Friday, 27 May 2016

Ithu Namma Aaalu - இது நம்ம ஆளு

இது வம்பு ஆளு ஐயோ சாரி படத்தோட பேரு இது நம்ம ஆளு, படத்தோட ஹீரோ தான் controversyனா , நமக்கு எழுதும் போதே  controversy ஆகுதே. சரி விடுங்க படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க

சிம்புவோட படத்தில என்ன இருக்கும் ? அழகான ஹீரோயின் இருப்பாங்களா ?
ஆமா இதுல இருக்காங்க.....  அப்புறம் ?
காதல், காதல் தோல்வி , ஒரு குத்து பாட்டு இருக்குமா ??
ஆமா இதுல இருக்கு .
பொண்ணுகளோட காதல் அவங்கள பற்றி காலாயித்தல் இருக்குமா ?
ஆமா லைட்ஆ  இருக்கு
தலயை பற்றி  சொல்லி ஒரு வசனம் இருக்குமா ?
ஆமா இதுல இருக்கு.
சந்தானம்  இருப்பாரா ?
ஆமா.. ஆனா கொஞ்சமா வந்துட்டு அவரோட substituteah சூரியை போட்டுடாரு .
நல்லவேளை punch dialogue எல்லாம்  படத்துல இல்ல 
படம் எப்படி இருக்கியா? என்று கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, கொஞ்சம் பொறுங்க ,படத்தில நடிச்ச சிம்புவுக்கு படம் ரிலீஸ் ஆகணும்ன்னு எந்த அளவுக்கு பொறுமை இருந்துச்சி , அதைவிட  படம் பார்த்த எனக்கு எவ்வளவு பொறுமை இருக்கு , படிக்கிற உங்களுக்கும் அது கொஞ்சம் இருக்கணும்.

இயக்குனர் பாண்டிராஜ் படத்தில என்ன எல்லாம் இருக்கும் ?
கண்டிப்பா நடிகர் JP இருப்பார், அதாங்க மங்காத்தாவுல  த்ரிஷாவுக்கு அப்பாவா வருவரே அவர் தான் ,இதுல இருக்கார் .
நகைச்சுவை மெல்லிசா ஒரு கோடு போல படத்தோட போயிட்டு இருக்கும்,இதுலயும் அது மாதிரி சூரியை  வச்சி போகுது, ஆனா படத்தைவிட்டு வெளியே வரும் போது மனசுல இருந்து அழிஞ்சி போகுது.
அவரோட family drama படங்களில் எந்த ஒரு கேரக்டரையும் நெகடிவா காட்டமாட்டாரு, சந்தர்ப்ப சூழ்நிலைகளை தான் வில்லனாக காட்டுவாரு,அதுவும் இதுலை இருக்கு
இது எல்லாம் இருக்கே ஆனா படத்தில கதை இருக்கா ? அதை தான் கடைசி வரைக்கும் தேடிகிட்டு இருந்தேன், வெறும் துண்டு துண்டாக காட்சிகளின் கோர்வை தான் இந்த படம், ஆனா டைரக்டர் காட்சிகளை ரொம்ப கோர்த்துடாருன்னு தான் சொல்லணும் அதனால கொஞ்சம் கண்ணை கட்டுது ,பல படங்கள் கதை பெருசா இல்லாட்டியும் , சுவாரசியமான திரைக்கதையால் படம் போர் அடிக்காம போகும், ஆனா அது இதுல மிஸ்ஸிங்.

படம் ஆரம்பிக்கும் போது IT கம்பெனி பற்றி சொல்லும் போது அட சுவாரசியமா போகுதே நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லுறாரே என்று தோணிச்சி,அதுவும் சில வசனங்கள் நான் ஏற்கனவே ஒரு stage ஷோல சொல்லிருக்கோமே பரவாயில்லையே நம்மை மாதிரியே யோசிச்சி எழுதிருக்காரேன்னு ஒரு அல்ப்ப சந்தோசம்

சிம்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ரொம்ப அழகா இருக்காரு , பொதுவா சிம்பு  டான்ஸ்ல எல்லாம் பிண்ணிபெடல் எடுப்பார் ஆனா அந்த குத்து பாட்டுல உடம்பை கஷட்டப்பட்டு ஆடினா மாதிரி இருந்திச்சி.
நயன்தாரவுக்கு  இந்த படம் ஒரு challenging ஆனா ஒரு கேரக்டர் இல்ல இது

ஆண்ட்ரியா நிறைய இடங்களில் ஜெனிலியா மாதிரி நடிக்க ட்ரை பண்ணிருக்காங்க,அவங்களுக்கு இந்த மாதிரி கேரக்டர் செட்ஆகல ,

சிம்புவும் நயன்தாராவும் மொபைல மாற்றி மாற்றி பேசும் காட்சி ரொம்ப நேரம் வச்சி போர் அடிச்சிட்டாங்க , அந்த சமயத்துல நம்ம ஆடியன்சே அவங்கள கலாயிக்கலாம் என்று நினைக்கும் போது சூரி வந்து அவங்க ரெண்டு பேரையும் கலாய்ச்சி அவர் கை தட்டு வாங்கிட்டு போயிடுறாரு .

இயக்குனர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் தரனும் ஆசைபடுறேன் , அதாவுது  இந்த IT கம்பெனில ஹீரோ வேலை செய்கிறா மாதிரி  காட்டும் போது  tie கட்டிக்கிட்டு வராமதிரியோ , ஆப்பிள் சிஸ்டம்ல  வேலை செய்கிறா மாதிரி காட்டாதீங்க ,ஏன்னா எல்லா கம்பெனிலயும் எல்லோரும் ஆப்பிள் சிஸ்டம்ல வேலை செய்றது இல்லை, எல்லா கம்பெனிலயும் எல்லோரும் tie கட்டிக்கிட்டு போகறதும் இல்லை.


 மொத்தத்தில் சிம்புவுக்கு இது நம்ம ஆளு இல்லை ,கெளதம் & ஏ ஆர் ரகுமான் அருளால் அச்சம்எனபது மடமையட வெற்றி பெற வாழ்த்துகள் .

இப்படிக்கு
சினிகிறுக்கன் 

#cinikirukkan  #ithu#namma#aalu
#INAFriday, 13 May 2016

KO2- கோ2

சினிகிறுக்கனின் தேர்தல் வணக்கம்..
இப்படி ஒரு படம் அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் வெளியிட்டது செம்ம தைரியம் , ஆளுங்கட்சி  எதிர் கட்சி , இந்த தலைவர், அந்த  தலைவர், எந்த தலைவர்ன்னு பாரபட்சம் பார்க்காம வசனகளில் ஒரு சாதாரண குடிமகனின் மனநிலையை பிரதிபலிக்கும் படம் இது.

கதை:
ஒருவரை பழிவாங்குவதர்க்காக , முதல்வரை கடத்தி அதன் மூலம் அந்த நபரின் முகத்திரையை கிழிப்பது தான் கதை, இதில் பேச்சுவார்த்தை நடக்கும் காட்சியில் வசனகளில் மூலம் இன்றைய அரசியலின் அவலங்களை தோலுறித்து காட்டுவது தான் படத்தின் உச்சம்.

திரைகதை:
மற்ற படம் மாதிரி தேவை இல்லாத காட்சிகள் வைத்து பிறகு கதைக்குள்ள போகாம , நேரடியா கதைக்குள்ள போகுறா மாதிரி காட்சி அமைப்பு வச்சிட்டாரு, ஆனால் பாலசரவணன் யார் பாபிசிம்மாஹா அவர் என்ன எப்படி சந்திசாங்கன்னு ஒரு பிளாஷ் பேக்  போகும் போது, ஒரு டூயட் பாட்டு எல்லாம் வச்சி , ஐயோ தெரியாம இந்த படத்துல வந்து மாட்டிகிட்டோமோ ரொம்ப தோயிதோன்னு ஒரு எண்ணம் வந்திச்சி ஆனால் கடைசியா பாலசரவணன் அந்த காட்சிக்கு ஒரு காரணம் சொல்லும் போது சரி பொழைச்சி போங்கயா, அந்த காட்சிகள் எல்லாம் சரின்னு சொல்ல தோணுது, மேலும் தேவை இல்லாத பாட்டு காதல் சண்டை எல்லாம் வச்சி படத்தின் வேகத்தை நிறுத்தாமல், அந்த கதைக்கு என்ன தேவையோ அதை சரியாய் 2 மணி நேரத்துக்கு கொடுத்து இருக்கிறார் , படத்தில் தேடும் வேட்டை மற்றும் கிளைமாக்ஸ்ல் தப்பிப்பது போன்ற சில லாஜிக் மிஸ்ஸிங் சீன்களும் உண்டு,ஆனால் இது எல்லாம் மறக்கடிப்பது போல மற்ற காட்சிகள் இருக்கு, அதனால இது ஒரு பெரிய விஷயமாக தெரியல .

