தெறிக்க விடலாமா ?? அட அது தல வசனம் ... ஐயோ நம்ம அந்த சண்டைக்கு எல்லாம் போகல..தளபதி படம் தெறி, தெறிக்குமா தெறிகாதா அட அது மட்டும் பார்ப்போம். படம், படத்தோட கதை பார்க்கிறதுக்கு முன்னாடி, நிச்சயமா தளபதியை பாராட்டியே தீரனும், அப்படி ஒரு கெத்து ஸ்க்ரீன்ல தெறிக்க விடுறாரு, 40 வயசுல உடம்பை செம்மைய maintain பண்ணுறாரு, மாஸ் பக்காவா அளவா கொடுத்து இருக்காரு, ரொம்ப build up பண்ணாம , தேவையில்லாம பஞ்ச் வசனம் பேசி போர் அடிக்காம, அவரோட ரசிகர்களை மட்டும் மேலும் குழந்தைகளை மட்டும் திருப்தி படுத்தனும் நினைக்காம, ஒரு general audience கூட பிடிக்கிறா மாதிரி படம் கொடுத்து இருக்காரு, அவர் இது மாதிரி இனி வரும் படங்களையும் செய்தால் நிச்சயமா அவருக்கு தோல்வி படம் அமையாது, நிறைய இடங்களில் ரொம்ப ஆசால்ட்டா, casual expression பண்ணி ஸ்கோர் பண்ணிட்டு போறாரு, அந்த பாலத்து மேல மொட்டை ராஜேந்திரன் கிட்ட பேசும் போதும் சரி, இண்டர்வல் பிளாக்ல் சரி, கிளைமாக்ஸ்ல சிரிக்கும் போதும் சரி, குழந்தை கிட்ட பேபி பேபின்னு பேசும் போதும் சரி செம்ம,அதுவும் ஒத்த சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் போல அதே போல ஒரு expression பண்ணிட்டு ஆட்டம் போடுவது செம்ம, முருகதாஸ் போல நிச்சயமா அட்லி அவரை அழக handle பண்ணி இருக்காரு தான் சொல்லணும், இன்னும் நிறைய மாஸ் சீன்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு அதை படத்தில் பாருங்க. ஹீரோயின் சமந்தா & எமி , எமி பெருசா ரொம்ப பயன்படுத்தவில்லை, சமந்தா ஒரு மசாலா படத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ சரியான அளவுக்கு கதைக்கு தேவையான அளவுக்கு பயன்படுத்தி இருக்காரு,கொஞ்ச நாள் முன்னாடி வரை சரண்யா தான் அம்மாவா வந்து காமெடி எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ அதே போல ராதிகா பண்ணி இருக்காங்க தளபதியும், ராதிகாவும் combination நல்லா இருக்கு, மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல ஸ்க்ரீன்ல வந்தவுடன் செம்ம கை தட்டு மற்றும் செம்ம வரவேற்ப்பு , அதுவும் அவர் iam waiting சொல்லும் போது தியேட்டர் விசில் கிழிது. அப்புறம் முக்கியமான கேரக்டர் அந்த குழந்தை நைனிக்கா, அந்த கேரளாவுல நடக்கிற சீன்ஸ் எல்லாம் நல்லா அழகா பண்ணி இருக்கு, தாத்தா சாரி கேளுங்க அப்படின்னு சொல்லும் போது சூப்பர். இசை ஜி.வி பாடல்கள் ரொம்ப சுமார்,ஜித்து ஜில்லாடி பாட்டை தவிர அதுவும் மொதலில் கேட்க்கும் போது ரொம்ப சுமார் தான், ஆனால் படத்தில் விஜய்க்காக பார்க்கும் போது நல்லா இருந்துச்சி.அந்த பாட்டில் அட்லி டைரக்டர் ஷங்கர் மாணவன்னு நிருபிச்சிட்டாரு ஏன்னா அந்த பாட்டில சுத்தி இருக்க பில்டிங்க்கு எல்லாம் பெயிண்ட் அடிச்சிட்டாரு , எல்லாருக்கும் கண்ணாடி மாட்டிடாரு , BGM பக்கா தெறி மாஸ் சீன்ஸ்க்கு சரியா பொருந்தி இருக்கு. கதை வெறும் பழி வாங்கும் கதை தான்,இந்த படம் teaser வரும் போதே நிறைய பேர் இது சத்ரியன் ரீமேக்ன்னு சொன்னாங்க, கிட்ட திட்ட இது அது போல ஒரு கதை தான், ஏன்னா சதிர்யன் ஒரு trend setting போலீஸ் படம், அதனால சொல்லி இருப்பாங்க, முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாவுது பாதியில் இல்லை, படம் ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்தில பிளாஷ் back போனது ஒரு மிக பெரிய பிளஸ், ஆனால் அது ரெண்டாவுது பாதியிலும் கொஞ்சம் தொடர்ந்து செண்டிமெண்ட் எல்லாம் வச்சது கொஞ்சம் போர் அடிக்குது, இரண்டாவுது பாதியில் தளபதியும், வில்லனாக வரும் இயக்குனர் மகேந்திரன்னும் மோதும் காட்சி இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தால் படம் இன்னும் தீயா பத்திக்கிட்டு fastah போயிருக்கும், இயக்குனர் மகேந்திரனை அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லைன்னு எனக்கு தோணுது. குறிப்பு : தளபதி ஒரு software கம்பெனில விசாரிக்கிற சீன வரும் அது எங்க officeல ஷூட் பண்ணாங்க, அதனால இந்த படத்தையோ அல்ல எங்க அலுவகதையோ நான் promote பண்ணல. இது ஒரு சும்மா குறிப்பு + விளம்பரம் தான். இன்னொரு குறிப்பு நான் தல அல்லது தளபதி ரசிகன் அல்ல ஒரு சினிமா ரசிகன் **... இல்லாட்டி நம்மல கல்லாய்ச்சிடுவாங்க எல்லாம் ஒரு safetyக்கு தான் மொத்ததில் ஒரு சாதாரண ரசிகனுக்கு கொடுக்கும் 120க்கு வசூல் தரும் படம் இப்படிக்கு சினி கிறுக்கன்
#Theri
#cinekirukkan
சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் ? பக்காவா மசாலா கலந்த காமெடியா இருக்கும், அதே போல அவர் தயாரிப்பில் வந்த இந்த படமும் அப்படி மசாலா + காமெடி + பேய் தான் . இந்த மசாலா எப்படி செய்வது ? காமெடி காட்சிக்கு கொஞ்சம் யாமிருக்க பயமேன் + கொஞ்சம் டார்லிங் , பயப்பட வைக்கும் காட்சிகளுக்கு காஞ்சுரிங்கள கொஞ்சம், கதை கருவுக்கு யாவரும் நலம் கிளைமக்ஸ்ல் இருந்து கொஞ்சம் , அட ஆமாங்க யாவரும் நலம் படத்துல கடைசி காட்சி பேய் மொபைல்ல கூட வரும்ன்னு சொல்லி முடிச்சி இருப்பாங்க , அதை referenceah வச்சி இந்த படத்தை ஆரம்பிச்சி இருப்பாங்க போல, அப்புறம் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் காஞ்சானா எல்லாம் மிஞ்சியாச்சு. அட படத்தில எந்த லாஜிக் எதுவும் பார்க்க கூடாது ,அதே போல கதையும் என்னன்னு கேட்க கூடாது , அடிச்சு கேப்பாங்க அப்போவும் கேட்க கூடாது , அட பேயே வந்து அடிச்சாலும் கதை என்னன்னு கேட்க கூடாது, ஏன்னா கதை ரொம்ப சப்பை மேட்டர் அதோட பிளாஷ் பேக் சத்தியமா இப்படி யோசிக்க முடியாது , இந்த கதைய அப்படியே ஏ.வி .ம் ஸ்டூடியோ முன்னாடி இருக்கும் ஏ.வி .ம் உருண்டைல செதுக்கி வச்சா பின்னாடி வரும் சந்ததைர்கள் அதை பார்த்து தெரிஞ்சிப்பாங்க. ஏன்னா அந்த கிளைமாக்ஸ் அப்படி இருக்கும்..யெப்பா டேய் எப்படிபா இப்படி கிளைமாக்ஸ் யோசிச்சீங்க ? சரி கதை விடுங்க , காமெடி எப்படி இருக்கு நிச்சயமா நல்லா சிரிக்கலாம் , அதுவும் வைபவ் ஆரம்பத்தில் பண்ணும் காட்சிகள் சுமார் தான் என்றாலும் , பேய் வந்த பிறகு , வைபவ் , வி டி வி கணேஷ் , சிங்கப்பூர் தீபன் பண்ணும் காமெடி தான் நல்லா இருக்கு அதுவும் அந்த வீடுக்குள போவது, ஒரு கற்பனை பேய் வீட்டுக்கு போவது அங்க பண்ணும் அலப்பரை தான் காமெடி, மற்றப்படி சாவு குத்து போட்டி எல்லாம் வைப்பது இரண்டாவுது பாதியில் நடிகர் சிங்கம்புலி வருவது எல்லாம் மொக்கை தான் ,யோகி பாபு (பண்ணி மூஞ்சி வாயன் ) கொஞ்சம் சீன் வந்தாலும் செம்ம காமெடி , அதுவும் அவர் இந்தி பாட்டு பாடுவது ,கத்தி படம் போல பிளான் பண்ணுவது அல்டிமேட் காமெடி ,கருணாகரன் அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை ஹீரோயின் ஐஸ்வர்யா கதைக்கு அளவான கேரக்டர் , ஓவியா வீட்டுல மைதா மாவு, கடலை மாவுன்னு முகத்தில facial போட்டுக்கிட்டு இருக்கும் போது டைரக்டர் பார்த்து இருப்பாரு போல அட வாமா என் படத்துக்கு நீ தான் பேய்ன்னு சொல்லிட்டு அப்படியே கூட்டிகிட்டு வந்து இருப்பாரு போல, ஏன்னா ஓவியாவுக்கு போட்டு இருக்கும் பேய் மேக்கப் அப்படி தான் இருக்கு . மொத்தத்தில் காரணம் இல்லாமல் லாஜிக் பார்க்காமல் கொஞ்சம் சிரிச்சிட்டு வரலாம் இப்படிக்கு சினி கிறுக்கன் #cinekirukkan #hello #naan #pei #pesuren
இரண்டு வாரமா பேய் வராம் , அதுவும் இந்த வாரம் இரண்டு பேய் படம் வந்து இருக்கு, எப்போ தான் இந்த பேய் trend நம்ம தமிழ் சினிமாவுல முடியுமோ ?
