புதன், 21 ஜூன், 2017

Maragatha Nanayam - மரகத நாணயம்

தொட்டா நீ செத்த இப்படி ஒரு கவுண்டமணி வசனம் தான் எனக்கு ஞாபகம் வருது  இந்த படத்தை பார்த்த உடனே,  ஆமாங்க அந்த மரகத நாணயத்தை யார் தொட்டாலும் அவங்க காலி , படம் பார்த்து முடியும் போது எனக்கு யாமிருக்க பயமே படம் போல தான் தோணுச்சு , என்ன அதுல வீடு கை மாறும் , இதுல அந்த மரகத நாணயம் கை மாறுது அவளோதான் .

படத்தோட ஆரம்பத்திலே மரகத நாணயம்ன்னா என்ன, அந்த சொப்பணசுந்தரி கார் யார் யார் வச்சி இருந்தாங்க  என்று சொல்லுவதை போல , இப்போ அந்த மரகத நாணயம்  யார்கிட்ட இருக்கு எப்படி எடுக்கறது அதான் மீதி கதை , படத்தின் ஆரம்பத்தில் கதை எதை நோக்கி போகும் என்ற தெளிவு இருக்கு , அதே நேரத்தில் காதல் , டூயட் என்று படத்தில் சேர்க்காதது செம்ம .

ஆதி வெகுசில படங்கள் பண்ணாலும் நிச்சயமா அது வித்தியாசமான கதை , கதாபாத்திரம் உள்ள , படங்கள் தான் செய்து இருக்கார் , ஈரம் , யாகாவாராயினும் நாகாக்க , அரவான்  போன்ற வரிசையில் இதுவும் ஒன்று , படத்தின் முதலில் அப்பாவியாக கடத்தல் பண்ணும் போதும் சரி , பின்னாடி சீரியஸ் ஆகா சுத்தும் போதும் சரி , நிக்கிகல்ராணி கூட கொஞ்சமாக காதல் பண்ணும் போதும் சரி நல்லாவே பண்ணியிருக்கார் .

நம்ம முனிஷ் காந்த் ,  டேனியல் காமெடில பிண்ணிட்டாங்க , அவர் மட்டுமா அருண்ராஜ் காமராஜ் , இது போதாதுன்னு இவங்க கூட நிக்கிகல்ராணியும் சேர்ந்துக்கிட்டு பண்ணும் கலாட்டா ultimate , குறிப்பு( நிக்கியோட குரல்) அது தான் காமெடி சேர்க்குது , அது என்னன்னு சொல்லமாட்டேன் நிச்சயமா அது surprise , படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க .

இவங்க எல்லாருக்கும் மேல சீனியர் நடிகர் நம்ம ஆனந்த்ராஜ் , வில்லன் + காமெடி பட்டைய  கிளப்புறாரு , அவர் body language , mannerism  மனுஷன் செம்ம , மரணமாஸ் பண்ணிட்டாரு , அவர் mic ல எதிராளிக்கூட பேசுவது, அவர் பேசும் போது ஒரு ஒரு சிக்னல் கொடுக்கும் போதும் எல்லாம் அதுக்கு அவரோட அடி ஆளுங்க பண்ணுவது எல்லாம்  சூப்பர் , நிச்சயமா இப்படி ஒரு ஐடியா வந்து அவரோட கேரக்டர்  உருவாக்கிய டைரக்டர்க்கு ஒரு பெரிய கை தட்டு 

படத்தின் முக்கியமான பங்கு இசையமைப்பாளர் டிபு நின்னன், அவரோட bgm படத்தோட feel பக்காவா வந்து இருக்கு , எனக்கு அவர் போட்ட bgmல்  பேய் வரும் போது போட்டதை விட , ஆனந்த்ராஜ்க்கு போட்ட bgm தான் செம்ம , அவர் வரும் போதுயெல்லாம்  அந்த bgm தாறுமாறு, அதுவும் first அவருக்கு  opening bgm செம்ம மாஸ் feel,  அது தான் உசுரு எடுக்கும் பாட்டு யூடியூபில் இருக்கு ,  பாட்டே bgm ஆகா பயன்படுத்தியது அருமை  , முதல் பாட்டு  பார்க்குள்ளே நல்ல நாடு , அந்த பாட்டு கேட்டா பீசா படத்தில ராத்திரியில்ன்னு ஒரு பாட்டு வரும் அது போல இருந்துச்சி , அப்பறம் இந்த மியூசிக் டைரக்டர் பற்றி கூகுளை தேடினா  இவர் சந்தோஷ் நாராயணனுக்கு குருன்னு review பிரஷாந்த் சொல்லி இருக்கார் , இதை கேட்ட உடனே அடடே ஆச்சரிய குறி போடா வைக்குது. அதனால என்னவோ ஒரு டீ கடை வரும்  காட்சியில் மெட்ராஸ் படத்தோட பாட்டு  ஒலிக்குது போல , 

படத்தோட மைனஸ் சில இடங்களில் இருக்கு , லாஜிக் ஒரு சில இடங்களில் கேள்வி கேட்க தோணுது , அது என்னென்ன சொன்ன படத்தோட சுவாரசியம் போய்டும் , முனிஷ் காந்த் ஹேர் ஸ்டைல் ரொம்ப செயற்கையாக இருந்துச்சி , அதே போல அவரோட குரல் முதலில் என்னடா ரொம்ப வித்தியாசமா இருக்கே தோணுச்சு அப்பறம் அவரே வேற மாதிரி வரும் போது அவரோட உண்மையான குரல் வருது அதற்க்கு காரணமும் இருக்கு , அதை படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க ,  அதே போல படத்தில முதல் பாதியில் மரகத நாணயத்தை தேடி போகும் காட்சிகள் கொஞ்சம் slow ஆகா இருப்பது போல இருக்கு , மீண்டும் இரண்டாவது பாதி கொஞ்சம் நேரம் தடுமாறுவது போல இருக்கு , ஆனால் இது எல்லா மைனஸ்களையும் அந்த டாக்டரை கடத்தும்போதிலிருந்து படம் முடியும் வரை மறக்கவச்சிடுச்சி , செம்ம entertainment , அந்த torture பண்ணும் காட்சி செம்ம கலாய் , நல்லா விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்படி இருந்துச்சி . அட படம் கடைசியில் ஒரு செண்டிமெண்ட் சீன் கூட செம்ம காமெடியாக பண்ணியிருக்காங்க , அது என்னமோ தெரியல சமீபகாலமா நம்ம தமிழ் படப்பேய்கள் டிவியில் வருது , மொபைல்ல வருது , டோரா படத்தில கார்ல கூட வந்துடுச்சி , இப்போ இந்த படத்தில லாரியில வருது .

மொத்தத்தில் இந்த மரகத நாணயம் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும் நாணயமான படம் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

3 கருத்துகள்:

Comments