வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

Ghazi - காஸி

பிரமாண்டமா செட் போட்டு அதுல கிராபிக்ஸ் கலந்து தேவை இல்லாத பாட்டை எல்லாம் போட்டு ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுத்து இருக்கேன் சொல்லுறவங்க  தயவு செய்து இந்த படத்தை பாருங்க

பரபரப்பா படம் எடுக்கிறேன், சீட் நுணிக்கு audience  வர வைக்கிறேன்  சொல்லி காமெராவை சும்மா ஆட்டி ஆட்டி எடுக்கறவங்க இந்த படத்தை பாருங்க

எப்படி ஒரு உண்மை சம்பவத்தை எந்த ஒரு தேவையில்லாத சினிமாத்தனத்தை புகுத்தாமல் , அதே நேரத்தில் audienceகளை படத்தோடு மூழ்க வைத்து , சீட் நுணிக்கு வரவைத்து ,ஆடியன்ஸை அந்த போரிலே இருப்பது போல ஒரு உணர்வை வர வைத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு ஒரு பெரிய சலூட் .

படத்தின் கதை என்ன ? 1971 மேற்கு பாகிஸ்தான் , கிழக்கு பாகிஸ்தான்( தற்போது பங்களாதேஷ்) சண்டை போது இந்தியா வழியே ஆயுதங்கள் அனுப்ப , இந்தியாவை திசை திருப்ப பாகிஸ்தான் காஸி என்ற நீர் மூழ்கி கப்பலை அனுப்பி விஷாக்கப்பட்டினத்தை அழிக்க வரும் போது , நம் இந்திய கப்பல் படை எப்படி நம்மை காப்பாற்றியது என்பது தான் கதை , பொதுவா என்னோட விமர்சங்களில் கதையை சொல்ல மாட்டேன் ஆனால் இந்த படம் அப்படி இல்ல .

படத்தின் ப்ளஸ் என்ன என்ன ?
முதலில் இது ஒரு தெலுங்கு படம் , ஆனால் தமிழில் டப்பிங்கில் வந்து இருக்கு, என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் என்னா நம்ம ஊரில் டப்பிங் படங்களில் டப்பிங் நல்லா இருக்காது , ஆனால் இது அபப்டி இல்லை , மேலும் படம் பார்க்கும் போது அது டப்பிங் படம் போல இல்லை
இன்னொரு ஆச்சரிய விஷயம் என்னா தெலுங்கில் இப்படி எல்லாம் படம் எடுப்பங்களான்னு ஒரு சந்தேகம் இருந்துச்சி ஆனால் படம் சரியா எடுத்து இருக்கார் டைரக்டர் .
மேலும் முக்கியமான ஓன்று விஷுவல் effects நம்ம ஊரு பட்ஜெட்க்கு அந்த அளவுக்கு பண்ண முடியுமா ?  ரொம்ப சின்ன புள்ளை தனமா இருக்குமோ தோணுச்சு, ஆனா அதுவும் நல்லா பண்ணி இருந்தாங்க நிஜமாகவே நாமும் அந்த நீர் மூழ்கி கப்பலில் கடலுக்குலே போன ஒரு உணர்வு .

படத்தின் கேரக்டர் பற்றி சொல்லனும்னா படத்தில் கேப்டனாக வரும் கே.கே.மேனன் ரொம்ப உறுதியான கேரக்டர் முதல் பாதியில் அவர் படத்தை தூக்கி நிறுத்துகிறார் என்றால் இரண்டாவது பாதியில் ராணா படத்தை தூக்கி நிறுத்திகிறார்  , இவர்களுக்கு நடுவே அதுல் குல்கர்னியும் படும் பாடு நல்லா பண்ணி இருக்கார் .

நீர் மூழ்கி எப்படி இருக்கும்ன்னு நமக்கு தெரியாது ஆனா படத்தில் வரும் அந்த நீர் மூழ்கி செட் சூப்பர் , அது செட்டு தானா ? இல்ல அதுவும் vfx or graphicsaah தெரியல , but அதை யார் பண்ணி இருந்தாலும் அவங்களுக்கு ஒரு வாழ்த்துகள் .

கடற்படை, நீர் மூழ்கி பற்றி ஒரு உண்மை சம்பவம் படம் என்பதால் டைரக்டர் நிறைய  field work  பண்ணி இருப்பது படத்தில் தெரியுது , ஏன் என்றால் நீர் மூழ்கி கப்பலை பற்றி பல  விஷயங்கள்  technical ஆகா பல வார்த்தைகள் சொல்லுவது குறிப்பா அந்த terms  நமக்கு ஆரம்பத்தில் புரியல , பிறகு படத்தோட கதையோட்டத்தோட சில வார்த்தைகளை நமக்கும் புரியவச்சிட்டாரு அதனால நாமும் அந்த கப்பலை இயக்கனும் அந்த எதிரி கப்பலை தகர்க்கணும் தோணவச்சிட்டாரு டைரக்டர்

பொதுவா நாட்டு பற்று உள்ள படம்ன்னா ராணுவம் , குண்டு வெடித்தல் , தீவிரவாதம் அப்படின்னு கற்பனை படம் எடுப்பாங்க , அப்படி இல்லாட்டி யாருடையவாது சுயசரிதை படம் எடுப்பாங்க , ஆனால் முதல் முறையாக கடற்படை சார்ந்த ஒரு உண்மை சம்பவத்தை ஒரு புது முயற்சியாய் இந்த இந்தியா சினிமாவுக்கு புதுமையாய்  கொடுத்த டைரக்டர் சங்கல்ப் ரெட்டிக்கு  ஒரு பெரிய hatsoff .

நிச்சயமா இந்த படத்துக்கு எதாவுது ஒரு categoryல் award கொடுப்பாங்க.

மொத்தத்தில் இந்த படத்தில் மூழ்கி மேலே எழுவது  கப்பல் மட்டும் இல்லை நம் மனசும் தான் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்

2 கருத்துகள்:

Comments