சனி, 30 செப்டம்பர், 2017

Karuppan - கருப்பன்

கருப்பன் இந்த படம் போஸ்டர் எல்லாம் பார்த்துட்டு பொங்கல் அப்போ ரிலீஸ் ஆகி இருக்கலாமேன்னு தோணுச்சு , ஆனால் இந்த படம் அந்த போஸ்டர்க்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல , அதே நேரத்தில அட ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை வந்து இருக்கே , நல்ல குடும்பத்தோட பார்க்கலாமே சொல்லணும் தோணுச்சு அப்படியும் இந்த படம் இல்ல ,  படம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை , அதை அழுத்தமாகவும் சொல்லவில்லை , புதுசாக திரைக்கதையும் அமையவில்லை , காதல் , பாசம்ன்னு நல்லா இருக்கும்னு பார்த்தா , ஒரு அளவுக்கு மேல அந்த காதல் பாசம் பார்க்க முடியவில்லை , ரொம்ப திகட்ட திகட்ட கொடுத்து இருக்காங்க .படம் சீரியல் பார்ப்பது போல இருக்கு .

படம் பார்க்கும் போது , கொஞ்சம் தர்மதுரை , கொம்பன் , மருது , பருத்திவீரன் இந்த படங்கள் எல்லாம் ஞாபத்துக்கு வருது , படம் ஆரம்பிச்ச சில நிமிடங்களில் , இந்த கதை இப்படி தான் போகும்ன்னு தெரிஞ்சிடுச்சி , ஆனால் அதை சுவாரஸ்சியமா கொடுத்து இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி , அது போக போக அட போங்கபா , இப்படியே படம் எவ்வளவு நேரம் போகும்ன்னு கேட்க தோணுது,

இந்த அளவுக்கு படம் கொஞ்சம் bore ஆகா போனாலும் சரி , படம் காட்சிக்கு காட்சிக்கு கொஞ்சம் மனசை தெம்பு ஏற்றுவது , நம்ம விஜய் சேதுபதி தாங்க , அசால்ட்டாக மனுஷன் நடிச்சி தள்ளிட்டு போய்கிட்டே இருக்கார் , கதை நல்லா  இருக்கோ இல்லையோ , படம் மக்களுக்கு பிடிக்குமோ இல்லையோ , அதை பற்றி எல்லாம் கவலைப்படமா , அவர் அவரோட வேலையை சரியாய் செஞ்சிட்டு போகிறார், ஒரு விஷயம் சொல்லணும்ன்னா அவர் இது போலவே பல படங்களில் நடித்தாலும் , என்னயா ஒரே மாதிரி நடிக்கிறார்ன்னு சொல்ல தோணல , ஏதோ ஒரு மந்திரம் போட்டு ரசிகர்களை கட்டி போட்டுவிடுகிறார், ஏன்னா இந்த படத்தில குடிச்சிட்டு நல்லா அட்டகாசம் பண்ணும் போது எல்லாம் தர்மதுரை ஞாபகம்படுத்துகிறது , எனக்கு பிடிச்ச காட்சின்னா கல்யாணம் முடிச்ச பிறகு , முதல் நாள் வேலைக்கு போனபிறகு எல்லோரும் சேதுபதி பற்றி தப்பா சொல்லுவாங்க , அன்று இரவு அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபிறகு ஹீரோயின் தன்யாவுக்கு அவருக்கும் ஒரு பேச்சு நடக்கும் அது ரொம்ப நல்லா இருந்துச்சி , ஆனால் போக போக அது போல பல காட்சிகள் வருது , அது கொஞ்சம் ஏன்டான்னு கேட்க தோணுச்சி .

பாபி சிம்ஹா டைரக்டர் நல்லா பில்டப் கொடுத்து இருக்கார் , ஆனால் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இல்லை , building strong ஆனால் basement weakன்னு சொல்லுறா மாதிரி இருக்கு , இவர் போதாதுன்னு இன்னொரு வில்லன் சரத் , ரொம்ப வழக்கமான சாதாரணமான போகுது ,

இசை இமான் அவர் ஒரு படம் ரொம்ப நல்லா பண்ணா அடுத்து சில படங்கள் சுமாரா போடுவார் , அது போல இதுவும் சுமார் ரகம் , சில படங்கள் அவரோட படங்களை ஏற்கனவே கேட்டது போல பாடல்கள் இருந்துச்சி .

எனக்கு ஒரே ஒரு வருத்தம் , ஏன் அப்போ அப்போ விஜய்சேதுபதி நடுவுல நடுவுல இப்படி ஒரு படம் தருகிறார்ன்னு தெரியல , போன வருஷம் ரெக்கை , இந்த வருஷம் கருப்பன்


மொத்தத்தில் கருப்பன்  கொஞ்சம் கருத்துவிட்டான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

Hara Hara Mahadevaki - ஹர ஹர மஹாதேவகி

என்னோட சினி கிறுக்கன் பக்தாளுக்கு  எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள் ,ஹர  ஹர  மஹாதேவகி  இந்த படம் எப்படி இருக்கும் ? , முதலில் நீங்க அந்த ஹர  ஹர  மஹாதேவகி  ஆடியோ கேட்டு இருந்தா நிச்சயமா இந்த படம் எப்படிபட்ட படம்ன்னு உங்களுக்கு தெரியும் ,  கேட்காதவங்க உடனே கூகிள் பண்ண போய்டுவீங்களே. டேய் இது எல்லாம் எவனாவது கேட்க்காம இருப்பானா  அப்படின்னு கேட்கிற பக்தாளோட  மைண்ட் வாய்ஸ் கேட்குது , அப்படியும் சிலர்  இந்த உலகத்துல  இருக்காங்க, அவங்களுக்கு தான் அந்த disclaimer 

முதல் முதலா  என்னோட reviewக்கு நானே  A  certificate  கொடுத்துக்கிறேன் , ஏன்னா படிச்சிட்டு என்ன திட்டாதீங்க , இந்த படம் only for adults  சொல்லியே தான் ட்ரைலர் போட்டாங்க , படமும் அதுக்கு எந்த விதத்திலும் கொஞ்சம் கூட குறையில்லாம  audienceயை  திருப்திபடுத்திருக்கு, அதாவது  அப்போ படத்தில கில்மா காட்சி நிறைய இருக்கானு பக்தாள் ஜொள்ளு விடுவது தெரியுது , அப்படிப்பட்ட காட்சி எல்லாம் படத்தில இல்ல, வெறும் காமெடி  மட்டும் தான், நம்ம சினிமாவுல black காமெடி படம்ன்னு சில படங்களை சொல்லுவாங்க , ஆனா இந்த படம் open காமெடி படம் அவளோதான் சொல்லுவேன் , அதனால வீட்டுல இருக்கவங்களோட படத்துக்கு போயிட்டு கீழே காசு போட்டு சமாளிக்கலாம் நினைக்காதீங்க , ஏன்னா இந்த படத்தில நீங்க காது தான் மூடனும் , அபப்டி இருக்கும் வசனங்கள் . 

படத்தில்  கதை  என்னன்னு கேட்காதீங்க , லாஜிக் எங்கன்னு கேட்காதீங்க  அபப்டின்னு அவங்களே  disclaimer போட்டுட்டாங்க , அப்பறம் என்ன ______ க்கு டா review பண்ண போறேன்னு கேட்ப்பீங்கன்னு தெரியுது , யூடியூபில  review  பண்ணறவங்களையும் படத்தோட டீம் ரொம்ப கேவலமா பச்சையா  ஒரு வீடியோ போட்டு  மரணபங்கம் பண்ணிட்டாங்க , அதனால அதை பற்றி ஒன்னும் சொல்ல முடியாது .

படத்தில சின்ன கதை என்னனா   ஒரே மாதிரி பை , ஒரு பையில bomb  இருக்கு , ஒரு பையில கள்ளநோட்  இருக்கு , இன்னொரு பையில  காதல் break up அதனால , காதலி கொடுத்த gifts வச்ச பை  (குறிப்பு : அதுல angry birds  போட்ட ஜட்டி ) ஆள் மாறாட்டம் போல பை மாறாட்டம் நடக்குது , அதனால வரும் குழப்பங்கள் அவளோதான் இந்த படத்தோட கதை , இதையும் அவங்களே யூடியூபில்  promotion போட்டுட்டாங்க .

படத்தின்  மைனஸ்  முதல் 30-40 நிமிடங்கள் , ஒரு ஒரு கேரக்டர் காட்டி , அவங்க படத்தில் செட்டில் ஆக்குவதற்கு டைம்  எடுக்குது , வழக்கம் போல கொஞ்சம் சம்மந்தம் இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் இன்னொரு மைனஸ் , முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சம் காமெடி அங்க அங்க வச்சி ஏதோ கொஞ்சம் சமாளிச்சு இன்டெர்வலலில் கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ,

 அப்பறம் இரெண்டாவது பாதியில் முதல் சில நிமிடங்கள்  தட்டு தடுமாறி ஆரம்பிச்சி , அப்படியே ஒரு ஸ்பீட் எடுத்து  காமெடியின் உச்சத்துக்கு போயிட்டு சந்தோஷமா படத்தை முடிக்கிறாங்க , நிச்சயமா படத்தின் கடைசி 30-40 நிமிடங்கள் அடங்காம சிரிப்பீங்க 

ஹீரோ கௌதம் கார்த்திக் , ஹீரோயின் நிக்கிகல்ராணிக்கு  ஸ்கோப் கம்மி தான் , படத்தின் ஹீரோன்னு பார்த்தா , சதிஷ் , மொட்டை ராஜேந்திரன் , கருணாகரன், ரவிமரியா , படத்தை தூக்கி நிறுத்துவது இவங்க நாலுபேரும் தான்(படம் பார்த்தா புரியம்)  , நடுவுல பாலசரவணனும் இருக்கார் , கதையின் குழப்பத்துக்கு அவரும் ஒரு காரணம் இருந்தாலும் , சிரிப்பு வரவைப்பது அந்த நாலு பேரும் தான் .படத்தில நிறைய highlight சீன்ஸ் இருக்கு ஆனா அது எதுவும் இங்க எழுத முடியாது , படம் பார்த்து சிரிச்சிகோங்க 

படத்தின் பெரிய ப்ளஸ் இந்த படம்  A  certificate தான் இருந்தாலும் பெண்களை எங்கேயும் கேவலமாகவோ , மட்டமான பெட் ரூம் சீன்களோ , ஹீரோயின் க்ளாமராகவோ , மட்டமான ஐட்டம் பாட்டு வச்சி அறை குறையா ஆட்டமோ இல்லை , படத்தில் இருப்பது வசனங்கள் மட்டும் தான்  , double meaning , triple meaning  வசனங்கள் எல்லாம் இல்ல , straight forward வசனங்கள் தான் , பச்சை பச்சையா இருக்கும் , இப்போ புரியுதா நான்  ஏன் review full பச்சையா எழுதியிருக்கேன்ன்னு 

இசை பாலமுரளி பாலு  ஹர  ஹர  மஹாதேவகி பாடல் தவிர மற்ற பாடல்கள் & , bgm  சுமார்  தான் 

நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும் , இதை கதையாய் எழுதி , ஒரு producer பிடிச்சி அவரை convince பண்ணி , சென்சார் வாங்கி , யூடியூபில் ப்ரோமோஷன் பண்ணி கொண்டுவந்ததுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய தைரியம் தான் .

நிச்சயமா இந்த படத்துக்கு  இந்த இங்கிலிஷ் websites , நியூஸ் papers பலர் ஒரு ஸ்டார் , ரெண்டு ஸ்டார் தான் reviewல்   கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன் , ஆனால் நீங்க ஒரு 2 மணி நேரம் எல்லா கவலைகளையும்  மறந்துட்டு நல்லா சிரிச்சிட்டு வர வேண்டும்ன்னா இந்த படத்தை பாருங்க, உங்களை திருப்திப்படுத்தும் .எனக்கு  90களில் வந்த சுந்தர்.சி படம் பார்த்த உணர்வு 

உங்களுக்கு இந்த படம் பிடிக்கலைன்னா நிச்சயமா மனதளவில் நீங்க வயசு ஆயிடுச்சின்னு சொல்லணும் ,  இல்லனா, நீங்க current ட்ரென்ட்க்கு இல்லன்னு அர்த்தம் .

இந்த படம் just for laughs,   கலாச்சார சீரழிவுன்னு யாரும் கொடி தூக்காதீங்க .

டைரக்டர் : சந்தோஷ்  பி  ஜெயக்குமார் 
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் : தங்கராஜ் 
கேமராமேன் : செல்வகுமார் 
என்னடா புதுசா கேமராமேன் , producer பேரு எல்லாம் போடுறானே தோணுதா , ஆமாங்க  இப்படி ஒரு படத்தை  யார் எடுத்தாங்கன்னு பின்னாடி வரும் சந்ததையர்கள் தெரிஞ்சக்க வேண்டாமா  அதான் .


மொத்தத்தில் ஹர  ஹர  மஹாதேவகி பஜனை நல்லாவே பண்ணி இருக்காங்க .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

புதன், 27 செப்டம்பர், 2017

Spyder - ஸ்பைடர்

ஸ்பைடர் இது வழக்கமான முருகதாஸ் படம் இல்ல , ஆனால் வழக்கமாக வரும் மற்ற தமிழ் படம் போலவும் இல்ல, கொஞ்சம் வித்தியாசனமான கதை , கதாபாத்திரம் எடுத்து ரெண்டு மணி நேரம் bore அடிக்காமல்  கொடுத்து இருக்கும் படம் ஸ்பைடர்.   துப்பாக்கி , கத்தி போல எதிர்பார்த்து போகாதீங்க ,

படத்தை பார்க்கும் முன் ஒரு rule என்னனா நிச்சயமா நீங்க லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா டெக்னாலஜி phone call ரெகார்ட் பண்ணுவது , ஒருதரை ட்ராக் பண்ணுவது , அது இதுன்னு கொஞ்சம் நம்பும்படி இல்லாத காட்சிகள் இருக்கு , இருந்தாலும் முருகதாஸோட brilliant screenplay இந்த துப்பாக்கியில் 12 பேரு சேர்ந்து பிளான் பண்ணுவாங்க அது போல intelligent காட்சிகள் இருக்கு , அதாவது பரத் தேடி கண்டுபிடிப்பது , மகேஷ்பாபுவின் அம்மா , தம்பியை காப்பாற்றும் காட்சிகள் , எஸ்.ஜே.சூர்யாவை வீட்டுக்குள்ளே பெண்களை வைத்து சுற்றிவளைப்பது என்று நல்லா யோசிச்சி காட்சிகள் வச்சி இருக்கார் , அந்த பெண்களை வைத்து பிடிக்கும் காட்சில விஜய் டிவி எல்லாம் யூஸ் பண்ணுவது ட்ராக் பண்ணுவது என்னடா இது லாஜிக் ன்னு எல்லாம் கேட்காதீங்க 

படத்தின் முதல் பாதி இங்க அங்கன்னு கொஞ்சம் கூட நம்மை திசை திருப்பாம, ஒரே வேகத்தில்  இண்டெர்வெல் கொண்டுவந்து விடுது , அதுவும் அந்த பிளாஷ் பேக் சூப்பர் , குறிப்பாக அந்த சின்னப்பையனாக வருபவன் நல்லா நடிச்சி இருக்கான், அவன் சிரிச்சிகிட்டே முகத்தை மாற்றுவது தாறுமாறு , அந்த பகுதியில் வரும் ஹாரிஸ் ஜெயராஜ் bgm மற்றும் அந்த பையனோட நடிப்பு  அந்த ஒரு திரில்லர் , சைக்கோ feel நமக்கு வர வச்சி இருக்காங்க .


