வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

Kanithan - கணிதன்

கணிதன் ஒரு வித்தியாசமான கதையை கையில்  எடுத்து இருக்குறாரு இயக்குனர்,போலி certificate , போலி லோன்  அப்படின்னு கொஞ்சம் different ah  try பண்ணி இருக்குகாரு அப்போ மற்ற விஷயங்கள் எல்லாம் எப்படி இருக்குன்னு வாங்க பார்க்கலாம்.

படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ்  கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட  வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னு  சொல்லுறேன்  இருங்க , அதுக்கு முன்னாடி படத்தோட திரைகதை ஓட்டம் எப்படி இருக்குன்னு பார்ப்போம், படத்தோட திரைகதை graph ரொம்ப flatah  தான் ஆரம்பிக்குது , வழக்கமான கொஞ்சம் மொக்கை காமெடி,குடும்பம் intro , தேவையில்லாத முதல் 30 நிமிஷத்தில  ரெண்டு பாடல் அதுவும் அந்த படத்துக்கு கொஞ்சம் கூட ஒன்றாத பாடல் , பிறகு படத்தோட திரைகதை graph மெல்ல மெல்ல மேல ஏறி இண்டர்வல் பிளாக்ல நல்லா போயிட்டு நிக்குது,ஐயோ எங்க இரண்டாவுது பாதியில் அப்படியே நேர் எதிரா மொக்கையா கொடுப்பாங்களோ தொன்னுச்சி ஆனா இரண்டாவது பாதியில் அதே வேகத்தோட நல்லா போகுது ,படம் இன்னும் கொஞ்சம் நேரத்தில முடிஞ்சிடும் நினைச்சா , அப்பறம் பழிவாங்கும் கொலை ,தேவையில்லாத பாடல் அப்படின்னு கடைசி 30 நிமிடம் அப்படியே படத்தோட வேகத்தை கீழே தள்ளிட்டாரு 

நான் அப்போவே சொன்னேன்ல படத்தோட இயக்குனர் சந்தோஷ் , இயக்குனர் A .R .முருகதாஸ்  கிட்ட assistantah work பண்ணவர், அவர்கிட்ட  வேலை செய்தவர்ன்னு நிறைய இடத்துல தெரியுது , அது என்னன்னா ? காட்சி அமைப்புகள்ல கொஞ்சம் ரமணா , கொஞ்சம் துப்பாக்கி , கொஞ்சம் கத்தி தெரியுது ,ஒருவேளை முருகதாஸ்க்கு அந்த படங்கள இவர் தான் சீன ஐடியா கொடுத்து இருப்பாரோ ? ஏன்னா இந்த படம் ஆரம்பிக்கபட்டது 2013, கத்தி 2014ல தான் ரிலீஸ் ஆச்சு,துப்பாக்கி படத்தில எப்படி விஜய் தன்னோட தங்கச்சியை அனுப்பி வில்லனை பிடிக்க ட்ரை பண்ணுவாரோ அதே மாதிரி காட்சி அமைப்பு இந்த படத்தில இருக்கு, குறிப்பா இந்த படத்திலும் ஒரு நாய் காட்சி இருக்கு , அது மாதிரி இன்னும் சில.  அது எது எது காட்சிகள்ன்னு   சொல்லிட்டா சுவாரசியம் இருக்காது போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க, 

அதர்வா ஒரு guaranteed ஹீரோவா மாறிட்டு வரார் போல இருக்கு , இவர் படம்ன்னா ஓரளவுக்கு நம்பி போகலாம்ங்கிற  அளவுக்கு வளர்ந்து வறாரு,கொஞ்சம் வித்தியாசமான  கதை , நல்ல நடிப்புன்னு பக்காவா இருக்காரு, body , look & feel எல்லாம் நல்லா இருக்கு, அங்க அங்க மாஸும் try பண்ணிருக்காரு ,

எல்லா commercial  படங்களில் ஹீரோயின்க்கு என்ன வேலை ? சும்மா ஊறுகாய் தான் , அதே தான் இந்த படத்தலையும் .

இசை நம்ம drumsசிவமணி , பாடல் ரொம்ப சும்மார் , எல்லாம் வெறும் டப்பாங் கூத்து பாடலா இருக்கு , bgm நல்லா இருக்கு ஆனா சில இடங்கள் எங்கயோ கேட்டா மாதிரி ஒரு உணர்வு 


மொத்தத்தில் : கூட்டி கழிச்சி பார்த்தா கணிதன் கணக்கு ஓரளவுக்கு ஓகே தான் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Comments