வெள்ளி, 19 மே, 2017

Sangali Bungili Kadhava Thorae - சங்கிலி புங்கிலி கதவ தொற

போன வருஷத்திலே ஜீவா படம்  பல வந்தாலும் , பயங்கர மொக்கையா போச்சி , நல்லவேளை நான் அதை பார்க்காம  தப்பிச்சுட்டேன் , சரி fox star studios  + அட்லீ தயாரிப்பு அதனால படம் ஒரு அளவு நல்லா போகும் நம்பி போனேன் , அந்த நம்பிக்கை ரொம்ப வீண் அடிக்கவில்லை அதே நேரத்தில் அடடே நல்லா இருக்குன்னு சொல்லவும் முடியலை .

அரைச்ச மாவு அரைச்ச பேய் கதை , வாங்க ஒரு பங்களாவுக்கு போகலாம் அதுல ஒரு பேய் இருக்கும் , அதுக்கு ஒரு பிளாஷ் பேக் வைக்கணும் , முக்கியமா சில கேரக்டர் பேய் போல effect கொடுத்து audience பயமுறுத்தணும் நினைச்சி மொக்கையா சில காட்சிகள் வைக்கணும் , பேய் படத்தோட ரூல்ஸ் லைட் அணைஞ்சி அணைஞ்சி  எரியனும் . ஒரு ball விளையாடும் காட்சி கட்டாயமா வைக்கணும் , நல்லவேளை tapல்  ரத்தம் வரும் காட்சி வைக்கலை , 

சரி படத்தில இருக்கறவங்க பற்றி பார்க்கலாம் , ஸ்ரீதிவ்யா அவங்களுக்கு அபத்தமான ஒரு காதல் கதை  , ஒரே பாட்டில் பணக்காரங்க ஆவது போல ஒரே பாட்டில் காதல் வருது, அதுவும் காதல் பாட்டு இல்ல , கலாய்க்கும் பாட்டு , தம்பிராமையா ஏதோ சவுண்ட் விட்டு build up பண்ணுறாரு ஆனா அந்த அளவுக்கு  காமெடி எடுபடவில்லை , அதுவும் தேவதர்ஷினி கூட பண்ணும் வாஷிங் மெஷின் காமெடி சிரிப்பு வந்தாலும் மனசுல நிக்கல அதுவும் ஒரு மட்டமான டபுள் மீனிங் காமெடி . கோவை சரளா ஒரே மாதிரி நடிப்பு காட்சிகள் ,எதுக்கு  சூரி அந்தமா மேல காதல் பாட்டு வைப்பது எல்லாம் செம்ம கடுப்பு .

சூரி காமெடி இந்த படத்தில் தான் கொஞ்சம் சில இடங்களில் ரசிக்கும்படி இருந்துச்சி,  குறிப்பா அவர் ஒரு பையன் கூட ball விளையாடுவது , குடிச்சிட்டு வீட்டுக்கு வெளியே பேசுவது , கடைசி காட்சிகளில் பேய்க்கு பயந்து ஓடும் காட்சிகள் .

படத்தோட கதை ரொம்ப சாதாரணமா இருப்பதும் , பிளாஷ் பேக் strong இல்லாமல் இருப்பதும் மைனஸ் , படத்தில்  ஒரு காட்சி கொஞ்சம் காமெடி , அடுத்த காட்சி பேய் காட்சி , இப்படி முதல் பாதி மாறி மாறி என்ன தான் செய்யப்போறாங்க தெரியாமல் போகுது , trailerல் பார்த்த அந்த காட்சி இன்டெர்வல் பகுதியில் வருது , சரி இரண்டாவுது பாதி நல்லா சுவாரசியமாக போகும் பார்த்தால் , கொஞ்சம் ஏமாற்றம் தான் , கௌசல்யா , ஸ்ரீதிவ்யா பிளாஷ் பேக்ல் வரும் ராதாரவி எல்லாருக்கும் முகத்தில்   தனியா அப்பி வச்சி இருக்காங்க மேக்கப் .

படத்தோட கதைன்னு திரைக்கதைன்னு  பார்த்தா எனக்கு கொஞ்சம் யாமிருக்க பயமேன் , தில்லுக்கு துட்டு போல தோணுச்சு , ஆனா படத்தோட கதைன்னு பார்த்தா  v.சேகர்  & விக்ரமன் படம் போல லா லா லா ன்னு bgm வசிப்பது போல இருக்கு , ஏன்னா குடும்பம் ஒற்றுமையோட இருக்கணும்னு ஒரு பேய் வந்து சொல்லிட்டு போகுது அடேங்கப்பா என்ன ஒரு புது சிந்தனை  , மீண்டும் அந்த bgm போடுங்க லா லா லா ன்னு, final touch அந்த எல்லோரும் படிக்கட்டுல தொங்கிகிட்டு எல்லா நாளும் எங்கள் வீட்டில் கார்த்திகைன்னு படுவது போல இருக்கு , 

மொத்தத்தில்  சங்கிலி புங்கிலி வழக்கமான க(தை)தவ தொறந்தவை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

1 கருத்து:

Comments