வியாழன், 2 பிப்ரவரி, 2017

Bogan - போகன்

தனி ஒருவன் படத்திற்கு பிறகு  அரவிந்தசாமி ஜெயம்ரவி காம்போ எதிர்பார்த்த  படம் இந்த போகன் , ஆனா நான் அந்த எதிர்பார்ப்பு நினைச்சுகிட்டு போல , ஏன்னா அப்படி எதிர்பார்த்து போன பல படங்கள் மொக்கையாக்கி இருக்கு , அதுவும் ரோமியோ ஜூலியட் படம் எடுத்த டைரக்டர் , அதனால நான் எந்த ஒரு எதிர்பார்ப்போடு போகல , இருந்தாலும் இந்த படம் அதை ஏமாற்றவில்லை, ரொம்ப குழப்பவது போல இருக்கா ? சரி விடுங்க படத்தை பற்றி மேலும் படிங்க .

பழைய கதை  + புதிய திரைக்கதை = தான் இந்த போகன் , அப்படி என்னடா அந்த பழைய கதை கேட்க்கிறீங்களா ? அதை சொல்லமாட்டேன்  சொல்லிட்டா பார்க்கும் ஆர்வம் போயிடும் ,  ஆனால் பல விமர்சனங்களில் கதையை சொல்லி இருப்பாங்க , but  நம்ம பாலிசி கதை சொல்லுவது இல்லை , அதனால அதை நீங்களே பார்த்து தெரிஞ்சிக்கோங்க அட ஆமாங்க மாயா பஜார் காலத்து கதை தான்(அது என்னன்னு பார்த்துக்கோங்க) .

படத்தோட முதல் பாதி எங்கேயும் தட்டு தடங்கள் இல்லாமல் போகுது , சரியான அளவு காமெடி , சரியான அளவு கதை வேகத்தோட சுவாரசியமா நம்ம மனசை படத்தை விட்டு எங்கேயும் வெளியே போகாமல் கொண்டு போயிட்டு விட்டுட்டாங்க , அதே நேரத்தில் இரண்டாவுது பாதி ஆரம்பத்தில் கொஞ்சம் திசை மாறி அப்படி இப்படி கொஞ்சம் போனா மாதிரி இருந்தாலும் , அப்புறம் ஒரு வழியா வேகத்தை கொடுத்து நல்லபடியா முடிச்சிட்டாரு , படம் கொஞ்சம் கொஞ்சம் ஏழாம் அறிவு படத்தி ஞாபகப்படுத்தியது 

அரவிந்சாமி  , ஜெயம் ரவி , இரண்டு பேரும் நான் தான் ஹீரோ , நான்தான் வில்லன் என்று போட்டி போடாமல் , மாற்றி மாற்றி போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருக்காங்க , அரவிந்தசாமி ஜெயம் ரவியா நடிக்கும் போது அவரோட body language எல்லாம் நல்லா பண்ணி இருக்காரு , அதுவும் அவரை விசாரணை பண்ணும் காட்சியில் அவர் பண்ணும் அலப்பறை  செம்ம , அவங்க ரெண்டு பேரும் காருக்குள்ள பாடி ஆடும் போது ஒரே மாதிரி expression பண்ணுவது சூப்பர் , ஜெயம் ரவி அவர் பங்குக்கு அரவிந்தசாமியா நடிக்கும் போது சில இடங்களில் அரவிந்த்சாமி  மாதிரி பண்ணாலும் பல இடங்களில் அவரை போலவே பண்ணுகிறார் , அவர் ஹன்சிகாவோடு dinner  சாப்பிடும் காட்சியில் அருமை .அரவிந்தசாமி சார் நீங்க ஒரு ஒரு expression பல இடங்களில் பின்னிபெடல் எடுக்குறீங்க , முதல் பாதியில் ஒரு மாதிரி தூக்கி சாப்பிடுறீங்க என்றால் இரண்டாவது பாதியில் வேற மாதிரி இருக்கீங்க .

