தனுஷின் தொடரின்னு சொல்வதை விட கீர்த்தி சுரேஷின் தொடரின்னு தான் சொல்லணும் , ஏன்னா தனுஷை விட கீர்த்திக்கு அதிகம் பங்கு இருக்கு , மேலும் நடிப்பிலும் தனுஷை விட நல்லா பண்ணி இருக்காங்கன்னு சொல்லுண்ணும் , தனுஷுக்கு இதுல ஸ்கோப் கம்மி தான் சொல்லணும் , அதே நேரத்தில தனுஷையும் பாராட்டியே ஆகணும் , ஏன்னா அவருக்குன்னு ஒரு இமேஜ் மாஸ் ஹீரோயிசம் இருக்கு , ஆனா அது போல இமேஜ் எல்லாம் பார்க்காம இந்த படத்தை எடுத்ததிற்கு .
படத்தின் மிக பெரிய பிளஸ் கீர்த்தி, எப்பா என்னமா பண்ணி இருக்காங்க , அவங்க அந்த இன்டெர்வல் ப்ளாக்கில் தனுஷ் பொய் சொன்னது தெரிஞ்ச பிறகு அழுவும் காட்சியில் பின்னிட்டாங்க , அவங்க அப்பாவியா நடிப்பதும் செம்ம , அதுவும் வாக்கி டாகியில் போலீஸ்காரங்க கிட்ட வெள்ளந்தியா நான் பாடகி ஆகணும்ன்னு சொல்லும் போது அவங்க நடிப்பை ராசிக்காம இருக்க முடியல , கீர்த்தி இது வரைக்கும் நடிச்சதில், அவங்க நடிப்புக்கு ஸ்கோப் உள்ள படமா எடுத்தது இது தான் , மற்றும் இரண்டாவுது பாதியில் இந்த மீடியாகாரங்க பண்ணும் அட்டூழியத்தை காமெடியாக சுட்டி காட்டுவது , முதல் பாதியை விட இரண்டாவுது பாதியின் விறுவிறுப்பு, மற்றும் எந்த ஒரு ஆபாசத்தனமான காட்சியோ , இரட்டை அர்த்த வசனங்களோ , அல்லது குடிச்சி கூத்தடிக்கும் பாடலோ இல்லாமல் , ஒரு குடும்பமாக சென்று பார்க்கும்படி எடுத்தவை, இவைகள் தான் படத்தின் பிளஸ் என்று சொல்ல முடியும்.
படத்தின் நெகடிவ் நிறைய இருக்கு , ஆம் எல்லாரும் சொல்வது போல லாஜிக் மிஸிங் படத்தில் இருக்கு, இந்த மாதிரி படங்களில் நிச்சயமாக ஆங்காங்கே லாஜிக் மிஸ்ஸிங் என்பது இருக்க தான் செய்யும் , ஆனால் அப்பட்டமாக சில விஷயங்கள் விட்டு இருப்பது பிரபு சாலமன் போல டைரக்டர் செய்யலாமா ? என்று தான் கேட்க தோணுது , இதோ சில continuity மிஸ்ஸிங் காட்சிகள் , முதலில் அந்த train பெயர் , வசனங்களில் DC எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுறாங்க , ஆனால் , நாக்பூர் , ஜான்சி ரயில்வே ஸ்டேஷன் announcementல் GT எக்ஸ்பிரஸ்ன்னு சொல்லுராங்க , கீர்த்தியும் , தனுஷும் ஒரு இடத்தில ac coach படிக்கட்டில் உட்கார்ந்து பேசுவாங்க , அதே continuity next லாங் ஷாட்டில் அந்த coach கடைசி பெட்டிக்கு முந்தின பெட்டி போல தெரியும் , ac coach எங்க சார் கடைசி coachக்கு முன்னாடி coachஆகா வரும் ? ஒரு லாங் journey trainல் மொத்த trainக்கும் ஒரே ஒரு TTE இம்மான் அண்ணாச்சி மட்டும் தான் இருப்பாரா ? எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதேன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க , ஆனா நீங்க எரிகிற தீயில் ஒரு பாட்டு வச்சிடீங்களே சார் , நல்லவேளை சார் நீங்க அந்த மலையாள நடிகை ஸ்ரீஷாவுக்கு ஒரு குத்து பாட்டு வைக்கலை. அப்புறம் பேன்ட்ரி கார்ல night தம்பி ராமைய்யாவும், தனுஷும் பேசும் ஒரு காட்சியில் மாற்றி மாற்றி நிறைய ஷாட் நிறைய cut பண்ணி cut பண்ணி போட்டது கொஞ்சம் jump இருப்பது போல இருந்துச்சி., பிறகு அந்த காமென்டோ அவருக்கு என்ன உடம்பில் எதாவுது பிரச்சன்னைய்யா ? ஏதோ சைக்கோ போல காட்டினாரு ஆனா அது ஏன் எதார்க்குன்னு சொல்லவேயில்லை , முதல் பாதியில் வரும் தம்பி ராமையா தனுஷ் காமெடி மொக்கையா இருக்கு, முதல் பாதி எப்போ முடியும்ன்னு தோணுச்சு ,போதும்பா இதுக்கு மேல நெகட்டீவ்ஸ் சொல்ல வேண்டாம் தோணுது
படத்தின் பிளஸ்ல நிச்சயமா ராதாரவி பற்றி சொல்லியே ஆகணும் மனுஷன் அசால்டாக பண்ணுறாரு செம்மையை கலாய்க்குறாரு , டேய் அந்த bridge வெள்ளைக்காரன் கட்டுனது டா விழாது , இதுவே நாம்ம கட்டி இருந்தா நிச்சயமா உடைஞ்சு இருக்கும்ன்னு இன்றைய அரசியல்வாதிகளை பற்றி சொல்லுவது தியேட்டர்ல் விசில் காதை கிழிக்குது.
டி. இம்மான் சார் என்ன சொல்ல ஏது சொல்ல உங்களை பற்றி , மனம் கொத்தி பறவை படத்தில் "என்ன சொல்ல ஏது சொல்ல"என்று பாட்டு வரும் அது போலவே போட்டு இருக்கீங்க, ஏற்கனவே உங்க படத்தின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணா மாதிரி இருக்கு.
மொத்தத்தில் தொடரி ரொம்ப நாளுக்கு தொடர்வது கடினம் தான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
காக்க முட்டை , குற்றமே தண்டனை இப்போ ஆண்டவன் கட்டளை போல நல்ல படங்கள் தரணும்ன்னு, நிச்சயமா ஆண்டவன் மணிகண்டனுக்கு இட்ட கட்டளை போல,மனுஷன் இரண்டு மணி நேரத்துக்கு கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் படத்தை கொடுத்து இருக்காரு.
படம் ஆரம்பிக்கும் போதே அட ஒரு நல்ல படத்துக்கு வந்து இருக்கிறோம் போல என்ற எண்ணம் தோணுது , குறிப்பா அந்த டைட்டில் song வரிகள் , இன்றைய சமூகத்தின் நிலையை பாடல் வரிகளில் வருவது நிச்சயமா கை தட்ட வைக்குது.
படத்தோட பிளஸ் நிறைய விஷயங்கள் இருக்கு, படத்தின் ஒரு வரி கதை , படம் எடுத்த விதம் , வழக்கமான சினிமாத்தனம் இல்லாதது , நடிச்ச நடிகர்கள் தேர்வு , சின்ன சின்ன கதாபாத்திரம் கூட மனசுல நிற்கிறா மாதிரி நடிக்க வைச்சது, அந்த கதாபாத்திரங்களை வடிவமைச்சது , தேவை இல்லாத பாடல்கள் போடாதது , அப்படி இப்படின்னு நிறைய விஷயங்கள் படத்தில் இருக்கு படத்தின் ஒரு வரி கதை களம் என்னன்னு படத்தின் ஆரம்பித்தவுடனே சொல்லிட்டாரு டைரக்டர் , அதாவுது ஒரு வேலை செய்யணும்ன்னா அதை நேரடியாகவே நீங்களே பண்ணுங்க , நடுவுல வேற யாரையும் நம்பாதீங்க, இது தான் படத்தின் ஒரு வரி . அதே போல் படத்தில் காமெடி நிச்சயம் guarantee நல்லா சிரிக்கலாம்.
படத்தின் மாபெரும் பிளஸ், காட்சி நடக்கும் இடங்கள் எந்த சினிமாத்தனம் இல்லாமல், உண்மையான practical ஆக காட்டுவது , குறிப்பா விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சிகள் , அந்த வீடுகளை காட்டுவது, ஒரு சாதாரண மனிதன் வீடு தேடும் போது படும் அவஸ்தைகளை இன்றைய சமூகத்தில் அவல நிலையை காட்டுவது, ஒரு travel ஏஜென்ட் ஆபீஸ் காட்டுவது , ரித்திகாவின் வீட்டின் நிலை அந்த வீட்டின் உள்ள பொருள்களை கொண்டு காட்டுவது என்று ஒரு நடுத்தரவர்கத்தின் கண்ணாடியாய் இந்த படத்தில் காட்டுவது செம்ம.
விஜய் சேதுபதிக்கு இந்த மாதிரி படம் எல்லாம் அல்வா சாப்பிடுவது போல , காந்திங்கிற கேரக்டர்ல அசால்ட்டா பண்ணிட்டு போறாரு , அதுவும் அவரு ஊமை போல கோர்ட்டில் நடிப்பது செம்ம, யோகி பாபு எப்பா !! அவர் தலை முடியை பார்த்தாலே சிரிப்பு தான் , அவர் பாஸ்போர்ட் ஆபீஸ் போவது , விசா இன்டெர்வியூல பேசுவது அல்டிமேட் , ஹே citizen of London நான்ன்னு சொல்லுவது எல்லாம் சூப்பர், இவங்க ரெண்டு பேரு மட்டும் இல்லைங்க, விஜய் சேதுபதியின் வீட்டு owner , அந்த ரெண்டு வக்கீல்கள் , குறிப்பா அந்த வக்கீலின் லேடி assistant வினோதினி அசால்ட்டா நடிக்கிறாங்க , பாஸ்போர்ட் ஆபீஸ்ல இருந்து விசாரிக்க வரும் அந்த மலையாள ஆஃபீஸ்ர் , அப்பாவியா வரும் ரித்திகாவின் அம்மா அவங்க அந்த ஜீன்ஸ்யை வச்சி பேசும் வசனம் அப்பாவித்தனம் காட்டுவது , இலங்கை தமிழராக வரும் நேசன் கதாபாத்திரம் , மேலும் பல கேரக்டர் எல்லாரும் சூப்பர் , எந்த ஒரு கதாபாத்திரமும் வில்லனாக காட்டாதது அருமை.
ரித்திகா நடிப்புல பிண்ணி எடுக்குறாங்க குறிப்பா அந்த இறுதி காட்சியில் வண்டியில் விஜய்சேதுபதியை உட்க்காரவச்சி close up shotல் ஒரு expression கொடுத்தாங்க, தியேட்டர்ல செம்ம விசில் மற்றும் கை தட்டு
படத்தில் பல காட்சிகள் மனசில் நிக்குது , குறிப்பா சில காட்சிகள் சொல்லியே ஆகணும், விஜய் சேதுபதி வீடு தேடும் காட்சி , ரெண்டு பேரும் விசா இன்டெர்வியூ போவது, அந்த கோர்ட் காட்சி எல்லாம் செம்ம, குறிப்பா ரித்திகா counsellingஇல் அவங்களை உணர்வது , அவங்களை பொண்ணு பார்க்கும் காட்சி , அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ்ர் ரிதிக்கவை விசாரிக்கும் காட்சி, எங்கே ஏதோ ஏடா கூடமா நடக்குமோ என்று நினைக்கும் போது அந்த ஆஃபீஸ்ர் gentle ஆகா அந்த சீனை handle பண்ணுவது சூப்பர்.குறிப்பா அந்த காட்சியில் ஒருத்தரை ஒருத்தர் காட்டி கொடுக்காமல் , விட்டு கொடுத்து, ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல புரிதல் கொண்டு அந்த காட்சியை நகர்த்துவது சூப்பர், அப்புறம் கடைசியா யோகி பாபு ஊருக்கு போகும் போது ஒரு உணர்ச்சிகரமான காட்சியில் ஒரு அருமையானா காமெடி கடைசியா வைப்பது செம்ம,
வேலைக்கு விசுவாசமா இருக்கறதா, வேலைக்குச் சேர்த்துவிட்டவனுக்கு விசுவாசமா இருக்கறதா? சொன்ன பத்து பொய்க்கு ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒரு உண்மை சொன்னதுக்கு விசா ரிஜக்ட், வெள்ளைகாரன் இருந்தப்போ கூட காந்தி பாதுகாப்பாக தான் இருந்தார் ன்னு அப்படி பல இடங்களில் வசனம் தெறிக்க விட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், நம்ம படங்களில் குடி , மற்றும் புகை பிடிக்கும் காட்சி வந்தா எச்சரிக்கை டைட்டில் கீழே போடுவாங்க , அது போல இந்த படத்தில் வண்டி ஓட்டும் போது ஹெல்மெட் போடாம போகும் போது ,"Wear Helmet to Avoid Legal Action " போடுறாங்க , இது இப்போ censor board இது போடணும் சொல்லி இருக்கா ? இல்ல டைரக்டர் அவர் சமூக நலன் கருதி போட்டறான்னு தெரியல , அப்படி டைரக்டர் போட்டு இருந்தா அவருக்கு பெரிய கை தட்டு . ஏன் என்றால் மற்ற படங்களில் இது மாதிரி போடுவது இல்லை , நான் ஒரு மலையாள சேனலில் ஓகே கண்மணி பாடல் போடும் போது அந்த தொலைக்காட்சியில் அது மாதிரி போட்டாங்க , ஏன் அது மாதிரி தமிழ்லில் போடுவது இல்லை என்று தோணுச்சி , ஆனால் இந்த படத்தில் போட்டது அருமை .
என்ன தான் ஏஜென்ட் ஏமாற்றினாலும் விஜய்சேதுபதி தெரிஞ்சு செய்த தப்பு
தானே? அவருக்கு இந்த பிரச்சனையும் வராதா ? கடைசியா அந்த பாஸ்போர்ட் ஆஃபீஸ்ர் வெறும் திட்டிட்டு கைஎழுத்து போட்டு தருவது , எந்த அளவுக்கு சட்டத்தில் இடம் இருக்கு ? வேற ஏதாவுது லாஜிக் மிஸ் ஆகுதான்னு எனக்கு தெரில .
மொத்தத்தில் ஆண்டவன் கட்டளை மணிகண்டன் மக்களுக்கு கொடுத்த அருமையான கட்டளை
இப்படிக்கு
சினி கிறுக்கன்
பன்முகன் கொண்ட விக்ரம் நடிச்சி இருக்கும் இந்த இருமுகன் ஆரம்பக்காட்சியே அடடே , யாருடா இந்த தாத்தா ஏழாம் அறிவுல கண்ணை காட்டினாலே மிருகத்தனமா அடிப்பாங்களே அதே மாதிரி இதுலையும் சண்டை பறந்து பறந்து போடுறாங்க , ஏதோ inhaler ல டைம் எல்லாம் ஓடுது , உடனே ஆளுங்க காலி ஆயிடுறாங்க , அப்பறம் "ரா" ஏஜென்ட்ன்னு சொல்லுறாங்க ,அப்படியே படம் மலேஷியா போகுது , மலேஷியே காட்டினாலே படம் ஸ்டைலிஷ் ஆகிடுது , அதுவும் கேமராமேன் ரொம்ப அழகா ஸ்டைலிஷ்ah காட்டுறாரு , ஏன் இது எல்லாம் நடக்குது ? எப்போ இன்னொரு விக்ரம் காட்டுவாங்க ? அந்த மருந்து என்னவெல்லாம் பண்ணும் ?அப்படின்னு ஒரு சுவாரசியம் கூட்டி, அதுக்கு சரியா bgm கொடுத்து, நடுவுல கொஞ்சம் தம்பி ராமையா காமெடி கலந்து, படம் பரபரப்பா கொண்டு போய் இடைவேளையில் ஒரு பெரிய வாவ்ன்னு சொல்லுறா மாதிரி முடிச்சாரு ,
இந்த இடைவேளையில் நடப்பதை விமர்சனம் என்கிற பெயரில் வேறுசிலர் சொல்லிட்டாங்கன்னா அது சுவாரசியம் இருக்காது ,அதே நேரத்தில் அந்த இடைவேளை சுவாரசியம், இரண்டாவது பாதியில் பெருசா எடுப்படாம போகுது , சொல்ல வேண்டிய கதையை அதன் முடிச்சிகளை முதல் பாதியிலே சொன்னதாலே , இரண்டாவது பாதியில் கதை நகர்வதற்கு ஒன்றும் இல்லை , இரண்டாவது பாதியில் வில்லன் விக்ரம் எப்படி தப்பிப்பாரு தான் திரைக்கதை ,மேலும் படத்தில் சில பல லாஜிக் மிஸ்ஸிங் , நயன்தாரா இரண்டாவுது பாதியில் வருவதற்கு சொல்லும் கதை ரொம்ப லாஜிக் மிஸ்ஸிங், மேலும் ஒரு பெரிய network பிடிக்க போகும் போது , யாரோ பெரிய ஆளு நெகடிவ் கேரக்டர்ல வருவாங்க நினைச்சா கருணாகரனை காட்டுறாங்க , உடனே அது பொசுக்குன்னு போயிடுச்சி மக்கள் பலர் சிரிச்சிட்டாங்க .
நம்ம தமிழ் ரசிகர்களுக்கு படத்தில் நிறைய புதுமையான விஷயங்கள் காட்டி இருக்கார் , ஸ்பீட் மருந்து , medulla oblongataவில் சிப் , அப்புறம் பல கெமிக்கல் மருந்துகள் வச்சி ஜித்து வேலை பண்ணி இருக்காரு டைரக்டர் , அதே நேரத்தில் பழமையான விஷயங்கள் அதாங்க தேவை இல்லாத பாடல்களும் இருக்கு , நம்ம தமிழ் சினிமா எப்போ திருந்தும் தெரியல , ஏன்னா ஒரு high tech கதை மாதிரி உள்ள படத்தை எடுத்து அதன் வேகத்தை குறைப்பது போல தேவை இல்லாத பாடல்கள் வைக்கும் பழக்கம் எப்போ நிறுத்துவங்களோ?
ஹாரிஸ்ஜெயராஜ் இப்போ கொஞ்சம் தன்னோட பழைய வழிக்கு வந்து இருக்காரு , halena பாட்டு செம்ம , bgm ரொம்ப neatah பண்ணியிருக்காரு, படத்தோட மிக பெரிய பிளஸ் கேமராமேன் r.d .rajasekar , படத்தை நல்ல ரிச் ஆகா காட்டி இருக்காரு ,
ஆத்தா நயன்தாராவே வயசு ஆகா ஆகா படத்தில் என்ன அழகா வாரீர் ? இந்த படத்தில் நீங்க ஒரு லேடி ஜேம்ஸ்பாண்டுமா, படத்தோட கடைசியில் சண்டை போடுறா மாதிரி ஒரு காட்சி ஆரம்பிச்சீங்க ஆனா நம்மக்கு சண்டை காட்சி காட்டலை , அந்த சீன்ல சண்டை போட்டா மாதிரி நம்ம புரிஞ்சிக்கணும் , டைரக்டர் சார் நயனுக்கு அந்த காட்சியில் நிச்சயமா நீங்க ஒரு சண்டை வச்சி இருக்கனும், அந்த கடைசி சில நிமிடங்கள் இன்னும் தீயா இருந்து இருக்கும்.
கண் அழகி நித்யாமேனன் அவர்களே , படம் ஆரம்பிக்கும் போது, உங்களுக்கு விக்ரமுக்கு நிகரா ரொம்ப நல்ல கதாபாத்திரம் இருக்கும் நினைச்சேன் , ஆனால் ரொம்ப குறைவாக தான் உங்கள யூஸ் பண்ணி இருக்காங்க , நல்லவேளை உங்களுக்கும் ஒரு டிரீம் சாங் வைக்கலை.
படத்தின் அடித்தளம் , மேல்தளம் , தூண் , சுவர் என்று எல்லாமும் இருப்பவர் நம்ம விக்ரம் தாங்க , மனுஷன் ரெண்டு கேரக்டர்க்கும் என்னமா வித்தியாசம் காட்டுறாரு, அந்த பெண் கெட்டப்புல அவர் முகத்தில் போட்டு இருக்கும் மாஸ்க்கை கழட்டும் போது, அந்த கை விரல்கள் அந்த மாஸ்க்கில் வைக்கும் போது , அந்த கையில் பெண்மை காட்டுவார் , அவரோட கை விரல்கள் கூட நடிக்க வைக்குறாரு விக்ரம் , ஆனா flash backல் நயன்தாரா கூட டூயட் பாடும் போது மட்டும் கொஞ்சம் வயசு ஆனவர் போல தெரிகிறார்
ஒரு சாதாரண ரசிகனுக்கு அவன் கொடுக்கும் 120க்கு வசூல் இந்த படம்.
மொத்தத்தில் இருமுகன் விக்ரமின் தனிமுகன்
இப்படிக்கு
சினிகிறுக்கன்
அப்பாடா வழக்கமான தமிழ் படங்களில் இருந்து கொஞ்சம் விலகி இருந்து வந்து பார்த்த படம் இது , படத்தோட அருமையான விஷயம் என்னனா ? படத்துக்கு தேவையான அளவான கதாபாத்திரங்கள் , மனசுல நிற்கிறா மாதிரி அளவா பயன்படுத்தி இருக்காங்க , அதுவும் அந்த கதாபாத்திரங்கள் தங்களோட முந்தைய படங்களில் இருந்து ரொம்ப oppositeஆகா பண்ணிருக்காங்க , ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை , தர்மதுரை படங்களில் இருந்து அப்படியே எதிர்மறை கேரக்டர் , பூஜா தேவரியா இறைவி படத்தில இருந்து முற்றிலும் வித்தியாசமானா கேரக்டர் , குருசோமசுந்தரம் எப்பா சாமி நீங்க தானா ஜோக்கர் ல வந்தவரு ? ஜிகர்தண்டாவுல kill & laugh சொல்லி கொடுத்தவரு ? என்ன ஒரு வித்தியாசம் படத்துக்கு படம் ஆள் அடையாளம் அப்படியே மாறி வாராரு , ரஹமான் மானத்துக்கு பயந்து வர பணக்கார கதாபாத்திரத்தை நல்லா பண்ணியிருக்காரு .
இந்த படத்தில எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் என்னனா , ரொம்ப சினிமாதனம் இல்லமால் இயற்கையான விஷயங்கள் படத்தில் இருக்கு , அப்படியே யாரும் காட்டாத தொழில்களை காட்டியிருக்காரு , அதாவது ஒரு கிரெடிட் கார்டு கலெக்ஷன் சென்டர் காட்டுவது , குறிப்பா அந்த சுற்றுசூழல் , அவங்க phone பேசுவது , சாப்பிடுற இடம் , பெண்கள் பழகி கொள்ளுவது , ஜொள்ளு வழியும் customer கிட்ட பேசுவது , குறிப்பா பூஜா தேவரிய அணியும் ஆடை , அதை பார்க்கும் போதே அவங்களோட சூழல் சொல்லாமல் சொல்லுவது செம்ம , பிறகு நாசர் செய்யும் கண்ணாடி தொழில் எனக்கு தெரிஞ்சு அந்த தொழில் செய்யவது மாதிரி நம்ம தமிழ் சினிமாவுல காட்டியது இல்ல ,
படத்தோட ஹீரோ விதார்த்தும் டைரக்டர் மணிகண்டனும் தான் , பொதுவா டைரக்டர் மனசுல இருப்பது படமா ப்ரதிபலிப்பதில் கேமராமேனக்கு முக்கியமான பங்கு இருக்கு , அதுவே கேமராமேனே டைரக்டர்ஆக இருந்தா மனுஷன் பின்னியெடுத்துட்டாரு , விதார்த் ஒரு வித்தியாசமான கண் குறையுள்ளவராக வாராரு, விதார்த் அந்த குறை உள்ளவராக நடிப்பதும் , அதை நமக்கு அப்படியே உணர வச்ச கேமராமேனும் டைரக்டரும் ஆகிய மணிகண்டனுக்கு பெரிய தலைவணங்கிய வாழ்த்துகள்.குறிப்பா விதார்த் பைக் ஓட்டும் போது , ஐயோ எங்க அவருக்கு ஏதாவது ஆகிடுமோ என்று எண்ணம் வரா மாதிரி நடிச்சி இருக்காரு .
படத்தோட மைனஸ்ன்னு நான் நினைத்தது படம் கொஞ்சம் நிதானமாக போவது , மேலும் அந்த குற்றவாளி யாருன்னு ஆரம்பித்திலேயே யூகிக்க முடிஞ்சது எனக்கு , மற்றவர்களுக்கு எப்படின்னு தெரியல .
மொத்தத்தில் குற்றமே தண்டனை , படத்தில் பெரிதாக கண்டுபிடிக்க எந்த குற்றமும் இல்லை பார்ப்பதால் நமக்கு எந்த தண்டனையும் இல்லை .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
அட போங்கப்பா இது மீண்டும் ஒரு காதல் கதை, சாரி அது இந்த வாரம் ரிலீஸ் ஆனா வேற படம் , இது நம்ம தமிழ் சினிமாவுல வந்து இருக்கும் மீண்டும் ஒரு பேய் கதை ,மாசத்துக்கு ஒரு பேய் படம் வருவது ஒரு வழக்கமா போச்சி ,இதுல ஒரு சந்தோஷமான ஒரு விஷயம் என்னனா ? இது காமெடி கலந்த பேய் படம் இல்ல , நிச்சயமா திரைக்கதை பயணம் கொஞ்சம் பயம் கொடுத்து தான் பயணிக்கிறது , ஆனால் கதை வழக்கமான பழிவாங்கும் பேய் கதை தான் , ரெண்டு மணி நேரம் படத்துல ஒன்றரை மணி நேரம் பயம் முறுத்தும் காட்சிகளாக தான் படம் போகுது கடைசி 30 நிமிஷம் தான் அது எல்லாம் ஏன் நடக்குதுன்னு கதைக்குள்ள போகுது படம் , ஆனால் அந்த காட்சியின் காரணங்கள் கதையோட தொடர்புடையதுன்னு காட்டும் போது சரின்னு சொல்ல தோணுது .
படம் முழுவதும் பயம் கொடுக்கும் காட்சிகள் டைரக்டர் யோசிச்சி யோசிச்சி வச்சி இருக்கார் , ஒரு கட்டத்துல அட போதும்பா பயமுறுத்தியது, ஏன் பேய் பழிவாங்குதுன்னு கதையை சொல்லுங்கப்பான்னு கேட்க தோணுது , பாத்ரூம் தண்ணீர் குழாயிலே தண்ணி தானா வரும் காட்சி நம்ம தமிழ் சினிமாவுல பேய் படத்துல எழுதப்படாத ஒரு விதி , அது இதுல வச்சி இருக்கார் டைரக்டர் , இதுபோல பேய் படத்துக்கு வேண்டிய அனைத்து காட்சியமைப்பும் இருக்கு ,
படத்தில ஹீரோ பரத் ரெட்டி பயணிக்கும் காட்சிகள் நல்லா எடுத்து இருக்காரு , ஆனால் அதை தவிர ஹீரோவுக்கு பிளாஷ் பேக் காதல் கதை எல்லாம் ரொம்ப நாடகத்தனமா இருக்கு , விகாஷாவின் பிளாஷ் பேக் கதையில் வரும் IT கம்பெனி நண்பர்களாக நடிப்பவர்கள் , அதில் வரும் சரக்கு பாட்டு எல்லாம் ரொம்ப செயற்க்கையா இருக்கு ,
படத்தின் பெரிய பிளஸ் கேமரா & Bgm ரொம்ப பிரெஷ் feel கொடுத்து இருக்காரு அந்த டீ எஸ்டேட் , மலை இடங்கள் எல்லாம் பார்க்கும் போதும் சரி , அதே நேரத்தில அந்த பங்களாவுல வரும் காட்சிகளும் அதற்க்கு சரியாக எடிட் பண்ண தாஸ்க்கும் ஒரு கை தட்டு தரலாம், இசை y.r.prasad அளவா இரைச்சல் இல்லாமல் சரியாக தந்து இருக்காரு.
மொத்தத்தில் பயம் ஒரு பயணம் கொஞ்சம் சுமாரான பயணம் தான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இது நமக்கு பழக்கப்பட்ட சாதாரண கதையுள்ள படம் தான் ,ஆனால் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனசுல பதிவது போல, இயக்குனர் வடிவமைச்சிருக்காரு ,காட்சி அமைப்புகளும் எளிமையா ரசிக்கிறா மாதிரி இருக்கு, அதே போல அந்த கதாபாத்திரங்களும் நல்லாவே நடிச்சிருக்காங்க, இது தான் படத்தோட மிகப்பெரிய பிளஸ், சோறு தான் பிரதானமாக நினைக்கும் மாப்பிளை அவர் முழிக்கிற முழியாகட்டும் சரி , எவ்வளவோ பிரச்சனைக்கு நடுவே தனக்கு டிரஸ் இல்லைன்னு கவலைப்படுற தம்பி ,ஓ உங்க பேரு எவிடென்ஸ் இல்லையா என்று கேட்க்கும் டிரைவர் , அப்படின்னு சின்ன சின்ன கேரக்டர் கூட மனசுல பதிவது மிகப்பெரிய பிளஸ் .
விஜய்சேதுபதி நடிப்புல மனுஷன் பிண்ணி எடுக்குறாரு , அவரு ஆரம்பத்தில் தண்ணிய போட்டுக்கிட்டு,அம்மாகிட்ட , அண்ணன்கிட்ட , underwearஓட, அலப்பரை பண்ணுவது, கஞ்சா கருப்பு கூட கலாட்டா பண்ணுவது , நக்கலா இங்கிலீஷ் பேசுவது , சாவு வீட்டுல ஆட்டம் போடுவது,ஐஸ்வர்யா கூட காதல் பண்ணுவது , பின்பு சோகக்காட்சியில் அழுவதை விட , அம்மா சொல்லுக்காக கோபத்தை கட்டுப்படுத்துவதுன்னு சகலமும் அள்ளிட்டாரு ,
தமன்னா, ஸ்ருஷ்டி , ஐஸ்வர்யா ராஜேஷ்ன்னு மூன்று ஹீரோயின் இருந்தாலும் , ஐஸ்வர்யா ராஜேஷ் கிராமத்து பெண்ணாக வந்து வாழ்ந்துட்டாங்க , கொஞ்சநேரம் வந்தாலும் , செம்மயா பண்ணிட்டாங்க , சாரி அண்ணா கூப்பிட்டதுக்கு, மாமான்னு கூப்பிடுறேன்னு சொல்லும் போது அவ்வளவ்வு அழகா இருக்காங்க , அப்படியே அம்மாவாக வரும் ராதிகாவும் தான் , அவங்களும் அமைதியான அம்மாவாக , தன்னோட பையனுக்கு எதுவும் செய்யமுடியலையே ன்னு வருத்தப்படுவதும் சூப்பர்.
படம் முதல் பாதி கொஞ்சம் பொறுமையா போகுது , இரண்டாவது பாதி ஐஸ்வர்யா ராஜேஷ் கதையால் தப்பியது , படத்தில் எந்த ஒரு காதாபாத்திரமும் வில்லனாக சித்தரிக்கவில்லை , சந்தர்ப்ப சூழ்நிலையால் மனிதன் எப்படி மாறுகிறான் என்பதை காட்டி இருக்காரு டைரக்டர் சீனுராமசாமி ,பாடல்களை விட bgm ல் நல்லா பண்ணியிருக்காரு யுவன் ,
எனக்கு படம் பார்க்கும் போது , வாரணம் ஆயிரம் , ஆட்டோகிராப் கொஞ்சம் கொஞ்சம் கலந்து செய்த கிராமத்து கதை போல எனக்கு தோணுச்சி .காதல் தோல்வியால் தன்னை சீரழித்து கொள்ளும் விஜய்சேதுபதி பார்க்கும் போது வாரணம் ஆயிரம் ஞாபகம் வந்திச்சி , ஆனால் அதில் அப்பா செண்டிமெண்ட் , இதில் அம்மா செண்டிமெண்ட் , மூணு ஹீரோயின் வந்தாலே நம்மக்கு ஆட்டோகிராப் தான் தோணுது , ஆட்டோகிராப் சினேகா மாதிரி தமன்னா வருவாங்க நினைத்தேன் , ஆனால் அவங்க, நான் ஹீரோயின் தான் அதனாலா ஹீரோ கூட தான் சேர்வேன்ன்னு சேர்ந்துக்கிறாங்க .நல்லவேளை படத்தை சோகமா முடிச்சிடுவாங்க பதறும் போது , அமைதியா நல்லபடியா முடிச்சிட்டாரு சீனுராமசாமி .
மொத்தத்தில் தர்மதுரை ஒரு அளவிற்கு தர்மம் தலைகாக்கும் துரையாக வந்துஇருக்கு .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
படம் பார்த்து கதை சொல்லு என்பது போல , மேலே போட்டு இருக்கும் படம் பார்த்தா என்ன தோணுது ? அதை பற்றிய கதை தான் இந்த படம் ஜோக்கர் . ஒரு அரசியல் என்பது அரசியல் பண்ணுவது , ஊழல் நடப்பது எது வரைக்கும் ? என்பது மேலே போட்டு இருக்கும் படத்தை பார்த்தாலே தெரியும் .
படத்தின் மிகப்பெரிய பிளஸ் எளிமையான , உண்மையான காட்சி அமைப்பு தான் , படம் ஆரம்பிக்கும் போதே துடைப்பம் விற்க்கும் வியாபாரி ஊருக்குள்ளே நுழையும்போது திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை காட்டும் போது , அந்த கிராமம் , இந்த படத்தின் கதை ஓட்டம் என்னவென்று சொல்லாமல் சொல்லுகிறது, ரொம்ப சின்ன சின்ன நுணுக்கமான விஷயங்களில் கவனித்து காட்சி அமைத்து இருக்கிறார் டைரக்டர் , ஹீரோயின் படுத்தபடுக்கயில் காட்டும் போது , படுத்தப்படுக்கையால் வரும் தோல் மாற்றம், முதல் நாளுக்கும் , பின்பு காட்டும் நாட்களுக்கும் வித்தியாசம் காட்டுவதிலும் சரி , முதல் நாள் வீட்டுக்குள்ளே தூக்கி கொண்டு வரும் போது அங்கே சிறுநீர் பையை காட்டுவதும் சரி , இப்படி பல சின்ன சின்ன விஷயங்களை உன்னித்து செய்து இருக்கிறார் டைரக்டர் .
மக்களின் குடியரசு தலைவர் என்று சொல்லிக்கிட்டு ஒரு ஜோக்கராக படம் full ahaa வருகிறார் ஹீரோ குரு சோமசுந்தரம் , அவர் ஒரு ஒரு முறையும் தலை மூடியை அம்முக்கி விட்டு வருவதும் , ஒரு கண்ணில் காந்தி , ஒரு கண்ணில் பகத் சிங் என்று தன்னோட நிலைப்பாடையும் சொல்வது, அங்கே ஹீரோ தெரியவில்லை அந்த இயக்குனர் தான் தெரிகிறார்,இன்றைய அரசியல் ,மற்றும் சமூக அவலங்களை அங்கங்கே , வசனங்களால் சொல்லுவது சூப்பர் .
ஹீரோ கூட வரும் இசை மற்றும் பொன்னூஞ்சல் கதாபாத்திரமும் ,அவர் செய்யும் செயலுக்கு , ஒரு உண்மையான குடியரசு தலைவருக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் தருவார்களோ , அது போலவே அவருக்கு தருவது செம்ம ,
இசையமைப்பு சியான் ரோல்டன் , நடிப்பில் எப்படி ஒரு வெகுளித்தனத்தை ஹீரோ காட்டுகிறார் அது போலவே அந்த வெகுளித்தனத்தை இசையில் நம்மக்கு உணர்த்தி இருக்கிறார் அவர் , குறிப்பாக படம் ஆரம்பத்தில் அந்த கிராமம் ,ஹீரோ intro காட்டும் காட்சிகள் நிச்சயமாக அருமைன்னு சொல்லலாம் .
நிச்சயமாக இந்த படத்தை பார்ப்பதற்கு பொறுமை தேவை , முதல் பாதியில் ஜோக்கராக அவர் பண்ணும் ஆர்ப்பாட்டங்கள் ரசிக்கும்படி இருந்தாலும் , இரண்டாவுது பாதியில் கொஞ்சம் தோய்வு இருக்க தான் செய்கிறது.எவ்வளவோ மசாலா படங்களில் தோய்வு காட்சிகள் பார்த்து பொறுத்த நமக்கு , இத்தகைய சமூக படத்தில் இருக்கும் தோய்வு ஒரு மைனஸாக தெரியாது .
மொத்தத்தில் ஜோக்கர் வசூலில் விருதுகள் வாங்காவிட்டாலும் , உண்மையான பல விருதுகள் வாங்குவது உறுதி .
