புதன், 27 செப்டம்பர், 2017

Spyder - ஸ்பைடர்

ஸ்பைடர் இது வழக்கமான முருகதாஸ் படம் இல்ல , ஆனால் வழக்கமாக வரும் மற்ற தமிழ் படம் போலவும் இல்ல, கொஞ்சம் வித்தியாசனமான கதை , கதாபாத்திரம் எடுத்து ரெண்டு மணி நேரம் bore அடிக்காமல்  கொடுத்து இருக்கும் படம் ஸ்பைடர்.   துப்பாக்கி , கத்தி போல எதிர்பார்த்து போகாதீங்க ,

படத்தை பார்க்கும் முன் ஒரு rule என்னனா நிச்சயமா நீங்க லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா டெக்னாலஜி phone call ரெகார்ட் பண்ணுவது , ஒருதரை ட்ராக் பண்ணுவது , அது இதுன்னு கொஞ்சம் நம்பும்படி இல்லாத காட்சிகள் இருக்கு , இருந்தாலும் முருகதாஸோட brilliant screenplay இந்த துப்பாக்கியில் 12 பேரு சேர்ந்து பிளான் பண்ணுவாங்க அது போல intelligent காட்சிகள் இருக்கு , அதாவது பரத் தேடி கண்டுபிடிப்பது , மகேஷ்பாபுவின் அம்மா , தம்பியை காப்பாற்றும் காட்சிகள் , எஸ்.ஜே.சூர்யாவை வீட்டுக்குள்ளே பெண்களை வைத்து சுற்றிவளைப்பது என்று நல்லா யோசிச்சி காட்சிகள் வச்சி இருக்கார் , அந்த பெண்களை வைத்து பிடிக்கும் காட்சில விஜய் டிவி எல்லாம் யூஸ் பண்ணுவது ட்ராக் பண்ணுவது என்னடா இது லாஜிக் ன்னு எல்லாம் கேட்காதீங்க 

படத்தின் முதல் பாதி இங்க அங்கன்னு கொஞ்சம் கூட நம்மை திசை திருப்பாம, ஒரே வேகத்தில்  இண்டெர்வெல் கொண்டுவந்து விடுது , அதுவும் அந்த பிளாஷ் பேக் சூப்பர் , குறிப்பாக அந்த சின்னப்பையனாக வருபவன் நல்லா நடிச்சி இருக்கான், அவன் சிரிச்சிகிட்டே முகத்தை மாற்றுவது தாறுமாறு , அந்த பகுதியில் வரும் ஹாரிஸ் ஜெயராஜ் bgm மற்றும் அந்த பையனோட நடிப்பு  அந்த ஒரு திரில்லர் , சைக்கோ feel நமக்கு வர வச்சி இருக்காங்க .


படத்தில ஹீரோ மகேஷ் பாபு தான் என்றாலும் , எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ போல படத்தை தூக்கி நிறுத்துகிறார் , மகேஷ் பாபுவுக்கு டைரக்டர் கொடுத்து இருக்கும் மாஸ் சீன்ஸ் நிச்சயமா தெலுங்கு மக்கள்  நல்ல வரவேற்பு ,தருவாங்க ஆனால் தமிழ் ஆடியன்ஸ் மகேஷ் பாபுவின் opening சீன் , படத்தில் ஆங்காங்கே வரும் மாஸ் சீன்ஸ் நம்ம மக்கள் ரொம்ப சாதாரணமா பார்க்கிறாங்க , ஒரு கை தட்டு கூட இல்லை .ஆனால்  அவரை பாராட்ட வேண்டிய விஷயம்ன்னா , அது அவரே டப்பிங் பேசி இருக்கார், எங்கேயும் உதட்டு அசைப்பு தப்பாக இல்ல , ஆனால் அங்க அங்க லைட்டாக தெலுங்கு வாசம் வருது .

