சனி, 12 ஆகஸ்ட், 2017

Tharamani - தரமணி

வணக்கம் இந்த விமர்சனம் என்னோட வழக்கமான  பாணியிலிருந்து சற்று விலகி இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் 
இது ராமின் படைப்பு .

என்னோட விமர்சனம் சிலர் புரியவில்லை என்று சொல்வதுண்டு, 
ஆமாம்,  சில நேரங்களில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது  மாதிரி இருக்கும்  ,
 நீங்கள் மொட்டை என்று  நினைத்தால் மொட்டை 
 முழங்கால் என்று நினைத்தால் முழங்கால் ,
 இப்படி தான் இந்த படமும் இருக்கிறது , 
 இதுவே ஒரு தலைப்பாய் ராம் சொல்லியே இந்த படம் ஆரம்பமாகிறது 

இந்த படம் பார்க்கும் முன் சில குறிப்புகள் 
இது நிச்சியமாக சென்னை மாவட்டம் தாண்டி மற்ற நகரங்களுக்கு இது அந்நியமானது , மேலும் ஒரு பொழுதுபோக்கிற்க்காங்க பார்ப்பவர்களுக்கும் இந்த படம் உகந்தது அல்ல 

இது நிச்சயமாக break the rules படம், ஆம் முற்றிலும் வித்தியாசமான தமிழ் சினிமாவில் பார்க்காத  காட்சி அமைப்புகள் முதலிலிருந்து இருக்கிறது , காட்சியமைப்பு மட்டும் அல்ல , சொல்லவந்த விஷயங்கள் , ஒரு சில விஷயங்கள் அல்ல , பல விஷயங்கள் ஒன்றுரோடு ஒன்று பின்னிப்பிணைந்து சில இடங்களில் புரிந்தும் , சில இடங்களில் பாமரனுக்கு புரியாமலும் சொல்லி இருக்கார் ராம்.

படத்தில் எனக்கு பிடித்த  காட்சிகள் பல, அதில் சில 
ஆண்ட்ரியாவும் வசந்தும்  சந்திக்கும் முதல் காட்சி 
அதை தொடர்ந்து படத்தில் வளரும் காட்சிகளும் , வளரும் அவர்களின் உறவுகளும்

அளவான ரசிக்கும்படியான வசந்த் மற்றும் ஆண்ட்ரியாவின்  பிளாஷ் பேக், குறிப்பாக ஆண்டிரியாவும் அவரோட முதல் கணவரும் ஹோட்டலில் பேசும் ஷாட்ஸ் அருமை .

இயல்பான உண்னமயான தரமணி பகுதியும் ,
அங்கே இருக்கும்  மென்பொருள்  துறையை மென்மையாக தொட்ட விதமும் அருமை .
மென்பொருளில் அல்லது BPO வில்  வேலை செய்பவன் என்றாலே tie கட்டுபவன் போலவே காட்டுபவன் நம் தமிழ் சினிமா , ஆனால் இதில் அபப்டி காட்டவில்லை என்பது ஒரு மகிழ்ச்சி , ஆனால் எப்பொழுதும் பெண்ணை குட்டை பாவாடையில் காட்டுவது கொஞ்சம் அபத்தம் 

குட்டைப்பாவாடை அணிந்தால் , குடித்தால் , புகைப்பிடித்தால் அவள் எதற்கும் தயாரானவள் என்பது பொய், அப்படி பெண்களை பார்க்க கூடாது என்பது போல்  காட்டிய ராமுக்கு பாராட்டு என்றால் , dog is dog , அது நல்ல .dog என்ன கெட்ட  dog என்ன அதுக்கு போடவேண்டியது போட்டால் போதும் என்ற வசனத்தில்  அனைத்து ஆண்களை தவறாக காட்டியதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் .

கிரிக்கெட் போல நடுநடுவே வரும் ராமின் வர்ணனை அதில் இருக்கும் அரசியலும் , சமூகத்தின் முகத்தையும் , மேலும் சில தகவல்களையும் , கிண்டலாக ஆணித்தரமாக கூறுவது பெருமை, அதே போல்  ராம் நடுவே பேசும் வசனங்கள் முடிக்கும் முன்பே மக்களின் கைதட்டும் , சில இடங்களில் யுவனின் இசையும்  வருவதால் , அவர் சொல்லவரும் முழு கருத்தும் கேட்டகாமல் அடங்கிவிடுகிறது . வெகுதினம் கழித்து யுவனின் bgm குறிப்பிட்ட மாறுதலை இந்த படத்திற்கு தந்து இருக்கு .

வசந்த் , ஆண்ட்ரியா , அஞ்சலி , அழகம் பெருமாள் , மற்றும் இரண்டாவது பாதியில் வரும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பில் அப்படியே அச்சுஅசலாக ராமின் முகமே தெரிகிறது , மேலும் மழையில் நினைந்த  நாயும் , குட்டி காக்கையும் , அந்த காக்கை சொட்டும் நீரை குடிப்பதை பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் .

பல இடங்களில் இயற்கையக காட்டினாலும் , சில இடங்களில் கொஞ்சம் அதீத இயற்கையாக காட்டிய காட்சிகள் கொஞ்சம் சலிப்பு.தான் .

மொத்தத்தில் தரமணி  மீண்டும் ஒரு முறை தர(ராம்)மான படைப்பு .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் .




2 கருத்துகள்:

Comments