மீண்டும் இந்த வாரம் ஒரு அருமையான படம் பார்த்த சந்தோசம் , சில பல வேலைகளால் நேற்று தான் இந்த படத்தை பார்த்து லேட்டா விமர்சனம் எழுதுறேன்,
அறம் தொடர்ந்து இந்த வாரம் தீரன்னு தமிழில் தொடர்ச்சியா நல்ல படங்கள் வருஷ கடைசியில வருது, அதுவும் சதுரங்க வேட்டை இயக்கியவரின் , இரண்டாவது பதிவு இந்த படம்
ஒரு படம் அதுவும் கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரணும் , அதுவும் உண்மை கதை எடுத்து எந்தளவுக்கு விறுவிறுப்பாக தரணுமோ அதையெல்லாம் சரியாக கொடுத்து சீட்டு நுனிக்கு வரவச்சி நம்மை பெருமூச்சு விடவைச்சுட்டார் டைரக்டர் வினோத் .
படம் என்னமோ சாதாரணமா ஒரு commercial படம் போல தான் ஆரம்பிச்சது , அட இது வழக்கமான ஒரு போலீஸ் கதை , சும்மா காதல் , ஒரு டூயட் , அப்பறம் ஹீரோயின்க்கு முக்கியத்துவம் தராத கதை போல தான் இருக்கும்ன்னு முதல் 20 நிமிஷம் தோணுச்சு , அந்த காதல் காட்சிக்கு நடு நடுவே கார்த்தி போலீஸ் training காட்டுவது எல்லாம் நல்லா இருந்தாலும், காதல் டியூஷன் எடுப்பது எல்லாம் கொஞ்சம் bore ஆகா தான் feel ஆச்சு , ஆனால் கதைக்குள்ள ஒருபடி எடுத்து வச்ச உடனே சும்மா பிச்சிகிட்டு போகுது படம் , அபப்டி ஒரு வேகம், அதுவும் அந்த வில்லன்கள் முகங்கள் தெரிஞ்சதுக்கு பிறகு அவங்க வேட்டை ஆரம்பிக்கும் போது , அடேய் யாருடா நீங்க? அந்த வில்லன்களை நாமே அடிச்சி நொறுக்கணும் என்ற ஒரு எண்ணம் நமக்கு தோன்றாமல் இருக்காது , அப்படி ஒரு கொடூரத்தை காட்டுவாங்க
ஒரு படம் பார்த்தா அதோட நாம் ஒன்றிவிடவேண்டும் , ஒரு காட்சி ஆரம்பித்து முடியும் போது ஒரு surprise இருக்கணும் , அது இந்த படத்தில இருக்கு, உதாரணத்துக்கு சில காட்சிகள் சொல்லணும்ன்னா , போலீஸ் நுழைய முடியாத கிராமத்தில் கார்த்தி போவது அங்கே நடக்கும் சண்டைகள் , ஒரு சந்தையில் ஒருவனை கைது பண்ணுவது , முக்கியமா பஸ் சண்டை நிச்சயமா அந்த பஸ்ல இருக்கிற உணர்வு உங்களுக்கு இருக்கும் , அதை விறுவிறுப்பாக படம்பிடித்த கேமராமேன் சத்யன் , ஸ்டண்ட்மென் திலிப் சுப்ராயன் , எடிட்டர் சிவன் நந்தீஸவரன் இவங்க எல்லோருக்கும் பெரிய சலுயூட்டே போடணும் , கிளைமாக்ஸ்ல் நடக்கும் இரவு சண்டை அதில் இருக்கும் brilliance காட்டி இருப்பது சூப்பர் .
படத்தோட கதையில டைரக்டர் நல்ல ஆராய்ச்சி பண்ணிதான் எழுதி முடிச்சி இருப்பர் , ஏன்னா ஒரு போலீஸ் எப்படி விசாரிப்பாங்க , எந்தளவுக்கு கஷ்டப்படுறாங்க , ஒரு கை ரேகை நிபுணர் எப்படி பார்ப்பாங்க , முக்கியமா இந்த கொள்ளை கும்பல் எப்படிபட்டவங்க , அவங்க பின்னணி என்ன , அதுவும் வரலாற்றில் குற்ற பரம்பரை பற்றி எல்லாம் எடுத்து கூறுவது நல்ல detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு காட்டுது, ஆனால் நிறைய விஷயங்கள் டக்கு டக்குன்னு கூறும் போது ஒரு சாதாரண ரசிகனுக்கு என்ன சொன்னாங்க அப்படின்னு கேட்க தோணும், ஏன்னா அந்த பரம்பரை பெயர்கள் , வில்லன்களின் பெயர்கள் , எந்த ஊருல இருந்து போறாங்க அது எல்லாம் நமக்கு மனசில் பதிய கொஞ்சம் time ஆகும் , அதனால் அந்த விஷயங்கள் எல்லாம் சொல்லும் போது நாம் உற்று கவனிக்கணும் .detail ஆகா work பண்ணியிருக்காங்கன்னு சொல்லியத்துக்கு உதாரணம் படத்தின் கதை 90களில் இருந்து 2000 வரை நடப்பதால் , அந்த மொபைல் எல்லாம் அந்த periodல் வந்த நோக்கியா basic phone காட்டுறாங்க , அது காட்டுவது பெரிய விஷயம் இல்ல , ஆனால் ஒரு காட்சியில் ஒருவர் அதை கழுத்தில் தொங்கவிட்டு இருப்பர் , அது போல தான் வயதில் பெரியவங்க அந்த மொபைல் அந்த periodல் யூஸ் பண்ணியிருப்பாங்க .
டைரக்டர் வினோத் படத்தின் கதையை layer layer ஆகா பிரிச்சி ,ஒரு ஒரு காட்சியின் முடிவிலும் கதையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டு போவது தான் ப்ளஸ் , இதே தான் அவர் சதுரங்க வேட்டையிலும்,இதிலும் செய்து இருக்கிறார், ஹீரோ கார்த்தி நிச்சயமாக இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக்கிங் பாயிண்ட் படம் தான் இது , அவரை கார்த்தியாக பார்க்க முடியவில்லை , அந்த தீரனாக தான் தெரிகிறார் , ராஜஸ்தானில் நடக்கும் சம்பவம் எல்லாம் அவர் வாழ்ந்தாகவே தெரிகிறது , போஸ் வெங்கட் நல்ல supporting கேரக்டர் நல்லா செய்து இருக்கிறார் , படத்தின் இன்னொரு மிக பெரிய ப்ளஸ் ஜிப்ரான் இசை , மனுஷன் பிச்சி உதறிட்டார் , இந்த வருஷ கடைசியில் அவருக்கு தொடர்ந்து வெற்றியாக வரும் போல , போனவாரம் அறம் , இந்த வாரம் தீரன் , அடுத்த வாரம் சென்னை டு சிங்கப்பூர் (எப்படி இருக்குன்னு பார்ப்போம்).
படம் முடியும் போது அந்த case உண்மை நிலவரம் என்ன? அதில் வேலை பார்த்தவங்க நிலைமை என்ன என்று எல்லாம் சொல்லி முடிக்கும் போது , அட பாவம்யா அந்த போலீஸ்காரங்க , எல்லா போலீஸ்காரர்களை தப்பு சொல்ல கூடாது என்று தோன்றாமல் வெளியே வர முடியாது .
மொத்தத்தில் தீரன் ரொம்ப தீர்க்கமானவன் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இது என்னோட 150வது விமர்சனம் , ஒரு அருமையான படத்தை 150வது விமர்சனமாக எழுவதில் எனக்கு ரொம்ப சந்தோசம் . மேலும் என்னை ஆதரிக்கும் அணைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் .
முதல் வரியிலே நான் இந்த படத்தை பற்றி சொல்லிடுறேன் , நானே இந்த படம் ஒரு நாள் தள்ளி பார்த்து விமர்சனம் போடுறேனே ஒரு வருத்தம் , எத்தனையோ மொக்கை படத்தை முதல் நாள் பார்த்து இருக்கேன் , இந்த படத்தை முதல் நாள் பார்க்க முடியல , அதனால சொல்லுறேன் நீங்க இந்த படத்தை நிச்சயமா மிஸ் பண்ணாம பாருங்க , ஒரு நெத்தி அடி படம் , எந்த ஒரு சினிமாத்தனம் இல்லாம , மனதார உருகி பாராட்டப்படவேண்டிய படம் ,இந்த வருஷத்தில் வந்த அருமையான படங்கள் வரிசையில் இந்த படம் ஒரு முக்கியமான படம் , எனக்கு இந்த வருஷம் வந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்களில் குரங்கு பொம்மை , ஒரு கிடாயின் கருணை மனு , லென்ஸ் , மாநகரம் இந்த வரிசையில் இதுவும் ஒன்று ஆனால் மற்ற படங்கள் எல்லாம் பெரிய நட்சித்திரம் இல்லாத படம் , ஆனால் இது நயந்தாரா என்ற ஒரு பெரிய ஹீரோ வச்சி எடுத்துஇருக்காங்க , இந்த வருஷம் வந்த பெரிய ஹீரோ படங்களில் இது தான் பெஸ்ட் , என்னடா நயன்தாராவை ஹீரோன்னு சொல்லுறிய பார்க்கறீங்களா ? ஆமாங்க நிச்சயமா அவங்களை ஹீரோ என்று சொல்லலாம் .
நம்ம மனசில் இருப்பதை கிழி கிழி கிழிச்சிருக்காங்க , படத்தின் கதை நடக்கும் இடமே அருமையான தேர்வு , ஒரு பக்கம் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இடம் , அதன் அருகே குடிக்க தண்ணீர் கூட இல்லாத ஒரு இடத்தில் இந்த கதை நடக்குது, நிறைய சின்ன சின்ன விஷயங்கள் படத்தில சொல்லி இருக்காங்க , விளம்பரத்துக்காக போட்டோ எடுத்து போடப்படும் போலியோ சொட்டு மருந்து, தங்கள் வாழ்க்கை தரம் உயராத மக்கள், நம் நாடு ராக்கெட் விட்டா நமக்கு பெருமைன்னு அது நல்லா நடக்கணும் சாமிகிட்ட வேண்டுவது , எது எதுக்கோ 1000 கோடி செலவு பண்ணாலும், குழில வீழ்ந்த குழந்தையை காப்பாற்ற வெறும் கயிறு தான் நமக்கு மிச்சம் என்ற நிலைமை காட்டுவது , ஆரஅமர விபத்து நடந்த இடத்துக்கு செல்லும் அதிகாரிகள் , ரிப்பேர் ஆகும் தீயணைப்பு வாகனம் இப்படி சின்ன சின்ன விஷயங்கள் காட்டி இருக்காங்க.
படத்தின் மிக பெரிய ப்ளஸ் நாமே அந்த இடத்தில இருப்பது போல ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நம் பிள்ளையே அதில் மாட்டிகொள்ளுவது போல ஒரு உணர்வு இருக்கு , அந்த உணர்வு நமக்கு ஜிப்ரான் bgmல் நமக்குள்ள இறக்கிட்டார். தோரணம் ஆயிரம் பாடல் விஜயலக்ஷ்மி குரலில் ultimate ஆகா இருக்கு ,இன்னும் இந்த படத்தை பற்றி சொல்லலாம் ஆனால் அதை எல்லாம் போயிட்டு படத்தை பார்த்து தெரிஞ்சிகோங்க .
அந்த குழந்தையின் அம்மா அப்பாவாக நடிச்சவங்களுக்கு ஒரு பெரிய கைத்தட்டு , அப்புறம் நயன்தாரா அருமையாக நடிச்சி இருக்காங்க , அந்த கடைசி சில உணர்வுபூர்வமான காட்சிகளில் சூப்பர், நயன்தாரா கேரக்டர் வடிவமைச்ச டைரக்டர் கோபி நயினார் பாராட்டி ஆகணும் , ஏன்னா நயன்தாரா என்பதால் மாஸ் காட்டுவது , build up பண்ணுவது எதுவும் இல்லாமல் , கதைக்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்து இருக்காங்க .
இந்த படத்தில மைனஸ்ன்னு எனக்கு சொல்ல தோன்றவில்லை , நடுவுல நடுவுல வரும் அந்த டிவி விவாத மேடை ஷோ கொஞ்சம் வந்து இருந்த நல்லா இருந்து இருக்கும் , ஆனால் அடிக்கடி வருவது கொஞ்சம் bore அடிச்சது போல தோணுச்சு .
ஒரு படம் பார்த்தா அதன் பாதிப்பு படம் பார்த்து வெளியே வந்து ரொம்ப நேரம் இருக்கும் , அப்படி ஒரு பாதிப்பு இந்த படம் நிச்சயம் நமக்கு ஏற்படுத்தும் , ஆளும்கட்சி , எதிர்க்கட்சி , மத்திய கட்சிகள் , மாநில கட்சிகள், ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பவர்கள் , கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்துட்டு கண்ணாடி முன்னாடி நின்று நீங்களே காரித்துப்பிக்கோங்க , மசாலா கலந்து கொஞ்சம் கருத்து கொடுத்த மெர்சல் படத்துக்கு இந்திய அளவில் நியூஸ் சேனல் எல்லாம் ட்ரெண்ட் பண்ணிவிட்டாங்க , ஆனால் இந்த படத்தை நிச்சயமா அபப்டி ட்ரெண்ட் பண்ணிவிடனும் .