படத்தின் பெரிய ப்ளஸ் எஸ்.ஜே.சூர்யா தான் , மனுஷன் மிரட்டி இருக்கார் ,அந்த இன்டெர்வல் காட்சியில் அழுதுகிட்டே கண்ணீரை ஊதி விடுவது செம்ம நச் , நிச்சயமா அது டைரக்டர் ஐடியாவாக இருந்தாலும் , அதை அற்புதமாக நம்மகிட்ட சேர்த்து இருப்பது  எஸ்.ஜே.சூர்யா தான், அதே போல மகேஷ்பாபு அவரை விசாரிக்கும் போது அந்த காட்சி  முடியும் போது கடிகாரம் பார்த்து ஒரு ஏளனமா சிரிச்சிகிட்டே டைம் சொல்லும் போது மாஸ் பண்ணி கைத்தட்டு அள்ளுகிறார் மனுஷன் . பொதுவா சினிமா ஜாம்பவான்கள் என்ன சொல்லுவாங்கன்னா ஹீரோ கேரக்டர் எந்த அளவுக்கு strong ஆகா இருக்கோ அதே அளவுக்கு வில்லனுக்கும் இருக்கணும், அப்போ தான் படம் நல்லா இருக்கும் , அது முருகதாஸ் தன்னோட எல்ல படத்தில் அப்படி தான் வச்சி இருப்பர் , ஆனால் இந்த படத்தில் வில்லன் மாஸ் ஆகா இருக்கான் , ஹீரோ கொஞ்சம் டம்மியாக இருப்பது போல ஓரு உணர்வு எனக்கு .அந்தளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தூக்கி சாப்பிட்டார் , ஒருவேளை இந்த படத்தை தமிழில் விக்ரம் , சூர்யா , விஜய்சேதுபதி நடிச்சிருந்தால் , படம் சூப்பர் டூப்பர்ன்னு சொல்லிருப்பாங்க போல .


பரத் படத்தில் முக்கியமான characterல்   வரார் , நல்லா பண்ணி இருக்கார் , அவரோட sequence நல்லா இருக்கு ,  ஆர்.ஜே . பாலாஜி மற்றும் ஹீரோயின் ரகுல் ப்ரீத்தி சிங் அளவா வந்து போறாங்க, ஹீரோயின் பார்ப்பதற்கு புதிய கீதை படத்தில் வரும் அமீஷா படேல் போல இருக்காங்க , லாங் ஷாட் சைடு face பார்த்தா லைட்டாக இளைச்சி போன நிக்கிகல்ராணி போல இருக்காங்க ,   அவங்க படத்தில் இருப்பதும் இல்லாததும் ஒன்னு தான் , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா ஒரு impact இருக்க போவது இல்ல , அப்படியே தான் இருக்கும் , அதே போல தான் பாட்டும் , அது இருந்தாலும் இல்லாட்டியும் ஒன்னு தான் ,முதல்  பாட்டை தவிர மற்ற பாடல்கள் கேட்க்கும் படியாகவும் இல்ல , தேவைபடுவதாவாகும் இல்ல , படத்தில மொச்சை கொட்டை கண்ணுன்னு ஒரு பாட்டு வரும் அது அப்படியே அந்நியன் படத்தில் வரும் ரெண்டக்க பாட்டு போல இருக்கு , Bgm கூட சில எங்கேயோ கேட்ட ஞாபகம் வருது . தன்னோட பாட்டையே மீண்டும் கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டு இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ் .

படத்தின் மைனஸ்ன்னு சொல்லணும்ன்னா நிச்சயமா கதை  அதாவது அந்த வில்லன் கேரக்டர் ஏன் அப்படி இருக்கான் என்பது சொல்லுவதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியல ,மேலும் இரண்டாவது பாதியில் வரும் நீளமான சண்டை காட்சிகள் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மைனஸாக இருக்கு , அந்த பாறை உருண்டு வரும் காட்சி நிச்சயமாக ஏழாம் அறிவு படத்தை ஞாபகம்படுத்தியது 


சிலர் சொல்லுவது போல படம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்ல , ஒருதடவை தாராளமாக பார்க்கலாம் .

மொத்தத்தில் ஸ்பைடர் வழக்கமான முருகதாஸின் ஸ்பீடாராக இல்லை என்பதே ஒரு குறை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

3 கருத்துகள்:

Comments