இப்படிக்கு
சினி கிறுக்கன்

பொதுவா நான் விமர்சனத்தில் கதை சொல்லமாட்டேன் , இருந்தாலும் இந்த படம் வெளியானது இந்த சுதந்திர தினம் சமயம் என்பதினால் சொல்லுகிறேன் , ஹீரோ பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டு கஷ்டப்பட்டு எப்படி இந்தியா வருகிறார் என்பது தான் இந்த தேசப்பற்று மிக்க திரைப்படத்தின் கதை , அவர் ஏன் ? எப்படி? பாகிஸ்தான் சிறையில் மாட்டிகிட்டாரு என்பதை சொல்ல மாட்டேன் , அவர் இந்தியாவுக்கு திரும்பவும் வருவாரா மாட்டாரா ? தன் காதலியை காப்பற்றுவாரா ? என்று பரபரப்பாங்க மக்கள் மனதில் வந்தேமாத்திரம், ஜெய்ஹிந்த் என்று சொல்லிக்கொண்டே படம் முடியும் போது தேசப்பற்று மனதில் உணர்ச்சி பொங்க வெளியே வரவேண்டும் என்றும் நினைத்து இந்த படத்தை எடுத்து இருக்கிறார் டைரக்டர் , ஆனால் அப்படி எந்த ஒரு உணர்ச்சி பொங்கலும் , புளியோதரையும் , மனசில் வரவில்லை நல்லா தயிர் சாதம் சாப்பிட்டு தூக்கம் வாரா மாதிரி தான் இருந்துச்சி இந்த படம், இப்படி நெகடிவ்வா படத்தை பற்றி எழுதுவதற்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது , ஏன் என்றால் ஒரு படம் எடுப்பது மிகவும் கடினமான ஒன்று ,சமூக வலைத்தளங்களை வைத்து கொண்டு அசால்ட்டாக எழுதிவிட்டு செல்கிறோம் , நல்ல படங்களை பாராட்டி எழுதும் போது வரவேற்க்கும் படைப்பாளிகள் , இத்தகைய விமர்சனங்களையும் ஏற்று கொள்ளவேண்டும் .
முதலில் இந்த படத்தின் தலைப்பை எடுத்ததிலே தவறு , வாகா என்பது இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் , ஆனால் இந்த படம் நடப்பதோ காஷ்மீர் எல்லையில் , எதற்கு இந்த சம்பந்தம் இல்லாத பெயர் ? என்னதான் பாகிஸ்தான் நமக்கு பகை நாடாக இருந்தாலும் , இந்த படத்தில் பாகிஸ்தானை பற்றி மிகவும் கொடூரமாக காட்டுவதில் பயன் என்ன? இந்த மாதிரி படம் எடுக்கும் போது எந்த அளவுக்கு அங்கே நடக்கும் உண்மை நிலவரத்தை ஆராய்ந்து எடுக்க வேண்டாமா ? அவர் காட்டி இருக்கும் பல காட்சிகள் கற்பனையா ? கற்பனை என்றால் எதற்கு பாகிஸ்தான் பெயரை அப்பட்டமாக காட்ட வேண்டும் ? சென்ஸார் போர்டு எப்படி வெளியே விட்டது ?ஒரு ஆடு பாகிஸ்தான் எல்லையில் நுழைந்தால் கூட பாகிஸ்தான் ராணுவம் கொன்று விடுவாங்க அந்த அளவுக்கு ஈவு இரக்கம் இல்லாதவர்கள் என்று காட்டுவது எந்த அளவுக்கு உண்மை ? நிஜமாகவே இது போல் அங்கு நடக்கிறதா ?அல்ல பாகிஸ்தான் ராணுவம் அந்த அளவுக்கு உண்மையான கொடூரவாதிகளா ?ஒரு தீவிரவாதியை காட்டி இருந்தால் கூட பரவாயில்லை , ஒரு நாட்டின் ராணுவத்தை இப்படி சித்திரப்பது சரியா? , அப்போ நீ பாகிஸ்தான் ஆதரவாளரா என்று கேட்காதீங்க , இந்த மாதிரி ஒரு sensitiveஆனா படங்கள் எடுக்கும் போது கற்பனையாக இருந்தாலும் கொஞ்சம் நம்பும்படியாக இருக்க வேண்டாமா ? கதையை பற்றி பார்த்தாச்சு இந்த படத்தின் நடிகர்களை பற்றியும் , கதாபாத்திரமும் பற்றி பார்ப்போம் .
விக்ரம் பிரபு BSF armyல் வேலை செய்கிறார் அவரோட உயரம் , உடல் வாகு சரியாக அமைந்து இருக்கு, ஆனால் இந்த மாதிரி கதை உள்ள படங்கள் 1990ல் விஜயகாந்த், அர்ஜுன் எல்லாம் பண்ணிட்டாங்க அப்பறம் எப்படி இந்த படத்தை தேர்ந்து எடுத்தார் என்று தான் தெரியல , ஹீரோயின் ரன்யா ராவ் காஷ்மீர் பொண்ணுக்கு சரியாய் பொருந்துறாங்க , அவங்க நிறம் , உடை எல்லாம் காஷ்மீர் பொண்ணு மாதிரியே இருக்காங்க , ஆனால் பல இடங்களில் அவங்க தலையில் முக்காடு போட்டுக்கிட்டு , தலை மூடியை கொஞ்சம் முகத்துக்கு முன்னாடி விட்டு வரும் போது , ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வரும் ஹன்சிகாவை பார்த்தா மாதிரி இருந்துச்சி , சத்ரியன் கொஞ்சம் நேரம் வந்துட்டு போயிட்டாரு, சத்ரியன் உயரத்துக்கு அவர் ஆர்மியில் சேர முடியலன்னு சொன்ன டைரக்டர் , அப்பறம் எப்படி கருணாஸ் உயரத்துக்கு ஆர்மியில் டைரக்டர் சேர்த்தாரு ? ஒரு வேலை அவரு MLA என்பதால் அவரை டைரக்டர் ஆர்மியில் சேர்த்துட்டாரு போல .வில்லன் நரசிம்மா படத்தில் ரகுவரன் ஒரு கோட் போட்டுக்கிட்டு வருவாரு, அது மாதிரியே வந்து இருக்காரு.
இமான் opening பாடல் ஆணியே புடுங்க வேண்டாம் டா ன்னு பாட்டில் படத்தை பற்றி மெசேஜ் சொல்லிட்டாரு , படம் இறுதி காட்சியில் வந்தே மாதரம் ,வந்தே மாதரம்ன்னு Bgm ல் இரைச்சலாக இசை போட்டுட்டாரு ,
இந்த படம் ஒரு காதல் காவியமாகவும் இல்ல , தேசப்பற்று ஓவியமாகவும் இல்ல
மொத்தத்தில் இது வாகா இல்ல வீக்கா .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இன்று காலை வரை டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலையில் , இன்றைக்கு மாலை தான் டிக்கெட் கிடைச்சது மகிழ்ச்சி , ஒரு வழியா முதல் நாள் காட்சி அதிகமாக செலவு பண்ணாமல் டிக்கெட் கிடைச்சது மிக்க மகிழ்ச்சி , டிக்கெட் கொடுத்த என்னோட ஒரு நண்பன் .. நீ நண்பேன்டா....நன்றி சொல்லிக்கிறேன் .
இந்த படத்தை பற்றி என்ன எழுவதுன்னு தெரியல , நல்லா இருக்குன்னு சொன்னா, என்னை கலாய்ப்பதற்கு நிறைய வாய்ப்புண்டு, அதே நேரத்தில் நல்ல இல்லை என்று சொன்னால் நிறைய பேர் என்னை திட்டுவதற்கு நிறைய வாய்ப்புண்டு இருந்தாலும் என் மனதில் பட்டவை இருபார்வைகளில் சொல்லுகிறேன்.
இது ரஜினியின் கபாலி என்று சொல்வதை தாண்டி ரஞ்சித்தின் கபாலி என்று தான் சொல்லணும், ஏன்னா ரஜினியின் படம்ன்னு எதிர்பார்த்து போனால் கொஞ்சம் ஏமாற்றம் தான் , ஏன்னா ரஜினியின் வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி இருக்கும் படம், அதிகமான பஞ்ச் வசனங்கள் , அதிரடி சண்டைகள் , டூயட்கள் , வேகமான காட்சி அமைப்புகள் ,ரஜினியின் காமெடிகள் எதுவும் இதில் கிடையாது , இதனால் இந்த படம் பலபேருக்கு பிடிக்கவில்லை, ஆனால் என்னை பொறுத்தவரை தலைவர் இப்போது தான் , தன் வயதுக்கு ஏற்ப்ப சரியான கதை மற்றும் கதாபாத்திரத்தை எடுத்து உள்ளார் அதனால் தலைவர்க்கு ஒரு பெரிய சபாஷ் போடலாம். அளவான பஞ்ச் வசனங்கள் , அளவான ஹீரோயிசம்ன்னு பண்ணியிருக்காரு , வயசானாலும் உங்க ஸ்டைல் குறையவே இல்ல சார் .
படத்தின் கதை என்னனா வழக்கமான பழி வாங்கும் கேங்ஸ்டர் படம் தான், ஒரே ஒரு வித்தியாசம் நடக்கும் இடம் மலேசியா அவளோதான், படத்தில் பெரிய திருப்பங்கள் என்று எதுவும் இல்லை அனைத்தும் ஒரு சராசரி ரசிகன் யூகிக்க கூடிய காட்சிகள் தான் அமைச்சிருக்காங்க,அது பல பேருக்கு ஏமாற்றம் தான்
எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் என்னன்னா , ரஞ்சித் ஒரு கேங்ஸ்டர் படத்தோட usual rule உடைச்சிருக்கார் தான் சொல்லனும் ,குறிப்பிட்ட வயசுக்கு மேல இருக்க ஒரு character ரொம்ப பறந்து பறந்து சண்டை போட்டு காப்பாற்ற முடியாது அதனால realisticah சண்டைகள் வச்சிஇருக்கார் இருந்தாலும் சில இடங்களில் ரஜினியின் ரசிகர்களை திருப்திபடுத்த ஹீரோயிசம் அங்கே அங்கே காட்டி இருக்காரு , மேலும் பொதுவா ரஜினியின் படத்தில் ரஜினியை தவிர எந்த கேரக்ட்டரும் மனசில் நிற்காது ரஜினியே பிரதானமாக தெரிவார் , ஆனால் இந்த படத்தில் தனிஷ்கா , அட்டகத்தி தினேஷ் ஆகியோர் மனசில் நிற்கிறாங்க ,அதுவும் அட்டகத்தி தினேஷ் கபாலியின் ஒரு ஒரு கண் அசைவிற்கும் செய்யும் செயல்கள் செம்மயா இருக்கு ,அவர் தலையை தலையை ஆட்டும் காட்சி சூப்பர், தனிஷ்கா போல்ட் கேரக்ட்டர் ரொம்ப நல்லா இருந்துச்சி ,மேலும் ரித்விகா , ஜானி பாய் எல்லாம் இருக்காங்க
சந்தோஷ் நாராயணன் நிறைய இடத்தில் இரைச்சல் இல்லாமல் அமையதிய bgm போட்டு இருக்காரு , நெருப்புடா பாட்டு ஏற்கனவே ஹிட் , அது சரியான இடத்தில் நான் நினைத்தது மாதிரியே மாஸ் சீன்களில் பயன்படுத்தி இருக்காரு
மொத்தத்தில் கபாலி விளம்பரத்தினால் வசூலில் காலத்தை வென்றாலும் அனைவரின் மனதிலும் வெல்வது கடினம்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
நான் வந்துட்டேன் சொல்லு திரும்ப வந்துட்டேன் சொல்லு கபாலியோட சினிகிறுக்கன் நான் வந்துட்டேன் சொல்லு , படம் சென்னையில ரிலீஸ் ஆவதற்கு ஒரு நாள் முன்னாடியே விமர்சனத்தோட வந்துட்டேன் சொல்லு , யப்பா யப்பா என்ன பில்டப் என்ன பில்டப் இந்த படத்துக்கு, தலைவரை ஸ்க்ரீன்ல பார்க்கிறதுக்கு அப்படியே இருக்க்காரு அதுவும் கோச்சடையான் , லிங்கான்னு கொஞ்சம் சறுக்கலுக்கு பிறகு ஒரு பயங்கர கெத்தோட வந்து இருக்காரு, ஸ்க்ரீன்ல நெருப்பா இருக்காரு , அதுவும் அந்த நெருப்புடா பாட்டுக்கு தியேட்டர்ல செம்ம விசில் கிழிது , பொதுவா தலைவருக்கு மாஸ் சீன்ஸ் அல்வா சாப்பிடறா மாதிரி, அதுவும் அதை டைரக்டர் ரஞ்சித் பக்காவா பொருத்தி இருக்காரு , அதுக்கு பக்க பலமா சந்தோஷ் நாராயணன் bgm படம் fullaha பிண்ணி எடுத்துட்டாரு , தலைவர்க்கு வழக்கமான பிளாஷ் பேக் தான் அதே நேரத்தில் அவர் அந்த பரட்டை ரஜினி போலவே வருவது புல்லரிச்சிடுச்சி
ரஞ்சித்தோட ஆஸ்தான நடிகர்கள் கலையரசன், ரித்விகா நல்லா பண்ணி இருக்காங்க, தைவான் நடிகர் வின்ஸ்டன் சாஹூ வில்லனாக ஒரு நல்ல வரவு , அடுத்த சில தமிழ் படங்களுக்கு அவரை நாம் வில்லனாக பார்க்கலாம் ,அநேகமாக ஷங்கர் படத்தில் அதிக வாய்ப்பு உண்டு நினைக்கிறேன்.
ராதிகாஅப்டே கதைக்கு சரியான அளவுக்கு பயன்படுத்தி இருக்காங்க ,
தன்ஷிகா செம்ம போல்ட் character , அதுவும் ரஜினியும் அவரும் சந்தித்து கொள்ளும் காட்சி ultimate.
ரஞ்சித்துக்கு இந்த படம் குருவி தலையில் மலை போல அதை சரியாக சமாளித்து இருக்காரு டைரக்டர் ரஞ்சித்,
இப்படி விமர்சனம் எழுத ஆசை தான் , இப்போதைக்கு இது ஒரு கற்பனை விமர்சனம் தான் ,இது போல மேலும் உங்களுக்கு என்னிடம் இருந்து முழுமையான விமர்சனம் தேவையா ? அப்படி என்றால் உங்களிடம் first day ஒரு டிக்கெட் இருந்தால் எனக்கு கொடுக்கவும் , ஏன்னா எனக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை , onlineல புக் பண்ணலாம் பார்த்தா தியேட்டர்காரர்களே ப்ளாக் பண்ணி தான் webisteல் ரிலீஸ் பண்ணுறாங்க , இருக்குற டிக்கெட்டும் 300-600&1000 வரைக்கும் விற்கிறாங்க . டிக்கெட் கிடைச்சா பார்த்துட்டு வந்து உண்மையான விமர்சனத்தோட வருவேன்.
அப்போ கபாலி - டி - விமர்சனம்ன்னா என்ன ?
அது கபாலி - (டி)க்கெட் விமர்சனம்
இப்படிக்கு
இப்போதைக்கு டிக்கெட் இல்லாதவன்டா
சினி கிறுக்கன் டா
(20/7/2016)
என்ன மூன்று வாரமா நிறைய படம் வந்தும் ஒரு படத்தை பற்றி கூட போடலையேன்னு என்னை கேட்ட நல்ல உள்ளங்களுக்கும் , அப்பாடா மூணு வாரமா இவன் இம்சை இல்லன்னு சந்தோஷபட்ட ரொம்ப நல்ல உள்ளங்களுக்கும் ,நான் உங்க சினிகிறுக்கன் மூன்று வாரம் கழிச்சி இந்த தில்லுக்கு துட்டு படத்தோட வந்து இருக்கேன் , மூணு வாரமா வார இறுதி நாட்களில் out of station பயணம், அதனால எந்த படமும் பார்க்கவில்லை எழுதவில்லை ,இந்த படமும் நான் எழுதுறது கொஞ்சம் தாமதம் தான் இருந்தாலும் நம்ம கடமையை செவ்ன செய்வோம்.
அட போங்கடா ஒரே பேய் படம் ட்ரெண்ட் ஆகவே இருக்கு , அதுவும் நம்ம தமிழ் சினிமாவுல காமெடி + பேய் படம்ன்னா ரொம்ப ட்ரெண்ட் ஆயிடுச்சி, இந்த படமும் அதுக்கு விதி விலக்கு இல்ல , அதுவும் சந்தானம் வேற இருக்காரு சொல்லணுமா ?
படம் ஆரம்பிப்பது என்னமோ நல்ல ஆரம்பம் தான் அந்த திபெத் சாமியார் வருவது, அந்த பங்களாவுக்கு ஒரு கதை சொல்லுவதுன்னு நல்லா இருக்கு,ஆனா போக போக எப்போதும் போல அரைச்ச மாவை தான் அரைச்சு இருக்காங்க , சாரி இது எல்லோரும் சொல்லுவது தான் கொஞ்சம் வித்தியாசமா சொல்லணும்ன்னா எப்போதும் பிசையற பரோட்டா மாவு போலே தான் பிசைஞ்சி இருக்காங்க.
சந்தானம் நல்லா ஆடுறாரு , நல்லா நடிக்கிறாரு , நல்லா சண்டை போடுறாரு, அவரோட intro பார்த்தா கொஞ்சம் திருப்பாச்சி விஜய் , கொஞ்சம் அண்ணாமலை ரஜினி , கொஞ்சம் வேதாளம் அஜித் வீர விநாயக பாட்டு அப்படின்னு எல்லோரையும் inspiration ஆக எடுத்து அந்த பாட்டை கம்போஸ் பண்ணி இருக்காங்க , ஆனா காமெடி மட்டும் பழய மாதிரியே பண்ணுறாரு counter காமெடி , மற்றும் வசனங்கள் எல்லாம் பழய லொள்ளு சபா பார்க்கிறா மாதிரியே தான் இருக்கு , சந்தானம் கொஞ்சம் out datedஆகுறாரோன்னு ஒரு feel வந்தது,
ஹீரோயின் சானியா சேட்டு பொண்ணுக்கு நல்லா செட் ஆகிட்டாங்க ஆனா வசனங்கள் dubbingல நிறைய இடங்களில் lip sync ஆகல, ஹீரோயின் அப்பாவுக்கு மாப்பிள்ளைன்னு ஒருத்தர் வராரு ஆனா ஹீரோயின்க்கு அக்காவா எங்கேயும் காட்டவில்லை, கடைசியா பயந்து ஓடும் போது அந்த மாப்பிள்ளைக்கு மனைவியா ஒருத்தர் வராரு அவ்ளோதான்.
படத்தோட மிக பெரிய ப்ளஸ் நம்ம மொட்டை ராஜேந்திரன் தான் , அது கூட ஆரம்பத்தில் ரொம்ப சுமாராக தான் இருக்கு ஆனா இறுதி 30 நிமிஷம் அவர் பண்ணும் காமெடி செம்ம , கிளைமஸ்ல் உண்மையான பேய்க்கும் , டூப்ளிகேட் பேய்க்கும் நடுவுல மாட்டிக்கிட்ட அவர் படும் அவஸ்தை அப்புறம் சந்தானம்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிற விதம் எல்லாம் செம்ம,
ஏதோ தமன் இசையால் அங்கு அங்கே நமக்கு இது பேய் படம்ன்னு ஞாபகம் வருது இல்லாட்டி இது வெறும் காமெடி படமாகவே இருந்து இருக்கும்.
படத்தோட கடைசி காட்சி எனக்கு என்னவோ அந்த insidiousல கொஞ்சம் சுட்டா மாதிரி ஒரு எண்ணம்
மொத்தத்தில் தில்லுக்கு துட்டு கொஞ்சம் நமக்கு கழுத்துல வெட்டு
இப்படிக்கு
சினி கிறுக்கன்
The Conjuring ஆ ?? டேய் இங்கிலீஷ் படத்தை கூட தமிழில் தானா எழுதுவன்னு ? நீங்க கேட்கிறது தெரியுது,நம்ம இங்கிலீஷ்ல பார்த்தாலும் தமிழ்ல தானே எழுதுவோம் , ஏன்னா நமக்கு தமிழ் ஆடியன்ஸ் தானே அதிகம்.
இந்த படத்தை பற்றி எழுத நமக்கு கொஞ்சம் பயம் தான் , ஏன்னா கோலிவுட் படத்தை பற்றி எழுதுனாலே நம்மை கோழி உறிக்கிறா மாதிரி உறிப்பாங்க இதுல ஹாலிவு ட் படம் வேறையா ? அப்படின்னு நமக்கு நாமே கேட்க தோணுது,இருந்தாலும் நாம் நம்ம கடமையை செய்வோம்.
நான் பொதுவா படத்தோட கதையை சொல்ல மாட்டேன் , ஆனா நான் ரசிச்ச நல்ல காட்சிகள் மேலும் அதோட பிளஸ் பாயிண்ட் தான் சொல்லுவேன் , ஆனா இந்த படத்தில் ரசிச்ச காட்சிகளை நான் சொல்லமாட்டேன் ,சொன்னால் பார்க்கும் விறுவிறுப்பு போய்டும்,படத்தோட ஒரு வரி கதை மட்டும் சொல்லுறேன் , இங்கிலாந்தில் ஒரு குடும்பம் இருக்கும் வீட்டில் பேய் இருக்கிறது , அந்த குடும்பத்தை அந்த பேய் வீட்டை விட்டு துரத்த ட்ரை பண்ணுது ,எப்படி அந்த பேயயை ஒழிச்சாங்கன்னு தான் இந்த படம்.
திக் திக் திக்ன்னு படம் ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு வினாடியும் நம்மை அந்த படத்தோட ஒன்ற வச்சி இருக்கு, ஒவ்வொருகாட்சியும் ஒவ்வொரு ஷாட்டும் அடுத்து அடுத்து என்ன ? எங்க இருந்து எப்போ வரும்ன்னு ஒரு உணர்வு நமக்குள்ள கொண்டு வந்து இருக்காங்க ,அதுக்கு காரணம் படத்தோட கேமராமேனும் எடிட்டரும் தான், ஏன்னா படம் பூரா படத்தக்கு உள்ளேயே கொண்டு போக வச்சி இருக்காங்க,கேமரா மெதுவா நகரும் போது நாமே அங்கே இருப்பது போல இருக்கு படத்தோட மாபெரும் பிளஸ் இசை , அடிச்சி பிச்சிட்டாங்க சரியான இடத்தில சவுண்ட் effect அதுவும் டால்பி அட்மாசில் செம்ம,
Janetஆக நடித்த madison wolfe யெப்பா .. அந்த குட்டி பொண்ணு செம்மைய நடிச்சி இருக்குயா அந்த படத்தோட மிக பெரிய பிளஸ் அந்த பொண்ணோட நடிப்பு தான் , அப்புறம் அந்த NUN கேரக்டர் வரைப்படம் செம்ம திகில் லுக்,
படத்தில் நிறைய நல்ல காட்சிகள் சொல்லணும் தோணுது ,ஆனா படத்தை பார்த்து ரசிச்சிகோங்க, பேய் பட ரசிகர்களுக்கு இது நல்ல தீனி போடும், ,நிச்சயமா 2 மணி நேரம் ஒரு நல்ல திகில் அனுபவம் இருக்கும் , The Conjuring முதல் part க்கு எந்தளவுக்கும் சளைத்தது இல்லை இந்த The Conjuring2.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#TheConjuring2
ஜாலிலோ ஜிம்காலா,, கதை எல்லாம் கேட்காதீங்க , லாஜிக் எல்லாம் பார்காதீங்கன்னு , நம்பி வாங்க சிரிச்சிட்டு போங்கன்னு , அவங்களே படத்தோட promotionல சொல்லிட்டங்கா, அதனாலா கதைய பற்றி ஆராயிச்சி பண்ணறது , லாஜிக் பற்றி ஆப்பேரஷன் பண்ணறது எல்லாம் தேவை இல்லாதது ,
சரி படத்தில அவங்க சொன்னா மாதிரி ஜாலியா இருக்கான்னு ? பார்த்தோம்ன்னா என்னை பொருத்தவரைக்கும் அது இல்லை தான் சொல்லுவேன், ஏன்னா குழந்தை மனசு(குழந்தைகள் தான் சொல்லுவன் ) இருக்கறவங்க , சும்மா சிரின்னு சொன்னதும் விழுந்து விழுந்து சிரிப்பவர்களுக்கு வேண்டும்ன்னா இந்த படம் ஜாலியா இருக்கும், ஆனா சூரி, விஷ்ணு , மொட்டை ராஜேந்திரன் ,ரோபோ ஷங்கர்ன்னு பல பேரு என்ன ? பத்து பேரு சேர்ந்து வந்து இந்த படத்துல வந்து கிச்சு கிச்சு மூட்டினாலும் எனக்கு சிரிப்பு வரல .
படத்தோட பிளஸ் ரோபோ ஷங்கர் தான் , நல்லா நடிச்சு இருக்கார் , அதுவும் அவர் அன்றைக்கு நடந்தது காலையில் இருந்து கதையை திரும்ப திரும்ப சொல்லும் காட்சி தான் சூப்பர் , உண்மையில படத்தில நான் நல்லா சிரிச்ச சீன் அது மட்டும் தான் .
வேற என்ன சொல்லலாம் இந்த படத்தை பற்றி ? ம்ம் பாடல்கள் பற்றி சொல்லனும்னா ஒரு மசாலா படத்துக்கு எப்படி தேவையோ அது மாதிரி மசாலா பாடல்கள் இருக்கு
விஷ்ணு படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும்ன்னு முதல் முறையா இப்படி ஒரு கமெர்சியல் படம் ட்ரை பண்ணி இருக்கார் ,நிக்கி கல்ராணி அழகா இருக்காங்க ஆனா அவங்க அப்பா ஹோட்டல் owner , அந்த ஹோட்டல் பார்த்தா பைபாஸ்ல இருக்குற கையேந்தி போல இருக்கு, ஆனா ஹோட்டல் கல்லாபெட்டில உட்கார்ந்து இருக்காங்க அதுவும் full மேக்கப்ல , செம்ம grandஆ , 5 ஸ்டார் ஹோட்டல் முதலாளி போல இருக்காங்க ,கொஞ்சம் யோசிக்க வேண்டாமா? சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்
அப்புறம் ரோபோ ஷங்கர் காணாமல் போன பிறகு , அதை கண்டு பிடிக்க நிக்கி கல்ராணி கூட உட்கார்ந்து ஐடியா கொடுக்கிறேன் பேருல அவர் ஒவ்வொருத்தருக்கும் phone பண்ணும் காட்சி , டைரக்டர் சார் அந்த காட்சி ருத்ரா படத்தில பாக்கியராஜ் சார் ஏற்கனவே பண்ணிட்டார் .சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன்.
படத்தோட கடைசில மொட்டை ராஜேந்திரன் வருவாராம் , பேய் வருமாம், குத்து பாட்டுக்கு எல்லாம் டான்ஸ் ஆடுவாங்களாம் , எப்பா முடியல , சாரி படத்தோட லாஜிக் எல்லாம் பார்க்காதீங்கன்னு முதலில் நான் சொன்னதை மறந்துட்டேன் .
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ,இந்த படத்துக்குன்னு வந்துட்டா கொஞ்சம் கூட யோசிக்க இயலாதவன்,
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#Velainu #Vandhutta #Vellaikaaran
#VVV
நீங்க ஒரு பொழுதுபோக்கு விரும்பியா?,2 மணி நேரம் நல்லா என்ஜாய் பண்ணனும் என்று think பண்ணுவீங்களா? கார்த்திக் சுப்புராஜ் படம் அதனால பிட்சா , ஜிகர்தண்டா மாதிரி இருக்கும் நினைப்பவரா ? அப்போ உங்களுக்குரிய படம் இது இல்ல ,அந்த மாதிரி எண்ணம் இருந்துச்சினா அதை அப்படியே மூட்டை கட்டி தூக்கிபோட்டுட்டு போங்க
இறைவின் பொருள் - பெண் தெய்வம் , பெண்களை பற்றிய படம் இதுவரைக்கும் தமிழ் சினிமாவில் வந்த படங்களில் ரொம்ப வித்தியாசமான ஒரு முறையை பின்பற்றி ஒரு trend செட்டிங் படம் போல தந்து இருக்காரு டைரக்டர்.
தன்னால் ஒரே மாதிரி படங்கள் தான் கொடுக்க முடியும் என்று இல்லமால் , மூணு படங்களும் மூன்று வித்தியாசமான கதை களம் எடுத்து இருக்கார் .அதுக்கு ஒரு செம்ம கைதட்டு
பொதுவா தமிழ் சினிமாவில் பெண்களை பற்றிய படம் என்றால்,அடிமை தனம் படுத்தும் ஆண்கள், இல்லாட்டி ரொம்ப கஷ்டப்படும் பெண்கள் வாழ்கையில் பல தடைகளை தாண்டி முன்னேறி சாதிப்பது போல தான் காட்டுவாங்க, ஆனால் இதில் ஒவ்வொரு ஆண்கள் faceபண்ணும் பிரச்சனைகள் அதனால எப்படி அவர்களை சார்ந்த பெண்கள் பாதிக்க படுறாங்கன்னு காட்டி இருக்கார்
எனக்கு உண்மையில் சொல்லனும்னா முதல் பாதியை விட இரண்டாவுது பாதி தான் இறைவி மனசுக்குள்ள இறங்குகிறாள், ஏன்னா முதல் பாதியில் ஒவ்வொருவரின் பிரச்சனைகளை நிலை நிறுத்த காட்சிகள் கொஞ்சம் நிறைய வச்சி இருக்கார் போல தோணுது,சரி அப்போ இரண்டாவுது பாதியில் கம்மியான்னு கேக்குறிங்களா ? இல்ல.. படத்தில் நிறைய இடங்கள் வெட்டி இருக்கலாம்ன்னு தான் எனக்கு தோணுது, இரண்டாவுது பாதியில் பல காட்சி அமைப்பு ரொம்ப அழகா ரசிக்கும்படி வச்சி இருக்கார்
விஜய்சேதுபதி ஜெயில்ல இருந்து வெளிய வரும் போது , குழந்தையோட தொட்டில்லை முகர்ந்தது பார்ப்பது,அஞ்சலியை அவர் ஊருல சமாதானம் படுத்துவது , அப்போ வெளியே பாட்டி அதை ரசிப்பது,அஞ்சலிகிட்ட விஜய்சேதுபதி பாபிசிம்ஹா பற்றி பேசுவது,பாபிசிம்ஹா அவரோட அம்மாகிட்ட மூழு படத்தோட கதைய வசனமா பேசுவது,கடைசியா நிச்சயதார்த்தம்போது காமிலினிமூக்கர்ஜி எஸ்.ஜே.சூர்யா கிட்ட பேசுவது ,எஸ்.ஜே.சூர்யா வைபவ் கிட்ட உங்க exஉட்பி ,என்னோட present wifeன்னு சொல்லுவது,,கிளைமாக்ஸ்ல் எஸ்.ஜே.சூர்யா பேசுவது,அஞ்சலி அசால்டா திரும்பி பார்க்காம trainல் ஏறுவது, இதுவெல்லாம் இரண்டாவுது பாதியில் ரசிக்கும்படி வைத்த காட்சிகள்.
படத்தின் பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யா, அட்டகாசமா நடித்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்காருன்னு தான் சொல்லணும்,குறிப்பா தயாரிப்பாளர் கிட்ட அடி வாங்கிற காட்சியில் பேசும் வசனம், பிறகு கிளைமாக்ஸ்ல் phoneல் பேசும் காட்சி ,பிறகு பூஜா தேவரியா கேரக்டர் செம்ம bold,அவங்ககிட்ட விஜய்சேதுபதி சித்தப்பாவோட போயிட்டு பொண்ணு கேட்கும் காட்சி செம்ம.
மொத்தத்தில் இறைவி பல காட்சிகளால் இறைந்து இருக்கிறது, இறைந்ததை இறுக்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.அதே நேரத்தில் புதுமையான முயற்சிக்கு பாராட்டுகள் .
இப்படிக்கு
சினிகிறுக்கன்
#cinekirukkan #iraivi
இது வம்பு ஆளு ஐயோ சாரி படத்தோட பேரு இது நம்ம ஆளு, படத்தோட ஹீரோ தான் controversyனா , நமக்கு எழுதும் போதே controversy ஆகுதே. சரி விடுங்க படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க
சிம்புவோட படத்தில என்ன இருக்கும் ? அழகான ஹீரோயின் இருப்பாங்களா ?
ஆமா இதுல இருக்காங்க..... அப்புறம் ?
காதல், காதல் தோல்வி , ஒரு குத்து பாட்டு இருக்குமா ??
ஆமா இதுல இருக்கு .
பொண்ணுகளோட காதல் அவங்கள பற்றி காலாயித்தல் இருக்குமா ?
ஆமா லைட்ஆ இருக்கு
தலயை பற்றி சொல்லி ஒரு வசனம் இருக்குமா ?
ஆமா இதுல இருக்கு.
சந்தானம் இருப்பாரா ?
ஆமா.. ஆனா கொஞ்சமா வந்துட்டு அவரோட substituteah சூரியை போட்டுடாரு .
நல்லவேளை punch dialogue எல்லாம் படத்துல இல்ல
படம் எப்படி இருக்கியா? என்று கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, கொஞ்சம் பொறுங்க ,படத்தில நடிச்ச சிம்புவுக்கு படம் ரிலீஸ் ஆகணும்ன்னு எந்த அளவுக்கு பொறுமை இருந்துச்சி , அதைவிட படம் பார்த்த எனக்கு எவ்வளவு பொறுமை இருக்கு , படிக்கிற உங்களுக்கும் அது கொஞ்சம் இருக்கணும்.
இயக்குனர் பாண்டிராஜ் படத்தில என்ன எல்லாம் இருக்கும் ?
கண்டிப்பா நடிகர் JP இருப்பார், அதாங்க மங்காத்தாவுல த்ரிஷாவுக்கு அப்பாவா வருவரே அவர் தான் ,இதுல இருக்கார் .
நகைச்சுவை மெல்லிசா ஒரு கோடு போல படத்தோட போயிட்டு இருக்கும்,இதுலயும் அது மாதிரி சூரியை வச்சி போகுது, ஆனா படத்தைவிட்டு வெளியே வரும் போது மனசுல இருந்து அழிஞ்சி போகுது.
அவரோட family drama படங்களில் எந்த ஒரு கேரக்டரையும் நெகடிவா காட்டமாட்டாரு, சந்தர்ப்ப சூழ்நிலைகளை தான் வில்லனாக காட்டுவாரு,அதுவும் இதுலை இருக்கு
இது எல்லாம் இருக்கே ஆனா படத்தில கதை இருக்கா ? அதை தான் கடைசி வரைக்கும் தேடிகிட்டு இருந்தேன், வெறும் துண்டு துண்டாக காட்சிகளின் கோர்வை தான் இந்த படம், ஆனா டைரக்டர் காட்சிகளை ரொம்ப கோர்த்துடாருன்னு தான் சொல்லணும் அதனால கொஞ்சம் கண்ணை கட்டுது ,பல படங்கள் கதை பெருசா இல்லாட்டியும் , சுவாரசியமான திரைக்கதையால் படம் போர் அடிக்காம போகும், ஆனா அது இதுல மிஸ்ஸிங்.
படம் ஆரம்பிக்கும் போது IT கம்பெனி பற்றி சொல்லும் போது அட சுவாரசியமா போகுதே நம்ம மனசுல இருக்கிறதை அப்படியே சொல்லுறாரே என்று தோணிச்சி,அதுவும் சில வசனங்கள் நான் ஏற்கனவே ஒரு stage ஷோல சொல்லிருக்கோமே பரவாயில்லையே நம்மை மாதிரியே யோசிச்சி எழுதிருக்காரேன்னு ஒரு அல்ப்ப சந்தோசம்
சிம்பு கண்ணாடி போட்டுக்கிட்டு ரொம்ப அழகா இருக்காரு , பொதுவா சிம்பு டான்ஸ்ல எல்லாம் பிண்ணிபெடல் எடுப்பார் ஆனா அந்த குத்து பாட்டுல உடம்பை கஷட்டப்பட்டு ஆடினா மாதிரி இருந்திச்சி.
நயன்தாரவுக்கு இந்த படம் ஒரு challenging ஆனா ஒரு கேரக்டர் இல்ல இது
ஆண்ட்ரியா நிறைய இடங்களில் ஜெனிலியா மாதிரி நடிக்க ட்ரை பண்ணிருக்காங்க,அவங்களுக்கு இந்த மாதிரி கேரக்டர் செட்ஆகல ,
சிம்புவும் நயன்தாராவும் மொபைல மாற்றி மாற்றி பேசும் காட்சி ரொம்ப நேரம் வச்சி போர் அடிச்சிட்டாங்க , அந்த சமயத்துல நம்ம ஆடியன்சே அவங்கள கலாயிக்கலாம் என்று நினைக்கும் போது சூரி வந்து அவங்க ரெண்டு பேரையும் கலாய்ச்சி அவர் கை தட்டு வாங்கிட்டு போயிடுறாரு .
இயக்குனர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் தரனும் ஆசைபடுறேன் , அதாவுது இந்த IT கம்பெனில ஹீரோ வேலை செய்கிறா மாதிரி காட்டும் போது tie கட்டிக்கிட்டு வராமதிரியோ , ஆப்பிள் சிஸ்டம்ல வேலை செய்கிறா மாதிரி காட்டாதீங்க ,ஏன்னா எல்லா கம்பெனிலயும் எல்லோரும் ஆப்பிள் சிஸ்டம்ல வேலை செய்றது இல்லை, எல்லா கம்பெனிலயும் எல்லோரும் tie கட்டிக்கிட்டு போகறதும் இல்லை.
மொத்தத்தில் சிம்புவுக்கு இது நம்ம ஆளு இல்லை ,கெளதம் & ஏ ஆர் ரகுமான் அருளால் அச்சம்எனபது மடமையட வெற்றி பெற வாழ்த்துகள் .
இப்படிக்கு
சினிகிறுக்கன்
#cinikirukkan #ithu#namma#aalu
#INA
சினிகிறுக்கனின் தேர்தல் வணக்கம்..