படத்தில ஹீரோ மகேஷ் பாபு தான் என்றாலும் , எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ போல படத்தை தூக்கி நிறுத்துகிறார் , மகேஷ் பாபுவுக்கு டைரக்டர் கொடுத்து இருக்கும் மாஸ் சீன்ஸ் நிச்சயமா தெலுங்கு மக்கள்  நல்ல வரவேற்பு ,தருவாங்க ஆனால் தமிழ் ஆடியன்ஸ் மகேஷ் பாபுவின் opening சீன் , படத்தில் ஆங்காங்கே வரும் மாஸ் சீன்ஸ் நம்ம மக்கள் ரொம்ப சாதாரணமா பார்க்கிறாங்க , ஒரு கை தட்டு கூட இல்லை .ஆனால்  அவரை பாராட்ட வேண்டிய விஷயம்ன்னா , அது அவரே டப்பிங் பேசி இருக்கார், எங்கேயும் உதட்டு அசைப்பு தப்பாக இல்ல , ஆனால் அங்க அங்க லைட்டாக தெலுங்கு வாசம் வருது .

படத்தின் பெரிய ப்ளஸ் எஸ்.ஜே.சூர்யா தான் , மனுஷன் மிரட்டி இருக்கார் ,அந்த இன்டெர்வல் காட்சியில் அழுதுகிட்டே கண்ணீரை ஊதி விடுவது செம்ம நச் , நிச்சயமா அது டைரக்டர் ஐடியாவாக இருந்தாலும் , அதை அற்புதமாக நம்மகிட்ட சேர்த்து இருப்பது  எஸ்.ஜே.சூர்யா தான், அதே போல மகேஷ்பாபு அவரை விசாரிக்கும் போது அந்த காட்சி  முடியும் போது கடிகாரம் பார்த்து ஒரு ஏளனமா சிரிச்சிகிட்டே டைம் சொல்லும் போது மாஸ் பண்ணி கைத்தட்டு அள்ளுகிறார் மனுஷன் . பொதுவா சினிமா ஜாம்பவான்கள் என்ன சொல்லுவாங்கன்னா ஹீரோ கேரக்டர் எந்த அளவுக்கு strong ஆகா இருக்கோ அதே அளவுக்கு வில்லனுக்கும் இருக்கணும், அப்போ தான் படம் நல்லா இருக்கும் , அது முருகதாஸ் தன்னோட எல்ல படத்தில் அப்படி தான் வச்சி இருப்பர் , ஆனால் இந்த படத்தில் வில்லன் மாஸ் ஆகா இருக்கான் , ஹீரோ கொஞ்சம் டம்மியாக இருப்பது போல ஓரு உணர்வு எனக்கு .அந்தளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தூக்கி சாப்பிட்டார் , ஒருவேளை இந்த படத்தை தமிழில் விக்ரம் , சூர்யா , விஜய்சேதுபதி நடிச்சிருந்தால் , படம் சூப்பர் டூப்பர்ன்னு சொல்லிருப்பாங்க போல .


பரத் படத்தில் முக்கியமான characterல்   வரார் , நல்லா பண்ணி இருக்கார் , அவரோட sequence நல்லா இருக்கு ,  ஆர்.ஜே . பாலாஜி மற்றும் ஹீரோயின் ரகுல் ப்ரீத்தி சிங் அளவா வந்து போறாங்க, ஹீரோயின் பார்ப்பதற்கு புதிய கீதை படத்தில் வரும் அமீஷா படேல் போல இருக்காங்க , லாங் ஷாட் சைடு face பார்த்தா லைட்டாக இளைச்சி போன நிக்கிகல்ராணி போல இருக்காங்க ,   அவங்க படத்தில் இருப்பதும் இல்லாததும் ஒன்னு தான் , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா ஒரு impact இருக்க போவது இல்ல , அப்படியே தான் இருக்கும் , அதே போல தான் பாட்டும் , அது இருந்தாலும் இல்லாட்டியும் ஒன்னு தான் ,முதல்  பாட்டை தவிர மற்ற பாடல்கள் கேட்க்கும் படியாகவும் இல்ல , தேவைபடுவதாவாகும் இல்ல , படத்தில மொச்சை கொட்டை கண்ணுன்னு ஒரு பாட்டு வரும் அது அப்படியே அந்நியன் படத்தில் வரும் ரெண்டக்க பாட்டு போல இருக்கு , Bgm கூட சில எங்கேயோ கேட்ட ஞாபகம் வருது . தன்னோட பாட்டையே மீண்டும் கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டு இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ் .

