வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

Jil Jung Jak

ஜில் ஜங் ஜக் இது ரொம்ப  பிரபலமான வடிவேலு வசனம், அட அப்போ அது பொண்ணுங்க லவ் அப்படி இப்படி இருக்கும் நினைச்சா அது இல்ல,  ஏன்னா இந்த படத்தில ஹீரோயின் இல்லைன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க.

படம் ஆரம்பிச்ச உடனே எப்போ சித்தார்த் , RJ,பாலாஜி காட்டும் போது மக்கள் ஆ ஓ ன்னு பெரிய நடிகர்கள் படம் மாதிரி கத்துனாங்க, பார்க்கவே ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சி, ஒரு வேளை சென்னை வெள்ளத்திற்கு எல்லாம் உதவினாங்க, அதனால அப்படி ஒரு வரவேற்பு கொடுத்தாங்களோ ?சரி அது எப்படியோ சினிகிறுக்கன்  சார்பில் அவர்களுக்கு மனதார வாழ்த்துகள்.

சரி படத்தை பற்றி பார்ப்போம் 

படத்தில் ரொம்ப பிடித்த விஷயம் என்னன்னா ? நிச்சியமா இந்த படம் மற்ற படங்களில்ருந்து வித்தியாசமா இருக்கனும்ன்னு முடிவு பண்ணிட்டு எடுத்து இருக்காங்க..கதை நடக்கிற களம் , கதாபாத்திரங்கள், அவர்களோட body language ,இசை படம் fullah Bgm ரொம்ப புதுசா வித்தியாசமா இருக்கு.ஆனா lightah அங்க அங்க cow boy படம் மாதிரி ஒரு feel வருது , இந்த மாதிரி ஒரு புதிய attempt பண்ண டைரக்டர்,  அதற்க்கு உதவிய தயாரிப்பாளர் இதற்காக இந்த படத்தை ஜில்லுன்னு சொல்லலாம் .

அப்போ ஜங்ன்னு சொல்லுற விஷயம் என்ன?
,, சித்தார்த் காமெடி ,கூடவே நடிச்ச ரெண்டு பேரோட expression , ராதாரவியோட வித்தியாசமான நடிப்பு, இயக்குனர் படத்தை கொஞ்சமாவது ஜில்லுன்னு பண்ணனும்ன்னு முடிவு பண்ணி, படத்தில ரெட்டை அர்த்த வசனங்கள், பல நேரடி வசனங்கள், அதிலும் ஒரு பெட்ரோல் வச்சி இருக்கும் இடத்தை வெடிக்க வச்சி, ஒரு தன்  கிட்ட போதை பொருள் எடுக்கற வரைக்கும் பண்ணற காட்சிகள் மட்டும் தான் நல்ல சிரிப்பு வருது அதுவும் அந்த இடத்தில நிறைய adults only நகைச்சுவை,  தான் மற்றபடி படத்தில் ரொம்ப ரசிக்கிறா மாதிரி நகைச்சுவை இல்ல, அதனால படம் கொஞ்சம் ஜங்ன்னு  தான் இருக்குது 

படத்தில் நிறைய  இடங்களில சொல்லுற terminology கொஞ்சம் மனசல பதியல,கிளை கதைகள்ன்னு நிறைய வச்சி இருக்காங்க, ஆனா மொத்த படத்தில கதைன்னு பார்த்தா ஒரு strong கதை இல்லை, படம் பார்த்தா நடக்கிற இடம், பேசுற விதம் எல்லாம் பழய காலத்து கதை போல ஒரு உணர்வு ஆனா படம் ஏன் 2020 நடப்பது  மாதிரி எடுத்தாங்க தெரியல,இது எல்லாம் இந்த படத்தோட ஜக்ன்னு சொல்லலாம் 

மொத்தத்தில் படம் புதுமையா try பண்ணதுக்கு ஜில்லுன்னு சொல்லலாம் , கதை, மற்றும் ரொம்ப வள வள சொன்னதுக்கு ஜக்குன்னு சொல்லலாம்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

Visaranai - விசாரணை

சத்தியமா சொல்லுறேன் இந்த படத்தை பற்றி நான் பேசுற  அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லைங்க ,இந்த மாதிரி ஒரு படத்தை எடுத்ததிற்கு , இயக்குனர் வெற்றிமறானுக்கும்  , அதை உருவாக்க தயாரிப்பாளராக துணைபுரிந்த தனுஷ்க்கும், ஒரு பெரிய  தலைவணங்கிய  வாழ்த்துகள்,ஏன்னா இந்த மாதிரி ஒரு உண்மை கதையை எடுத்து வெளியிட ஒரு தைரியம் வேண்டும்,

ஒரு போலீஸ் விசாரணையில் என்ன எல்லாம் நடக்கும், எந்த அளவுக்கு அரசியல் தலையீடு இருக்கும், காவல்துறைக்கு உள்ளே எந்த மாதிரி அரசியல், மற்றும் தனி நபர் பதவி முன்னேற்றம், தங்கள் சுயநலத்திற்காக எந்த அளவிற்க்கு எல்லாம் போவாங்க என்று காட்டி இருக்கும் படம் தான் இந்த விசாரணை,ஆனா அது சினிமா தனமா இல்லாமல், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் எல்லாம் எப்படி இருக்கும் அங்க எப்படி நடை  முறையில் உள்ளதுன்னு உண்மையா  கொடுத்து இருக்காரு,என்கௌண்டர்க்கு போகும் போது துப்பாக்கியை   கையழுத்து போட்டு வாங்குவது எல்லாம் நல்லா காட்சி படுத்திருக்காங்க ,மற்ற படங்களில் எல்லாம் சும்மா பொம்மை துப்பாக்கி போல தான் ஒரு feel இருக்கும் ஆனா இதுல அப்படி இல்ல,உண்மையா சொல்லணும்ன்னா அந்த துப்பாக்கி வாங்கும் போது அதோட கனத்தை உணர முடிந்தது நமக்கு , அட அந்த அளவுக்கு weight ah  இருக்குமான்னு தோனவச்சது அந்த அளவுக்கு காட்சி படுத்தி இருப்பாரு

நிச்சயமா இந்த படம் பார்க்கும் போது நாமே அங்க இருந்து அடி வாங்குற மாதிரி ஒரு உணர்வு, அட்டகத்தி தினேஷ் அந்த அளவுக்கு நடிச்சி பிண்ணி எடுத்துடாரு, அதுவும் அவர் நின்ற  இடத்திலிருந்து அடிவாங்கும் காட்சியில் அவர் மூக்கில் இருந்து சளி வர அளவுக்கு காட்டுவது அவரின் நடிப்பின்  உச்சம், அவர் அந்த காட்சியில் நடிச்சார இல்ல நிஜமாகவே அடி வாங்கினாரா தெரியல , அவர் குக்கூ படத்திற்கு  அவார்ட் நிறைய வாங்குவாருன்னு அவர் எதிர் பார்த்து இருப்பார் ஆனா அவர்க்கு அது கிடைக்கவில்லை,நிச்சயமா அது ஏமாற்றமா இருந்து இருக்கும், ஆனா நிச்சயமா இது அவர்க்கு வங்கி தரனும் 

அவர் மட்டுமா ? அவர் கூட நடிச்ச மற்ற மூன்று பேரும் செம்ம, இறுதி காட்சியில் அப்சர் கதாபாத்திரத்தில் வருபவர் கை உதறிகிட்டே பக்கெட் எடுத்து போகுற காட்சி சூப்பர், பார்க்கிற நம்மகே ஐயோ இவங்களுக்கு என்ன ஆக போகுதுன்னு அளவுக்கு பார்பவர்களை படத்தோட ஒன்ற வச்சிட்டாரு இயக்குனர்.

கிஷோர் கொஞ்ச நேரம் வந்தாலும், சமூதிரகனியொட பேசுகிற வசனம், தெனாவட்டு எல்லாம் சூப்பர், சமூதிரகனி நிறைய  படத்தில போலீஸ்காரரா வராரு, இதுல பக்காவா செட் ஆகிட்டாரு, அவர் கோவமா இருக்கும் போதும் சரி, கடைசியா தப்பு பண்ணுகிறோமோ உணரும் போதும் சரி கலக்கிட்டாரு 

முதல் பாதி சில காட்சிகள் , ஹோட்டல்க்கு அனுப்பி சாப்பிட வைப்பது , மற்றும் நீதிமன்றத்தில் என்ன நடக்க போகுதுன்னு நாம்ம யூகிக்கிற அளவுக்கு இருந்தாலும் , கை தட்டி ரசிக்க வைச்சிருக்காரு வெற்றிமாறன், அதுவும் அந்த ஆந்திர போலீஸ் நீதிபதிகிட்ட மொக்க வாங்குற காட்சி, கைதட்டு தியேட்டர் கிழிது,

படம் ஆரம்பிக்கும் போதே அந்த விடியகாலை பொழுது, ஆந்திரா ஸ்டேஷன் உள்ள, கிளைமக்ஸ் இருட்டான பகுதி, அப்படின்னு  எல்லாம், ரொம்ப ரியலா feel பண்ண வச்சி இருக்காரு கேமராமேன், கிஷோரை தொங்க விட்டு அடிக்கும் போது ஒரு கொசு வந்து உட்காரும் ஒரு ஷாட் செம்ம , அது நிஜமாகவே ஒரு கொசு வந்ததை எடுத்தாங்களா ? இல்ல எதாவுது சிஜி வேலையான்னு தெரியல, அந்த அளவுக்கு ரொம்ப தத்துருபமா எடுத்து இருக்காங்க 

இந்த படம் இன்டர்நேஷனல் அவார்ட் எல்லாம் வாங்கி இருக்கு அதனால நான் ரொம்ப நல்லா இருக்கு சொல்லுறேன் நினைக்காதிங்க, உண்மையில் படம் பார்த்து முடிச்ச பிறகு அதன் தாக்கம் நிறைய இருந்தது அதற்க்கு காரணம் அந்த கதையின் எழுத்தாளர் படம் முடிஞ்ச பிறகு வெனிஸ் திரைப்பட விழாவில் பேசியதை  போட்டு இருக்காங்க , மேலும் அவர் தான்!! ...யார் அவர்?? படம் பார்த்து தெரிஞ்சிகோங்க 

மொத்தத்தில் இந்த படம் முடிந்து வந்த பிறகும் நமக்கு நாமே ஒரு விசாரணை செய்யும் அளவிற்கு ஒரு உணர்வு கொண்டு வந்த படம் 

படம் trailer பார்த்து ரொம்ப வன்முறையா இருக்குமோன்னு நினைச்சி போய் பார்க்காம இருக்காதிங்க , நிச்சயமா போயிட்டு பார்க்க வேண்டிய படம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 



வெள்ளி, 29 ஜனவரி, 2016

Irudhi Suttru - இறுதிச்சுற்று

நம்ம கோலிவுடில் பேய் காலம் , சிரிப்பு காலம்  போல இப்போ ஸ்போர்ட்ஸ் காலம் வருது, ஈட்டி(விளையாட்டுன்னு சொல்லிட்டு படம் எங்கயோ போச்சி),பூலோகம் (விளையாட்டு மட்டும் இல்ல விளையாட்டு வச்சி இந்த மீடியா எப்படி விளையாடுதுன்னு சொன்னாங்க), ஆனா இது விளையாட்டை மட்டும் மையம் படுத்தி, அதுக்குள்ள இருக்கிற உள்ளுக்குள்ள நடக்கும் தனி நபர் காழ்புணர்ச்சி  மற்றும் அந்த பாக்சிங்ன்னு சொல்லிட்டு சும்மா பறந்து பறந்து சண்டை போடாம ஒழுங்கா அந்த விளையாட்டை எப்படி இருக்குமோ அப்படியே காட்டி இருக்கும் படம் தான் இறுதிச்சுற்று.

ஒரு விளையாட்டு படத்தில் எப்படி கதை இருக்கும்? முற்காலத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் கெட்ட பெயர் எடுத்த ஒரு கோச்  ஒரு ஹீரோவை வச்சி அவர் நல்ல பெயர் எடுக்கும் படமா தான் பொதுவா இருக்கும், அதே போல தான் இதுலயும் இருக்கு ஆனா இங்க ஹீரோவிற்கு பதிலா ஹீரோயின், பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் இது.
எப்படியும் ஹீரோயின் தான் ஜெயிபாங்க தெரிஞ்சாலும், கடைசி வரைக்கும் பரபரப்பா கொடுத்து இருக்காங்க டைரக்டர் 

படத்தில் நல்ல விஷயங்கள் என்ன என்னனா ?
1. படம் எங்கேயும் கதையை விட்டு விலகி போகல சும்மா டூயட் தேவை இல்லாத காமெடின்னு 
2. படம் தேவைக்கு ஏற்ப சின்னதா ரெண்டு மணி நேரத்தில் கொடுத்து இருக்காங்க 
3.முக்கியமா அந்த சண்டை காட்சிகள் சும்மா சினிமா தனமா மற்ற படங்கள் மாதிரி சும்மா யெக்கி யெக்கி அடிக்காம ஒழுங்கா குத்து சண்டை எப்படி இருக்குமோ அப்படி கொடுத்து இருக்காங்க, அதுக்கு முக்கிய காரணம் அந்த ஹீரோயின் ஒரு நிஜமான குத்துசண்டை வீராங்கனை 
மேல சொன்ன விஷயங்களுக்காகவே இந்த படம் பார்க்கலாம்.

ரொம்ப நாளா சின்ன திரையில் ஓரகடம் விளம்பிரத்தில் தான் மாதவனை 
பார்த்து வந்தோம், இப்போ ரொம்ப நாள் கழிச்சி பெரிய திரையில் மாதவனை இந்த இறுதிச்சுற்றில் பார்க்கிறோம்.ரம்யா கிருஷ்ணன் சொல்லுறா மாதிரி சொல்லனும்னா வயசானாலும் அழகும் ஸ்டைலும் அவரை விட்டு போகாத மாதிரியே வறாரு, அவர் வரும் போது இன்னைக்கும் நிறைய பொண்ணுங்க தியேட்டரில் கத்துறாங்க 

ஹீரோயின் ரிதிக்கா அவங்க அக்காவா வர மும்தாஜ் நிஜ குத்து சண்டை வீராங்கனை  சரியாய் இருக்காங்க, சென்னையில் இருக்கும் போது ரிதிக்கா மாதவன் கிட்ட பண்ணுகிற ரௌடி தனம், நக்கல்  எல்லாம் செம்ம கெத்தா இருக்கு.நாசர், ராதாரவி அளவா வந்துட்டு அளவா பண்ணிட்டு போறாங்க, ராதாரவி இந்த படத்தில அவ்வளவ்வு ஸ்கோப் இல்லயே தோணுது, ஆனா climaxல்  நாசர் கிட்ட சொல்லுற ஒரு வசனம், அவர் இந்த கதைக்கு யார்ன்னு தெரியும் போது செம்ம காமெடி.