இந்த படம் இந்தியா முழுவதும் திரையிடப்பட வேண்டும் , எந்த மொழியிலும் டப்பிங் செய்து வெளியிட்டால் செம்ம ஹிட் அடிக்கும் , நிச்சயமா இந்த படத்திற்கு விருதுகள் குவிய வேண்டும் , நிச்சயமா இந்த வருஷம் தேசிய விருது ஹிந்தி ல வந்த toilet படத்துக்கு கொடுப்பாங்க , அதே போல இந்த படத்துக்கும் விருது தந்தே ஆகவேண்டும் , அப்படி எந்த ஒரு விருதும் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமாக அது ஒரு சதியாக தான் இருக்க வேண்டும் .
குறிப்பு : கத்தி படத்தின் கதை என்னுடையது என்று கூறியவர் தான் இந்த படத்தின் டைரக்டர் கோபி நயினார். கத்தி வந்துவிட்டதால் அதை மாற்றி அமைத்து வந்தது தான் இந்த அறம் .
மொத்தத்தில் அறம் ஒரு தரமான படம்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா இந்த படம் ட்ரைலர் போலவே சொல்லணும்
சுசீந்திரன் படம்ன்னா நிச்சயமா இம்மான் இசை இருக்கும், அப்புறம்? சூரி இருப்பார், அப்புறம்? அம்மாவாக துளசி இருப்பாங்க, இவர் சின்ன ஹரி போல ஏன்னா படத்தில ஸ்கெட்ச் போடுவாங்க , அப்புறம் ? குடும்ப செண்டிமெண்ட் இருக்கும் , அப்புறம்? நட்புக்கு மரியாதை இருக்கும் ,அப்புறம்? நைட் சேசிங் இருக்கும் , கொஞ்சம் காதல் இருக்கும் , கொஞ்சம் மசாலா தூவி சமாளிச்சி இறக்கிவச்சிடுவார்
படம் ஆரம்பிச்சி இன்டெர்வல் வரைக்கும் கொஞ்சம் கூட திரைக்கதை கதைக்குள்ள போகல , ஆனால் கதைக்கு தேவையானதை படத்துக்குள்ள கொண்டுவருவதற்கு ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டு , முதல் பாதி எப்படியோ போகுது , வில்லனோட முதல் காட்சி அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டுவது நல்லா இருந்துச்சி , பிறகு ஹீரோ சந்தீப் , விக்ராந்த் பற்றி , சந்தீப் தங்கச்சி மற்றும் விக்ராந்த் காதல் , அவங்க அம்மா, முக்கியமான வில்லன் மட்டும் இல்லாமல் , சின்ன சின்ன வில்லன்கள் பற்றி இப்படி ஒரு ஒருத்தர் பற்றி சொல்லி சொல்லி படம் இன்டெர்வல் வந்துடுச்சி , அட இதுக்கு நடுவுல ஹீரோயின் வேற ,
அப்படி , இப்படின்னு எப்படியோ முதல் பாதி போனாலும், ரெண்டாவது பாதி ஒரு வேகம் கொடுத்து படத்தை கரை சேர்த்துட்டார் டைரக்டர் சுசீந்திரன் ,சில இடங்கள் ஒரு சாதாரண ரசிகன் கூட கணிக்கும் அளவுக்கு திரைக்கதை இருக்கு , ஆனாலும் இது எல்லாம் எதுக்காக நடக்குது என்பதை நமக்கு தெரிஞ்சிக்க விடாமல் , நம்மை கடைசி வரைக்கும் யோசிக்கவச்சியிருக்கார் , இப்போ இருக்கிற சூழ்நிலைக்கு ஏற்றார் போல கந்துவட்டி , ரியல் எஸ்டேட் பிரச்சனை, இப்படி சில விஷயங்கள் அப்படியே நூல் இழையாய் ஓட வச்சி ,கொஞ்சம் கடைசியாய் கதையின் கருவை உடைத்து ,விறுவிறுப்பாய் முடிச்சிட்டார் .ஆனால் படம் பார்க்கும் போது கொஞ்சம் பாண்டியநாடு , பாயும் புலி பார்த்தது போல இருந்துச்சி
படத்தின் ப்ளஸ் வில்லன் ஹரிஷ் உத்தமன் தான் ரொம்ப நல்லா பண்ணிருக்கார் ,அதுக்கு சரியாய் bgm மியூசிக் அவருக்கு இம்மான் பக்காவாக கொடுத்துட்டார் , ஆனால் அந்த இசை கொஞ்சம் முன்னாடி ஏதோ இம்மான் படத்தில பயன்படுத்தியது போலவே தான் இருந்துச்சி .
படத்தின் மைனஸ் ஏற்கனவே சொன்னது போல அழுத்தம் இல்லாத முதல் பாதி , மொக்க சூரி காமெடி ,ஹீரோயின் எதுக்காக அவங்களை படத்தில் போட்டாங்க என்று தெரியவில்லை கொஞ்சம் அழகாக இருக்காங்க ஆனால் சுத்தமா பேசவே தெரியல டப்பிங் ரொம்ப கேவலமா இருந்திச்சி, சும்மா கெஸ்ட் ரோல் அவளோதான் , அவங்க ஹீரோ சந்தீப் கூட வரும் காட்சிகள் கூட ரொம்ப கம்மி தான் .
என்னடா படத்தை பற்றி ரொம்ப கம்மியா சொல்லி இருக்கன்னு கேட்பீங்க நினைக்கிறன் , இந்த படத்துக்கு இந்த அளவுக்கு தான் எனக்கு எழுத தோணுச்சு, ரொம்ப ஓஹோன்னு புகழுவதற்கும் , இல்ல ஓஹோன்னு கலாய்ப்பதற்கும் இல்ல .
மொத்தத்தில் நெஞ்சில் துணிவிருந்தால் இன்னும் கொஞ்சம் துணிவிருந்துயிருந்தால் மக்கள் நெஞ்சில் விருந்துபடைதிருக்கும்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இந்த படத்தை பற்றி டக்கு டக்கு டக்குன்னு சொல்லிடனும் நினைக்கிறேன் , ஏன்னா படம் அப்படி தான் டக்கு டக்குன்னு போகுது
படத்தின் கதை என்ன சொல்லணும் ?
நம்ம எப்பொழுதும் எதிர்பாக்கிற ஒரு பேய் கதை தான் , ஒரு பேய் இருக்கும் , அது வந்ததுக்கு ஒரு காரணம் இருக்கும் , ஒரு பிளாஷ் பேக் இருக்கும் , பிறகு அது பழிவாங்கும் , இல்லாட்டி ஒரு நல்ல பேய் , கெட்ட பேய் இருக்கும், இந்த படத்தில கதை ஒரு வழக்கமான ஒரு formulaவில் தான் இருக்கு, ஆனால் அதை கொடுத்த விதம் ரொம்ப அருமையா இருக்கு .
கொஞ்சநாளாக பேய் படத்தில் வரும் லூசு தனமான ஹீரோயின் , ஒரு மொக்க பாட்டு , மொக்க காமெடி , எலுமிச்சை பழம் வச்சி வரும் ஒரு சாமியார் , சுடுகாடு அது இதுன்னு , லொட்டு லொசுக்குன்னு வரும் பேய் படம் போல இல்லமால் , படத்தின் கதையில் இருந்து கொஞ்சம் கூட விலகி போகாமல் , பேய் படம்ன்னா பேய் பேய் படம் போல, பார்க்கிற நம்மை அந்த உணர்வு தந்து இருக்காங்க , ரொம்ப நாள் கழிச்சி ஒரு அருமையான , உண்மையான பேய் படம் தமிழில் வந்து இருக்கு,
படத்தின் ப்ளஸ் நடிகர்கள் சித்தார்த் , ஆண்ட்ரியா , ஜெனியாக நடிக்கும் அனிஷா , அந்த குட்டி பொண்ணு , அதுல்குல்கர்னி , பாதிரியார் , இப்படி எல்லோரும் சரியாக அளவாக நடிச்சி இருக்காங்க , எந்த ஒரு கதாபாத்திரத்தையும் அதிகமாகவோ , குறைத்தோ தராமல் , எல்லோருக்கும் சமமாக கொடுத்து இருக்காங்க , அதை அவர்களும் சரியாக நடிச்சிருக்காங்க . அதே போல படம் நடக்கும் களம் நல்ல வித்தியாசமான இடம் கொடுத்து இருக்காங்க , இமயமலை ஒட்டி நடக்கும் இடம் , அதை பனிமலை பின்னணியில் நல்லா கொடுத்து இருக்காங்க
படத்தை மனசில் நிறுத்திவைத்தது கேமரா , சவுண்ட் தான் , பேய் படத்துக்கு தேவையான அனைத்தயையும், பக்காவாக இவங்க ரெண்டு பேரும் பண்ணி இருக்காங்க . அந்த வீடு அருமையாக இருக்கு , நல்லா செட் பண்ணிருக்காங்க , அந்த லொகேஷன் , வீடு , அளவாக பேசும் நடிகர்கள் பார்க்கும் போது , அட நம்ம ஆளுங்க கொஞ்சம் இங்கிலிஷ் படம் சாயலில் ஒரு பேய் படம் எடுத்து இருக்காங்கன்னு நல்லாவே சொல்லலாம் , அதுக்கு இவங்களுக்கு ஒரு சபாஷ் போடலாம் .
படத்தில இன்டெர்வல் சீன சூப்பர் , படத்தின் கிளைமாக்ஸ் வந்தது போல ஒரு feel இண்டெர்வெளில் கொடுத்து இருக்காங்க , படத்தின் கடைசியில் ஒரு நல்ல ட்விஸ்ட் வரும் அது தான் செம்ம , நல்ல யோசிச்சி , யாருக்கும் சந்தேகம் வராத மாதிரியே screenplay அமைச்சதுக்கு ஒரு நல்ல கைத்தட்டு . படத்தில எனக்கு பிடிச்ச காட்சின்னா , ஒரு இடத்தில கேமரா கதவு லாக்க்குள்ள எல்லாம் ட்ராவல் பண்ணிட்டு போகும் , அப்படியே தலைகீழாக வரும் காட்சிகள் , அதை தொடர்ந்து வரும் காட்சிகள் சூப்பர்.
நீங்க உண்மையாக நல்ல பேய் படம் பார்க்கணுமான்ன நிச்சயமா தியேட்டர்ல போயிட்டு நல்ல சவுண்ட் effect உள்ள தியேட்டர்ல போயிட்டு பாருங்க . அது நிச்சயமா ஏமாற்றம் தராது . இங்கிலிஷ் பேய் படம் பார்த்த ஒரு உணர்வு கொடுத்து இருக்காங்க , நிச்சயமா மற்ற மொழிகளும் இந்த படம் போகும் .
மொத்தத்தில் அவள் பார்ப்பவர்களை நல்ல மிரட்டுபவள் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
மெர்சல்ன்னு பெயர் வைச்சாலும் வைச்சாங்க, படம் ரிலீஸ் ஆவதில் ரொம்ப மெர்சல் பண்ணிட்டாங்கபா , டிக்கெட் ரேட் பிரச்சன்னை , சென்சார் certificate பிரச்சன்னை , ஒரு வழியா டிக்கெட் கிடைச்சி கூட்ட நெரிசலில் மெர்சல் போயிட்டு பார்த்தாச்சி .
வழக்கம் போல நான் ஒன்னு சொல்லிடுறேன் , நான் தல ரசிகனோ , தளபதி ரசிகனோ இல்ல, நான் ஒரு சினிமா ரசிகன்.அப்போ தான் யார் கிட்டேயும் அடிவாங்காம இருக்கலாம் .
சரி இந்த படத்தை பற்றி சொல்லணும்ன்னா , ஒரு கமெர்சியல் படத்துக்கு என்னவெல்லாம் இருக்கணுமோ, அது எல்லாம் சரியா இருக்கு இந்த படத்தில , அதுவும் அட்லீக்கு அது சரியான அளவாக கலந்து கொடுப்பதில் கைவந்த கலை .அதை இதில் கொடுத்து இருக்கிறார் .வழக்கமான அப்பா , ரெண்டு பையன் கதை தான், இருந்தாலும், அதை ரசிக்கும்படி கொடுத்து இருக்கிறார் , அவர் கிட்ட ஒரு ப்ளஸ் பாயிண்ட், தமிழ் சினிமாவில அரைச்ச மாவையே அரைத்தாலும் , அதை புளிக்காத மாதிரி கொடுப்பது தான் அவரின் மகிமை . அதே போல தளபதியை சரியாக கை ஆளுவதில் சரியான ஆளு அட்லீ தான் .