படத்தின் மைனஸ்ன்னு சொல்லணும்ன்னா நிச்சயமா கதை  அதாவது அந்த வில்லன் கேரக்டர் ஏன் அப்படி இருக்கான் என்பது சொல்லுவதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியல ,மேலும் இரண்டாவது பாதியில் வரும் நீளமான சண்டை காட்சிகள் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மைனஸாக இருக்கு , அந்த பாறை உருண்டு வரும் காட்சி நிச்சயமாக ஏழாம் அறிவு படத்தை ஞாபகம்படுத்தியது 


சிலர் சொல்லுவது போல படம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்ல , ஒருதடவை தாராளமாக பார்க்கலாம் .

மொத்தத்தில் ஸ்பைடர் வழக்கமான முருகதாஸின் ஸ்பீடாராக இல்லை என்பதே ஒரு குறை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

Magalir Mattum - மகளிர் மட்டும்

குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது வாங்கிய பிரம்மா இயக்கிய  படம் தான் இந்த மகளிர் மட்டும் , முதலிலே சொல்லணும்னா எனக்கு இந்த படத்தில் பிடித்தவை விட பிடிக்காதது நிறைய இருக்கு , அதனால என்ன திட்டாதீங்க , திட்டினாலும் பரவாயில்லை அதுக்கு எல்லாம் கவலைப்பட போவதில்லை , ஏன்னா இந்த படம் பலருக்கு பிடிச்சிருக்கு , சில காரணங்களால் எனக்கு பிடிக்கல அவ்ளோதான் .

படத்தின் கதை என்னன்னு பார்த்தா , ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களின்  வாழ்க்கை , அதில் படும் அவதிகளையும் , திருமணம் ஆகிய பெண்களுக்கு நட்பு வட்டம் என்பது சுருங்கிவிடும் , அவர்களின் பழய நட்பு உடைந்துவிடும்  , அந்த நட்பை  புதுப்பிப்பதும் , நடுத்தர பெண்களின் மனசில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளும்  , அதை  நிறைவேற்றி  சந்தோசம் படுவதை தான்    சொல்லி இருக்கார் இயக்குனர் .

சரி எனக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னா ? படம் முழுவதும் ரொம்ப செயற்கை தனமாக இருந்துச்சி , நல்ல நடிக்கும் நடிகைகள் பானுப்ரியா , சரண்யா , ஊர்வசி இருந்தாலும் , எல்லோருமே ஏதோ ரொம்ப அதிகமா நடிச்சி செயற்கையாக இருக்கு , அவங்க உணவர்வுகள் படம் பார்க்கும் மனசில் பதியவில்லை  ரொம்ப நாடகத்தனமாக இருக்கு , எனக்கு படத்தோட கொஞ்சம் கூட ஒன்ற முடியவில்லை .

படத்தில் வரும் பிளாஷ் பேக் , பள்ளி பருவங்கள் , எல்லாமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்ல , ரொம்ப சினிமாத்தனமா இருந்துச்சி , கொடுத்த காசுக்கு மேல நடிச்சா மாதிரி ஒரு எண்ணம் , படம் பல இடங்களில் ரொம்ப டாக்குமெண்ட்ரி தனமாக இருக்கு , பல டாக்குமென்டரி படங்கள் பார்த்தாலும் அது மனசில் பாதிக்கும் அளவுக்கு இருக்கும், ஆனால் இது கொஞ்சம் கூட எனக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்றவில்லை . ஒரு ஒருத்தரும் அவங்க அவங்க காதல் கதை ஒரு பாட்டில் சொல்லி இருப்பாங்க , அது ரொம்ப ரொம்ப செயற்கையாக தோணுச்சு ஏன் இபப்டி வச்சாங்கன்னு டைரக்டர் பார்த்து கேட்க்கும் போல இருந்துச்சி.

படம் full ஆகா ஜோதிகா வந்தாலும் , படத்தில் scope கம்மியா இருப்பது போல தான் எனக்கு ஒரு உணர்வு , ஊர்வசி , சரண்யா , பானுப்ரியாவுக்கு இருக்கும் அழுத்தம் கூட ஜோதிகாவுக்கு இல்ல , அவங்க ஸ்டேஜ் ஷோவில் MC போல படத்தை நடத்தி செல்கிறாங்க தவிர படத்தில் ரொம்ப முக்கியத்துவமா எனக்கு தோன்றவில்லை . ஆனால் அவங்க கண்ணாடி போட்டுக்கிட்டு bullet , கார் ஓட்டுவது பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்காங்க.

பெண்களை பற்றிய படம் என்றால் நிச்சயமாக ஆண்களுக்கு இடமில்லை , இருக்கும் ஆண்கள் நெகடிவ் ஆகா இருப்பாங்க , அது போல இங்க , லிவிங்ஸ்டன் , நாசர் வராங்க , இவங்க ரெண்டுபேருல நாசர் கேரக்டர் தான் பார்க்கும் போது கொஞ்சம் கோவம் வாரா மாதிரி நடிச்சி இருக்கார் .

எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் பார்த்தா , பானுப்ரியா மகன் மனசு மாறும் காட்சிகள் , அப்புறம் அந்த முவரும் ஒரு ராத்திரி அவங்க அவங்க மனசில் இருப்பத்தை ஒரு மூட்டையில் அடிப்பாங்க , அது நம் அனைத்து பெண்கள் மனசில் இருக்கும் குமாறல்களாக தெரிஞ்சது

என்னை பொறுத்தவரை இன்னும் அழுத்தமாக , இன்னும் இயற்கையாக இந்த படத்தை எடுத்து இருந்தா மகளிர்க்கு  மட்டுமில்லாமல்  அனைவருக்குமான படமாக அமைந்து இருக்கும் .

