Friday, 28 April 2017

Baahubali 2 - பாகுபலி 2

தெரிந்த கதை , தெரியாத உண்மைகள் தான் இந்த பாகுபலி2, கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் ? சொல்லமாட்டேன்  படம் பாருங்க , ஏன் அனுஷ்கா அடிமையாக இருக்காங்க ? சொல்லமாட்டேன் படம் பாருங்க , அட இந்த watsapp  ல ஒரு கற்பனையாக இந்த படத்தோட கதை வந்துச்சி , அதுல பல விஷயங்கள் உண்மை இல்ல ஆனா சில விஷயங்கள் அடிச்சிவிட்டதுல உண்மைதான் .

இந்த படத்தை பற்றி எழுத நமக்கு தகுதி இல்ல , இருந்தாலும் நாம் எழுதுவோம், முதல் விஷயம் இந்த படத்தை முதல் பகுதியோடா compare பண்ணாதீங்க , முதல் பகுதி அளவுக்கு சுவாரசியமா இருக்கும் என்று நினைச்சி போகாதீங்க , 

சரி படத்தோட எனக்கு பிடிச்ச highlight காட்சிகள் என்னனா ,  படத்தில சண்டை காட்சிகள் எடுத்தவிதம்  அருமை , குறிப்பா அனுஷ்காவின் முதல் சண்டை காட்சியில் , சத்யராஜும் , பிரபாஸும் சேர்ந்து போடும் சண்டை செம்ம , அதே போல அரண்மனையில் அனுஷ்காவும் பிரபாஸும் ஒரு அம்பு சண்டை ultimate , அதுல அனுஷ்கா ரொம்ப அழகா தெரிஞ்சாங்க , அதில் குறிப்பா அனுஷ்கா ஒரு expression தரும் ஷாட் சூப்பர் , இன்டெர்வல் பகுதியில் பதவி பிரமாணம் எடுக்கும் காட்சி செம்ம , சட்டசபையில் பிரபாஸ் ஒருத்தனோட கழுத்தை வெட்டும் காட்சி அவருக்கு அது மாஸ்  , ஓ அது சட்டசபை இல்ல அரண்மனை சபை , ஆனா இந்த படத்தோட கதை பார்க்கும் போது எனக்கு என்னமோ இப்போ இருக்கும் நம்ம தமிழ் நாடோட அரசியல் நிலவரமும் இந்த படமும் கொஞ்சம் மேட்ச் ஆகுறா போல இருக்கு .

படத்தில சுவாரசியம் இல்லாத விஷயங்கள் பிரபாஸ் அனுஷ்கா காதல் , மேலும்  அரண்மனையில் பிரபாஸும் சத்யராஜும் நடிப்பது , மேலும் ஒரு கப்பல் டூயட் செம்ம கற்பனை ஆனால் அது பார்க்க பக்கா தெலுங்கு மசாலாவாக தோணுச்சு , அப்புறம் முதல் partல சில சின்ன சின்ன கேரக்டர் தான் தெலுங்குல பேசி, அது தமிழ்ல டப்பிங்கு ஆச்சி , ஆனா முக்கியமா கேரக்டர் எல்லாம் தமிழ்ல தான் பேசினாங்க , ஆனா பாகுபலி2ல்  பல இடங்களில்  எல்லா முக்கியமான கேரக்டர் கூட தெலுங்கு வாய் அசைப்பு தான் இருக்கு , ஏன் நம்ம சத்யராஜ் கூட தெலுங்கு வாய் அசைப்பு தான் இருக்கு அதனால ரொம்ப அந்நியமாக ஒரு உணர்வு வருது ,முதல் part ல் காலகேயனுடன் போர் காட்சிகள் வரும் சில போர் நுணுக்கங்கள் அட போட வச்சது , இது செம்ம ஐடியாவா இருக்கே தோணுச்சி , அது போல இந்த படத்தில் குறைவு தான் ,trailerல எந்த அளவுக்கு தமன்னாவை பார்த்தோமோ அந்த அளவுக்கு தான் படத்தில வராங்க , இதில் தமன்னாவுக்கு ஸ்கோப் கம்மி .

எனக்கு இந்த படத்தில பிரம்மாண்ட காட்சியமைப்பு  , தவிர கதை திரைக்கதை ரொம்ப சுவாரசியமாக ரசிக்கும்படி வைக்கல, ஏன்னா படத்தோட கதை என்னன்னு தெரிஞ்சி போச்சி , திரைக்கதை இப்படி தான் போகும் என்று சுலபமாக guess பண்ணமுடிச்சது அதனால எனக்கு அந்த அளவுக்கு படத்தோட ஒரு ஈடுபாடு வரல ,அதுவும் பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் தெரிஞ்ச அப்புறம் அந்த சுவாரசியம் முடிச்சி போகுது .எப்படியும் ராணாவை சின்ன பாகுபலி கொன்றுவார் தெரியும் , முக்கியமா கடைசி சண்டை கொஞ்சம் ஓவர் பறந்து பறந்து அரண்மனைகுள்ள போவது கொஞ்சம் ஜீரணிக்க முடியல , ஆனா இதே இங்கிலிஷ் படம்ன்னா ரசிப்போம் , ஆனா இது பார்க்கும் போது ராஜமௌலி சார் ஏன் அப்படி வச்சீங்க கேட்க தோணுது .

அம்மா ராஜமாதா ரம்யாகிருஷ்ணவே நீங்க இந்த சன் டிவி சீரியல நடிக்கறதைவிட்டு இந்த மாதிரி படத்தில் மட்டுமே நடிங்க , இன்னும் பல பாகுபலி வந்தாலும் நீயே ராஜமாதாவாக வரணும் ,அப்புறம் நாசர் , ராணா சரியான வில்லன்கள் செம்ம .

ராஜமௌலி கற்பனைகளின் ராஜான்னு சொல்லலாம் , எதுவுமே சின்னதா சொல்லமாட்டார் போல வீட்டுல தோசை சுட  சொன்னாலும் நல்லா 10 அடிக்கு சுட்டு கொடுக்க சொல்லுவார் போல, படத்தில அப்படி ஒரு பிரம்மாண்டம்  மற்றும் கற்பனை ,  அப்படி அந்த பிரம்மாண்டத்தையும் கற்பனையும் அனுபவிப்பதற்கு மட்டுமே இந்த பாகுபலி2.

மொத்தத்தில் ராஜமௌலி என்றால் பிரம்மாண்டம் , பிரம்மாண்டமே என் சாசனம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .

3 comments:

 1. எல்லாருமே இத தான் சொல்றாங்க. அதுவுமில்லாம கம்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க...இருந்தாலும் என்ன தான் பண்ணிருக்காங்கன்னு போயி பாக்கனும். :)

  ReplyDelete
 2. try this site for more www.thiratti.in

  ReplyDelete
  Replies
  1. hi friend, can you please mail me or contact me ?

   Delete

Comments