ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

Podhuvaga En Manasu Thangam - பொதுவாக என் மனசு தங்கம்


பொதுவாக என் மனசு தங்கம் உதயநிதி ஸ்டாலின் படம்ன்னு வந்துட்டா பங்கம் , என்று பட்சாதாபம் பார்க்காம நம்ம ஆள் தொடர்ந்து நம்மளை மொக்க பண்ணறதே வேலையா வச்சி இருப்பார்  போல.

ஆனா ஒன்னுங்க இதுக்கு முன்னாடி வந்த சரவணன் இருக்க பயமேன் படத்தை பார்த்த பின்பும் மனசாட்சியை  எடுத்து வச்சிட்டு , ஒரு மன தைரியத்தோடு இந்த படத்துக்கு போனேன் , அதுக்கு என்னை நானே பாராட்டிக்கணும் , போன படத்துக்கு இந்த படம் பரவாயில்லை தான். இருந்தாலும் இந்த படம் ஒன்னும் பெருசா சொல்லிக்கிறா மாதிரி புதுசா ஒன்னும் கிடையாது .

ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை , குடும்பத்து கதை , குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம்ன்னு எல்லோரும் சொல்லவைக்கணும் நினைச்சி எடுத்து இருக்கும் படம் , ஆனால் அறுந்த பழய காத்தாடி போல இருக்கு இந்த படத்தின் கதை 

ஆனா சில காட்சிகள் எதுக்கு ஏன் வச்சாங்களே தெரியல ? ஒட்டு போடுவது எந்த ஊருலயா நடக்குது இப்படி ? அதுவும் இன்டெர்வல்க்கு  ஊரை விட்டு போன ஹீரோ , இன்டெர்வல் முடிச்சி படம் ஆரம்பிச்ச உடனே திரும்ப வந்துட்டாரு 

ஹீரோயின் வழக்கம் போல மக்கு கேரக்டர் , ஆனா இது செம்ம மக்கு கேரக்டர் அதாவது +2 முடிக்காத ஹீரோயின் , அதுவும் fail ஆகியவங்களாம் முடியல ,,சூரி எப்போ இப்படி மொக்கை காமெடி நிறுத்தப்போறாரு தெரியல , பாட்டு ஏதோ வந்து வச்சி இருக்காங்க  

படத்தில ஒரு ஆறுதல் பார்த்திபன் தான் , மனுஷன் அவருக்கு அந்த நக்கல் கேரக்டர் சரியாக பொருந்தி இருக்கு, அவருக்கும் உதயநிதிக்கு உள்ள புரிதல் நல்லா பண்ணிருக்காங்க , அவர் போடும் திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் லாஜிக் ஏற்றுக்கொள்ள முடியல , அதுவும் அவர் பொண்ணை மொட்டை அடிச்சி காது குத்தவிடலயாம் , அதனால அந்த ஊரை அழிக்கணும் நினைக்கிறாரு , இப்படி ஒரு கதை அடித்தளமே எப்படி இப்படி யோசிக்க முடிஞ்சது ? ஆனா ஒன்னு உதயநிதி ஒரு முடிவு பண்ணிதான் இந்த படம் தேர்ந்து எடுத்து இருப்பார் போல , படத்தின் டைட்டில்  பொதுவாக என் மனசு தங்கம் , ஊருக்கு நல்லது செய்யும் கேரக்டர் , படத்தில் வரும் election ல் chair சின்னம் வேற , ஏதோ ஒன்றுக்கு அடித்தளம் தான் இந்த படம் போல .

இசை இமான்  , இவர் பத்து படம் பண்ணா ஒரு படம் இலவசம் போல பண்ணி இருக்கார் ,  சரவணன் இருக்க பயமேன் படத்தில் வரும் லாலா கடை சாந்தி  பாட்டு ஹிட் அதுபோலவே  ஒன்னு போட்டு தாங்க உதயநிதி சொல்லி இருப்பர் போல  படத்தில் வரும் முதல் பாட்டு அதன் சாயல் தெரியுது .

நல்லவேளை online booking பண்ணவில்லை  முப்பது ரூபா மிச்சம் ஆச்சின்னு சந்தோசப்பட்டேன்  , ஆனா தியேட்டர்குள்ள போனா தான் தெரியுது ,தியேட்டர்ல மொத்தமே 20 பேரு தான் இருந்தாங்க அதுவும்  palazooவில் இருக்கும் பெரிய screen-9ல், அப்பறம் தான் தோணுச்சு பத்து ரூபா டிக்கெட் வாங்கிட்டு பின்னாடி போயிட்டு உட்கர்ந்து இருக்குலமேன்னு தோணுது , தியேட்டர்ல பார்க்க கூட்டம் இல்லையே என்னோட விமர்சனம் பார்க்க ஆள் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் தான் , இருந்தாலும் எழுதி இருக்கேன் .

இந்த தியேட்டர்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்படி ஆள் இல்லனா ஷோ cancel பண்ணிடுங்க , இந்த காலியான தியேட்டர்ல் இந்த ஜோடிகள் தொல்லை தாங்களடா  , கடுப்பு ஏத்துறாங்க மை லார்ட் , இதை இங்கே இந்த சினிகிறுக்கன் வன்மையாக கண்டித்து பதிவு செய்கிறேன் .

மொத்தத்தில் பொதுவாக என் மனசு தங்கம் , பொதுவாக மக்கள் மனசில் தங்குமா ?

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

1 கருத்து:

Comments