மொத்தத்தில் மகளிர் மட்டும் ரொம்ப நாடகமாக மட்டும்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வியாழன், 14 செப்டம்பர், 2017

Thupparivaalan - துப்பறிவாளன்

மிஷ்கின் படம் என்னங்க சொல்லறது? அவர் படம்னா வித்தியாசமான ஹீரோ கேரக்டர் , அவங்க வித்தியாசமா body language இருக்கும் , கொஞ்சம் இருட்டா இருக்கும் , நிச்சயமா கேமரா ஷாட் low angle நிறைய இருக்கும் , ஒரு subway காட்சி இருக்கும் ,இப்படி தான் எதிர்பார்த்து போனேன் , ஆனால் இந்த படத்தில்  low angle ஷாட் ரொம்ப கம்மி , இருட்டும் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு , அதனால படம் நல்லா இல்லையா கேட்காதீங்க , படம் அருமையா இருக்கு . அந்த subway காட்சிகள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கு .

நீங்க ரொம்ப fast , மசாலா , படம் பார்பவர்களா ? அப்போ  இந்த படம் பொருந்தாது ஒரு நல்ல crime கதை உள்ள படம் பார்க்கணுமா ? அப்போ இந்த படம் நிச்சயம் உங்களுக்கு தான் . படம் கடைசி வரை என்ன என்னன்னு நமக்கு கேட்டுகிட்டே இருக்கவைக்குது .

ஒரு சாதாரணமான கதையை , அசாதாரணமான திரைக்கதையால் ,வித்தியாசமான கேரக்டர்களால் படத்தை தலை நிமிர்த்தி , நம்மை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஆற்றல் மிஷ்கின்னுக்கு இருக்கு , அதை இந்த படத்திலும் சரியாக பண்ணியிருக்கிறார் , ஒரு ஒரு காட்சியும் நம்மை அட போடவைக்கும் 

ஒரு சின்ன பையனுக்காக வெறும் 800ரூபாய்க்கு , அதுவும் ஒரு நாய்க்காக துப்பறிய போகிறார் விஷால் , அதன் பின்னாடி என்ன நடந்து இருக்கு , எப்படி போகுது , யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு  ரெண்டு மணி நேரம் நம்மை கட்டி போட்டு வச்சி இருக்கார் மிஷ்கின் .

எனக்கு படத்தில பிடிச்ச காட்சிகள் நிறைய , சின்ன பையன் விஷாலோட பேசும் காட்சி சூப்பர் ,தலைவாசல் விஜய் பேசுவதை வச்சி விஷால் கண்டுபிடிப்பது , அதுல விஷாலோட ரோல் என்னவென்று  காட்டுவது , பால்கனி எங்க இருக்குன்னு கேட்டு ஹீரோயினோட மாமாவை தூக்கி போடுவது ,  ஒரு ஒரு தடவையும் வினய் காபி கேட்பதும் , அதுக்கு பின்னாடி நடக்கும் காட்சிகள் நல்லா இருக்கு , ஒரு பைக் சேசிங் சீன் விறுவிறுப்பாக இருந்துச்சி ஆனால் அது எனக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் ஒரு பைக் சேசிங் சீன்னை ஞாபகம் படுத்துச்சி , இப்படி ஒரு ஒரு clue கண்டுபிடிச்சி கதையை ஒரு ஒரு கட்டத்துக்கு நகர்வது போல திரைக்கதை வச்சிஇருப்பது மிக பெரிய ப்ளஸ் .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் கேரக்டர்ஸ் , அதுக்கு நடிகர்கள் தேர்ந்து எடுத்தது , விஷால் , பிரசன்னா , பாக்கியராஜ் , வினய் , ஆண்ட்ரியா , அப்பறம் ஒரு மொட்டை அடிச்ச அடியாள் , ஆமாங்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில ஒருத்தன் பைக்கில் போய்ட்டு கத்தி குத்து வாங்கி சாவனே அவரே தான் இந்த படத்திலும் வாரார் .பாக்கியராஜ் முதலில் பார்க்கும் போது அடையாளமே தெரியல , வினய் பார்க்கும் போது அட இவர்க்கு இப்படி ஒரு கேரக்டர் aaha ? கேட்க தோணுது , நிச்சயமா அடுத்த சில படங்களுக்கு இது போல பல ரோல் வரும் .

விஷால் பற்றி சொல்லியே ஆகணும் , எல்லா reviewல் சொல்லுவது தான் , அவர் நடிச்சதிலே நல்ல படம் இது தான் , அதுவும் கத்தி கத்தி பன்ச் வசனம் எல்லாம் பேசாமல் , மொக்க பழி வாங்கும் கதை எல்லாம் இல்லமால் படம் நல்லா இருக்கு , நல்ல பேசப்படும் படம் அவருக்கு மிஷ்கின் கொடுத்து இருக்கார் .படத்தின் இறுதி காட்சி எல்லாம் உண்மையாக ரொம்ப உழைத்து இருக்கிறார் .

