வெள்ளி, 22 டிசம்பர், 2017

Velaikkaran - வேலைக்காரன்

இங்க போட்டு இருக்கும் போஸ்டர் வந்தப்போ  , இந்த போஸ்டர்   falling down என்ற  இங்கிலிஷ் படத்தோட காபின்னு  சொன்னாங்க ,  நான் அந்த இங்கிலிஷ் படத்தை பார்க்கல, அதோட கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கா என்று  கூட தெரியாது  , ஆனால் இந்த போஸ்டர் இந்த படத்துக்கு ரொம்ப சரியாக பொருந்தி இருக்கு , ஒரு கையில் பை , மறுகையில் அருவா , ஆமாங்க நாம் செய்யும் தொழிலும் , ஒரு ரவுடி செய்யும் தொழிலும் பெரிய மாற்றம் இல்ல என்பதை  நமக்கு புரியவைக்கும் , ஆனால் அது தான் படத்தோட முழு கதை என்று நினைச்சுடாதீங்க .

படம் ஆரம்பித்து கருத்தவன் எல்லாம் கலீஜா பாட்டு முடிச்சு , அப்படி இப்படி படம் போகும் போது , ஹீரோ இந்த குப்பத்தில் இருப்பவர்களை  மாற்றி, நல்ல பேரு வாங்கும் பழய formula படம் போல நினைக்கும் போது,  இந்த கத்தி படம் போல கார்ப்ரேட் பற்றி சொல்லும் படம் என்று நினைக்கும் போது , அப்படியே படம் கொஞ்சம் change ஆகி intervelலில் அட ச்ச்சே,  இதை தான் நாமும் பண்ணிக்கிட்டு இருக்கோம்ல என்று நம்மை நாமே கேள்வி கேட்கவைத்து நம்மை   நிமிர வைக்குது .அதில் fahadh ஒரு பக்கம் , சிவா மறுபக்கம் பேசும் காட்சி, சிவாவின் வீட்டில் வரும் ஒரு salesman கிட்ட பேசும் காட்சியும் , பிரகாஷ் ராஜ் இண்டெர்வெல்க்கு முன்னாடி சொல்லும் காட்சி,  நிச்சயமா நம்மை கை தட்ட வைக்குது 

முதல் பாதி விறுவிறுப்பாக முடிய , அதே வேகத்தில் இரண்டாவது பாதி ஆரம்பிக்க , படம் போக போக வளவளன்னு இழுத்துக்கிட்டு போகுது , அதுவும் கடைசி 30 நிமிடங்கள் எப்போ முடிப்பீங்கன்னு கேட்க தோணுது , கடைசியில் ரொம்ப நேரம் சிவா பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார் .சொல்ல வந்த விஷயம் நல்லது என்றாலும், ரொம்ப நேரம் திகட்ட திகட்ட சொல்லிகிட்டே போறாங்க .ஐயா நீங்க சொல்லவந்தது புரிஞ்சிது ஐயா ,போதும்யா முடிச்சிகோங்க வீட்டுக்கு போகணும் டைம் ஆகுதுன்னு ஒரு feel வருது .

படத்தின் ப்ளஸ் வசனம் எல்லாமே நம்மை யோசிக்கவைக்குது , அட நாம்  எப்படி எல்லாம் இந்த சமூகத்தில் ஏமாந்து கொண்டு இருக்கிறோம் தோன்றும் , மேலும் வர்த்தகம் எப்படி எல்லாம் நடக்குது , இந்த சூப்பர் மார்க்கெட்டில் எப்படி எல்லாம் யுக்தி பயன்படுத்துறாங்க, இந்த முதலாளி உலகம் எப்படி நம்மை ஏமாற்றுகிறது என்பதை காட்டுது .முக்கியமாக அந்த குப்பத்து செட் ரொம்ப தத்துரூபமாக இருக்கு , அதுக்கு நிறைய செலவு பண்ணிருக்காங்க .

படத்தின் மைனஸ் இரண்டாவது பாதியின் length, அதை குறைத்து இருக்கலாம், சிவாவும் , fahadhம் மோதிக்கொள்ளும் காட்சி இன்னும் strong ஆகா பதிவு பண்ணிருக்கலாம்,சிவா & நயன்தாரா மாற்றி மாற்றி help செய்து காதலில் உடனே விழுந்து டூயட் போடுவது bore தான் .இந்த குப்பத்து செட்க்கு நிறைய செலவு  பண்ணதால என்னவோ , சில இடங்களில் படம் ரொம்ப சுமாரா தெரிகிறது , அந்த மீட்டிங் போடும் இடம் , இறுதி தீப்பற்றி கொள்ளும் காட்சிகள் எல்லாம் பார்க்க சும்மா எடுக்கணும்ன்னு  எடுத்தா மாதிரி இருக்கு .

என்னை  பொறுத்தவரை சிவகார்த்திகேயன் நடிச்சதில் உருப்படியான கதையுள்ள படம் இது தான் , அதுவும் நடிப்பிலும் நல்லாவே பண்ணி இருக்கார் , இது வரை நடிச்சதில் சும்மா குழந்தைகளை கவர் பண்ணுவது போல, சில நேரங்களில் ரொம்ப சின்ன புள்ளதனமா  பண்ணுவார் , இதில் சரியாக matured ஆகா செய்து இருக்கார்,சில இடங்க்ளில் கொஞ்சம் குண்டாக சில இடங்களில் ஒல்லியாக தெரிகிறார் , அவோரட கலர் tone கூட  சாதாரண  ஆளு என்பதால் அதை கொஞ்சம் மாற்றி இருக்காங்க , ஆனால் சில இடங்களில் அது மிஸ்ஸிங் ,இவர் director's actor நிரூபித்து இருக்கார் , அதனால வரும் படங்களில் டைரக்டர் சரியாக யூஸ் பண்ணிக்கணும் , சும்மா சிவாவின் fans திருப்தி படத்தணும்ன்னு அவரை அப்படியே நடிக்க விடாதீங்க , அதே போல சிவாவும் இது போல நல்ல கதையம்சம் உள்ள படங்களை நடிக்கலாம் . அப்பறம்  சிவாவிற்கு ஒரு சின்ன suggestion ஏதோ weekend என்றால் அது businessகாக special ஷோ போடுவது  ஓகே தான், ஆனால்   முதல் நாள்  முதல் காட்சி ரஜினி  விஜய் , அஜித் போல காலை 5 மணி , 8 மணி ஷோ போடுவது, வெளியே பெரிய பெரிய கட் அவுட் வைச்சி பெரிய ஸ்டார் போல build up பண்ணுவது கொஞ்சம்  ஓவர், இன்னும் நீங்க வளரனும் , உங்களை விட விஜய் சேதுபதி எங்கோ  இருக்கார் , அதனாலே கொஞ்சம் அடங்கி இருப்பது நலம் .(இப்படி சொல்லுவதால் நான் குறிப்பிட்ட எந்த நடிகனின் ரசிகனோ அல்லது சிவாவின் எதிர்ப்பாளனோ அல்ல )

தீபாவெங்கட் ரொம்ப நல்லா படத்தில் பேசியிருக்காங்க , i am sorry நயன்தாரா நடிச்சிருக்காங்க , என்னமா ஆச்சி உங்களுக்கு? நல்ல ஸ்கோப் இருக்குற படம்தானே பண்ணுவீங்க ? டைரக்டர் ராஜா sentiment ஆகா உங்களை கூப்பிட்டாரா ? படத்தில் காட்சிகளே ரொம்ப கம்மி , அவரோட கேரக்டர் சிவாவுக்கு help பண்ணுவது போல இருந்தாலும் , படத்திற்கு பெரிசா அவங்க கேரக்டர் உதவவில்லை .சில இடங்களில் over make up , சில இடங்களில் சிவாவிற்கு அக்காவாக தெரிகிறார், நயன்தாரா சிவாவிற்கு சரியான ஜோடி அல்ல .

பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் , சினேகா , ரோகினி , சார்லி மன்சூர் அலிகான் , ராமதாஸ் , வினோதினி, தம்பிராமையா இப்படி k.s.ரவிக்குமார் படம் போல நட்சத்திர பட்டாளம் பெருசு , எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் தான் வராங்க , இதுக்கு மேல அவங்க எல்லோருக்கும் படத்தில் ஸ்கோப் தர முடியாது , , இவர்கள் எல்லாம் சேர்ந்து மீட்டிங் போடும் காட்சி எனக்கு சிவாஜி படத்தை ஞாபகம் படுத்தியது , எனக்கு பிரகாஷ் ராஜ் , விஜய் வசந்த் கேரக்டர் புடிச்சி இருந்துச்சி , இது போக  சதிஷ் , r.j,பாலாஜி, ரோபோ ஷங்கர்ன்னு ஒரு காமெடி பட்டாளம் வேற இருக்கு , ஆனால் பெரியளவில் அவங்களுக்கு படத்தில் இடம் இல்லை , அதிலும் r.j,பாலாஜிக்கு சுத்தமாக ஒன்னும் இல்லை .

fahadh முதல் தடவை தமிழில் , பல இடங்களில் சின்ன சின்ன வில்லத்தன reaction கொடுத்து ஸ்கோர் பண்ணுகிறார் , அதிலும் ஒரு கார் காட்சி வரும் அதில் அவர் பண்ணும் reactions மற்றும் இறுதியில் சிவாவிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் 

படத்தின் பெயர் வேலைக்காரன்னு பெயர் வைச்சாங்களும் வைச்சாங்க  , படத்தில் நிறைய தடவை வேலைக்காரன் வேலைக்காரன் வார்த்தை வருது , பேசாமல் இந்த படத்தில் வேலைக்காரன் எதன்னை தடவை சொல்லிருக்காங்கன்னு ஒரு போட்டி வைக்கலாம் .

டைரக்டர் மோகன் ராஜாவை பாராட்டி ஆகா வேண்டும் , பல வருஷங்களாக தெலுங்கு டப்பிங் படங்களை இயக்கியவர் , தனி ஒருவனில் இருந்து வேலைக்காரன் வரை , தனி ஒருவனாக கதை , திரைக்கதை, வசனம் என்று தனித்து நிற்கிறார், தனி ஒருவன் அளவிற்கு தனித்து நிற்கவில்லை என்றாலும் , படம் சொல்லிக்கும்படி நன்றாகவே இருக்கு .

மொத்தத்தில் வேலைக்காரன் முதல் பாதி smart  work , இரண்டாவது பாதி ரசிகர்களுக்கு hard work .

இப்படிக்கு
சினி கிறுக்கன் .

5 கருத்துகள்:

Comments