புலி இந்த படத்தை பற்றி நிறைய கமெண்ட்ஸ் பல memes வந்தாச்சு..நான் இந்த படத்தை பற்றி போடறது கொஞ்சம் லேட் தான் ...என்னடா எல்லா படத்தையம் முதல் நாள் பார்த்து படத்தை பற்றி போடுவானே.. பெருசா எதிர்பார்த்த விஜய் படம் முதல் நாள் போடலையேன்னு சில பேரு கேட்டாங்க ...விஜய்,கமல் படம் முதல் நாள் டிக்கெட் புக் பண்ணறது கொஞ்சம் ரிஸ்க் ஏன்னா இவங்க படங்க எப்போ யார் தடை பண்ணுவாங்க தெரியாது அதனால இரண்டாவது நாள் புக் பண்ணி பார்த்தாச்சு ....
நான் இந்த படத்தை ரொம்ப எதிர் பார்க்கல ஏன்னா டிரைலர் ல எந்த படம் எப்படி இருக்கும்ன்னு ஒரு ஐடியா இருந்துச்சு.. மேலும் சிம்புதேவன் முந்தய படங்கள் எப்படி பட்டதுன்னு தெரியும் ..அவரோட படங்கள் எல்லாம் ஒரு கற்பனை fantasya தான் இருக்கும். அதனால இந்த படம் அப்படிப்பட்ட ஒரு படமா தான் இருக்கும்ன்னு தான் போனனேன் ..
இந்த படம் ஏன் நிறைய பேருக்கு பிடிகவில்லை?ஏன் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை?? இது ஒரு fantasy படம்.. நம்ம தமிழ் மக்களுக்கு இப்படி பட்ட கதை இங்கிலீஷ் படத்துல பார்த்தா கை தட்டி ரசிப்பாங்க ஆனா தமிழ்ல எடுத்தா சிரிப்பாங்க ஏன்னா நம்ம தமிழ்ல அந்த அளவுக்கு techinical லா நிறைய செலவு பண்ணி எடுக்க முடியாது , .அதுவும் பகுபலி வந்ததால இந்த படத்தை அந்த அளவுக்கு எதிர் பார்கிறது ரொம்ப தப்பு ...எடுத்து காட்டுக்கு விஜய் ஒரு வில்லு கைல வச்சி இருக்க ஒரு ஸ்டில்க்கு கலாய்ச்சி ஒரு pic வந்துச்சு ..கடைசில அது வெறும் பாட்டுக்கு வர ஸ்டில் அவ்ளோதான்..
அதுவும் விஜய் என்ன பண்ணாலும் கலாய்க்க ஒரு கூட்டம் இருக்கு இந்த படம் டிரைலர் வந்த நாள்ல இருந்து படம் ரிலீஸ் ஆகும் வரைக்கும் பயங்கரமா வட்ட்ஸ் அப்ல செம்மைய கலாய்ச்சிட்டாங்க ...
ஒரு பாண்டஸி படம்ன்னு முடிவு பண்ணிட்டா அதே fullah பாண்டஸியா எடுத்து இருக்கணும் ..இங்க ரசிகர்களை ஏமாற்ற கூடாதுன்னு commercial விஷயங்கள் இதோடு சேரும் போது அது இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம எப்படியோ போய்டுது அந்த நிலைமை தான் புலிக்கு ஏற்பட்டு இருக்கு ...
ஒரு பழங்காலத்து கிராமம் போல காட்டும் போது அங்க இருக்குற எல்லா மக்களையும் அவங்க உடைகள் எல்லாம் ஒரு மாதிரியா காட்டும் போது ஏன் விஜயும் ஸ்ருதிஹாசனும் மட்டும் பலபலன்னு ஆடை போட்டு இருக்கங்களே !! அதுவும் ஸ்ருதியும் ஹன்சிகாவும் கன்னத்துல ரோஸ் நிறைய போட்டுக்கிட்டு இருக்காங்க.. அடபாவிங்களா இது எல்லாம் பார்க்க மாட்டிங்களா?
ராக் ஸ்டார் DSP ன்னு டிரைலர் ஏன்டா போட்டிங்க? அதுக்கு பதிலா டண்டநக்கா DSPன்னு போட்டு இருக்கலாம்..காது கிழிது டா சாமி..
சும்மா பேருக்கு ரெண்டு herione ஒரு முன்னால் நடிகை வேற,. ஏன் வர எல்லா படத்தலையும் ஹன்சிகாவையும் வச்சி எடுக்குறாங்க தெரில ? ஒரே மாதரியான expression சும்மா உதடு கடிச்சிகிட்டு டப்பிங் ல வேற அவங்க பேசுறதுக்கு lip sync ஆகாம பேசுறாங்க..ஒரு கதாபத்திரம் கூட முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி ஒரு படமும் பண்ணல சும்மா வந்துட்டு வந்துட்டு போறா மாதிரி தான் எல்லா படத்தலையும் வராங்க ..
சில கற்பனை காதபதிரங்கள் நம்ம ஏற்கனேவே பார்த்த gulivers travel ல வர கதாபாத்திரங்கள் மற்றும் temple ரன்ல வர கதாபாத்திரம் வரது தான் ஒரே குழப்பம் ..ஏன் இப்படி காபி அடிச்சா மாதிரி பண்ணி இருக்காங்க தெரில..
விஜய்க்கு கொஞ்சம் கெட்டப்பு change பண்ணாலும் அவருக்கு set ஆகாது, சீரியஸா விஜய் அப்பாவா வரும் போது தியேட்டர்ல நிறைய பேரு கலாய்ச்சி சிரிகிரங்க. எனக்கு விஜய பார்க்கும் போது பாவமா இருந்துச்சு அந்த மனுஷன ஒரு காமெடி piece போல ஆக்கிட்டாரு இயக்குனர் ..
விஜய பத்தி சில விஷயங்கள் சொல்லனும்ன்னா வயசு ஏற ஏற பார்க்க நல்லா youngஆ தெரியறார் ..அதே energetic டான்ஸ் fight நல்லா பண்ணுறாரு ..
என்னை பொறுத்தவரைக்கும் விஜயோட முன்னாடி வந்த வேட்டைக்காரன், சுறா, வேலாயுதம் போல படங்கல நடிச்சா மாதிரி மொக்கையா பண்ணாம நல்லவே பண்ணி இருக்காரு..கடைசி காட்சில வர வசனங்கள் ஏதோ அரசியல் வாழ்க்கைக்கு விதை போடுறா மாதிரி இருக்கு
நிச்சயமா விஜயை நிறைய குழந்தைகளுக்கு பிடிக்கும்.. அப்படி பட்ட குழந்தைகளை இந்த லீவ் சீசன்ல target பண்ணி ரிலீஸ் ஆகி இருக்கு .
அதனால நிச்சயமா இந்த புலி குழந்தைகளுக்கு பிடிச்ச புலி அவ்ளோதான்
பெரியவங்களுக்கு கொஞ்சம் கழுத்தை கடிச்ச புலி
குறிப்பு : நான் விஜய் ரசிகனும் அல்ல அஜித் ரசிகனும் அல்ல நான் ஒரு சினிமா ரசிகன்.. எனக்கு சரி தப்புன்னு பட்ட விஷயங்கள் நான் சொல்லி இருக்கேன் அவ்ளோதான் .. அதே நேரத்தில் யாரும் என்னை திட்ட கூடாதுன்னு இந்த வரியை இங்க நான் சொல்லலை ..
இப்படிக்கு
கிறுக்கன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Comments