படத்தின் முக்கிய பங்கு , படத்தின் உயிர் நாடி மியூசிக் அரோல் , பக்கா bgm சின்ன சின்ன காட்சிகள் பிரம்மாண்டமா மனசுல பதியவைப்பது அவரோட இசை தான் , படத்தில் இன்னொரு ப்ளஸ் சண்டை காட்சிகள் , ஒரு சைனீஸ் ஹோட்டலில் ஒரு சண்டை வரும் அது நல்லா இருந்துச்சி , அந்த காட்சியில் bgm செம்ம 

படத்தின் மைனஸ் பார்த்தா , முதல் பாதியில் சில இடங்கள் கொஞ்சம் slow பண்ணி ஸ்பீட் எடுக்க போகும் போது , ஏதோ கொஞ்சம் மிஸிங் போல ஒரு உணர்வு , படத்தில் காதல் அளவாக சொன்னாலும் , ஒரு காட்சியில் ஹீரோயின் அனு துடைப்பக்கட்டையை வாங்கி கீழே விழும் காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனம் , நல்லவேளை அவங்க விழும் போது ஒரு கனவு டூயட் வைக்கல , ஒரு சேசிங் சீனில் ஆண்ட்ரியா தப்பிப்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை , எனக்கு முக்கியமான மைனஸ் தோணுச்சுனா அது , படத்தில suspense reveal ஆகும் , அப்போ ஒரு கேரக்டர் அதை பற்றி சொல்லும் போது , அவர் விக்கி விக்கி சொல்லுவதாலும் , அங்கே கொஞ்சம் bgm வருவதாலும் , அந்த இடத்தில என்ன சொன்னாருன்னு புரியல , அதனால அவங்க யார் என்ன லிங்க் என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல . அதனால அந்த இடத்தில கொஞ்சம் உற்று கவனிக்கணும் , 

படத்தில பிச்சாவரத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் அருமை , கடைசியாக விஷால் , பிரசன்ன நடுவே இருக்கும் ஒரு புரிதல் செம்ம செம்ம (அடிக்கடி நான் செம்ம யூஸ் பண்ணறேன் ஒருத்தர் சொன்னாரு அதனால கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுறேன் )

பிசாசு படம் ரெண்டாவது தடவை பார்க்கும் போது ஒரு ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி  கதையோட எப்படி ஒன்றி இருக்குன்னு தெரிஞ்சது , அதுபோல இரண்டாவது தடவை பார்த்தா என்னவெல்லாம் கிடைக்குமோ ?

மிஷ்கின் இதுவரை காணாத யாரும் கோணத்தில் விஷால் , ஆண்ட்ரியா , வினய் , பாக்யராஜ் இவர்களை நல்ல துப்பறிந்து தமிழ் சினிமாவுக்கு துப்பறிவாளன்  மூலம் கொடுத்து இருக்கிறார் 

மிஷ்கின் mysteryல்  மேஸ்திரி  அதை மீண்டும் நிரூபிச்சிவிட்டார் 

மொத்தத்தில் துப்பறிவாளன் மிஷ்கினின் அறிவில் உதித்த அருமையான அறிவாளன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 2 செப்டம்பர், 2017

Kurangu Bommai - குரங்கு பொம்மை

இந்த படம்  ஒரு வரி கதைன்னு பார்த்தா , ஒரு குரங்கு பொம்மை போட்ட பை ஒருத்தருக்கு ஒருத்தர் கை மாறுது அவ்ளோதான் இதன் கதை , ஆனால் அந்த கதையை சொன்னவிதமும் , படத்தில் வரும் கதாபாத்திரங்களும்   படத்தின் பெரிய ப்ளஸ் .

ஒரு ஒரு கேரக்டரும் மனசில் பதியுது , அந்த அளவுக்கு unique characters ஆகா யோசிச்சி டைரக்டர் நித்திலன் வடிவமைச்சிருக்கார் ,அதே போல அந்த நடிகர்களும் நம் மனசில் பதிவுது போல நடிச்சிருக்காங்க ,

ஹீரோ விதார்த் , ஹீரோயின் டெலனா டேவிஸ் , பாரதிராஜா , ஏகாம்பரமாக வரும் தேனப்பன் , சேகராக வரும் குமரவேல் , அவருக்கு மனைவியாக  வருபவர் ,   பையுடன் சுத்தும்  கிருஷ்ணமூர்த்தி , குறிப்பாக படத்தில சிந்தனை ன்னு பேருல வரும் ஒரு திருடன் ultimate  , அட ஒரு சீன் தான் இருந்தாலும் ஒரு சீனில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் , அந்த ஸ்டேஷனில் வரும் ஒரு குட்டி பூனை , fan switch off செய் என்று சொல்லும் ஒரு சின்ன கேரக்டர் , அப்புறம் திண்ணிபண்டாரமாக வரும் ஒரு கேரக்டர் , இப்படி சின்ன சின்ன கேரக்டர்கள் வித்தியாசமாக வச்சி நம் மனசில் பதிய வசிட்டர் டைரக்டர்.
ஏகாம்பரமாக வரும் தேனப்பன் நல்லா நடிச்சிருக்கார் , அவருடய body language சூப்பர் , குறிப்பாக குமரவேல் கூட பேசும் சீன் செம்ம .பாரதிராஜா ஒரு அப்பாவி அப்பாவாக , விசுவாச நண்பனாக பக்காவா பொருந்தி இருக்கார் .