வசனம் :
படத்தின் முக்கிய ஹீரோ வசனம்தாங்க, வரி பற்றிய வசனமாக இருந்தாலும் சரி, டாஸ்மாக் பற்றி பேசுவது, கள்ள ரூபா நோட் பற்றி பேசுவதும் சரி,அரசாங்க வேலை , விவசாயம் , பள்ளி கல்வி முறை என்று அனைத்து பற்றியும், மேலும் அரசியல்வாதிகள் மேல மட்டும் குற்றம் சொல்லாமல், பிரகாஷ்ராஜ் மக்கள் செய்யும் குற்றங்களையும் குறிப்பிட்டு  சொல்லும் வசனமும் நெற்றியில் துப்பாக்கியில் சுட்டது போல் உள்ளது , மேலும் வசனகள் மூலம் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு பாடமே எடுத்து விட்டார் இயக்குனர். தியேட்டர்ல கைதட்டு விசில் கிழிது.

இசை:
லியோன் ஜேம்ஸ் சரியாக படத்திற்கு என்ன தேவையோ அதை ஓவர் டோஸ் பண்ணாம கொடுத்து இருக்கார் 

காதாபாத்திரங்கள் :
பாபி இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்பு உண்டு, ஆனால் நிறைய இடங்களில் ரஜினி மாதிரி body language பண்ணி இருக்கார் 
பிரகாஷ் ராஜ் இந்த மாதிரி அரசியல்வாதி காதாபாத்திரம் என்றால் அல்லவா சாப்பிடுவது போல் , அதை சரியாய் செஞ்சிட்டாரு 
நிக்கி கல்ராணி மற்ற படம் ஹீரோயின் போல சும்மா ஊறுக்காய் மாதிரி பயன்படுத்தாம , கதைக்கு எந்த அளவுக்கு தேவையோ சரியாக பயன்படுதிருக்காங்க 
பாலசரவணன் டார்லிங், திருடன் போலீஸ்க்கு பிறகு ஒரு நல்ல scope உள்ள படம் , அவரை விசாரிக்கும் போது அவர் செய்யும் சின்ன சின்ன காமெடி நல்லா இருக்கு.
இளவரசன் ஒரு அமைச்சராக வருகிறார்  அவரை உற்று பார்த்தீங்கனா   இப்போ இருக்கும் ஒரு முக்கிய அரசியல்வாதி போல தெரிவாரு , அவரோடைய காது ஓரத்தில் இருக்கும் நிரை  முடி , நெற்றியில் இருக்கும் சில மத அடையாளங்கள், மேலும் சட்டை பையில் இருக்கும் தலைவர் படம் , ஐயோ வேண்டாம் சாமி, நான் அதை பற்றி சொல்லல ஆளைவிடுங்கடா சாமி , நமக்கு எதுக்கு வம்பு நீங்களே போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க.
ஜான்விஜய் , கருணாகரன் எல்லோரும் அளவா நல்லா பண்ணி இருக்காங்க. ஹைலைட் காட்சிகள் :
தலைவர்காக , மண் சோறு சாபிடுவது, அங்கபிரதட்சணம் பண்ணுவது,மேலும் உளறும் அரசியல்வாதி , இப்படி நிறைய இன்றைய அரசியல் காட்சிகளை திரையில் காட்டி இருக்காங்க, இதை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் , நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு சபாஷ் 

மொத்தத்தில் : இது தேர்தலுக்கு முன்னதாக வந்த படம் அல்ல பாடம் , ஓட்டு போடுவதற்கு முன்னாடி இந்த படத்தை பார்த்துட்டு போயிட்டு ஓட்டு போடுங்க 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் / அரசியல்கிறுக்கன் 