சந்தோஷ் நாராயணன் இசையில்  - வா மச்சானே பாட்டும் , கட்டிக்க போறேன் பாட்டும் சூப்பர், ஆனா அந்த பாடல்கள் இதுக்கு முன்னாடி வந்த அவர் பாட்டின் சாயல்கள் தெரியுது, முக்கியமா கட்டிக்க போறேன் பாட்டில் வரும் வயலின் இசை pizza படத்தில் climaxல்   வரும் bgm போல இருக்கு.
pizza இசை கேட்டு பாருங்க 2.34 minutes ல இருந்து 3.20 வரைக்கும் (please click below link - pizza climax)
Pizza climax - 2.34 minute to 3.20


இறுதிச்சுற்று ஹே சண்டைகாரா பாட்டு கேட்டு பாருங்க 
(please click below link - iruthisuttru song)
hey sandakara song from Iruthisuttru

இது ரெண்டும் கேட்டு பாருங்க எனக்கு என்னமோ அது ஒரே மாதிரி தெரியுது , முக்கியமா அந்த வயலின் இசை  கரெக்ட்டுன்னா கமெண்ட் பண்ணுங்க 

மொத்தத்தில் இறுதிச்சுற்று ரசிகர்களுக்கு குருதிச்சுற்று போல இல்லாமல் உறுதி சுற்றாக இருக்கு 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

Kathakali - கதகளி

கதகளி, கதகளி கதகளின்னு விஷால் ஆடும் கதகளி, விஷாலுக்கு இந்த மாதிரி ஒரு gangester/பழி வாங்கும்   கதைகள் ஒன்றும் புதுசு இல்ல, ஆனா இயக்குனர் பாண்டிராஜ்க்கு  இது  புதுசு ..பாண்டிராஜோட  பசங்க, பசங்க-2 , தவிர மற்ற படங்கள் எனக்கு அந்த அளவுக்கு உடன்பாடில்லை, ஆனா இந்த கதகளி பண்டிராஜ் நல்லாவே கதகளி ஆடி இருக்காரு.

படம் வழக்கம் போலவே ஆரம்பம் ஆகுது, பிறகு ஒரு opening  பாட்டு,கொஞ்சம் காமெடி, காதல்ன்னு சாதாரனமா போகுது, பிறகு கதைக்குள்ள படம் போன பிறகு, படம் எங்கேயும் track மாறாம பயணிக்கிறது, அந்த கதையோட mood மாறாம, ஒரு speed breaker போல தேவை இல்லாத பாடலோ , காமெடியோ , காட்சிகளோ சேர்க்கமா போவது ரொம்ப பிளஸ் பாயிண்ட் . பொதுவா தமிழ் படங்களில் மதுரை, நெல்லை, சென்னைன்னு  கதை நடக்கும், ஆனா கொஞ்சம் வித்தியாசமா கடலுர்ன்னு கதை நடக்கிறது நல்ல இருக்கு,

விஷால் தேவை இல்லாத பஞ்ச், சத்தமா சும்மான்னா கத்தி, கத்தி, பேசாம அடக்கமா நடிச்சி இருக்காரு,அதுக்காகவே ஒரு salute, கேத்ரின் தெரேசா அழகா மட்டும் இருக்காங்க ஆனா நடிப்புக்கோ ,நடிக்கிறதுக்கு வாய்ப்போ ரொம்ப கம்மி, கருணாஸ், விஷாலோட  friendsah  வரவங்க அளவா கதைக்கு  ஏற்ப  நடிச்சிருக்காங்க, தம்பா கேரக்டர்ல  வருபவர், அந்த போலீஸ்காரர் அப்படின்னு எல்லோரும்  perfect, நீங்க யோசிக்கிலாம் என்னடா இவன் எந்த படத்தலையும் இந்த அளவுக்கு ஒரு ஒரு கேரக்டர்க்கும் detailலா  சொன்னதில்லையேன்னு, ஆமா இந்த படத்தில் பண்டிராஜ் ஒரு ஒரு கேரக்டர் தெளிவா அளவா கொடுத்து இருக்காரு.

இசை:  ஹிப் ஹாப் தமிழா
படத்தில் ரெண்டே ரெண்டு பாட்டு தான் , ரெண்டு பாட்டும் ஏற்கனவே கேட்டா மாதிரி இருக்கு, ஆனா bgm நல்லா பண்ணி இருக்காரு, படம் கதகளின்னு பேரு வைத்தாலோ என்னமோ, சண்ட மேளம் படம் fullah கொடுத்து இருக்காரு,ஆனா நிச்சயமா  ஹிப் ஹாப் தமிழா rocking,குறிப்பா ஒரு விசில் கொடுத்தா மாதிரி வருகிற Bgm அருமை.

கேமரா :  பாலசுப்ரமணியம் & எடிட்டிங் : பிரதீப்
மழை, கடலூர் நோக்கி  இரவு பயணம் அப்படின்னு நல்லா feel பண்ண வச்சி இருக்காரு, எடிட்டிங் படத்தோட வேகத்துக்கு நல்லாவே ஈடு கொடுத்து இருக்காரு, அட என்னடா கேமரா & எடிட்டிங் எல்லாம் சொல்லுறியே அவ்வளவு பெரிய ஆளான்னு கேக்காதிங்க, நமக்கு அந்த அளவுக்கு technicalah , தெரியாது ஏதோ சொல்லணும் தோனுச்சி சொல்லிட்டேன்.

மொத்தத்தில் : கதகளி நம்பி போங்க பாண்டிராஜோட கதகளி  ஆடிட்டு வாங்க
இந்த பொங்கலுக்கு கொஞ்சம் நல்லா பொங்கியது இந்த கதகளி தான் .

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

சனி, 16 ஜனவரி, 2016

Rajini Murugan - ரஜினி முருகன்


சிவகர்த்திகேயன் & பொன்ராம் கூட்டணியில் இது  இரண்டாவுது படம், நிச்சயமா இந்த படம் எப்படி இருக்கும்ன்னு நான் நினைச்சி போனேனோ அப்படியே தான் இருந்திச்சி,அபப்டி என்ன தான் இருந்துச்சி ? இருங்க சொல்லுறேன்.

கதை ? வருத்தபடாத வாலிபர் சங்கத்தில என்ன கதை இருந்திச்சி ? ஒன்றும் இல்லை, அதே  போல தான் இதுலயும் ஒன்றும் இல்லை, மெகா சீரியல் போல அப்படியே போயிட்டு இருக்கு, சும்மா குமுதம் நகைச்சுவை துணுக்குகள் எல்லாம் சேர்த்து தந்து இருக்காங்க.அங்க அங்க அது இது எது சிரிச்சா போச்சு காமெடி பார்கிறா மாதிரி இருக்கு, அங்க அங்க situation ஏற்றார் போல எதாவுது சினிமா பாட்டா போட்டு காமெடி என்கிற  பேருல பண்ணி இருக்காங்க, ஒரு சில இடங்கள் தவிர வேற எதுவும் சொல்லிக்கிறா  போல இல்ல ,  அதுவும் இரண்டாவுது பாதி போகுது போகுது போய்கிட்டே இருக்கு, எப்போடா முடியும்ன்னு ஒரு எண்ணம் தோணுது 

சிவகர்த்திகேயன்  & சூரி அவங்க நடிப்பையும், எடுக்கும் காதபாதிரங்களும் நிச்சயமா மாற்றி ஆகவே வேண்டும், சும்மா ஒரே மாதரியான நடிப்பை தான் இரண்டு பேரும் தாரங்க, சிவா இன்னும் நிறைய mature கதாபாத்திரம் எடுத்தா நல்லா இருக்கும், சும்மான்னா குழந்தைகளுக்கு பிடிச்ச ஹீரோன்னு அதே மாதிரியே பண்ணா அவருக்கு audience limited ah தான் இருப்பாங்க.அவர் VJவா இருக்கும் போது என்ன மாதிரி கவுன்ட்டர் கொடுப்பாரோ அதே மாதிரி எல்லா படத்தலையும் காமெடி என்கிற பேருல ஒரே மாதிரி கொடுப்பது ரொம்ப திகட்டுது.

சூரி சார் ஒரு சின்ன வேண்டுகோள் நீங்க இங்கிலீஷ் பேசினா அது நல்ல காமெடியா இருக்கும் அது மக்கள் ரசிப்பாங்கனு நினைச்சி அதே பண்ணி வெறுப்பு ஏற்றாதிங்க, தயவு செய்து நீங்க படத்தில் இங்கிலீஷ் பேசுறதை நிறுத்துங்க.

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் ரொம்ப அழகா இருக்காங்க, இது என்ன மாயம் படத்தில் கொஞ்சம் மாடர்னா வரும் போதும் சரி, இதுல ஹோம்லியா  வரும் போதும் சரி இரண்டுமே செட் ஆகுது, ஹீரோயின் அப்பாவா வரவர் யார்ன்னு தெரியல ஆனால் ஒரு ரஜினி ரசிகரா அவர் அப்போ அப்போ முடிய தள்ளிவிட்டு வருவது நல்லா இருக்கு.

ராஜ்கிரண், சத்யராஜ் இவங்களுக்கு எல்லாம் அப்பா, தாத்தா கதாபாத்திரம் பண்ணறதுன்னா அல்வா சாப்பிடுகிறா மாதிரி,அதை அளவா அழகா பண்ணிருக்காரு ராஜ்கிரண்.

மொத்தத்தில் இந்த படம் யாருக்குன்னா சிவகார்த்திகேயன் fans ஆகிய காலேஜ் கேர்ள்ஸ் , வீட்டுல இருக்கும் அம்மா , குழந்தைகளுக்கு மட்டும்.

மொத்தத்தில் எனக்கு ரஜினி முருகன்  வெறும் முருகன் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 





வியாழன், 14 ஜனவரி, 2016

Gethu - கெத்து

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் 

படம் ஆரம்பிக்கும் போது பாராட்ட வேண்டிய விஷயம் என்னன்னா, சத்யராஜ் பெயரை முதலில் போட்டு தான் அப்புறம் உதயநிதி பேரு வருது , அப்படியே படத்துக்குள்ள கதை போன்னா openingல  பயங்கரமான ஒரு shoot out நடக்குது , அடடே படம் செம்மடா ..அப்படியே படம் தமிழ்நாடு குமுளிக்கு வருது, குமுளின்னு சொல்லி படம் எடுத்து இருக்காங்க ஆனா உண்மையாக எங்க எடுத்தாங்க தெரில, ரொம்ப அழகா காட்டி இருக்காங்க, அடடே படம் செம்ம கெத்தா போகும் போல அப்படின்னு நினைச்சா ! ! !

அப்புறம் வழக்கமான பாதையில் படம் போகுது, ஹீரோ, ஹீரோயீன் intro, அப்படியே அவங்களுக்கு ஒரு பாட்டு, எமி ஜாக்சன் இன்னொரு ஜெனிலியா போல ட்ரை பண்ணி இருக்காங்க, படத்தின் முதல் 30-45 நிமிஷம் எமி வாரங்க பிறகு எங்க போய்ட்டாங்கன்னு தெரியாது,  காமெடி பெருசா வொர்க் அவுட் ஆகல, ஏன்னா உதயநிதிக்கு கூட நம்ம சந்தானம் இந்த படத்தில் இல்ல 

விக்ராந்த் முதல் காட்சியில் காட்டும் போது மக்கள்கிட்ட நல்ல வரவேற்ப்பு , அவரும் ஒரு இன்டர்நேஷனல் தீவிரவாதி கேரக்டர் ஆகவே மாறிட்டாரு,  விக்ராந்துக்கு இந்த படம் நிச்சயமா ஒரு பிரேக் தரும் போல நினைச்சேன், ஆனா படம் முதல் காட்சிக்கு அப்புறம் கடைசியா கொஞ்ச நேரம் guest ரோல் போல வந்துட்டு போறாரு

சத்யராஜ் வழக்கம் போல ஒரு சிறந்த அப்பாவா வந்துட்டாரு, நிச்சயமா இவருக்கு சினிமாவில் சிறந்த அப்பான்னு ஒரு விருது தரலாம், நிறைய படங்களில் அவர் அப்பாவா வந்து நல்ல ஸ்கோர் பண்ணிட்டு போகுறாரு.

படத்தில் ஒரு பார்ல சண்டை வருது அதுல நல்ல மாஸா உதயநிதிய காட்டி இருக்காங்க, stunt மாஸ்டர் அந்த சண்டைய நல்லா பண்ணி இருக்காரு.அந்த பார் சண்டைல ஒரு பாட்டு bgm போல வருது நல்லா இருக்கு,  ஆனா lightah என்னை அறிந்தால் தீம் போல எனக்கு தோணுது

தில்லு முள்ளு பண்ணல பாட்டு எதுக்கு ஏன் வருதுன்னு தெரியல ஆனா கேட்பதற்கு காமெடியா இருக்கு,  அதே நேரத்துல பழய  ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டுகள் ஏதோ கேட்டா மாதிரியே  இருக்கு, இந்த படத்துக்கு மியூசிக் டைரக்டர் ஹாரிஸ்ah இல்ல தேவாவான்னு தெரியல, முட்டை பஜ்ஜின்னு ஒரு பாட்டு கேட்கவே கொஞ்சம் கொடுமையா தான் இருக்கு.

படத்தோட கதை என்ன ?
                  விக்ராந்துக்கு ஒரு assignment அதாவுது ஒரு இந்தியன் விஞானியை கொல்லனும், அந்த விஞானி பெயர் தெரியுமா ? A .K .Abdul Kamal , அடபாவிங்களா அப்துல் கலாமை , அப்துல் கமால்ன்னு மாத்திட்டாங்க, அவர் எழுதிய  அக்னி சிறகுகள் என்கிற புத்தகத்தை, அக்னி இறகுகள்ன்னு மாத்திட்டாங்க, கதையில் இப்படி லாஜிக் இல்லா மேஜிக் பண்ணி இருக்காங்க.

படம் பார்க்கும் போதே சில பேரு msg பண்ணாங்க அதாவுது கெத்து கொஞ்சம் வெத்துன்னு, but நம்ம அப்படியே சொல்ல கூடாது  

இதோ வருது நம்ம பாணி முடிவுரை 

படத்தோட trailer பார்த்தா செம்ம கெத்து,
அழகா இருக்க ஹீரயின்க்கும்,

இடங்களை  அழகா காட்டின காமேராமேனுக்கும்  ஒரு பூங்கொத்து 
படத்தோட கதைய கேட்டா காதுல ஒரு குத்து 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

Tharai Thappattai - தாரை தப்பட்டை

அனைவருக்கும் சினி கிறுக்கனின் பொங்கல் வாழ்த்துகள் .

பாலாவின் தாரை தப்பட்டை இசைஞானியின் 1000வது படம் இப்படின்னு ரொம்ப எதிர்பார்போடு வந்து இருக்கு,

டைரக்டர் பாலா, அமீர், மிஸ்கின் இவங்க படங்களில் எல்லாம் பார்த்த ஒரே மாதிரி ஹீரோக்கள் தான் இருப்பாங்க எப்படின்னா அவங்க நடை,பழக்கவழக்கங்கள், வித்தியாசமான body language, ஒரு மூர்க்க தனமான கதாபாத்திரங்களா இருக்கும், அதுவும் பாலாவின் படம்னா அது கொஞ்சம் நிறைய இருக்கும்

சேது-விக்ரம் , நந்தா-சூர்யா , பிதாமகன் - விக்ரம் , நான் கடவுள் - ஆர்யா  அவன் இவன் - ஆர்யா & விஷால், அதிலும் ஆர்யா கொஞ்சம் extraவா, பண்ணி இருப்பாரு, அதே போல் heroineகளும் ரொம்ப விசித்திர விசித்திரமா behavior பண்ணுவாங்க, கோவமான காட்சிகள், அழுகை காட்சிகள் எல்லாம் நல்லா நடிக்க வைப்பார்,முதல் தடவையா பிதாமகனில் சூர்யா, லைலா பார்க்கும் போது  நல்லா இருந்துச்சி, ஆனா ஏன் ஒரே மாதிரி அனைத்து படங்களிலும் அதே மாதிரி பண்ணுகிறாரு?இதுலயும் அதே மாதிரி ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் இருக்கு , யதார்த்தமான கதை எடுக்கிற பாலா ஏன் செயற்கைதனமா தன்னோட கதாபத்திரங்களை நடிக்க வைக்கிறாரு?

கதை என்ன இந்த படத்தில் ? சமிபத்தில் வந்த பாலாவின் படங்களில் கதைன்னு பார்த்தா பொதுவா அது ஒரு சமூகத்தின் வாழ்வாதாரங்கள், அவர்கள் வாழ்க்கை முறை, அவர்களின் இன்பதுன்பங்கள் தான் காட்டுவாரு அதே போல தான்  இதிலும் காட்டிருக்காரு, என்ன இதில் அவர் எடுத்திருக்கும் ஆயுதும் கரக ஆட்ட குழு, அதே போல் சன்னாசி கரகாட்டகுழுன்னு பெயர் பலகை காட்டி இருக்காங்க, கரகாட்டகார்கள்  போடும் ஆடைகள் கூட போட்டு இருக்காங்க ஆனா ஒரு தடவை கூட தலையில் கரகம் வச்சி ஆடவே இல்லை, நம்மக்கு தெரிஞ்சது எல்லாம் கரகாட்டம்ன்னா கரகம் வச்சி ஆடனும் இது எந்த வகைன்னு இதை பற்றி தெரிஞ்சவங்க யாராவுது சொன்னால் நல்லா இருக்கும்.ஏன்னா பாலா இந்த மாதிரி விஷயங்களில் தப்பு செய்ய மாட்டார்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு, படத்தோட கதை ஓட்டம் எதிர் பார்த்தா மாதிரி தான் போகுது பெருசா புதுசா எதுவும் சொல்லவில்லை 

வில்லனா வருகிற சுரேஷ் நிஜ வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளர்ன்னு சொல்லுறாங்க , பார்கிறதுக்கு கொஞ்சம் சீரியல் நடிகர் போஸ் வெங்கட் மாதிரி இருக்காரு.ஜோடிno -1 டைட்டில் வின்னர்ன்னு , அமுதவானன், ஆனந்தி ரெண்டு பேருக்கும் படத்தில் ஆடும் வாய்ப்பு கொடுத்துட்டாரு.

படத்தோட முக்கியமான ஹீரோ இசைஞானி இளையராஜா தான்,  படத்தோட trailerல் வரும் Bgmகாகவே இந்த படம் பார்க்கணும் தோனுச்சி, அது எப்போ வரும்ன்னு காத்திருந்தேன், படத்தோட கிளைமாக்ஸ்ல் தான் அது வந்துச்சு, சத்தியமா  இசைஞானி அந்த இடத்தில் இசையில் ருத்ரதாண்டவம் பண்ணிட்டாரு, புல்லரிக்க வச்சிட்டார், படத்தில் எந்த இடத்திலும் அழுகையோ, சிரிப்போ எந்த ஒரு உணர்வும் எந்த ஒரு நடிகராலும், நடிகையாலும், ஏன் இயக்குநராலும் கொண்டு வர முடியாததை, கிளைமாக்ஸ்ல் இசைஞானி அந்த கோவம், ஆக்ரோஷம் , வெறி, என்று அனைத்தையும் அந்த இடத்தில் பார்வையாளர்களுக்கு கொண்டு வர வச்சிட்டாரு.

மொத்தத்தில் தாரை தப்பட்டை வழக்கமான பாலாவின் பட்டறை 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 






சனி, 2 ஜனவரி, 2016

Maalai Nerathu Mayakkam - மாலை நேரத்து மயக்கம்

அனைவருக்கும் சினி கிறுக்கனின் புத்தாண்டு நல்வாழ்த்துகள், இந்த வருஷத்தோட முதல் பதிவு இந்த மாலை நேரத்து மயக்கம்,

நிச்சயமா இந்த மாதிரி ஒரு படம் செல்வராகவனால் மட்டுமே தர முடியும், இந்த மாதிரி ஒரு கதை அந்த அளவுக்கு ஒரு தைரியாமா எடுக்க இவரை  தவிர வேற யாராலும் முடியாது

படத்தோட ஹீரோ பார்த்தா அட காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி இருக்கேன்னு தோணும், அவர் பேசும் போது அட இது 7G ரெயின்போ காலனி ரவிகிருஷ்ணா  மாதிரி இருக்கே தோணும் ஆனா படத்தோட கதை  அது மாதிரி இருக்காது 

படத்தோட கதை?,  கல்யாணம் பண்ணி முதல் இரவுக்கு காத்திருக்கும் ஒரு பையன், ஒருத்தர் மேல நல்ல understanding வந்து தானா நடக்கணும் நினைக்கிற ஹீரோயின், இப்படி ரெண்டு துருவமா இருபவர்களின் வாழ்கை தான் இந்த படம், ஹோட்டலுக்கு கார்ல போற சீன், ஹோட்டலில் ஆர்டர் எடுக்குற சீன எல்லாம் செல்வாவின் முத்திரை தான்.அது மாதிரி ரெண்டு பேரும்  பெட் ரூமில்  சண்டை போடுற சீன, அந்த ஹீரோயின் கோவபடுறது அந்த பெண்ணோட point of viewல இருந்து அவளோட உணர்வுகள் எல்லாம் காட்டுவதில் ஹீரோயின் நல்லா பண்ணி இருக்காங்க.

படத்துல டைட்டிலில் டைரக்டர் கீதாஞ்சலி செல்வராகவன்னு போட்டு இருக்கு ஆனா படம் fullah செல்வராகவனை பார்த்தா மாதிரி இருக்கு, பல காட்சிகள் அவரோட முத்திரை தெரியுது.

நிச்சயமா இந்த படத்தை பார்க்க ஒரு பொறுமை வேண்டும், மற்ற entertainment காதல் படம் மாதிரி நினைத்து  போக வேண்டாம், அதே மாதிரி குடும்பத்தோட பார்க்க கூடிய படமும் அல்ல,ஏன்னா படத்தோட காட்சிகள் அப்படி இருக்கு, அதே மாதிரி   ஓ காதல் கண்மணி படம் பார்த்தவங்க நிறைய பேரு அந்த படத்தை இது ஒரு காதல் படமா கேட்டவங்களும்  சத்தியமா இந்த படத்தை போயிட்டு பார்க்காதீங்க 

மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் commercial படம் பார்பவர்களுக்கு கொஞ்சம் தயக்கம் தான்.

இப்படிக்கு 
சினி கிறுக்கன்  


ஞாயிறு, 27 டிசம்பர், 2015

Pasanga - பசங்க -2

நான் ரொம்ப நாளா சமூகத்தை கவனிச்சு நினைச்சிருந்த ஒரு சில விஷயம் படமா வந்து இருக்கு, நான் சமிபகாலமா பார்த்த சில பேரு BE முடிச்சிட்டு , MBA பண்ணுறாங்க இல்லாட்டி BE முடிச்சிட்டு MBA படிச்சிகிட்டு bank exam எழுதுறான், ஏன்டான்னு கேட்டா அம்மா சொன்னங்க BE படிச்சேன், அப்பாவுக்காக பேங்க் exam try பண்ணுறேன் சொல்லுறாங்க, ஒரு தடவ முகபேர்ல ராத்திரி 8 மணிக்கு பெரிய வரிசை ஒரு பள்ளிக்கு முன்னாடி  எதுக்குனா அடுத்த நாள் அந்த பள்ளியில application form தராங்களாம், அட ஆட்டு மந்தைகளா ஏண்டா நிக்குராங்கன்னு தொன்னுச்சு.ஏன் அந்த பெரிய கொம்பு பள்ளியில படிச்சா தான் சமுதயாத்தில நீங்க ஒரு பெரிய கொம்புன்னு  காட்டிக்க தோனும் அதுக்கு தான் அங்க நிக்குறாங்க?, பசங்களுக்கு வரையறதோ, பாடுறதோ, ஆடுறதோ இயற்கையா வரணும், அப்படி இயற்கையா வருவத ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அந்த அந்த கிளாஸ்ல சேர்த்துவிட்டு அதன் நுணுக்கங்களை சொல்லி தரலாம் ,  அதை செய்யாம  5-10 வயசுலேயே பாட்டு கிளாஸ், drawing கிளாஸ் சேர்த்து விடனும்ன்னு யாருடா  சொன்னது?இது எல்லாம் செய்றது எதுக்கு தெரியுமா ? உங்க status காட்டுவதற்கு  சேர்த்து விடுவது, அப்படியே சேர்த்து விட்டாலும் 10std -12std   படிக்கும் போது படிப்பு தான் முக்கியம் மார்க் வாங்குன்னு அந்த கிளாஸ் எல்லாம் கட் பண்ணி அப்புறம் காலேஜ், மார்க்,  சம்பளம் ன்னு மறக்க அடிக்கிறது, அப்புறம் என்னதுக்கு அந்த கன்றாவி கிளாஸ்க்கு எல்லாம் சேர்த்து விடுறாங்க ? மேல சொன்ன விஷயங்கள் எல்லாம் இப்போ இருக்குற middle கிளாஸ் upper middle கிளாஸ் பெற்றோரை பார்க்கும் போது தோனும் ஆனா இன்னைக்கு எனக்கு இந்த படம் பார்க்கும் போது நிறைய தோணிச்சு அதனால இங்கே பதிவு செய்தேன், சரி படத்தை பற்றி சொல்லுடான்னு சொல்லுறிங்களா, சரி வாங்க பார்க்கலாம்   

இந்த படத்துக்கு பசங்க - 2 ன்னு பேரு வச்சதுக்கு பதிலா பெற்றோர்-2 ன்னு பேரு வச்சி இருக்கணும், பெற்றோர் மேல இருக்குற தப்பு எல்லாத்தையும் நம்ம சமூகம் பசங்க மேல தின்னிச்சிட்டு இருக்குன்னு நெற்றி பொட்டுல அடிச்சா மாதிரி எடுத்த படம்.
கொஞ்சம் 3 idiots , கொஞ்சம்  தரே ஜமீன் பர்  தாக்கத்துல இந்த படம் எடுத்து இருப்பாரு போல, நிச்சயமா அதே மாதிரி வந்த படம் இதுன்னு  நான் சொல்ல வரல.
பசங்களோட சுட்டிதனத்த முதல் பாதியில் நல்ல காமெடியா காட்டி இருக்காங்க இரண்டாவுது பாதி பசங்களோட மனநிலைய புறஞ்சிகிற பெற்றோரை காட்டுறாரு 

வாசனங்கள் ரொம்ப நல்லா இருக்கு, இதோ  சில 
1.பொண்ணு : அப்பா அந்த ஸ்கூல்க்கும்(private ) என் ஸ்கூல்க்கும்(Govt ) என்னபா வித்தியாசம் 
அப்பா : அவன் இங்கிலிஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான் , இவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான் அவ்ளோ தான் வித்தியாசம்  -( இந்த வசனம் இதுக்கு முன்னாடி facebook or வேற படத்திலா வந்ததுன்னு தெரில ஆனா இந்த படத்தில் பதிவு செய்தது சூப்பர் )
2. பசங்க கெட்ட வார்த்தை பேசல கேட்ட வார்த்தை தான் பேசுறாங்க 
3.பசங்க மனசுல மதிப்பெண்ணை விதைக்காதிங்க , நல்ல மதிப்பான எண்ணங்களை விதைங்க 
இது மாதிரி பல வசனங்கள் நல்லா இருக்கு 

அந்த ரெண்டு பசங்களும் அழுவது, சிரிப்பது, வாலுதனம் செய்வதுன்னு ரொம்ப இயற்கையா இருக்கு ஏன்னா படங்கள இந்த மாதிரி கேரக்டர் பண்ணும் போது ஓவர் acting இல்லாட்டி செயற்கை தனமா தெரியும் அது மாதிரி இல்லாம இந்த ரெண்டு பசங்களும் ரொம்ப இயல்பா பண்ண வச்சி இருக்காரு டைரக்டர்.

முனிஷ்காந்த் திருட்டுதனம் பண்ணறது எல்லாம் நல்ல காமெடி , கார்த்திக், பிந்து மாதவி பள்ளியில் அட்மிசன் வாங்குற சீன சூப்பர், சூர்யா, அமலபால் குடும்பம் நல்ல positiveah காட்டினது அருமை.

எந்த ஒரு நெகடிவ் விஷயங்களோ, எந்த ஒரு நெகடிவ் கேரக்டர்களோ கட்டாமல் இருந்ததுக்கு டைரக்டர்க்கு நன்றி.நிச்சயமா குடும்பத்தோடு குறிப்பாக பெற்றோர்கள் நிச்சயமா பார்க்க வேண்டிய படம் 

 பூலோகம், பசங்க-2 இந்த இரண்டு  படங்களும் இந்த சமுதாயத்தை  பிரதிபலிக்கிற கண்ணாடியாய் இந்த வருஷ இறுதில வந்தது சூப்பர்.

இப்படிக்கு 
சினி & சமூக கிறுக்கன்

வியாழன், 24 டிசம்பர், 2015

Bhoologam - பூலோகம்

சினி கிறுக்கனின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள், நான் இந்த ப்ளாக்   ஆரம்பிச்சி இந்த ஒரு வருஷத்தில  இது என்னோடைய  ஐம்பதாவுது பதிவு..இதுவரைக்கும் 4800+ பார்வையாளர்கள் என்னோட  பதிவை பார்த்து இருக்காங்க .இன்னைக்கு வரைக்கும் என்னோட பதிவுகளை படிச்சி என்னை  பாராட்டினவங்க,கலாய்ச்சவங்க , அப்புறம்  கொஞ்சம் பேரு feedback சொல்லி என்னை ஊக்கம் கொடுத்தவங்க மேலும் watsapp friends , fb friends எல்லாருக்கும் நன்றிகள் 
 சரிடா ரொம்ப நெஞ்ச நக்காதடா படத்தை பற்றி சொல்லுன்னு சொல்லுற உங்க mind வாய்ஸ் கேக்குது, சரி வாங்க பார்க்கலாம் 

படம் எடுத்து முடிச்சி ரொம்ப நாள் வெளியே வராத வாலு , ரஜினிமுருகன் , பட வரிசையில் பூலோகமம் ஒன்று,  இதுக்காகவே  இந்த படத்தை memesல  நிறைய கலாய்ச்சிருக்காங்க , ஒரு வழியா இந்த படம் சுமார் 2-3 வருஷம் காத்திருந்து வந்து இருக்குது, அப்படி காத்திருந்து வந்தாலும் இந்த சமுகத்தை கத்தி எடுத்து குத்த வந்தா மாதிரி வந்து இருக்கு.

Boxing படம் சொன்னவுடனே என்ன தோனும்? ,ஏதோ loveகாக சண்டை போடுறது, இல்லாட்டி குடும்ப பகைகாக சண்டை போடறது அதுவும் இல்லனா சண்டை போட்டா தான் பொண்ணு கிடைக்கும் அதுபோல தான் தோனும்,ஆனா boxing என்பதை ஒரு கதை களத்திற்காக பயன்படுத்தி, இந்த மீடியா பண்ணற அட்டகாசத்தை அட்டகாசமாக காட்டிருக்கும்  படம் தான் பூலோகம்.

டைரக்டர் படம் ஆரம்பிக்கும் போதே audienceக்கு இது தான் கதை,இப்படி தான் போகும்ன்னு,  ரொம்ப தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாரு, அதுவே ரொம்ப பெரிய பிளஸ்,படம் ஆரம்பிச்சி கொஞ்சம் நேரம் கழிச்சி கோஷ்டி சண்டை அடி தடி கொஞ்சம் திரிஷா கூட கசமுசா ன்னு  படம் போகும் போது அட இது usual  படம் மாதிரி போகும் நினைச்சேன், ஆனா அப்புறம் விறுவிறுன்னு top gear ல தூக்கி அடிச்சிகிட்டு  போய்கிட்டே இருக்காரு டைரக்டர் 

நான் எப்பவும் படத்தோட கதை சொல்ல மாட்டேன், ஆனால் இந்த படத்தோட one liner மட்டும் சொல்லுறேன், இப்போ இருக்குற டிவி channels ரியாலிட்டி ஷோ,IPL , ISL , PBL  எல்லாம் நடத்தி எப்படி காசு பார்க்குறாங்க, இது தான் ஒரு வரி கதை.இது வரைக்கும் யாரும் தொடாத கதை களம் இது . அதனால எல்லோருக்கும்  பிடிக்கும்,   இந்த டிவிகாரங்களோட உண்மையான முகத்தை பிரி பிரின்னு பிரிச்சி எடுத்துட்டாங்க .

இயற்கை, ஈ, பேராண்மை, படங்கள் எடுத்த டைரக்டர் s.p.Jananathan உடைய assistant தான் இந்த படத்தை இயக்கி  இருகாரு, Jananathan தான் இந்த படத்துக்கு வசனம் எழுதிருக்காரு, படத்தோட மிகபெரிய பிளஸ் வசனம் தான் சும்மா நெத்தி அடி.

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும்  போல அவரோட வில்லத்தனத்தை காட்டிடாரு, அதுவும் ஒரு பெரிய டிவி  சேனல் ownerah  இதோ அவர் பேசிய சில நச்சு வசனங்கள் 
1. இங்க 100 கார் விற்பதை விட லட்சம் ஷாம்பூ விற்பது லாபம், 
2. இந்திய ஏழை நாடு தான் ஆனா மார்கெட் பெருசு.
3.காற்றுல வியாபாரம் பண்ணறவன் டா , நான் காற்றுலையே நடப்பவன்டா( பெரிய டிவி  சேனல் ownerஅதனால இந்த வசனம் )
3. தமிழர்களை தமிழன் தான் காப்பாத்தனும் அப்படி சொல்லி ஒருத்தரை ஏமாற்றும் போது எனக்கு அட அரசியல்வாதிகள் நம்மளை இப்படி தானே ஏமாற்று பண்ணுரங்கன்னு  உறைக்குது.

ஜெயம்ரவிக்கு இந்த வருஷத்தில இது மூனாவுது படம், தனிஒருவன் படத்தோட மாபெரும் வெற்றிக்கு பிறகு நிச்சயமா இதுவும் ஒரு வெற்றி படமா தான் இது இருக்கும், ரொம்ப கஷ்டப்பட்டு உடம்பை எல்லாம் வருத்தி நடிச்சி இருக்காரு, ஆனால் அந்த வெள்ளைக்காரன் வில்லன் Nathan Jones கூட சண்டை போடும் போது கொஞ்சம் காமெடியா இருந்துச்சி ஏன்னா அந்த வில்லனுக்கு முன்னாடி ஜெயம்ரவி கொசு போல தான் தெரியறாரு. ரவி vs பிரகாஷ்ராஜ் agreement போடுற சீன் செம்ம அப்போ பேசுற ஒரு ஒரு வசனமும் தியேட்டர்ல கைதட்டு அள்ளுது .எல்லை தாண்டி நம்ம வீட்டுக்குள்ள வந்து business பண்ணா நாம்ம சும்மா இருக்கோம் ஆனா எல்லை தாண்டி போய் மீன் பிடிச்சா கைது செய்வாங்க , இங்க நீயும் நானும் sports man இல்ல இந்த brandகளை விற்க்கவந்த salesmanன்னு   இப்படி வசனங்கள் தெறிக்க விட்டு இருக்காங்க 

Fight சீன் எல்லாம் எடிட்டர் and கேமரா நல்லா fastah கொடுத்து இருக்காங்க, இசை : ஸ்ரீகாந்த் தேவா , படம் வடசென்னைல நடப்பதால, லோக்கல் , மற்றும் சாவு பாட்டு போட்டு இருக்காரு ஆனா எதுவும் மனசுல பதியவில்லை.

த்ரிஷா ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் இல்ல சும்மா ஓரளவு சப்போர்ட் பண்ணிட்டு போயிட்டாங்க, அதே மாதிரி த்ரிஷாவோட அண்ணன் சும்மா டம்மியா தான் வந்துட்டு போகிறாரு 

அதே நேரத்தில படத்தில சில விஷயங்கள் கவனிக்காம விட்டுட்டாங்க, அதாவுது , கதை நடப்பது  A .R.C .college பொத்தேரி ன்னு சொல்லுறாங்க ஆனா காலேஜ் campus காட்டும் போது frameல S .A ..Engineering College பஸ் தெரியுது பாவம் S A .Engineering காலேஜ்ல ஷூட் பண்ணதுக்கு விளம்பரம் பண்ணிட்டாங்க போல, அப்புறம் collegeக்கு சாப்பாடு த்ரிஷாவோட மெஸ்ல    இருந்து செய்து போகிறா மாதிரி முதல காட்டுறாங்க ஆனா பின்னாடி காலேஜ் உள்ளவே செய்கிறா மாதிரி காட்டுறாங்க ,எப்படி assistant directors இந்த மாதிரி continuity எல்லாம் மிஸ் பண்ணறாங்க தெரியல,  அப்புறம் முக்கியமான விஷயம் நம்ம தமிழ் சினிமால boxingனா  அடிச்சி முகத்துல ரத்தம் எல்லாம் வந்து கொஞ்சம் காட்டுதனமா எல்லாம் அடிக்கிறாங்க, நிஜமாகவே அப்படி ஒரு boxing type எதாவுது இருக்கா? அப்படி இருந்த சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கிறேன், அதே போல boxingல points pointsன்னு ஒன்னு இருக்கு அதை ஏன் காட்டமாட்டேங்குறாங்க ? இப்படி சில சின்ன சின்ன விஷயங்கள் கோட்டை விட்டாலும், கதையும் வசனமும் படத்தை தூக்கி நிறுத்திடிச்சி.

சதுரங்க வேட்டைக்கு அப்புறம் வசனதிற்காவே ஒரு படம் பார்க்கன்னும்ன்னா  நிச்சயமா இதை பார்க்கலாம் 

எனக்கு ஒரு doubt  டிவி சேனல் பண்ணுகிற தப்பு எல்லாம் காட்டின இந்த படத்தை எந்த டிவி சேனல் வாங்கிருக்கும் ?

மொத்தத்தில் பூலோகம் டிவி மீடியாவிற்க்கு  பூகம்பம் ஏற்படுத்திய ஒரு படம் 

இப்படிக்கு 
சினி கிறுக்கன் 

வெள்ளி, 18 டிசம்பர், 2015

Thangamagan - தங்கமகன்

தங்கமகன் அப்படின்னு சொன்னவுடனே நம்மக்கு சூப்பர் ஸ்டார் படம் ஞாபகம் தான் வருது, சரி எப்படியோ அந்த படத்துக்கும் இந்த படத்துக்கும் ஒரு சம்பந்தமமும் இல்ல, சரி இது எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

தனுஷ்  அவரோட முந்தய  படம் மாரில பக்கா மசாலா, மாஸ் , சும்மா கத்தி கத்தி சவுண்ட் விட்டு நடிச்சதக்கு, அப்படியே எதிரா ரொம்ப அமைதியா நல்லா நடிசிருக்காரு, அவர் மேலும் மேலும் நல்ல performerன்னு நிருபிச்சிட்டு வராரு, சின்ன சின்ன இடங்கள், சின்ன சின்ன reactions மற்றும் கோவப்படும் போதும் சரி, பாசமா லவ் பண்ணும் போதும் சரி, emotionah feel பண்ணும் போதும் சரி அப்படியே பக்காவா நடிப்புல பிண்ணி எடுக்குறாரு,

எமிஜாக்சன் அழகா சுடிதார்ல வராங்க,கோயில் போறாங்க, என்னடா இது,  இந்த எமிக்கும் அவங்க கலர்க்கும் லோக்கல் தமிழ் பொண்ணு கேரக்டர் செட் ஆகுமான்னு தோனுச்சி?, அதுக்கு நம்ம டைரக்டர் அங்க அந்த கேரக்டர்க்கு ஒரு justification வைச்சிட்டாரு,  அட அதாவுது அவங்க அப்பா ஒரு ப்ரிடிஷ்கறாரு  அவங்க அம்மா ப்ராமின்ன்னு சொல்லி அங்க logickku ஒரு லாக் வச்சிட்டாரு, அட ஆமா எமி கலர்க்கு அவங்கள லோக்கல் பொண்ணு சொன்னா நம்ப முடியுமா ?அதனால டைரக்டர் அப்படி ஒரு லாஜிக் வச்சி முடிச்சிட்டாரு.அதுவும் இல்லாம நடிப்புல நல்ல improvement, அதுக்கும் மேல அவங்க பேசும் போதும் dubbing correctah lip sync ஆகி இருக்கு, தமிழ் உச்சரிப்பு பக்காவா பொருந்தி இருக்கு, ரொம்ப சில இடங்கள மட்டும் தான் dubbing செட்ஆகல, நிறைய படம் பண்ண ஹன்சிகா கூட இந்த அளவுக்கு பண்ணதில்லை, பேசாம ஹன்சிக்கா எமிகிட்ட எப்படி நடிப்பது, எப்படி தமிழ் உச்சரிப்பு சரியாய் பண்ணறதுன்னு கேட்டு தெரிஞ்சிக்கலாம்.

சமந்தா ஒரு நடுத்தர குடும்ப மற்றும் கொஞ்சம் கஷ்ட படுற குடும்பத்து பெண்ணு அதனால படம் fullah காட்டன் புடைவைல வராங்க, ஆனா முகம் கொஞ்சம் அதிகமா மேக்கப்  மற்றும் அவங்க முக்குகுத்தி படத்துல பார்க்க கொஞ்சம் அந்நியமா தெரியுது,

கே.ஸ் .ரவிக்குமார் & ராதிகா ஒரு parentsah  சரியா பொருந்திருக்காங்க, ஆனா இன்னும் கொஞ்சம் அவங்க நடிப்புக்கு தீனி போடுறா மாதிரி இன்னும் கொஞ்சம் சீன்  வச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்

தனுஷ் firendah வரும் சதீஷ் முதல் பாதயில காமெடி பண்ணிருக்காரு ஆனா எதுவும் மனசுல நிக்கிறா மாதிரி இல்ல, அதே மாதிரி வில்லனா வருபவரும் பெருசா impact ஆகல

இசை அனிருத், பாவம் பயபுள்ள இப்போ நிறைய  பிரச்சனைல மாட்டிகிட்டு இருக்காப்ல, சரி இந்த படத்துல என்ன பண்ணாருன்னு கேக்குறிங்களா? அட அவர் எப்பவும் சத்தம்மா இரைச்சலா டமால் டும்மீல் ன்னு  bgm, பாட்டுன்னு போடுவாரு ஆனா இதுல ரொம்ப அமைதியா போட்டு இருக்காரு, அதனால ரொம்ப நல்லா இருக்கு நினைக்காதிங்க, பாட்டு எதுவும் மனசுல பதியில. இருந்தாலும் கடைசி சண்டைல கொஞ்சம் சத்தம் தாஸ்தி தான்  

money is  ultimateன்னு சொல்லி வந்த படம் பார்த்தோம் ஆனா இந்த படம் money மட்டும் ultimate இல்ல மனிதர்களும் ultimate சொல்லி இருக்காரு, படத்துல சில பல லாஜிக் இடிக்கிறா மாதிரி ஒரு feel, அதாவுது அம்மா தனுஷ் கிட்ட கேட்கிறாங்க 
அம்மா : டேய் நீ வேலைக்கு போடா, நீ வேலைக்கு போறேன் சொன்னா அப்பா ஆபீஸ்ல அப்பா வேலை வாங்கி தருவாரு 
தனுஷ் : சரி வேலைக்கு போறேன் 
அடுத்த ஷாட் தனுஷ் அவரோட அப்பா கூட வேலைக்கு போறாரு,
எங்க வேலைக்கு போறாங்க தெரியுமா ? income tax ஆபீஸ்ல ரெண்டு பேரும் போறாங்க , அது எப்படிங்க ஒரு income tax ஆபீஸ்ல அப்பா சொன்னவுடனே பையனுக்கு வேலை கிடைக்குது? என்ன லாஜிக்யா இது ?
அதே மாதிரி அப்பா தப்பு பண்ணிட்டு செத்துட்டாரு, அப்பா தப்பு பண்ணிட்டாரு அதனால பையனையும் வேலையவிட்டு தூக்கிட்டாங்க.ஏம்பா assistant directors இந்த லாஜிக்  எல்லாம் நோட் பண்ண மாட்டிங்களா?
அதே மாதிரி தனுஷ் மற்றும் எமி கூட காதல் ரொம்ப நெருக்கமா காட்டுறாங்க நிறைய லிப் லாக் கட்சிகள் இருக்கு,ஆனா இந்த காட்சிகள் எல்லாம் கட் பண்ணாம U certificate எப்படி கொடுத்தாங்க தெரில,கலாச்சாரத்துக்கு எதிர் ஆனதுன்னு  Spectre படத்துக்கு மட்டும் லிப் லக் சீனை கட் பண்ணிடாங்க., இதை எப்படி விட்டாங்க? spectre படத்துக்கு மட்டும் கட் பண்ணிட்டாங்களேன்னு ஆதங்கத்தில் கேட்கல, ஒரு நியாயத்தை தான் கேட்கிறேன்(Specter படம் இன்னும் நான் பார்கல)

தங்கமகன் மக்கள் மனதில் தங்கபதக்கம் வாங்குவாரு நினைச்சேன் ஆனா தங்கமகன் வெண்கலபதக்கம் தான் வாங்குவாரு போல 

இப்படிக்கு 
சினி கிறுக்கன்




ஞாயிறு, 13 டிசம்பர், 2015

EETI - ஈட்டி

ஈட்டி இந்த படம் டைட்டில் மற்றும் அந்த logo பார்க்கும் போது, ஹீரோ ஈட்டி எறிதல் வீரர்ன்னு நினைச்சேன், ஆனா அவர் hurdle runner ah வரார்.

படம் ஆரம்பிக்கும் போதே ஹீரோக்கு எந்த மாதிரி உடம்பில் பிரச்சன்னை இருக்குன்னு தெளிவா சொல்லிட்டு ஆரம்பிக்கறாங்க, அதாவுது சின்னதா ரத்த காயம் ஏற்பட்டால் ரத்தம் நிக்காது, மேலும் அதிகமா ஏற்பட்டால் உயிர் போகும் வாய்ப்பு இருக்கும் ஒரு அரியவகை வியாதி உள்ளவரா காட்டுறாங்க , அதுக்கு ஏற்ற மாதிரி படமும் சண்டை கட்சிகளும் வச்சி இருக்காங்க, நிஜமாகவே இந்த மாதிரி பிரச்சன்னை இருக்க ஒருத்தர் ஒரு ரியாலிட்டி ஷோல வந்து இருக்கார் ஒருவேல டைரக்டர் அவரை inspirationah  வச்சி இந்த கதாபாத்திரத்தை உருவாக்கிருப்பார்  போல,

படம் முதல் பாதியில் தஞ்சாவூரிலும், இரண்டாவுது  பாதி சென்னையிலும் நடக்குது, கதை தஞ்சாவூர்ல நடக்குதுன்னு காட்றதுக்கு தஞ்சை பெரிய கோயில் சுற்றி நிறைய shots வச்சி இருக்காரு டைரக்டர்,   எனக்கு தெரிஞ்சு இது வரைக்கும் நம்ம தமிழ் படங்கள பெரிய கோயில் காட்டியது இல்ல.

அதே போல சென்னை சொல்லும் போது பல படங்கள அடையார், திருவல்லிக்கேணி அல்லது north சென்னை தான் காட்டுவாங்க, ஆனா இதுல அரும்பாக்கம், அமஞ்சிகரை, சூளைமேடுன்னு கதை நடக்குற மாதிரி காட்டிருக்காங்க, உண்மையான இடங்கள் சொல்லிருக்காங்க, அரும்பாக்கதுல  SBI காலனி ஒன்னு நிஜமாகவே இருக்கு,ஏன் இதை சொல்லுறேன அரும்பாக்கம் எங்க ஏரிய..... கதைப்படி heroine அப்பா SBIல வேலை செய்றாரு அதனால இந்த காலனி காட்டி இருக்காரு,

அதர்வ நிச்சயமா ரொம்ப மெனக்கெட்டு, உடலை வருத்தி உழைச்சு இருக்காரு, ஒரு தடகள வீரரா பக்காவா பொருந்தி இருக்காரு, நல்லா நடிச்சி இருக்காரு, ஆனா அதை கதைக்கு எந்த அளவுக்கு பயன்படுதிருக்காங்க பார்தீங்கனா , கொஞ்சம் கம்மி தான், ஒரு சில காட்சிகள அவர் practice பண்றது, சண்டைல சிக்ஸ் பேக் காட்டுவதோட  சரி, 

ஸ்ரீதிவ்யா ஏதோ சும்மா guest ரோல் heroine போல இல்லாம நிறைய காட்சிகள் வந்து, படத்தோட கதைக்கு கொஞ்சம் supportah  இருந்துட்டு போறாங்க,அதர்வாக்கு மொபைல் reecharge பண்ணற சீன்ல எல்லாம் நல்லா அழகா நடிச்சிருக்காங்க.

ஜி.வி.பிரகாஷ் இசையில் முயல் குட்டி பாட்டு மட்டும் கேட்கிறா மாதிரி இருக்கு 

படம் தடகள வீரர் பற்றி போகும் பார்த்தா, அப்படியும் போகல, அட அந்த ஒரு வியாதி இருக்கு அதை வச்சி கதை போகும் பார்த்த அப்படியும் போகல, அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கதைக்கு பயன்படுதிருக்காங்க அவ்ளோதான், முதல் பாதியில் காதல் பண்ணுகிற சீன் நல்லா  இருக்கு, ஆனா கதைக்குள்ள போகாம இரண்டாவுது பாதியிலும் காதல்ல  கதை போறது கொஞ்சம் போர் தான் அடிக்குது, இடைவேளைல வரும் சண்டையும், கிளைமாக்ஸ்ல வரும் சண்டையும் நல்லா இருக்கு, பார்க்கும் போது அதர்வாக்கு ரத்தம் வராம சண்டை இருக்கணுமே ஒரு feel நம்மக்கும்  வர வச்சி இருக்காரு.கதைல  திருப்பம்ன்னு நினைச்சு வச்ச சீன எல்லாம் திருப்பம்மா  தெரியல, அதே போல கடைசியா நிச்சியமா ஹீரோ தான் ஜெயிப்பாரு தெரியும் அதனால கடைசி காட்சி எல்லாம் பெருசா impact  ஆகல 

நிச்சயமா அதர்வ மனசுல நிற்கிறா மாதிரி ஒரு படம்  பண்ணி இருக்காரு, ஆனா இன்னும் strong ஆனா கதை உள்ள படம் பண்ணா நல்லா இருக்கும் .

மொத்தத்தில் ஈட்டி இன்னும் கொஞ்சம் கூர்மையா இருந்தா நல்ல இருந்திருக்கும் 


இப்படிக்கு 
சினி கிறுக்கன் 



ஞாயிறு, 29 நவம்பர், 2015

Inji Iduppu Azhaghi - இஞ்சி இடுப்பு அழகி


ஒரு குண்டான பெண்ணின் கதைங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம், ஆனால் படம் எப்படி போகுது?

இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழில வந்த படம்ன்னாலும், படத்தில் நடிச்சவங்க, டைரக்டர் , மியூசிக் டைரக்டர் எல்லாரும் தெலுங்கு, அதனால ஒரு தெலுங்கு படம் பார்த்த effect இருக்கு, நிறைய இடங்கள் நடிச்சவங்க உதடு அசைவு தெலுங்குல இருக்கு, இதனால டபிங் படம் பார்த்தா மாதிரி தான் இருக்கு.

ஆர்யா மற்ற படங்களில் நடிச்சா  மாதிரி தண்ணி அடிக்கிறது , சந்தானம் கூட காமெடி பண்ணறது , bro , மச்சி , மாமான்னு வசனம் பேசாம, கொஞ்சம் வித்தியாசமா நல்லா நடிச்சி இருக்காரு, 

அனுஷ்கா நிஜமாகவே குண்டு ஆனாங்களா  இல்ல அது மாதிரி செட் பண்ணாங்களா தெரியல, சில காட்சில சில ஷாட்ல குண்டா தெரிறாங்க சில இடங்கள கொஞ்சம் நார்மலா தெரிறாங்க, டைரக்டர் ஏன் இப்படி ஒரு continuity கவனிக்கவில்லையா ? அதே மாதிரி முதல் பாதியில் அனுஷ்கா ரொம்ப கஷ்டப்பட்டு காமெடி வர ட்ரை பண்ணி நடிச்சா மாதிரி இருக்கு, சில இடங்கள அது ஓவர் ஆக்டிங் போல தான் இருக்கு, ஆனால் இரண்டவுது பாதியில் கதை seriousah போகும் போது எப்பவும் பார்க்கிற நம்ம அனுஷ்கா ஆக்டிங்கல back to  form la  வராங்க 

பிரகாஷ்ராஜ் எப்பொழுதும் போல வந்து அவரோட கேரக்டர்க்கு நல்ல பண்ணிட்டாரு, இருந்தாலும் அது கொஞ்சம் செயற்கையாய் தெரியுது, அப்பறம் பல கோலிவுட் நடிகர்கள் கௌரவ தோற்றத்தில வந்துட்டு போறாங்க, 

நம்ம சமூகத்தில எப்படி இந்த size zero மற்றும் உடனடியாக எடை குறைக்கிற  நிகழ்ச்சியெல்லாம் வச்சி ஏமாற்றம் எல்லாம் பண்ணறாங்கன்னு காட்டி இருக்காங்க, save ஜோதி ன்னு படத்தோட கதை  கொஞ்சம் நகரும் போது நமக்கே அட நம்ம கூட கொஞ்சம் உடம்பு குறைச்சா நல்லா இருக்கும் அதுக்கு கொஞ்சம் work out பண்ணலாமான்னு தோனுச்சு பிறகு கடைசியா வர காதல் சீன எல்லாம் கொஞ்சம் bore அடிக்கிறா மாதிரி இருக்கு 

இன்னும் கொஞ்சம் இஞ்சியை நல்லா சுத்தபடுத்தி  உறித்து இருந்தால் இந்த இஞ்சி இடுப்பு அழகாக வந்து இருக்கும் 

இப்படிக்கு 
கிறுக்கன் 






சனி, 28 நவம்பர், 2015

Uppu Karuvadu - உப்பு கருவாடு

ராதாமோகனின் உப்பு கருவாடு, இவர் ஒருவர் பெயர்காகவே இந்த படத்தை போயிட்டு பார்த்தா.............. இந்த படம் எப்படி இருக்கு? அதை இப்போவே சொல்லிட்டா கடைசி வரைக்கும் படிக்க மாட்டிங்க.

தோல்வி படம் கொடுத்த ஒரு டைரக்டர், அதாங்க நம்ம ஹீரோ  ஒரு நல்ல படம் கொடுத்து வெற்றி பெறவேண்டும்ன்னு முயற்சி பண்றார், அதுக்கு கூட இருக்கவர்களால் வரும் பிரச்சன்னை நகைச்சுவையாய் சொல்லி இருக்கார் டைரக்டர்

காமெடியனா  பார்த்த நம்ம கருணாகரன் இதுல ஹீரோவா பண்ணி இருக்கார், ஆனா directoraah செட்  ஆகினா மாதிரி எனக்கு தெரில,  நந்திதா ரெண்டு விதமா நடிச்சது நல்லா இருக்கு, அப்புறம் எல்லா ராதாமோகன் படத்தில் வரும் குமாரவேல் இதுலயும் வந்து இருக்கார், பிறகு நிறைய  டிவி நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்து இருக்கார், சரவணன் மீனாட்சி ரக்க்ஷிதா சில சீனல வந்துட்டு போறாங்க, ஆதித்யா புகழ் டவுட் செந்தில் செம்மைய பண்ணி இருக்கார் நிச்சயமா அவர் இந்த படத்தோட ஹீரோன்னு கூட சொல்லலாம், அவர் பேசுற இங்கிலீஷ், reaction எல்லாம் செம்ம கலக்கல்.எப்பொழுதும் போல நம்ம பட்டாபி பாஸ்கர் நடிச்சி பின்னி பெடல் எடுத்துட்டாரு.

