வெள்ளி, 20 ஏப்ரல், 2018

Mercury - மெர்குரி


சினிகிறுக்கனின் மனமார்ந்த வணக்கங்கள் , ரொம்ப நாள் கழிச்சி இல்ல , சுமார் ஒரு ஒன்றரை மாசம் கழிச்சி விமர்சனத்தோட வருகிறேன் , சினிமா ஸ்ட்ரைக்,காவேரி பிரச்சன்னை , ஐ.பி.ல் எதிர்ப்பு ,  இப்படி ஏகப்பட்ட தமிழ்நாட்டு  பிரச்சனைகள், இந்த ஸ்ட்ரைக் காரணத்தினால் படம் எதுவும்  வரவில்லை, அதனால சுமார் ஒரு மாசமா விமர்சனம் பண்ணுவதுக்கு லீவு விட்டாச்சு .
சரி போயிட்டு போகுதுன்னு சில இங்கிலிஷ் படம் பார்த்தாலும் , லேட்டா தான் பார்த்தேன் அதனால எந்த விமர்சனமும் பண்ணவில்லை.

போன வாரம் தான் A Quiet Place பார்த்தேன் , இந்த வாரம் பார்த்தா கிட்ட தட்ட அதுபோல வந்து இருக்கு நம்ம தமிழ் படம் மெர்குரி, இது silent படம் என்பதால கொஞ்சம் எதிர்பார்போடுதான் இந்த படத்துக்கு போனேன் , ஆனால் ஆரம்பமே அந்த எதிர்பார்ப்பு கொஞ்சம் தவிடுபொடி ஆக்கிடுச்சி , ஏதோ வசனம் இல்லாம இந்த படத்தை எடுக்கணும்ன்னு நினைச்சி திணிச்சா மாதிரி ஒரு feel, கொஞ்சம் செயற்கையாக வடிவமைச்சா மாதிரி இருந்துச்சி,

படத்தின் ப்ளஸ் என்றால் படத்தோட visuals தான் சொல்லணும் , ரொம்ப அருமையாக காட்டியிருக்காங்க , ரொம்ப அழகா இருக்கு , ஈரம் , மழை, பனி இருட்டு பாதை , அந்த கார் பயணம் , மலையின் மாலை பொழுது , ஒரு உச்சி ஷாட் , சில இடங்கள் இயற்கையாக காட்டுவது , சில இடங்கள் CGல் காட்டுவது கொஞ்சம் கூட வித்தியாசமா தெரியாம காட்டியிருக்காங்க ,அந்த கம்பெனிகுள்ள காட்டும் விதம் , அங்க அங்கே கொஞ்சம் மிரட்டும் இசை , இது எல்லாம் படத்தோட மிக பெரிய ப்ளஸ் , ஆனால் படத்தின் கதை திரைக்கதை எல்லாம் எப்படி இருக்கு ?

படம் ஆரமபம் கொஞ்சம் செயற்கையாக ஆரம்பிக்குது ,போக போக கொஞ்சம் விறுவிறுப்பு வருவது போல இருக்கு , ஆனால் ஒரு கட்டத்துல இது எல்லாம் ஏன் நடக்குது , எப்படி நடக்குது , ஏன் பண்ணுறாங்கன்னு ஒரு curiosity இருந்தாலும்,அதுவே மனசில் அதிகமா தோணுவதால் படம் பார்க்கும் ஆர்வம் படத்திலிருந்து கொஞ்சம் விலகிவிடுகிறது, , மேலும் போக போக ஒரே மாதிரி காட்சிகள் இப்படி தான் வரும்ன்னு  ஓரு எண்ணம்  ஒரு சாதாரண ரசிகனுக்கு எளிமையா கணிக்க முடிவதால், ஒரு சுவாரசியம் குறைஞ்சிடுச்சி .

எனக்கு என்னவோ கார்த்திக் சுப்புராஜ் mind ல ஒரு வித்தியாசமான வசனம் இல்லாம ஒரு படம் எடுக்கணும் முடிவு பண்ணிட்டு , காட்சி எல்லாம் இப்படி வரணும் முடிவு பண்ணிட்டு அப்பறம் இதுக்கு ஒரு கதை வைக்கணுமே யோசிச்சி பிறகு படத்தோட கதையை எழுதிருப்பாரோ ஒரு எண்ணம், ஏன்னா படத்தோட கதை கொஞ்சம் கூட strong ah இல்லையோ ஒரு feel , மேலும் மெர்குரி கம்பெனியால் பாதிக்கப்பட்டு , மெர்குரி கம்பெனியில் கதை நடப்பதால், மெர்குரின்னு படம் பெயர் வச்சியிருக்காங்கன்னு சொல்லணும் ,
இந்த படத்தில எந்த ஒரு சமுதாய எண்ணம் கொண்ட காட்சியோ அல்லது corporate கம்பெனி எதிர்த்து நடக்கும் கதையோ , அல்லது வேறு எந்த  சம்பந்தமான கதையோ இல்ல , இது திரில்லர் படம் போல, பேய் படம் போல படம் எடுத்துட்டு ,ஆனால் படம் முடியும் போது  corporate கம்பெனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமர்ப்பணம் எதுக்கு போட்டாங்கன்னு  தெரியல ,  சம்மந்தமே இல்லாம , படம் முடியும் போது இது போல வேற வேற நாட்டுல பாதிக்கப்பட்டவங்க வரலாறு ஏன் போட்டாங்க தெரியல ? ஒருவேளை இப்போ ஸ்டர்லைட் கம்பெனி ட்ரெண்ட் என்பதால் கடைசியா சேர்த்துட்டாங்களா ?

கார்த்திக் சுப்புராஜ் படம் என்றல் ஒரு ட்விஸ்ட் இருக்கும் , அது இந்த படத்துலயும் இருக்கு ஆனால் , அது wow என்று சொல்லும் அளவுக்கு இல்ல , இந்த படம் முதலில் இருந்து  கடைசி வரைக்கும் , பார்க்கும் பொழுது இது பேய் படமா ?திரில்லர் படமா ? எந்த மாதிரி படம்னு  ஒரு குழப்பம் நம் மனசில் யோசிக்க வச்சி கடைசியா oh இது அது தான அப்படின்னு முடியும் பொழுது தான் தெரியுது , ஆனால் அதற்க்கு சொல்லும் காரணமும் , பின் கதையும் அட சூப்பர்ப்பா சொல்லும் அளவுக்கு இல்ல , அட ஒரு சாதாரண கதை தான் அட போங்கடான்னு மக்கள் தியேட்டர்ல் சொல்லுவது கேட்க செய்யுது .அப்பறம் படத்தில் பல கேள்விகள் கேட்க தோணுது , அந்த பொண்ணு எப்படி காரில் இருந்து வெளியே வந்தா ? அஙக என்ன நடந்தது ? அவள் அங்கே எப்படி போனா ? அந்த நாலு பேரு வருவதற்கு முன்னால ?அவளை பிரபு தேவா ஒன்னும் பண்ணவில்லையா, இப்படி சில பல கேள்விகள் கேட்க தோணுது 

முக்கியமான விஷயம் பிரபுதேவா நல்ல நடிச்சிருக்கார் , அவர் மேக்கப் , அவர் நடை , பார்வை , பிரபுதேவா ஆட்டம் பாட்டம் இல்லாமல் ஒரு படம் பார்த்தது ரொம்ப அரியது .அந்த காட்சிகளில் பிரபுதேவாவாக தெரியல ஒரு வெறிகொண்ட ஒரு வித்தியாசமான ஒரு உயிரினம் போல தான் தெரியுது .அதுபோல சந்தோஷ் நாராயணன் இசை  ஒரு ப்ளஸ்.

கார்த்திக்சுப்புராஜ் தன்னோட வழக்கமான நடிகர்களான கருணாகரன் , ஆடுகளம் நரேன் , விஜய்சேதுபதி இப்படி அவர்களை தவிர்த்து  முதல் முறையாக  எடுத்து இருக்கும் ஒரு வித்தியசமான ஒரு படம், அவர்களை மட்டும் அவர் தவிர்க்கவில்லை , கதையும் தான் இந்த படத்தில் தவிர்த்துவிட்டார் .

மெர்குரி  ஒரு  புதுமையான படைப்பு , ஒரு வித்தியாசமான ஒரு முயற்சி , வித்தியாசமா ஒரு அனுபவம் ட்ரை பண்ணலாம் நினைச்சா இந்த படம் பார்க்கலாம் , ஆனால் படம் முழுமையாக த்திருப்தி அளிக்குமா என்று கேட்டல் அது கொஞ்சம் டவுட் தான் .

மொத்தத்தில் மெர்குரி பார்ப்பவர்களுக்கு  கேள்விக்குறி 

இப்படிக்கு 
சினிகிறுக்கன் 


4 கருத்துகள்:

  1. Back with a Bang! Well done. நடு நிலை மாறாத விமர்சனத்திற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. Your comments sounds very genuine without hurting anyone's feeling. As you know even a short film involves so many pupil hardwork. Good work shyam. Vaazhthukal.

    பதிலளிநீக்கு
  3. படத்தை அவசியம் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நேர்மையான விமர்சனம் . பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

Comments