படத்தில் எனக்கு பிடிச்சதுன்னா, கதை சொன்னவிதம் , படம் ரொம்ப practical ஆகா இருக்கு , வீடு ஸ்டேஷன் ,ஒரு பஸ் ஸ்டாப் . background ,ஒரு areaவின் கலாச்சாரம் , காட்சிகள் முன்பு பின்புமாக சென்று வருவது சூப்பர் , எனக்கு பிடிச்சா காட்சிகள்ன்னா , விதார்த் பொண்ணு பார்க்கும் காட்சி , அங்க ஹீரோ , ஹீரோயின் உண்மை பேசுவது , இன்னொரு இடத்தில் அவங்க குடும்பத்தார் பேசுவது அருமை , விதார்த் வீட்டில் பாரதிராஜா , அவங்க அம்மா பேசும் காட்சிகள் ரொம்ப சாதாரணமா practical  ஆகா இருந்துச்சி , படத்தில் டைட்டில் பாட்டில் வரும் காட்சிகள் செம்ம , அந்த திருடன் பண்ணும் சேட்டைகள் பக்கா .அந்த ஸ்டேஷன் சீன் எப்படி யோசிச்சார்ன்னு தெரியல , அந்த காட்சி ஆரம்பிப்பதும் , அது முடிவதும் செம்ம , கடைசியா ஒருத்தன் தீப்பட்டி இருக்கான்னு கேட்பது செம்ம , ஏன் அபப்டி சொல்லுறேன்னா படம் பாருங்க புரியும் அந்த காட்சி, எந்த situationல அவன் அபப்டி கேட்பான்னு 

இன்டெர்வல் பகுதியில் வரும் bgm  செம்ம , அந்த இடத்தில் குமரவேல் பண்ணும் உண்மையான முகம் , அந்த பையை பற்றி காட்டும்  போது ஒரு செகண்ட் மனசு பாரமாக ஆகுது ,குமரவேல் & ஏகாம்பரம் மோதும் காட்சியில் இருந்து  முடியும் வரை , படத்தின் கடைசி 15-20 நிமிடங்கள் நாம் ஒன்னு நினைக்க வேற ஒன்னு மாறி மாறி போயிட்டு முடியுது , இறுதி காட்சி கூட நான் ஒன்னு நினைச்சேன் , ஆனால் வேற மாதிரி முடிச்சி இருப்பது ultimate .

நிறைய இருக்குங்க படத்தை பற்றி சொல்ல , ஆனால் எல்லாம் சொல்லிட்டா படம் பார்க்கும் இன்ட்ரெஸ்ட் போய்டும் , சில இடங்கள் கொஞ்சம் தோய்வது போல இருந்துச்சி , நிச்சயமாக காதல் காட்சிகள் கொஞ்சம் குறைத்து இருக்கலாமோ தோணுச்சு .

மியூசிக் அஜனீஷ் , பாட்டுகள் மனசில் நிக்கல , ஆனால் படத்தோட உணர்வை bgm ல் கொண்டுவந்துவிட்டார் .

மொத்தத்தில் குரங்கு பொம்மை குறைவில்லா பொம்மை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

Puriyatha Puthir - புரியாத புதிர்


விஜய்சேதுபதி :  வழக்கம் போல + + + , அதுவும் துணி கடை காட்சியில் நடிப்பு ++

காயத்ரி :  ரொம்ப rare ஆகா படத்தில் வந்தாலும் இந்த படத்தில் ++

த்ரில்லிங் சீன் :   +, ஆனால் சில இடங்களில் வழக்கமான தமிழ் சினிமா காட்சியமைப்பு அதனால சில இடங்களுக்கு  - - 

கதை :  ++ புதிர் 

திரைக்கதை :   + + சுவாரசியமான காட்சிகளுக்கு ,    - - அதிகமான காதல் காட்சிகளுக்கு , கதைக்குள் சீக்கிரமாக போகாமல் முதலில் வரும் 30 நிமிடங்கள்  - - 

கேமரா :  தினேஷ் +, பிளாட் காட்சிகள் 

இசை :  சாம்  - முதல் பாடல் + , Bgm + , இரண்டாவது பாதியில் காதல் பாடல் படத்தில் வேகத்தடை -

முதல் பாதி :  முதல் 30 நிமிடங்கள் - - 

இரண்டாவது பாதி : பிளாஷ் பேக்  + ,  

Twist   :  இது எல்லாம் செய்வது இவங்களா இருக்குமோ என்று முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் கண்டுபிடிச்சேன் , but மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல அதனால + & - .
டைரக்டர் ரஞ்சித் : புது முயற்சி என்று முன்று வருஷத்துக்கு முன்னாடி வந்து இருந்தால் சொல்லிருக்கலாம், ஏன் என்றால் படத்தில் சொல்லவந்த கருத்து அப்படி . 

மொத்தத்தில் : புரியாத புதிர் அனைவருக்கும் புதிர் புரிஞ்சி பிடிக்குமா ?  என்பது கொஞ்சம் சந்தேகம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்