சனி, 14 ஜனவரி, 2017

Koditta Idangalai Nirappuga - கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபன் படம்ன்னா கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் ,அதுவும்  அவரோடைய முந்தைய படம்  கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் முற்றிலும் மாறுபட்டது , அந்த படத்தை போல எதிர்பார்த்து போக வேண்டாம் , அதே நேரத்தில் வழக்கமாக வரும் மசாலா படத்திலிருந்து மாறுபட்டது தான் இந்த படம் ,

படத்தின் ஆரம்பத்திலிருந்து அவர் கோடிட்ட கதையை நாமே நிரப்பிக்கொள்ளவேண்டும் என்று நினைச்சிட்டாரு போல,  சாந்தனு வந்ததிலிருந்து என்ன கதை? இது பேய் படமா ? காமெடி படமா ? திரில்லர் படமா ? இல்லை பெண்ணியம் பற்றிய படமா ? அல்ல சமூகத்தின் ஆண்கள் மனநிலை பற்றிய படமா ? என்று நம்மை  கொஞ்சம் நேரம் யோசிக்க வச்சாரு , பார்த்திபன் அவருக்கு என்று இருக்கும் குசும்பு வசனங்கள் இதுலயும் இருக்கு , ஆனால் சில  இடங்களில் இரட்டை அர்த்தம் வசனங்களும்  இருக்கு , ரஜினியை  பற்றிய வசனமும் , ஒரு குடை  கம்பி பற்றிய வரும் வசனமும் சூப்பர்,  மனுஷன் படம் ரொம்ப ட்விஸ்ட்ன்னு நினைச்சு கடைசியா ஒன்னு வைச்சார் , எனக்கு என்னமோ அது ஒரு பெரிய ட்விஸ்ட் போல தெரியல ஏன்னா படம் ஆரம்பிச்சு கொஞ்சம் நேரம் குழப்பமாக இருக்குன்னு சொன்னேன்ல , அதுக்கு அப்புறம் அங்கேயே தெரிஞ்சிடுச்சி இந்த படம் என்ன கதை என்று , அதை வேற பாவம் படம் முடியும் போது அவரே நேரில்  தியேட்டர்க்கு வந்து படத்தோட கிளைமாக்ஸ் வெளியே சொல்லிடாதீங்க என்று சொல்லிட்டு போகிறார், சார் இப்போ இருக்க ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலியா இருக்காங்க .சார் ஏன் பார்வதி நாயருக்கு தாலியை வெளியேவே தொங்க விட்டு சுத்தவிட்டீங்க ?

சாந்தனு ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார் , அவர் இந்த படமாவது நல்லா பேரு வாங்கி ஹிட் ஆகும் நினைச்சி இருப்பர் , ஆனால் பேரு வேணும்ன்னா வாங்கி தரும் ஆனால் ஹிட் ஆகுறது கஷ்டம், நல்லா டான்ஸ் ஆடிஇருக்கீங்க , ஆனா அந்த பாட்டு படத்துக்கு தேவையில்லை அதையும் நீங்களே Fb ல சொன்னீங்க.

பார்வதி நாயர் , நீங்க மலையாளி என்பதால் மலையாள கேரக்டர் சரியாக இருக்கு , ஆனா நீங்க சிரிக்கும் போது ரொம்ப வயசான மாதிரி இருக்கு , சாந்தனுக்கு அக்கா மாதிரி இருக்கீங்க ,

தம்பி ராமையா அங்க அங்க வராரு அவளோதான் கொஞ்சம் கொஞ்சம் சிரிப்பு காட்டினார் ஆனால் சிரிப்பு வரலை 

மொத்ததில்  கோடிட்ட இடங்களை நிரப்புக,  படத்தை   பற்றி --------------------------- நீங்களே நிரப்புக 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments