Friday, 23 June 2017

AAA - அஅஅ அன்பானவன் , அசராதவன் அடங்காதவன்

உ 
லாபம் 
அருள்மிகு முட்டு சந்து விநாயகர் துணை 
அருள்மிகு மாரியம்மன் துணை 
அருள்மிகு காளியாத்தா துணை 
அருள்மிகு பாடிகாட் முனீஸ்வரன் துணை 
அருள்மிகு அல்லா துணை 
அருள்மிகு யேசுவே துணை 

எங்கள் குலதெய்வம் சரவணன் இருக்க பயமேன் , ப்ருஸ்லீ  , மொட்ட சிவா கெட்ட சிவா இப்படி இந்த படங்களுக்கு எந்த அளவிலும் கொஞ்சம் கூட சளைக்காமல் , இவர்களை விட ஒருபடி மேல நாங்க எங்க படத்தை தருவோம்ன்னு  என்று சபதம் எடுத்துக்கிட்டு இந்த படத்தை எடுத்து இருக்கார் டைரக்டர்.

படத்தின் ப்ளஸ் முதல் காட்சி சிம்பு intro சீன் செம்ம மாஸ் bgm அதே நேரத்தில் செம்ம மாஸாக இருக்கார் அந்த ஜெயிலில் இருந்து தப்பிக்கும் காட்சி.அப்புறம் மொட்டை ராஜேந்திரன் மற்றும் கோவை சரளா இரண்டு பேரும் அச்சம் என்பது மடமையடா தள்ளி போகாதே பாட்டுக்கு பாடுவது செம்ம சிரிப்பு , வேற என்ன ? காரில் நெருப்பு வச்சி ஒருத்தரை சிம்பு  கொலை பண்ணுறார் , அது முதல் பாதி , இரண்டாவது பாதி ரெண்டு தடவை வருது அது ரெண்டுமே நல்ல மாஸ் , வேற என்ன  படத்தில் பிளாஸ் பாயிண்ட் இருக்கு ??
......................................................................................................!.............................!.....................
......................................................................................................!.............................!.....................
......................................................................................................!.............................!.....................
தலைகீழா நின்று கூட யோசிச்சி பார்த்தாச்சு சொல்லுறதுக்கு ப்ளஸ் பாயிண்ட் ஒன்னும் இல்ல .

மைனஸ்ன்னு பார்த்தா 
1.ஸ்ரேயா டப்பிங் சரியில்ல 
2.விடிவி கணேஷ் , பாண்டு , y.g.மகேந்திரன் இவங்களுக்கு எல்லாம் செயற்க்கையாக விக்கு இருக்கு 
3.கரெண்ட் ஷாக் காமெடி பயங்கர மொக்க, y.g.மகேந்திரன் ஏன் இந்த அளவுக்கு கீழ் தனமா ஒரு காமெடி செய்தார் 
4.கோவை சரளா & குரூப் காமெடி மரணமொக்கை 
5.தமன்னா  ஏன் இப்படி ஒரு கேரக்டர் ? 
6. ஒரு கொட்டாவி காதல் காட்சி வரும் , இது வரைக்கும் எந்த படத்திலும் வரவில்லை , அந்த காட்சி மட்டுமல்ல படம் முழுக்க பார்வையளர்களுக்கு அப்படி ஒரு கொட்டாவி வருது .

இப்படி சில மைனஸ் விஷயங்கள் படம் ஆரம்பத்தில் நோட் பண்ண முடிஞ்சது , அப்புறம் நோட் பண்ண முடியல ஏன்னா படம் full ஆகா வெறும் மைனஸ் தான் ,  கதை என்னன்னு சொல்லாமேலே இது பார்ட்-1 முடியல டா சாமி .இதுல பாகுபலி போல பார்ட்-2 வேற

சிம்பு நல்ல திறமையானவர் ஆனா ஏன் இந்த மாதிரி டைரக்டர் படத்தில நடிக்கிறார் ? ஒருஅளவுக்கு நல்ல சுமாரான படம் வந்தாலே அவரை கலாய்ப்பாங்க , மீம்ஸ் போடுவாங்க , இப்போ இப்படி ஒரு படம் நடிச்சி நல்ல மீம்ஸ் போட அவரே எடுத்து கொடுத்து இருக்கார், பாவம் சிம்பு நீங்க தெய்வசெய்து கௌதம்மேனன் போல எதாவுது நல்ல டைரக்டர் கூட ஒரு படம் பண்ணுங்க , உங்க சினிமா க்ராப் மேல ஏத்துங்க 

நிறைய டைரக்டர்ஸ் நல்ல கதை வச்சிக்கிட்டு சான்ஸ் இல்லாமல் சுத்திகிட்டு இருக்காங்க , ஆதிக் ரவிச்சந்திரனுக்கு எப்படி இந்த கதைக்கு சான்ஸ் கிடைச்சது அதுவும் ரெண்டு பார்ட் ??

ஒரு நல்ல படம் பார்த்தா அதோட தாக்கம் சில மணி நேரத்திற்கு நம் மனதில் இருக்கும் ,  அது போல இதுவும் மனசுல அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனக்கு.  ஆனால் அது நேர்மறையாக தாக்கம் வந்துச்சி  .நான் இந்த படத்தை சத்யம்ல தியேட்டர்ல பார்க்கும் போதே சீட் கிழிக்கலாமா ? ஸ்க்ரீனை கிழிக்கலாமா தோணுச்சு , பாவம் காசி தியேட்டர் ரொம்ப நாள் கழிச்சி புதுசா மாற்றி இன்னிக்கு தான் திறந்து இருக்காங்க , அவங்க நிலைமை ரொம்ப பரிதாபம் தான் .

மொத்தத்தில் அன்பானவன் , அசராதவன் அடங்காதவன் - அன்பாக படத்திற்கு போனால் , கொஞ்சம் கூட அசராம மொக்கைய போட்டு , அடங்காத கோவத்தோட நம்மை வெளியே வரவச்ச படம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

2 comments:

  1. Shyam, outstanding review. All the very best.

    ReplyDelete
  2. அமர்க்களம். BGM, Photography, songs பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம்.(சொல்லாமல் இருப்பதே நலம் என்று முணுமுணுக்கிறிர்களா��)

    ReplyDelete

Comments