வெள்ளி, 3 மார்ச், 2017

Baashha - பாட்ஷா


நான் வந்துட்டேன் சொல்லு   திரும்ப வந்துட்டேன் சொல்லு , 22 வருஷதுக்கு  முன்னாடி எப்படி போனேனோ அப்படியே இந்த பாட்ஷா வந்துட்டேன் சொல்லு. ஐயோ இது கபாலி வசனமோ? பரவாயில்லை இந்த படம் டிஜிட்டல் மாற்றம் செய்து வந்து இருக்கு , அதனால நாமும் இப்படி வசனம் சொல்லலாம் தப்பு இல்லை.

இந்த படத்தை பற்றி எல்லாம் review எழுத நான் யார் ? அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனா படம் , இருந்தாலும் பரவாயில்லை எழுதுங்கன்னு என்னோட நண்பர்கள் தூண்டுதலின்பேரில் எழுத போறேன் , ஆனால் இந்த படத்தில் விமர்சனம் செய்யப்போவது இல்லை , இந்த படம் பார்த்த experience தான் ஷேர் பண்ண போறேன் .

சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை என் வாழ்க்கையில சத்யம் தியேட்டர்ல போயிட்டு அதுவும் மெயின் screenல middle rowல , middle சீட்ல  perfect positionல உட்கர்ந்து அதுவும் first day பார்ப்பேன் கொஞ்சம் கூட நினைச்சி பார்க்கல , முதல் நாள் என்பதால்  செம்ம விசில் கைத்தட்டு எல்லாம் இருக்கும் எதிர்பாத்தேன் ,ஆனா எதிர்பார்ப்பையும் மீறி  screen கிட்ட பலபேர் போயிட்டு நின்னுகிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டு , இன்னும் பல பேரு அந்த காட்சிகளை மொபைல்ல பதிவு பண்ணிக்கிட்டு இருந்தாங்க அப்படி இருந்ததில் நானும் ஒருத்தன் , இப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் பார்க்கும் போது, அட  இந்த படம் இப்போ தான் முதல் தடவையா ரிலீஸ் ஆகுதோ என்ற எண்ணம் எனக்கு தோணுச்சு .

இந்த படத்துக்கு வந்த  ஒரு ஒரு தலைமுறை சார்ந்தவங்க எப்படி ரசிச்சாங்க தெரியுமா ? ,  இப்போ இளைஞனாக இருக்கறவங்க , ஆனா  படம் முதல் தடவை வெளிவந்தப்போ பிறக்காதவங்க அல்லது முதல் தடவை வெளிவந்த அப்போ விவரம் தெரியாம பார்த்தவங்க(என்னை போல ) , இப்போ 5-10 வருஷத்திலே பிறந்தவங்க ,ரொம்ப வசயனாவங்க , இப்படி பல தரப்பு மக்களை வரவச்சி இருக்கு இந்த படம் ,என்னதான் டிவி ல பல தடவை பார்த்து இருந்தாலும், ஒரு தியேட்டர்ல கூட்டத்தோடு கூட்டமாக பார்த்து enjoy பண்ணறது செம்மங்க .


இந்த படத்தில் எந்த காட்சியல்லாம் மக்கள் ரசிக்கறாங்க என்பதை என்னால் கவனிக்க முடிச்சது, நீங்கள் ரஜினி வரும் மாஸ் சீன் தான் ரசிப்பாங்க என்று நினைச்சா அது தப்பு ,  ரகுரவரன் காட்டும் முதல் காட்சிக்கு கூட மக்கள் அவரை செம்ம ஆரவாரமாக வரவேற்றாங்க அந்த அளவுக்கு அவரோட கதாபாத்திரம் ஹீரோவுக்கு equalலாக இருந்தது தான் அதுக்கு காரணம் ,
அவ்வளவு எதுக்குங்க ? ஜனகராஜ் ஆட்டோ ஸ்டாண்டில் வரும் காட்சி கூட மக்கள் விசில் அடிச்சி ஜனகராஜை வரவேற்றாங்க  , அது கூட ஏங்க ,அந்த அடியாளாக வரும் சிங்க்கு  கூட மக்கள் கைதட்டுனாங்க , அப்போ தான் எனக்கு சந்தானம் சொல்லுகிற வசனம் ஞாபகம் வந்துச்சி (நீ எல்லாம் ஒரு அடியாளு உனக்கு சிங் recommendation வேற ).  அவ்வளவ்வு  ஏன் opening பாட்டு ஆட்டோகாரன் பாட்டுக்கு தான் ஆடினாங்க பார்த்தா , ரா ரா ராமையா பாட்டுக்கு கூட ஆடுவாங்கன்னு  எதிர்பார்க்கவில்லை  , அடுத்து எது வரும் ,காட்சிக்கு காட்சி , வசனத்துக்கு வசனம் நல்லா  தெரிஞ்சு இருந்தாலும், மக்கள் அதை முதல் தடவை பார்ப்பது போல ரசிச்சாங்க .

சரி புதுசா வந்த பாட்ஷாவில் என்ன பண்ணி இருக்காங்க ? படம் புதுசா பார்க்கிறா மாதிரி என்ன இருக்கு? , சவுண்ட் effects இப்போதைக்கு புது படம் பார்ப்பது போல extra பண்ணி இருக்காங்க , பல இடங்களில் bass தெரியுது , குறிப்பா ரகுவரன் ஜெயிலில் அவரோட அடியாளை பார்ப்பார் அந்த இடத்தில bgm ரொம்ப புதுசா தெரிஞ்சிது , பாடல்களில் நடு நடுவே extra effects இருக்கு , ரொம்ப முக்கியமான விஷயம் படத்தில் வரும் எல்லா ஆட்டோவிலும் , ரஜினியோட ஆட்டோ உட்பட OLA ஸ்டிக்கர் ஒட்டி இருக்கானுங்க , அடப்பாவிங்களா இப்படி ஒரு மார்க்கெட்டிங் ஐடியாவா ? இவனுங்க high tech  ஸ்டிக்கர் பாய்ஸ் போல , ஆனா கொஞ்சம் கூட அது அசிங்கமா தெரியாம நிஜமாகவே ஆட்டோல ஸ்டிக்கர் போட்டது போலவே இருந்துச்சி , முதல் சீனல அதை பார்த்ததும் எனக்கு மட்டும் இல்ல பார்த்த எல்லாருக்கும் செம்ம சிரிப்பு .

இந்த படம் விவரம் தெரிஞ்சி டிவில பார்த்த பிறகு பல கேள்விகள் எனக்கு வந்துச்சி ஆனா அது இன்னிக்கு படம் பார்க்கும் போது தோணல , குறிப்பா பாட்ஷா கேசவ் மும்பையில் ஒரே மாதிரி வயசு உள்ளவங்க போல காட்டினாலும் கேஷாவோட பொண்ணை எப்படி காதலிப்பார் ? அப்போ பாட்ஷாவோட வயசு ஏறவே இல்லையா ? எதிரி ஆன்டனி கூட வயசு ஆகி இருந்தாலும் பாட்ஷா எப்படி வயசுஆகல?  இப்படி சில பல கேள்விகள் இருந்தாலும் படம் பார்க்கும் போது அது கேட்க தோன்றவில்லை .

இன்னைக்கு தான் நான் ஒரு விஷயம் நோட் பண்ணேன் , அநேகமா கீழே போட்டோல இருக்க சீரியல் ஆக்டர் தான் Antonyக்கு குழந்தையாக வரும் பொண்ணு என்று நினைக்கறேன் .




படத்தோட காமெடி வசனங்கள் , பஞ்ச் வசனங்கள் எல்லாம் மக்கள் படத்தோட படம் கூடவே சொல்லுறாங்க அந்த அளவுக்கு இந்த படம் மக்கள் மனசுல பதிஞ்சி இருக்கு , ஏம்பா  ராஜு பாய் , விஷ்வா பாய் , இன்னும் இத்தன்னை வருஷம் கழிச்சி வந்தாலும் இந்த பாட்ஷா பாய் எப்படி இருக்காருன்னு .இவரை பார்த்து கத்துக்கோங்க ,

மொத்தத்தில்  பாட்ஷா நூறு முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பது போல தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments