Saturday, 28 April 2018

Diya - தியா


ஏ.ல் விஜய் படம்ன்னா ஏதோ ஒரு படத்தின் தழுவலாக தான் இருக்கும் , இது எந்த படத்தோட தழுவலாக இருக்கும்ன்னு ஒரு சந்தேகத்தோடு தான் போனேன் , சில விமர்சனர்கள் சொல்லும் போது தெரியுது இது ஏதோ ஒரு தாய்லாந்து படம் மற்றும் வேற ஒரு இங்கிலிஷ் படம்ன்னு சொல்லுறாங்க , அப்போ கடைசி வரை விஜய் ஒரு ஒரிஜினல் கதை வச்சி படம் எடுக்க மாட்டார் போல , 

நம்ம தமிழ் சினிமாவில பேய் படம் ட்ரெண்ட்ல இதுவும் ஒன்னு , 
ஆனா இது நம்ம வழக்கமான தமிழ் பேய் படம் போல இல்ல , இந்த பேய் + காமெடி+பழிவாங்கல் + பங்களா + டூயட் பாட்டு + சாமி + மந்திரவாதி இப்படிப்பட்ட வழக்கமான படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கு இந்த படம் , அது ப்ளஸ் பாயிண்ட் தான் , அதாவது கருவில் கலைந்த ஒரு குழந்தை பழி வாங்க வருது இது தான் படத்தின் ஒரு வரி கதை .என்னடா படத்தின் கதை பொதுவா இவன் சொல்லமாட்டானே , ஏன் இப்படி சொன்னான்னு யோசிக்கிறீங்களா ? நான் சொல்லாட்டியும் படம் ஆரம்பித்து கொஞ்சம் போக இந்த படம் இப்படி தான் போகும்ன்னு சுலபமாக கண்டுபிடித்துவிடலாம் , அதனால படத்தின் கதை சுவாரசியம் சீக்கிரமா குறைஞ்சிடுச்சி இது ஒரு பெரிய மைனஸ் , மேலும் அடுத்து அடுத்து யார் யார் இரக்க போறாங்கன்னு சுலபமாக கணிக்க முடியுது . ஆர்.ஜெ.பாலாஜி ரொம்பா மொக்க காமெடி படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றவே இல்ல , மேலும் அவர் கூட வரும் ரெண்டு கான்ஸ்டேபிள் மேக்கப் ரொம்ப செயற்கையா இருக்கு, அவங்க தான் முக்கியமா கதைக்கு  ஏதாவது பண்ணுவாங்க பார்த்தா அது இல்ல,
படத்தின் ஹீரோ கொஞ்சம் அந்நியமாக தெரிகிறார் , அவருக்கு  சில இடங்களில் டப்பிங் செட் ஆகல 

படத்தில எனக்கு பிடிச்ச விஷயங்கள் என்னன்னு பார்த்தா, படம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரொம்ப தேவையில்லாம மிரட்டமா , ஒரு அமைதியான பேய் படம் தந்து இருக்கார் விஜய் , ஆனால் பலருக்கு அது பிடிக்காது , அது போல சாய்பல்லவி மற்றும் அந்த குழந்தை நல்லா நடிச்சி இருக்காங்க  , அந்த குட்டி பொண்ணு வசனம் இல்லாம அமைதியா வெறும் கண்பார்வை மட்டுமே வச்சி படம் முழுக்க நடிக்கவச்சி இருக்கார் , அதே போல சாய்பல்லவி அவங்க நடிப்பால் சில இடங்களில் அவங்களோட உணர்வை நம்மக்கு உணரவச்சி இருக்காங்க,மேலும் சாம்.சி   இசை நல்லா செய்து இருக்கார் , அதே போல படம் முடியும் போது சாய்பல்லவி , அந்த குழந்தையை சந்திக்கவைக்க அது ஒரு சோகமுடிவு போல கொண்டுபோய்ட்டு ஒரு நல்ல சந்தோஷ முடிவு கொடுத்த டைரக்டர் விஜயை பாராட்டலாம் .

