வெள்ளி, 24 மார்ச், 2017

Managaram - மாநகரம்

இரண்டு வாரங்களா வேறு சில வேலைகளால் எந்த படமும் பார்க்கல, அதனால இன்னைக்கு தான்  இந்த படம் பார்க்க முடிஞ்சிது ,இந்த படத்தை பார்த்து அதை பற்றி எழுதுவது ரொம்ப லேட் தான்,  இருந்தாலும் எழுதுகிறேன் , ஏன்னா போன வருஷம் இப்படி சில நல்ல படங்கள் பார்த்து எழுதாம விட்டு இருக்கேன் , மேலும் இந்த படத்தை பற்றி ஏன் எழுதவில்லைன்னு ஒரு நண்பன்  கேட்டு இருந்தார் , மேலும் இந்த படத்தை பார்த்து கண்டிப்பா நான் எழுத வேண்டும்ன்னு அருண் என்னும் என் நண்பர் கேட்டு இருந்தார் .அதனால லேட்டாக பார்த்தாலும் பரவாயில்லை என்று இப்போ எழுதுகிறேன் .

மாநகரம் இந்த படத்தின் கதை நடப்பது நம்ம சென்னை மாநகரம் , படம் பெயர் போடுவதுற்கு முன்னாடியே இந்த படத்தில் யார் யார் வருவாங்க எப்படிபட்டவங்க , என்னன்னு சரியாக  தெளிவா ஒரு ஸ்கெட்ச் போட்டு மக்கள் மனசுல பதிகிற அளவுக்கு அழகா படத்தை open பண்ணிட்டாரு டைரக்டர் , படத்தின் டைட்டில் கூட நல்ல வித்தியாசமா அப்படியே ட்ராவல் பண்ணுவது அருமை .

படத்தின் பிளஸ் பாயிண்ட் ஒரு ஒரு கேரக்டரும் வேஸ்ட் பண்ணாமல் அதே நேரத்தில்   அவங்களை டம்மி ஆக்காமல், அதே நேரத்தில் ஹீரோ கேரக்டர் என்பதால் ரொம்ப தூக்கி வைக்காமலும் அளவா பயன்படுத்தி பாக்கறவங்க மனசுல பதியவைப்பது சூப்பர் , ஹீரோ ஸ்ரீ ,சந்தீப்  மேலும் மற்ற கேரக்டர் முனிஸ்காத் , சார்லி , குழந்தையா கடத்துகிற கும்பல் ,பணக்கார வில்லனாக வரும் மதுசூதனன் , போலீஸ் இன்ஸ்பெக்டர் , ஸ்ரீக்கு ஹெல்ப் பண்ணும் கான்ஸ்டபிள், ஸ்ரீயோட நண்பன் கார்த்திக் யோகி  இப்படின்னு எல்லா கேரக்டர் மனசுல நிக்குது .

படம் வேற ஒரு நாளில் நடக்குது , பாதி படம் இரவில் நடக்குது வேற ,படத்தின் கலர் டோன், மேலும்   ஸ்ரீ ஹீரோ வேற,  அதனால என்னவோ எனக்கு எல்லாம் பார்க்கும் போது எனக்கு  கொஞ்சம் ஓநாயும் ஆட்டு குட்டியும் படத்துக்கு வந்துடோமோன்னு   தோணுச்சு ,

படத்தில் ஒரு ஒரு கேரக்டர் தனி தனியா காட்டி அவங்களை ஒரு கட்டத்துக்குள் ஒருவரை ஒருவர் ஒரு கதைக்குள் சந்திக்க வச்சி இருக்கார் டைரக்டர் , மேலும் அதே நேரத்தில் குழப்பாமல் தெளிவா கொடுத்து இருக்கார் .

படத்தில் சின்ன சின்ன விஷயங்கள் நல்லா பண்ணி இருக்காங்க , பைக்ல் போகும் போது ஸ்ரீ பார்க்கும் காட்சிகள் ஒருத்தருக்கு ஒருத்தர் ஓத்தான்னு சொல்லி திட்டிப்பது , ஏன் சின்ன பசங்கள் கூட அப்படி திட்டிப்பது என்று நம் மாநகரத்தின் உண்மையான முகத்தை காட்டி இருப்பது செம்ம .அதை ஆதங்கமாக சார்லி கிட்ட சொல்லுவது சூப்பர் , இப்படி பல காட்சிகள் சொல்லலாம் , குறிப்பா முனீஸ்காந்த் படத்தின் மிக பெரிய ப்ளஸ் , அவர் phone போட்டு காசு கேட்க்கும் சீன் படத்தின் உச்ச கட்ட ultimate , இந்தளவுக்கு ஒரு சீரியஸான படத்தில் , கதை ஓட்டத்தோடு முனீஸ்காந்த் அவரோட face expression  வச்சி காமெடி செய்த்ததுக்கு  ஒரு பெரிய கைத்தட்டு . இவ்வளவு ஏன் அந்த சின்ன பையன் கூட நல்லா பண்ணியிருக்கான் , குறிப்பாக பஸ் ஸ்டாண்டில் சந்தீப் மற்றும் ரெஜினா பேசும் போது மயக்கத்தில் கண்ணை சொருகி  நின்னு கொண்டு  நடிக்கும் அந்த சின்ன பையனுக்கு ஒரு கைத்தட்டு .

படத்தின் ஒரு இடத்தில பொறுமையா இருந்த ஸ்ரீ  , வீரம் கொண்டு அந்த அடி ஆட்களை அடிச்சி நொறுக்கி முடிச்சு நிக்கும் போது, அவருக்கு பின்னாடி "கதம் கதம் " படத்தோட போஸ்டர் ஒட்டி இருக்கும் , அது டைரக்டர் தெரிஞ்சி அங்க வச்சாரா இல்ல தெரியமா இருந்த அந்த போஸ்டர் யூஸ் பண்ணிகிட்டாரா ? ஒரு வேளை தெரிஞ்சு வச்சி இருந்தா இது தான் டைரக்டர் touch ah ?

படத்தின் இன்னொரு ப்ளஸ் வசனங்கள் அதுவும் சென்னையை பற்றி வரும் வசனங்கள் எல்லாம் நான் கைதட்டி ரசிச்சேன் , குறிப்பா சார்லி சொல்லும் " இந்த ஊரை திட்டுவாங்களே தவிர ஊரை விட்டு போக மாட்டாங்க " இந்த வசனத்தை  கேட்கும் போது , என் நண்பரகள் சிலர் தான் ஞாபகம் வந்துச்சி இப்படி ஊரை விட்டு இங்க வந்து சென்னை இப்படி திட்டுவாங்க , ஊரு சரி இல்ல , கிளைமேட் சரி இல்ல, குப்பையா இருக்குன்னு சொல்லுவாங்க , அப்போ அவங்கள பார்த்து நான் கேட்டு இருக்கிறேன் அப்புறம் என்ன _______ க்கு இங்க இருக்கன்னு ?
அப்புறம் இன்னொரு வசனம் " ஒரு ஒருத்தரும் ,ஒரு ஒரு ஊர்ல இருந்து வந்தவங்க , மனிதர்கள் பண்ணும் தப்புக்கு  ஊரை குறை சொல்லாதீங்க "  அப்புறம் " நீங்க ஒருத்தருக்கு பண்ணா தான் உங்களுக்கு ஒருத்தன் வந்து பண்ணுவான் " இப்படி பல சென்னைக்கு சப்போர்ட்டாக வரும் வசனங்கள் என்னை புல்லரிக்க  வச்சது , சென்னைன்னு இல்லங்க உங்களுக்கு சோறு போடும் ஊரு எந்த ஊராக இருந்தாலும் சரி பழி சொல்லாதீங்க(இது என்னோட கருத்து)

படத்தில் இசை , எடிட்டிங் எல்லாம் குறை சொல்லும் படி இல்லை , படம் நல்லா tight ஆகா போகுது எங்கேயும் bore அடிக்கல , பாட்டும் படத்தோட போவதால் படத்தின் வேகத்தை குறைக்கவில்லை .படம் முடியும் போது தான் ,அட யார் பேரும் படத்தில் வரலன்னு தெரியவந்தது .

மொத்தத்தில் மாநகரம் மனசில் நிற்கும்  நகரம்.

இப்படி
சினி கிறுக்கன் .

1 கருத்து:

  1. Nice review....do avoid using derogatory words!! One place you are putting dash to mean that bad word and in another place you are putting a derogatory word directly!! Be consistent!! -- KP

    பதிலளிநீக்கு

Comments