இப்படி ஒரு படம் அதுவும் இந்த தேர்தல் நேரத்தில் வெளியிட்டது செம்ம தைரியம் , ஆளுங்கட்சி எதிர் கட்சி , இந்த தலைவர், அந்த தலைவர், எந்த தலைவர்ன்னு பாரபட்சம் பார்க்காம வசனகளில் ஒரு சாதாரண குடிமகனின் மனநிலையை பிரதிபலிக்கும் படம் இது.
கதை:
ஒருவரை பழிவாங்குவதர்க்காக , முதல்வரை கடத்தி அதன் மூலம் அந்த நபரின் முகத்திரையை கிழிப்பது தான் கதை, இதில் பேச்சுவார்த்தை நடக்கும் காட்சியில் வசனகளில் மூலம் இன்றைய அரசியலின் அவலங்களை தோலுறித்து காட்டுவது தான் படத்தின் உச்சம்.
திரைகதை:
மற்ற படம் மாதிரி தேவை இல்லாத காட்சிகள் வைத்து பிறகு கதைக்குள்ள போகாம , நேரடியா கதைக்குள்ள போகுறா மாதிரி காட்சி அமைப்பு வச்சிட்டாரு, ஆனால் பாலசரவணன் யார் பாபிசிம்மாஹா அவர் என்ன எப்படி சந்திசாங்கன்னு ஒரு பிளாஷ் பேக் போகும் போது, ஒரு டூயட் பாட்டு எல்லாம் வச்சி , ஐயோ தெரியாம இந்த படத்துல வந்து மாட்டிகிட்டோமோ ரொம்ப தோயிதோன்னு ஒரு எண்ணம் வந்திச்சி ஆனால் கடைசியா பாலசரவணன் அந்த காட்சிக்கு ஒரு காரணம் சொல்லும் போது சரி பொழைச்சி போங்கயா, அந்த காட்சிகள் எல்லாம் சரின்னு சொல்ல தோணுது, மேலும் தேவை இல்லாத பாட்டு காதல் சண்டை எல்லாம் வச்சி படத்தின் வேகத்தை நிறுத்தாமல், அந்த கதைக்கு என்ன தேவையோ அதை சரியாய் 2 மணி நேரத்துக்கு கொடுத்து இருக்கிறார் , படத்தில் தேடும் வேட்டை மற்றும் கிளைமாக்ஸ்ல் தப்பிப்பது போன்ற சில லாஜிக் மிஸ்ஸிங் சீன்களும் உண்டு,ஆனால் இது எல்லாம் மறக்கடிப்பது போல மற்ற காட்சிகள் இருக்கு, அதனால இது ஒரு பெரிய விஷயமாக தெரியல .
வசனம் :
படத்தின் முக்கிய ஹீரோ வசனம்தாங்க, வரி பற்றிய வசனமாக இருந்தாலும் சரி, டாஸ்மாக் பற்றி பேசுவது, கள்ள ரூபா நோட் பற்றி பேசுவதும் சரி,அரசாங்க வேலை , விவசாயம் , பள்ளி கல்வி முறை என்று அனைத்து பற்றியும், மேலும் அரசியல்வாதிகள் மேல மட்டும் குற்றம் சொல்லாமல், பிரகாஷ்ராஜ் மக்கள் செய்யும் குற்றங்களையும் குறிப்பிட்டு சொல்லும் வசனமும் நெற்றியில் துப்பாக்கியில் சுட்டது போல் உள்ளது , மேலும் வசனகள் மூலம் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் ஒரு பாடமே எடுத்து விட்டார் இயக்குனர். தியேட்டர்ல கைதட்டு விசில் கிழிது.
இசை:
லியோன் ஜேம்ஸ் சரியாக படத்திற்கு என்ன தேவையோ அதை ஓவர் டோஸ் பண்ணாம கொடுத்து இருக்கார்
காதாபாத்திரங்கள் :
பாபி இந்த படத்திற்கு பிறகு நல்ல வாய்ப்பு உண்டு, ஆனால் நிறைய இடங்களில் ரஜினி மாதிரி body language பண்ணி இருக்கார்
பிரகாஷ் ராஜ் இந்த மாதிரி அரசியல்வாதி காதாபாத்திரம் என்றால் அல்லவா சாப்பிடுவது போல் , அதை சரியாய் செஞ்சிட்டாரு
நிக்கி கல்ராணி மற்ற படம் ஹீரோயின் போல சும்மா ஊறுக்காய் மாதிரி பயன்படுத்தாம , கதைக்கு எந்த அளவுக்கு தேவையோ சரியாக பயன்படுதிருக்காங்க
பாலசரவணன் டார்லிங், திருடன் போலீஸ்க்கு பிறகு ஒரு நல்ல scope உள்ள படம் , அவரை விசாரிக்கும் போது அவர் செய்யும் சின்ன சின்ன காமெடி நல்லா இருக்கு.
இளவரசன் ஒரு அமைச்சராக வருகிறார் அவரை உற்று பார்த்தீங்கனா இப்போ இருக்கும் ஒரு முக்கிய அரசியல்வாதி போல தெரிவாரு , அவரோடைய காது ஓரத்தில் இருக்கும் நிரை முடி , நெற்றியில் இருக்கும் சில மத அடையாளங்கள், மேலும் சட்டை பையில் இருக்கும் தலைவர் படம் , ஐயோ வேண்டாம் சாமி, நான் அதை பற்றி சொல்லல ஆளைவிடுங்கடா சாமி , நமக்கு எதுக்கு வம்பு நீங்களே போயிட்டு பார்த்து தெரிஞ்சிகோங்க.
ஜான்விஜய் , கருணாகரன் எல்லோரும் அளவா நல்லா பண்ணி இருக்காங்க.
ஹைலைட் காட்சிகள் :
தலைவர்காக , மண் சோறு சாபிடுவது, அங்கபிரதட்சணம் பண்ணுவது,மேலும் உளறும் அரசியல்வாதி , இப்படி நிறைய இன்றைய அரசியல் காட்சிகளை திரையில் காட்டி இருக்காங்க, இதை தைரியமாக எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் , நடித்த நடிகர்கள் எல்லோருக்கும் ஒரு சபாஷ்
மொத்தத்தில் : இது தேர்தலுக்கு முன்னதாக வந்த படம் அல்ல பாடம் , ஓட்டு போடுவதற்கு முன்னாடி இந்த படத்தை பார்த்துட்டு போயிட்டு ஓட்டு போடுங்க
இப்படிக்கு
சினிகிறுக்கன் / அரசியல்கிறுக்கன்
#cinikirukkan #KO2
அஞ்சான் மாஸ்ன்னு கொஞ்சம் சறுக்களுக்கு பிறகு இந்த படம் வந்து 24 மணி நேரத்துல பாக்ஸ் ஆபீஸ் அடிக்கணும் மற்றும் மக்கள் மனசுல நிலைத்து நிக்கணும் நினைச்சி இந்த படத்தை நடித்து தயாரித்து இருக்கிறார் சூர்யா,ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் அடிக்குமா அடிக்காதா ? வாங்க பார்க்கலாம்
படத்தோட பிளஸ் சில விஷயங்கள் சொல்லுவதற்கு முன்னாடி பல நெகடிவ் விஷயங்கள் சொல்லணும், படத்தோட கதை நடப்பது 2016 ஆனா படத்தோட கதை ஆரம்பிப்பது 26 ஆண்டுக்கு முன்னாடி அதாவது 1990ல் கதை ஆரம்பிக்கிறது,ஆனா அந்த காட்சியில் வரும் ஸ்ட்ரீம் என்ஜின் train , இரண்டு சூர்யாவும் போட்டு இருக்கும் ஆடைகள் பார்த்தா 1990 மாதிரி இல்ல,ஏதோ 1940-50 மாதிரி அல்லது ஒரு period பிலிம் போல காட்சி அமைப்பு இருக்கு, அந்த காட்சிகளில் போட்டு இருக்கும் செட் அப்படி தான் தெரியுது
டைம் மிஷின் படம் சொன்னதால படத்தோட கதை திரைகதை பார்வையாளர்களுக்கு டைம் மிஷின் பயன்படுத்தாமலே அடுத்து என்ன நடக்க போகுதுன்னு ரொம்ப சுலபமா தெரிகிறது, அதனால படம் பார்க்கும் போது அடுத்து என்னன்னு ஒரு சுவாரசியம் வரவில்லை.
டைம் மிஷின் படம் என்றால் ஒரே காட்சி திரும்ப திரும்ப வரும்ன்னு தெரியும் ஆனா அந்த சூர்யா & சமந்தா காதல் காட்சிகள் திரும்ப திரும்ப வருவது, கிரிக்கெட் ஸ்டேடியம் போயிட்டு வருவது, நான் ஒரு வாட்ச் mechanic, ஒரு ஜெனரல்ன்னு knowledgeன்னு திரும்ப திரும்ப சொல்லுவது ரொம்ப கஷ்டமா இருக்கு., இரண்டு பேருக்குள்ள இருக்கும் காதல் அந்த அளவுக்கு chemsitry தெரில.
இரண்டாவுது பாதியில் வரும் குடும்ப கிளை கதைகள் எல்லாம் பார்க்கும் போது "எங்கள் வீட்டில் எல்லாம் நாளும் கார்த்திகை லா ல லான்னு " விக்ரமன் பாட்டு பாடனும் போல தோணுது,
சூர்யா சமந்தாவுக்கு கண் மையை பொட்டா வைக்கிறாரு ஆனா அடுத்த வரும் சில shotகளில் சமந்தா நெற்றியில் sitcker பொட்டு இருக்கு, இது எல்லாம் கவனித்து இருக்கலாமே.
படத்தோட பிளஸ் முக்கியமா VFX அந்த வாட்ச் கட்டும் போது கிராபிக்ஸ்ல் வேலை செய்கிறா மாதிரி காட்டுவது, முதல் காட்சியில் இருக்கும் பரபரப்பு எல்லாம் நல்லா இருக்கு, அந்த lab செட், அந்த ஆபீஸ்ல் வரும் சண்டை காட்சி நல்லா இருக்கு,ஒரு மழை , மழையெல்லாம் பாதியில் நிற்பது போல ஒருசீன் ,தியேட்டர்ல நிறைய பேரு கை தட்டுறாங்க ,
இசை ஏ ஆர் ஆர் , காலம் என் காதலியே பாட்டு எனக்கு பிடிச்சி இருக்கு ஆனா மற்ற பாட்டு ? அவரோடே பாடல் BGM எல்லாம் வேற லெவல் இருக்கும் ஆனா எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர் ஏ ஆர் ஆர், அவரோட படங்களில் நிச்சயமா ஒரு இடத்திலாவுது வாவ்ன்னு சொல்லுறா மாதிரி BGM இருக்கும்,
இந்த படத்தில அவர்தானா இல்லாட்டி அவரோட assistant BGM, பாட்டு எல்லாம் போட சொல்லிட்டாரோ தோணுது.
மொத்தத்தில் 24 டைம் மஷின் கடிகாரத்தை டைரக்டர் இன்னும் கொஞ்சம் advanceah, fastah வச்சி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#24 #cinekirukkan
தெறிக்க விடலாமா ?? அட அது தல வசனம் ... ஐயோ நம்ம அந்த சண்டைக்கு எல்லாம் போகல..தளபதி படம் தெறி, தெறிக்குமா தெறிகாதா அட அது மட்டும் பார்ப்போம்.
படம், படத்தோட கதை பார்க்கிறதுக்கு முன்னாடி, நிச்சயமா தளபதியை பாராட்டியே தீரனும், அப்படி ஒரு கெத்து ஸ்க்ரீன்ல தெறிக்க விடுறாரு, 40 வயசுல உடம்பை செம்மைய maintain பண்ணுறாரு, மாஸ் பக்காவா அளவா கொடுத்து இருக்காரு, ரொம்ப build up பண்ணாம , தேவையில்லாம பஞ்ச் வசனம் பேசி போர் அடிக்காம, அவரோட ரசிகர்களை மட்டும் மேலும் குழந்தைகளை மட்டும் திருப்தி படுத்தனும் நினைக்காம, ஒரு general audience கூட பிடிக்கிறா மாதிரி படம் கொடுத்து இருக்காரு, அவர் இது மாதிரி இனி வரும் படங்களையும் செய்தால் நிச்சயமா அவருக்கு தோல்வி படம் அமையாது, நிறைய இடங்களில் ரொம்ப ஆசால்ட்டா, casual expression பண்ணி ஸ்கோர் பண்ணிட்டு போறாரு, அந்த பாலத்து மேல மொட்டை ராஜேந்திரன் கிட்ட பேசும் போதும் சரி, இண்டர்வல் பிளாக்ல் சரி, கிளைமாக்ஸ்ல சிரிக்கும் போதும் சரி, குழந்தை கிட்ட பேபி பேபின்னு பேசும் போதும் சரி செம்ம,அதுவும் ஒத்த சொல்லாலே பாட்டுக்கு தனுஷ் போல அதே போல ஒரு expression பண்ணிட்டு ஆட்டம் போடுவது செம்ம, முருகதாஸ் போல நிச்சயமா அட்லி அவரை அழக handle பண்ணி இருக்காரு தான் சொல்லணும், இன்னும் நிறைய மாஸ் சீன்ஸ் எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு அதை படத்தில் பாருங்க.
ஹீரோயின் சமந்தா & எமி , எமி பெருசா ரொம்ப பயன்படுத்தவில்லை, சமந்தா ஒரு மசாலா படத்துக்கு எந்த அளவுக்கு பயன்படுத்த முடியுமோ சரியான அளவுக்கு கதைக்கு தேவையான அளவுக்கு பயன்படுத்தி இருக்காரு,கொஞ்ச நாள் முன்னாடி வரை சரண்யா தான் அம்மாவா வந்து காமெடி எல்லாம் பண்ணிட்டு இருந்தாங்க இப்போ அதே போல ராதிகா பண்ணி இருக்காங்க தளபதியும், ராதிகாவும் combination நல்லா இருக்கு, மொட்டை ராஜேந்திரன் வழக்கம் போல ஸ்க்ரீன்ல வந்தவுடன் செம்ம கை தட்டு மற்றும் செம்ம வரவேற்ப்பு , அதுவும் அவர் iam waiting சொல்லும் போது தியேட்டர் விசில் கிழிது.
அப்புறம் முக்கியமான கேரக்டர் அந்த குழந்தை நைனிக்கா, அந்த கேரளாவுல நடக்கிற சீன்ஸ் எல்லாம் நல்லா அழகா பண்ணி இருக்கு, தாத்தா சாரி கேளுங்க அப்படின்னு சொல்லும் போது சூப்பர்.
இசை ஜி.வி பாடல்கள் ரொம்ப சுமார்,ஜித்து ஜில்லாடி பாட்டை தவிர அதுவும் மொதலில் கேட்க்கும் போது ரொம்ப சுமார் தான், ஆனால் படத்தில் விஜய்க்காக பார்க்கும் போது நல்லா இருந்துச்சி.அந்த பாட்டில் அட்லி டைரக்டர் ஷங்கர் மாணவன்னு நிருபிச்சிட்டாரு ஏன்னா அந்த பாட்டில சுத்தி இருக்க பில்டிங்க்கு எல்லாம் பெயிண்ட் அடிச்சிட்டாரு , எல்லாருக்கும் கண்ணாடி மாட்டிடாரு , BGM பக்கா தெறி மாஸ் சீன்ஸ்க்கு சரியா பொருந்தி இருக்கு.
கதை வெறும் பழி வாங்கும் கதை தான்,இந்த படம் teaser வரும் போதே நிறைய பேர் இது சத்ரியன் ரீமேக்ன்னு சொன்னாங்க, கிட்ட திட்ட இது அது போல ஒரு கதை தான், ஏன்னா சதிர்யன் ஒரு trend setting போலீஸ் படம், அதனால சொல்லி இருப்பாங்க,
முதல் பாதியில் இருக்கும் வேகம், இரண்டாவுது பாதியில் இல்லை, படம் ஆரம்பிச்ச கொஞ்சம் நேரத்தில பிளாஷ் back போனது ஒரு மிக பெரிய பிளஸ், ஆனால் அது ரெண்டாவுது பாதியிலும் கொஞ்சம் தொடர்ந்து செண்டிமெண்ட் எல்லாம் வச்சது கொஞ்சம் போர் அடிக்குது, இரண்டாவுது பாதியில் தளபதியும், வில்லனாக வரும் இயக்குனர் மகேந்திரன்னும் மோதும் காட்சி இன்னும் கொஞ்சம் வச்சி இருந்தால் படம் இன்னும் தீயா பத்திக்கிட்டு fastah போயிருக்கும், இயக்குனர் மகேந்திரனை அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லைன்னு எனக்கு தோணுது.
குறிப்பு : தளபதி ஒரு software கம்பெனில விசாரிக்கிற சீன வரும் அது எங்க officeல ஷூட் பண்ணாங்க, அதனால இந்த படத்தையோ அல்ல எங்க அலுவகதையோ நான் promote பண்ணல. இது ஒரு சும்மா குறிப்பு + விளம்பரம் தான். இன்னொரு குறிப்பு நான் தல அல்லது தளபதி ரசிகன் அல்ல ஒரு சினிமா ரசிகன் **... இல்லாட்டி நம்மல கல்லாய்ச்சிடுவாங்க எல்லாம் ஒரு safetyக்கு தான்
மொத்ததில் ஒரு சாதாரண ரசிகனுக்கு கொடுக்கும் 120க்கு வசூல் தரும் படம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#Theri
#cinekirukkan
சுந்தர்.சி படம் எப்படி இருக்கும் ? பக்காவா மசாலா கலந்த காமெடியா இருக்கும், அதே போல அவர் தயாரிப்பில் வந்த இந்த படமும் அப்படி மசாலா + காமெடி + பேய் தான் . இந்த மசாலா எப்படி செய்வது ? காமெடி காட்சிக்கு கொஞ்சம் யாமிருக்க பயமேன் + கொஞ்சம் டார்லிங் , பயப்பட வைக்கும் காட்சிகளுக்கு காஞ்சுரிங்கள கொஞ்சம், கதை கருவுக்கு யாவரும் நலம் கிளைமக்ஸ்ல் இருந்து கொஞ்சம் , அட ஆமாங்க யாவரும் நலம் படத்துல கடைசி காட்சி பேய் மொபைல்ல கூட வரும்ன்னு சொல்லி முடிச்சி இருப்பாங்க , அதை referenceah வச்சி இந்த படத்தை ஆரம்பிச்சி இருப்பாங்க போல, அப்புறம் கிளைமாக்ஸ் செண்டிமெண்ட் காஞ்சானா எல்லாம் மிஞ்சியாச்சு.
அட படத்தில எந்த லாஜிக் எதுவும் பார்க்க கூடாது ,அதே போல கதையும் என்னன்னு கேட்க கூடாது , அடிச்சு கேப்பாங்க அப்போவும் கேட்க கூடாது , அட பேயே வந்து அடிச்சாலும் கதை என்னன்னு கேட்க கூடாது, ஏன்னா கதை ரொம்ப சப்பை மேட்டர் அதோட பிளாஷ் பேக் சத்தியமா இப்படி யோசிக்க முடியாது , இந்த கதைய அப்படியே ஏ.வி .ம் ஸ்டூடியோ முன்னாடி இருக்கும் ஏ.வி .ம் உருண்டைல செதுக்கி வச்சா பின்னாடி வரும் சந்ததைர்கள் அதை பார்த்து தெரிஞ்சிப்பாங்க. ஏன்னா அந்த கிளைமாக்ஸ் அப்படி இருக்கும்..யெப்பா டேய் எப்படிபா இப்படி கிளைமாக்ஸ் யோசிச்சீங்க ?
சரி கதை விடுங்க , காமெடி எப்படி இருக்கு நிச்சயமா நல்லா சிரிக்கலாம் , அதுவும் வைபவ் ஆரம்பத்தில் பண்ணும் காட்சிகள் சுமார் தான் என்றாலும் , பேய் வந்த பிறகு , வைபவ் , வி டி வி கணேஷ் , சிங்கப்பூர் தீபன் பண்ணும் காமெடி தான் நல்லா இருக்கு அதுவும் அந்த வீடுக்குள போவது, ஒரு கற்பனை பேய் வீட்டுக்கு போவது அங்க பண்ணும் அலப்பரை தான் காமெடி, மற்றப்படி சாவு குத்து போட்டி எல்லாம் வைப்பது இரண்டாவுது பாதியில் நடிகர் சிங்கம்புலி வருவது எல்லாம் மொக்கை தான் ,யோகி பாபு (பண்ணி மூஞ்சி வாயன் ) கொஞ்சம் சீன் வந்தாலும் செம்ம காமெடி , அதுவும் அவர் இந்தி பாட்டு பாடுவது ,கத்தி படம் போல பிளான் பண்ணுவது அல்டிமேட் காமெடி ,கருணாகரன் அந்த அளவுக்கு பயன்படுத்தவில்லை
ஹீரோயின் ஐஸ்வர்யா கதைக்கு அளவான கேரக்டர் , ஓவியா வீட்டுல மைதா மாவு, கடலை மாவுன்னு முகத்தில facial போட்டுக்கிட்டு இருக்கும் போது டைரக்டர் பார்த்து இருப்பாரு போல அட வாமா என் படத்துக்கு நீ தான் பேய்ன்னு சொல்லிட்டு அப்படியே கூட்டிகிட்டு வந்து இருப்பாரு போல, ஏன்னா ஓவியாவுக்கு போட்டு இருக்கும் பேய் மேக்கப் அப்படி தான் இருக்கு .
மொத்தத்தில் காரணம் இல்லாமல் லாஜிக் பார்க்காமல் கொஞ்சம் சிரிச்சிட்டு வரலாம்
இப்படிக்கு சினி கிறுக்கன்
#cinekirukkan #hello #naan #pei #pesuren
Amazon.in
இரண்டு வாரமா பேய் வராம் , அதுவும் இந்த வாரம் இரண்டு பேய் படம் வந்து இருக்கு, எப்போ தான் இந்த பேய் trend நம்ம தமிழ் சினிமாவுல முடியுமோ ?
ஜி . வி பிரகாஷ் நடித்த டார்லிங் படத்துக்கும் இந்த டார்லிங்-2 க்கும் சம்பந்தம் இல்ல, அப்போ என்ன தான் இந்த படத்துல இருக்கு?
அட போங்கப்பா எல்லா பேய் படத்துல இருக்கறது தான் இதுலயும் இருக்கு , நிச்சயமா ஒரு பிளாஷ் back அதுக்கு பழிவாங்குற கதை தான், அது ஒரு ஸ்ட்ராங்கான கதையாவும் , சுவாரசியமான திரைக்கதையும் இருந்தா நிச்சயமா அது நல்லா இருக்கும் , ஆனா அது இரண்டும் இதுல மிஸ்ஸிங் , ரொம்ப எதிர்பார்த்த மாதிரி தான் திரைகதை அமைப்பு இருக்கு எதை நோக்கி எப்படி அடுத்த காட்சி வரும்ன்னு தெரியற மாதிரி தான் இருக்கு, குறிப்பா இண்டர்வல் காட்சி , அந்த அனிஷா கேரக்டர் எல்லாம் ரொம்ப எதிர்பார்த்தா மாதிரி தான் இருக்கு , மேலும் இப்போ வர பேய் படம் காமெடியும் இருக்கணும் நினைக்கிறாங்க அதுவும் இதுல இருக்கு, ஆனா காமெடி படத்துல அங்க அங்க வந்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்குன்னு சொல்லலாம் , குறிப்பா காளிவெங்கட் , சிப்ஸ் கேட்டு சாப்பிடும் ஹரி , முனிஷ்காந்த் நல்லா பண்ணி இருக்காங்க
படத்தோட ரொம்ப பெரிய பிளஸ் கேமரா தான் செம்ம fresh feeling அதுவும் அந்த வால்பாறை சீன்ஸ் , இரவு காட்சி எடுக்க பட்ட outdoor scenes அந்த வீட்டுக்குள்ள காட்டும் காட்சி, நாமே அங்க இருக்க மாதிரி ஒரு உணர்வு கொடுத்து இருக்காரு, அப்புறம் நம்ம வடிவேலு சொல்லுறா மாதிரி பேய் வந்தா டமால் டம்மால் பாத்திரம் விழுதாம் ,லைட் ஆப் ஆகுதாம் , இப்படிபட்ட காட்சிகள் கேமராமேன் நல்லா பண்ணி இருக்காரு
ராதன் இசையில பாடல்களில் ரொம்ப சுமார் தான், ஆனால் அந்த டூயட் சாங் மெலடி நல்லா இருக்கு, அது என்னவோ ஹீரோயின் முஸ்லிம் என்பதால் ஹார்மனி மெல்லிசா ஓட வச்சி ஒரு பாட்டு போட்டு இருக்காரு அது என்னவோ எனக்கு பம்பாய் படத்துல வரும் கண்ணாலனே பாட்டு தான் ஞாபகம் வந்துச்சு, ஒரு வேலை அந்த மாதிரி பாட்டு வேண்டும்ன்னு டைரக்டர் சொல்லி இருப்பாரு போல
படம் இன்னும் பக்கா சீரியஸ் த்ரில்ராக இருந்து இருக்கலாம் இல்லைன்னா full காமெடி பேய் படமாக இருந்து இருக்கலாம்
மொத்தத்தில் டார்லிங்-2 ஓகே ரகம் டார்லிங் தான்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
#cinekirukkan #darling2