ஞாயிறு, 11 ஜூன், 2017

Rangoon-ரங்கூன்

ரங்கூன் இந்த படத்திற்கு போகணும்ன்னா ஒரே  காரணம் ஏ.ஆர் .முருகதாஸ் தயாரிப்பு , டைரக்டர் முருகதாஸ் கூட ஒர்க் பண்ணியவர் , அதனால ஒரு தரமான படமா இருக்கும் ஒரு நம்பிக்கையில் போனா அந்த நம்பிக்கை வீண்போகலை

கௌதம் கார்த்திக்கு  ஒரு நல்ல ஸ்கோப் இருக்கும் படம் , இது வரைக்கும் செய்த படத்தில் இது ஒரு மைல் கல்   என்று தான்  சொல்லணும் , கதை அதுக்கு ஏற்ற நல்ல நடிப்பு , முதல் பாதியில் அவரோட வெகுளித்தனம் , அதோட அவர் வியாபாரத்தில் வளரும் போது அவர் படும் சந்தோஷங்களும் , ஒரு பெருமையும் அவர் முகத்தில் வரும் போது நாமும் சந்தோஷம் படும்படி ஒரு feel வருது, ஆனா  இரண்டாவது பாதியில் அவரை விட அவர் நண்பர்கள் இருவருக்கும் ஸ்கோப் அதிகமா தெரிஞ்சிது .

நிச்சயமா முதல் பாதி அருமையாக எடுத்து இருக்காங்க , அது ஏன்னா , படத்தில தங்கம் வியாபாரம் , கள்ளச்சந்தை அது இதுன்னு புதுசா காட்டி இருக்காங்க அதுவும் வடசென்னை சௌகார்பேட்டை , பர்மா உணவு அங்க வாழும் மக்கள் , நகைக்கடை வியாபர சங்கம் அது எல்லாம் ரொம்ப இயற்கையா இருந்துச்சி , எனக்கு ரொம்ப பிடிச்ச காட்சின்னா அது அஜாக்ஸ் பாலத்து கிட்ட  நடக்கும் ஒரு கொலை முயற்சி சண்டை செம்மையை அந்த காட்சி எடுத்து இருக்காங்க , அது போல பர்மாவில் அவங்க travel பண்ணுவது ரொம்ப தத்துரூபமா இருந்துச்சி .

முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டவாது பாதியில்  கொஞ்சம் எங்கயோ போனது போல இருந்துச்சி  , அதுக்கு காரணம் அடுத்து என்ன நடக்க போகுதுன்னு நமக்கு கொஞ்சம் சுலபமா கணிக்க முடியுது .படம் எனக்கு ஏதோ அயன் படம் பார்த்த ஒரு feel , ஏன்னா இதில் கடத்தும் பொருட்கள் வேற மாதிரி இருக்கலாம் ஆனால் , துரோகம் பண்ணும் கேரக்டர், பர்மாவில் நடக்கும் ஒரு முக்கியமான ஹோட்டல்  சம்பவம் அது  எல்லாம் எனக்கு அயன்  படத்தை தான் ஞாபகம் படுத்துகிறது .அது போல காதல் காட்சி , ஒரு முக்கியமான கேரக்டர் அதை சொல்லிட்டா படத்தோட முக்கியமான ட்விஸ்ட் தெரிஞ்சிடும் அதை பார்க்கும் போது எனக்கு ஆடுகளம் ஞாபகம் வந்துச்சி .

படத்தின் ரொம்ப முக்கியமான ப்ளஸ் கேமரா அந்த சௌகார்பேட்டை இடம் எல்லாம் எப்படி எடுத்தாங்க தெரியல , அந்த மார்க்கெட் இடம் எல்லாம் உண்மையான அங்க தான் எடுத்தாங்களா இல்ல வேற ஏதாவது இடத்தில எடுத்தாங்களா தெரியல , அந்தளவுக்கு  இயற்கையாக இருந்துச்சி , மேலும் இன்னொரு ப்ளஸ் படத்தின் bgm  , அந்த படத்தோட feel நமக்கு வர வேண்டும்ன்னா நிச்சயமா அது மிகப்பெரிய பங்கு இருக்கு , விஷால் சந்திரசேகர் அதை சரியாக செய்து இருக்கிறார் , இன்னொரு விஷயம் பாடல் இசை அமைத்தவர் விக்ரம் foreign return பாட்டு செம்ம குத்து , படத்தில் இருந்து வெளியே வரும் போது அந்த பாட்டு நம்மை அறியாம வாயில் பாட வைக்குது


எனக்கு ஒரு சந்தேகம் டைரக்டர் ராஜ்குமார் முருகதாஸ் அசிஸ்டன்டா ? இல்ல கே.வி.ஆனந்த் அசிஸ்டன்டா , என்னமோ கொஞ்சம் அனேகன் + அயன் பார்த்த feel , ஒருவேளை கதை பர்மா சம்பந்தப்பட்டது அதனால என்னவோ அப்படி தோணுது போல .



மொத்தத்தில் ரங்கூன் தியேட்டரில் நன்றாக runகூன் .

இப்படிக்கு
சினி கிறுக்கன்



3 கருத்துகள்:

  1. நேர்த்தியான விமர்சனம்

    பதிலளிநீக்கு
  2. படத்தின் அனைத்து பகுதிகளையும் விமர்சனத்தில் படிக்க முடிகிறது. நன்கு எழுதப்பட்டுள்ளது. அயன் தாக்கம் விமர்சனத்திலுமா? இன்னும் பல முயற்சிகளை எதிர்பார்க்கிறோம்.👍

    பதிலளிநீக்கு

Comments