இந்த படத்தை பார்க்கும் போது கொஞ்சம் பார்த்திபனின் கதை திரைகதை வசனம் படம் மற்றும் ஜிகர்தண்டா போல எனக்கு ஒரு feel , அது ஏன் சொல்லுறேன்னா, ஜிகர்தண்டாவுல எப்படி சித்தார்த் ரௌடி கிட்ட மாட்டிகிட்டு அவர ஹீரோ ஆக்கணும் முழிசாரோ , அதுபோல இதுல ரௌடி தன்னோட நடிக்க தெரியாத பெண்ணை  வச்சி படம் எடுக்கணும் ஆர்டர் போடா கருணாகரன் மாட்டிகிட்டு முழிகிறாரு 

நிறைய இடத்துல டிவி சீரியல் போலவே போகுது, அங்க அங்க மொக்கை காமெடிகள் நிறையவே இருக்கு, கதை பெருசா சொல்லிகிறா மாதிரி அடுத்த கட்டத்துக்கு எங்கும் போகல, அதற்க்கும் மேல என்ன நடக்கும்ன்னு தெரியுது, சில காட்சி திரும்ப திரும்ப வருவது செம்ம கடுப்பா இருக்கு ராதாமோகனின் படம்ன்னு நம்பி சென்றால் கொஞ்சம் ஏமாற்றம் தான் 

உப்பு கருவாடு இன்னும் கொஞ்சம் நல்லா காஞ்சி இருந்தால் நிச்சயமா கருவாட்டு குழம்பு நல்லா இருந்து இருக்கும் 


 இப்படிக்கு 
கிறுக்கன் 





வெள்ளி, 13 நவம்பர், 2015

Thoongavanam - தூங்காவனம்

கிறுக்கனின் மழைகாலத்து வாழ்த்துகள், அட ஆமாங்க விடாது மழைலயும், உடாது  குடை பிடிச்சி ஒரு வழியா நேற்று மாலை பார்த்தாச்சி, நல்லவேலையா  வியாழகிழமை பார்த்துட்டேன், இல்லாட்டி இன்றைக்கு அடிச்சா மழைல மாட்டிருப்பேன் , ஆனா படத்தை பற்றி எழுத தான் நேரம் இல்ல, ஏன்னா வேலையில் நான் கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு இருந்துட்டேன் , எதுக்குடா உனக்கு இந்த விளம்பரம் கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேக்குது .

சரி வாங்க படத்தை பற்றி பார்க்கலாம், இந்த படத்தை பற்றி எல்லாருக்கும் தெரிந்த சில உண்மைகள், ஆம் இந்த படம் sleepless nightகிற படத்தோட ரீமேக், அப்புறம் கதைன்னு பார்த்தா , தன்னோட பையனை ஒரு இரவில் மீட்டு எடுக்க வேண்டும், அதே நேரத்தில தன்னோடவே  இருக்கும்   வில்லன் யார்னு கண்டுபிடிக்க வேண்டும் அது தான் ஒரு வரி கதை.

கமல் அவர்களுக்கு ஒரு பெரிய hats off, ஏன்னா original படத்தை கொஞ்சம் கூட அச்சு அசல் மாறாமல், எந்த ஒரு kollywood மசாலா சேர்க்காமல் அப்படியே தந்துடாரு, ஏன்னா வேற யாராவுது பண்ணிருந்தால் நிச்சியமா அந்த கிளப்ல ஒரு item song சேர்த்து இருப்பாங்க அல்லது அவரு முத்தம் கொடுக்கும் போது அந்த பொண்ணு டூயட் பாடுறா மாதிரி சேர்த்து இருப்பாங்க, நல்ல வேலை அது மாதிரி எதுவும் சேர்க்கல,ஒரிஜினல் படம் sleepless night பார்த்துட்டு இப்படி இருந்தா நல்லா இருக்கும்ன்னு ஆகஸ்ட் மாசம் ஒரு பதிவு பண்ணிருந்தேன், அதே மாதிரி தான் இருந்துச்சு .எனக்கு அந்த original பார்த்த feel அப்படியே இருந்துச்சு,இருந்தாலும் கமலோட குசும்புன்னு ஒன்னு இருக்குல அதை original கதை முடிஞ்சதுக்கு பிறகு அவர் அதை சேர்த்து இருக்காரு, கடைசியாய் வருகிற hospital சீன் & 3 மாசம் பிறகுன்னு வரும் சீன் அதுஎல்லாம் கமலின் டச்.

பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், எல்லாருடைய கதாபாத்திரம்  அவங்களுக்கு சரியா பொருந்தி இருக்கு, த்ரிஷா போலீஸ்காரங்களா  வருவது  கொஞ்சம் நெருடலா இருக்கு அட இவங்க போலீஸ்காரா அப்படின்னு கேட்க தோன்றினாலும், இது வரைக்கும் த்ரிஷா பண்ணி இருப்பதில்  நல்ல value added character அவங்களுக்கு,

கொஞ்சமா வந்தாலும் கொஞ்சமாக சிரிக்க வைக்கும் சாம்ஸ், அந்த kitchenல சண்டை போடும் போது நகைச்சுவை செய்கிற அந்த சமையல்காரங்க, அந்த ரெண்டு பேருல ஒருத்தர் நிச்சயமா கமலுக்கு பிடிச்சவர் போல, ஏன்னா விஸ்வருபதிலும் அவர் தான் தொப்பிய கழட்டிட்டு பாம் வெடிக்க வைப்பாரு,இதுலயும் ஒரு சின்ன ரோல் பண்ணிட்டாரு.

அந்த kitchenல கமலும், த்ரிஷாவும் சண்டை போடும் போது, கமல் த்ரிஷா ஒரு ரூம்ல இருந்து இன்னொரு ரூம்க்கு போயிட்டு விழுறாங்க ,அது வரைக்கும் கமல் திர்ஷாவை  முகத்தில அடிகிறாரு, தட்டுல அவங்க முகத்தை போட்டு இடிகிறாரு, அந்த அடி அடிச்சதுக்கு அவங்க முகத்தில அப்பவே ரத்தம் வந்து இருக்கணும், ஆனால்  அங்கு இருந்து இன்னொரு அறையில் தள்ளும் போது அவங்க முகத்தில் ரத்தம் தெரியில, ஆனா அந்த இன்னொரு ரூம்ல போய் விழும்போது அங்க இருக்க ஒரு அலமாரில விழுந்த அப்புறம்  தான் த்ரிஷா முகத்தில ரத்தம் தெரிது, எப்படி இப்படி அவர் சின்ன விஷயங்கள் எல்லாம் மிஸ் பண்ணி இருக்காங்க தெரியல, டேய் இந்த அளவுக்கு சொல்லனுமா கேக்குறிங்களா? ஏன்னா எந்த அளவுக்கு சின்ன விஷயங்கள் டைரக்டர் நோட் பண்ணி இருக்காரு தெரியுமா? கிளைமாக்ஸ்ல கார் விபத்து ஆகி  விழும்போது  அந்த கார் நிறைய பல்டி அடிச்சி விழும், சாதாரண மக்களுக்கே தெரியும் அதுக்குள்ளே இருப்பது பொம்மை தான்னு, அதுல அந்த த்ரிஷா போட்டு இருக்க hair style மாதிரியே செட் பண்ணி இருப்பாங்க, அந்த கார் பறக்கும் போது அந்த குதிரைவால் முடி மட்டும் வெளியில  நல்லா தெரியும் அந்த அளவுக்கு உன்னிப்பா பண்ணி இருக்காங்க அதனால தான் சொன்னேன்.

Gibraan இந்த படத்துக்கு என்ன feel கொடுக்க முடியுமோ அதை சரியா mix பண்ணி கொடுத்து இருக்காரு, கமலுக்கு ஆஸ்தான மியூசிக் டைரக்டர் ஆகிட்டாரு போல 

கமல்கிட்ட எனக்கு பிடிச்ச சில விஷயங்கள்,இந்த வருஷத்தில வந்த மூன்று படத்திலும் தன்னோட வயதுக்கு ஏற்ற கதாபாத்திரம்  பண்ணிருப்பது தான் , வயசான காலத்துல சும்மா டூயட் பாடி சுற்றாமல், ஒரு அப்பாவா அதுல எப்படி ஒரு heroism பண்ண முடியுமோ அந்த மாதிரி கதாபாத்திரத்தை தான் கமல் இந்த வருஷம் வந்த படங்கள பண்ணிருக்காரு.சில பேரு இந்த படம் கமல் படம் போல இல்ல bore அடிக்குதுன்னு எல்லாம் சொல்லி இருக்காங்க, ஏன்னா கமல் அந்த ஒரிஜினல் படத்துல எப்படி இருந்ததோ அதே அப்படியே கொடுத்துட்டாரு, எந்த ஒரு தேவை இல்லாத heroism சேர்க்கவே அல்ல.

Overall : ஒரு வித்தியாசமான சினிமா விரும்பி பார்பவர்களுக்கு(usual Masala,comedy,songs,punch dialogues  இல்லாமல்)  அது தூங்காவனம் மற்றவர்களுக்கு தூங்கியவனம் 

இப்படிக்கு 
கிறுக்கன் 



செவ்வாய், 10 நவம்பர், 2015

Vedhalam - தல வேதாளம்


அனைவருக்கும் கிறுக்கனின் தீபாவளி வாழ்த்துகள், முதல் தடவையாய் தல படம் முதல் நாள் முதல் ஷோ பார்த்தாச்சு. 10am ஷோ தாங்க, 5am ஷோ இல்ல.

இந்த படத்தை பார்பதற்க்கு முன்னாடி நான் ஒன்னு சொல்ல விரும்புகிறேன் , நான் தல ரசிகனும் இல்ல, தளபதி ரசிகனும் இல்ல , ஏன்னா நம்ம ஊர்ல  கருத்து சுதந்திரம் என்பது கொஞ்சம் குறைஞ்சிடுச்சு, அரசியல் பற்றி சொன்னா ஜெயில போடுறாங்க, சினிமா பற்றி சொன்னா whats-appல அசிங்கமா திட்டி ரெகார்ட் பண்ணி போடுறாங்க

கதை என்று பார்த்தா கொஞ்சம் ஆதி காலத்து மசாலா கலந்த படம் தான், ஆனா  சில விஷயங்கள் கொஞ்சம் மாற்றி பண்ணி இருகாங்க, பொதுவா மும்பைல flash back வச்சி, சென்னைல அமைதியா இருப்பாரு ஹீரோ, ஆனா இடத்தை மாற்றிடாங்க, சென்னைல ரௌடியா இருக்காரு, கொல்கத்தால அமைதியா இருக்காரு அவ்ளோதான் வித்தியாசம், மற்றபடி மாஸ் scene, அப்பாவி கேரக்டர் ல இருந்து மாஸ் change ஆகுற சீன், வில்லன கண்ணாமுச்சி ரே ரே விளையாடுறது சீன் எல்லாம் இருக்கு. 

இரண்டாவுது பாதியில் வரும் flash back எல்லாம் ரொம்ப பழங்காலத்து சீன், தம்பி ராமையா மற்றும் அவங்க மனைவி கேரக்டர் எல்லாம் ரொம்ப டிராமா மாதிரி இருக்கு,

 இந்த மாதிரி படங்கள, heioneக்கு சும்மா guest ரோல் மாதிரி வந்து தான் போவாங்க, அதை சரியா ஸ்ருதி பண்ணி இருக்காங்க,
சூரி வெறும் சூடு  ஆரி போன காமெடி தான் பண்ணி இருக்காரு, செம்ம வெறுப்பா  இருக்கு, பாலசரவணன், லொள்ளு சபா சுவாமிநாதன் அவர்களுக்கு எல்லாம் scope கம்மி தான், நான் கடவுள் ராஜேந்திரன் கொஞ்சம் வந்து கொஞ்சமா சிரிக்க வச்சிட்டு போயிடறாரு அவ்ளோதான்.

கதை கொல்கத்தால நடக்குது ஆனா காலேஜ் location நம்ம சென்னைல இருக்குற ஒரு கட்டடம்,commissioner ஆபீஸ் காட்டுவது அது ஒரு MNC கம்பெனி பில்டிங், கிளைமாக்ஸ் சண்டை கதைபடி கொல்கத்தா ஆனா  எடுத்து இருப்பது நம்ம தமிழ் சினிமாவுக்குன்னு கட்டிவிட்ட நம்ம பின்னி மில்லுதாங்க.இது எல்லாம் ஏன் டைரக்டர் கவனிக்க மாட்டேங்கறாங்க?

இவ்வளவு சாதாரண விஷயங்கள் இருந்தும் அப்போ அப்போ கொஞ்சம் bore அடிகிறா  மாதிரி இருக்கும் போது, தலைக்குன்னு சீன் நல்லா யோசிச்சி மாஸ் மாஸ் தெறிக்க செய்ஞ்சு இருக்காரு, அந்த சீன் எல்லாம் தாறுமாறு கலக்கிட்டாரு டைரக்டர் .குறிப்பா ரெண்டு வில்லன intervalக்கு முன்னாடி கொலை பண்ணுகிற சீன் தெரிக்கவிட்டு இருக்காரு தல,கிளைமாக்ஸ்ல தல லக்ஷ்மிமேனன் முன்னாடி ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறது செம்ம, அதே போல லக்ஷ்மிமேனன்ஐ hospitalல இருந்து மீட்டு செல்லும் போது பண்ணுகிற reactionல எல்லாம் செம்ம மாஸ் heroism.அதுல black dressல நக்கலா சிரிச்சிகிட்டு வரும் போது செம்ம அழகா இருக்காரு.

பாட்டு சொல்லவே வேண்டாம் ஏற்கனவே வீர விநாயகா, ஆளுமா டோல்லூம்மா பாட்டு செம்ம ஹிட் , தியேட்டர்ல கைதட்டு விசில் கிழிது, தெறி  BGM, பக்கா மாஸ் for தல.

நிச்சயமா அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காத படம், அதை சிவா correctஆ மசாலா மிக்ஸ் பண்ணி கொடுத்து இருக்காரு,

Overall : வேதாளம் கதையில்லாதளம், ஆனால் ஆஜித் மட்டும் ஆடும்  திரைகளம் 

இப்படிக்கு 
கிறுக்கன் 




திங்கள், 26 அக்டோபர், 2015

Nannum Rowdy thaan - நானும் ரவுடிதான்


இந்த படம் வந்து மூன்று நாள் கழிச்சி தான் பார்க்க முடிஞ்சிது,  ஏன்னா வேலை காரணமாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அப்படின்னு இருந்துட்டேன் ...அட சரி படத்தை பற்றி சொல்லுவோம்ன்னு சிஸ்டம் ல டைப் பண்ண ஆரம்பிக்கும்போது , நீ எழுதி ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்ன்னு govt கரண்ட் புடுகிடுச்சி , அதனால இன்னும் ஒரு நாள் கழிச்சி இன்றைக்கு தான் எழுத முடிஞ்சிது ,  சரி வாங்க இந்த படத்தை பற்றி பார்க்கலாம் ..

ஏய் ஏய் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் நானும் ரவுடி தான் .. இப்படி நம்ம வடிவேலு சொல்லி காமெடி பண்ணி பார்த்து இருப்பிங்க,   இதுல நம்ம விஜய்சேதுபதி சொல்லி காமெடி பண்ணி இருக்காரு.,  குமுதா குமுதான்னு லோக்கல்லா செம்ம ரகள பண்ணி இருப்பாரு,   அதே போல இதுலையும் அசால்ட்டா தூக்கி சாப்பிடுகிறா ஒரு character ரொம்ப நல்லா பண்ணி இருக்காரு

அப்பாடா herioneன்னா சும்மா வந்துட்டு போறா மாதிரி usual character பண்ணாம,உண்மையா நல்ல character பண்ணிருக்காங்க, நயன்தாரா காது கேக்காம நடிக்கும் போதும் சரி,  அப்பா இறந்த பிறகு ரோட்ல அழும்போதும் சரி, கடையில் போயிட்டு சரக்கு வாங்கும் போதும் சரி, innocent ah வி.சேதுபதி கூட பேசும்போதும் சரி அள்ளிட்டாங்க .

இவங்க ரெண்டு பேரு மட்டுமா? சீரியஸா வில்லத்தனம் பண்ணற ஆந்த்ராஜ்,மன்சூரலிகான், காமெடில செம்ம ரகள பண்ணிருக்காங்க,குசும்பு எகதாளம்  எப்பொழுதும் உள்ள பார்த்திபன், வில்லன் + காமெடி கலந்த கலவையா கலக்கிட்டாரு.  இவங்க போதாகுறைக்கு நம்ம R.J.பாலாஜி வேற அவர் பங்குக்கு  அங்க அங்க வந்து காமெடிலcross talk பண்ணி காலாய்ச்சிடாரு, டேய் யப்பா அந்த ராகுல் தாத்தா எங்கடா புடிச்சிங்க? realy செம்ம rocking தாத்தா.

பொதுவா அம்மாவா வர சரண்யா ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான் சொல்லற வசனம் எப்படி popular ஆச்சோ , அது போல அம்மாவா வர ராதிகா சொல்கிற கொத்தமல்லி கட்டு கொஞ்சம் popular  ஆகும்.

முதல் பாதி அங்க அங்க கொஞ்சம் தொய்வு இருக்கு அதே நேரத்துல அங்க அங்க சிரிப்பும் வருது, இரண்டாவுது பாதியில் பார்த்திபன் கடத்த திட்டம் போடுற காட்சியில் இருந்து மன்சூரலிகான் நடுவுல வந்து காலாட்ட பண்ணுவது அப்பாட சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி வந்துடுச்சு, மேலும் கிளைமாக்ஸ்ல பார்த்திபன் கோஷ்டி , இவங்க கோஷ்டி அவங்க கோஷ்டி வந்து கடைசி 20 நிமிஷம் நல்ல enjoyment.பார்த்திபன் பாத்ரூம்ல உட்கார்ந்து பண்ணற காமெடி  செம்ம ரகள,

மொத்தத்தில் நானும் ரௌடி தான் டைரக்டர்,  விக்னேஷ் சிவா நானும் நல்ல entertainment டைரக்டர் தான் நிருபிக்கிற படம் .


இப்படிக்கு 
கிறுக்கன் 


புதன், 21 அக்டோபர், 2015

10 - Endrathukulla - 10 எண்றதுக்குள்ள


 10 எண்றதுக்குள்ள... மேல இருக்கிற  இந்த போஸ்டரை பார்த்தா என்ன தோனும் ????.. யப்பா செம்ம அடிதடியா.. பரபரப்பா இருக்க ஒரு படம்ன்னு தோனும் ...அப்படியே தியேட்டர் ல போயிட்டு உட்கார்ந்தா முதல் பத்து நிமிஷம் கதை பத்திகிட்டு போறா மாதிரி தெரியும்..அப்புறம் மீதி 2.20 மணி நேரம்  10 எண்றதுக்குள்ள போகாது,   10 மணி நேரம் போல போகும் பார்க்கிற நம்மக்கு தான் பத்திகிட்டு வரும்.

விக்ரம் போல ஒரு சூப்பர் நடிகனுக்கு இப்படி ஒரு படம் தேவையா?.விக்ரம் ஒரு நிச்சயமா கதை பலம் மேலும் நடிப்புக்கு நல்லா தீனி போடுறா மாதிரி வேண்டிய ஒரு படம் எடுக்காம ஏன் இந்த படம் பண்ணாருன்னு தெரில ..

சமந்தா அடுத்த ஒரு லைலா ஜெனிலிய போல நடிக்கணும் ஆசைபட்டு நடிச்ச படம் போல, கதைப்படி சமந்தா செய்யும் செயலுக்கு விக்ரம் கடுப்பு ஆவாரு ..சத்தியமா பார்க்கிற நம்மக்கும் கொஞ்சம் கடுப்பு தான் ஆகுது

எத்தனை தடவை தான் நம்ம ஆளுங்க இன்னும் தேவை இல்லாம பாட்டு சேர்க்க போறாங்களோ ?அந்த டாபா  பாட்டு எதுக்குன்னு தெரியல .

ஏன் ஆட்களை கடத்துகிறாங்க காரணத்தை சஸ்பென்சா கடைசி வரைக்கும் சொல்லாம இருந்தா நல்ல இருக்கும்ன்னு டைரக்டர் நினைச்சிட்டாரு போல, இரண்டாவது பாதியில் கடைசியா சொல்ல வந்ததை இடைவெளியில் இருந்து ஆரம்பிச்சு இருந்தா நல்லா இருந்திருக்கும் .
கோலிசோடா போல சூப்பர் படம் கொடுத்த ஒரு இயக்குனர் ஆச்சே அதனால போய் பார்த்தா ஏமாற்ற்றம் தான். 

வெளிப்படியா சொல்லணும்னா இதுக்கு மேல இந்த படத்தை பற்றி எனக்கு எழுதவரல  
மொத்தத்தில்  :  கிளைமாக்ஸ் வரும் நேரத்தில  10 எண்றதுக்குள்ள படம் முடியுமா தோன்ற அளவுக்கு வச்சிட்டாங்க ..

இப்படிக்கு 
கிறுக்கன் 

வெள்ளி, 2 அக்டோபர், 2015

Puli - புலி


புலி  இந்த படத்தை பற்றி நிறைய கமெண்ட்ஸ் பல memes வந்தாச்சு..நான் இந்த படத்தை பற்றி போடறது கொஞ்சம் லேட் தான் ...என்னடா எல்லா படத்தையம் முதல் நாள் பார்த்து படத்தை பற்றி போடுவானே.. பெருசா  எதிர்பார்த்த விஜய் படம் முதல் நாள் போடலையேன்னு சில பேரு கேட்டாங்க ...விஜய்,கமல் படம் முதல் நாள் டிக்கெட் புக் பண்ணறது கொஞ்சம் ரிஸ்க் ஏன்னா இவங்க படங்க எப்போ யார் தடை பண்ணுவாங்க தெரியாது அதனால இரண்டாவது  நாள் புக் பண்ணி பார்த்தாச்சு ....

நான் இந்த படத்தை ரொம்ப எதிர் பார்க்கல ஏன்னா டிரைலர் ல எந்த படம் எப்படி இருக்கும்ன்னு ஒரு ஐடியா இருந்துச்சு.. மேலும் சிம்புதேவன் முந்தய படங்கள் எப்படி பட்டதுன்னு தெரியும் ..அவரோட படங்கள் எல்லாம் ஒரு கற்பனை fantasya தான் இருக்கும். அதனால இந்த படம் அப்படிப்பட்ட ஒரு படமா தான் இருக்கும்ன்னு தான் போனனேன் ..

இந்த படம் ஏன்  நிறைய பேருக்கு பிடிகவில்லை?ஏன் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை?? இது ஒரு fantasy படம்.. நம்ம தமிழ் மக்களுக்கு இப்படி பட்ட கதை இங்கிலீஷ் படத்துல பார்த்தா கை தட்டி ரசிப்பாங்க ஆனா தமிழ்ல எடுத்தா சிரிப்பாங்க ஏன்னா நம்ம தமிழ்ல அந்த அளவுக்கு techinical லா நிறைய செலவு பண்ணி எடுக்க முடியாது , .அதுவும் பகுபலி வந்ததால இந்த படத்தை அந்த அளவுக்கு எதிர் பார்கிறது ரொம்ப தப்பு ...எடுத்து காட்டுக்கு விஜய் ஒரு வில்லு கைல வச்சி இருக்க ஒரு ஸ்டில்க்கு கலாய்ச்சி ஒரு pic வந்துச்சு ..கடைசில அது வெறும் பாட்டுக்கு வர ஸ்டில் அவ்ளோதான்..
அதுவும் விஜய் என்ன பண்ணாலும் கலாய்க்க ஒரு கூட்டம் இருக்கு இந்த படம் டிரைலர் வந்த நாள்ல இருந்து படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் பயங்கரமா வட்ட்ஸ் அப்ல செம்மைய கலாய்ச்சிட்டாங்க ...

ஒரு பாண்டஸி படம்ன்னு முடிவு பண்ணிட்டா அதே fullah பாண்டஸியா எடுத்து இருக்கணும் ..இங்க ரசிகர்களை ஏமாற்ற கூடாதுன்னு commercial விஷயங்கள் இதோடு சேரும் போது அது இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம எப்படியோ போய்டுது அந்த நிலைமை தான் புலிக்கு ஏற்பட்டு இருக்கு ...

ஒரு பழங்காலத்து  கிராமம் போல காட்டும் போது அங்க இருக்குற எல்லா மக்களையும் அவங்க உடைகள் எல்லாம் ஒரு மாதிரியா காட்டும் போது ஏன் விஜயும் ஸ்ருதிஹாசனும் மட்டும் பலபலன்னு  ஆடை போட்டு இருக்கங்களே !! அதுவும் ஸ்ருதியும் ஹன்சிகாவும் கன்னத்துல ரோஸ் நிறைய போட்டுக்கிட்டு இருக்காங்க.. அடபாவிங்களா இது எல்லாம் பார்க்க மாட்டிங்களா?

ராக் ஸ்டார் DSP ன்னு டிரைலர் ஏன்டா போட்டிங்க? அதுக்கு பதிலா டண்டநக்கா DSPன்னு போட்டு இருக்கலாம்..காது கிழிது டா சாமி..

சும்மா பேருக்கு ரெண்டு herione ஒரு முன்னால் நடிகை வேற,. ஏன் வர எல்லா படத்தலையும் ஹன்சிகாவையும் வச்சி எடுக்குறாங்க தெரில ? ஒரே மாதரியான expression சும்மா உதடு கடிச்சிகிட்டு டப்பிங் ல வேற அவங்க பேசுறதுக்கு lip sync ஆகாம   பேசுறாங்க..ஒரு கதாபத்திரம் கூட முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி ஒரு படமும் பண்ணல சும்மா வந்துட்டு வந்துட்டு போறா மாதிரி தான் எல்லா படத்தலையும் வராங்க ..

சில கற்பனை காதபதிரங்கள் நம்ம ஏற்கனேவே பார்த்த gulivers travel ல வர கதாபாத்திரங்கள் மற்றும் temple ரன்ல வர கதாபாத்திரம் வரது தான் ஒரே குழப்பம் ..ஏன் இப்படி காபி அடிச்சா மாதிரி பண்ணி இருக்காங்க தெரில..

விஜய்க்கு கொஞ்சம் கெட்டப்பு change பண்ணாலும் அவருக்கு set ஆகாது, சீரியஸா விஜய் அப்பாவா வரும் போது  தியேட்டர்ல நிறைய பேரு கலாய்ச்சி சிரிகிரங்க. எனக்கு விஜய பார்க்கும் போது பாவமா இருந்துச்சு அந்த மனுஷன   ஒரு காமெடி piece போல ஆக்கிட்டாரு இயக்குனர் ..

விஜய பத்தி சில விஷயங்கள் சொல்லனும்ன்னா வயசு ஏற ஏற பார்க்க நல்லா youngஆ தெரியறார் ..அதே energetic டான்ஸ் fight நல்லா பண்ணுறாரு ..

என்னை பொறுத்தவரைக்கும் விஜயோட முன்னாடி வந்த வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் போல படங்கல நடிச்சா மாதிரி மொக்கையா  பண்ணாம நல்லவே பண்ணி இருக்காரு..கடைசி காட்சில வர வசனங்கள் ஏதோ அரசியல் வாழ்க்கைக்கு விதை போடுறா மாதிரி இருக்கு 

நிச்சயமா விஜயை நிறைய குழந்தைகளுக்கு பிடிக்கும்.. அப்படி பட்ட குழந்தைகளை இந்த லீவ் சீசன்ல target பண்ணி ரிலீஸ் ஆகி இருக்கு .

அதனால நிச்சயமா இந்த புலி குழந்தைகளுக்கு பிடிச்ச புலி அவ்ளோதான் 

பெரியவங்களுக்கு கொஞ்சம் கழுத்தை கடிச்ச புலி 

குறிப்பு : நான் விஜய் ரசிகனும் அல்ல அஜித் ரசிகனும் அல்ல நான் ஒரு சினிமா ரசிகன்.. எனக்கு சரி தப்புன்னு  பட்ட விஷயங்கள் நான் சொல்லி இருக்கேன் அவ்ளோதான் .. அதே நேரத்தில் யாரும் என்னை திட்ட கூடாதுன்னு இந்த வரியை இங்க நான் சொல்லலை ..


இப்படிக்கு 
கிறுக்கன் 

வியாழன், 24 செப்டம்பர், 2015

Kuttrram Kadithal - குற்றம் கடிதல்



குற்றம் கடிதல் .....

இந்த படத்தை பற்றி பாக்கறதுக்கு முன்னாடி சில செய்திகள் .. இதோ அவை ..
SPI சத்யம் சினிமாஸ் ஒரு பகுதியான வேளச்சேரியில் இருக்கும் லுக்ஸ் சினிமாஸ்  JAZZ சினிமாஸ்க்கு வித்துடாங்கோ ...!!!.....

சரி வாங்க இந்த படத்தை பற்றி பார்ப்போம் ,,    அட இந்த படம் ஏற்கனேவே தேசிய விருது , சென்னை பிலிம் festival ல சிறந்த திரைபடம்ன்னு விருதுகள் எல்லாம் வாங்கியது....அப்படிபட்ட சிறந்த படத்தை விமர்சிக்க நம்ம என்ன அவ்ளோ பெரியாள்ளா ?.. எப்பொழுதும்  நம்ம படத்தை பார்த்த அனுபவத்தை தான்  இங்க பகிர்வோம் ....

இந்த படத்தில நிறைய சின்ன சின்ன விஷயங்கள் திரைகதையில் சேர்த்து இருப்பது செம்ம..

முதல ஒரு ஒரு கேரக்டர் பற்றி introduce பண்ணறது அருமை ...

அந்த சின்ன பையன் .. அவனோட அம்மா என்ன பண்ணறாங்க .. அவனோட மாமா,ஆனால் முதல அவர் அவனோட மாமான்னு சொல்லாம.. அவர் எப்படிபட்டவர்ன்னு காட்டறது, பின்னாடி கதையோட அவர் இந்த கதைக்கு எப்படி சம்பந்தபட்டவருன்னு காட்டறது சூப்பர்.

ஒரு கணவன் மனைவி அவங்க எந்த மாதிரி சூழ்நிலையில் கல்யாண பண்ணி இருக்காங்கன்னு..அங்க அந்த அறையில் சுற்றி இருக்கும் பொருட்களை வச்சு காட்டறது ..பிறகு அவள் அந்த தாலியை தான் வளர்ந்த  மதத்திற்காக மறைப்பதும், பின்னாடி தாலியை வெளியே விட்டு குங்குமம் வைச்சு அதோட அந்த BGM அப்படியே மாறுவது சூப்பர்...தான் அவளோட மதத்தை விட்டதல தான் இந்த பிரச்சனையோ வந்ததோ நினைக்கறது expressionல herion அள்ளிட்டாங்க ..

அந்த principal அவர் மனைவியா வரவங்க அந்த பையனோட மாமாகிட்ட பேசுற வசனம், அப்புறம் herione வீட்டுல அவங்க அம்மாவும் அந்த ஆட்டோகாரரும் பேசுறது சூப்பர்..நாங்க ஒன்னும் அப்படியே ஓடி போற ஆளு இல்லங்க அப்படி அந்த அம்மா சொல்ல ..நாங்களும் ஒரு கன்னதுள்ள வாங்கிட்டு இன்னொரு கன்னம் காட்டற  ஆளு இல்லைங்க அப்படி பதில் சொல்லறது செம்ம ..அதுவும்  அந்த situationல சொல்லறது தியேட்டர்ல கை தட்டு அள்ளுது.

சின்ன சிறு கிளியே கண்ணமா அப்படிங்கற பாரதியார் பாட்டுல ஒரு ஒரு கதாபாதிரதோட  flash backai அப்பறம் சரியா அந்த அந்த பாடல் வரி வர வர visual ல காட்டறது செம்ம.

அந்த பையன் அவன் அம்மாவுக்கு முத்தம் கொடுக்கிற மாதிரி காட்டிட்டு அப்படியே கட் பண்ணி அந்த herionekku முத்தம் கொடுக்கிறா மாதிரி காட்டி தானும் அந்த இடத்துல ஒரு அம்மா போல நடந்து இருக்கலாமேன்னு அவள் செய்த தப்பை உணர்வது போல காட்டறது சூப்பர்.

உயிருக்காக போராடற நிலைமயில இந்த மீடியாக்கள் எல்லாம் எப்படி அவங்க தொழில் உயிரை காப்பாத்திக்க நினைக்கறாங்கன்னு காட்டறது நல்லா  இருக்கு..அதுல ஒரு உச்சகட்ட சீன் ஒரு  பெண் ரிப்போர்ட்ர் அந்த அம்மாவை பேட்டி எடுக்க ஆட்டோ உள்ள போயிட்டு வசனமே இல்லாம ..அந்த ரிப்போர்ட்ர் மொக்க வாங்கிட்டு வரது அல்டிமேட் ...


நான் எப்பொழுதும்   மத்தவங்க மாதிரி படம் fullah சொல்லமாட்டேன் ஆனால் இன்னிக்கு நிறைய சொல்லிட்டேன் இருந்தாலும் முழு கதை என்னன்னு நான் சொல்லல, அதனால நிச்சயமா குடும்பத்தோடு போயிட்டு பாருங்க.

award எல்லாம் வாங்கின படம் அதனால இவன் எல்லாம் பாசிடிவா எழுதிட்டான் நினைக்காதிங்க உண்மையில மனசுல இருந்து எழுதுன எழுத்துகள் இது...


Overall: பிரம்மாண்டமா படம் எடுக்றவங்க மத்தியில் இயக்குனர் பிரம்மன் படைத்த எளிமையான இந்த சமுதாயதிற்கு தேவையான ஒரு படைப்பு ..


இப்படிக்கு
கிறுக்கன்


வியாழன், 17 செப்டம்பர், 2015

Maya - மாயா

மாயா
 இந்த படத்தை பற்றி பார்கறதுக்கு முன்னாடி ..என்னோட இந்த ப்ளாக் தமிழ் சங்கமம் என்ற android appஇல்  சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் ... என்னடா இவன் தீடிர்ன்னு இப்படி  ரொம்ப formala எழுதுறானே  பாக்குறிங்களா??? .... வேற என்னங்க பண்ண ? நம்ம ப்ளாக் app ல addஆகி  இருக்கு ... நிறைய பேரு படிக்குறாங்க ..இது வரைக்கும் 3000+ என்னோட ப்ளாக் படிச்சு இருக்காங்க....... யாரு எப்படி என்னோட ப்ளாக் appஇல் add ஆச்சுன்னு தெரியல ..எது எப்படியோ என்னோட ப்ளாக்கை appஇல் add பண்ணவங்களுக்கும் ..இது வரைக்கும் என்னோட ப்ளாக்கை  படிச்சு ஆதரவு அளித்தவர்களுக்கு அனைவருக்கும் நன்றி .. இது போல் உங்கள் ஆதரவு தொடரணும்ன்னு கேட்டுகிறேன் ..

சரி இப்போ இந்த படத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.. .

சமிபத்தில் வரும் படங்கள heroein  guest  role ல  தான் வராங்க ....அப்பாடா  ரொம்ப நாள் கழிச்சி heroeinக்கு முக்கயத்துவம் கொடுத்து வந்து இருக்கும் படம் .. படம் titleல நயன்தார பேரு தான் முதல்ல வருது அதுக்கே இயக்குனருக்கு நன்றி...

இப்படி ஒரு கதாபாத்திரத்தை எடுத்து நடித்த நயன்தாராவுக்கு நன்றி...நயன்தார நல்லா perform பண்ணி இருக்காங்க

எல்லா பேய் படங்கள வர மாதிரி மசாலா பாட்டுயெல்லாம்  வைக்காம ...தேவையில்லாத பிளாஷ் பேக் ... காதல் .. கத்திரிக்காய் எல்லாம் வைக்காம எடுத்த டைரக்டர்க்கு நிச்சயமா ஒரு    ஓ    போடலாம் ..

முதல் பாதியில்  ரெண்டு சம்பந்தமே இல்லாம கதை போகும் போது இரண்டாவுது பாதியில் சரியாக சேர்ந்தது  நல்லா  இருந்தது .....முதல் பாதியில் வரும் அந்த கருப்பு வெள்ளை பகுதி நான் நினைச்ச மாதிரி தான் சரியாக கதை பிரிஞ்சுச்சு ..நான் எப்படி எதிர்பர்தேனோ அப்படி தான் இருந்துச்சு

திகில் பகுதியெல்லாம் சரியா சவுண்ட் effect உடன் இருக்கு....Rohan ethan Yohaan.perfect பேய் படம் effect கொடுத்து இருக்காரு

குழந்தை தொட்டில்ல கண்ணாடியில் நயன்தார முகம் காட்டறது சூப்பர்...கதை exact ஆ காட்டறது சூப்பர்

இரண்டாவுது பாதியில்சில இடங்கள் இப்படித்தான் வரும்ன்னு நாம் எப்படி எதிர்பார்கிரோமோ அப்படி தான் கதை போகுது..

கிளைமாக்ஸ் ல ஒரு இடம் பார்க்கும் போது அட இது பிசாசு படம் மாதிரி இருக்கேன்னு தொன்னுச்சு ஆனா அது மாதிரி முழுசா காப்பி அடிச்சா மாதிரி இல்ல..லைட்ஆ அந்த பிசாசு படம் ஞாபகம் வந்துச்சு அவ்ளோதான்..

நிச்சயமா எப்போவும் போல இருக்க பேய் படம் மாதிரி எடுக்காம கொஞ்சம் வித்தியாசமா ட்ரை பண்ண டைரக்டர் அஷிவின் சரவணன்க்கு  ஒரு சலாம்

Overall : மாயா வாயா நம்ம பேய் பார்த்துட்டு வரலாம்.. சாரி ஒரு தடவை போய் பார்த்துட்டு வரலாம்





சனி, 5 செப்டம்பர், 2015

Payum Puli - பாயும்புலி



மதுரைன்னா அருவா  ரௌடி ..மீனாட்சி அம்மன் கோயில் ..காட்டறது  தான் நம்ம தமிழ் சினிமாவோட பழக்கம் ..அதே தான் இங்கயும் .அதேமாதிரி இப்போ புதுசா கூடவே ஒண்ணு  சேர்ந்து இருக்குறது கிரானைட் குவாரி
..
சுசீந்திரன்  தெளிவா ஸ்கெட்ச் பண்ணி படம் எடுத்து இருக்காரு ...first சீன் ரௌடி introduction .. ஹீரோ introduction..அப்படியே heroein ,காமெடியன் அடுத்து ஒரு பாட்டு ..
அப்புறம்  படம் என்கௌன்டர் ல intresting ah ஸ்டார்ட் ஆகுதே பார்த்தா உடனே திரும்பவும் சூரி காமெடி.காஜல் கூட ஒரு பாட்டு .ஒரு என்கௌன்டர்....அப்படியே இந்த ஆர்டர் மற்றாம முதல் பாதி போகுது ...நம்ம தமிழ் சினிமா திருந்தவே திருந்தாது போல..

interval ப்ளாக் செம்ம ட்விஸ்ட் ஆனா பல விமர்சனகள்  யார் வில்லன் சொல்லி இருப்பாங்க ஆனா நான் யார் அந்த முக்கிய கேரக்டர் சொல்ல மாட்டேன் ..சொல்லிட்டா அந்த சுவாரசியம் இருக்காது....அதனால இந்த interval ப்ளாக் பெருசா பாதிக்காது..

காஜல் எல்லா படத்துல வரா மாதிரி சும்மா வந்து guest role பண்ணிட்டு போய் இருக்காங்க .. பாதி படத்துக்கு மேல காஜல் காஜல் காஜல் தேடனும் அப்படியே காணாம போய்ட்டாங்க.

சூரி  கஷ்ட பட்டு சரிக்க வைக்க ட்ரை பண்ணறா மாதிரி இருக்கு...அவரு ஒரு ஒரு தடவையும் குடிச்சிட்டு வீட்டுல  பொண்டாட்டி கிட்ட மாற்றது பெருசா சிரிப்பு வரல ..ஒரே ஒரு தடவ மட்டும் சிரிப்பு வருது  அது அவர் ஹெல்மெட்டோட குளிக்க போற சீன் ...அதுகூட நம்ம வடிவேல் காமெடி தான் ஞாபகம் வருது.. அதாங்க இவள்ளவு வேஷம் போட்டியே மண்ட மேல இருக்க கொண்டைய மறந்துடேயே டா வெண்ணை ..அது தான் ஞாபகம் வந்துச்சு.

.விஷால் படம்னா ஒரு பிளாஷ் பேக் பஞ்ச் டயலாக் எல்லாம் இருக்கும் அப்படா ..அப்படியல்லாம் விஷால்  பண்ணல ..நன்றி சுசீந்திரன்

சமுத்ரகனி நல்லா பண்ணி  இருக்காரு ...பக்காவா செட் ஆகி இருக்கு...

நான் நினைக்கிறன் சுசீந்திரன்.. வால்ட்டர் வெற்றிவேல்  போல சில படங்கள் பார்த்து  inspire ஆகி எடுத்து இருபாரு போல .. ஏன்னா படத்த பார்த்தா தெரியும் ..அது என்னன்னு சொல்ல மாட்டேன் .

இமான் மியூசிக்ல முதல் பாட்டு அப்படியே ... ஜில்லா படத்துல  வர வெரசா போகயலே பாட்டு  மாதிரி இருக்கு..அப்புறம் மற்ற பாட்டும் அவரோட பழய பாட்டு கேட்டா மாதிரி இருக்கு.. பாயும் புலி பாயும் புலி பாட்டு தவிர ... அந்த தீம் BGM படத்துல அங்க அங்க வருவது விஷாலுக்கு நல்லா மாஸ் feel கொடுத்து இருக்கு ..

கடைசியா விஷால் சண்டை .. குடும்பம் செண்டிமெண்ட் .எல்லாம் கொஞ்சம் அரைச்ச மாவு தான்

மீண்டும் ஒரு முறை விஷால் சுசீந்திரன்  கூட்டனி எப்படியோ நல்லா வந்துட்ச்சு ,,2.30 மணி நேரம் waste ah போகலை ..

சுசீந்திரன் இன்னும் இந்த தேவை இல்லாத குத்து பாட்டு காதல் கத்ரீக்கா எல்லாம் வெட்டி இருந்தா புலி இன்னும் எட்டு அடி extra va பாய்ந்து இருக்கும்.

இப்படிக்கு
கிறுக்கன்