தளபதி பற்றி என்ன சொல்லுவது , மனுஷனுக்கு வயசு ஏறுதா இல்ல குறையுதா ? செம்ம மாஸ் , செம்ம அழகா இருக்கிறார் , பயங்கர fit ஆக இருக்கிறார் , screen presence சூப்பர் , துப்பாக்கி , கத்தி , தெறி இப்போ இதில் நான் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் , அந்தளவுக்கு சூப்பராக இருக்கிறார் , அவரை அப்படி காட்டிய கேமராமேன் , டைரக்டர் எல்லோருக்கும் ஒரு கைத்தட்டு , மூன்று கேரக்டர்களும் பக்கா மாஸ் ,அதுவும் முதலில் பாரிஸ்ல் டாக்டர் தளபதிகிட்ட டீல் பேசும் போது , அதுக்கு தளபதி பதில் தரும் காட்சி சும்மா வச்சி செஞ்சியிருக்கிறார் , தியேட்டர்ல கைத்தட்டு அள்ளுது .இது போல நக்கல் மற்றும் மாஸ் காட்சிகள் ரசிகர்கள் ரசிக்கும்படி வச்சி கைத்தட்டு அள்ளுது , எனக்கு பிடிச்ச விஷயம்ன்னா விஜய் இந்த படத்தில் தேவை இல்லாம பஞ்ச் வசனம் பேசாம , அவரோட முந்தைய படங்களில் காமெடி பேருல பண்ணும் ஓவர் ஆக்ட்டிங் எல்லாம் பண்ணாம , டைரக்டர் சொன்னதை செஞ்சி இருக்கிறார் , டைரக்டர் அவரை சரியா பயன்படுத்தினா நிச்சயமா அவர் படம் நல்லா போகும் , அதை அட்லீ இதுலயும் பண்ணி இருக்கிறார் .கதைக்கு ஏற்ற சரியான மாஸ் , அளவுக்கு அதிகமா build up தராமல் தந்து இருப்பது ஒரு பெரிய சபாஷ் .மேலும் இப்போ இருக்கும் சமுதாய பிரச்சன்னைகளை எல்லாம் கலாய்ப்பது சூப்பர் .
எஸ்.ஜே. சூர்யா வளரும் வில்லனாக வருகிறார், வில்லனுக்குரிய பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கு, அதே நேரத்தில் அவர் தான் முக்கியமான கேரக்டர் என்றாலும் , ஆனால் இந்த படத்தில் அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருக்கலாமோ தோணுச்சு , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் கம்மியாக இருந்துச்சி ,
மீண்டும் வடிவேலு வந்து ஒரு அளவுக்கு மக்களை திருப்திபடுத்தி இருக்கிறார்
படத்தில் மூன்று ஹீரோயின்கள் அல்ல , ஒரே ஒரு ஹீரோயின் தான் அது நித்யாமேனன் மட்டும் தான் சொல்லணும், அவங்க தான் படத்தின் கதைக்கு நல்ல அடித்தளம், மேலும் நல்லா நடிச்சி இருக்காங்க , மற்ற இருவரும் சும்மா வந்து ஆளுக்கு ஒரு பாட்டு பாடிட்டு போய்ட்டாங்க , சமந்தா வரும் காட்சிகள் கூட ரசிக்கும்படி இருக்கு அந்த ரோஸ்மில்க் காட்சிகள் எல்லாம் , ஆனால் காஜல் நடிக்கிறது ரொம்ப செயற்கையாக இருக்கு , அவங்க கேரக்டர் படத்திற்கு ஒட்டவே இல்லை , அவங்க விவேகம் படத்திலும் சரி இந்த படத்திலும் சரி அபப்டி தான் செய்யறாங்க.
இசைபுயல் பாட்டை பற்றி நான் சொல்லனும்னா? , ஏற்கனவே ஹிட் , சும்மா எறக்கி விட்டுஇருக்கிறார் , பாட்டின் காட்சியமைப்பும் அருமை, பாடல் காட்சியில் அவரோட குரு ஷங்கர் ஞாகபம் படுத்துகிறார், பாடல் மனசில் பதிஞ்ச அளவுக்கு bgm வாவ் சொல்ல வைக்கல , ஒரு சில இடங்களை தவிர, ஒருவேளை பாட்டு மட்டும் போட்டு கொடுத்துட்டு, bgm அவரோட assistant கிட்ட கொடுத்து போடச்சொல்லிட்டாரோ ? ஷங்கருக்கு தான் முழுசா போடுவேன் , அவரோட அசிஸ்டன்ட் தானே என்று தோணுச்சோ ? ஏன்னா அவரோட படத்தில ரொம்ப தனிச்சியாக இருக்கும், ஆனால் சில இடங்கள் எல்லாம் கேட்டா, இப்போ நிறைய பேரு வந்து இருக்காங்க அவர்களில் யாரோ போட்டா மாதிரி ஒரு உணர்வு எனக்கு வந்துச்சி .
படத்தில சில பல மைனஸ்கள் இருக்கு , படத்தில முதல் பாதி ஒரு வேகம் விறுவிறுப்பு , இரண்டாவது பாதியில் இல்ல , அப்பா விஜய்க்கு மாஸ் இருந்தாலும் அந்த பிளாஷ் பேக் ரொம்ப நேரம் இழுப்பது போல இருந்துச்சி , விஜயும் , சூர்யாவும் மோதும் காட்சிகள் பிளாஷ் பேக்கிலும் சரி , பிளாஷ் பேக் முடிஞ்ச அப்புறம் பசங்க எஸ்.ஜே சூர்யாகூட மோதும் காட்சிகளும் சரி , ரொம்ப கம்மியா இருக்கு , நிச்சயமா எல்லோரும் சொல்லுவது போல எனக்கும் இந்த படம் ரமணா படத்தில் இருந்து ஒரு பகுதியை கதையை எடுத்து பண்ணிஇருப்பார் போல , சமந்தா கேரக்டர் கஜினி அஸினை ஞாபகம் படுத்தியது, டீஸர் பார்க்கும் போதே நிச்சயமா கோவை சரளா விஜய்க்கு அம்மாவாக இருக்க மாட்டாங்கன்னு தெரியும், அதுபோலவே படத்திலும் இருக்கு , கோவை சரளாவுக்கு விஜய் எப்படி கிடைச்சார்ன்னு தெரியல, தளபதியை டீவில பார்த்த எஸ்.ஜே. சூர்யாவால் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியுது, ஆனால் அவர் கூடவே இருக்கிற டாக்டர் அர்ஜுன் ஏன் பாரீஸ்ல விஜயை பார்த்து கண்டுபிடிக்க முடியல ? பொதுவா commercial படத்தில லாஜிக் கேட்க கூடாது , ஆனால் அப்பட்டமாக லாஜிக் மிஸ்ஸிங் படத்தில இருப்பது எனக்கு கொஞ்சம் நெருடலாக தான் இருந்துச்சி .சத்யராஜ் , சத்ரியன் , காஜல் , சமந்தா வந்துட்டு அபப்டியே காணாம போய்ட்டாங்க .எதிர்பார்த்த கதையமைப்பு , இறுதியில் வரும் எதிர்பார்த்த ட்விஸ்ட்கள் எல்லாம் வழக்கம் போல தான் .hospitalன்னு துரைப்பாக்கம் chennai one building காமிச்சிட்டாங்க .
ஆனால் ஒன்னு சொல்லியே ஆகணும் , இந்த விஜய் எதிர்ப்பாளர்கள் சொல்லுவது போல படம் ஒன்னும் அந்தளவுக்கு மொக்கை இல்ல , அதே நேரத்தில விஜய் ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு சூப்பர் டூப்பரும் இல்ல , ஒரு சாதாரண ரசிகனுக்கு இந்த படம் bore அடிக்காம போகும் . என்னை பொறுத்தவரை இது பைரவா விட above average படம் .
என்ன ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்த ஒரு படத்துக்கு ஒரு குரூப் hard work டா , ஹாலிவுட் டா, ஹிட் டான்னு, 100 கோடி collection டான்னு சொல்லி மார்தட்டிக்கிட்டாக, இப்போ ஒரு குரூப் message டா , மாஸ் டா , 100 கோடி collection டான்னு சொல்லிப்பாக அவளோதான் .
மொத்தத்தில் மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் நல்ல பார்சல் , கதை அனைவருக்கும் தெரிஞ்ச கரிசல், திரைக்கதையில் இருக்கு விரிசல் .டிக்கெட் விலையால் எனக்கு கொஞ்சம் நெரிசல்
இப்படிக்கு
சினி கிறுக்கன் .
கருப்பன் இந்த படம் போஸ்டர் எல்லாம் பார்த்துட்டு பொங்கல் அப்போ ரிலீஸ் ஆகி இருக்கலாமேன்னு தோணுச்சு , ஆனால் இந்த படம் அந்த போஸ்டர்க்கும் கதைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல , அதே நேரத்தில அட ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை வந்து இருக்கே , நல்ல குடும்பத்தோட பார்க்கலாமே சொல்லணும் தோணுச்சு அப்படியும் இந்த படம் இல்ல , படம் ஒரு சாதாரண பழிவாங்கும் கதை , அதை அழுத்தமாகவும் சொல்லவில்லை , புதுசாக திரைக்கதையும் அமையவில்லை , காதல் , பாசம்ன்னு நல்லா இருக்கும்னு பார்த்தா , ஒரு அளவுக்கு மேல அந்த காதல் பாசம் பார்க்க முடியவில்லை , ரொம்ப திகட்ட திகட்ட கொடுத்து இருக்காங்க .படம் சீரியல் பார்ப்பது போல இருக்கு .
படம் பார்க்கும் போது , கொஞ்சம் தர்மதுரை , கொம்பன் , மருது , பருத்திவீரன் இந்த படங்கள் எல்லாம் ஞாபத்துக்கு வருது , படம் ஆரம்பிச்ச சில நிமிடங்களில் , இந்த கதை இப்படி தான் போகும்ன்னு தெரிஞ்சிடுச்சி , ஆனால் அதை சுவாரஸ்சியமா கொடுத்து இருப்பாங்கன்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சி , அது போக போக அட போங்கபா , இப்படியே படம் எவ்வளவு நேரம் போகும்ன்னு கேட்க தோணுது,
இந்த அளவுக்கு படம் கொஞ்சம் bore ஆகா போனாலும் சரி , படம் காட்சிக்கு காட்சிக்கு கொஞ்சம் மனசை தெம்பு ஏற்றுவது , நம்ம விஜய் சேதுபதி தாங்க , அசால்ட்டாக மனுஷன் நடிச்சி தள்ளிட்டு போய்கிட்டே இருக்கார் , கதை நல்லா இருக்கோ இல்லையோ , படம் மக்களுக்கு பிடிக்குமோ இல்லையோ , அதை பற்றி எல்லாம் கவலைப்படமா , அவர் அவரோட வேலையை சரியாய் செஞ்சிட்டு போகிறார், ஒரு விஷயம் சொல்லணும்ன்னா அவர் இது போலவே பல படங்களில் நடித்தாலும் , என்னயா ஒரே மாதிரி நடிக்கிறார்ன்னு சொல்ல தோணல , ஏதோ ஒரு மந்திரம் போட்டு ரசிகர்களை கட்டி போட்டுவிடுகிறார், ஏன்னா இந்த படத்தில குடிச்சிட்டு நல்லா அட்டகாசம் பண்ணும் போது எல்லாம் தர்மதுரை ஞாபகம்படுத்துகிறது , எனக்கு பிடிச்ச காட்சின்னா கல்யாணம் முடிச்ச பிறகு , முதல் நாள் வேலைக்கு போனபிறகு எல்லோரும் சேதுபதி பற்றி தப்பா சொல்லுவாங்க , அன்று இரவு அவர் மீண்டும் வீட்டுக்கு வந்தபிறகு ஹீரோயின் தன்யாவுக்கு அவருக்கும் ஒரு பேச்சு நடக்கும் அது ரொம்ப நல்லா இருந்துச்சி , ஆனால் போக போக அது போல பல காட்சிகள் வருது , அது கொஞ்சம் ஏன்டான்னு கேட்க தோணுச்சி .
பாபி சிம்ஹா டைரக்டர் நல்லா பில்டப் கொடுத்து இருக்கார் , ஆனால் கேரக்டர் ரொம்ப ஸ்ட்ராங்கா இல்லை , building strong ஆனால் basement weakன்னு சொல்லுறா மாதிரி இருக்கு , இவர் போதாதுன்னு இன்னொரு வில்லன் சரத் , ரொம்ப வழக்கமான சாதாரணமான போகுது ,
இசை இமான் அவர் ஒரு படம் ரொம்ப நல்லா பண்ணா அடுத்து சில படங்கள் சுமாரா போடுவார் , அது போல இதுவும் சுமார் ரகம் , சில படங்கள் அவரோட படங்களை ஏற்கனவே கேட்டது போல பாடல்கள் இருந்துச்சி .
எனக்கு ஒரே ஒரு வருத்தம் , ஏன் அப்போ அப்போ விஜய்சேதுபதி நடுவுல நடுவுல இப்படி ஒரு படம் தருகிறார்ன்னு தெரியல , போன வருஷம் ரெக்கை , இந்த வருஷம் கருப்பன்
மொத்தத்தில் கருப்பன் கொஞ்சம் கருத்துவிட்டான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
என்னோட சினி கிறுக்கன் பக்தாளுக்கு எல்லாம் ஒரு சின்ன வேண்டுகோள் ,ஹர ஹர மஹாதேவகி இந்த படம் எப்படி இருக்கும் ? , முதலில் நீங்க அந்த ஹர ஹர மஹாதேவகி ஆடியோ கேட்டு இருந்தா நிச்சயமா இந்த படம் எப்படிபட்ட படம்ன்னு உங்களுக்கு தெரியும் , கேட்காதவங்க உடனே கூகிள் பண்ண போய்டுவீங்களே. டேய் இது எல்லாம் எவனாவது கேட்க்காம இருப்பானா அப்படின்னு கேட்கிற பக்தாளோட மைண்ட் வாய்ஸ் கேட்குது , அப்படியும் சிலர் இந்த உலகத்துல இருக்காங்க, அவங்களுக்கு தான் அந்த disclaimer
முதல் முதலா என்னோட reviewக்கு நானே A certificate கொடுத்துக்கிறேன் , ஏன்னா படிச்சிட்டு என்ன திட்டாதீங்க , இந்த படம் only for adults சொல்லியே தான் ட்ரைலர் போட்டாங்க , படமும் அதுக்கு எந்த விதத்திலும் கொஞ்சம் கூட குறையில்லாம audienceயை திருப்திபடுத்திருக்கு, அதாவது அப்போ படத்தில கில்மா காட்சி நிறைய இருக்கானு பக்தாள் ஜொள்ளு விடுவது தெரியுது , அப்படிப்பட்ட காட்சி எல்லாம் படத்தில இல்ல, வெறும் காமெடி மட்டும் தான், நம்ம சினிமாவுல black காமெடி படம்ன்னு சில படங்களை சொல்லுவாங்க , ஆனா இந்த படம் open காமெடி படம் அவளோதான் சொல்லுவேன் , அதனால வீட்டுல இருக்கவங்களோட படத்துக்கு போயிட்டு கீழே காசு போட்டு சமாளிக்கலாம் நினைக்காதீங்க , ஏன்னா இந்த படத்தில நீங்க காது தான் மூடனும் , அபப்டி இருக்கும் வசனங்கள் .
படத்தில் கதை என்னன்னு கேட்காதீங்க , லாஜிக் எங்கன்னு கேட்காதீங்க அபப்டின்னு அவங்களே disclaimer போட்டுட்டாங்க , அப்பறம் என்ன ______ க்கு டா review பண்ண போறேன்னு கேட்ப்பீங்கன்னு தெரியுது , யூடியூபில review பண்ணறவங்களையும் படத்தோட டீம் ரொம்ப கேவலமா பச்சையா ஒரு வீடியோ போட்டு மரணபங்கம் பண்ணிட்டாங்க , அதனால அதை பற்றி ஒன்னும் சொல்ல முடியாது .
படத்தில சின்ன கதை என்னனா ஒரே மாதிரி பை , ஒரு பையில bomb இருக்கு , ஒரு பையில கள்ளநோட் இருக்கு , இன்னொரு பையில காதல் break up அதனால , காதலி கொடுத்த gifts வச்ச பை (குறிப்பு : அதுல angry birds போட்ட ஜட்டி ) ஆள் மாறாட்டம் போல பை மாறாட்டம் நடக்குது , அதனால வரும் குழப்பங்கள் அவளோதான் இந்த படத்தோட கதை , இதையும் அவங்களே யூடியூபில் promotion போட்டுட்டாங்க .
படத்தின் மைனஸ் முதல் 30-40 நிமிடங்கள் , ஒரு ஒரு கேரக்டர் காட்டி , அவங்க படத்தில் செட்டில் ஆக்குவதற்கு டைம் எடுக்குது , வழக்கம் போல கொஞ்சம் சம்மந்தம் இல்லாமல் வரும் பாடல்கள் படத்தின் இன்னொரு மைனஸ் , முதல் பாதியில் கொஞ்சம் கொஞ்சம் காமெடி அங்க அங்க வச்சி ஏதோ கொஞ்சம் சமாளிச்சு இன்டெர்வலலில் கொண்டு வந்து சேர்த்துட்டாங்க ,
அப்பறம் இரெண்டாவது பாதியில் முதல் சில நிமிடங்கள் தட்டு தடுமாறி ஆரம்பிச்சி , அப்படியே ஒரு ஸ்பீட் எடுத்து காமெடியின் உச்சத்துக்கு போயிட்டு சந்தோஷமா படத்தை முடிக்கிறாங்க , நிச்சயமா படத்தின் கடைசி 30-40 நிமிடங்கள் அடங்காம சிரிப்பீங்க
ஹீரோ கௌதம் கார்த்திக் , ஹீரோயின் நிக்கிகல்ராணிக்கு ஸ்கோப் கம்மி தான் , படத்தின் ஹீரோன்னு பார்த்தா , சதிஷ் , மொட்டை ராஜேந்திரன் , கருணாகரன், ரவிமரியா , படத்தை தூக்கி நிறுத்துவது இவங்க நாலுபேரும் தான்(படம் பார்த்தா புரியம்) , நடுவுல பாலசரவணனும் இருக்கார் , கதையின் குழப்பத்துக்கு அவரும் ஒரு காரணம் இருந்தாலும் , சிரிப்பு வரவைப்பது அந்த நாலு பேரும் தான் .படத்தில நிறைய highlight சீன்ஸ் இருக்கு ஆனா அது எதுவும் இங்க எழுத முடியாது , படம் பார்த்து சிரிச்சிகோங்க
படத்தின் பெரிய ப்ளஸ் இந்த படம் A certificate தான் இருந்தாலும் பெண்களை எங்கேயும் கேவலமாகவோ , மட்டமான பெட் ரூம் சீன்களோ , ஹீரோயின் க்ளாமராகவோ , மட்டமான ஐட்டம் பாட்டு வச்சி அறை குறையா ஆட்டமோ இல்லை , படத்தில் இருப்பது வசனங்கள் மட்டும் தான் , double meaning , triple meaning வசனங்கள் எல்லாம் இல்ல , straight forward வசனங்கள் தான் , பச்சை பச்சையா இருக்கும் , இப்போ புரியுதா நான் ஏன் review full பச்சையா எழுதியிருக்கேன்ன்னு
இசை பாலமுரளி பாலு ஹர ஹர மஹாதேவகி பாடல் தவிர மற்ற பாடல்கள் & , bgm சுமார் தான்
நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ஒரு தைரியம் வேண்டும் , இதை கதையாய் எழுதி , ஒரு producer பிடிச்சி அவரை convince பண்ணி , சென்சார் வாங்கி , யூடியூபில் ப்ரோமோஷன் பண்ணி கொண்டுவந்ததுக்கு டைரக்டர்க்கு ஒரு பெரிய தைரியம் தான் .
நிச்சயமா இந்த படத்துக்கு இந்த இங்கிலிஷ் websites , நியூஸ் papers பலர் ஒரு ஸ்டார் , ரெண்டு ஸ்டார் தான் reviewல் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன் , ஆனால் நீங்க ஒரு 2 மணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்துட்டு நல்லா சிரிச்சிட்டு வர வேண்டும்ன்னா இந்த படத்தை பாருங்க, உங்களை திருப்திப்படுத்தும் .எனக்கு 90களில் வந்த சுந்தர்.சி படம் பார்த்த உணர்வு
உங்களுக்கு இந்த படம் பிடிக்கலைன்னா நிச்சயமா மனதளவில் நீங்க வயசு ஆயிடுச்சின்னு சொல்லணும் , இல்லனா, நீங்க current ட்ரென்ட்க்கு இல்லன்னு அர்த்தம் .
இந்த படம் just for laughs, கலாச்சார சீரழிவுன்னு யாரும் கொடி தூக்காதீங்க .
டைரக்டர் : சந்தோஷ் பி ஜெயக்குமார்
இசை : பாலமுரளி பாலு
தயாரிப்பாளர் : தங்கராஜ்
கேமராமேன் : செல்வகுமார்
என்னடா புதுசா கேமராமேன் , producer பேரு எல்லாம் போடுறானே தோணுதா , ஆமாங்க இப்படி ஒரு படத்தை யார் எடுத்தாங்கன்னு பின்னாடி வரும் சந்ததையர்கள் தெரிஞ்சக்க வேண்டாமா அதான் .
மொத்தத்தில் ஹர ஹர மஹாதேவகி பஜனை நல்லாவே பண்ணி இருக்காங்க .
இப்படிக்கு
சினி கிறுக்கன் .
ஸ்பைடர் இது வழக்கமான முருகதாஸ் படம் இல்ல , ஆனால் வழக்கமாக வரும் மற்ற தமிழ் படம் போலவும் இல்ல, கொஞ்சம் வித்தியாசனமான கதை , கதாபாத்திரம் எடுத்து ரெண்டு மணி நேரம் bore அடிக்காமல் கொடுத்து இருக்கும் படம் ஸ்பைடர். துப்பாக்கி , கத்தி போல எதிர்பார்த்து போகாதீங்க ,
படத்தை பார்க்கும் முன் ஒரு rule என்னனா நிச்சயமா நீங்க லாஜிக் கேட்காதீங்க , ஏன்னா டெக்னாலஜி phone call ரெகார்ட் பண்ணுவது , ஒருதரை ட்ராக் பண்ணுவது , அது இதுன்னு கொஞ்சம் நம்பும்படி இல்லாத காட்சிகள் இருக்கு , இருந்தாலும் முருகதாஸோட brilliant screenplay இந்த துப்பாக்கியில் 12 பேரு சேர்ந்து பிளான் பண்ணுவாங்க அது போல intelligent காட்சிகள் இருக்கு , அதாவது பரத் தேடி கண்டுபிடிப்பது , மகேஷ்பாபுவின் அம்மா , தம்பியை காப்பாற்றும் காட்சிகள் , எஸ்.ஜே.சூர்யாவை வீட்டுக்குள்ளே பெண்களை வைத்து சுற்றிவளைப்பது என்று நல்லா யோசிச்சி காட்சிகள் வச்சி இருக்கார் , அந்த பெண்களை வைத்து பிடிக்கும் காட்சில விஜய் டிவி எல்லாம் யூஸ் பண்ணுவது ட்ராக் பண்ணுவது என்னடா இது லாஜிக் ன்னு எல்லாம் கேட்காதீங்க
படத்தின் முதல் பாதி இங்க அங்கன்னு கொஞ்சம் கூட நம்மை திசை திருப்பாம, ஒரே வேகத்தில் இண்டெர்வெல் கொண்டுவந்து விடுது , அதுவும் அந்த பிளாஷ் பேக் சூப்பர் , குறிப்பாக அந்த சின்னப்பையனாக வருபவன் நல்லா நடிச்சி இருக்கான், அவன் சிரிச்சிகிட்டே முகத்தை மாற்றுவது தாறுமாறு , அந்த பகுதியில் வரும் ஹாரிஸ் ஜெயராஜ் bgm மற்றும் அந்த பையனோட நடிப்பு அந்த ஒரு திரில்லர் , சைக்கோ feel நமக்கு வர வச்சி இருக்காங்க .
படத்தில ஹீரோ மகேஷ் பாபு தான் என்றாலும் , எஸ்.ஜே.சூர்யா தான் ஹீரோ போல படத்தை தூக்கி நிறுத்துகிறார் , மகேஷ் பாபுவுக்கு டைரக்டர் கொடுத்து இருக்கும் மாஸ் சீன்ஸ் நிச்சயமா தெலுங்கு மக்கள் நல்ல வரவேற்பு ,தருவாங்க ஆனால் தமிழ் ஆடியன்ஸ் மகேஷ் பாபுவின் opening சீன் , படத்தில் ஆங்காங்கே வரும் மாஸ் சீன்ஸ் நம்ம மக்கள் ரொம்ப சாதாரணமா பார்க்கிறாங்க , ஒரு கை தட்டு கூட இல்லை .ஆனால் அவரை பாராட்ட வேண்டிய விஷயம்ன்னா , அது அவரே டப்பிங் பேசி இருக்கார், எங்கேயும் உதட்டு அசைப்பு தப்பாக இல்ல , ஆனால் அங்க அங்க லைட்டாக தெலுங்கு வாசம் வருது .
படத்தின் பெரிய ப்ளஸ் எஸ்.ஜே.சூர்யா தான் , மனுஷன் மிரட்டி இருக்கார் ,அந்த இன்டெர்வல் காட்சியில் அழுதுகிட்டே கண்ணீரை ஊதி விடுவது செம்ம நச் , நிச்சயமா அது டைரக்டர் ஐடியாவாக இருந்தாலும் , அதை அற்புதமாக நம்மகிட்ட சேர்த்து இருப்பது எஸ்.ஜே.சூர்யா தான், அதே போல மகேஷ்பாபு அவரை விசாரிக்கும் போது அந்த காட்சி முடியும் போது கடிகாரம் பார்த்து ஒரு ஏளனமா சிரிச்சிகிட்டே டைம் சொல்லும் போது மாஸ் பண்ணி கைத்தட்டு அள்ளுகிறார் மனுஷன் . பொதுவா சினிமா ஜாம்பவான்கள் என்ன சொல்லுவாங்கன்னா ஹீரோ கேரக்டர் எந்த அளவுக்கு strong ஆகா இருக்கோ அதே அளவுக்கு வில்லனுக்கும் இருக்கணும், அப்போ தான் படம் நல்லா இருக்கும் , அது முருகதாஸ் தன்னோட எல்ல படத்தில் அப்படி தான் வச்சி இருப்பர் , ஆனால் இந்த படத்தில் வில்லன் மாஸ் ஆகா இருக்கான் , ஹீரோ கொஞ்சம் டம்மியாக இருப்பது போல ஓரு உணர்வு எனக்கு .அந்தளவுக்கு எஸ்.ஜே.சூர்யா தூக்கி சாப்பிட்டார் , ஒருவேளை இந்த படத்தை தமிழில் விக்ரம் , சூர்யா , விஜய்சேதுபதி நடிச்சிருந்தால் , படம் சூப்பர் டூப்பர்ன்னு சொல்லிருப்பாங்க போல .
பரத் படத்தில் முக்கியமான characterல் வரார் , நல்லா பண்ணி இருக்கார் , அவரோட sequence நல்லா இருக்கு , ஆர்.ஜே . பாலாஜி மற்றும் ஹீரோயின் ரகுல் ப்ரீத்தி சிங் அளவா வந்து போறாங்க, ஹீரோயின் பார்ப்பதற்கு புதிய கீதை படத்தில் வரும் அமீஷா படேல் போல இருக்காங்க , லாங் ஷாட் சைடு face பார்த்தா லைட்டாக இளைச்சி போன நிக்கிகல்ராணி போல இருக்காங்க , அவங்க படத்தில் இருப்பதும் இல்லாததும் ஒன்னு தான் , அவங்க இல்லாட்டியும் படத்தில பெருசா ஒரு impact இருக்க போவது இல்ல , அப்படியே தான் இருக்கும் , அதே போல தான் பாட்டும் , அது இருந்தாலும் இல்லாட்டியும் ஒன்னு தான் ,முதல் பாட்டை தவிர மற்ற பாடல்கள் கேட்க்கும் படியாகவும் இல்ல , தேவைபடுவதாவாகும் இல்ல , படத்தில மொச்சை கொட்டை கண்ணுன்னு ஒரு பாட்டு வரும் அது அப்படியே அந்நியன் படத்தில் வரும் ரெண்டக்க பாட்டு போல இருக்கு , Bgm கூட சில எங்கேயோ கேட்ட ஞாபகம் வருது . தன்னோட பாட்டையே மீண்டும் கொஞ்சம் ஆல்டர் பண்ணி போட்டு இருக்கார் ஹாரிஸ் ஜெயராஜ் .
படத்தின் மைனஸ்ன்னு சொல்லணும்ன்னா நிச்சயமா கதை அதாவது அந்த வில்லன் கேரக்டர் ஏன் அப்படி இருக்கான் என்பது சொல்லுவதை கொஞ்சம் ஏற்றுக்கொள்ள முடியல ,மேலும் இரண்டாவது பாதியில் வரும் நீளமான சண்டை காட்சிகள் , கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மைனஸாக இருக்கு , அந்த பாறை உருண்டு வரும் காட்சி நிச்சயமாக ஏழாம் அறிவு படத்தை ஞாபகம்படுத்தியது
சிலர் சொல்லுவது போல படம் ரொம்ப மொக்கை எல்லாம் இல்ல , ஒருதடவை தாராளமாக பார்க்கலாம் .
மொத்தத்தில் ஸ்பைடர் வழக்கமான முருகதாஸின் ஸ்பீடாராக இல்லை என்பதே ஒரு குறை
இப்படிக்கு
சினி கிறுக்கன்
குற்றம் கடிதல் படத்திற்காக தேசிய விருது வாங்கிய பிரம்மா இயக்கிய படம் தான் இந்த மகளிர் மட்டும் , முதலிலே சொல்லணும்னா எனக்கு இந்த படத்தில் பிடித்தவை விட பிடிக்காதது நிறைய இருக்கு , அதனால என்ன திட்டாதீங்க , திட்டினாலும் பரவாயில்லை அதுக்கு எல்லாம் கவலைப்பட போவதில்லை , ஏன்னா இந்த படம் பலருக்கு பிடிச்சிருக்கு , சில காரணங்களால் எனக்கு பிடிக்கல அவ்ளோதான் .
படத்தின் கதை என்னன்னு பார்த்தா , ஒரு நடுத்தர வர்க்கத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கை , அதில் படும் அவதிகளையும் , திருமணம் ஆகிய பெண்களுக்கு நட்பு வட்டம் என்பது சுருங்கிவிடும் , அவர்களின் பழய நட்பு உடைந்துவிடும் , அந்த நட்பை புதுப்பிப்பதும் , நடுத்தர பெண்களின் மனசில் இருக்கும் சின்ன சின்ன ஆசைகளும் , அதை நிறைவேற்றி சந்தோசம் படுவதை தான் சொல்லி இருக்கார் இயக்குனர் .
சரி எனக்கு ஏன் இந்த படம் பிடிக்கலைன்னா ? படம் முழுவதும் ரொம்ப செயற்கை தனமாக இருந்துச்சி , நல்ல நடிக்கும் நடிகைகள் பானுப்ரியா , சரண்யா , ஊர்வசி இருந்தாலும் , எல்லோருமே ஏதோ ரொம்ப அதிகமா நடிச்சி செயற்கையாக இருக்கு , அவங்க உணவர்வுகள் படம் பார்க்கும் மனசில் பதியவில்லை ரொம்ப நாடகத்தனமாக இருக்கு , எனக்கு படத்தோட கொஞ்சம் கூட ஒன்ற முடியவில்லை .
படத்தில் வரும் பிளாஷ் பேக் , பள்ளி பருவங்கள் , எல்லாமே கொஞ்சம் கூட இயற்கையாக இல்ல , ரொம்ப சினிமாத்தனமா இருந்துச்சி , கொடுத்த காசுக்கு மேல நடிச்சா மாதிரி ஒரு எண்ணம் , படம் பல இடங்களில் ரொம்ப டாக்குமெண்ட்ரி தனமாக இருக்கு , பல டாக்குமென்டரி படங்கள் பார்த்தாலும் அது மனசில் பாதிக்கும் அளவுக்கு இருக்கும், ஆனால் இது கொஞ்சம் கூட எனக்கு அந்த மாதிரி எண்ணம் தோன்றவில்லை . ஒரு ஒருத்தரும் அவங்க அவங்க காதல் கதை ஒரு பாட்டில் சொல்லி இருப்பாங்க , அது ரொம்ப ரொம்ப செயற்கையாக தோணுச்சு ஏன் இபப்டி வச்சாங்கன்னு டைரக்டர் பார்த்து கேட்க்கும் போல இருந்துச்சி.
படம் full ஆகா ஜோதிகா வந்தாலும் , படத்தில் scope கம்மியா இருப்பது போல தான் எனக்கு ஒரு உணர்வு , ஊர்வசி , சரண்யா , பானுப்ரியாவுக்கு இருக்கும் அழுத்தம் கூட ஜோதிகாவுக்கு இல்ல , அவங்க ஸ்டேஜ் ஷோவில் MC போல படத்தை நடத்தி செல்கிறாங்க தவிர படத்தில் ரொம்ப முக்கியத்துவமா எனக்கு தோன்றவில்லை . ஆனால் அவங்க கண்ணாடி போட்டுக்கிட்டு bullet , கார் ஓட்டுவது பார்க்கும் போது ரொம்ப அழகாக இருக்காங்க.
பெண்களை பற்றிய படம் என்றால் நிச்சயமாக ஆண்களுக்கு இடமில்லை , இருக்கும் ஆண்கள் நெகடிவ் ஆகா இருப்பாங்க , அது போல இங்க , லிவிங்ஸ்டன் , நாசர் வராங்க , இவங்க ரெண்டுபேருல நாசர் கேரக்டர் தான் பார்க்கும் போது கொஞ்சம் கோவம் வாரா மாதிரி நடிச்சி இருக்கார் .
எனக்கு படத்தில் பிடிச்ச விஷயங்கள் பார்த்தா , பானுப்ரியா மகன் மனசு மாறும் காட்சிகள் , அப்புறம் அந்த முவரும் ஒரு ராத்திரி அவங்க அவங்க மனசில் இருப்பத்தை ஒரு மூட்டையில் அடிப்பாங்க , அது நம் அனைத்து பெண்கள் மனசில் இருக்கும் குமாறல்களாக தெரிஞ்சது
என்னை பொறுத்தவரை இன்னும் அழுத்தமாக , இன்னும் இயற்கையாக இந்த படத்தை எடுத்து இருந்தா மகளிர்க்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமான படமாக அமைந்து இருக்கும் .
மொத்தத்தில் மகளிர் மட்டும் ரொம்ப நாடகமாக மட்டும்.
இப்படிக்கு
சினி கிறுக்கன்
மிஷ்கின் படம் என்னங்க சொல்லறது? அவர் படம்னா வித்தியாசமான ஹீரோ கேரக்டர் , அவங்க வித்தியாசமா body language இருக்கும் , கொஞ்சம் இருட்டா இருக்கும் , நிச்சயமா கேமரா ஷாட் low angle நிறைய இருக்கும் , ஒரு subway காட்சி இருக்கும் ,இப்படி தான் எதிர்பார்த்து போனேன் , ஆனால் இந்த படத்தில் low angle ஷாட் ரொம்ப கம்மி , இருட்டும் கொஞ்சம் கம்மியா தான் இருக்கு , அதனால படம் நல்லா இல்லையா கேட்காதீங்க , படம் அருமையா இருக்கு . அந்த subway காட்சிகள் எல்லாம் இந்த படத்திலும் இருக்கு .
நீங்க ரொம்ப fast , மசாலா , படம் பார்பவர்களா ? அப்போ இந்த படம் பொருந்தாது ஒரு நல்ல crime கதை உள்ள படம் பார்க்கணுமா ? அப்போ இந்த படம் நிச்சயம் உங்களுக்கு தான் . படம் கடைசி வரை என்ன என்னன்னு நமக்கு கேட்டுகிட்டே இருக்கவைக்குது .
ஒரு சாதாரணமான கதையை , அசாதாரணமான திரைக்கதையால் ,வித்தியாசமான கேரக்டர்களால் படத்தை தலை நிமிர்த்தி , நம்மை சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஆற்றல் மிஷ்கின்னுக்கு இருக்கு , அதை இந்த படத்திலும் சரியாக பண்ணியிருக்கிறார் , ஒரு ஒரு காட்சியும் நம்மை அட போடவைக்கும்
ஒரு சின்ன பையனுக்காக வெறும் 800ரூபாய்க்கு , அதுவும் ஒரு நாய்க்காக துப்பறிய போகிறார் விஷால் , அதன் பின்னாடி என்ன நடந்து இருக்கு , எப்படி போகுது , யார் யார் எல்லாம் இருக்காங்கன்னு ரெண்டு மணி நேரம் நம்மை கட்டி போட்டு வச்சி இருக்கார் மிஷ்கின் .
எனக்கு படத்தில பிடிச்ச காட்சிகள் நிறைய , சின்ன பையன் விஷாலோட பேசும் காட்சி சூப்பர் ,தலைவாசல் விஜய் பேசுவதை வச்சி விஷால் கண்டுபிடிப்பது , அதுல விஷாலோட ரோல் என்னவென்று காட்டுவது , பால்கனி எங்க இருக்குன்னு கேட்டு ஹீரோயினோட மாமாவை தூக்கி போடுவது , ஒரு ஒரு தடவையும் வினய் காபி கேட்பதும் , அதுக்கு பின்னாடி நடக்கும் காட்சிகள் நல்லா இருக்கு , ஒரு பைக் சேசிங் சீன் விறுவிறுப்பாக இருந்துச்சி ஆனால் அது எனக்கு ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் வரும் ஒரு பைக் சேசிங் சீன்னை ஞாபகம் படுத்துச்சி , இப்படி ஒரு ஒரு clue கண்டுபிடிச்சி கதையை ஒரு ஒரு கட்டத்துக்கு நகர்வது போல திரைக்கதை வச்சிஇருப்பது மிக பெரிய ப்ளஸ் .