ஜி . வி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்துக்கும் இந்த டார்லிங்-2 க்கும் சம்பந்தம் இல்ல, அப்போ என்ன தான் இந்த படத்துல இருக்கு? அட போங்கப்பா எல்லா பேய் படத்துல இருக்கறது தான் இதுலயும் இருக்கு , நிச்சயமா ஒரு பிளாஷ் back அதுக்கு பழிவாங்குற கதை தான், அது ஒரு ஸ்ட்ராங்கான கதையாவும் , சுவாரசியமான திரைக்கதையும் இருந்தா நிச்சயமா அது நல்லா இருக்கும் , ஆனா அது இரண்டும் இதுல மிஸ்ஸிங் , ரொம்ப எதிர்பார்த்த மாதிரி தான் திரைகதை அமைப்பு இருக்கு எதை நோக்கி எப்படி அடுத்த காட்சி வரும்ன்னு தெரியற மாதிரி தான் இருக்கு, குறிப்பா இண்டர்வல் காட்சி , அந்த அனிஷா கேரக்டர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்தா மாதிரி தான் இருக்கு , மேலும் இப்போ வர பேய் படம் காமெடியும் இருக்கணும் நினைக்கிறாங்க அதுவும் இதுல இருக்கு, ஆனா காமெடி படத்துல அங்க அங்க வந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்குன்னு சொல்லலாம் , குறிப்பா காளிவெங்கட் , சிப்ஸ் கேட்டு சாப்பிடும் ஹரி , முனிஷ்காந்த் நல்லா பண்ணி இருக்காங்க படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் கேமரா தான் செம்ம fresh feeling அதுவும் அந்த வால்பாறை சீன்ஸ் , இரவு காட்சி எடுக்க பட்ட outdoor scenes அந்த வீட்டுக்குள்ள காட்டும் காட்சி, நாமே அங்க இருக்க மாதிரி ஒரு உணர்வு கொடுத்து இருக்காரு, அப்புறம் நம்ம வடிவேலு சொல்லுறா மாதிரி பேய் வந்தா டமால் டம்மால் பாத்திரம் விழுதாம் ,லைட் ஆப் ஆகுதாம் , இப்படிபட்ட காட்சிகள் கேமராமேன் நல்லா பண்ணி இருக்காரு ராதன் இசையில பாடல்களில் ரொம்ப சுமார் தான், ஆனால் அந்த டூயட் சாங் மெலடி நல்லா இருக்கு, அது என்னவோ ஹீரோயின் முஸ்லிம் என்பதால் ஹார்மனி மெல்லிசா ஓட வச்சி ஒரு பாட்டு போட்டு இருக்காரு அது என்னவோ எனக்கு பம்பாய் படத்துல வரும் கண்ணாலனே பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு, ஒரு வேலை அந்த மாதிரி பாட்டு வேண்டும்ன்னு டைரக்டர் சொல்லி இருப்பாரு போல படம் இன்னும் பக்கா சீரியஸ் த்ரில்ராக இருந்து இருக்கலாம் இல்லைன்னா full காமெடி பேய் படமாக இருந்து இருக்கலாம் மொத்தத்தில் டார்லிங்-2 ஓகே ரகம் டார்லிங் தான் இப்படிக்கு சினி கிறுக்கன்
மிதக்கும் மரம் , தலைகீழ் நடக்கும் ஹீரோயின் , வெள்ளை கருவிழி கொண்ட பெண்கள் . அட இது எப்போதும் போல வரும் நம்ம பேய் படம் trend தான் நினைச்சேன் , ஆனா இந்த படம் ஒரு புது மாதிரி கதைகளம் கொண்டு எடுத்து இருக்காங்க , ஜீரோவின் அர்த்தம் என்ன ? படம் பார்த்து முடிக்கும் போது அது தெரியும் . முதல் பாதி வரை, இது எந்த மாதிரி படம்? பேய் படமா ? சைக்கலாஜிக் thriller ah ?இல்ல split personality concept ah ? அப்படின்னு ஒரு யோசனை நம்மக்கு interval வரைக்கும் அது இருக்கு , அந்த interval பிளாக்ல பல அஷ்வின் கேரக்டர் வந்து ஹீரோயின் குழம்பும்போது, நமக்கும் எது நிஜம் எது பொய்ன்னு தெரியாம டைரக்டர் நம்மை குழம்பவச்சி இருக்காரு, இப்படி படத்தோட ஒன்ற வச்ச டைரக்டர்க்கு ஒரு பெரிய வாழ்த்துகள் இரண்டாவுது பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்துல ஹீரோயின்க்கு என்ன பிரச்சன்னைன்னு சொல்லிட்டு, அதோட காரணத்தை பிற்பாதியில் இது வரை யாரும் முயற்சிக்கதவண்ணம் கொடுத்து இருப்பது அருமை , உண்மையில் இது ஒரு புது விதமான கதை கரு யோசிச்சி இருக்காரு படத்தோட பிளஸ் நிவாஸின் இசை , ஹீரோயினை சரியான இடத்துல மிரளவைப்பது அதே போல நம்மையும் இசையின் மூலமாகவும் , எடிட்டிங் மூலமாகவும் மிரளவைப்பது சூப்பர் , மேலும் கதையோட knot சரியான இடத்துல திறந்தது தான், மேலும் ஹீரோயின் ஷிவதா நடிப்பு மாபெரும் பிளஸ் , ஹீரோ அஷ்வின் என்றாலும் அவர் ஷிவதாவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காரு தான் சொல்லணும் , சக்ரவர்த்தி கேரக்டர் அவருக்கு சரியா இருக்கு ஆனா கிளைமாக்ஸ்ல் வரும் காட்சிகள் எப்படி முடிப்பதுன்னு தெரியாம எப்படியோ முடிச்சிட்டாறு ஏன்னா எடுத்த கதைகளம் ரொம்ப பெரிய விஷயம் , மேலும் கடைசியா வரும் சில சீரியஸ் காட்சிகள் நம்ம மக்கள் புரிஞ்சிக்காம சிரிக்கிறாங்க ஆனா அதுவே இங்கிலீஷ் படத்தில வந்தால் ரசிப்பாங்க . புது டைரக்டர் புது முயற்ச்சி நிச்சயமா போயிட்டு பார்த்துட்டு வரலாம் இப்படிக்கு சினி கிறுக்கன்
சினி கிறுக்கனின் வணக்கம் , இன்னிக்கு வெள்ளி கிழமை ..நம்ம வெள்ளிகிழமைனாலே எதாவது ஒரு படத்துக்கு சவாரி போய்டுவோம் , இது எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மை , ஆனா இந்த வாரம் சாவரின்னு ஒரு படம் வந்து இருக்கு அதுக்கு நான் போகாமலா இருப்பேன் ? yes உண்மை தான் இந்த படத்துக்கு போயிட்டு வந்தாச்சு இந்த படத்தை பார்கிறதுக்கு தூண்டின சில காரணங்கள், முதல் காரணம் இந்த படத்தோட இயக்குனர் குகன் சென்னியப்பன் நாளைய இயக்குனர்ல runner upah வந்தவரு, அதனால பார்கிறா மாதிரி ஒரு படம் தருவாருன்னு நம்பிக்கை இருந்துச்சி , ரெண்டாவுது காரணம் படத்தோட trailer கொஞ்சம் நம்பிக்கை தந்துச்சு , ஆனா நிறைய படங்கள் trailer பார்த்துட்டு போயிட்டு மொக்க வாங்கிட்டு வந்து இருக்கோம், ஆனா இந்த படம் அப்படி மொக்க வாங்கல, வாங்க இந்த சவாரி பற்றி சினி கிருக்கனோட ஒரு சவாரி போவோம். படத்தோட கதை என்னபா ?மர்மமான முறையில் கொலை செய்பவனை கண்டுபிடிப்பது தான் கதை , ஆனா அது யாரு? அது ஏன் நடக்குதுன்னு படம் பார்த்து தெரிஞ்சிகோங்க . படம் ஆரம்பிக்கும் போது அட செம்ம openingah இருக்கு, முதல் பாதியில் அந்த கொலைகாரன் யார்ன்னு காட்டுவது வரைக்கும் அந்த interest ரொம்ப நல்லா இருக்கு, ஆனா இரண்டாவுது பாதியில் கொஞ்சம் தட்டு தடுமாறி போயிட்டு ஒரு வழியா டைரக்டர் சாவரியை கரை சேர்த்துட்டாறு
படத்தோட பிளஸ் பாயிண்ட் என்ன ? படத்துக்கு இவர் தான் ஹீரோன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது, என்னை பொருத்தவரைக்கும் screenplay தான் ஹீரோ, நல்ல சுவாரசியமா கொடுத்து இருக்காங்க தேவையில்லாம பாட்டு வச்சி போர் அடிக்கல, படம் கதையோட போகுது எங்கேயும் படத்தை விட்டு வெளிய போகல , குத்து பாட்டு , ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு அப்படி போடாமல் சொல்ல வந்ததை தெளிவா சொல்லி இருக்காங்க, முக்கியமான அந்த டிரைவராக வரும் நடிகர் கார்த்தி பயந்து நடிக்கும் போதும் நல்லா இருந்துச்சி, , போலீஸ்காரராக வரும் நடிகர் பெனிட்டோ டென்ஷன் ஆகும் போதும் அந்த கொலைகாரனை எப்படியாவது பிடிக்கனும்ன்னு நினைக்கிற எண்ணம் நம்மளையும் அப்படி தோன்ற வச்சி இருக்காரு , இவங்க ரெண்டு பேரை விட ஒரு முக்கியமான ஒரு கேரக்டர் ரெண்டாவுது பாதியில் வரும் ஒரு எம்.ல் ஏ கேரக்டர் ல வரும் நடிகர் அருண் என்பவர் , படத்தில செம்ம கேரக்டர், செம்ம மாஸ் சீன அவருக்கு அதுவும் சட்டை button எல்லாம் கழட்டி விட்டு liftல வருவது, அதுக்கு bgm எல்லாம் சரியாய் இருக்கு, கிளைமாக்ஸ்ல அப்பாவி தனமா முகத்தை வச்சிக்கிட்டு வசனம் பேசுவது எல்லாம் செம்ம கலாய் , யாருயா நீ ? இவ்வளவு நாளா எங்கேயா இருந்த ?அப்படின்னு கேட்க தோணுது, நிச்சயமா இனிமே நிறைய படத்துல வருவாருன்னு தோணுது. அந்த குறிப்பிட்ட கொலைகாரன் கேரக்டர் யார்ன்னு நான் சொல்ல மாட்டேன் , ஆனா அவர்க்கு கொடுக்கிற மாஸ் சீன் அதுவும் எம்.ல் ஏ ஆட்களை கொலை செய்யும் போது பண்ணுற bgm & மாஸ் சீன் பார்க்கும் போது, ஹேய் உனக்கெல்லாம் build up சீன்aah கேட்காம இருக்க முடியல, அதே நேரத்துல அந்த சீன் ரசிக்காம இருக்க முடியல , நல்ல perfectah கொடுத்து இருக்காரு டைரக்டர் . படத்துக்கு ஒரு மைனஸ் என்னனா - - இந்த படத்துக்கு promotion , தியேட்டர் & ஷோஸ் எல்லாம் கம்மி ,
மொத்தத்தில் சவாரிக்கு நம்பி சவாரி போகலாம் இப்படிக்கு சினி கிறுக்கன்
என்னடா படத்தோட டைட்டில்க்கும் மேலே போட்டு இருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லேயே தோணுதா ? My Dear Desperado அப்படிங்கிற கொரியன் படத்தோட ரீமேக் தான் இந்த காதலும் கடந்து போகும் ,இப்போ தான் ஒரு தமிழ் படம் காபி அடிக்காம ஒழுங்கா ரீமேக்ன்னு சொல்லி எடுத்து இருக்காங்க. இந்த படத்தை பார்கிறதுக்கு முன்னாடி இந்த கொரியன் படத்தை பார்க்கணும் நினைச்சேன் ஆனா பார்க்க முடியல அதனால கொரியன் படத்தோட trailer பார்த்துட்டு தான் போனனேன் , கிட்டதட்ட பல காட்சிகள் அப்படியே எடுத்து இருக்காரு நலன்குமரசாமி படத்தோட கதை ?? சென்னையில வேலை தேடும் ஹீரோயின், அடி ஆளு ஹீரோ ரெண்டு பேரும் சந்திக்கிறாங்க ரெண்டு பேருக்கும் காதல் கடந்து போச்சா இல்லையா???அதான் படம் படத்தோட ப்ளஸ் பாயிண்ட் பார்த்தா அது விஜய் சேதுபதி ஒரு ஒரு சீன்ளையும் கலக்கிட்டாரு அதுவும் அந்த பார்ல பந்தாவா போயிட்டு அடி வாங்கிட்டு பந்தாவா கெத்தா வெளியே வருவது , மடோன அப்பாகிட்ட பேசுவது , interview ல போயிட்டு காலாய்ப்பது.. அடி செம்ம மாஸ் , பிறகு காமெடி படத்தோட இருப்பது சூப்பர், ஆனா மேல சொன்ன சில காட்சிகள் போல வேற எந்த சீனும் படம் முடிச்சிட்டு வெளியே வரும் போது மனசுல நிற்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான் மடோன ரொம்ப அழகா இருக்காங்க , தியேட்டர்ல அவங்க வரும் போது செம்ம வரவேற்ப்பு அது பிரமேம் செய்த வேலை , ஆனா விஜய்சேதுபதியோட chemistry work out ஆகி இருக்கான்னு பார்த்தா அது இல்ல தான் சொல்லணும் ஏன்னா ரெண்டு பேரும் மாற்றி மாற்றி சந்திக்கிறாங்க பேசுறாங்க ஆனா ரெண்டு பேருக்குள்ள காதல் வருதா இல்லையா ? இல்ல அது வெறும் நட்பா ?அப்படிங்கிறது தெளிவா தெரியல , ஒரு வேலை originalல இப்படி தானா ? இல்ல இதைவிட நல்ல இருக்கும்மா தெரியல . சந்தோஷ நாராயணன் வழக்கம் போல நல்ல பண்ணி இருக்காரு க க க க போ பாட்டு நல்லா இருக்கு ஆனா சில படங்களில் வரும் அவரோட பாடல்கள் அவரோட முந்தைய படத்தின் பாடல்கள் ஞாபகம் வருது, ஒரே மாதிரியான இசை கொடுக்கிறாரோ தோணுது, இந்த படத்திலும் இது போல தான் இருக்கு . மொத்ததில்: காதலும் கடந்து போகும் சாதாரண ரசிகனின் மனதில் averageah கடந்து போகும் இப்படிக்கு சினிகிறுக்கன்
சினி கிறுக்கன் : Hey guys lets see about The Revenant ..leonardo Dicapiro acted in this movie.. story about the...
Audience : டேய் டேய் சினி கிறுக்கா நில்லுடா இப்போ எதுக்கு இங்கிலிஷ்ல பீட்டர் விடுற? சினி கிறுக்கன்: i don't knw why...after watching this movie english automatically coming Audience: டேய் இப்போ எதுக்கு சந்தானம் வசனம் எல்லாம் பேசுற ?.. சினி கிறுக்கன்: bcz it is hollywood movie.. Audience:டேய் நீ kollywood movie பற்றி எழுதுவதே தப்பு , சரி பரவாயில்லைன்னு விட்டுவெச்சா, நீ இப்போ hollywood படத்தை பற்றி எழுத ட்ரை பண்ணுற , அதுவும் இது ஆஸ்கார் nominationல இருக்கிற ஒரு படத்தை பற்றி ..நீ என்ன அவ்வளவ்வு பெரிய அப்பாட்டக்கரா ? சினி கிறுக்கன்: அப்படி இல்லைங்க ...இது ஆஸ்கார் nomination படம் அதுவும் நம்ம titanic ஹீரோ நடிச்சது, இப்படி இந்த மாதிரி படம் பார்த்து எழுதுனா தானே ஊருக்குள்ள நம்மக்கு ஒரு கெத்து Audience : நீ ஒரு வெத்து எதுக்கு உனக்கு கெத்து சினி கிறுக்கன்: நம்மளால ஒரு நல்ல படத்தை பார்த்தாங்கன்னா நமக்கு சந்தோசம் தான் Audience: ஓ அவ்வளவு அதுப்பு இருக்கா உனக்கு ? நீ சொல்லலைன்னா யாரும் போயிட்டு பார்க்கமாடாங்களா ? சரி சொல்ல வந்தததை சொல்லு சினி கிறுக்கன்: இது உண்மை சம்பவத்தை வச்சி எடுத்த படம் , எதிரிகிட்ட இருந்து தன் நாட்டு படையை காப்பாற்றி தன்னோட இடத்துக்கு செல்ல வழி தெரியும் ஒரு guide தான் நம்ம ஹீரோங்க , போகிற வழில ஒரு கரடி கடிச்சி உயிர்க்கு போராடுறாரு , தன்னோட சகநாட்டு வீரர் சூழச்சியால வழில விட்டுட்டு போனதனால , காட்டுல தனி ஒருவனா உயிர்க்கு போராடி இருக்காரு நம்ம ஹீரோ , அவர் காட்டில இருந்து திரும்பி வந்தாரா இல்லையா ? இது தான் கதை Audience: இந்த மாதிரி கதை நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே சினி கிறுக்கன்: கதை ஒன்னும் புதுசு இல்லைதான், ஆனா படம் எடுத்த விதம் ,உயிரை கொடுத்து நடிச்ச Dicapiro தான் செம்ம, மனுஷன் தனக்கு எப்படியாவுது இந்த ஆஸ்கார் வாங்கியே தீரணும் நடிச்சி இருப்பாரு போல , அநேகமா நீங்க இதை படிக்க போது விருது வாங்கி இருந்தாலும் இருக்கலாம் ஏன்னா இன்னைக்கு தான் ஆஸ்கார் விருது வழங்கும் நாள் , அப்படி வாங்கிட்டருன்னா அவருக்கு நம் வாழ்த்துகள் , அப்படி வாங்கவில்லைன்னா அவர் நடிப்புக்கு நம் பாராட்டுகள், குறிப்பா அந்த கரடி கடிச்ச பிறகு , அந்தகாலத்து மருத்துவர்கள் மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல் அப்படியே அந்த புண்ணுகளை கையால் தைப்பது , அப்பறம் அவர் தண்ணி குடிக்கும் போது கழுத்தில் இருந்து ரத்தம் வருவது , அதை அவர் தனி ஆளாகவே சரி செய்வது , பச்சை புல்லையும் , பச்சை மாமிசத்தையும் சாப்பிடுவது எல்லாம் நாமே அங்க இருந்து கஷட்டபடுவது போல உணர்வு வருது .. Audience: யெப்பா நீ சொல்லும் போதே ரொம்ப பயங்கரமா இருக்கே , மனுஷன் செம்மையா நடிச்சி இருப்பாரு போல சினி கிறுக்கன்: அட ஆமாங்க Dicapiroகாகவே இந்த படத்தை பாருங்க Audience:சரி அப்போ எவன்கிட்டயாவுது shareit வங்கி officeக்கு பஸ்ல போகும் போது பார்த்திட வேண்டியது தான் . சினி கிறுக்கன்: அடப்பாவி இந்த மாதிரி நல்ல படத்தை, நல்ல effectoda , நல்ல தியேட்டர்ல போயிட்டு பாருங்கயா இப்படி தான் danish girlன்னு ஒரு படம் வந்தது நம்ம ஊருக்கு, அது முதல் பாலினம் மாற்று அறுவை சிகிச்சை பற்றிய படம், ஆனா அந்த படம் நம்ம ஊரு ஒரு சில தியேட்டர்ல ஒரு ஷோ தான் போட்டாங்க அதுவும் ஒரே வாரத்தில தூக்கிட்டாங்க , அந்த படத்தில நடிச்ச eddie redmayne கூட best actor nominationல இருக்காங்க, நான் எழுதும் போது தெரியல யார் win பண்ணுறாங்கன்னு அனேகமா நீங்க இதை படிக்கும் போது தெரிஞ்சிடும் ..பார்ப்போம் யார்ன்னு . இப்படிக்கு சினி கிறுக்கன்
கணிதன் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்து இருக்குறாரு இயக்குனர்,போலி certificate , போலி லோன் அப்படின்னு கொஞ்சம் different ah try பண்ணி இருக்குகாரு அப்போ மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம். படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னு சொல்லுறேன் இருங்க , அதுக்கு முன்னாடி படத்தோட திரைகதை ஓட்டம் எப்படி இருக்குன்னு பார்ப்போம், படத்தோட திரைகதை graph ரொம்ப flatah தான் ஆரம்பிக்குது , வழக்கமான கொஞ்சம் மொக்கை காமெடி,குடும்பம் intro , தேவையில்லாத முதல் 30 நிமிஷத்தில ரெண்டு பாடல் அதுவும் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றாத பாடல் , பிறகு படத்தோட திரைகதை graph மெல்ல மெல்ல மேல ஏறி இண்டர்வல் பிளாக்ல நல்லா போயிட்டு நிக்குது,ஐயோ எங்க இரண்டாவுது பாதியில் அப்படியே நேர் எதிரா மொக்கையா கொடுப்பாங்களோ தொன்னுச்சி ஆனா இரண்டாவது பாதியில் அதே வேகத்தோட நல்லா போகுது ,படம் இன்னும் கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிடும் நினைச்சா , அப்பறம் பழிவாங்கும் கொலை ,தேவையில்லாத பாடல் அப்படின்னு கடைசி 30 நிமிடம் அப்படியே படத்தோட வேகத்தை கீழே தள்ளிட்டாரு நான் அப்போவே சொன்னேன்ல படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ் கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னா ? காட்சி அமைப்புகள்ல கொஞ்சம் ரமணா , கொஞ்சம் துப்பாக்கி , கொஞ்சம் கத்தி தெரியுது ,ஒருவேளை முருகதாஸ்க்கு அந்த படங்கள இவர் தான் சீன ஐடியா கொடுத்து இருப்பாரோ ? ஏன்னா இந்த படம் ஆரம்பிக்கபட்டது 2013, கத்தி 2014ல தான் ரிலீஸ் ஆச்சு,துப்பாக்கி படத்தில எப்படி விஜய் தன்னோட தங்கச்சியை அனுப்பி வில்லனை பிடிக்க ட்ரை பண்ணுவாரோ அதே மாதிரி காட்சி அமைப்பு இந்த படத்தில இருக்கு, குறிப்பா இந்த படத்திலும் ஒரு நாய் காட்சி இருக்கு , அது மாதிரி இன்னும் சில. அது எது எது காட்சிகள்ன்னு சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க, அதர்வா ஒரு guaranteed ஹீரோவா மாறிட்டு வரார் போல இருக்கு , இவர் படம்ன்னா ஓரளவுக்கு நம்பி போகலாம்ங்கிற அளவுக்கு வளர்ந்து வறாரு,கொஞ்சம் வித்தியாசமான கதை , நல்ல நடிப்புன்னு பக்காவா இருக்காரு, body , look & feel எல்லாம் நல்லா இருக்கு, அங்க அங்க மாஸும் try பண்ணிருக்காரு , எல்லா commercial படங்களில் ஹீரோயின்க்கு என்ன வேலை ? சும்மா ஊறுகாய் தான் , அதே தான் இந்த படத்தலையும் . இசை நம்ம drumsசிவமணி , பாடல் ரொம்ப சும்மார் , எல்லாம் வெறும் டப்பாங் கூத்து பாடலா இருக்கு , bgm நல்லா இருக்கு ஆனா சில இடங்கள் எங்கயோ கேட்டா மாதிரி ஒரு உணர்வு மொத்தத்தில் : கூட்டி கழிச்சி பார்த்தா கணிதன் கணக்கு ஓரளவுக்கு ஓகே தான் இப்படிக்கு சினி கிறுக்கன்
சேதுபதி இந்த படத்தை பற்றி எழதுவது கொஞ்சம் லேட் தான் ..இருந்தாலும் பரவாயில்லை ..எழதுவது எழதுவோம்ல ... அட நம்ம தமிழ் சினிமாவில பல போலீஸ் படங்கள் பார்த்து இருக்கோம் ..இது என்ன புதுசா பண்ணிட போறாங்க அப்படின்னு நினைச்சு தான் போயிட்டு பார்த்தேன்,அதுவும் நம்ம விஜய்சேதுபதிக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை ? அப்படின்னு கூட நினைச்சேன், ஆனா அது எல்லாம் பொய் ஆக்கிடுச்சு இந்த படம், விஜய் சேதுபதிக்கு இது முதல் மாஸ் படம், பக்காவா செட் ஆகி இருக்கு,, மாஸ்ன்னு பேருல சும்மான்ன பஞ்ச் வசனம் , ஹேய் ஓய் ன்னு கத்தாம்மா அதே நேரத்துல மாஸ் அளவா கொடுத்து இருக்காரு, குறிப்பா canteen ல inspector விசாரிப்பது, வில்லனை arrest பண்ணறது , தன்னோட பையனை வச்சி அடி ஆட்களை மிரட்டுவது செம்ம , நடிப்பிலும் ultimate & கெத்து காட்டிருக்காரு , படம் fullah விஜய் சேதுபதி தாங்கி புடிச்சி இருக்காரு , கதைன்னு பார்த்தா நம்ம தமிழ் சினிமாவுக்கு இது புதுசு இல்ல , வழக்கமான போலீஸ் கதை, வில்லனும் ஹீரோவும் மாற்றி மாற்றி கண்ணாமூச்சி ஆடும் ஆட்டம் தான், ஆனா அதை எந்த அளவுக்கு சுவாரசியமா கொடுக்குறாங்க தான் விஷயம் , அதை இந்த படம் பூர்த்தி பண்ணி இருக்கு , போர் அடிக்காத screenplay, சீரியஸ் ஆனா காட்சியிலும் நல்ல காமெடி கலந்து இருக்காங்க, அது மாதிரி படத்தில் நிறைய காட்சிகள் இருக்கு , குறிப்பா விஜய்சேதுபதி வில்லன் அடி ஆளு பார்த்து டேய் கோவமா பார்க்காதடா சிரிப்பு சிரிப்பா வருதுன்னு அவர் சொல்லும் போது அதை பார்க்கும் போது நமக்கும் சிரிப்பு வருது,அதே மாதிரி சேசிங் சீன்ல , மற்ற போலீஸ்காரர்களை அவர் காலாய்க்கும் போதும் சரி படத்துக்கு தேவையான காமெடிகளை படத்தோட ஒன்றி போவது ரசிக்கிறா மாதிரி இருக்கு. ரம்யா நம்பீசன் அழகா ரெண்டு பசங்களுக்கு அம்மாவா,சேதுபதிக்கு மனைவியா skypeல லவ் பண்ணறதும் அளவா அருமையா இருக்கு,அந்த ரெண்டு பசங்களும் நல்லா cuteah செலக்ட் பண்ணிருக்காரு .. விசாரணை கமிஷன்ல ஒருத்தர் குள்ளமா வருபவர் யார்ன்னு தெரியல,ஹேய் யாருப்பா அந்த ஆளு ? அப்படின்னு கேட்கிறா மாதிரி இருக்காரு அவர், அவர் பேசுவது body language எல்லாம் வித்தியாசமா இருக்கு. எல்லா வகை ரசிகர்களுக்கும் ரெண்டு மணி திருப்தி படுத்துறா மாதிரி ஒரு படம் தந்துஇருகாரு விஜய் சேதுபதி மொத்தத்தில் : மாஸ் + காமெடி + entertainer = சேதுபதி இப்படிக்கு சினி கிறுக்கன்
இன்னைக்கு எப்பொழுதும் போல படத்தை பற்றி எழுதாம ..ஒரு கற்பனை பேட்டி எடுக்கலாமே தோனுச்சு ... freeயா இருந்தா வாங்களேன் பேய் மாதிரி வந்த மிருதன் கிட்ட எடுத்த இந்த பேட்டியை படிங்களேன் ... சினி கிறுக்கன் : உங்க பேரு ? மிருதன் : நான் தான் மிருதன் சினி கிறுக்கன்: அப்படினா !. !. ?? மிருதன்: மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான் சினி கிறுக்கன்: அட நீ நம்ம ஆளவந்தான்.. மிருதன்: யோவ் அவர் கடவுள் பாதி ..மிருகம் பாதி கலந்து செய்த கலவை ...நான் மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை சினி கிறுக்கன் : டேய் எந்த ஊருடா நீங்க ?எங்க இருந்து டா வந்திங்க ? தடார் தடார்ன்னு வரிங்க , படார் படார்ன்னு கடிக்கிரிங்க மிருதன் : எங்க native place ஹாலிவுட் ,, கொஞ்சம் வேற நாட்டுல எல்லாம் இருந்தோம் .. ஆனா இப்போ தான் இந்தியாவுக்கு வந்து இருக்கோம் ..இப்போ election வேற அதான் தமிழ் நாட்டுக்கு வந்துட்டோம் சினி கிறுக்கன் : ஏன்டா உங்கள control பண்ண ஆளு இல்லையா ? மிருதன் : ஏன் இல்ல ஹீரோ ஜெயம் ரவி இருக்காரு, .. போன வருஷம் தனி ஒருவன் ஆகா இருந்து பூலோகத்தை காப்பாற்றியதுக்கு அப்புறம், எங்களை எல்லாம் சாவடிச்சி லக்ஷ்மி மேனன் கிட்டேயும் , உங்ககிட்டேயும் நல்ல பேரு வாங்க try பண்ணி இருக்காரு சினி கிறுக்கன் : எப்பா டேய் ஆமா டா...ஒரே ஆளு gun வச்சிக்கிட்டு சுத்தி சுத்தி சுட்டுகிட்டே போறாரு ..ஊட்டில இருந்து கோயம்புத்தூர் வந்த அப்புறம் ஊருக்குள்ள வேற போலீசே இல்லையா ?.. தனி ஒருவன் படம் நடிச்சாலும் நடிச்சாரு அவர் மட்டுமே தனி ஒரு ஆளா சண்டை போடுறாரு இதுல எனக்கு ஒரு doubt .... மிருதன் : என்ன ?? சினி கிறுக்கன்: ஹீரோவை கடிச்சீங்க , சுத்தி இருக்கிருவங்க அப்படி, இப்படின்னு எல்லோரையும் கடிக்கிரிங்க , ஆனா கிளைமாக்ஸ்ல ஹீரோ யினை ஹீரோ காப்பாற்ற வரும் போது கூட ஹீரோயினைமட்டும் கடிக்க try பண்ணல ??அப்புறம் அந்த hospitalக்கும் மால்லுக்கும் நடுவே .. நீங்க ஏன் சும்மா கையை மேலே தூக்கிகிட்டு டான்ஸ் ஆடுறா மாதிரியே பண்ணிங்க ? மிருதன் : யோவ் அதை டைரக்டர் கிட்ட கேளுயா ..நாங்க எல்லாம் stunt artist & junor artist தான்ங்க .. அவர் சொல்லுறது தான் நாங்க கேட்க முடியும் சினி கிறுக்கன்: இன்னொரு doubt மிருதன் : என்ன doubt ? சினி கிறுக்கன்:உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க மிருதன் : சரி அதுக்கு என்ன ? சினி கிறுக்கன்: அது இல்ல ...உங்களுக்கு தண்ணின்னா பயம்ன்னு சொன்னங்க அதனால fire engine வண்டி கொண்டு வந்து ..pipe மூலமா தண்ணி அடிச்சி ஒருத்தர் ஒருத்தரா hospitalகுள்ளசேர்த்து அப்புறம் தண்ணி காலி ஆகி ஹீரோயினை கஷ்ட்டப்பட்டு காப்பாத்தினதுக்கு பதிலா .. அந்த வண்டில ஒரே stretchல எல்லாரையும் உட்க்கார வச்சி அந்த தண்ணிய அடிச்சி காப்பற்றி இருக்கலாமே .. அதுவும் இல்லன ஹீரோ போலீஸ் தானே போலீஸ்ல வஜ்ரான்னு ஒரு வண்டி இருக்கு .. அதை வரவச்சி தண்ணி அடிச்சி இருக்கலாமே .... அதுவும் இல்லன மால் பில்டிங் உள்ள water sprayer இருக்கே அதை உடைச்சி இருக்கலாமே . மிருதன் : யோவ். அப்படி எல்லாம் பண்ணிட்டா ஹீரோவுக்கு வேளை இல்லாம போய்டும். படம் சீக்கிரம் முடிஞ்சிடும் .. ஏற்கனவே படம் வெறும் 108 நிமஷம் தான் ...போயா நீ ரொம்ப கேள்வி கேட்கிற சினி கிறுக்கன்: இன்னொரு கேள்வி கேக்கணும் மிருதன் : என்ன ???? ...150 ரூபா கொடுத்து படம் பார்த்துட்டு 150 கேள்வி கேட்பியா .. நீ ??.. ரொம்ப கேள்வி கேட்ட உன்னையும் கடிச்சிடுவேன் சினி கிறுக்கன்: sorry பாஸ் ...தல கூட கார்ல தான் 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணுவாரு ஆனா ஜெயம் ரவி tempo traveller ல எப்படியா 360 டிகிரி drive , drifting, எல்லாம் பண்ணாரு ? மிருதன்: படிக்கிற audience எல்லாரும் நல்லா கை தட்டி விசில் அடிங்கபா .. ஏன்னா இப்போ வர படத்தில பல director நம்ம தல அஜித் ஸ்க்ரீன் ல காண்பிச்சா கை தட்டி ரசிப்பாங்கன்னு, அந்த மாதிரி சீன் வைக்கிறாங்க ..அதே மாதிரி இந்த சினி கிறுக்கனும் try பண்ணுறான் அஜித் பெயரை சொல்லி .. ... யோவ் படத்தில இருக்கும் நல்ல points சொல்லுயா சினி கிறுக்கன்: சரி சொல்லுறேன் ..ஸ்ரீமான் , ஜெயம் ரவி friend வரும் காளி , மற்றும் லக்ஷ்மி மேனன் அப்பா .இவங்க எல்லாம் பண்ணிருக்கும் காமெடி நல்லா இருக்கு.படம் fastah போகுது .. மிருதன்: யோவ் படம் நல்லா இருக்கா ? நல்லா இல்லையா அதை சொல்லு சினி கிறுக்கன்: தமிழ் நாட்டுல புதுசா எதாவுது வந்தா நிச்சயமா ஆதரிப்பாங்க ..அதனால உன்னையும் ஆதரிப்பாங்க .. நீ எப்படி இருக்க வந்து பார்ப்பாங்க . சினி கிறுக்கன் & மிருதன் : நன்றி வணக்கம் உங்களுக்கு இந்த கற்பனை பேட்டி பிடித்து இருந்தால் ஷேர் செய்யவும் ..மேலும் கீழே கமெண்ட் பண்ணவும் பிடிக்காவிட்டாலும் சரி ..கீழே கமெண்ட் பண்ணவும் .. இது freedom 251 மாதிரி இல்லங்க காசா பணமா ?..free தான் நல்லதோ கேட்டதோ கமெண்ட் பண்ணுங்க ..திருத்திக்கிறேன் இப்படிக்கு சினி கிறுக்கன்
ஜில் ஜங் ஜக் இது ரொம்ப பிரபலமான வடிவேலு வசனம், அட அப்போ அது பொண்ணுங்க லவ் அப்படி இப்படி இருக்கும் நினைச்சா அது இல்ல, ஏன்னா இந்த படத்தில ஹீரோயின் இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க. படம் ஆரம்பிச்ச உடனே எப்போ சித்தார்த் , RJ,பாலாஜி காட்டும் போது மக்கள் ஆ ஓ ன்னு பெரிய நடிகர்கள் படம் மாதிரி கத்துனாங்க, பார்க்கவே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி, ஒரு வேளை சென்னை வெள்ளத்திற்கு எல்லாம் உதவினாங்க, அதனால அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தாங்களோ ?சரி அது எப்படியோ சினிகிறுக்கன் சார்பில் அவர்களுக்கு மனதார வாழ்த்துகள். சரி படத்தை பற்றி பார்ப்போம் படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் என்னன்னா ? நிச்சியமா இந்த படம் மற்ற படங்களில்ருந்து வித்தியாசமா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு எடுத்து இருக்காங்க..கதை நடக்கிற களம் , கதாபாத்திரங்கள், அவர்களோட body language ,இசை படம் fullah Bgm ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கு.ஆனா lightah அங்க அங்க cow boy படம் மாதிரி ஒரு feel வருது , இந்த மாதிரி ஒரு புதிய attempt பண்ண டைரக்டர், அதற்க்கு உதவிய தயாரிப்பாளர் இதற்காக இந்த படத்தை ஜில்லுன்னு சொல்லலாம் . அப்போ ஜங்ன்னு சொல்லுற விஷயம் என்ன? ,, சித்தார்த் காமெடி ,கூடவே நடிச்ச ரெண்டு பேரோட expression , ராதாரவியோட வித்தியாசமான நடிப்பு, இயக்குனர் படத்தை கொஞ்சமாவது ஜில்லுன்னு பண்ணனும்ன்னு முடிவு பண்ணி, படத்தில ரெட்டை அர்த்த வசனங்கள், பல நேரடி வசனங்கள், அதிலும் ஒரு பெட்ரோல் வச்சி இருக்கும் இடத்தை வெடிக்க வச்சி, ஒரு தன் கிட்ட போதை பொருள் எடுக்கற வரைக்கும் பண்ணற காட்சிகள் மட்டும் தான் நல்ல சிரிப்பு வருது அதுவும் அந்த இடத்தில நிறைய adults only நகைச்சுவை, தான் மற்றபடி படத்தில் ரொம்ப ரசிக்கிறா மாதிரி நகைச்சுவை இல்ல, அதனால படம் கொஞ்சம் ஜங்ன்னு தான் இருக்குது படத்தில் நிறைய இடங்களில சொல்லுற terminology கொஞ்சம் மனசல பதியல,கிளை கதைகள்ன்னு நிறைய வச்சி இருக்காங்க, ஆனா மொத்த படத்தில கதைன்னு பார்த்தா ஒரு strong கதை இல்லை, படம் பார்த்தா நடக்கிற இடம், பேசுற விதம் எல்லாம் பழய காலத்து கதை போல ஒரு உணர்வு ஆனா படம் ஏன் 2020 நடப்பது மாதிரி எடுத்தாங்க தெரியல,இது எல்லாம் இந்த படத்தோட ஜக்ன்னு சொல்லலாம் மொத்தத்தில் படம் புதுமையா try பண்ணதுக்கு ஜில்லுன்னு சொல்லலாம் , கதை, மற்றும் ரொம்ப வள வள சொன்னதுக்கு ஜக்குன்னு சொல்லலாம். இப்படிக்கு சினி கிறுக்கன்
சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை பற்றி நான் பேசுற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைங்க ,இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததிற்கு , இயக்குனர் வெற்றிமறானுக்கும் , அதை உருவாக்க தயாரிப்பாளராக துணைபுரிந்த தனுஷ்க்கும், ஒரு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்,ஏன்னா இந்த மாதிரி ஒரு உண்மை கதையை எடுத்து வெளியிட ஒரு தைரியம் வேண்டும், ஒரு போலீஸ் விசாரணையில் என்ன எல்லாம் நடக்கும், எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கும், காவல்துறைக்கு உள்ளே எந்த மாதிரி அரசியல், மற்றும் தனி நபர் பதவி முன்னேற்றம், தங்கள் சுயநலத்திற்காக எந்த அளவிற்க்கு எல்லாம் போவாங்க என்று காட்டி இருக்கும் படம் தான் இந்த விசாரணை,ஆனா அது சினிமா தனமா இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் எல்லாம் எப்படி இருக்கும் அங்க எப்படி நடை முறையில் உள்ளதுன்னு உண்மையா கொடுத்து இருக்காரு,என்கௌண்டர்க்கு போகும் போது துப்பாக்கியை கையழுத்து போட்டு வாங்குவது எல்லாம் நல்லா காட்சி படுத்திருக்காங்க ,மற்ற படங்களில் எல்லாம் சும்மா பொம்மை துப்பாக்கி போல தான் ஒரு feel இருக்கும் ஆனா இதுல அப்படி இல்ல,உண்மையா சொல்லணும்ன்னா அந்த துப்பாக்கி வாங்கும் போது அதோட கனத்தை உணர முடிந்தது நமக்கு , அட அந்த அளவுக்கு weight ah இருக்குமான்னு தோனவச்சது அந்த அளவுக்கு காட்சி படுத்தி இருப்பாரு நிச்சயமா இந்த படம் பார்க்கும் போது நாமே அங்க இருந்து அடி வாங்குற மாதிரி ஒரு உணர்வு, அட்டகத்தி தினேஷ் அந்த அளவுக்கு நடிச்சி பிண்ணி எடுத்துடாரு, அதுவும் அவர் நின்ற இடத்திலிருந்து அடிவாங்கும் காட்சியில் அவர் மூக்கில் இருந்து சளி வர அளவுக்கு காட்டுவது அவரின் நடிப்பின் உச்சம், அவர் அந்த காட்சியில் நடிச்சார இல்ல நிஜமாகவே அடி வாங்கினாரா தெரியல , அவர் குக்கூ படத்திற்கு அவார்ட் நிறைய வாங்குவாருன்னு அவர் எதிர் பார்த்து இருப்பார் ஆனா அவர்க்கு அது கிடைக்கவில்லை,நிச்சயமா அது ஏமாற்றமா இருந்து இருக்கும், ஆனா நிச்சயமா இது அவர்க்கு வங்கி தரனும் அவர் மட்டுமா ? அவர் கூட நடிச்ச மற்ற மூன்று பேரும் செம்ம, இறுதி காட்சியில் அப்சர் கதாபாத்திரத்தில் வருபவர் கை உதறிகிட்டே பக்கெட் எடுத்து போகுற காட்சி சூப்பர், பார்க்கிற நம்மகே ஐயோ இவங்களுக்கு என்ன ஆக போகுதுன்னு அளவுக்கு பார்பவர்களை படத்தோட ஒன்ற வச்சிட்டாரு இயக்குனர். கிஷோர் கொஞ்ச நேரம் வந்தாலும், சமூதிரகனியொட பேசுகிற வசனம், தெனாவட்டு எல்லாம் சூப்பர், சமூதிரகனி நிறைய படத்தில போலீஸ்காரரா வராரு, இதுல பக்காவா செட் ஆகிட்டாரு, அவர் கோவமா இருக்கும் போதும் சரி, கடைசியா தப்பு பண்ணுகிறோமோ உணரும் போதும் சரி கலக்கிட்டாரு முதல் பாதி சில காட்சிகள் , ஹோட்டல்க்கு அனுப்பி சாப்பிட வைப்பது , மற்றும் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகுதுன்னு நாம்ம யூகிக்கிற அளவுக்கு இருந்தாலும் , கை தட்டி ரசிக்க வைச்சிருக்காரு வெற்றிமாறன், அதுவும் அந்த ஆந்திர போலீஸ் நீதிபதிகிட்ட மொக்க வாங்குற காட்சி, கைதட்டு தியேட்டர் கிழிது, படம் ஆரம்பிக்கும் போதே அந்த விடியகாலை பொழுது, ஆந்திரா ஸ்டேஷன் உள்ள, கிளைமக்ஸ் இருட்டான பகுதி, அப்படின்னு எல்லாம், ரொம்ப ரியலா feel பண்ண வச்சி இருக்காரு கேமராமேன், கிஷோரை தொங்க விட்டு அடிக்கும் போது ஒரு கொசு வந்து உட்காரும் ஒரு ஷாட் செம்ம , அது நிஜமாகவே ஒரு கொசு வந்ததை எடுத்தாங்களா ? இல்ல எதாவுது சிஜி வேலையான்னு தெரியல, அந்த அளவுக்கு ரொம்ப தத்துருபமா எடுத்து இருக்காங்க
இந்த படம் இன்டர்நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு அதனால நான் ரொம்ப நல்லா இருக்கு சொல்லுறேன் நினைக்காதிங்க, உண்மையில் படம் பார்த்து முடிச்ச பிறகு அதன் தாக்கம் நிறைய இருந்தது அதற்க்கு காரணம் அந்த கதையின் எழுத்தாளர் படம் முடிஞ்ச பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் பேசியதை போட்டு இருக்காங்க , மேலும் அவர் தான்!! ...யார் அவர்?? படம் பார்த்து தெரிஞ்சிகோங்க மொத்தத்தில் இந்த படம் முடிந்து வந்த பிறகும் நமக்கு நாமே ஒரு விசாரணை செய்யும் அளவிற்கு ஒரு உணர்வு கொண்டு வந்த படம் படம் trailer பார்த்து ரொம்ப வன்முறையா இருக்குமோன்னு நினைச்சி போய் பார்க்காம இருக்காதிங்க , நிச்சயமா போயிட்டு பார்க்க வேண்டிய படம்
நம்ம கோலிவுடில் பேய் காலம் , சிரிப்பு காலம் போல இப்போ ஸ்போர்ட்ஸ் காலம் வருது, ஈட்டி(விளையாட்டுன்னு சொல்லிட்டு படம் எங்கயோ போச்சி),பூலோகம் (விளையாட்டு மட்டும் இல்ல விளையாட்டு வச்சி இந்த மீடியா எப்படி விளையாடுதுன்னு சொன்னாங்க), ஆனா இது விளையாட்டை மட்டும் மையம் படுத்தி, அதுக்குள்ள இருக்கிற உள்ளுக்குள்ள நடக்கும் தனி நபர் காழ்புணர்ச்சி மற்றும் அந்த பாக்சிங்ன்னு சொல்லிட்டு சும்மா பறந்து பறந்து சண்டை போடாம ஒழுங்கா அந்த விளையாட்டை எப்படி இருக்குமோ அப்படியே காட்டி இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று. ஒரு விளையாட்டு படத்தில் எப்படி கதை இருக்கும்? முற்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கெட்ட பெயர் எடுத்த ஒரு கோச் ஒரு ஹீரோவை வச்சி அவர் நல்ல பெயர் எடுக்கும் படமா தான் பொதுவா இருக்கும், அதே போல தான் இதுலயும் இருக்கு ஆனா இங்க ஹீரோவிற்கு பதிலா ஹீரோயின், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் இது. எப்படியும் ஹீரோயின் தான் ஜெயிபாங்க தெரிஞ்சாலும், கடைசி வரைக்கும் பரபரப்பா கொடுத்து இருக்காங்க டைரக்டர் படத்தில் நல்ல விஷயங்கள் என்ன என்னனா ? 1. படம் எங்கேயும் கதையை விட்டு விலகி போகல சும்மா டூயட் தேவை இல்லாத காமெடின்னு 2. படம் தேவைக்கு ஏற்ப சின்னதா ரெண்டு மணி நேரத்தில் கொடுத்து இருக்காங்க 3.முக்கியமா அந்த சண்டை காட்சிகள் சும்மா சினிமா தனமா மற்ற படங்கள் மாதிரி சும்மா யெக்கி யெக்கி அடிக்காம ஒழுங்கா குத்து சண்டை எப்படி இருக்குமோ அப்படி கொடுத்து இருக்காங்க, அதுக்கு முக்கிய காரணம் அந்த ஹீரோயின் ஒரு நிஜமான குத்துசண்டை வீராங்கனை மேல சொன்ன விஷயங்களுக்காகவே இந்த படம் பார்க்கலாம். ரொம்ப நாளா சின்ன திரையில் ஓரகடம் விளம்பிரத்தில் தான் மாதவனை பார்த்து வந்தோம், இப்போ ரொம்ப நாள் கழிச்சி பெரிய திரையில் மாதவனை இந்த இறுதிச்சுற்றில் பார்க்கிறோம்.ரம்யா கிருஷ்ணன் சொல்லுறா மாதிரி சொல்லனும்னா வயசானாலும் அழகும் ஸ்டைலும் அவரை விட்டு போகாத மாதிரியே வறாரு, அவர் வரும் போது இன்னைக்கும் நிறைய பொண்ணுங்க தியேட்டரில் கத்துறாங்க ஹீரோயின் ரிதிக்கா அவங்க அக்காவா வர மும்தாஜ் நிஜ குத்து சண்டை வீராங்கனை சரியாய் இருக்காங்க, சென்னையில் இருக்கும் போது ரிதிக்கா மாதவன் கிட்ட பண்ணுகிற ரௌடி தனம், நக்கல் எல்லாம் செம்ம கெத்தா இருக்கு.நாசர், ராதாரவி அளவா வந்துட்டு அளவா பண்ணிட்டு போறாங்க, ராதாரவி இந்த படத்தில அவ்வளவ்வு ஸ்கோப் இல்லயே தோணுது, ஆனா climaxல் நாசர் கிட்ட சொல்லுற ஒரு வசனம், அவர் இந்த கதைக்கு யார்ன்னு தெரியும் போது செம்ம காமெடி. சந்தோஷ் நாராயணன் இசையில் - வா மச்சானே பாட்டும் , கட்டிக்க போறேன் பாட்டும் சூப்பர், ஆனா அந்த பாடல்கள் இதுக்கு முன்னாடி வந்த அவர் பாட்டின் சாயல்கள் தெரியுது, முக்கியமா கட்டிக்க போறேன் பாட்டில் வரும் வயலின் இசை pizza படத்தில் climaxல் வரும் bgm போல இருக்கு. pizza இசை கேட்டு பாருங்க 2.34 minutes ல இருந்து 3.20 வரைக்கும் (please click below link - pizza climax) Pizza climax - 2.34 minute to 3.20
இறுதிச்சுற்று ஹே சண்டைகாரா பாட்டு கேட்டு பாருங்க (please click below link - iruthisuttru song) hey sandakara song from Iruthisuttru இது ரெண்டும் கேட்டு பாருங்க எனக்கு என்னமோ அது ஒரே மாதிரி தெரியுது , முக்கியமா அந்த வயலின் இசை கரெக்ட்டுன்னா கமெண்ட் பண்ணுங்க மொத்தத்தில் இறுதிச்சுற்று ரசிகர்களுக்கு குருதிச்சுற்று போல இல்லாமல் உறுதி சுற்றாக இருக்கு இப்படிக்கு சினி கிறுக்கன்
கதகளி, கதகளி கதகளின்னு விஷால் ஆடும் கதகளி, விஷாலுக்கு இந்த மாதிரி ஒரு gangester/பழி வாங்கும் கதைகள் ஒன்றும் புதுசு இல்ல, ஆனா இயக்குனர் பாண்டிராஜ்க்கு இது புதுசு ..பாண்டிராஜோட பசங்க, பசங்க-2 , தவிர மற்ற படங்கள் எனக்கு அந்த அளவுக்கு உடன்பாடில்லை, ஆனா இந்த கதகளி பண்டிராஜ் நல்லாவே கதகளி ஆடி இருக்காரு. படம் வழக்கம் போலவே ஆரம்பம் ஆகுது, பிறகு ஒரு opening பாட்டு,கொஞ்சம் காமெடி, காதல்ன்னு சாதாரனமா போகுது, பிறகு கதைக்குள்ள படம் போன பிறகு, படம் எங்கேயும் track மாறாம பயணிக்கிறது, அந்த கதையோட mood மாறாம, ஒரு speed breaker போல தேவை இல்லாத பாடலோ , காமெடியோ , காட்சிகளோ சேர்க்கமா போவது ரொம்ப பிளஸ் பாயிண்ட் . பொதுவா தமிழ் படங்களில் மதுரை, நெல்லை, சென்னைன்னு கதை நடக்கும், ஆனா கொஞ்சம் வித்தியாசமா கடலுர்ன்னு கதை நடக்கிறது நல்ல இருக்கு, விஷால் தேவை இல்லாத பஞ்ச், சத்தமா சும்மான்னா கத்தி, கத்தி, பேசாம அடக்கமா நடிச்சி இருக்காரு,அதுக்காகவே ஒரு salute, கேத்ரின் தெரேசா அழகா மட்டும் இருக்காங்க ஆனா நடிப்புக்கோ ,நடிக்கிறதுக்கு வாய்ப்போ ரொம்ப கம்மி, கருணாஸ், விஷாலோட friendsah வரவங்க அளவா கதைக்கு ஏற்ப நடிச்சிருக்காங்க, தம்பா கேரக்டர்ல வருபவர், அந்த போலீஸ்காரர் அப்படின்னு எல்லோரும் perfect, நீங்க யோசிக்கிலாம் என்னடா இவன் எந்த படத்தலையும் இந்த அளவுக்கு ஒரு ஒரு கேரக்டர்க்கும் detailலா சொன்னதில்லையேன்னு, ஆமா இந்த படத்தில் பண்டிராஜ் ஒரு ஒரு கேரக்டர் தெளிவா அளவா கொடுத்து இருக்காரு. இசை: ஹிப் ஹாப் தமிழா படத்தில் ரெண்டே ரெண்டு பாட்டு தான் , ரெண்டு பாட்டும் ஏற்கனவே கேட்டா மாதிரி இருக்கு, ஆனா bgm நல்லா பண்ணி இருக்காரு, படம் கதகளின்னு பேரு வைத்தாலோ என்னமோ, சண்ட மேளம் படம் fullah கொடுத்து இருக்காரு,ஆனா நிச்சயமா ஹிப் ஹாப் தமிழா rocking,குறிப்பா ஒரு விசில் கொடுத்தா மாதிரி வருகிற Bgm அருமை. கேமரா : பாலசுப்ரமணியம் & எடிட்டிங் : பிரதீப் மழை, கடலூர் நோக்கி இரவு பயணம் அப்படின்னு நல்லா feel பண்ண வச்சி இருக்காரு, எடிட்டிங் படத்தோட வேகத்துக்கு நல்லாவே ஈடு கொடுத்து இருக்காரு, அட என்னடா கேமரா & எடிட்டிங் எல்லாம் சொல்லுறியே அவ்வளவு பெரிய ஆளான்னு கேக்காதிங்க, நமக்கு அந்த அளவுக்கு technicalah , தெரியாது ஏதோ சொல்லணும் தோனுச்சி சொல்லிட்டேன். மொத்தத்தில் : கதகளி நம்பி போங்க பாண்டிராஜோட கதகளி ஆடிட்டு வாங்க இந்த பொங்கலுக்கு கொஞ்சம் நல்லா பொங்கியது இந்த கதகளி தான் . இப்படிக்கு சினி கிறுக்கன்
