Sunday, 25 June 2017

Vanamagan - வனமகன்


எப்போதும் போல ஒரு காட்டுவாசி கதை , அவங்க ஏரியாவில் சாதாரண மக்கள் போயிட்டு நிலத்தை அபரிக்க முயல்வதும் , அதற்க்கு அவங்க எதிர்ப்பதும் என்ற எதிர்பார்த்த கதை தான் இந்த வனமகன் , ஆனால் அதை சொல்லியவிதமும் , சொல்ல வந்த சின்ன சின்ன விஷயங்களும் நன்றாக சொல்லிருக்கார் டைரக்டர் விஜய்.

டைரக்டர் விஜய் தன்னோட வழக்கமான பாணியிலிருந்து  தள்ளி ,மேலும் அமலாபால் , நாசர் , மியூசிக் ஜி.வி.பிரகாஷ் , என்கிற வழக்கமான கூட்டணியிலிருந்து விலகியும் ,  ஜெயம்ரவி , ஹாரிஸ் என்று ஒரு புதிய கூட்டணியாக சேர்ந்து கொடுத்து இருக்கார் இந்த வனமகனை .

ஜெயம் ரவி வசனம் குறைவாக, நடிப்பு அதிகமாக இருப்பதால் கண் அசைவிலும் , உடல் அசைவிலும் நடித்து ஸ்கோர் பண்ணிட்டார்  , சமீபகாலமாக வித்தியாசமான கதைக்களம் , கதாபாத்திரம் எடுத்து நடிக்கும் அவருக்கு இதுவும் ப்ளஸ் ஆகத்தான் அமைந்து இருக்கு .

ஹீரோயின் சாய்சேஷா , எம்மா யாரும்மா நீ ? எங்க இருந்த ? நல்லா நடிக்கிற , செம்ம டான்ஸ் அட்டகாசமா ஆடுறீங்க அதுவும் முதல் பாட்டு அடேங்கப்பா , நீ பெண் விஜய் போல வருவீங்க போல அப்படி ஒரு டான்ஸ் ,படம் full ஆகா நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர் பண்ணிருக்காங்க , முக்கியமா தமிழ் வாயசையப்பு , உச்சரிப்பது சரியாக இருக்கு , ஹன்சிகா எல்லாம் பல படங்கள் செய்தும் இப்போ தான் டப்பிங் லிப் sync வந்து இருக்கு , முதல் படத்திலே நல்லா பண்ணிருக்காங்க , அதுக்கு ஒரு பெரிய கைத்தட்டு , பாடல்கள் காட்சியில் சில இடங்களில் பூனம் பாஜ்வா போல இருக்காங்க , இது போலவே நல்ல கேரக்டர் உள்ள படங்கள் பண்ணுங்க , இந்த லூசு கேரக்டர் ரோல் எல்லாம் பண்ணி கெடுத்துகாம இருந்தா சரி .

படத்தின் வேற விஷயங்கள் சொல்லணும்ன்னா , நல்ல பாஸிட்டிவ் ஆனா பல விஷயங்கள் சொல்லி இருக்கார் ,  பணத்துக்கு முக்கியத்துவம் இல்ல என்று காட்டும் காட்சி  , இயற்க்கையைக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் , உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கணும் , இப்படி சின்ன சின்ன விஷயங்களை முதல் பாதியில் காட்சிகளாக சொல்லியவிதம் நன்று , விஜய் டிவி புகழ் vj ரம்யா கேரக்டர் சின்னது என்றாலும் அவர்களை அந்த காட்சியில் பயன்படுத்திய விதம் நன்று .அப்புறம் ஜெயம் ரவி காட்டில் குழந்தையும் , புலியையும் காப்பாற்றும் சீன நல்லா இருந்துச்சி . படத்தில் காட்டுவாசிகளை காட்டும் போது ரொம்ப lively ஆகா இருந்துச்சி செயற்கையாக , அசிங்கமா அல்லது ரொம்ப கேவலமா காட்டாமல் , இயற்கையாக காட்டி இருக்காங்க அது மிக பெரிய ப்ளஸ் அங்க எந்த மசாலாவும் சேர்க்காம இருந்தவரைக்கும் நன்றி ,அதே போல ஜெயம் ரவி சென்னை வந்து மீண்டும் காட்டுக்கு போவதற்குள் ஹீரோயின் கிட்ட பழகி தமிழ் எல்லாம் கற்றுகிட்டு பேசுவது போல எல்லாம் காட்டாமல் விட்டதற்கு பெரிய கைத்தட்டு .கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டும் , காட்டு பகுதியும் , கடல் பகுதியும் , பாடல் காட்சியும்  எடுத்த  கேமராமேன் ஒரு பெரிய ப்ளஸ் . அதே போல ஹாரிஸ் 50 கேட்டா மாதிரி பாடல்கள் இருந்தாலும் , படத்தின் bgm ஒரு  ப்ளஸ்


படத்தின் மைனஸ்ன்னு பார்த்தா இரண்டாவது பாதி திரைக்கதையும் , எதிர்பார்த்த திருப்பங்களும் கொஞ்சம் மைனஸ் தான் , , ஒரு மலை பயணம் போவது கொஞ்சம் இழுப்பதாக தெரிஞ்சது , தேவையில்லாமல் ரெண்டு  டூயட் ,அதுவும் மலையில் போகும் போது அங்க ஒரு டூயட் சுத்தமா தேவையில்லை, அது ஏதோ படத்தின் வேகத்தை சுத்தமா குறைச்சது போல இருந்துச்சி ,   சென்னையிலிருந்து அந்தமானுக்கு தனி ஹெலிகாப்டரில் போனவங்க , திரும்பி வருவதற்கு ஏர்போர்ட்ல்  டிக்கெட் கேட்பது நம்பும் படி இல்லை , அது கூட ஓகே சொல்லலாம்  ஆனால் டிக்கெட் கவுண்டர்இல் கார்டு வாங்க மாட்டாங்க காசு கொடுங்க கேட்பது நம்பும்படியாக இல்ல .அதைவிட ஒரு பெரிய மைனஸ் என்றால் , மலையில் தொங்கிகிட்டு இருக்கற ஹீரோயினை காப்பாற்றும் காட்சி தேவையில்லாமல் புகுத்தியது போல இருந்துச்சி , அவரை காப்பற்றியவிதம் ரொம்பப சினிமாத்தனமா இருந்துச்சி , அதுகூட பரவாயில்லை , அந்தளவுக்கு மலை மேல இருந்து உருண்டு புரண்டு கீழ விழுந்து உயிர் பிழைச்சி ஹீரோயின் வராங்க ஆனால் ஒரு அடி படல , அவங்க போட்ட ஜீன்ஸ் பேண்ட் கிழியல, மேக்கப் கலையவில்லை  அப்படியே பிரெஷாக இருக்காங்க , அப்பறம் ஒரு டூயட் பாடிட்டு அப்படியே மலை பயணம் தொடருக்கிறாங்க ,  டிராகன் பழம்  நம்ம ஊருல விளையுற பழம் இல்ல , அது ஏறக்குமதி பண்ணும் வெளிநாட்டு பழம் , அதுவும் நம்ம ஊரு காட்டு பகுதியில் எப்படி வரும் ? அதை போயிட்டு ஒரு பாடல் காட்சியில வச்சி இருக்கீங்க , பழம் பார்க்கா வித்தியாசம் இருந்தா எடுத்து வச்சிருவீங்களா ? ஏம்பா assistant டிரேக்டர்ஸ் இது எல்லாம் நோட் பண்ணுங்கப்பா  .

இப்படி சிலபல மைனஸ்கள் இருந்தாலும் , படத்தை எடுத்த விதம் அருமை , மேலும் படம் முடியும் போது உலகத்தில் உள்ள காட்டுவாசிகள் பற்றி தகவல்கள் போடுவது நல்லா இருக்குது , அதனால படம் டைடில் முடியும் வரை இருந்து பார்த்துட்டு வாங்க .

மொத்தத்தில் வனமகன் பார்க்கும்படியாக இருக்குமகன் .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

No comments:

Post a Comment

Comments