படத்தின் மிக பெரிய ப்ளஸ் கேரக்டர்ஸ் , அதுக்கு நடிகர்கள் தேர்ந்து எடுத்தது , விஷால் , பிரசன்னா , பாக்கியராஜ் , வினய் , ஆண்ட்ரியா , அப்பறம் ஒரு மொட்டை அடிச்ச அடியாள் , ஆமாங்க ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில ஒருத்தன் பைக்கில் போய்ட்டு கத்தி குத்து வாங்கி சாவனே அவரே தான் இந்த படத்திலும் வாரார் .பாக்கியராஜ் முதலில் பார்க்கும் போது அடையாளமே தெரியல , வினய் பார்க்கும் போது அட இவர்க்கு இப்படி ஒரு கேரக்டர் aaha ? கேட்க தோணுது , நிச்சயமா அடுத்த சில படங்களுக்கு இது போல பல ரோல் வரும் .
விஷால் பற்றி சொல்லியே ஆகணும் , எல்லா reviewல் சொல்லுவது தான் , அவர் நடிச்சதிலே நல்ல படம் இது தான் , அதுவும் கத்தி கத்தி பன்ச் வசனம் எல்லாம் பேசாமல் , மொக்க பழி வாங்கும் கதை எல்லாம் இல்லமால் படம் நல்லா இருக்கு , நல்ல பேசப்படும் படம் அவருக்கு மிஷ்கின் கொடுத்து இருக்கார் .படத்தின் இறுதி காட்சி எல்லாம் உண்மையாக ரொம்ப உழைத்து இருக்கிறார் .
படத்தின் முக்கிய பங்கு , படத்தின் உயிர் நாடி மியூசிக் அரோல் , பக்கா bgm சின்ன சின்ன காட்சிகள் பிரம்மாண்டமா மனசுல பதியவைப்பது அவரோட இசை தான் , படத்தில் இன்னொரு ப்ளஸ் சண்டை காட்சிகள் , ஒரு சைனீஸ் ஹோட்டலில் ஒரு சண்டை வரும் அது நல்லா இருந்துச்சி , அந்த காட்சியில் bgm செம்ம
படத்தின் மைனஸ் பார்த்தா , முதல் பாதியில் சில இடங்கள் கொஞ்சம் slow பண்ணி ஸ்பீட் எடுக்க போகும் போது , ஏதோ கொஞ்சம் மிஸிங் போல ஒரு உணர்வு , படத்தில் காதல் அளவாக சொன்னாலும் , ஒரு காட்சியில் ஹீரோயின் அனு துடைப்பக்கட்டையை வாங்கி கீழே விழும் காட்சிகள் கொஞ்சம் சினிமாத்தனம் , நல்லவேளை அவங்க விழும் போது ஒரு கனவு டூயட் வைக்கல , ஒரு சேசிங் சீனில் ஆண்ட்ரியா தப்பிப்பது கொஞ்சம் நம்பும் படியாக இல்லை , எனக்கு முக்கியமான மைனஸ் தோணுச்சுனா அது , படத்தில suspense reveal ஆகும் , அப்போ ஒரு கேரக்டர் அதை பற்றி சொல்லும் போது , அவர் விக்கி விக்கி சொல்லுவதாலும் , அங்கே கொஞ்சம் bgm வருவதாலும் , அந்த இடத்தில என்ன சொன்னாருன்னு புரியல , அதனால அவங்க யார் என்ன லிங்க் என்ன என்பதை புரிஞ்சிக்க முடியல . அதனால அந்த இடத்தில கொஞ்சம் உற்று கவனிக்கணும் ,
படத்தில பிச்சாவரத்தில் நடக்கும் சண்டை காட்சிகள் அருமை , கடைசியாக விஷால் , பிரசன்ன நடுவே இருக்கும் ஒரு புரிதல் செம்ம செம்ம (அடிக்கடி நான் செம்ம யூஸ் பண்ணறேன் ஒருத்தர் சொன்னாரு அதனால கொஞ்சம் குறைக்க ட்ரை பண்ணுறேன் )
பிசாசு படம் ரெண்டாவது தடவை பார்க்கும் போது ஒரு ஒரு காட்சியில் வரும் சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படி கதையோட எப்படி ஒன்றி இருக்குன்னு தெரிஞ்சது , அதுபோல இரண்டாவது தடவை பார்த்தா என்னவெல்லாம் கிடைக்குமோ ?
மிஷ்கின் இதுவரை காணாத யாரும் கோணத்தில் விஷால் , ஆண்ட்ரியா , வினய் , பாக்யராஜ் இவர்களை நல்ல துப்பறிந்து தமிழ் சினிமாவுக்கு துப்பறிவாளன் மூலம் கொடுத்து இருக்கிறார்
மிஷ்கின் mysteryல் மேஸ்திரி அதை மீண்டும் நிரூபிச்சிவிட்டார்
மொத்தத்தில் துப்பறிவாளன் மிஷ்கினின் அறிவில் உதித்த அருமையான அறிவாளன் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்
இந்த படம் ஒரு வரி கதைன்னு பார்த்தா , ஒரு குரங்கு பொம்மை போட்ட பை ஒருத்தருக்கு ஒருத்தர் கை மாறுது அவ்ளோதான் இதன் கதை , ஆனால் அந்த கதையை சொன்னவிதமும் , படத்தில் வரும் கதாபாத்திரங்களும் படத்தின் பெரிய ப்ளஸ் .
ஒரு ஒரு கேரக்டரும் மனசில் பதியுது , அந்த அளவுக்கு unique characters ஆகா யோசிச்சி டைரக்டர் நித்திலன் வடிவமைச்சிருக்கார் ,அதே போல அந்த நடிகர்களும் நம் மனசில் பதிவுது போல நடிச்சிருக்காங்க ,
ஹீரோ விதார்த் , ஹீரோயின் டெலனா டேவிஸ் , பாரதிராஜா , ஏகாம்பரமாக வரும் தேனப்பன் , சேகராக வரும் குமரவேல் , அவருக்கு மனைவியாக வருபவர் , பையுடன் சுத்தும் கிருஷ்ணமூர்த்தி , குறிப்பாக படத்தில சிந்தனை ன்னு பேருல வரும் ஒரு திருடன் ultimate , அட ஒரு சீன் தான் இருந்தாலும் ஒரு சீனில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் , அந்த ஸ்டேஷனில் வரும் ஒரு குட்டி பூனை , fan switch off செய் என்று சொல்லும் ஒரு சின்ன கேரக்டர் , அப்புறம் திண்ணிபண்டாரமாக வரும் ஒரு கேரக்டர் , இப்படி சின்ன சின்ன கேரக்டர்கள் வித்தியாசமாக வச்சி நம் மனசில் பதிய வசிட்டர் டைரக்டர்.
ஏகாம்பரமாக வரும் தேனப்பன் நல்லா நடிச்சிருக்கார் , அவருடய body language சூப்பர் , குறிப்பாக குமரவேல் கூட பேசும் சீன் செம்ம .பாரதிராஜா ஒரு அப்பாவி அப்பாவாக , விசுவாச நண்பனாக பக்காவா பொருந்தி இருக்கார் .
படத்தில் எனக்கு பிடிச்சதுன்னா, கதை சொன்னவிதம் , படம் ரொம்ப practical ஆகா இருக்கு , வீடு ஸ்டேஷன் ,ஒரு பஸ் ஸ்டாப் . background ,ஒரு areaவின் கலாச்சாரம் , காட்சிகள் முன்பு பின்புமாக சென்று வருவது சூப்பர் , எனக்கு பிடிச்சா காட்சிகள்ன்னா , விதார்த் பொண்ணு பார்க்கும் காட்சி , அங்க ஹீரோ , ஹீரோயின் உண்மை பேசுவது , இன்னொரு இடத்தில் அவங்க குடும்பத்தார் பேசுவது அருமை , விதார்த் வீட்டில் பாரதிராஜா , அவங்க அம்மா பேசும் காட்சிகள் ரொம்ப சாதாரணமா practical ஆகா இருந்துச்சி , படத்தில் டைட்டில் பாட்டில் வரும் காட்சிகள் செம்ம , அந்த திருடன் பண்ணும் சேட்டைகள் பக்கா .அந்த ஸ்டேஷன் சீன் எப்படி யோசிச்சார்ன்னு தெரியல , அந்த காட்சி ஆரம்பிப்பதும் , அது முடிவதும் செம்ம , கடைசியா ஒருத்தன் தீப்பட்டி இருக்கான்னு கேட்பது செம்ம , ஏன் அபப்டி சொல்லுறேன்னா படம் பாருங்க புரியும் அந்த காட்சி, எந்த situationல அவன் அபப்டி கேட்பான்னு
இன்டெர்வல் பகுதியில் வரும் bgm செம்ம , அந்த இடத்தில் குமரவேல் பண்ணும் உண்மையான முகம் , அந்த பையை பற்றி காட்டும் போது ஒரு செகண்ட் மனசு பாரமாக ஆகுது ,குமரவேல் & ஏகாம்பரம் மோதும் காட்சியில் இருந்து முடியும் வரை , படத்தின் கடைசி 15-20 நிமிடங்கள் நாம் ஒன்னு நினைக்க வேற ஒன்னு மாறி மாறி போயிட்டு முடியுது , இறுதி காட்சி கூட நான் ஒன்னு நினைச்சேன் , ஆனால் வேற மாதிரி முடிச்சி இருப்பது ultimate .
நிறைய இருக்குங்க படத்தை பற்றி சொல்ல , ஆனால் எல்லாம் சொல்லிட்டா படம் பார்க்கும் இன்ட்ரெஸ்ட் போய்டும் , சில இடங்கள் கொஞ்சம் தோய்வது போல இருந்துச்சி , நிச்சயமாக காதல் காட்சிகள் கொஞ்சம் குறைத்து இருக்கலாமோ தோணுச்சு .
மியூசிக் அஜனீஷ் , பாட்டுகள் மனசில் நிக்கல , ஆனால் படத்தோட உணர்வை bgm ல் கொண்டுவந்துவிட்டார் .
மொத்தத்தில் குரங்கு பொம்மை குறைவில்லா பொம்மை
இப்படிக்கு
சினி கிறுக்கன்
விஜய்சேதுபதி : வழக்கம் போல + + + , அதுவும் துணி கடை காட்சியில் நடிப்பு ++
காயத்ரி : ரொம்ப rare ஆகா படத்தில் வந்தாலும் இந்த படத்தில் ++
த்ரில்லிங் சீன் : +, ஆனால் சில இடங்களில் வழக்கமான தமிழ் சினிமா காட்சியமைப்பு அதனால சில இடங்களுக்கு - -
கதை : ++ புதிர்
திரைக்கதை : + + சுவாரசியமான காட்சிகளுக்கு , - - அதிகமான காதல் காட்சிகளுக்கு , கதைக்குள் சீக்கிரமாக போகாமல் முதலில் வரும் 30 நிமிடங்கள் - -
கேமரா : தினேஷ் +, பிளாட் காட்சிகள்
இசை : சாம் - முதல் பாடல் + , Bgm + , இரண்டாவது பாதியில் காதல் பாடல் படத்தில் வேகத்தடை -
முதல் பாதி : முதல் 30 நிமிடங்கள் - -
இரண்டாவது பாதி : பிளாஷ் பேக் + ,
Twist : இது எல்லாம் செய்வது இவங்களா இருக்குமோ என்று முதல் பாதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நான் கண்டுபிடிச்சேன் , but மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல அதனால + & - .
டைரக்டர் ரஞ்சித் : புது முயற்சி என்று முன்று வருஷத்துக்கு முன்னாடி வந்து இருந்தால் சொல்லிருக்கலாம், ஏன் என்றால் படத்தில் சொல்லவந்த கருத்து அப்படி .
மொத்தத்தில் : புரியாத புதிர் அனைவருக்கும் புதிர் புரிஞ்சி பிடிக்குமா ? என்பது கொஞ்சம் சந்தேகம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
வணக்கம் தல தளபதி ரசிகர்களே , சினிகிறுக்கனாகிய நான் தளபதி ரசிகனோ அல்ல, தல ரசிகனோ அல்ல , நான் ஒரு சினிமா ரசிகன் ( இது எதுக்குன்னா வெளியே நான் அடிவாங்காம இருக்க தான் ),
தல ரசிகர்கள் சொல்லுவது போல படம் செம்ம , ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு , அப்படி எல்லாம் சொல்ல முடியாது , இந்த படம் முழுக்க வெளிநாட்டில் ஷூட் பண்ணி இருக்காங்க , வெள்ளைகாரங்க நிறைய பேரு நடிச்சி இருக்காங்க , அப்புறம் கிராபிக்ஸ் , அந்த ஆபீஸ் லொகேஷன் எல்லாம் வேற மாதிரி காட்டினதால , பசங்க ஹாலிவுட் ரேஞ்சுக்கு சொல்லிட்டாங்க போல , பில்லா கூட முழுக்க வெளிநாட்டில் எடுத்தாலும் costume ,way of மேக்கிங் எல்லாம் பார்க்கும் போது செம்ம ஸ்டைலிஷ் ஆகா இருந்துச்சி , அது மாதிரி எல்லாம் இந்த படத்தில் எதிர்பார்க்காதீங்க , அதே போல அஜித்தை பிடிக்காதவங்க சொல்லுறா மாதிரி படம் செம்ம மொக்கையா இருக்கு அப்படி எல்லாம் சொல்ல முடியாது . படம் எங்கேயும் bore அடிக்கவில்லை , அதே நேரத்தில் படத்தில் எதாவுது புதுசா சொல்லி இருக்காங்களான்னு பார்த்தா , அது இல்லவே இல்லை .
எனக்கு படத்தில் பிடித்தது அஜித் , அவர் அழகு , சண்டை காட்சிகள், சில மாஸ் சீன்கள் , அதுக்கு அனிருத் கொடுத்து இருக்கும் மாஸ் மியூசிக், படத்தில் plusகளை விட minusகள் அதிகம் தான் எனக்கு ஞாபகம் வருது
முதலில் அஜித் மற்றும் அவர் friends எந்த நாட்டை சேர்ந்தவங்க ? எந்த நாட்டுக்காக வேலை செய்யறாங்க , அப்புறம் அந்த bomb , இந்த bomb , இவனை பிடிக்கணும் , அவனை பிடிக்கணும் , gps , tracker , timeline tracker , இவன் lover , அவன் lover , இந்த இடம் , அந்த இடம், பல Europe நாடுகளின் பேர்களை சொல்லுறாங்க , இங்க இருக்கான் அங்க இருக்கான் வேகம் வேகமாக சொல்லுராங்க ஒன்னும் புரியல,ஒன்னு சொல்லி அது புரிவதற்குள்ள அடுத்து போகுது , பக்கத்துல இருக்கவன் கிட்ட என்னப்பா அவர் சொன்னார்ன்னு கேட்க வேண்டியதாச்சி , முதலிலே புரிஞ்சது என்னான்னா அஜித் நல்லவர் , விவேக் ஓபராய் கெட்டவர் , அபப்டியே முதல் பாதியில் அக்ஷ்ராவை தேடுறாங்க , ரெண்டாவது பாதியில் விவேக் ஓபராய் , தல சண்டை போடுறாங்க அவ்ளோதான் எனக்கு புரிஞ்சது .
அண்ணா 100 ஹரி படம் பார்த்தா மாதிரி இருந்துச்சின்னு, எனக்கு தெரிஞ்ச தம்பி ஒருத்தன் காலையில நாலு மணி காட்சி பார்த்துட்டு சொன்னா , ஆமாங்க படம் அப்படி தான் இருக்கு அந்தளவுக்கு வேகமாக எடிட்டிங் பண்ணிருக்காங்க அதே நேரத்தில படம் வேகமா தெரிய வேண்டும்னு சும்மா கேமெராவை ஆட்டி ஆட்டி எடுத்து இருக்காங்க
சிவா சார் டேம்ல குத்திக்கற சீன் யோசிச்ச அளவுக்கு, கதையில குதிக்க கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்கிறீங்க ,வீரம் , வேதாளம் இப்போ விவேகம் எதுலையும் சொல்லிக்கிறா மாதிரி கதையே இல்லையே , பழைய அரைச்ச மாவை அரைக்கிறீங்க , அதுவும் 90களில் வரும் படம் போல இருக்கு உங்க கதையும் , வசனமும் , கொஞ்சம் லேட்டஸ்ட் ட்ரென்ட்க்கு வாங்க , technology , graphics அது இதுன்னு லேட்டஸ்டாக கொடுத்தா போதாது , கதையும் வசனமும் கொடுக்கணும் .
வீரத்திலும், வேதாளத்திலும் கதை இல்லாட்டியும் , நாலு மாஸ் சீன் நச்ன்னு இருந்துச்சி , அந்த நாளும் மனசுல பதிவது மாதிரி இருந்துச்சி , இதில் பல மாஸ் சீன் இருந்தாலும் , மனசில் நிற்க மறுக்கிறது, அது ஏன் தெரியல . முதல் பாலம் காட்சி செம்ம மாஸ் ஆனால் அவர் விழுந்த பின்பு எனக்கு சிரிப்பு வந்துடுச்சி , அப்புறம் அஜித் ஓப்ராயின் காரை ஷூட் பண்ணும் சீன் செம்ம , அதுக்கு அப்புறம் காஜல் அகர்வாலை வீட்டில் இருந்து காப்பாற்றும் காட்சி செம்ம மாஸ் ஆனால் அதுவும் கொஞ்சம் ஓவர் டோஸ் ,போதும்ன்னு சொல்ல தோணுச்சு
அக்ஷ்ரா படத்தில் கெஸ்ட் ரோல் பண்ணி இருக்காங்கன்னு சொல்லலாம் , ஆனா அவங்க வந்த சீன் நல்லா இருந்துச்சி , அதே போல அவங்க hacker , எதை வேண்டுமானாலும் பண்ணுவாங்க காட்டுவது ஓவர் , குறிப்பா பைக் சேசிங்ல என்ன என்னமோ பண்ணறாங்க , டைரக்டர் சிவா சார் கொஞ்சம் லாஜிக் யோசிச்சி சீன் வைங்க . அக்ஷ்ரா காதில் ஒரு கம்மல் போட்டு இருப்பாங்க அதை பார்த்தா கம்பளி பூச்சி ஏதோ உக்கார்ந்து இருக்கா போலவே இருந்துச்சி .
காஜல் அகர்வால் எல்லா மாஸ் படத்தில் வரும் ஹீரோயின் போல அவ்ளோதான் , சர்வைவா பாட்டு முடிச்ச உடனே அவங்களுக்கு டூயட் வருவது கொஞ்சம் ஓவர் , அதுவும் படத்தின் கடைசியில் காஜல் அகர்வால் தமிழ் பாட்டு பாட அஜித் ஓபராய்யை அடிக்கிறார் , அது ஓவரிலும் ஓவர் , தூள் படத்தில் சிங்கம் போல பரவை முனியம்மா பாடுவாங்களே அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்துச்சி .
விவேக் ஓபராய் பற்றி என்ன சொல்லணும் ? படம் full ah வெறும் build மட்டும் தருகிறார் , அவருக்கு இல்ல , அஜித்துக்கு விவேக் ஓபராய் தருகிறார் அவ்ளோதான் .
அஜித் , அனிருத் இல்லைனா இந்த படம் ஒன்னும் இல்லை , அஜித் மரம் எல்லாம் தூக்கி படத்தை தூக்கிவைக்கிறார்ன்னா , அஜித்தின் மாஸை அனிருத் தூக்கி நிறுத்துகிறார் , நிச்சயமா வேற ஹீரோ இந்த படத்தை செய்து இருந்தால் முதல் ஷோ முடிஞ்ச உடனே இது அட்டு flop சொல்லி இருப்பாங்க , அஜித்தினால் இந்த படம் கொஞ்சம் தப்பியது ,
தலைக்கு ஒரு சின்ன வேண்டுகோள் , தல தயவு செய்து இந்த டைரக்டர் கூட சேராதீங்க , நல்ல கதை உள்ள படமா எடுத்து பண்ணுங்க .
மொத்தத்தில் விவேகம் காட்சியில் மட்டும் வேகம் , கதையில் இல்லை விவேகம்
இப்படிக்கு
சினி கிறுக்கன்
பொதுவாக என் மனசு தங்கம் உதயநிதி ஸ்டாலின் படம்ன்னு வந்துட்டா பங்கம் , என்று பட்சாதாபம் பார்க்காம நம்ம ஆள் தொடர்ந்து நம்மளை மொக்க பண்ணறதே வேலையா வச்சி இருப்பார் போல.
ஆனா ஒன்னுங்க இதுக்கு முன்னாடி வந்த சரவணன் இருக்க பயமேன் படத்தை பார்த்த பின்பும் மனசாட்சியை எடுத்து வச்சிட்டு , ஒரு மன தைரியத்தோடு இந்த படத்துக்கு போனேன் , அதுக்கு என்னை நானே பாராட்டிக்கணும் , போன படத்துக்கு இந்த படம் பரவாயில்லை தான். இருந்தாலும் இந்த படம் ஒன்னும் பெருசா சொல்லிக்கிறா மாதிரி புதுசா ஒன்னும் கிடையாது .
ரொம்ப நாள் கழிச்சி ஒரு கிராமத்து கதை , குடும்பத்து கதை , குடும்பத்தோடு பார்க்கும் திரைப்படம்ன்னு எல்லோரும் சொல்லவைக்கணும் நினைச்சி எடுத்து இருக்கும் படம் , ஆனால் அறுந்த பழய காத்தாடி போல இருக்கு இந்த படத்தின் கதை
ஆனா சில காட்சிகள் எதுக்கு ஏன் வச்சாங்களே தெரியல ? ஒட்டு போடுவது எந்த ஊருலயா நடக்குது இப்படி ? அதுவும் இன்டெர்வல்க்கு ஊரை விட்டு போன ஹீரோ , இன்டெர்வல் முடிச்சி படம் ஆரம்பிச்ச உடனே திரும்ப வந்துட்டாரு
ஹீரோயின் வழக்கம் போல மக்கு கேரக்டர் , ஆனா இது செம்ம மக்கு கேரக்டர் அதாவது +2 முடிக்காத ஹீரோயின் , அதுவும் fail ஆகியவங்களாம் முடியல ,,சூரி எப்போ இப்படி மொக்கை காமெடி நிறுத்தப்போறாரு தெரியல , பாட்டு ஏதோ வந்து வச்சி இருக்காங்க
படத்தில ஒரு ஆறுதல் பார்த்திபன் தான் , மனுஷன் அவருக்கு அந்த நக்கல் கேரக்டர் சரியாக பொருந்தி இருக்கு, அவருக்கும் உதயநிதிக்கு உள்ள புரிதல் நல்லா பண்ணிருக்காங்க , அவர் போடும் திட்டம் எல்லாம் நல்லா தான் இருக்கு , ஆனால் லாஜிக் ஏற்றுக்கொள்ள முடியல , அதுவும் அவர் பொண்ணை மொட்டை அடிச்சி காது குத்தவிடலயாம் , அதனால அந்த ஊரை அழிக்கணும் நினைக்கிறாரு , இப்படி ஒரு கதை அடித்தளமே எப்படி இப்படி யோசிக்க முடிஞ்சது ? ஆனா ஒன்னு உதயநிதி ஒரு முடிவு பண்ணிதான் இந்த படம் தேர்ந்து எடுத்து இருப்பார் போல , படத்தின் டைட்டில் பொதுவாக என் மனசு தங்கம் , ஊருக்கு நல்லது செய்யும் கேரக்டர் , படத்தில் வரும் election ல் chair சின்னம் வேற , ஏதோ ஒன்றுக்கு அடித்தளம் தான் இந்த படம் போல .
இசை இமான் , இவர் பத்து படம் பண்ணா ஒரு படம் இலவசம் போல பண்ணி இருக்கார் , சரவணன் இருக்க பயமேன் படத்தில் வரும் லாலா கடை சாந்தி பாட்டு ஹிட் அதுபோலவே ஒன்னு போட்டு தாங்க உதயநிதி சொல்லி இருப்பர் போல படத்தில் வரும் முதல் பாட்டு அதன் சாயல் தெரியுது .
நல்லவேளை online booking பண்ணவில்லை முப்பது ரூபா மிச்சம் ஆச்சின்னு சந்தோசப்பட்டேன் , ஆனா தியேட்டர்குள்ள போனா தான் தெரியுது ,தியேட்டர்ல மொத்தமே 20 பேரு தான் இருந்தாங்க அதுவும் palazooவில் இருக்கும் பெரிய screen-9ல், அப்பறம் தான் தோணுச்சு பத்து ரூபா டிக்கெட் வாங்கிட்டு பின்னாடி போயிட்டு உட்கர்ந்து இருக்குலமேன்னு தோணுது , தியேட்டர்ல பார்க்க கூட்டம் இல்லையே என்னோட விமர்சனம் பார்க்க ஆள் இருக்குமோன்னு ஒரு சந்தேகம் தான் , இருந்தாலும் எழுதி இருக்கேன் .
இந்த தியேட்டர்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்படி ஆள் இல்லனா ஷோ cancel பண்ணிடுங்க , இந்த காலியான தியேட்டர்ல் இந்த ஜோடிகள் தொல்லை தாங்களடா , கடுப்பு ஏத்துறாங்க மை லார்ட் , இதை இங்கே இந்த சினிகிறுக்கன் வன்மையாக கண்டித்து பதிவு செய்கிறேன் .
மொத்தத்தில் பொதுவாக என் மனசு தங்கம் , பொதுவாக மக்கள் மனசில் தங்குமா ?
இப்படிக்கு
சினி கிறுக்கன்
வணக்கம் இந்த விமர்சனம் என்னோட வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி இருக்கும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால்
இது ராமின் படைப்பு .
என்னோட விமர்சனம் சிலர் புரியவில்லை என்று சொல்வதுண்டு,
ஆமாம், சில நேரங்களில் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவது மாதிரி இருக்கும் ,
நீங்கள் மொட்டை என்று நினைத்தால் மொட்டை
முழங்கால் என்று நினைத்தால் முழங்கால் ,
இப்படி தான் இந்த படமும் இருக்கிறது ,
இதுவே ஒரு தலைப்பாய் ராம் சொல்லியே இந்த படம் ஆரம்பமாகிறது
இந்த படம் பார்க்கும் முன் சில குறிப்புகள்
இது நிச்சியமாக சென்னை மாவட்டம் தாண்டி மற்ற நகரங்களுக்கு இது அந்நியமானது , மேலும் ஒரு பொழுதுபோக்கிற்க்காங்க பார்ப்பவர்களுக்கும் இந்த படம் உகந்தது அல்ல
இது நிச்சயமாக break the rules படம், ஆம் முற்றிலும் வித்தியாசமான தமிழ் சினிமாவில் பார்க்காத காட்சி அமைப்புகள் முதலிலிருந்து இருக்கிறது , காட்சியமைப்பு மட்டும் அல்ல , சொல்லவந்த விஷயங்கள் , ஒரு சில விஷயங்கள் அல்ல , பல விஷயங்கள் ஒன்றுரோடு ஒன்று பின்னிப்பிணைந்து சில இடங்களில் புரிந்தும் , சில இடங்களில் பாமரனுக்கு புரியாமலும் சொல்லி இருக்கார் ராம்.
படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் பல, அதில் சில
ஆண்ட்ரியாவும் வசந்தும் சந்திக்கும் முதல் காட்சி
அதை தொடர்ந்து படத்தில் வளரும் காட்சிகளும் , வளரும் அவர்களின் உறவுகளும்
அளவான ரசிக்கும்படியான வசந்த் மற்றும் ஆண்ட்ரியாவின் பிளாஷ் பேக், குறிப்பாக ஆண்டிரியாவும் அவரோட முதல் கணவரும் ஹோட்டலில் பேசும் ஷாட்ஸ் அருமை .
இயல்பான உண்னமயான தரமணி பகுதியும் ,
அங்கே இருக்கும் மென்பொருள் துறையை மென்மையாக தொட்ட விதமும் அருமை .
மென்பொருளில் அல்லது BPO வில் வேலை செய்பவன் என்றாலே tie கட்டுபவன் போலவே காட்டுபவன் நம் தமிழ் சினிமா , ஆனால் இதில் அபப்டி காட்டவில்லை என்பது ஒரு மகிழ்ச்சி , ஆனால் எப்பொழுதும் பெண்ணை குட்டை பாவாடையில் காட்டுவது கொஞ்சம் அபத்தம்
குட்டைப்பாவாடை அணிந்தால் , குடித்தால் , புகைப்பிடித்தால் அவள் எதற்கும் தயாரானவள் என்பது பொய், அப்படி பெண்களை பார்க்க கூடாது என்பது போல் காட்டிய ராமுக்கு பாராட்டு என்றால் , dog is dog , அது நல்ல .dog என்ன கெட்ட dog என்ன அதுக்கு போடவேண்டியது போட்டால் போதும் என்ற வசனத்தில் அனைத்து ஆண்களை தவறாக காட்டியதுக்கு வன்மையாக கண்டிக்கிறேன் .
கிரிக்கெட் போல நடுநடுவே வரும் ராமின் வர்ணனை அதில் இருக்கும் அரசியலும் , சமூகத்தின் முகத்தையும் , மேலும் சில தகவல்களையும் , கிண்டலாக ஆணித்தரமாக கூறுவது பெருமை, அதே போல் ராம் நடுவே பேசும் வசனங்கள் முடிக்கும் முன்பே மக்களின் கைதட்டும் , சில இடங்களில் யுவனின் இசையும் வருவதால் , அவர் சொல்லவரும் முழு கருத்தும் கேட்டகாமல் அடங்கிவிடுகிறது . வெகுதினம் கழித்து யுவனின் bgm குறிப்பிட்ட மாறுதலை இந்த படத்திற்கு தந்து இருக்கு .
வசந்த் , ஆண்ட்ரியா , அஞ்சலி , அழகம் பெருமாள் , மற்றும் இரண்டாவது பாதியில் வரும் சில கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பில் அப்படியே அச்சுஅசலாக ராமின் முகமே தெரிகிறது , மேலும் மழையில் நினைந்த நாயும் , குட்டி காக்கையும் , அந்த காக்கை சொட்டும் நீரை குடிப்பதை பதிவு செய்த ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ் .
பல இடங்களில் இயற்கையக காட்டினாலும் , சில இடங்களில் கொஞ்சம் அதீத இயற்கையாக காட்டிய காட்சிகள் கொஞ்சம் சலிப்பு.தான் .
மொத்தத்தில் தரமணி மீண்டும் ஒரு முறை தர(ராம்)மான படைப்பு .
இப்படிக்கு
சினி கிறுக்கன் .
வணக்கம் ரொம்ப நாள் கழித்து ஒரு விமர்சனம் , சிரிங்க சீரியஸ் ஆகா எடுத்துக்காதீங்க , அட ஆமாங்க யாரோ ஒருவர் ஏதோ ஒரு படம் விமர்சனம் செய்ய அதில் ஒருவரை பற்றி சொல்ல ரசிகர்கள் சண்டை பிச்சிக்கிச்சி, ஆனால் அதை பற்றி கவலை இல்ல , எவ்வளவு கழுவி ஊத்தினாலும் நாங்கள் விமர்சனம் செய்ய தான் போகிறோம்
தனுஷ், தான் இந்திய அளவில் கொஞ்சம் பாப்புலர் ஆகா இருக்கும் ஹீரோ அதனால நாம் இந்த படத்தை தெலுங்கு , ஹிந்தின்னு பட்டய கிளப்பண்ணும் தோணிச்சி போல , over nightல all over இந்தியாவில் பாப்புலர் ஆகணும் நினைச்சிட்டார் போல , அதனால கஜோல் வில்லனாக போட்டு இருக்கார், சரி அது எந்த அளவுக்கு செட் ஆகி இருக்கு ? சுத்தமா கஜோலுக்கு அது செட் ஆகவில்லை
படத்தோட முதல் பகுதி ஏன் போகுது , எதுக்கு போகுது எங்க போகுது யாருக்கும் தெரியல ஏதோ எங்கேயோ போகுது , சும்மா slow motion ல கஜோல் ஒரு பக்கம் கண்ணாடி போட்டுக்கிட்டு நடக்குறாங்க , தனுஷ் அவர் கிட்ட சிகெரெட் பத்தவச்சி சவால் விட்டு நடக்கிறார் , ஆனால் அந்த சவால் அடடா செம்மயா போக போகுது நினைச்சா சுத்தமா அதுவும் இல்ல , அட ஆமாங்க பல பெரிய ஹீரோ படத்தில அப்படி தான் நடக்கும் ஏன் இதுவே வேலையில்லா பட்டதாரி1 ல கூட இப்படி தான் ஆனால் அது செம்ம மாஸாக இருக்கும் , அதுக்கு அனிருத் மியூசிக் ஒரு பக்கபலமாக இருந்துச்சி ஆனால் இதில் அப்படி இல்ல அந்த மாஸ் மிஸ்ஸிங்
சரி இரண்டாவது பாதியில் படையப்பா ரஜினி , ரம்யாகிருஷ்ணன் போல போட்டி போட போறாங்கன்னு பார்த்தா , சும்மா போகுது என்ன சொல்லறதுன்னு தெரியல கொஞ்சம் கொட்டாவி வரவைக்கற அளவுக்கு ஆக்கிட்டாங்க , ஆனா ஒன்னுங்க வேலையில்லா பட்டதாரி 1 க்கும் வேலையில்லா பட்டதாரி 2க்கும் continuity சரியாக maintain பண்ணி இருக்காங்க , அந்த வீடு , பக்கத்துக்கு வீடு , தனுஷுக்கு ஜோடி, அவரோட அப்பா , விவேக் , விவேக்கோட அஸ்ஸிடன்ட் , அந்த ஜெயபுஷ்பம் , தனுஷோட தம்பி , அவ்வளவ்வு ஏன் அவர் தம்பி வச்சி இருக்கும் estilo கார் , அந்த காரோட கலர் கூட சரியாக maintain பண்ணி இருக்காங்க, அப்புறம் அந்த மொட்டை மாடி டென்ட் கூட போட்டு இருக்காங்க , ஆனா தனுஷோட முதலாளி பெண்ணாக வரும் சுரபியை மட்டும் மாற்றி விட்டாங்க , என்ன இந்த சீரியலில் போடுறா மாதிரி இவருக்கு பதிலாக இவர்ன்னு போட்டு இருக்கலாம் .அதே போல அந்த மொட்டை மாடியில் ஒரு தப்பு பண்ணிட்டாங்க வேலையில்லா பட்டதாரி1 எடுத்தது வேற மொட்டை மாடி இதில் வேற மாடியில் எடுத்து இருப்பாங்க போல , இந்த படத்தில் மொத்தம் 5 டாடா ஸ்கை டிஷ் இருக்கு , அதுவும் அவங்க இருக்கிறது தனி வீடு அப்பார்ட்மெண்ட்ஸ் இல்ல .
அமலாபால் படத்தில் வைக்கணும் வச்சி இருக்காங்க , அவங்க ரெண்டுபேருக்கும் வரும் சண்டை , காமெடி என்கிற பேரில் வச்சி இருக்கும் காட்சிகள் எதுவும் செட் ஆகவில்லை பயங்கரமான மொக்கை சண்டை ரொம்ப செயற்க்கையாக இருந்துச்சி , சமுத்திரக்கனி நல்லவேளை அவர் வந்து மெசேஜ் சொல்லவில்லை , விவேக் சுமார்ரகம் தான்
கஜோல் சும்மா ஹிந்தி மார்க்கெட் கவர் பண்ணவேண்டும் என்பதிற்காக போட்டது தான் மற்றபடி எந்த ஒரு பயனும் இல்ல , அவங்க கேரக்டர் அந்த அளவுக்கு strong ஆகா இல்லங்க , எப்பொழுதும் வில்லன் கேரக்டர் strong ஆகா இருந்தா தான் ஹீரோ கேரக்டர் நல்லா இருக்கும்ன்னு சொல்லுவாங்க , அது இந்த படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங்
தனுஷ் இந்த படத்தில் செய்த தவறுகள் என்னன்னு பார்த்தா வேலையில்லா பட்டதாரி 2 பெயர் வச்சது முதல் தப்பு , மேலும் அந்த படத்தை reference வச்சி continuity ஆகா எடுத்தது பெரிய தப்பு , மேலும் அந்த படத்தில் தீம் மியூசிக் ஹிட் அதே போல அந்த மியூசிக் வச்சி ஏதாவது செய்தால் மக்கள் ஏற்றுப்பாக நினைத்தது மிக பெரிய தவறு , வேலையில்லா பட்டதாரி1 ஒரு சாதாரணமா கதை தான் ஆனால் சுவாரசியமான திரைக்கதை , அருமையான பாடல்கள் , இயற்கையான காமெடி எல்லாம் இருந்துச்சி , அவை அனைத்தும் இதில் இல்லை , வேலையில்லா பட்டதாரி1 எதிர்பார்த்து சென்றாலும் சரி, எதுவும் எதிர்பார்க்காமல் போனாலும் சரி இந்த படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் இல்ல நிறைய ஏமாற்றம் தான் .
இந்த second part எடுத்தாலே இப்படி தான் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்க தான் செய்யும் , எல்லாமே பாகுபலி போல second part ஹிட் கொடுக்க முடியுமா ? வேலையில்லா பட்டதாரி 2 க்கு இந்த நிலைமைன்னா அப்போ AAA பார்ட் -2 வருமே அந்த நிலைமை யோசிச்சி பாருங்க .
பவர் பாண்டி போல படத்தை இயக்கிய தனுஷ் இந்த படம் எடுத்தது கொஞ்சம் ஏமாற்றம் தான் , சரி சௌந்தர்யா எப்படி இந்த படத்துக்குள்ள வந்தாங்க ? இதோ ஒரு சின்ன கற்பனை
சௌந்தர்யா : என்னங்க வேலையில்லா பட்டதாரி2 கதை வச்சி இருக்கீங்க கேள்விப்பட்டேன் , நான் வேண்டும்ன்னா டைரக்ட் பண்ணட்டுமா ?
தனுஷ் : ஏன் உங்கப்பாவை வச்சி டைரக்ட் பண்ணி நாசம் பண்ணது போதாதுன்னு என்னையும் நாசம் பண்ண பாக்குறியா ?
ரஜினி : என்னமா அங்க சத்தம் ?
தனுஷ் : சும்மா பேசிகிட்டு இருக்கோம் மாமா ,
மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி 2 arrears வச்ச பட்டதாரி தான் .
இப்படிக்கு
சினி கிறுக்கன்