இது பேய் + எமோஷனல் படம் போல   கொஞ்சம் பிசாசு படம் மாதிரி ட்ரை பண்ணிஇருக்காங்க ஆனா அந்த எமோஷனல் படத்தில முழுமையாக வரல ,அது படத்தின் ஒரு மைனஸ்  

மொத்தத்தில் தியா படம் தீயா இல்ல 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 

Friday, 20 April 2018

Mercury - மெர்குரி


சினிகிறுக்கனின் மனமார்ந்த வணக்கங்கள் , ரொம்ப நாள் கழிச்சி இல்ல , சுமார் ஒரு ஒன்றரை மாசம் கழிச்சி விமர்சனத்தோட வருகிறேன் , சினிமா ஸ்ட்ரைக்,காவேரி பிரச்சன்னை , ஐ.பி.ல் எதிர்ப்பு ,  இப்படி ஏகப்பட்ட தமிழ்நாட்டு  பிரச்சனைகள், இந்த ஸ்ட்ரைக் காரணத்தினால் படம் எதுவும்  வரவில்லை, அதனால சுமார் ஒரு மாசமா விமர்சனம் பண்ணுவதுக்கு லீவு விட்டாச்சு .
சரி போயிட்டு போகுதுன்னு சில இங்கிலிஷ் படம் பார்த்தாலும் , லேட்டா தான் பார்த்தேன் அதனால எந்த விமர்சனமும் பண்ணவில்லை.

போன வாரம் தான் A Quiet Place பார்த்தேன் , இந்த வாரம் பார்த்தா கிட்ட தட்ட அதுபோல வந்து இருக்கு நம்ம தமிழ் படம் மெர்குரி, இது silent படம் என்பதால கொஞ்சம் எதிர்பார்போடுதான் இந்த படத்துக்கு போனேன் , ஆனால் ஆரம்பமே அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் தவிடுபொடி ஆக்கிடுச்சி , ஏதோ வசனம் இல்லாம இந்த படத்தை எடுக்கணும்ன்னு நினைச்சி திணிச்சா மாதிரி ஒரு feel, கொஞ்சம் செயற்கையாக வடிவமைச்சா மாதிரி இருந்துச்சி,

படத்தின் ப்ளஸ் என்றால் படத்தோட visuals தான் சொல்லணும் , ரொம்ப அருமையாக காட்டியிருக்காங்க , ரொம்ப அழகா இருக்கு , ஈரம் , மழை, பனி இருட்டு பாதை , அந்த கார் பயணம் , மலையின் மாலை பொழுது , ஒரு உச்சி ஷாட் , சில இடங்கள் இயற்கையாக காட்டுவது , சில இடங்கள் CGல் காட்டுவது கொஞ்சம் கூட வித்தியாசமா தெரியாம காட்டியிருக்காங்க ,அந்த கம்பெனிகுள்ள காட்டும் விதம் , அங்க அங்கே கொஞ்சம் மிரட்டும் இசை , இது எல்லாம் படத்தோட மிக பெரிய ப்ளஸ் , ஆனால் படத்தின் கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்கு ?

படம் ஆரமபம் கொஞ்சம் செயற்கையாக ஆரம்பிக்குது ,போக போக கொஞ்சம் விறுவிறுப்பு வருவது போல இருக்கு , ஆனால் ஒரு கட்டத்துல இது எல்லாம் ஏன் நடக்குது , எப்படி நடக்குது , ஏன் பண்ணுறாங்கன்னு ஒரு curiosity இருந்தாலும்,அதுவே மனசில் அதிகமா தோணுவதால் படம் பார்க்கும் ஆர்வம் படத்திலிருந்து கொஞ்சம் விலகிவிடுகிறது, , மேலும் போக போக ஒரே மாதிரி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு  ஓரு எண்ணம்  ஒரு சாதாரண ரசிகனுக்கு எளிமையா கணிக்க முடிவதால், ஒரு சுவாரசியம் குறைஞ்சிடுச்சி .

எனக்கு என்னவோ கார்த்திக் சுப்புராஜ் mind ல ஒரு வித்தியாசமான வசனம் இல்லாம ஒரு படம் எடுக்கணும் முடிவு பண்ணிட்டு , காட்சி எல்லாம் இப்படி வரணும் முடிவு பண்ணிட்டு அப்பறம் இதுக்கு ஒரு கதை வைக்கணுமே யோசிச்சி பிறகு படத்தோட கதையை எழுதிருப்பாரோ ஒரு எண்ணம், ஏன்னா படத்தோட கதை கொஞ்சம் கூட strong ah இல்லையோ ஒரு feel , மேலும் மெர்குரி கம்பெனியால் பாதிக்கப்பட்டு , மெர்குரி கம்பெனியில் கதை நடப்பதால், மெர்குரின்னு படம் பெயர் வச்சியிருக்காங்கன்னு சொல்லணும் ,
இந்த படத்தில எந்த ஒரு சமுதாய எண்ணம் கொண்ட காட்சியோ அல்லது corporate கம்பெனி எதிர்த்து நடக்கும் கதையோ , அல்லது வேறு எந்த  சம்பந்தமான கதையோ இல்ல , இது திரில்லர் படம் போல, பேய் படம் போல படம் எடுத்துட்டு ,ஆனால் படம் முடியும் போது  corporate கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் எதுக்கு போட்டாங்கன்னு  தெரியல ,  சம்மந்தமே இல்லாம , படம் முடியும் போது இது போல வேற வேற நாட்டுல பாதிக்கப்பட்டவங்க வரலாறு ஏன் போட்டாங்க தெரியல ? ஒருவேளை இப்போ ஸ்டர்லைட் கம்பெனி ட்ரெண்ட் என்பதால் கடைசியா சேர்த்துட்டாங்களா ?

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றல் ஒரு ட்விஸ்ட் இருக்கும் , அது இந்த படத்துலயும் இருக்கு ஆனால் , அது wow என்று சொல்லும் அளவுக்கு இல்ல , இந்த படம் முதலில் இருந்து  கடைசி வரைக்கும் , பார்க்கும் பொழுது இது பேய் படமா ?திரில்லர் படமா ? எந்த மாதிரி படம்னு  ஒரு குழப்பம் நம் மனசில் யோசிக்க வச்சி கடைசியா oh இது அது தான அப்படின்னு முடியும் பொழுது தான் தெரியுது , ஆனால் அதற்க்கு சொல்லும் காரணமும் , பின் கதையும் அட சூப்பர்ப்பா சொல்லும் அளவுக்கு இல்ல , அட ஒரு சாதாரண கதை தான் அட போங்கடான்னு மக்கள் தியேட்டர்ல் சொல்லுவது கேட்க செய்யுது .அப்பறம் படத்தில் பல கேள்விகள் கேட்க தோணுது , அந்த பொண்ணு எப்படி காரில் இருந்து வெளியே வந்தா ? அஙக என்ன நடந்தது ? அவள் அங்கே எப்படி போனா ? அந்த நாலு பேரு வருவதற்கு முன்னால ?அவளை பிரபு தேவா ஒன்னும் பண்ணவில்லையா, இப்படி சில பல கேள்விகள் கேட்க தோணுது 

முக்கியமான விஷயம் பிரபுதேவா நல்ல நடிச்சிருக்கார் , அவர் மேக்கப் , அவர் நடை , பார்வை , பிரபுதேவா ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு படம் பார்த்தது ரொம்ப அரியது .அந்த காட்சிகளில் பிரபுதேவாவாக தெரியல ஒரு வெறிகொண்ட ஒரு வித்தியாசமான ஒரு உயிரினம் போல தான் தெரியுது .அதுபோல சந்தோஷ் நாராயணன் இசை  ஒரு ப்ளஸ்.

கார்த்திக்சுப்புராஜ் தன்னோட வழக்கமான நடிகர்களான கருணாகரன் , ஆடுகளம் நரேன் , விஜய்சேதுபதி இப்படி அவர்களை தவிர்த்து  முதல் முறையாக  எடுத்து இருக்கும் ஒரு வித்தியசமான ஒரு படம், அவர்களை மட்டும் அவர் தவிர்க்கவில்லை , கதையும் தான் இந்த படத்தில் தவிர்த்துவிட்டார் .

மெர்குரி  ஒரு  புதுமையான படைப்பு , ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி , வித்தியாசமா ஒரு அனுபவம் ட்ரை பண்ணலாம் நினைச்சா இந்த படம் பார்க்கலாம் , ஆனால் படம் முழுமையாக த்திருப்தி அளிக்குமா என்று கேட்டல் அது கொஞ்சம் டவுட் தான் .

மொத்தத்தில் மெர்குரி பார்ப்பவர்களுக்கு  கேள்விக்குறி 

இப்படிக்கு 
சினிகிறுக்கன்