ஹன்சிகா ஆஹா ஒல்லியாகி அழகா இருக்காங்க , குறிப்பா ஒழுங்கா டப்பிங்ல்  உதடு அசைவு கொடுத்து தமிழ் உச்சரிப்பு ஒழுங்கா கொடுத்து நடிச்சி இருக்காங்க அது ஒரு பெரிய achievement அவங்களுக்கு , மேலும் பொண்ணு பார்க்கும் வரும் காட்சி சூப்பர், நல்ல சிரிப்பு வருது , கழுதை  மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா கவுண்டமணி கேட்பாரு அதுபோல , இந்த ஹன்சிகாவுக்கு உள்ள இம்புட்டு நடிப்பா அப்படின்னு கேட்கிற அளவுக்கு கிளைமஸ்ல நடிச்சி இருக்காங்க,ஹன்சிகா நடித்த பல படங்களில் இது கொஞ்சம் உருப்படியான  படம் என்று சொல்லணும் , நடிப்பிலும் improvement ,

அரவிந்தசாமி body language போல அந்த போலீஸ்கார் , ஜெயம்ரவியோட அப்பா , அபப்டின்னு நிறைய பேரு அவரை போல நடிச்சி இருக்காங்க அது எல்லாம் நல்ல இருந்துச்சி ,ஏன் அந்த லேடி போலீஸ் அப்படி டிரஸ் பண்ணி இருக்காங்க , அவங்களுக்கு uniform கிடையாதா ? கடைசியா தான் uniform போட்டு வராங்க .

படத்தோட பெரிய ப்ளஸ் இமான், இசை மனுஷன் பக்காவா பண்ணிட்டாரு , இமான் எப்பவும் ஒரே மாதிரி பாட்டு தான் போடுவாரு , ஆனா தீடிர்ன்னு  ஒரு வித்தியாசமா பண்ணிடுவாரு அப்படி பண்ணது தான் இந்த படம் .ஏற்கனேவே டமால் டாமால் டுமீல் டுமீல் குத்து பாட்டு ஹிட்டு ,   இன்னைக்கு தான் என் நண்பர் இந்த படத்தில் செந்தூரா பாட்டு கேளுங்க நல்லா இருக்குன்னு சொன்னாரு ,அதை  கேட்டேன்,  கேட்ட உடனே பிடிச்சிடுச்சி , அதுவும் பாட்டோட காட்சி அமைப்பு  நல்லா இருந்துச்சி , படம் முடிச்ச பிறகும் அந்த செந்தூரா பாட்டு மனசுல கேட்டுகிட்டே இருக்கு , bgm இது வரைக்கும் வந்த இமான் இசையில் இருந்து வித்தியாசமா இருந்திச்சி , இமான் சார் கலக்கிடீங்க 

டைரக்டர் தப்பா ? producer தப்பா தெரியல தேவி படத்தில் வரும் வீடு இதுலயும் வந்து இருக்கு , அது ஏன் ?அப்பட்டமாக அப்படி பண்ணாங்கன்னு  தெரியல, இது கொஞ்சம் fantasy படம் என்பதால் அங்க அங்க லாஜிக் ஓட்டைகள் இருக்க தான் செய்யுது , அரவிந்தசாமி பார்க்காமலே எப்படி ஜெயம்ரவியோட அப்பா, ஹன்சிகா அபப்டி மாறினாங்கன்னு தெரியல , இப்படி சில ஓட்டைகள் இருந்தாலும்  அதை மறக்கும்படி படம் bore அடிக்கமா ரெண்டுமணி நேரம் போகுது . மேலும் இந்த படம் face off என்கிற இங்கிலீஷ் படத்தோட தழுவல் , காப்பி சொல்லுறாங்க , அது எந்த அளவுக்கு உண்மை தெரியல 

மொத்தத்தில் போகன் நல்ல போகமாக நம்பி போகலாம் .

இப்படி 
சினி கிறுக்கன் 

3 கருத்துகள்:

Comments