Friday, 31 March 2017

Dora - டோரா

செம்ம மாஸ் , செம்ம கெத்துன்னு  செம்ம ஹீரோயிசம்ன்னு ஒரு ஹீரோக்கு தான் நாம் சொல்லுவோம் , அப்படி இல்லாம ஒரு ஹீரோயின்க்கு  முதல் முறையா சொல்லுறோம் , அதுவும் நயன்தாரா ஓப்பனிங் சீன் , ஒரு வில்லனை அழிக்கிற சீன் , ஸ்டைல் ஆகா ஒரு கொலைக்கு அப்புறம் phone எல்லாம் தூக்கி போட்டு வரும் போதும் சரி  ,இப்படி ஒரு ஹீரோ என்னவெல்லாம் பண்ணுவாரோ ,அதுபோல இதில்  வரும் காட்சிகள் போது தியேட்டர்ல செம்ம வரவேற்பு , செம்ம விசில் செம்ம கைத்தட்டு, பக்கா மாஸ் அதே நேரத்தில அதுக்கு சரியா மாஸ் bgm  வேற கொடுத்து இருக்கார் மியூசிக் டைரக்டர் 

படத்தின் கதை என்ன? முதல் பாதி வரை ஒரு காட்சி கூட படத்தின் கதைக்குள்ள போகல , இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல வராதா பேய் கதை, ஆனா வழக்கமான பிளாஷ் பேக் அதுக்கு பழிவாங்க வரும் பேய் கதை தான், ஆனால் அது பேய் எதுல வருது ஏன் வருதுன்னு படம் பார்த்துக்கோங்க . படத்தின் இரண்டாவுது பாதி குழந்தைகள் படம் போல இருக்கு ஆனா குழந்தைகள் பார்ப்பது போல இல்ல , , ஏன்னா படத்துக்கு A certificate கொடுத்து இருக்காங்க .

தம்பி ராமையா படம் full ஆகா வரார் , ஆனா ஒன்னும் ரசிக்கிறா மாதிரி இல்ல , காமெடியாக நினைச்சி அவரும் , நயனும் பண்ண ஒரு  காட்சி கூட காமெடியாக இல்ல , ஆனா நயனின் நடிப்பு கொடுத்த 120 ரூபாய் சரியாக போச்சி . ஒரு ஸ்டேஷன் சீன்ல  அந்நியன் விக்ரமாக கொஞ்சம் , வேதாளம் கிளைமாக்ஸ் காட்சி அஜித் கொஞ்சம் போல, நடிப்புல லேடி கமலாக , மாஸில் லேடி ரஜினியாக இப்படி ஒரு கலவையா  கலக்கி screen ல வராங்க , இது போல இன்னும் சில படங்கள் அதுவும் நல்ல ஆழ்ந்த கதை உள்ள படம் பண்ணா நிச்சயமா ஹீரோவே இல்லாத படங்கள் வரும் trend செட் ஆகும்.

படத்தின் ஒரு கார் சேசிங் காட்சிகள் செம்ம மாஸ்ஆகா  ட்ரை பண்ணியிருக்காங்க,  ஆனா அது எனக்கு செம்ம காமெடியாக செம்ம சிரிப்பு தான் வந்துச்சி, அதுலயும் நயன்தாரா அவங்க அப்பாவை கண்டுபிடிக்க அவரோட பெட்ஷீட்டை வச்சி கண்டுபிடிக்க முயலும் காட்சி செம்ம ஐடியா கை தட்ட வேண்டிய சீன்  , ஆனா காமெடியின் உச்சக்கட்டம், எனக்கு அப்படி சிரிப்பு வந்துச்சி.

அப்படி என்ன வடிவத்தில் தான் பேய் வருதுன்னு கேக்குறீங்களா ? நாம் டிவில பேய் வந்து பார்த்து இருக்கோம் , செத்து போய் ஈஆகா வந்த படத்தையும் பார்த்து இருக்கோம் , ஆனா இது  bow bow + டர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்ம்ம்ம்ம்ம்ம்ம்  தான் இந்த டோர்ர்ர்ர்ரா , புரிஞ்சா பார்த்துக்கோ , முடிஞ்சா பார்த்து பொழைச்சிகோ .

மொத்தத்தில் இந்த டோரா முதல் பாதி ரொம்ப போரா, இரண்டாவது பாதி கொஞ்சம் ஜோரா , கடைசியில் கொஞ்சம் டாரரா வரும்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்  

Sunday, 26 March 2017

Kadugu - கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்லுவாங்க , மேலும் பல reviewல் இது தான் சொல்லி இருப்பாங்க, அதனால நான் அப்படி சொல்ல ,  ஆனா வித்தியாசமா சொல்லனும்னா இந்த கடுகு ஒழுகா பொரிந்து இருக்கா இல்லையா பார்ப்போம் வாங்க  .

கெட்டவங்களை விட மோசமானவங்க , தப்பு நடக்கும் போது  தடுக்காத நல்லவங்க தான் , இது ஒரு வரி தான் இந்த படத்தின் கதை , நிச்சயமா இது ஒரு வித்தியாசமான கருத்து , இந்த கருத்தை  சொல்லுகிறோம்ன்னு ரொம்ப bore அடிக்கலாமலும், அதே நேரத்தில் commercial கலவைகளை அதிகமாக கலக்காமலும் , சரியான அளவுக்கு கலந்து மக்களுக்கு பிடிக்கிறா மாதிரி கொடுத்து இருக்காரு டைரக்டர் . மேலும் இந்த படத்தை பார்க்க போகணுமா ஒரு சந்தேகம் இருந்துச்சி , அது ஏன்னா கோலி சோடா போல செம்ம படம் கொடுத்த விஜய்மில்டன்  , அந்த எதிர்பார்ப்புல 10 எண்றதுக்குள்ள போயிட்டு நாம் மொக்க வாங்கினதால , இந்த படத்துக்கு போலாமா வேண்டாமா ஒரு சந்தேகம் இருந்துச்சி அதுவும் ராஜ்குமாரன் எல்லாம் ஹீரோவா ? அப்படின்னு ஒரு கேள்வி வேற மனசுக்குள்ள , ஆனா அது எல்லாத்தையும் தவிடு பொடி ஆகிடுச்சி இந்த சிறிய கடுகு .

இந்த படத்தின் பெரிய ப்ளஸ் கேரக்டர் வடிவமைப்பு அதுக்கேற்ற நடிகர்கள் , ராஜகுமாரன் , அவர் நண்பனா வரும் அனிருத் , பரத் , அவர் வீட்டுல இருக்கும் கிழவி , போலீஸாக நடித்து இருக்கும் டைரக்டர் வெங்கடேஷ் , டீச்சராக வரும் ராதிகா , இதுல ராஜ்குமார் கேரக்டர் அருமை , அவர் இதுக்கு முன்னாடி நடிச்ச படங்களை செம்ம கலாய் கலாச்சி இருக்கோம் அதுவும் அவரோட தோற்றத்தை வச்சே , ஆனால் இந்த படத்தில் பார்த்த சத்தியமா  அவரை தவிர வேற யாரும் அந்த கேரக்டர்க்கு இவ்வளவு justification கொடுத்து இருக்க முடியாது , அந்த innocence , அவர் பேசும் விதம் , அந்த கேரக்டர் உள்ளுக்குள்ள இருக்கும் நல்ல மனசு வெளிப்படும் இடம் அதை கோபமாகவும் , தன்னால் கையாலாகாத்தனத்தை விரக்கதையாகவும் நாமளும் அந்த கேரக்டர் உடன் ஒன்ற வச்சிட்டாரு , அப்புறம் பரத், எனக்கு தெரிஞ்சி இது அவரோட சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல படம் , குற்றம் கடிதல் ராதிகா இதுலயும் டீச்சர் ரோல். அநேகமா மேலும் சில படங்கள் தமிழ் சினிமா டைரக்டர்கள் உங்களை டீச்சர் ஆகா தான் நடிக்க கூப்பிடுவாங்க போல, மற்ற நடிகைகள் போல இல்லாமல் இது போல நல்ல வித்தியாசமா உங்களுக்கு படத்தில் சமபங்கு உள்ள படமா நடிங்க .ஏம்பா யாருப்பா அந்த பாட்டி போலீஸ்காரங்களை பார்த்து வாட்ச்மேன் சொல்லிட்டு மேலும் பல இடங்களில் சாப்பாடை வச்சிக்கிட்டு அலப்பறை பண்ணுவது செம்ம .

படத்தில நிறைய காட்சிகளும் , வசனங்களும்  ரொம்ப ரசிக்கும்படி இருக்கு , ராஜ்குமார் facebookல் chat செய்யும் காட்சி  ரொம்ப அருமை , அவரோட நண்பன் wifi பத்தி சொல்லும் போது , அப்பாவியாக யாரோட wife connection ன்னு கேக்கும் போதும் சரி ,trainல்  இந்த FB, twitter வந்ததால தான் பல பேரு எழுத்தாளராகவும் , கவிஞராகி இருக்காங்க இன்றைய  FB, twitter நிலையை பற்றி சொல்லும் போதும் சரி , மேலும் சன்னி லியோனை  வச்சி சமுகத்திற்கு ஒரு சாட்டை அடி வசனம் ஒன்னு வரும் அது  ultimate , , இப்படி பல இடங்களில் சாதாரணமா அப்பாவியாக அவர் சொல்லும் வசனங்கள் மக்கள் கிட்ட கைதட்டு வாங்குகிறார் . அதுபோல டைரக்டர் வெங்கிடேஷ் சொல்லும் வசனம் , தனி ஒருவன் ஒழுக்கமா இருக்கணும் நினைச்சா கூட இந்த சிஸ்டம் விட்டு வைக்க மாட்டேங்குது, அப்புறம் படத்தின் ஆரம்பத்தில் குடியை பற்றி சொல்லும் வசனத்தில் ஜட்டியை உதாரணமா வச்சி சொல்லும் வசனம் சூப்பரோ சூப்பர் , இப்படி பல இடங்களில் வசனங்கள் கைதட்ட வைக்குது .அநேகமா  வசனத்துக்காக பல விருதுகளில் இந்த படம் nominate ஆகும் .


படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்கள் screenல்  directors தான் வராங்க , டைரக்டர் பாலாஜி சக்திவேல் , டைரக்டர் ராஜகுமாரன்(ஹீரோவாக) , டைரக்டர் வெங்கடேஷ் , டைரக்டர் ஸ்.ஸ். ஸ்டான்லி, அதுவும் படத்தின் முதல் காட்சி ஒரே டேக் .

படத்தில் இடைவேளையில் ஏதோ ஒரு விபரீதம் நடக்க போகுது என்று தெரிஞ்சாலும் , அது இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவில்லை , அது எதுன்னு கேட்கறீங்களா ? அதை படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க ,

படத்தின் குறைன்னு சொல்லனும்னா அது இரண்டாவுது பாதி ஆரம்பித்து ரொம்ப நேரம் கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது போல ஒரு உணர்வு , ஏன்னா இரண்டாவது பாதியில் ரொம்ப நேரம் ஒரு ஒரு கேரக்டர் எப்படி feel பண்ணறாங்கன்னு காட்டுறாங்க , படம் அடுத்தகட்டதுக்கு போகும் காட்சி அமைய சற்று நேரம் ஆகுது , டைரக்டர் வெங்கடேஷ் கதையை விட்டு போன பிறகு தான் படம் சூடு பிடிக்குது .நல்லவேளை படத்தில் தேவையில்லாத பாட்டு எல்லாம் வச்சி மொக்கை போடல .

டைரக்டர் விஜய்மில்டனுக்கு வேஷ்டி அவிழ்க்கும் காட்சின்னா ரொம்ப பிடிக்கும் போல , கோலி சோடாவிலும் வரும் , இதுலயும் வருது ,மேலும் கோலி சோடா மியூசிக் டைரக்டர் என்பதால் , அந்த படத்தில் முடியும் போது வரும் அதே bgm இதுலயும் வருது , ஒரு வேளை அவருக்கு ஹிட் சென்டிமென்ட்டோ ?

எப்போதும் சமையலில் கடுகு தான் முதலில் தாளிக்க போடுவாங்க அது போல , ஒரு நல்ல படம் உருவாக மாநகரம் , கடுகு போல படங்கள் ஒரு முதல் உதாரணமாக இருக்கட்டும் .

