வெள்ளி, 30 ஜூன், 2017

Ivan Thanthiran - இவன் தந்திரன்

நம்ம தமிழ் சினிமாவுல பேய் படம் ட்ரெண்ட்க்கு அப்புறம் இந்த வருஷம் ஒரு ட்ரெண்ட் ஆரம்பிச்சிஇருக்கு  அது  எதுன்ன இந்த காலேஜ் சம்பந்தப்பட்ட ஊழல்கள் அதன் பின்னாடி இருக்கும் அரசியல் விளையாட்டுகளை நம்ம ஹீரோ கண்டுபிடிச்சி வெளியே கொண்டு வருவது தான் , அது போல இந்த வருஷம் பைரவா , எய்தவன் என்று இரண்டு படங்களை தொடர்ந்து இப்போ வந்து இருக்கும் படம் தான் இந்த இவன் தந்திரன் , என்ன ஒரு வித்தியாசம்ன்னா பைரவா , எய்தவன் படத்தில் மெடிக்கல் கால்லேஜ் பற்றியது , இது engineering காலேஜ் சம்பந்தப்பட்டது ,

மற்ற ரெண்டு படங்களில் இருந்து எந்த வகையில் மாறுபட்டதுன்னா? இந்த படம் கொஞ்சம் technical விஷயங்களாக படம் நெறைஞ்சி இருக்கு , gps ,  hidden கேமரா ,bug கேமரா  அப்படி இபப்டின்னு பல விஷயங்கள் இருக்கு , அதுக்கு காரணம் ஹீரோ ஒரு engineering காலேஜ் ட்ராப் அவுட் , ஆனா அவர் ரொம்ப புத்திசாலி அதனால பல வேலைகள் செய்கிறார் ,  மேலும் இப்போ இருக்கற கரண்ட் ட்ரெண்ட் faceபுக் , மீம்ஸ் போடுறது , இன்ஜினியரிங் காலேஜ் பசங்களில் அவலங்கள் , IT ஊழியர்களின் அவலங்கள்ன்னு முதல் பாதியில் காட்டி இருக்காங்க , முதல் பாதியில் இருந்த ஒரு விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் அது மிஸ்ஸிங் 

கௌதம் கார்த்திக் முத்துராமலிங்கம் போல ஒரு பயங்கரமான படத்திற்கு அப்புறம் , ரங்கூன் ,  இவன் தந்திரன் என்று கொஞ்சம்  ஏதோ ஒரு தந்திரம் செய்து தப்பிச்சிட்டாருன்னு சொல்லலாம் , கொஞ்சம் hifi ஆனா முகம் என்பதால் அவருக்கு அந்த brilliant கேரக்டர் செட் ஆகுது , கொஞ்சம் காதல் , காமெடி என்று செஞ்சி கரையேறிட்டார் மனுஷன் 

ஹீரோயின் ஷ்ரத்தா காலேஜ் பொண்ணு மாதிரி இல்ல , professor போல இருக்காங்க அவரோட ரூம்ல இருக்கும் friend அவருக்கு அக்கா , அம்மா மாதிரி இருக்காங்க , ஷ்ரத்தாவோட கிளாஸ்மேட் ஒரு பையன் இறந்து போயிடுவான் , அவர் தான் பார்க்க கொஞ்சம் காலேஜ் பையன் போல இருக்கான் ஆனா அவர் கூட ரயில்வே ஸ்டேஷனில் அழும் காட்சி தண்ணியே வராமல் வேறும் டப்பிங்ல் மட்டும் எமோஷன் கொடுத்து இருக்கார் 

படம் ஒருஅளவு தப்பிக்குது என்றால் அது r.j .பாலாஜி, அங்க அங்க கவுண்டர் கொடுத்து சிரிக்கவைக்கிறார் , அதுவும் அந்த engineering காலேஜ் பற்றியும் , IT employee பற்றி பேசும் வசனங்கள் கைதட்ட வைக்குது , ஆனா அது யூடியூபில் ஏற்கனவே அது வெளியிடப்பட்டதால் படத்தில் பார்க்கும் போது அது சுவாரசியமாக இல்ல , ஆனால் அந்த யூடுயூப் காட்சி தான் பலரை இந்த படத்தை பார்க்க தியேட்டர்க்கு அழைத்து சென்றது .

படத்தின் மைனஸ் என்று பார்த்தா ரொம்ப technical ஆகா காட்டுவது எல்லா வகை மக்களுக்கும் போயிட்டு சேருமா என்பது கொஞ்சம் சந்தேகம் , அதே நேரத்தில் சிட்டி மக்களுக்கு இந்த படம் பார்க்கும் போது , நிச்சயமா இது எல்லாம் அந்த இங்கிலிஷ் படம் , இந்த இங்கலீஷ்  படத்தில்  வந்தது டா என்று சொல்லவைக்கிறது , மேலும் வாவ் என்று சொல்லும் எந்த ட்விஸ்ட்களோ இல்லை காட்சிகளோ இல்லதாதல் சுவாரசியம் கொஞ்சம் குறைவாக இருக்கு , மேலும் இப்படி தான் போகும் என்று ஒரு எதிர்பார்ப்பு சுலபமாக கணித்துவிடலாம் , ஒரு கோர்ட் கமிஷன் குழு அமைச்சரை விசாரிக்கும் காட்சியில் , அந்த அமைச்சருக்கு பின்னால் கோர்ட் கூண்டு போல ஒன்னு இருக்கும் அதை சரியாய் நோட் பண்ணி பார்த்தா கட்டில் கால் கழட்டி வச்சி இருக்காங்க அடப்பாவிங்களா பட்ஜெட் படம்ன்னாலும் இப்படியா பண்ணுவீங்க? ஏம்பா ஆர்ட் டைரக்டர் , அசிஸ்டன்ட் டைரக்டர் இது எல்லாம் சொல்லமாடீங்களா ?

நல்லவேளை பாடல்கள் நிறைய வைக்கல , ஒரு opening பாட்டு , அப்பறம் ஒரு இவன் தந்திரன் தீம் பாடல் , ஒரு டூயட் தேவையில்லை தான் இருந்தாலும் ஓகே தான் , இதில் இவன் தந்திரன் தீம் பாடல் நல்லா இருந்துச்சி , அதை தவிர மற்றவை சுமார் தான் .


மொத்தத்தில் இவன் தந்திரன் மனதை மயக்கும் மந்திரன் அல்ல , ஒரு அளவுக்கு செல்லும் இயந்திரன் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 


2 கருத்துகள்:

Comments