சனி, 13 மே, 2017

Saravanan Irukka Bayamaen - சரவணன் இருக்க பயமேன் ?

இந்த வருஷத்தில் வந்து இருக்கும் பல அருமையான படங்களில் இதுவும் அதில் ஒன்று , இந்த படத்தை ஒரு பொக்கிஷமாக வச்சி காப்பாத்தணும் , அப்படி ஒரு தெளிவான கதை, சுவாரசியமான திரைக்கதை , அருமையான பாடல்கள் , எதிர்பாராத திருப்பங்கள் , பல நகைச்சுவை நடிகர்களின் அருமையான , திறமையான காமெடிகளால் மனசு இலகி எல்லா மனசு கஷ்டங்களில் இருந்து விடுபட்டு வரலாம் . அப்படி ஒரு அருமையான படத்தை எழில் கொடுத்து இருக்கார் .


படத்தில ஆரமபத்தில் வரும் சூப்பர் chase சீன் அதில்  சூரி , மன்சூரலிகான் , போலீஸ் , உதயநிதி ஸ்டாலின் கலக்கும் ஒரு அருமையான காமெடி chase சீன எந்த படத்திலும் அப்படி பார்க்க முடியாது , அப்படி ஒரு சிரிப்பு , சிரிச்சி சிரிச்சி வயித்தெரிச்சல் வந்துடிச்சி, சாரி தப்பா சொல்லிட்டேன் , சிரிச்சி சிரிச்சி வயிறு புண்னாகிடுச்சி அப்படி ஒரு காமெடி , அதுவும் மன்சூரலிகான் , அவர் பையனாக வரும் சாம் , அவர் கூட இருக்கும் சில பல அல்லக்கைகள் , சூரி இவங்களோட மீசை எல்லாம் பார்த்தா,  அட டா யார்டா  அந்த அருமையான மேக்கப்மேன் இப்படி ஒரு அறிவாற்றலோட அந்த மேக்கப் போட்டது அதை அப்படியே டைரக்டர் ஓகே சொல்லி எடுத்து இருக்காரே , அனேகமாக இந்த மேக்கப்க்கு ஒரு தனி அவார்டு சன் டிவில கொடுப்பாங்க பாருங்களேன் .mark my words Mr.உதயநிதி நிச்சயமா அதுக்கு அவார்ட் confirm .


அப்புறம் முக்கியமான விஷயம் படத்தோட சுவாரசியமான விஷயம் ஒன்னு இருக்கு, அது சொல்லவேமாட்டேன் , அதாவது இந்த படம் ஒரு சாதாரணமான காமெடி படம் மட்டும் இல்ல , ஒரு பெரிய ட்விஸ்ட் என்னனா இது ஒரு பேய் கதை வேற, அது தான் முக்கியமான இன்டெர்வல் ட்விஸ்ட் , அய்யயோ இந்த முக்கியமானதை சொல்லிட்டேன் , அதை மனசுல இருந்து அழிச்சிடுங்க இல்லாட்டி படம் பார்க்கும் போது அந்த சுவாரசியம் போயிடும்.

படத்தில ஒரு நிமிஷம் கூட seatல உட்கார முடியாது , தப்பா புரிச்சிக்காதீங்க அதாவது படத்தில அப்படி ஒரு பரபரப்பு காமெடி அதுவும் அந்த பஞ்சயாத்து காட்சி  அடேங்கப்பா "வரேவா" கீழ விழுந்து விழுந்து சிரிச்சி அடிபட்டுடிச்சின்னா பார்த்துக்கோங்களே , வெறும் சிரிப்பு மட்டும் இல்ல உணர்வுபூரணமான காதல் பிளாஷ் பேக் வேற இருக்கு. எனக்கு அது பார்த்த உடனே மிஷ்கினோட பிசாசு படம் தோத்துபோச்சி டா சொல்லவச்சது , அது மட்டுமா உதயநிதி ஹீரோயின் ரெஜினாவை கமிஷனர் ஆபீஸ்க்கு கூட்டி சென்று ஒரு வீடியோ காட்டுவார் மனசு நெகிழ்ச்சியில் திளைத்தது, அப்படி ஒரு சென்டிமென்ட் புலி புலின்னு புளிச்சிட்டாங்க , சாரி செண்டிமெண்ட் புழி புழின்னு   புழிஞ்சுட்டாங்க .

உதயநிதி சார் நீங்க அடுத்து அரசியலில் வருவீங்களோ ? அதுக்கு தான் இதுல சின்ன lead கொடுத்து இருக்கீங்களோ ? Sun(Son) குடும்பத்தில் இருந்து அரசியல் வரமால் இருந்தா தான் ஆச்சரியம் .

இப்படி ஒரு  மாபெரும் படத்தோட ப்ளஸ் என்னனா அது  கிளைமஸ்க்கு  முன்னாடி வரும் ஜிகினா ஸ்ரீயின் தெய்வீக பாடலுக்கு பாரம்பரிய ஆடை போட்டு வரும் பாட்டு தான் , U certificate போட்டது இந்த படத்துக்கு சரியானது தான் தோணுச்சு 


இப்படி ஒரு சந்தோஷமான படத்தை தந்த எழில் , உதயநிதி , ரெஜினா , ஸ்ரீஷ்டி டாங்கே , மேலும் மற்ற நடிகர்கள் , டிரைவர்கள் , சாப்பாடு போட்டவர்கள் எல்லோரையும் ஒரு selfi எடுத்து சுத்தி போடுங்க , சாரி திருஷ்டி சுற்றி போடுங்க .

மொத்தத்தில் சரவணன் இருக்க எப்பொழுதும் பணமே .. மன்னிக்கவும் அதாவது சரவணன் தான்  இருக்காரே எப்பொழுதும் பயம் ஏன் ? 

குறிப்பு : இந்த படத்தை பார்த்த தமிழ் ராக்கர்ஸ் டீம் , இந்த படத்தை அவங்க websiteல் ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு  முடிவு எடுத்துட்டாங்க, ஏன்னா இப்படி ஒரு தரமான படத்தை ரிலீஸ் செய்து மக்கள் மத்தியில் கெட்ட பெயர் வர கூடாது என்பதால் .

இப்படிக்கு 
கிறு கிறுன்னு கிறுக்கு பிடிச்சி வெளியே வந்த சினிகிறுக்கன் 

2 கருத்துகள்:

Comments