சிவகர்த்திகேயன் & பொன்ராம் கூட்டணியில் இது இரண்டாவுது படம், நிச்சயமா இந்த படம் எப்படி இருக்கும்ன்னு நான் நினைச்சி போனேனோ அப்படியே தான் இருந்திச்சி,அபப்டி என்ன தான் இருந்துச்சி ? இருங்க சொல்லுறேன். கதை ? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில என்ன கதை இருந்திச்சி ? ஒன்றும் இல்லை, அதே போல தான் இதுலயும் ஒன்றும் இல்லை, மெகா சீரியல் போல அப்படியே போயிட்டு இருக்கு, சும்மா குமுதம் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் சேர்த்து தந்து இருக்காங்க.அங்க அங்க அது இது எது சிரிச்சா போச்சு காமெடி பார்கிறா மாதிரி இருக்கு, அங்க அங்க situation ஏற்றார் போல எதாவுது சினிமா பாட்டா போட்டு காமெடி என்கிற பேருல பண்ணி இருக்காங்க, ஒரு சில இடங்கள் தவிர வேற எதுவும் சொல்லிக்கிறா போல இல்ல , அதுவும் இரண்டாவுது பாதி போகுது போகுது போய்கிட்டே இருக்கு, எப்போடா முடியும்ன்னு ஒரு எண்ணம் தோணுது சிவகர்த்திகேயன் & சூரி அவங்க நடிப்பையும், எடுக்கும் காதபாதிரங்களும் நிச்சயமா மாற்றி ஆகவே வேண்டும், சும்மா ஒரே மாதரியான நடிப்பை தான் இரண்டு பேரும் தாரங்க, சிவா இன்னும் நிறைய mature கதாபாத்திரம் எடுத்தா நல்லா இருக்கும், சும்மான்னா குழந்தைகளுக்கு பிடிச்ச ஹீரோன்னு அதே மாதிரியே பண்ணா அவருக்கு audience limited ah தான் இருப்பாங்க.அவர் VJவா இருக்கும் போது என்ன மாதிரி கவுன்ட்டர் கொடுப்பாரோ அதே மாதிரி எல்லா படத்தலையும் காமெடி என்கிற பேருல ஒரே மாதிரி கொடுப்பது ரொம்ப திகட்டுது. சூரி சார் ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க இங்கிலீஷ் பேசினா அது நல்ல காமெடியா இருக்கும் அது மக்கள் ரசிப்பாங்கனு நினைச்சி அதே பண்ணி வெறுப்பு ஏற்றாதிங்க, தயவு செய்து நீங்க படத்தில் இங்கிலீஷ் பேசுறதை நிறுத்துங்க. ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ரொம்ப அழகா இருக்காங்க, இது என்ன மாயம் படத்தில் கொஞ்சம் மாடர்னா வரும் போதும் சரி, இதுல ஹோம்லியா வரும் போதும் சரி இரண்டுமே செட் ஆகுது, ஹீரோயின் அப்பாவா வரவர் யார்ன்னு தெரியல ஆனால் ஒரு ரஜினி ரசிகரா அவர் அப்போ அப்போ முடிய தள்ளிவிட்டு வருவது நல்லா இருக்கு. ராஜ்கிரண், சத்யராஜ் இவங்களுக்கு எல்லாம் அப்பா, தாத்தா கதாபாத்திரம் பண்ணறதுன்னா அல்வா சாப்பிடுகிறா மாதிரி,அதை அளவா அழகா பண்ணிருக்காரு ராஜ்கிரண். மொத்தத்தில் இந்த படம் யாருக்குன்னா சிவகார்த்திகேயன் fans ஆகிய காலேஜ் கேர்ள்ஸ் , வீட்டுல இருக்கும் அம்மா , குழந்தைகளுக்கு மட்டும். மொத்தத்தில் எனக்கு ரஜினி முருகன் வெறும் முருகன் இப்படிக்கு சினி கிறுக்கன்
அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் படம் ஆரம்பிக்கும் போது பாராட்ட வேண்டிய விஷயம் என்னன்னா, சத்யராஜ் பெயரை முதலில் போட்டு தான் அப்புறம் உதயநிதி பேரு வருது , அப்படியே படத்துக்குள்ள கதை போன்னா openingல பயங்கரமான ஒரு shoot out நடக்குது , அடடே படம் செம்மடா ..அப்படியே படம் தமிழ்நாடு குமுளிக்கு வருது, குமுளின்னு சொல்லி படம் எடுத்து இருக்காங்க ஆனா உண்மையாக எங்க எடுத்தாங்க தெரில, ரொம்ப அழகா காட்டி இருக்காங்க, அடடே படம் செம்ம கெத்தா போகும் போல அப்படின்னு நினைச்சா ! ! ! அப்புறம் வழக்கமான பாதையில் படம் போகுது, ஹீரோ, ஹீரோயீன் intro, அப்படியே அவங்களுக்கு ஒரு பாட்டு, எமி ஜாக்சன் இன்னொரு ஜெனிலியா போல ட்ரை பண்ணி இருக்காங்க, படத்தின் முதல் 30-45 நிமிஷம் எமி வாரங்க பிறகு எங்க போய்ட்டாங்கன்னு தெரியாது, காமெடி பெருசா வொர்க் அவுட் ஆகல, ஏன்னா உதயநிதிக்கு கூட நம்ம சந்தானம் இந்த படத்தில் இல்ல விக்ராந்த் முதல் காட்சியில் காட்டும் போது மக்கள்கிட்ட நல்ல வரவேற்ப்பு , அவரும் ஒரு இன்டர்நேஷனல் தீவிரவாதி கேரக்டர் ஆகவே மாறிட்டாரு, விக்ராந்துக்கு இந்த படம் நிச்சயமா ஒரு பிரேக் தரும் போல நினைச்சேன், ஆனா படம் முதல் காட்சிக்கு அப்புறம் கடைசியா கொஞ்ச நேரம் guest ரோல் போல வந்துட்டு போறாரு சத்யராஜ் வழக்கம் போல ஒரு சிறந்த அப்பாவா வந்துட்டாரு, நிச்சயமா இவருக்கு சினிமாவில் சிறந்த அப்பான்னு ஒரு விருது தரலாம், நிறைய படங்களில் அவர் அப்பாவா வந்து நல்ல ஸ்கோர் பண்ணிட்டு போகுறாரு. படத்தில் ஒரு பார்ல சண்டை வருது அதுல நல்ல மாஸா உதயநிதிய காட்டி இருக்காங்க, stunt மாஸ்டர் அந்த சண்டைய நல்லா பண்ணி இருக்காரு.அந்த பார் சண்டைல ஒரு பாட்டு bgm போல வருது நல்லா இருக்கு, ஆனா lightah என்னை அறிந்தால் தீம் போல எனக்கு தோணுது தில்லு முள்ளு பண்ணல பாட்டு எதுக்கு ஏன் வருதுன்னு தெரியல ஆனா கேட்பதற்கு காமெடியா இருக்கு, அதே நேரத்துல பழய ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுகள் ஏதோ கேட்டா மாதிரியே இருக்கு, இந்த படத்துக்கு மியூசிக் டைரக்டர் ஹாரிஸ்ah இல்ல தேவாவான்னு தெரியல, முட்டை பஜ்ஜின்னு ஒரு பாட்டு கேட்கவே கொஞ்சம் கொடுமையா தான் இருக்கு. படத்தோட கதை என்ன ? விக்ராந்துக்கு ஒரு assignment அதாவுது ஒரு இந்தியன் விஞானியை கொல்லனும், அந்த விஞானி பெயர் தெரியுமா ? A .K .Abdul Kamal , அடபாவிங்களா அப்துல் கலாமை , அப்துல் கமால்ன்னு மாத்திட்டாங்க, அவர் எழுதிய அக்னி சிறகுகள் என்கிற புத்தகத்தை, அக்னி இறகுகள்ன்னு மாத்திட்டாங்க, கதையில் இப்படி லாஜிக் இல்லா மேஜிக் பண்ணி இருக்காங்க. படம் பார்க்கும் போதே சில பேரு msg பண்ணாங்க அதாவுது கெத்து கொஞ்சம் வெத்துன்னு, but நம்ம அப்படியே சொல்ல கூடாது இதோ வருது நம்ம பாணி முடிவுரை படத்தோட trailer பார்த்தா செம்ம கெத்து, அழகா இருக்க ஹீரயின்க்கும், இடங்களை அழகா காட்டின காமேராமேனுக்கும் ஒரு பூங்கொத்து படத்தோட கதைய கேட்டா காதுல ஒரு குத்து இப்படிக்கு சினி கிறுக்கன்
அனைவருக்கும் சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் . பாலாவின் தாரை தப்பட்டை இசைஞானியின் 1000வது படம் இப்படின்னு ரொம்ப எதிர்பார்போடு வந்து இருக்கு, டைரக்டர் பாலா, அமீர், மிஸ்கின் இவங்க படங்களில் எல்லாம் பார்த்த ஒரே மாதிரி ஹீரோக்கள் தான் இருப்பாங்க எப்படின்னா அவங்க நடை,பழக்கவழக்கங்கள், வித்தியாசமான body language, ஒரு மூர்க்க தனமான கதாபாத்திரங்களா இருக்கும், அதுவும் பாலாவின் படம்னா அது கொஞ்சம் நிறைய இருக்கும் சேது-விக்ரம் , நந்தா-சூர்யா , பிதாமகன் - விக்ரம் , நான் கடவுள் - ஆர்யா அவன் இவன் - ஆர்யா & விஷால், அதிலும் ஆர்யா கொஞ்சம் extraவா, பண்ணி இருப்பாரு, அதே போல் heroineகளும் ரொம்ப விசித்திர விசித்திரமா behavior பண்ணுவாங்க, கோவமான காட்சிகள், அழுகை காட்சிகள் எல்லாம் நல்லா நடிக்க வைப்பார்,முதல் தடவையா பிதாமகனில் சூர்யா, லைலா பார்க்கும் போது நல்லா இருந்துச்சி, ஆனா ஏன் ஒரே மாதிரி அனைத்து படங்களிலும் அதே மாதிரி பண்ணுகிறாரு?இதுலயும் அதே மாதிரி ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் இருக்கு , யதார்த்தமான கதை எடுக்கிற பாலா ஏன் செயற்கைதனமா தன்னோட கதாபத்திரங்களை நடிக்க வைக்கிறாரு? கதை என்ன இந்த படத்தில் ? சமிபத்தில் வந்த பாலாவின் படங்களில் கதைன்னு பார்த்தா பொதுவா அது ஒரு சமூகத்தின் வாழ்வாதாரங்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் இன்பதுன்பங்கள் தான் காட்டுவாரு அதே போல தான் இதிலும் காட்டிருக்காரு, என்ன இதில் அவர் எடுத்திருக்கும் ஆயுதும் கரக ஆட்ட குழு, அதே போல் சன்னாசி கரகாட்டகுழுன்னு பெயர் பலகை காட்டி இருக்காங்க, கரகாட்டகார்கள் போடும் ஆடைகள் கூட போட்டு இருக்காங்க ஆனா ஒரு தடவை கூட தலையில் கரகம் வச்சி ஆடவே இல்லை, நம்மக்கு தெரிஞ்சது எல்லாம் கரகாட்டம்ன்னா கரகம் வச்சி ஆடனும் இது எந்த வகைன்னு இதை பற்றி தெரிஞ்சவங்க யாராவுது சொன்னால் நல்லா இருக்கும்.ஏன்னா பாலா இந்த மாதிரி விஷயங்களில் தப்பு செய்ய மாட்டார்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, படத்தோட கதை ஓட்டம் எதிர் பார்த்தா மாதிரி தான் போகுது பெருசா புதுசா எதுவும் சொல்லவில்லை வில்லனா வருகிற சுரேஷ் நிஜ வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர்ன்னு சொல்லுறாங்க , பார்கிறதுக்கு கொஞ்சம் சீரியல் நடிகர் போஸ் வெங்கட் மாதிரி இருக்காரு.ஜோடிno -1 டைட்டில் வின்னர்ன்னு , அமுதவானன், ஆனந்தி ரெண்டு பேருக்கும் படத்தில் ஆடும் வாய்ப்பு கொடுத்துட்டாரு. படத்தோட முக்கியமான ஹீரோ இசைஞானி இளையராஜா தான், படத்தோட trailerல் வரும் Bgmகாகவே இந்த படம் பார்க்கணும் தோனுச்சி, அது எப்போ வரும்ன்னு காத்திருந்தேன், படத்தோட கிளைமாக்ஸ்ல் தான் அது வந்துச்சு, சத்தியமா இசைஞானி அந்த இடத்தில் இசையில் ருத்ரதாண்டவம் பண்ணிட்டாரு, புல்லரிக்க வச்சிட்டார், படத்தில் எந்த இடத்திலும் அழுகையோ, சிரிப்போ எந்த ஒரு உணர்வும் எந்த ஒரு நடிகராலும், நடிகையாலும், ஏன் இயக்குநராலும் கொண்டு வர முடியாததை, கிளைமாக்ஸ்ல் இசைஞானி அந்த கோவம், ஆக்ரோஷம் , வெறி, என்று அனைத்தையும் அந்த இடத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர வச்சிட்டாரு.
மொத்தத்தில் தாரை தப்பட்டை வழக்கமான பாலாவின் பட்டறை இப்படிக்கு சினி கிறுக்கன்
அனைவருக்கும் சினி கிறுக்கனின் புத்தாண்டு நல்வாழ்த்துகள், இந்த வருஷத்தோட முதல் பதிவு இந்த மாலை நேரத்து மயக்கம், நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் செல்வராகவனால் மட்டுமே தர முடியும், இந்த மாதிரி ஒரு கதை அந்த அளவுக்கு ஒரு தைரியாமா எடுக்க இவரை தவிர வேற யாராலும் முடியாது படத்தோட ஹீரோ பார்த்தா அட காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்கேன்னு தோணும், அவர் பேசும் போது அட இது 7G ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா மாதிரி இருக்கே தோணும் ஆனா படத்தோட கதை அது மாதிரி இருக்காது படத்தோட கதை?, கல்யாணம் பண்ணி முதல் இரவுக்கு காத்திருக்கும் ஒரு பையன், ஒருத்தர் மேல நல்ல understanding வந்து தானா நடக்கணும் நினைக்கிற ஹீரோயின், இப்படி ரெண்டு துருவமா இருபவர்களின் வாழ்கை தான் இந்த படம், ஹோட்டலுக்கு கார்ல போற சீன், ஹோட்டலில் ஆர்டர் எடுக்குற சீன எல்லாம் செல்வாவின் முத்திரை தான்.அது மாதிரி ரெண்டு பேரும் பெட் ரூமில் சண்டை போடுற சீன, அந்த ஹீரோயின் கோவபடுறது அந்த பெண்ணோட point of viewல இருந்து அவளோட உணர்வுகள் எல்லாம் காட்டுவதில் ஹீரோயின் நல்லா பண்ணி இருக்காங்க. படத்துல டைட்டிலில் டைரக்டர் கீதாஞ்சலி செல்வராகவன்னு போட்டு இருக்கு ஆனா படம் fullah செல்வராகவனை பார்த்தா மாதிரி இருக்கு, பல காட்சிகள் அவரோட முத்திரை தெரியுது. நிச்சயமா இந்த படத்தை பார்க்க ஒரு பொறுமை வேண்டும், மற்ற entertainment காதல் படம் மாதிரி நினைத்து போக வேண்டாம், அதே மாதிரி குடும்பத்தோட பார்க்க கூடிய படமும் அல்ல,ஏன்னா படத்தோட காட்சிகள் அப்படி இருக்கு, அதே மாதிரி ஓ காதல் கண்மணி படம் பார்த்தவங்க நிறைய பேரு அந்த படத்தை இது ஒரு காதல் படமா கேட்டவங்களும் சத்தியமா இந்த படத்தை போயிட்டு பார்க்காதீங்க மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் commercial படம் பார்பவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் தான். இப்படிக்கு சினி கிறுக்கன்
நான் ரொம்ப நாளா சமூகத்தை கவனிச்சு நினைச்சிருந்த ஒரு சில விஷயம் படமா வந்து இருக்கு, நான் சமிபகாலமா பார்த்த சில பேரு BE முடிச்சிட்டு , MBA பண்ணுறாங்க இல்லாட்டி BE முடிச்சிட்டு MBA படிச்சிகிட்டு bank exam எழுதுறான், ஏன்டான்னு கேட்டா அம்மா சொன்னங்க BE படிச்சேன், அப்பாவுக்காக பேங்க் exam try பண்ணுறேன் சொல்லுறாங்க, ஒரு தடவ முகபேர்ல ராத்திரி 8 மணிக்கு பெரிய வரிசை ஒரு பள்ளிக்கு முன்னாடி எதுக்குனா அடுத்த நாள் அந்த பள்ளியில application form தராங்களாம், அட ஆட்டு மந்தைகளா ஏண்டா நிக்குராங்கன்னு தொன்னுச்சு.ஏன் அந்த பெரிய கொம்பு பள்ளியில படிச்சா தான் சமுதயாத்தில நீங்க ஒரு பெரிய கொம்புன்னு காட்டிக்க தோனும் அதுக்கு தான் அங்க நிக்குறாங்க?, பசங்களுக்கு வரையறதோ, பாடுறதோ, ஆடுறதோ இயற்கையா வரணும், அப்படி இயற்கையா வருவத ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அந்த அந்த கிளாஸ்ல சேர்த்துவிட்டு அதன் நுணுக்கங்களை சொல்லி தரலாம் , அதை செய்யாம 5-10 வயசுலேயே பாட்டு கிளாஸ், drawing கிளாஸ் சேர்த்து விடனும்ன்னு யாருடா சொன்னது?இது எல்லாம் செய்றது எதுக்கு தெரியுமா ? உங்க status காட்டுவதற்கு சேர்த்து விடுவது, அப்படியே சேர்த்து விட்டாலும் 10std -12std படிக்கும் போது படிப்பு தான் முக்கியம் மார்க் வாங்குன்னு அந்த கிளாஸ் எல்லாம் கட் பண்ணி அப்புறம் காலேஜ், மார்க், சம்பளம் ன்னு மறக்க அடிக்கிறது, அப்புறம் என்னதுக்கு அந்த கன்றாவி கிளாஸ்க்கு எல்லாம் சேர்த்து விடுறாங்க ? மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் இப்போ இருக்குற middle கிளாஸ் upper middle கிளாஸ் பெற்றோரை பார்க்கும் போது தோனும் ஆனா இன்னைக்கு எனக்கு இந்த படம் பார்க்கும் போது நிறைய தோணிச்சு அதனால இங்கே பதிவு செய்தேன், சரி படத்தை பற்றி சொல்லுடான்னு சொல்லுறிங்களா, சரி வாங்க பார்க்கலாம்
இந்த படத்துக்கு பசங்க - 2 ன்னு பேரு வச்சதுக்கு பதிலா பெற்றோர்-2 ன்னு பேரு வச்சி இருக்கணும், பெற்றோர் மேல இருக்குற தப்பு எல்லாத்தையும் நம்ம சமூகம் பசங்க மேல தின்னிச்சிட்டு இருக்குன்னு நெற்றி பொட்டுல அடிச்சா மாதிரி எடுத்த படம். கொஞ்சம் 3 idiots , கொஞ்சம் தரே ஜமீன் பர் தாக்கத்துல இந்த படம் எடுத்து இருப்பாரு போல, நிச்சயமா அதே மாதிரி வந்த படம் இதுன்னு நான் சொல்ல வரல. பசங்களோட சுட்டிதனத்த முதல் பாதியில் நல்ல காமெடியா காட்டி இருக்காங்க இரண்டாவுது பாதி பசங்களோட மனநிலைய புறஞ்சிகிற பெற்றோரை காட்டுறாரு வாசனங்கள் ரொம்ப நல்லா இருக்கு, இதோ சில 1.பொண்ணு : அப்பா அந்த ஸ்கூல்க்கும்(private ) என் ஸ்கூல்க்கும்(Govt ) என்னபா வித்தியாசம் அப்பா : அவன் இங்கிலிஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான் , இவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான் அவ்ளோ தான் வித்தியாசம் -( இந்த வசனம் இதுக்கு முன்னாடி facebook or வேற படத்திலா வந்ததுன்னு தெரில ஆனா இந்த படத்தில் பதிவு செய்தது சூப்பர் ) 2. பசங்க கெட்ட வார்த்தை பேசல கேட்ட வார்த்தை தான் பேசுறாங்க 3.பசங்க மனசுல மதிப்பெண்ணை விதைக்காதிங்க , நல்ல மதிப்பான எண்ணங்களை விதைங்க இது மாதிரி பல வசனங்கள் நல்லா இருக்கு
அந்த ரெண்டு பசங்களும் அழுவது, சிரிப்பது, வாலுதனம் செய்வதுன்னு ரொம்ப இயற்கையா இருக்கு ஏன்னா படங்கள இந்த மாதிரி கேரக்டர் பண்ணும் போது ஓவர் acting இல்லாட்டி செயற்கை தனமா தெரியும் அது மாதிரி இல்லாம இந்த ரெண்டு பசங்களும் ரொம்ப இயல்பா பண்ண வச்சி இருக்காரு டைரக்டர். முனிஷ்காந்த் திருட்டுதனம் பண்ணறது எல்லாம் நல்ல காமெடி , கார்த்திக், பிந்து மாதவி பள்ளியில் அட்மிசன் வாங்குற சீன சூப்பர், சூர்யா, அமலபால் குடும்பம் நல்ல positiveah காட்டினது அருமை. எந்த ஒரு நெகடிவ் விஷயங்களோ, எந்த ஒரு நெகடிவ் கேரக்டர்களோ கட்டாமல் இருந்ததுக்கு டைரக்டர்க்கு நன்றி.நிச்சயமா குடும்பத்தோடு குறிப்பாக பெற்றோர்கள் நிச்சயமா பார்க்க வேண்டிய படம் பூலோகம், பசங்க-2 இந்த இரண்டு படங்களும் இந்த சமுதாயத்தை பிரதிபலிக்கிற கண்ணாடியாய் இந்த வருஷ இறுதில வந்தது சூப்பர். இப்படிக்கு சினி & சமூக கிறுக்கன்
சினி கிறுக்கனின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், நான் இந்த ப்ளாக் ஆரம்பிச்சி இந்த ஒரு வருஷத்தில இது என்னோடைய ஐம்பதாவுது பதிவு..இதுவரைக்கும் 4800+ பார்வையாளர்கள் என்னோட பதிவை பார்த்து இருக்காங்க .இன்னைக்கு வரைக்கும் என்னோட பதிவுகளை படிச்சி என்னை பாராட்டினவங்க,கலாய்ச்சவங்க , அப்புறம் கொஞ்சம் பேரு feedback சொல்லி என்னை ஊக்கம் கொடுத்தவங்க மேலும் watsapp friends , fb friends எல்லாருக்கும் நன்றிகள் சரிடா ரொம்ப நெஞ்ச நக்காதடா படத்தை பற்றி சொல்லுன்னு சொல்லுற உங்க mind வாய்ஸ் கேக்குது, சரி வாங்க பார்க்கலாம் படம் எடுத்து முடிச்சி ரொம்ப நாள் வெளியே வராத வாலு , ரஜினிமுருகன் , பட வரிசையில் பூலோகமம் ஒன்று, இதுக்காகவே இந்த படத்தை memesல நிறைய கலாய்ச்சிருக்காங்க , ஒரு வழியா இந்த படம் சுமார் 2-3 வருஷம் காத்திருந்து வந்து இருக்குது, அப்படி காத்திருந்து வந்தாலும் இந்த சமுகத்தை கத்தி எடுத்து குத்த வந்தா மாதிரி வந்து இருக்கு. Boxing படம் சொன்னவுடனே என்ன தோனும்? ,ஏதோ loveகாக சண்டை போடுறது, இல்லாட்டி குடும்ப பகைகாக சண்டை போடறது அதுவும் இல்லனா சண்டை போட்டா தான் பொண்ணு கிடைக்கும் அதுபோல தான் தோனும்,ஆனா boxing என்பதை ஒரு கதை களத்திற்காக பயன்படுத்தி, இந்த மீடியா பண்ணற அட்டகாசத்தை அட்டகாசமாக காட்டிருக்கும் படம் தான் பூலோகம். டைரக்டர் படம் ஆரம்பிக்கும் போதே audienceக்கு இது தான் கதை,இப்படி தான் போகும்ன்னு, ரொம்ப தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாரு, அதுவே ரொம்ப பெரிய பிளஸ்,படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி கோஷ்டி சண்டை அடி தடி கொஞ்சம் திரிஷா கூட கசமுசா ன்னு படம் போகும் போது அட இது usual படம் மாதிரி போகும் நினைச்சேன், ஆனா அப்புறம் விறுவிறுன்னு top gear ல தூக்கி அடிச்சிகிட்டு போய்கிட்டே இருக்காரு டைரக்டர் நான் எப்பவும் படத்தோட கதை சொல்ல மாட்டேன், ஆனால் இந்த படத்தோட one liner மட்டும் சொல்லுறேன், இப்போ இருக்குற டிவி channels ரியாலிட்டி ஷோ,IPL , ISL , PBL எல்லாம் நடத்தி எப்படி காசு பார்க்குறாங்க, இது தான் ஒரு வரி கதை.இது வரைக்கும் யாரும் தொடாத கதை களம் இது . அதனால எல்லோருக்கும் பிடிக்கும், இந்த டிவிகாரங்களோட உண்மையான முகத்தை பிரி பிரின்னு பிரிச்சி எடுத்துட்டாங்க . இயற்கை, ஈ, பேராண்மை, படங்கள் எடுத்த டைரக்டர் s.p.Jananathan உடைய assistant தான் இந்த படத்தை இயக்கி இருகாரு, Jananathan தான் இந்த படத்துக்கு வசனம் எழுதிருக்காரு, படத்தோட மிகபெரிய பிளஸ் வசனம் தான் சும்மா நெத்தி அடி. பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல அவரோட வில்லத்தனத்தை காட்டிடாரு, அதுவும் ஒரு பெரிய டிவி சேனல் ownerah இதோ அவர் பேசிய சில நச்சு வசனங்கள் 1. இங்க 100 கார் விற்பதை விட லட்சம் ஷாம்பூ விற்பது லாபம், 2. இந்திய ஏழை நாடு தான் ஆனா மார்கெட் பெருசு. 3.காற்றுல வியாபாரம் பண்ணறவன் டா , நான் காற்றுலையே நடப்பவன்டா( பெரிய டிவி சேனல் ownerஅதனால இந்த வசனம் ) 3. தமிழர்களை தமிழன் தான் காப்பாத்தனும் அப்படி சொல்லி ஒருத்தரை ஏமாற்றும் போது எனக்கு அட அரசியல்வாதிகள் நம்மளை இப்படி தானே ஏமாற்று பண்ணுரங்கன்னு உறைக்குது. ஜெயம்ரவிக்கு இந்த வருஷத்தில இது மூனாவுது படம், தனிஒருவன் படத்தோட மாபெரும் வெற்றிக்கு பிறகு நிச்சயமா இதுவும் ஒரு வெற்றி படமா தான் இது இருக்கும், ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் வருத்தி நடிச்சி இருக்காரு, ஆனால் அந்த வெள்ளைக்காரன் வில்லன் Nathan Jones கூட சண்டை போடும் போது கொஞ்சம் காமெடியா இருந்துச்சி ஏன்னா அந்த வில்லனுக்கு முன்னாடி ஜெயம்ரவி கொசு போல தான் தெரியறாரு. ரவி vs பிரகாஷ்ராஜ் agreement போடுற சீன் செம்ம அப்போ பேசுற ஒரு ஒரு வசனமும் தியேட்டர்ல கைதட்டு அள்ளுது .எல்லை தாண்டி நம்ம வீட்டுக்குள்ள வந்து business பண்ணா நாம்ம சும்மா இருக்கோம் ஆனா எல்லை தாண்டி போய் மீன் பிடிச்சா கைது செய்வாங்க , இங்க நீயும் நானும் sports man இல்ல இந்த brandகளை விற்க்கவந்த salesmanன்னு இப்படி வசனங்கள் தெறிக்க விட்டு இருக்காங்க Fight சீன் எல்லாம் எடிட்டர் and கேமரா நல்லா fastah கொடுத்து இருக்காங்க, இசை : ஸ்ரீகாந்த் தேவா , படம் வடசென்னைல நடப்பதால, லோக்கல் , மற்றும் சாவு பாட்டு போட்டு இருக்காரு ஆனா எதுவும் மனசுல பதியவில்லை. த்ரிஷா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இல்ல சும்மா ஓரளவு சப்போர்ட் பண்ணிட்டு போயிட்டாங்க, அதே மாதிரி த்ரிஷாவோட அண்ணன் சும்மா டம்மியா தான் வந்துட்டு போகிறாரு அதே நேரத்தில படத்தில சில விஷயங்கள் கவனிக்காம விட்டுட்டாங்க, அதாவுது , கதை நடப்பது A .R.C .college பொத்தேரி ன்னு சொல்லுறாங்க ஆனா காலேஜ் campus காட்டும் போது frameல S .A ..Engineering College பஸ் தெரியுது பாவம் S A .Engineering காலேஜ்ல ஷூட் பண்ணதுக்கு விளம்பரம் பண்ணிட்டாங்க போல, அப்புறம் collegeக்கு சாப்பாடு த்ரிஷாவோட மெஸ்ல இருந்து செய்து போகிறா மாதிரி முதல காட்டுறாங்க ஆனா பின்னாடி காலேஜ் உள்ளவே செய்கிறா மாதிரி காட்டுறாங்க ,எப்படி assistant directors இந்த மாதிரி continuity எல்லாம் மிஸ் பண்ணறாங்க தெரியல, அப்புறம் முக்கியமான விஷயம் நம்ம தமிழ் சினிமால boxingனா அடிச்சி முகத்துல ரத்தம் எல்லாம் வந்து கொஞ்சம் காட்டுதனமா எல்லாம் அடிக்கிறாங்க, நிஜமாகவே அப்படி ஒரு boxing type எதாவுது இருக்கா? அப்படி இருந்த சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன், அதே போல boxingல points pointsன்னு ஒன்னு இருக்கு அதை ஏன் காட்டமாட்டேங்குறாங்க ? இப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் கோட்டை விட்டாலும், கதையும் வசனமும் படத்தை தூக்கி நிறுத்திடிச்சி. சதுரங்க வேட்டைக்கு அப்புறம் வசனதிற்காவே ஒரு படம் பார்க்கன்னும்ன்னா நிச்சயமா இதை பார்க்கலாம் எனக்கு ஒரு doubt டிவி சேனல் பண்ணுகிற தப்பு எல்லாம் காட்டின இந்த படத்தை எந்த டிவி சேனல் வாங்கிருக்கும் ? மொத்தத்தில் பூலோகம் டிவி மீடியாவிற்க்கு பூகம்பம் ஏற்படுத்திய ஒரு படம் இப்படிக்கு சினி கிறுக்கன்
தங்கமகன் அப்படின்னு சொன்னவுடனே நம்மக்கு சூப்பர் ஸ்டார் படம் ஞாபகம் தான் வருது, சரி எப்படியோ அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமமும் இல்ல, சரி இது எப்படி இருக்குன்னு பார்ப்போம். தனுஷ் அவரோட முந்தய படம் மாரில பக்கா மசாலா, மாஸ் , சும்மா கத்தி கத்தி சவுண்ட் விட்டு நடிச்சதக்கு, அப்படியே எதிரா ரொம்ப அமைதியா நல்லா நடிசிருக்காரு, அவர் மேலும் மேலும் நல்ல performerன்னு நிருபிச்சிட்டு வராரு, சின்ன சின்ன இடங்கள், சின்ன சின்ன reactions மற்றும் கோவப்படும் போதும் சரி, பாசமா லவ் பண்ணும் போதும் சரி, emotionah feel பண்ணும் போதும் சரி அப்படியே பக்காவா நடிப்புல பிண்ணி எடுக்குறாரு, எமிஜாக்சன் அழகா சுடிதார்ல வராங்க,கோயில் போறாங்க, என்னடா இது, இந்த எமிக்கும் அவங்க கலர்க்கும் லோக்கல் தமிழ் பொண்ணு கேரக்டர் செட் ஆகுமான்னு தோனுச்சி?, அதுக்கு நம்ம டைரக்டர் அங்க அந்த கேரக்டர்க்கு ஒரு justification வைச்சிட்டாரு, அட அதாவுது அவங்க அப்பா ஒரு ப்ரிடிஷ்கறாரு அவங்க அம்மா ப்ராமின்ன்னு சொல்லி அங்க logickku ஒரு லாக் வச்சிட்டாரு, அட ஆமா எமி கலர்க்கு அவங்கள லோக்கல் பொண்ணு சொன்னா நம்ப முடியுமா ?அதனால டைரக்டர் அப்படி ஒரு லாஜிக் வச்சி முடிச்சிட்டாரு.அதுவும் இல்லாம நடிப்புல நல்ல improvement, அதுக்கும் மேல அவங்க பேசும் போதும் dubbing correctah lip sync ஆகி இருக்கு, தமிழ் உச்சரிப்பு பக்காவா பொருந்தி இருக்கு, ரொம்ப சில இடங்கள மட்டும் தான் dubbing செட்ஆகல, நிறைய படம் பண்ண ஹன்சிகா கூட இந்த அளவுக்கு பண்ணதில்லை, பேசாம ஹன்சிக்கா எமிகிட்ட எப்படி நடிப்பது, எப்படி தமிழ் உச்சரிப்பு சரியாய் பண்ணறதுன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம். சமந்தா ஒரு நடுத்தர குடும்ப மற்றும் கொஞ்சம் கஷ்ட படுற குடும்பத்து பெண்ணு அதனால படம் fullah காட்டன் புடைவைல வராங்க, ஆனா முகம் கொஞ்சம் அதிகமா மேக்கப் மற்றும் அவங்க முக்குகுத்தி படத்துல பார்க்க கொஞ்சம் அந்நியமா தெரியுது, கே.ஸ் .ரவிக்குமார் & ராதிகா ஒரு parentsah சரியா பொருந்திருக்காங்க, ஆனா இன்னும் கொஞ்சம் அவங்க நடிப்புக்கு தீனி போடுறா மாதிரி இன்னும் கொஞ்சம் சீன் வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் தனுஷ் firendah வரும் சதீஷ் முதல் பாதயில காமெடி பண்ணிருக்காரு ஆனா எதுவும் மனசுல நிக்கிறா மாதிரி இல்ல, அதே மாதிரி வில்லனா வருபவரும் பெருசா impact ஆகல இசை அனிருத், பாவம் பயபுள்ள இப்போ நிறைய பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்காப்ல, சரி இந்த படத்துல என்ன பண்ணாருன்னு கேக்குறிங்களா? அட அவர் எப்பவும் சத்தம்மா இரைச்சலா டமால் டும்மீல் ன்னு bgm, பாட்டுன்னு போடுவாரு ஆனா இதுல ரொம்ப அமைதியா போட்டு இருக்காரு, அதனால ரொம்ப நல்லா இருக்கு நினைக்காதிங்க, பாட்டு எதுவும் மனசுல பதியில. இருந்தாலும் கடைசி சண்டைல கொஞ்சம் சத்தம் தாஸ்தி தான் money is ultimateன்னு சொல்லி வந்த படம் பார்த்தோம் ஆனா இந்த படம் money மட்டும் ultimate இல்ல மனிதர்களும் ultimate சொல்லி இருக்காரு, படத்துல சில பல லாஜிக் இடிக்கிறா மாதிரி ஒரு feel, அதாவுது அம்மா தனுஷ் கிட்ட கேட்கிறாங்க அம்மா : டேய் நீ வேலைக்கு போடா, நீ வேலைக்கு போறேன் சொன்னா அப்பா ஆபீஸ்ல அப்பா வேலை வாங்கி தருவாரு தனுஷ் : சரி வேலைக்கு போறேன் அடுத்த ஷாட் தனுஷ் அவரோட அப்பா கூட வேலைக்கு போறாரு, எங்க வேலைக்கு போறாங்க தெரியுமா ? income tax ஆபீஸ்ல ரெண்டு பேரும் போறாங்க , அது எப்படிங்க ஒரு income tax ஆபீஸ்ல அப்பா சொன்னவுடனே பையனுக்கு வேலை கிடைக்குது? என்ன லாஜிக்யா இது ? அதே மாதிரி அப்பா தப்பு பண்ணிட்டு செத்துட்டாரு, அப்பா தப்பு பண்ணிட்டாரு அதனால பையனையும் வேலையவிட்டு தூக்கிட்டாங்க.ஏம்பா assistant directors இந்த லாஜிக் எல்லாம் நோட் பண்ண மாட்டிங்களா? அதே மாதிரி தனுஷ் மற்றும் எமி கூட காதல் ரொம்ப நெருக்கமா காட்டுறாங்க நிறைய லிப் லாக் கட்சிகள் இருக்கு,ஆனா இந்த காட்சிகள் எல்லாம் கட் பண்ணாம U certificate எப்படி கொடுத்தாங்க தெரில,கலாச்சாரத்துக்கு எதிர் ஆனதுன்னு Spectre படத்துக்கு மட்டும் லிப் லக் சீனை கட் பண்ணிடாங்க., இதை எப்படி விட்டாங்க? spectre படத்துக்கு மட்டும் கட் பண்ணிட்டாங்களேன்னு ஆதங்கத்தில் கேட்கல, ஒரு நியாயத்தை தான் கேட்கிறேன்(Specter படம் இன்னும் நான் பார்கல) தங்கமகன் மக்கள் மனதில் தங்கபதக்கம் வாங்குவாரு நினைச்சேன் ஆனா தங்கமகன் வெண்கலபதக்கம் தான் வாங்குவாரு போல இப்படிக்கு சினி கிறுக்கன்
ஈட்டி இந்த படம் டைட்டில் மற்றும் அந்த logo பார்க்கும் போது, ஹீரோ ஈட்டி எறிதல் வீரர்ன்னு நினைச்சேன், ஆனா அவர் hurdle runner ah வரார். படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோக்கு எந்த மாதிரி உடம்பில் பிரச்சன்னை இருக்குன்னு தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாங்க, அதாவுது சின்னதா ரத்த காயம் ஏற்பட்டால் ரத்தம் நிக்காது, மேலும் அதிகமா ஏற்பட்டால் உயிர் போகும் வாய்ப்பு இருக்கும் ஒரு அரியவகை வியாதி உள்ளவரா காட்டுறாங்க , அதுக்கு ஏற்ற மாதிரி படமும் சண்டை கட்சிகளும் வச்சி இருக்காங்க, நிஜமாகவே இந்த மாதிரி பிரச்சன்னை இருக்க ஒருத்தர் ஒரு ரியாலிட்டி ஷோல வந்து இருக்கார் ஒருவேல டைரக்டர் அவரை inspirationah வச்சி இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிருப்பார் போல, படம் முதல் பாதியில் தஞ்சாவூரிலும், இரண்டாவுது பாதி சென்னையிலும் நடக்குது, கதை தஞ்சாவூர்ல நடக்குதுன்னு காட்றதுக்கு தஞ்சை பெரிய கோயில் சுற்றி நிறைய shots வச்சி இருக்காரு டைரக்டர், எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் நம்ம தமிழ் படங்கள பெரிய கோயில் காட்டியது இல்ல. அதே போல சென்னை சொல்லும் போது பல படங்கள அடையார், திருவல்லிக்கேணி அல்லது north சென்னை தான் காட்டுவாங்க, ஆனா இதுல அரும்பாக்கம், அமஞ்சிகரை, சூளைமேடுன்னு கதை நடக்குற மாதிரி காட்டிருக்காங்க, உண்மையான இடங்கள் சொல்லிருக்காங்க, அரும்பாக்கதுல SBI காலனி ஒன்னு நிஜமாகவே இருக்கு,ஏன் இதை சொல்லுறேன அரும்பாக்கம் எங்க ஏரிய..... கதைப்படி heroine அப்பா SBIல வேலை செய்றாரு அதனால இந்த காலனி காட்டி இருக்காரு, அதர்வ நிச்சயமா ரொம்ப மெனக்கெட்டு, உடலை வருத்தி உழைச்சு இருக்காரு, ஒரு தடகள வீரரா பக்காவா பொருந்தி இருக்காரு, நல்லா நடிச்சி இருக்காரு, ஆனா அதை கதைக்கு எந்த அளவுக்கு பயன்படுதிருக்காங்க பார்தீங்கனா , கொஞ்சம் கம்மி தான், ஒரு சில காட்சிகள அவர் practice பண்றது, சண்டைல சிக்ஸ் பேக் காட்டுவதோட சரி, ஸ்ரீதிவ்யா ஏதோ சும்மா guest ரோல் heroine போல இல்லாம நிறைய காட்சிகள் வந்து, படத்தோட கதைக்கு கொஞ்சம் supportah இருந்துட்டு போறாங்க,அதர்வாக்கு மொபைல் reecharge பண்ணற சீன்ல எல்லாம் நல்லா அழகா நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷ் இசையில் முயல் குட்டி பாட்டு மட்டும் கேட்கிறா மாதிரி இருக்கு படம் தடகள வீரர் பற்றி போகும் பார்த்தா, அப்படியும் போகல, அட அந்த ஒரு வியாதி இருக்கு அதை வச்சி கதை போகும் பார்த்த அப்படியும் போகல, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கதைக்கு பயன்படுதிருக்காங்க அவ்ளோதான், முதல் பாதியில் காதல் பண்ணுகிற சீன் நல்லா இருக்கு, ஆனா கதைக்குள்ள போகாம இரண்டாவுது பாதியிலும் காதல்ல கதை போறது கொஞ்சம் போர் தான் அடிக்குது, இடைவேளைல வரும் சண்டையும், கிளைமாக்ஸ்ல வரும் சண்டையும் நல்லா இருக்கு, பார்க்கும் போது அதர்வாக்கு ரத்தம் வராம சண்டை இருக்கணுமே ஒரு feel நம்மக்கும் வர வச்சி இருக்காரு.கதைல திருப்பம்ன்னு நினைச்சு வச்ச சீன எல்லாம் திருப்பம்மா தெரியல, அதே போல கடைசியா நிச்சியமா ஹீரோ தான் ஜெயிப்பாரு தெரியும் அதனால கடைசி காட்சி எல்லாம் பெருசா impact ஆகல நிச்சயமா அதர்வ மனசுல நிற்கிறா மாதிரி ஒரு படம் பண்ணி இருக்காரு, ஆனா இன்னும் strong ஆனா கதை உள்ள படம் பண்ணா நல்லா இருக்கும் . மொத்தத்தில் ஈட்டி இன்னும் கொஞ்சம் கூர்மையா இருந்தா நல்ல இருந்திருக்கும்