நம்ம பட்டாபி பாஸ்கர் நடிச்சி பின்னி பெடல் எடுத்துட்டாரு.

இந்த படத்தை பார்க்கும் போது கொஞ்சம் பார்த்திபனின் கதை திரைகதை வசனம் படம் மற்றும் ஜிகர்தண்டா போல எனக்கு ஒரு feel , அது ஏன் சொல்லுறேன்னா, ஜிகர்தண்டாவுல எப்படி சித்தார்த் ரௌடி கிட்ட மாட்டிகிட்டு அவர ஹீரோ ஆக்கணும் முழிசாரோ , அதுபோல இதுல ரௌடி தன்னோட நடிக்க தெரியாத பெண்ணை  வச்சி படம் எடுக்கணும் ஆர்டர் போடா கருணாகரன் மாட்டிகிட்டு முழிகிறாரு 

நிறைய இடத்துல டிவி சீரியல் போலவே போகுது, அங்க அங்க மொக்கை காமெடிகள் நிறையவே இருக்கு, கதை பெருசா சொல்லிகிறா மாதிரி அடுத்த கட்டத்துக்கு எங்கும் போகல, அதற்க்கும் மேல என்ன நடக்கும்ன்னு தெரியுது, சில காட்சி திரும்ப திரும்ப வருவது செம்ம கடுப்பா இருக்கு ராதாமோகனின் படம்ன்னு நம்பி சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் தான் 

உப்பு கருவாடு இன்னும் கொஞ்சம் நல்லா காஞ்சி இருந்தால் நிச்சயமா கருவாட்டு குழம்பு நல்லா இருந்து இருக்கும் 


 இப்படிக்கு 
கிறுக்கன் 

Friday, 13 November 2015

Thoongavanam - தூங்காவனம்

கிறுக்கனின் மழைகாலத்து வாழ்த்துகள், அட ஆமாங்க விடாது மழைலயும், உடாது  குடை பிடிச்சி ஒரு வழியா நேற்று மாலை பார்த்தாச்சி, நல்லவேலையா  வியாழகிழமை பார்த்துட்டேன், இல்லாட்டி இன்றைக்கு அடிச்சா மழைல மாட்டிருப்பேன் , ஆனா படத்தை பற்றி எழுத தான் நேரம் இல்ல, ஏன்னா வேலையில் நான் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருந்துட்டேன் , எதுக்குடா உனக்கு இந்த விளம்பரம் கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது .

சரி வாங்க படத்தை பற்றி பார்க்கலாம், இந்த படத்தை பற்றி எல்லாருக்கும் தெரிந்த சில உண்மைகள், ஆம் இந்த படம் sleepless nightகிற படத்தோட ரீமேக், அப்புறம் கதைன்னு பார்த்தா , தன்னோட பையனை ஒரு இரவில் மீட்டு எடுக்க வேண்டும், அதே நேரத்தில தன்னோடவே  இருக்கும்   வில்லன் யார்னு கண்டுபிடிக்க வேண்டும் அது தான் ஒரு வரி கதை.

கமல் அவர்களுக்கு ஒரு பெரிய hats off, ஏன்னா original படத்தை கொஞ்சம் கூட அச்சு அசல் மாறாமல், எந்த ஒரு kollywood மசாலா சேர்க்காமல் அப்படியே தந்துடாரு, ஏன்னா வேற யாராவுது பண்ணிருந்தால் நிச்சியமா அந்த கிளப்ல ஒரு item song சேர்த்து இருப்பாங்க அல்லது அவரு முத்தம் கொடுக்கும் போது அந்த பொண்ணு டூயட் பாடுறா மாதிரி சேர்த்து இருப்பாங்க, நல்ல வேலை அது மாதிரி எதுவும் சேர்க்கல,ஒரிஜினல் படம் sleepless night பார்த்துட்டு இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு ஆகஸ்ட் மாசம் ஒரு பதிவு பண்ணிருந்தேன், அதே மாதிரி தான் இருந்துச்சு .எனக்கு அந்த original பார்த்த feel அப்படியே இருந்துச்சு,இருந்தாலும் கமலோட குசும்புன்னு ஒன்னு இருக்குல அதை original கதை முடிஞ்சதுக்கு பிறகு அவர் அதை சேர்த்து இருக்காரு, கடைசியாய் வருகிற hospital சீன் & 3 மாசம் பிறகுன்னு வரும் சீன் அதுஎல்லாம் கமலின் டச்.

பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், எல்லாருடைய கதாபாத்திரம்  அவங்களுக்கு சரியா பொருந்தி இருக்கு, த்ரிஷா போலீஸ்காரங்களா  வருவது  கொஞ்சம் நெருடலா இருக்கு அட இவங்க போலீஸ்காரா அப்படின்னு கேட்க தோன்றினாலும், இது வரைக்கும் த்ரிஷா பண்ணி இருப்பதில்  நல்ல value added character அவங்களுக்கு,

கொஞ்சமா வந்தாலும் கொஞ்சமாக சிரிக்க வைக்கும் சாம்ஸ், அந்த kitchenல சண்டை போடும் போது நகைச்சுவை செய்கிற அந்த சமையல்காரங்க, அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நிச்சயமா கமலுக்கு பிடிச்சவர் போல, ஏன்னா விஸ்வருபதிலும் அவர் தான் தொப்பிய கழட்டிட்டு பாம் வெடிக்க வைப்பாரு,இதுலயும் ஒரு சின்ன ரோல் பண்ணிட்டாரு.

அந்த kitchenல கமலும், த்ரிஷாவும் சண்டை போடும் போது, கமல் த்ரிஷா ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூம்க்கு போயிட்டு விழுறாங்க ,அது வரைக்கும் கமல் திர்ஷாவை  முகத்தில அடிகிறாரு, தட்டுல அவங்க முகத்தை போட்டு இடிகிறாரு, அந்த அடி அடிச்சதுக்கு அவங்க முகத்தில அப்பவே ரத்தம் வந்து இருக்கணும், ஆனால்  அங்கு இருந்து இன்னொரு அறையில் தள்ளும் போது அவங்க முகத்தில் ரத்தம் தெரியில, ஆனா அந்த இன்னொரு ரூம்ல போய் விழும்போது அங்க இருக்க ஒரு அலமாரில விழுந்த அப்புறம்  தான் த்ரிஷா முகத்தில ரத்தம் தெரிது, எப்படி இப்படி அவர் சின்ன விஷயங்கள் எல்லாம் மிஸ் பண்ணி இருக்காங்க தெரியல, டேய் இந்த அளவுக்கு சொல்லனுமா கேக்குறிங்களா? ஏன்னா எந்த அளவுக்கு சின்ன விஷயங்கள் டைரக்டர் நோட் பண்ணி இருக்காரு தெரியுமா? கிளைமாக்ஸ்ல கார் விபத்து ஆகி  விழும்போது  அந்த கார் நிறைய பல்டி அடிச்சி விழும், சாதாரண மக்களுக்கே தெரியும் அதுக்குள்ளே இருப்பது பொம்மை தான்னு, அதுல அந்த த்ரிஷா போட்டு இருக்க hair style மாதிரியே செட் பண்ணி இருப்பாங்க, அந்த கார் பறக்கும் போது அந்த குதிரைவால் முடி மட்டும் வெளியில  நல்லா தெரியும் அந்த அளவுக்கு உன்னிப்பா பண்ணி இருக்காங்க அதனால தான் சொன்னேன்.

Gibraan இந்த படத்துக்கு என்ன feel கொடுக்க முடியுமோ அதை சரியா mix பண்ணி கொடுத்து இருக்காரு, கமலுக்கு ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரு போல 

கமல்கிட்ட எனக்கு பிடிச்ச சில விஷயங்கள்,இந்த வருஷத்தில வந்த மூன்று படத்திலும் தன்னோட வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம்  பண்ணிருப்பது தான் , வயசான காலத்துல சும்மா டூயட் பாடி சுற்றாமல், ஒரு அப்பாவா அதுல எப்படி ஒரு heroism பண்ண முடியுமோ அந்த மாதிரி கதாபாத்திரத்தை தான் கமல் இந்த வருஷம் வந்த படங்கள பண்ணிருக்காரு.சில பேரு இந்த படம் கமல் படம் போல இல்ல bore அடிக்குதுன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க, ஏன்னா கமல் அந்த ஒரிஜினல் படத்துல எப்படி இருந்ததோ அதே அப்படியே கொடுத்துட்டாரு, எந்த ஒரு தேவை இல்லாத heroism சேர்க்கவே அல்ல.

Overall : ஒரு வித்தியாசமான சினிமா விரும்பி பார்பவர்களுக்கு(usual Masala,comedy,songs,punch dialogues  இல்லாமல்)  அது தூங்காவனம் மற்றவர்களுக்கு தூங்கியவனம் 

இப்படிக்கு 
கிறுக்கன் Tuesday, 10 November 2015

Vedhalam - தல வேதாளம்


அனைவருக்கும் கிறுக்கனின் தீபாவளி வாழ்த்துகள், முதல் தடவையாய் தல படம் முதல் நாள் முதல் ஷோ பார்த்தாச்சு. 10am ஷோ தாங்க, 5am ஷோ இல்ல.

இந்த படத்தை பார்பதற்க்கு முன்னாடி நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன் , நான் தல ரசிகனும் இல்ல, தளபதி ரசிகனும் இல்ல , ஏன்னா நம்ம ஊர்ல  கருத்து சுதந்திரம் என்பது கொஞ்சம் குறைஞ்சிடுச்சு, அரசியல் பற்றி சொன்னா ஜெயில போடுறாங்க, சினிமா பற்றி சொன்னா whats-appல அசிங்கமா திட்டி ரெகார்ட் பண்ணி போடுறாங்க

கதை என்று பார்த்தா கொஞ்சம் ஆதி காலத்து மசாலா கலந்த படம் தான், ஆனா  சில விஷயங்கள் கொஞ்சம் மாற்றி பண்ணி இருகாங்க, பொதுவா மும்பைல flash back வச்சி, சென்னைல அமைதியா இருப்பாரு ஹீரோ, ஆனா இடத்தை மாற்றிடாங்க, சென்னைல ரௌடியா இருக்காரு, கொல்கத்தால அமைதியா இருக்காரு அவ்ளோதான் வித்தியாசம், மற்றபடி மாஸ் scene, அப்பாவி கேரக்டர் ல இருந்து மாஸ் change ஆகுற சீன், வில்லன கண்ணாமுச்சி ரே ரே விளையாடுறது சீன் எல்லாம் இருக்கு. 

இரண்டாவுது பாதியில் வரும் flash back எல்லாம் ரொம்ப பழங்காலத்து சீன், தம்பி ராமையா மற்றும் அவங்க மனைவி கேரக்டர் எல்லாம் ரொம்ப டிராமா மாதிரி இருக்கு,

 இந்த மாதிரி படங்கள, heioneக்கு சும்மா guest ரோல் மாதிரி வந்து தான் போவாங்க, அதை சரியா ஸ்ருதி பண்ணி இருக்காங்க,
சூரி வெறும் சூடு  ஆரி போன காமெடி தான் பண்ணி இருக்காரு, செம்ம வெறுப்பா  இருக்கு, பாலசரவணன், லொள்ளு சபா சுவாமிநாதன் அவர்களுக்கு எல்லாம் scope கம்மி தான், நான் கடவுள் ராஜேந்திரன் கொஞ்சம் வந்து கொஞ்சமா சிரிக்க வச்சிட்டு போயிடறாரு அவ்ளோதான்.

கதை கொல்கத்தால நடக்குது ஆனா காலேஜ் location நம்ம சென்னைல இருக்குற ஒரு கட்டடம்,commissioner ஆபீஸ் காட்டுவது அது ஒரு MNC கம்பெனி பில்டிங், கிளைமாக்ஸ் சண்டை கதைபடி கொல்கத்தா ஆனா  எடுத்து இருப்பது நம்ம தமிழ் சினிமாவுக்குன்னு கட்டிவிட்ட நம்ம பின்னி மில்லுதாங்க.இது எல்லாம் ஏன் டைரக்டர் கவனிக்க மாட்டேங்கறாங்க?

இவ்வளவு சாதாரண விஷயங்கள் இருந்தும் அப்போ அப்போ கொஞ்சம் bore அடிகிறா  மாதிரி இருக்கும் போது, தலைக்குன்னு சீன் நல்லா யோசிச்சி மாஸ் மாஸ் தெறிக்க செய்ஞ்சு இருக்காரு, அந்த சீன் எல்லாம் தாறுமாறு கலக்கிட்டாரு டைரக்டர் .குறிப்பா ரெண்டு வில்லன intervalக்கு முன்னாடி கொலை பண்ணுகிற சீன் தெரிக்கவிட்டு இருக்காரு தல,கிளைமாக்ஸ்ல தல லக்ஷ்மிமேனன் முன்னாடி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறது செம்ம, அதே போல லக்ஷ்மிமேனன்ஐ hospitalல இருந்து மீட்டு செல்லும் போது பண்ணுகிற reactionல எல்லாம் செம்ம மாஸ் heroism.அதுல black dressல நக்கலா சிரிச்சிகிட்டு வரும் போது செம்ம அழகா இருக்காரு.

பாட்டு சொல்லவே வேண்டாம் ஏற்கனவே வீர விநாயகா, ஆளுமா டோல்லூம்மா பாட்டு செம்ம ஹிட் , தியேட்டர்ல கைதட்டு விசில் கிழிது, தெறி  BGM, பக்கா மாஸ் for தல.

நிச்சயமா அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத படம், அதை சிவா correctஆ மசாலா மிக்ஸ் பண்ணி கொடுத்து இருக்காரு,

Overall : வேதாளம் கதையில்லாதளம், ஆனால் ஆஜித் மட்டும் ஆடும்  திரைகளம் 

இப்படிக்கு 
கிறுக்கன்