வியாழன், 14 செப்டம்பர், 2017

Thupparivaalan - துப்பறிவாளன்

மிஷ்கின் படம் என்னங்க சொல்லறது? அவர் படம்னா வித்தியாசமான ஹீரோ கேரக்டர் , அவங்க வித்தியாசமா body language இருக்கும் , கொஞ்சம் இருட்டா இருக்கும் , நிச்சயமா கேமரா ஷாட் low angle நிறைய இருக்கும் , ஒரு subway காட்சி இருக்கும் ,இப்படி தான் எதிர்பார்த்து போனேன் , ஆனால் இந்த படத்தில்  low angle ஷாட் ரொம்ப கம்மி , இருட்டும் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு , அதனால படம் நல்லா இல்லையா கேட்காதீங்க , படம் அருமையா இருக்கு . அந்த subway காட்சிகள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கு .

நீங்க ரொம்ப fast , மசாலா , படம் பார்பவர்களா ? அப்போ  இந்த படம் பொருந்தாது ஒரு நல்ல crime கதை உள்ள படம் பார்க்கணுமா ? அப்போ இந்த படம் நிச்சயம் உங்களுக்கு தான் . படம் கடைசி வரை என்ன என்னன்னு நமக்கு கேட்டுகிட்டே இருக்கவைக்குது .

ஒரு சாதாரணமான கதையை , அசாதாரணமான திரைக்கதையால் ,வித்தியாசமான கேரக்டர்களால் படத்தை தலை நிமிர்த்தி , நம்மை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஆற்றல் மிஷ்கின்னுக்கு இருக்கு , அதை இந்த படத்திலும் சரியாக பண்ணியிருக்கிறார் , ஒரு ஒரு காட்சியும் நம்மை அட போடவைக்கும் 

ஒரு சின்ன பையனுக்காக வெறும் 800ரூபாய்க்கு , அதுவும் ஒரு நாய்க்காக துப்பறிய போகிறார் விஷால் , அதன் பின்னாடி என்ன நடந்து இருக்கு , எப்படி போகுது , யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு  ரெண்டு மணி நேரம் நம்மை கட்டி போட்டு வச்சி இருக்கார் மிஷ்கின் .

எனக்கு படத்தில பிடிச்ச காட்சிகள் நிறைய , சின்ன பையன் விஷாலோட பேசும் காட்சி சூப்பர் ,தலைவாசல் விஜய் பேசுவதை வச்சி விஷால் கண்டுபிடிப்பது , அதுல விஷாலோட ரோல் என்னவென்று  காட்டுவது , பால்கனி எங்க இருக்குன்னு கேட்டு ஹீரோயினோட மாமாவை தூக்கி போடுவது ,  ஒரு ஒரு தடவையும் வினய் காபி கேட்பதும் , அதுக்கு பின்னாடி நடக்கும் காட்சிகள் நல்லா இருக்கு , ஒரு பைக் சேசிங் சீன் விறுவிறுப்பாக இருந்துச்சி ஆனால் அது எனக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் ஒரு பைக் சேசிங் சீன்னை ஞாபகம் படுத்துச்சி , இப்படி ஒரு ஒரு clue கண்டுபிடிச்சி கதையை ஒரு ஒரு கட்டத்துக்கு நகர்வது போல திரைக்கதை வச்சிஇருப்பது மிக பெரிய ப்ளஸ் .

படத்தின் மிக பெரிய ப்ளஸ் கேரக்டர்ஸ் , அதுக்கு நடிகர்கள் தேர்ந்து எடுத்தது , விஷால் , பிரசன்னா , பாக்கியராஜ் , வினய் , ஆண்ட்ரியா , அப்பறம் ஒரு மொட்டை அடிச்ச அடியாள் , ஆமாங்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில ஒருத்தன் பைக்கில் போய்ட்டு கத்தி குத்து வாங்கி சாவனே அவரே தான் இந்த படத்திலும் வாரார் .பாக்கியராஜ் முதலில் பார்க்கும் போது அடையாளமே தெரியல , வினய் பார்க்கும் போது அட இவர்க்கு இப்படி ஒரு கேரக்டர் aaha ? கேட்க தோணுது , நிச்சயமா அடுத்த சில படங்களுக்கு இது போல பல ரோல் வரும் .

விஷால் பற்றி சொல்லியே ஆகணும் , எல்லா reviewல் சொல்லுவது தான் , அவர் நடிச்சதிலே நல்ல படம் இது தான் , அதுவும் கத்தி கத்தி பன்ச் வசனம் எல்லாம் பேசாமல் , மொக்க பழி வாங்கும் கதை எல்லாம் இல்லமால் படம் நல்லா இருக்கு , நல்ல பேசப்படும் படம் அவருக்கு மிஷ்கின் கொடுத்து இருக்கார் .படத்தின் இறுதி காட்சி எல்லாம் உண்மையாக ரொம்ப உழைத்து இருக்கிறார் .

படத்தின் முக்கிய பங்கு , படத்தின் உயிர் நாடி மியூசிக் அரோல் , பக்கா bgm சின்ன சின்ன காட்சிகள் பிரம்மாண்டமா மனசுல பதியவைப்பது அவரோட இசை தான் , படத்தில் இன்னொரு ப்ளஸ் சண்டை காட்சிகள் , ஒரு சைனீஸ் ஹோட்டலில் ஒரு சண்டை வரும் அது நல்லா இருந்துச்சி , அந்த காட்சியில் bgm செம்ம 

படத்தின் மைனஸ் பார்த்தா , முதல் பாதியில் சில இடங்கள் கொஞ்சம் slow பண்ணி ஸ்பீட் எடுக்க போகும் போது , ஏதோ கொஞ்சம் மிஸிங் போல ஒரு உணர்வு , படத்தில் காதல் அளவாக சொன்னாலும் , ஒரு காட்சியில் ஹீரோயின் அனு துடைப்பக்கட்டையை வாங்கி கீழே விழும் காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனம் , நல்லவேளை அவங்க விழும் போது ஒரு கனவு டூயட் வைக்கல , ஒரு சேசிங் சீனில் ஆண்ட்ரியா தப்பிப்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை , எனக்கு முக்கியமான மைனஸ் தோணுச்சுனா அது , படத்தில suspense reveal ஆகும் , அப்போ ஒரு கேரக்டர் அதை பற்றி சொல்லும் போது , அவர் விக்கி விக்கி சொல்லுவதாலும் , அங்கே கொஞ்சம் bgm வருவதாலும் , அந்த இடத்தில என்ன சொன்னாருன்னு புரியல , அதனால அவங்க யார் என்ன லிங்க் என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல . அதனால அந்த இடத்தில கொஞ்சம் உற்று கவனிக்கணும் , 

படத்தில பிச்சாவரத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் அருமை , கடைசியாக விஷால் , பிரசன்ன நடுவே இருக்கும் ஒரு புரிதல் செம்ம செம்ம (அடிக்கடி நான் செம்ம யூஸ் பண்ணறேன் ஒருத்தர் சொன்னாரு அதனால கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுறேன் )

பிசாசு படம் ரெண்டாவது தடவை பார்க்கும் போது ஒரு ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி  கதையோட எப்படி ஒன்றி இருக்குன்னு தெரிஞ்சது , அதுபோல இரண்டாவது தடவை பார்த்தா என்னவெல்லாம் கிடைக்குமோ ?

மிஷ்கின் இதுவரை காணாத யாரும் கோணத்தில் விஷால் , ஆண்ட்ரியா , வினய் , பாக்யராஜ் இவர்களை நல்ல துப்பறிந்து தமிழ் சினிமாவுக்கு துப்பறிவாளன்  மூலம் கொடுத்து இருக்கிறார் 

மிஷ்கின் mysteryல்  மேஸ்திரி  அதை மீண்டும் நிரூபிச்சிவிட்டார் 

மொத்தத்தில் துப்பறிவாளன் மிஷ்கினின் அறிவில் உதித்த அருமையான அறிவாளன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

6 கருத்துகள்:

Comments