சனி, 24 பிப்ரவரி, 2018

Yenda Thalaiyila Yenna Vekkala - ஏண்டா தலையில எண்ண வெக்கல


இப்படி ஒரு படம் வந்துச்சான்னு  நீங்க கேட்பீங்க ,  அப்படி தான்  நானும் நேற்று கேட்டேன் , இந்த மாசம் பிறந்து சில பல வேலைகளால் படம் எதுக்கும் போக முடியல , சரி கலகலப்பு போலாமேன்னு  நினைச்சேன், அப்போ நம்மளுக்கு தெரிஞ்ச தம்பி ஒருத்தன் அண்ணே, இப்படி ஒரு படம் வந்து இருக்கு நான் பார்க்கல ஆனா எனக்கு தெரிஞ்ச friend சொன்னான் நல்லா இருக்கு, சின்ன படம் எதிர்பாரம நல்ல காமெடி படமா இருக்கு , அதுக்கு போலாமேன்னு சொல்லி உசுப்பேத்திவிட்டான்  , அதை நமபி போனேன் , இப்போ அந்த தம்பி மற்றும் அவனோட friend ரெண்டு பேரையும் தேடிகிட்டு இருக்கேன்.

படத்தோட கதை என்னவோ கொஞ்சம் வித்தியாசமான ஒன்னு தான் , ஆனா படத்தில திரைக்கதை கொஞ்சம் கூட வித்தியாசம் இல்ல , கதைக்குள்ள போகும் போது படம் இன்டெர்வல்க்கு வந்துடுச்சி , அப்படி இழுத்து இழுத்து ட்விஸ்ட் போல கொண்டு வந்து நிறுத்திட்டாங்க , சரி ரெண்டாவது பாதியில ஏதோ கொஞ்சம் நல்லா போகும் நினைச்சா , பாட்டி கிட்ட அடிவாங்கு , ஒரு பொண்ணு இறந்து போகாம காப்பாற்று சொல்லுறாங்க , சரி காமெடி வரும் வரும்ன்னு கடைசி வரைக்கு காத்துகிட்டு இருந்தது தான் மிச்சம், அப்படி ஒரு மொக்கை படம் கொஞ்சம் கூட சிரிப்பு வரல .யோகி பாபு வரும் போது ரொம்ப கம்மியா சிரிக்க தோணுது அவ்ளோதான் .


அசார் , அர்ச்சனா , சிங்கப்பூர் தீபன் , ராமர்ன்னு விஜய் டிவி , ஜீ டிவி பார்த்தா மாதிரி இருந்துச்சி , அட டைரக்டர் கூட விக்னேஷ் கார்த்திக் இவர் விஜய் டிவில கலக்க போவது யாரு , ஜோடி நம்பர் -1 ல  வந்தவர் தான், ஹீரோயின் தவிர எல்லோரும் டிவி ஆளுங்க , அநேகமா இந்த படத்துக்கு அப்புறம் ஹீரோயின் சஞ்சித ஷெட்டி டிவிக்கு வந்துடுவாங்க போல ,  இப்படி ஒரு டிவி பட்டாளம் சேர்ந்து இந்த படத்தை தந்து இருக்காங்க , பேசாம ஒரு web series , மாதிரி பண்ணி இருந்தா கூட views நல்லா வந்து இருக்கும் , இந்த படம் ஓடும் தியேட்டர்களும் கம்மி , அந்த தியேட்டர்ல வரும் மக்களும் கம்மி தான் .முக்கியமான ஒன்னு படத்தின் டைட்டில் இவர்களுடன் மன்சூரலிகான்ன்னு போட்டாங்க , படத்தில எங்க வந்தார்ன்னு தெரியல , ஒருவேளை நான் கவனிக்காம விட்டுட்டேனோ இல்ல தூங்கிட்டேனோ ? மன்சூரலிகான் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் அப்போ ஏதோ சர்ச்சையா பேசிட்டார் சொல்லுறாங்க அதனால அவரை படத்தைவிட்டு இப்படி வெட்டிட்டாங்களோ ?

ஆனா ஒன்னு படத்தில சில இடங்களில்  டேய் இப்போ டூயட் போடாதடான்னு அவங்களே அவங்க கலாச்சிக்கிட்டாங்க, நல்லவேளை படத்தில் ஒரே ஒரு டூயட் மட்டும் தான்

இந்த துக்கத்திலும் ஒரு நல்லவிஷயம், நான் இந்த படத்திற்கு 200 ரூபா செலவு பண்ணவில்லை , சென்னையில இருக்க  பிரபலமான பழமையான ஏவிம்ல தியேட்டர் ல எந்த ஒரு இன்டர்நெட் சார்ஜ் எல்லாம் இல்லமா வெறும் 70ரூபாய்க்கு பார்த்த ஒரு மனம் ஆறுதல் அவ்ளோதான் . என்ன ஒன்னு தியேட்டர்ல ஒரு பக்கம் எலி ஓடுது , கொசு கடிக்குது , படத்தோட கடிக்கு அந்த கொசுவோட கடி பரவாயில்லை தோணுச்சு .


மொத்தத்தில் ஏண்டா இந்த படத்திற்கு போனோம் தோணுச்சு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

cinekirukkan

1 கருத்து:

Comments