#cinikirukkan  #KO2 


Friday, 6 May 2016

24 - காலம் என் காதலியே

அஞ்சான் மாஸ்ன்னு கொஞ்சம் சறுக்களுக்கு பிறகு இந்த படம் வந்து 24 மணி நேரத்துல பாக்ஸ் ஆபீஸ் அடிக்கணும் மற்றும் மக்கள் மனசுல நிலைத்து நிக்கணும்  நினைச்சி இந்த படத்தை நடித்து தயாரித்து இருக்கிறார் சூர்யா,ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் அடிக்குமா அடிக்காதா ? வாங்க பார்க்கலாம்

படத்தோட பிளஸ் சில விஷயங்கள் சொல்லுவதற்கு முன்னாடி பல நெகடிவ் விஷயங்கள் சொல்லணும், படத்தோட கதை நடப்பது 2016 ஆனா படத்தோட கதை  ஆரம்பிப்பது 26 ஆண்டுக்கு முன்னாடி அதாவது  1990ல் கதை ஆரம்பிக்கிறது,ஆனா அந்த காட்சியில் வரும் ஸ்ட்ரீம் என்ஜின் train , இரண்டு சூர்யாவும் போட்டு இருக்கும் ஆடைகள் பார்த்தா 1990 மாதிரி இல்ல,ஏதோ 1940-50 மாதிரி அல்லது ஒரு period பிலிம் போல காட்சி அமைப்பு இருக்கு, அந்த காட்சிகளில் போட்டு இருக்கும் செட் அப்படி தான் தெரியுது 
டைம் மிஷின் படம் சொன்னதால படத்தோட கதை திரைகதை  பார்வையாளர்களுக்கு டைம் மிஷின் பயன்படுத்தாமலே அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ரொம்ப சுலபமா தெரிகிறது, அதனால படம் பார்க்கும் போது  அடுத்து என்னன்னு  ஒரு சுவாரசியம் வரவில்லை.

டைம் மிஷின் படம் என்றால் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்ன்னு தெரியும் ஆனா அந்த சூர்யா & சமந்தா காதல் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது, கிரிக்கெட் ஸ்டேடியம் போயிட்டு வருவது, நான் ஒரு வாட்ச் mechanic, ஒரு ஜெனரல்ன்னு knowledgeன்னு  திரும்ப திரும்ப சொல்லுவது  ரொம்ப கஷ்டமா இருக்கு., இரண்டு பேருக்குள்ள இருக்கும் காதல் அந்த அளவுக்கு chemsitry தெரில.
இரண்டாவுது பாதியில் வரும் குடும்ப கிளை கதைகள் எல்லாம் பார்க்கும் போது "எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை லா ல லான்னு " விக்ரமன் பாட்டு பாடனும் போல தோணுது,

சூர்யா சமந்தாவுக்கு கண் மையை பொட்டா வைக்கிறாரு ஆனா அடுத்த வரும் சில shotகளில் சமந்தா நெற்றியில் sitcker பொட்டு இருக்கு, இது எல்லாம் கவனித்து இருக்கலாமே.

படத்தோட பிளஸ் முக்கியமா VFX அந்த வாட்ச் கட்டும் போது கிராபிக்ஸ்ல் வேலை செய்கிறா மாதிரி காட்டுவது, முதல் காட்சியில் இருக்கும் பரபரப்பு எல்லாம் நல்லா இருக்கு, அந்த lab செட், அந்த ஆபீஸ்ல் வரும் சண்டை காட்சி நல்லா இருக்கு,ஒரு மழை , மழையெல்லாம் பாதியில் நிற்பது போல ஒருசீன் ,தியேட்டர்ல நிறைய பேரு கை தட்டுறாங்க ,

இசை ஏ ஆர் ஆர் , காலம் என் காதலியே பாட்டு எனக்கு பிடிச்சி இருக்கு ஆனா மற்ற பாட்டு ? அவரோடே பாடல் BGM எல்லாம் வேற லெவல் இருக்கும் ஆனா எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ஆர், அவரோட படங்களில் நிச்சயமா ஒரு இடத்திலாவுது வாவ்ன்னு சொல்லுறா மாதிரி BGM இருக்கும்,
இந்த படத்தில அவர்தானா இல்லாட்டி அவரோட assistant BGM, பாட்டு எல்லாம் போட சொல்லிட்டாரோ தோணுது.மொத்தத்தில் 24 டைம் மஷின் கடிகாரத்தை டைரக்டர் இன்னும் கொஞ்சம் advanceah, fastah வச்சி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.

இப்படிக்கு
சினி கிறுக்கன்

#24 #cinekirukkan