மொத்தத்தில் இந்த கடுகு நல்லாவே பொரிந்து இருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Friday, 24 March 2017

Managaram - மாநகரம்

இரண்டு வாரங்களா வேறு சில வேலைகளால் எந்த படமும் பார்க்கல, அதனால இன்னைக்கு தான்  இந்த படம் பார்க்க முடிஞ்சிது ,இந்த படத்தை பார்த்து அதை பற்றி எழுதுவது ரொம்ப லேட் தான்,  இருந்தாலும் எழுதுகிறேன் , ஏன்னா போன வருஷம் இப்படி சில நல்ல படங்கள் பார்த்து எழுதாம விட்டு இருக்கேன் , மேலும் இந்த படத்தை பற்றி ஏன் எழுதவில்லைன்னு ஒரு நண்பன்  கேட்டு இருந்தார் , மேலும் இந்த படத்தை பார்த்து கண்டிப்பா நான் எழுத வேண்டும்ன்னு அருண் என்னும் என் நண்பர் கேட்டு இருந்தார் .அதனால லேட்டாக பார்த்தாலும் பரவாயில்லை என்று இப்போ எழுதுகிறேன் .

மாநகரம் இந்த படத்தின் கதை நடப்பது நம்ம சென்னை மாநகரம் , படம் பெயர் போடுவதுற்கு முன்னாடியே இந்த படத்தில் யார் யார் வருவாங்க எப்படிபட்டவங்க , என்னன்னு சரியாக  தெளிவா ஒரு ஸ்கெட்ச் போட்டு மக்கள் மனசுல பதிகிற அளவுக்கு அழகா படத்தை open பண்ணிட்டாரு டைரக்டர் , படத்தின் டைட்டில் கூட நல்ல வித்தியாசமா அப்படியே ட்ராவல் பண்ணுவது அருமை .

படத்தின் பிளஸ் பாயிண்ட் ஒரு ஒரு கேரக்டரும் வேஸ்ட் பண்ணாமல் அதே நேரத்தில்   அவங்களை டம்மி ஆக்காமல், அதே நேரத்தில் ஹீரோ கேரக்டர் என்பதால் ரொம்ப தூக்கி வைக்காமலும் அளவா பயன்படுத்தி பாக்கறவங்க மனசுல பதியவைப்பது சூப்பர் , ஹீரோ ஸ்ரீ ,சந்தீப்  மேலும் மற்ற கேரக்டர் முனிஸ்காத் , சார்லி , குழந்தையா கடத்துகிற கும்பல் ,பணக்கார வில்லனாக வரும் மதுசூதனன் , போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஸ்ரீக்கு ஹெல்ப் பண்ணும் கான்ஸ்டபிள், ஸ்ரீயோட நண்பன் கார்த்திக் யோகி  இப்படின்னு எல்லா கேரக்டர் மனசுல நிக்குது .

படம் வேற ஒரு நாளில் நடக்குது , பாதி படம் இரவில் நடக்குது வேற ,படத்தின் கலர் டோன், மேலும்   ஸ்ரீ ஹீரோ வேற,  அதனால என்னவோ எனக்கு எல்லாம் பார்க்கும் போது எனக்கு  கொஞ்சம் ஓநாயும் ஆட்டு குட்டியும் படத்துக்கு வந்துடோமோன்னு   தோணுச்சு ,

படத்தில் ஒரு ஒரு கேரக்டர் தனி தனியா காட்டி அவங்களை ஒரு கட்டத்துக்குள் ஒருவரை ஒருவர் ஒரு கதைக்குள் சந்திக்க வச்சி இருக்கார் டைரக்டர் , மேலும் அதே நேரத்தில் குழப்பாமல் தெளிவா கொடுத்து இருக்கார் .

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நல்லா பண்ணி இருக்காங்க , பைக்ல் போகும் போது ஸ்ரீ பார்க்கும் காட்சிகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஓத்தான்னு சொல்லி திட்டிப்பது , ஏன் சின்ன பசங்கள் கூட அப்படி திட்டிப்பது என்று நம் மாநகரத்தின் உண்மையான முகத்தை காட்டி இருப்பது செம்ம .அதை ஆதங்கமாக சார்லி கிட்ட சொல்லுவது சூப்பர் , இப்படி பல காட்சிகள் சொல்லலாம் , குறிப்பா முனீஸ்காந்த் படத்தின் மிக பெரிய ப்ளஸ் , அவர் phone போட்டு காசு கேட்க்கும் சீன் படத்தின் உச்ச கட்ட ultimate , இந்தளவுக்கு ஒரு சீரியஸான படத்தில் , கதை ஓட்டத்தோடு முனீஸ்காந்த் அவரோட face expression  வச்சி காமெடி செய்த்ததுக்கு  ஒரு பெரிய கைத்தட்டு . இவ்வளவு ஏன் அந்த சின்ன பையன் கூட நல்லா பண்ணியிருக்கான் , குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் சந்தீப் மற்றும் ரெஜினா பேசும் போது மயக்கத்தில் கண்ணை சொருகி  நின்னு கொண்டு  நடிக்கும் அந்த சின்ன பையனுக்கு ஒரு கைத்தட்டு .

படத்தின் ஒரு இடத்தில பொறுமையா இருந்த ஸ்ரீ  , வீரம் கொண்டு அந்த அடி ஆட்களை அடிச்சி நொறுக்கி முடிச்சு நிக்கும் போது, அவருக்கு பின்னாடி "கதம் கதம் " படத்தோட போஸ்டர் ஒட்டி இருக்கும் , அது டைரக்டர் தெரிஞ்சி அங்க வச்சாரா இல்ல தெரியமா இருந்த அந்த போஸ்டர் யூஸ் பண்ணிகிட்டாரா ? ஒரு வேளை தெரிஞ்சு வச்சி இருந்தா இது தான் டைரக்டர் touch ah ?

படத்தின் இன்னொரு ப்ளஸ் வசனங்கள் அதுவும் சென்னையை பற்றி வரும் வசனங்கள் எல்லாம் நான் கைதட்டி ரசிச்சேன் , குறிப்பா சார்லி சொல்லும் " இந்த ஊரை திட்டுவாங்களே தவிர ஊரை விட்டு போக மாட்டாங்க " இந்த வசனத்தை  கேட்கும் போது , என் நண்பரகள் சிலர் தான் ஞாபகம் வந்துச்சி இப்படி ஊரை விட்டு இங்க வந்து சென்னை இப்படி திட்டுவாங்க , ஊரு சரி இல்ல , கிளைமேட் சரி இல்ல, குப்பையா இருக்குன்னு சொல்லுவாங்க , அப்போ அவங்கள பார்த்து நான் கேட்டு இருக்கிறேன் அப்புறம் என்ன _______ க்கு இங்க இருக்கன்னு ?
அப்புறம் இன்னொரு வசனம் " ஒரு ஒருத்தரும் ,ஒரு ஒரு ஊர்ல இருந்து வந்தவங்க , மனிதர்கள் பண்ணும் தப்புக்கு  ஊரை குறை சொல்லாதீங்க "  அப்புறம் " நீங்க ஒருத்தருக்கு பண்ணா தான் உங்களுக்கு ஒருத்தன் வந்து பண்ணுவான் " இப்படி பல சென்னைக்கு சப்போர்ட்டாக வரும் வசனங்கள் என்னை புல்லரிக்க  வச்சது , சென்னைன்னு இல்லங்க உங்களுக்கு சோறு போடும் ஊரு எந்த ஊராக இருந்தாலும் சரி பழி சொல்லாதீங்க(இது என்னோட கருத்து)

படத்தில் இசை , எடிட்டிங் எல்லாம் குறை சொல்லும் படி இல்லை , படம் நல்லா tight ஆகா போகுது எங்கேயும் bore அடிக்கல , பாட்டும் படத்தோட போவதால் படத்தின் வேகத்தை குறைக்கவில்லை .படம் முடியும் போது தான் ,அட யார் பேரும் படத்தில் வரலன்னு தெரியவந்தது .

மொத்தத்தில் மாநகரம் மனசில் நிற்கும்  நகரம்.

இப்படி
சினி கிறுக்கன் .

Saturday, 4 March 2017

Kuttram 23 - குற்றம் 23

ஈரம் , வல்லினம் , ஆறாவது சினம் இப்படி அறிவழகன் படம்ன்னா நிச்சயமா ஒரு தரமா அதே நேரத்தில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ஒரு நம்பிக்கையோட போனேன்  , அந்த நம்பிக்கை வீண் போகவில்லை அதுவும் ராஜேஷ் குமார் கதை வேற, அப்போ  சொல்ல வேண்டியது இல்ல, நிச்சயமா நல்லா தான் இருக்கும்ன்னு போனேன் .ராஜேஷ் குமார் கதை எல்லாம் படிச்சது இல்லை மத்தவங்க சொல்லி கேட்டு இருக்கேன்

படம் ஆரம்பிக்கும் போதே அதன் டைட்டில் backgroundல் போகும் காட்சி அமைப்பு வச்சே இதன் கதை (கரு ) எது சம்பந்தபட்டது என்று தெரியுது , மேலும் அருண்விஜயோட  அவங்க குடும்பம் பற்றி காட்சி வரும் போது ,அது இன்னும் உறுதிபடுத்துடுச்சி , ஆனால் அது எதனால்? யாரால்? எப்படி நடக்குதுன்னு சொல்லமால், அதன் கதை(கரு) முடிச்சியை கடைசி வரை கொண்டு போவது அருமை .

படத்தின் பிடிச்ச விஷயங்கள் என்னனா படம் பார்க்க பிரெஷ் பீலிங் இருக்கு , படம் ஆரம்பத்தில் கதைக்குள்ள சீக்கிரம் போகுது , கொஞ்சம் கொஞ்சம் காதல் அது இது இருந்தாலும் அது படத்திற்கு பெரிய தடையா தெரியல , அருண்விஜய் ஹீரோயினை காமிஷினர் ஆபீஸ்ல detail ஆகா விசாரிப்பது நல்ல இருந்துச்சி , அருண்விஜய் ஒரு அப்பார்ட்மெண்ட்ஸ்ல் சண்டை போடும் காட்சி நல்லா இருக்கு, மஞ்சிமா நம்பியார் அளவான தேவையான ரோல் பண்ணி இருக்காங்க , இவங்கள எங்கயோ கொஞ்சம் தெரிஞ்சா மாதிரி இருக்கு ஆனா புதுசா இருக்காங்களே நினைச்சேன், கூகுளை தட்டின அப்பறம் தான் தெரியுது சாட்டை  படத்தில வந்தவங்க தான் இவங்க,  அடேடேய் ஆச்சரியக்குறி !!..தம்பிராமையா லைட் ஆகா சிரிக்க வைக்க ட்ரை பண்ணாரு  ஆனா அந்த அளவுக்கு எடுபடல , கடைசியா அரவிந்த் ஆகாஷ் விசாரிக்கும் சீன ல நல்லா பண்ணி இருந்தார் .

படத்தில் எனக்கு கொஞ்சம் நெருடலாக இருந்தது சில விஷயங்கள் அது என்னனா , முன்னாடி சொன்னது போல படத்தின் கதை(கரு) என்னன்னு தெரிஞ்சாலும் அது யாரால் , எதற்காக செய்றாங்கன்னு தெரியாம வச்சி இருக்கிறது அருமையாக இருந்தாலும், படத்தின் இரண்டாவுது பாதியின் ஆரம்பத்திலே சொல்லி இருந்து அருண்விஜய் , கிருஷ்ணா வம்சி காட்சிகள் இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தா   நல்லா இருந்து இருக்கும் , மேலும் கதையின் த்ரில்லிங் feel இருந்தாலும் அது இன்னும் கொஞ்சம் வேகமா காட்சியம்மைப்புடான் இரண்டாவுது பாதி சொல்லி இருந்தா படம் இன்னும் நல்லா இருந்து இருக்கும் , குற்றம் 23க்கு வம்சி சொல்லும் காரணம் அதுக்கு அவர் செய்யும் செயல்கள் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளும்படியாக  இல்லை , ஒருவேளை  இது நாவல் கதை என்பதால் வம்சி கேரக்டர்  detail ஆகா சொல்ல இந்த படம் பத்தாதுன்னு அதை  கொஞ்சமாக சொன்னதால என்னமோ அது கொஞ்சம் பாதியில விட்டது போல ஒரு உணர்வு

படத்தின் பெயர் பொருத்தம் ரொம்ப அருமையாக பொருந்தியிருக்கு , நாவல் பெயரும் அதே தான் குற்றம் 23 , நான் கூட இந்த 23 என்பது சட்டத்தில் ஒரு  எண் அல்லது அந்த படத்தில் நடக்கும் குற்றத்தின் எண்ணிக்கையோ நினைச்சேன் ஆனா படத்தின் கதைக்கும் விஞானமாகவும் இருக்கு அந்த 23.

மொத்தத்தில்    ஓரளவு குற்றமில்லா குற்றம் 23 இது

இப்படிக்கு
சினி கிறுக்கன்

Friday, 3 March 2017

Baashha - பாட்ஷா


நான் வந்துட்டேன் சொல்லு   திரும்ப வந்துட்டேன் சொல்லு , 22 வருஷதுக்கு  முன்னாடி எப்படி போனேனோ அப்படியே இந்த பாட்ஷா வந்துட்டேன் சொல்லு. ஐயோ இது கபாலி வசனமோ? பரவாயில்லை இந்த படம் டிஜிட்டல் மாற்றம் செய்து வந்து இருக்கு , அதனால நாமும் இப்படி வசனம் சொல்லலாம் தப்பு இல்லை.

இந்த படத்தை பற்றி எல்லாம் review எழுத நான் யார் ? அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படம் , இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்கன்னு என்னோட நண்பர்கள் தூண்டுதலின்பேரில் எழுத போறேன் , ஆனால் இந்த படத்தில் விமர்சனம் செய்யப்போவது இல்லை , இந்த படம் பார்த்த experience தான் ஷேர் பண்ண போறேன் .

சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை என் வாழ்க்கையில சத்யம் தியேட்டர்ல போயிட்டு அதுவும் மெயின் screenல middle rowல , middle சீட்ல  perfect positionல உட்கர்ந்து அதுவும் first day பார்ப்பேன் கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கல , முதல் நாள் என்பதால்  செம்ம விசில் கைத்தட்டு எல்லாம் இருக்கும் எதிர்பாத்தேன் ,ஆனா எதிர்பார்ப்பையும் மீறி  screen கிட்ட பலபேர் போயிட்டு நின்னுகிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு , இன்னும் பல பேரு அந்த காட்சிகளை மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்படி இருந்ததில் நானும் ஒருத்தன் , இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் பார்க்கும் போது, அட  இந்த படம் இப்போ தான் முதல் தடவையா ரிலீஸ் ஆகுதோ என்ற எண்ணம் எனக்கு தோணுச்சு .

இந்த படத்துக்கு வந்த  ஒரு ஒரு தலைமுறை சார்ந்தவங்க எப்படி ரசிச்சாங்க தெரியுமா ? ,  இப்போ இளைஞனாக இருக்கறவங்க , ஆனா  படம் முதல் தடவை வெளிவந்தப்போ பிறக்காதவங்க அல்லது முதல் தடவை வெளிவந்த அப்போ விவரம் தெரியாம பார்த்தவங்க(என்னை போல ) , இப்போ 5-10 வருஷத்திலே பிறந்தவங்க ,ரொம்ப வசயனாவங்க , இப்படி பல தரப்பு மக்களை வரவச்சி இருக்கு இந்த படம் ,என்னதான் டிவி ல பல தடவை பார்த்து இருந்தாலும், ஒரு தியேட்டர்ல கூட்டத்தோடு கூட்டமாக பார்த்து enjoy பண்ணறது செம்மங்க .


இந்த படத்தில் எந்த காட்சியல்லாம் மக்கள் ரசிக்கறாங்க என்பதை என்னால் கவனிக்க முடிச்சது, நீங்கள் ரஜினி வரும் மாஸ் சீன் தான் ரசிப்பாங்க என்று நினைச்சா அது தப்பு ,  ரகுரவரன் காட்டும் முதல் காட்சிக்கு கூட மக்கள் அவரை செம்ம ஆரவாரமாக வரவேற்றாங்க அந்த அளவுக்கு அவரோட கதாபாத்திரம் ஹீரோவுக்கு equalலாக இருந்தது தான் அதுக்கு காரணம் ,
அவ்வளவு எதுக்குங்க ? ஜனகராஜ் ஆட்டோ ஸ்டாண்டில் வரும் காட்சி கூட மக்கள் விசில் அடிச்சி ஜனகராஜை வரவேற்றாங்க  , அது கூட ஏங்க ,அந்த அடியாளாக வரும் சிங்க்கு  கூட மக்கள் கைதட்டுனாங்க , அப்போ தான் எனக்கு சந்தானம் சொல்லுகிற வசனம் ஞாபகம் வந்துச்சி (நீ எல்லாம் ஒரு அடியாளு உனக்கு சிங் recommendation வேற ).  அவ்வளவ்வு  ஏன் opening பாட்டு ஆட்டோகாரன் பாட்டுக்கு தான் ஆடினாங்க பார்த்தா , ரா ரா ராமையா பாட்டுக்கு கூட ஆடுவாங்கன்னு  எதிர்பார்க்கவில்லை  , அடுத்து எது வரும் ,காட்சிக்கு காட்சி , வசனத்துக்கு வசனம் நல்லா  தெரிஞ்சு இருந்தாலும், மக்கள் அதை முதல் தடவை பார்ப்பது போல ரசிச்சாங்க .

சரி புதுசா வந்த பாட்ஷாவில் என்ன பண்ணி இருக்காங்க ? படம் புதுசா பார்க்கிறா மாதிரி என்ன இருக்கு? , சவுண்ட் effects இப்போதைக்கு புது படம் பார்ப்பது போல extra பண்ணி இருக்காங்க , பல இடங்களில் bass தெரியுது , குறிப்பா ரகுவரன் ஜெயிலில் அவரோட அடியாளை பார்ப்பார் அந்த இடத்தில bgm ரொம்ப புதுசா தெரிஞ்சிது , பாடல்களில் நடு நடுவே extra effects இருக்கு , ரொம்ப முக்கியமான விஷயம் படத்தில் வரும் எல்லா ஆட்டோவிலும் , ரஜினியோட ஆட்டோ உட்பட OLA ஸ்டிக்கர் ஒட்டி இருக்கானுங்க , அடப்பாவிங்களா இப்படி ஒரு மார்க்கெட்டிங் ஐடியாவா ? இவனுங்க high tech  ஸ்டிக்கர் பாய்ஸ் போல , ஆனா கொஞ்சம் கூட அது அசிங்கமா தெரியாம நிஜமாகவே ஆட்டோல ஸ்டிக்கர் போட்டது போலவே இருந்துச்சி , முதல் சீனல அதை பார்த்ததும் எனக்கு மட்டும் இல்ல பார்த்த எல்லாருக்கும் செம்ம சிரிப்பு .

இந்த படம் விவரம் தெரிஞ்சி டிவில பார்த்த பிறகு பல கேள்விகள் எனக்கு வந்துச்சி ஆனா அது இன்னிக்கு படம் பார்க்கும் போது தோணல , குறிப்பா பாட்ஷா கேசவ் மும்பையில் ஒரே மாதிரி வயசு உள்ளவங்க போல காட்டினாலும் கேஷாவோட பொண்ணை எப்படி காதலிப்பார் ? அப்போ பாட்ஷாவோட வயசு ஏறவே இல்லையா ? எதிரி ஆன்டனி கூட வயசு ஆகி இருந்தாலும் பாட்ஷா எப்படி வயசுஆகல?  இப்படி சில பல கேள்விகள் இருந்தாலும் படம் பார்க்கும் போது அது கேட்க தோன்றவில்லை .

இன்னைக்கு தான் நான் ஒரு விஷயம் நோட் பண்ணேன் , அநேகமா கீழே போட்டோல இருக்க சீரியல் ஆக்டர் தான் Antonyக்கு குழந்தையாக வரும் பொண்ணு என்று நினைக்கறேன் .
படத்தோட காமெடி வசனங்கள் , பஞ்ச் வசனங்கள் எல்லாம் மக்கள் படத்தோட படம் கூடவே சொல்லுறாங்க அந்த அளவுக்கு இந்த படம் மக்கள் மனசுல பதிஞ்சி இருக்கு , ஏம்பா  ராஜு பாய் , விஷ்வா பாய் , இன்னும் இத்தன்னை வருஷம் கழிச்சி வந்தாலும் இந்த பாட்ஷா பாய் எப்படி இருக்காருன்னு .இவரை பார்த்து கத்துக்கோங்க ,

மொத்தத்தில்  பாட்ஷா நூறு முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போல தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன்