ஞாயிறு, 26 மார்ச், 2017

Kadugu - கடுகு

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்லுவாங்க , மேலும் பல reviewல் இது தான் சொல்லி இருப்பாங்க, அதனால நான் அப்படி சொல்ல ,  ஆனா வித்தியாசமா சொல்லனும்னா இந்த கடுகு ஒழுகா பொரிந்து இருக்கா இல்லையா பார்ப்போம் வாங்க  .

கெட்டவங்களை விட மோசமானவங்க , தப்பு நடக்கும் போது  தடுக்காத நல்லவங்க தான் , இது ஒரு வரி தான் இந்த படத்தின் கதை , நிச்சயமா இது ஒரு வித்தியாசமான கருத்து , இந்த கருத்தை  சொல்லுகிறோம்ன்னு ரொம்ப bore அடிக்கலாமலும், அதே நேரத்தில் commercial கலவைகளை அதிகமாக கலக்காமலும் , சரியான அளவுக்கு கலந்து மக்களுக்கு பிடிக்கிறா மாதிரி கொடுத்து இருக்காரு டைரக்டர் . மேலும் இந்த படத்தை பார்க்க போகணுமா ஒரு சந்தேகம் இருந்துச்சி , அது ஏன்னா கோலி சோடா போல செம்ம படம் கொடுத்த விஜய்மில்டன்  , அந்த எதிர்பார்ப்புல 10 எண்றதுக்குள்ள போயிட்டு நாம் மொக்க வாங்கினதால , இந்த படத்துக்கு போலாமா வேண்டாமா ஒரு சந்தேகம் இருந்துச்சி அதுவும் ராஜ்குமாரன் எல்லாம் ஹீரோவா ? அப்படின்னு ஒரு கேள்வி வேற மனசுக்குள்ள , ஆனா அது எல்லாத்தையும் தவிடு பொடி ஆகிடுச்சி இந்த சிறிய கடுகு .

இந்த படத்தின் பெரிய ப்ளஸ் கேரக்டர் வடிவமைப்பு அதுக்கேற்ற நடிகர்கள் , ராஜகுமாரன் , அவர் நண்பனா வரும் அனிருத் , பரத் , அவர் வீட்டுல இருக்கும் கிழவி , போலீஸாக நடித்து இருக்கும் டைரக்டர் வெங்கடேஷ் , டீச்சராக வரும் ராதிகா , இதுல ராஜ்குமார் கேரக்டர் அருமை , அவர் இதுக்கு முன்னாடி நடிச்ச படங்களை செம்ம கலாய் கலாச்சி இருக்கோம் அதுவும் அவரோட தோற்றத்தை வச்சே , ஆனால் இந்த படத்தில் பார்த்த சத்தியமா  அவரை தவிர வேற யாரும் அந்த கேரக்டர்க்கு இவ்வளவு justification கொடுத்து இருக்க முடியாது , அந்த innocence , அவர் பேசும் விதம் , அந்த கேரக்டர் உள்ளுக்குள்ள இருக்கும் நல்ல மனசு வெளிப்படும் இடம் அதை கோபமாகவும் , தன்னால் கையாலாகாத்தனத்தை விரக்கதையாகவும் நாமளும் அந்த கேரக்டர் உடன் ஒன்ற வச்சிட்டாரு , அப்புறம் பரத், எனக்கு தெரிஞ்சி இது அவரோட சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல படம் , குற்றம் கடிதல் ராதிகா இதுலயும் டீச்சர் ரோல். அநேகமா மேலும் சில படங்கள் தமிழ் சினிமா டைரக்டர்கள் உங்களை டீச்சர் ஆகா தான் நடிக்க கூப்பிடுவாங்க போல, மற்ற நடிகைகள் போல இல்லாமல் இது போல நல்ல வித்தியாசமா உங்களுக்கு படத்தில் சமபங்கு உள்ள படமா நடிங்க .ஏம்பா யாருப்பா அந்த பாட்டி போலீஸ்காரங்களை பார்த்து வாட்ச்மேன் சொல்லிட்டு மேலும் பல இடங்களில் சாப்பாடை வச்சிக்கிட்டு அலப்பறை பண்ணுவது செம்ம .

படத்தில நிறைய காட்சிகளும் , வசனங்களும்  ரொம்ப ரசிக்கும்படி இருக்கு , ராஜ்குமார் facebookல் chat செய்யும் காட்சி  ரொம்ப அருமை , அவரோட நண்பன் wifi பத்தி சொல்லும் போது , அப்பாவியாக யாரோட wife connection ன்னு கேக்கும் போதும் சரி ,trainல்  இந்த FB, twitter வந்ததால தான் பல பேரு எழுத்தாளராகவும் , கவிஞராகி இருக்காங்க இன்றைய  FB, twitter நிலையை பற்றி சொல்லும் போதும் சரி , மேலும் சன்னி லியோனை  வச்சி சமுகத்திற்கு ஒரு சாட்டை அடி வசனம் ஒன்னு வரும் அது  ultimate , , இப்படி பல இடங்களில் சாதாரணமா அப்பாவியாக அவர் சொல்லும் வசனங்கள் மக்கள் கிட்ட கைதட்டு வாங்குகிறார் . அதுபோல டைரக்டர் வெங்கிடேஷ் சொல்லும் வசனம் , தனி ஒருவன் ஒழுக்கமா இருக்கணும் நினைச்சா கூட இந்த சிஸ்டம் விட்டு வைக்க மாட்டேங்குது, அப்புறம் படத்தின் ஆரம்பத்தில் குடியை பற்றி சொல்லும் வசனத்தில் ஜட்டியை உதாரணமா வச்சி சொல்லும் வசனம் சூப்பரோ சூப்பர் , இப்படி பல இடங்களில் வசனங்கள் கைதட்ட வைக்குது .அநேகமா  வசனத்துக்காக பல விருதுகளில் இந்த படம் nominate ஆகும் .


படம் ஆரம்பிச்ச சில நிமிஷங்கள் screenல்  directors தான் வராங்க , டைரக்டர் பாலாஜி சக்திவேல் , டைரக்டர் ராஜகுமாரன்(ஹீரோவாக) , டைரக்டர் வெங்கடேஷ் , டைரக்டர் ஸ்.ஸ். ஸ்டான்லி, அதுவும் படத்தின் முதல் காட்சி ஒரே டேக் .

படத்தில் இடைவேளையில் ஏதோ ஒரு விபரீதம் நடக்க போகுது என்று தெரிஞ்சாலும் , அது இப்படி நடக்கும்ன்னு நான் எதிர்பார்க்கவில்லை , அது எதுன்னு கேட்கறீங்களா ? அதை படம் பார்த்து தெரிஞ்சிக்கோங்க ,

படத்தின் குறைன்னு சொல்லனும்னா அது இரண்டாவுது பாதி ஆரம்பித்து ரொம்ப நேரம் கதை அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருப்பது போல ஒரு உணர்வு , ஏன்னா இரண்டாவது பாதியில் ரொம்ப நேரம் ஒரு ஒரு கேரக்டர் எப்படி feel பண்ணறாங்கன்னு காட்டுறாங்க , படம் அடுத்தகட்டதுக்கு போகும் காட்சி அமைய சற்று நேரம் ஆகுது , டைரக்டர் வெங்கடேஷ் கதையை விட்டு போன பிறகு தான் படம் சூடு பிடிக்குது .நல்லவேளை படத்தில் தேவையில்லாத பாட்டு எல்லாம் வச்சி மொக்கை போடல .

டைரக்டர் விஜய்மில்டனுக்கு வேஷ்டி அவிழ்க்கும் காட்சின்னா ரொம்ப பிடிக்கும் போல , கோலி சோடாவிலும் வரும் , இதுலயும் வருது ,மேலும் கோலி சோடா மியூசிக் டைரக்டர் என்பதால் , அந்த படத்தில் முடியும் போது வரும் அதே bgm இதுலயும் வருது , ஒரு வேளை அவருக்கு ஹிட் சென்டிமென்ட்டோ ?

எப்போதும் சமையலில் கடுகு தான் முதலில் தாளிக்க போடுவாங்க அது போல , ஒரு நல்ல படம் உருவாக மாநகரம் , கடுகு போல படங்கள் ஒரு முதல் உதாரணமாக இருக்கட்டும் .

மொத்தத்தில் இந்த கடுகு நல்லாவே பொரிந்து இருக்கு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments