சனி, 3 ஜூன், 2017

Tubelight - டியூப்லைட்

இந்த படத்தோட ட்ரைலர் பார்த்த உடனே நடுவுல கொஞ்சம் பக்கத்த  காணோம் , விஷால் நடித்த நான் சிகப்பு மனிதன் போல வித்தியாசமான வியாதி உள்ள ஹீரோ படமா இருக்கே , அதனால அது போல கொஞ்சம் இருக்குமோ தோணுச்சி , படம் ரிலீஸ் ஆனதே தெரியாம ரிலீஸ் ஆகி இருக்கு , பாவம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிய மற்ற சின்ன படங்களுக்கு கிடைத்த காட்சிகள் , தியேட்டர்கள்  கூட இந்த படத்துக்கு கிடைக்கல .இருந்தாலும் பரவாயில்லை இந்த படத்தை போயிட்டு பார்த்துட்டு வந்தேன் .

இந்த படம் நிறைய  காமெடிகள் இருந்து மகிழ்விக்க  வேண்டிய படம் அதுக்குரிய அம்சங்கள் இருக்கற கதை , இதுல அப்படி காமெடிகள் எல்லாம் இருந்தும் சிரிக்க வைக்க தவறியது , ஒருவேளை  இதில் நடித்த நடிகர்கள் சிரிக்கவைக்க தவறிட்டாங்களா ? நடிகர்கள் என்று எல்லோரையும் சொல்லமுடியாது  , ஏன்னா படத்துல காமெடியன்னு பார்த்தா ஒரே ஒருவர் அது ஹீரோ மட்டும் தான் , இந்த்ரா இவர் தான் படத்தின் ஹீரோ, மியூசிக் டைரக்டர் , படத்தோட டைரக்டர்ன்னு மூன்று அவதாரங்கள் எடுத்து இருக்கார் .

படத்தில பல அபத்தங்கள் , ஹீரோ ஹீரோயின் meet பண்ண வேண்டும்ன்னு என்பதிற்காகவே  hospitalல் பாம் எடுக்கும் சீன்  வச்சி இருக்காங்க அது நல்லா காமெடியா வர வேண்டியது , ஆனா அது workout  ஆகல , நடிப்புல சொதப்பிச்சா ? இல்ல அந்த காட்சி எடுத்த விதத்தில சொதப்பிச்சிடுச்சா ? காமெடி timing முக்கியம் இந்த படத்தில கதையே அந்த timing ல வச்சி தான் போகுது , அதனால அது சரிப்பட்டு வரல போல ., மேலும் பாண்டியராஜனை  தவிர யாரும் பார்க்காத முகங்கள் , ஆனால் அவரோட பகுதியும் கொஞ்சம் கஷ்டப்பட்டு தான் பார்க்க வேண்டி இருந்துச்சி, அவருக்கு வரும் பிளாஷ் பேக், அவர் ஹீரோ இந்திராவை வச்சி செய்யும் treatment முடியல , அவர் treatment செய்யும் காட்சி எப்போடா முடியும்ன்னு கேட்க தோணுச்சு .
ஹீரோவும் ஹீரோயினும் பீச்ல மீட் பண்ணும் காட்சி வரை படம் ஏதோ என்னமோ போயிட்டு இருக்கு , அதுக்கு அப்புறம் ஒரு ட்விஸ்ட் ஆகி கதைக்களம் மாறி அப்பறம் கொஞ்சம் சுமாராக சென்று ஒரு மாதிரியா படத்தை முடிச்சிட்டார் டைரக்டர் .படத்தோட கிளைமாக்ஸ் காட்சி துப்பாக்கி சூடும் போட்டி போல வச்சி இருக்கார் , அதுக்கு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டிய காட்சி ஆனால் எனக்கு சிரிப்பு வரலை , ஒருவேளை  எனக்கு அந்த அளவுக்கு காமெடி sense இல்லையோ ? நீங்க வேண்டும்னா படம் பார்த்து சொல்லுங்க. ஹீரோ ஹீரோயின் சைக்கிள் போகும் போது வெள்ளந்தியா நடிச்சிகிட்டே ஒரு வசனம் சொல்லுவார் , அப்புறம் ஹீரோயின் ஏணி போட்டு மேலே ஒளிஞ்சி இருக்கும் போது, ஹீரோ நடிக்கும் காட்சி மட்டும் தான் படத்தில நான் சிரிச்ச காட்சி .

டேய் படத்துல இருக்கும்  காட்சிகள் எல்லாம் சொல்லிட்டியேன்னு படத்தோட சுவாரசியத்தை குறைச்சிட்டியேன்னு திட்டாதீங்க , ஏன்னா படத்துல இருக்கற முக்கியமான காட்சிகள் அவளோதான் மற்றவை மனசுல நிக்கலை .

படத்தில ப்ளஸ் சொல்லணும்ன்னா பாட்டுக்கு கேட்க நல்லாவே இருந்துச்சி , அதுவும் சிலோன் சிலுக்கு பாட்டு ரொம்ப நல்லா இருந்துச்சி .அதோட காட்சியமைப்பு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கும் ஆனா பரவாயில்லை கதைக்கு தேவை தான் அந்த பாடல்.

இந்த படம் பார்த்தது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம், இந்த படத்துக்கு publicity இல்லை , பல பேருக்கு இப்படி ஒரு படம் வந்து இருக்குன்னு கூட யாருக்கும் தெரியாது , அப்படி இருந்தும் காலை ஷோவுக்கு போனேன் ரொம்ப நேரம் தியேட்டர்ல என்னை  தவிர யாருமே இல்ல , அப்புறம் நாலு காதல் ஜோடிகள் , + என்னை போல ஒரு single person , அப்புறம் ஒரு பெரிய குடும்பம் பெரியவங்க சின்னவங்கன்னு மொத்தமா 10 பேரு வந்தாங்க , எனக்கு ரொம்ப ஆச்சரியம் அடடா இது போல சின்ன படங்களை ஆதரிக்க இப்படி குடும்பமாக வந்து இருக்காங்களேன்னு , படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி ஒரு 4-5 பேரு வந்தாங்க ,  தியேட்டரில் மொத்தமா 20 பேரு கூட இல்ல , அதுல ஒரு ஜோடி முதல் பாதி முடியும் முன்னே எழுந்து போயிட்டாங்க ,படம் இன்டெர்வல் வரும் போது தான் தெரியும், 4-5 பேரு லேட்டாக வந்தவங்க அந்த படத்தில வேலை செஞ்சவங்க , அது போதாதுன்னு பார்த்தா அந்த 10 பேரு வந்த பெரிய குடும்பம் வேற யாரும் இல்ல , தயாரிப்பாளர் மற்றும் அவரோட குடும்பத்தோட வந்து இருக்கார் . அப்பறம் கூட்டி கழிச்சி பார்த்தா general audience வெறும் 7 -10 பேரு கூட இல்ல .


இந்த மாதிரி சில சின்ன படங்கள் tubelight போல லேட்டாக தான் pick up ஆகும் , ஆனால் இந்த tubelight படம் அபப்டி pick up ஆவது கொஞ்சம் கஷ்டம் தான்

மொத்தத்தில் tubelight சீக்கிரம் பியூஸ் ஆகும் tubelight

இப்படிக்கு
சினி கிறுக்கன்.

1 கருத்து:

Comments