வெள்ளி, 11 மார்ச், 2016

Kadhalum Kadanthu Pogum - காதலும் கடந்து போகும்


என்னடா படத்தோட டைட்டில்க்கும்  மேலே போட்டு இருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லேயே தோணுதா ? My Dear Desperado அப்படிங்கிற கொரியன் படத்தோட ரீமேக் தான் இந்த காதலும் கடந்து போகும் ,இப்போ தான் ஒரு தமிழ் படம் காபி அடிக்காம ஒழுங்கா ரீமேக்ன்னு சொல்லி எடுத்து இருக்காங்க.

இந்த படத்தை பார்கிறதுக்கு முன்னாடி இந்த  கொரியன் படத்தை பார்க்கணும் நினைச்சேன் ஆனா பார்க்க முடியல அதனால கொரியன் படத்தோட trailer பார்த்துட்டு தான் போனனேன் , கிட்டதட்ட பல காட்சிகள் அப்படியே எடுத்து இருக்காரு நலன்குமரசாமி 

படத்தோட கதை ?? சென்னையில வேலை தேடும் ஹீரோயின், அடி ஆளு ஹீரோ ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க ரெண்டு பேருக்கும் காதல் கடந்து போச்சா இல்லையா???அதான் படம் 

படத்தோட ப்ளஸ் பாயிண்ட் பார்த்தா அது விஜய் சேதுபதி ஒரு ஒரு சீன்ளையும் கலக்கிட்டாரு அதுவும் அந்த பார்ல பந்தாவா போயிட்டு அடி வாங்கிட்டு பந்தாவா கெத்தா வெளியே வருவது , மடோன அப்பாகிட்ட பேசுவது , interview ல போயிட்டு காலாய்ப்பது.. அடி செம்ம மாஸ் , பிறகு காமெடி படத்தோட இருப்பது சூப்பர்,  ஆனா மேல சொன்ன சில காட்சிகள் போல வேற எந்த சீனும் படம் முடிச்சிட்டு வெளியே வரும் போது மனசுல நிற்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான் 

மடோன ரொம்ப அழகா இருக்காங்க , தியேட்டர்ல அவங்க வரும் போது செம்ம வரவேற்ப்பு  அது பிரமேம் செய்த வேலை , ஆனா விஜய்சேதுபதியோட chemistry work out  ஆகி இருக்கான்னு பார்த்தா அது இல்ல தான் சொல்லணும் ஏன்னா ரெண்டு பேரும் மாற்றி மாற்றி சந்திக்கிறாங்க பேசுறாங்க ஆனா ரெண்டு பேருக்குள்ள காதல் வருதா இல்லையா ? இல்ல அது வெறும் நட்பா  ?அப்படிங்கிறது தெளிவா தெரியல , ஒரு வேலை originalல இப்படி தானா ? இல்ல இதைவிட நல்ல இருக்கும்மா தெரியல .

சந்தோஷ நாராயணன் வழக்கம் போல நல்ல பண்ணி இருக்காரு க க க க போ பாட்டு நல்லா இருக்கு ஆனா சில படங்களில்  வரும் அவரோட பாடல்கள் அவரோட முந்தைய படத்தின் பாடல்கள் ஞாபகம் வருது,  ஒரே மாதிரியான இசை கொடுக்கிறாரோ தோணுது, இந்த படத்திலும் இது போல தான் இருக்கு .

மொத்ததில்: காதலும் கடந்து போகும்  சாதாரண ரசிகனின் மனதில் averageah கடந்து போகும்  

இப்படிக்கு
சினிகிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments